டீசர்- 1
அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் வாய் மேல் கை வைத்துக் கொண்டு நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, மணமகன் மணமகள் உறவினர்கள் முக சுழிப்புடன் நின்று இருந்தனர்.
மாப்பிள்ளையின் அம்மா "யாரும்மா நீ? தாலி கட்டுற நேரத்தில் வந்து பிரிச்சனை செய்துட்டு இருக்க. உன் வயித்துல வளர குழந்தைக்கு என் புள்ளை தான் அப்பானு எதை வச்சி சொல்ற. நான் ஒன்னும் என் புள்ளையை முறை தப்பி போற அளவுக்கு வளர்க்கல. அவன் சொக்க தங்கம்" என சொன்னதை கேட்ட மணமகனாக அமர்ந்து இருந்த களியுகவரதனுக்கே தன் அன்னை பேசுவது கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்று தோன்றியது.
அங்கே மார்புக்கு நடுவே கரங்களை கட்டிக் கொண்டு தன்னை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை, என்ன என்று புருவத்தை உயர்த்தி சைகையால் அவன் கேட்க,
அவளோ "த்தூ" என்று துப்பிவிட்டு "என் வயத்துல வளர குழந்தைக்கு உங்க புள்ள தான் அப்பா. இதை நிரூப்பிக்க என்ன டெமோ ஏதாவது காட்ட முடியுமா என்ன?" என்று கடுப்புடன் கேட்டவளை பார்த்து,
"ஹா" என்று வாயை பிளந்தார் அவர்.
"பொண்ணு மாதிரியா பேசுற நீ" என்று கேட்டுக் கொண்டே வரதனின் தந்தை முன்னே வர, அவரை ஏற இறங்க பார்த்தவள்,
"இந்த வா போ னு பேசுற வேலையெல்லாம் வேணாம். அப்புறம் நானும் அப்படி தான் பேசுவேன்" என்றாள் திமிராக.
அவள் கூறுவதோ, தன் எதிரே இருப்பவர்கள் அவளை எப்படி நடத்துகிறார்களோ அப்படி தான் தானும் நடந்து கொள்பேன் என்பது போல் இருக்க. முகம் சுருங்கி போனது அவருக்கு.
அதுவரை அமைதியாக மணமேடையில் அமர்ந்து இருந்த களியுகவரதன் சற்றே கோபத்துடன் எழுந்து மங்கையின் அருகில் வந்தவன் அவளை அருவெறுப்பாக பார்த்து "இங்க பாரு மாயா, உன்னோட இந்த அகங்காரத்தை வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ. என் குடும்பத்துகிட்டையும் என் கிட்டையும் வச்சிக்காத. ஆமா குழந்தை குழந்தை சொல்றீயே" என்று கேட்டுக் கொண்டே அவள் வயிற்றை சுட்டி காட்டி "இதுக்கு நான் தான் காரணம் எதை வச்சிடி சொல்ற" என்று எரிச்சலுடன் கேட்டான்.
"அதுக்கு, நம்மக்ககுள்ள நடந்ததை வீடியோவா எடுத்து வச்சிட்டு இருக்க முடியும். ஒருவேளை நீ இப்படியெல்லாம் கேட்பனு அன்னிக்கே தெரிஞ்சு இருந்தா கண்டிப்ப வீடியோ எடுத்து இருப்பேன்டா" என்று அவனுக்கு சற்றும் சலிகாத குரலில் எந்த தயக்கமுன்றி பேசுபவளை பார்த்து வெறுத்து போனான் களியுகவரதன்.
சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று கவலையே கொள்ளாமல் பேசும் மாயாவை கண்டு அனைவரும் "பொண்ணா இது" என்று முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை.
அந்நேரம் மணமேடையில் அமர்ந்து இருந்த கீர்த்தனா சட்டென்று மயக்கம் போட்டு விழவும், அனைவரின் கவனமும் அவள் மீது திரும்பியது.
திருமணத்திற்கு வந்து இருந்த மருத்துவர் கீர்த்தனாவை பரிசோதித்து விட்டு, குரலை சரி செய்துக் கொண்டே தயக்கமாகவே "கீர்த்தி பிரக்னண்டா இருக்கா" என்று அனைவரின் தலையிலும் குண்டை தூக்கி போட,
யார் இதுக்கு காரணம் என்று அவளிடம் கேட்க, கீர்த்தனா தலையை குனிந்து கண்ணீரோடு விழிகளை உயர்த்தி "மாமா தான்" என்று அங்கே இறுகி போய் நின்று இருந்த களியுகவரதனை விரல் நீட்டி காட்டினாள்.