Writers of Brammastram
Moderator
விடையறியா வினா அவள்! (VVA) கதை திரி
Adeii ennada natakkuthu Inga....keerthana orginal karpam....appo Maya ean poi sollanum.... interesting epi❤️💖 waiting for your next epi sis💖💖💖அத்தியாயம்- 1
அன்பெனும் கதைகளால் செய்யப்பட்ட உயிர் அவள்!
பழியறியா பனி விழிகள் அவள்!
மாய உலகத்தில் பகையறியா
பாவை அவள்!
விடையறியா வினா அவள்!
பழி பகை என்னும்
இரண்டு எழுத்தின் மறு உருவமாக
வன்மத்தில் நிறைந்திருக்கிறாள் அவள்!
அவள் பெயர் கூட
ஓர் மௌனமே
என்னும் மாயம் அவள்!
அவள் ஓர் மாயையே...
பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் பார்ப்பதற்கு திருப்தியாக இருந்தது அந்த திருமண மண்டபம். ஆங்காங்கே பூக்களாலும் கலர் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டு இருந்தது மண்டபம்.
திருமணத்திற்கு வருபவர்களை அழைக்கவே வாசலில் இருவர் கைகூப்பி நின்றபடி இருந்தனர்.
வந்து இருக்கும் சொந்தங்களையும் பந்தங்களையும், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ புன்னகை முகமாக நலம் விசாரித்து, வரவேற்பதற்காகவே மேலும் இருவர் சபையில் சுற்றிக் கொண்டு இருக்க... திருமண மண்டபத்தினுள் சொந்தப்பந்தங்கள் நிறைந்து காணப்பட்டது.
பந்தி நடக்கும் இடத்திலும் வேலைகளை சரியாக கவனித்துக் கொள்ளுவதற்கும் இரண்டு பேர் நியமித்து இருந்தனர்.
திருமணத்திற்கு வந்து இருந்த ஊர் மக்கள் வேறு ஒன்று கூடி, சலசலப்புடன் பல கதைகளை பேச தொடங்கியவர்கள், அதில் ஒரு கதையை ஒன்றாக்கி அதை இரண்டாக்கி அப்படியே வளர்த்து பத்தாக மாற்றிக் கொண்டு இருந்தனர்.
மணமகள் அறையில் பருவ பெண்கள் ஒன்றாக குவிந்து, மணப்பெண்ணை கேலி செய்துக் கொண்டு இருந்தாலும், பெண்ணை அழகாக அலங்காரம் செய்தார்கள்.
"போதும் போதும் அரட்டை அடிச்சது எல்லாம்... வெளியே போங்க. இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க..? எல்லாரும் என் மருமகளை பார்த்து கண்ணு வச்சிடாதீங்கடி" என்று சொல்லிக் கொண்டே அறையினுள் வந்தார் மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா.
"ம்கூம்... இப்போ தான் நாங்க இவளை பார்க்கிறோம் பாருங்க கண்ணு வைக்க" என்று ஒருத்தி நொடித்துக் கொள்ள,
இன்னொருத்தியோ, "அதானே, நாங்க எல்லாம் ஒன்னா பிறந்து ஒன்னா... வளர்ந்து ஒன்னாவே கல்" என்று ஆரம்பித்தவளின் தலையில் கொட்டிய காஞ்சனா,
"போதும் போங்கடி. நான் என் மருமக கிட்ட பேசிட்டு வரேன்" என்று சொல்லி மணப்பெண்ணின் தோழிகளை வெளியே விரட்டாத குறையாக விரட்டி வைத்தவர், அவர்கள் போனதும் கதவை அடைத்து விட்டு,
"அழகா இருக்க கீர்த்தனா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று சொல்லி நெட்டி முறித்தார்.
கீர்த்தனாவோ அமைதியாக புன்முறுவல் பூத்து "தேங்க்ஸ் அத்தை" என்று கூறிக் கொண்டே அவர் காலில் விழுந்து வணங்கினாள்.
"நல்லா இரும்மா, அடுத்த பத்து மாசத்துல எனக்கு ஒரு பேத்தியோ பேரனோ பெத்து கொடுத்துடு கீர்த்தி" என சொன்னதை கேட்டு, அவள் நெஞ்சில் நீர் வற்றி போனது.
தொண்டை குழி ஏறி இறங்க "ம்" என மெல்ல தலையை ஆட்டினாள்.
காஞ்சனா அவளின் அலங்காரத்தை பார்த்துக் கொண்டு வந்தவர், "ஆமாடா அந்த கல்லு வச்ச ஆரம் போட்டுக்கலையா நீ? எங்கே போச்சு?" என்று கேட்டுக் கொண்டே ஆரத்தை தேட,
"அது வீட்லயே மறந்து வச்சிட்டு வந்துட்டேன் அத்தை" என்றாள்.
"ஓ" என்று காஞ்சனாவின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்து, "சரி சரி... வீட்டுக்கு போனதும் அத்தை கிட்ட கொடுத்துடு என்ன... பத்து சவரம் நகை பத்திரமா வைக்கணும்ல" என்றவர் பல்லை காட்டி விட்டு, "இதோ பாரு தொப்பை வேறு அதிகமா போட்டு வச்சி இருக்க. முன்ன எல்லாம் எவ்வளவு ஒல்லியா இருப்ப..? கடந்த அஞ்சு மாசத்துல இப்படியா வெளியே தெரியுற போலவா தொப்பை போடுவ" என்று கேட்டவருக்கு தெரியவில்லை.
அது உடல் கொழுப்பால் உண்டான தொப்பை இல்லை. கருவில் உருவான குழந்தை என்று.
அவருக்கு மட்டுமில்லை... அங்கே இருக்கும் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அவன் தெரிந்துக் கொள்ளவும் விடவில்லை.
அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், பெண்ணவளின் கருவில் அவர்கள் குடும்ப வாரிசு வளர்கிறது என்று.
காஞ்சனா கூறியதை கேட்ட கீர்த்திக்கு முகம் எல்லாம் வெளிறி போனது. மனம் படபடவென அடித்துக் கொள்ள, பயத்தில் வியர்வை துளிகள் வேறு அவள் அனுமதி வாங்காமல் வதனத்தில் அரும்ப ஆரம்பிக்க... தன் அத்தை பார்ப்பதற்கு முன் அவசரமாக வேர்வையை துடைத்துக் கொண்டாள்.
அதே நேரம் மணமகன் அறையில் வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தான் கலியுகவரதன்.
உனக்கு தான் திருமணம் என்று யாராவது சொன்னால் 'ஓ' என்ற ஒற்றை வார்த்தையில் அதை கடந்து விட்டுச் செல்பவன்.
ஆனால் இந்த திருமணத்தையே அவன் தான் அடம்பிடித்து நடத்துகிறான் என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆனால் அது தான் நிதர்சனம்.
அவனை தவிர அந்த அறையில் யாருமே இல்லை. அவன் அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்.
இறுகிய முகத்தோடு கைப்பேசியை கண்டவனுக்கு, மேலும் இறுகி போனது அவன் வதனம் மட்டும் இல்லை தேகமும் கூட "மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள்" என்ற வார்த்தைகளை கேட்டு.
அவன் அறை கதவு தட்டப்பட, "எனக்கும் கேட்டுச்சு வரேன்" என்று சொன்னவன், தன் கைப்பேசியை அணைத்து சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு பெருமூச்சோடு எழுந்துக் கொண்டான்.
கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவன் முகம் இப்பொழுது சபை நாகரீகம் கருதி மெல்ல விரிந்தது.
மணமேடையில் அமர்ந்து
அக்னிக்கு முன் அமர்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை கூற தொடங்க... அடுத்து பெண்ணை அழைத்து வர சொல்லி குரல் கொடுத்தார் ஐயர்.
தலையை குனிந்த படி மணமகன் அருகில் வந்து அமர்ந்தவள் பதற்றத்தில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவளுக்கோ சபையில் இத்தனை பேர் முன்பு அமர்ந்து இருப்பது பயத்தை வேறு கொடுத்தது.
அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்த வரதன், "கீர்த்திம்மா ப்ரீயா இருடா. எதை நினைச்சும் டென்ஷன் ஆகாத. மாமா நான் இருக்கேன்" என சொல்லி அவள் கரத்தை மென்மையாக பிடித்தான்.
அவள் கரமோ வியர்வையில் சில்லுட்டு இருக்க... அவளின் நிலையை உணர்ந்து ஐயரிடம், "ஐய்யரே போதும் மந்திரம் சொன்னது. தாலியை கொடுங்க" என்று தாம்பூள தட்டில் இருந்து தானே திருமாங்கல்யத்தை எடுத்து மணப்பெண் கழுத்தில் கட்ட போக,
இதை பார்த்த அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு "மாப்பிள்ளைக்கு ரொம்ப அவரம் போல" என சொல்லி மேலும் சிரிக்க, நாதஸ்வரம் சத்தத்தையும் தாண்டி,
அந்த மண்டபமே அதிரும்படி வந்து விழுந்த அவள் வார்த்தைகள்.
"ஸ்டாப் இட்" என ஆளுமையான ஒரு குரல் ஒலிக்க. அக்குரலுக்கு சொந்ததகாரி யாராக இருக்கும் என்று திரும்பி பார்க்காமலே கண்டுக் கொண்டவன் முகம் அழுத்தமாக இறுகி போனது. தாலியை பிடித்தவன் பிடியும் இறுகியது.
அனைவரும் யார் என்று வாசலை திரும்பி பார்க்க அங்கே கையிலிருந்த மைக்கை அருகில் இருந்தவனிடம் கொடுத்து விட்டு திமிருடன் நடந்து வந்தவள் அங்கே மணப்பெண்ணின் கழுத்தருகில் தாலியுடன் அமர்ந்து இருந்த கலியுகவரதன் மீது படிந்தது.
தன் மீது துளைத்து எடுக்கும் பார்வையை வீசிக் கொண்டு இருப்பவளை இப்பொழுது நிதானமாக திரும்பி பார்த்தான்.
அச்சமயம் கலியுகவரதனின் தந்தை ராஜேந்திரன், "யாரும்மா நீ? எதுக்கு இப்போ நிறுத்த சொன்ன?" என்று கேட்டவரை அனல் தெறிக்க பார்த்தவள்,
"பின்னே, நிறுத்தாம என்னை கர்ப்பம் ஆக்கி ஏமாத்திட்டு, இப்போ வேறு ஒரு பொண்ணை கல்யாண பண்ணிக்க போறவனுக்கு அர்ச்சனை தூவி வாழ்த்த சொல்றீங்களா?" என்று அங்கே இருக்கும் அனைவருக்குமே கேட்கும்படி கத்தி கூறினாள் அவள்.
அதை கேடடு கீர்த்தனா அதிர்ந்து வரதனை திரும்பி பார்க்க... அனைவருமே அவனை தான் பார்த்தார்கள்.
அந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் வாய் மேல் கை வைத்துக் கொண்டு நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, மணமகன் மணமகள் உறவினர்கள் முக சுழிப்புடன் நின்று இருந்தனர்.
மாப்பிள்ளையின் அம்மா காஞ்சனா, "யாரும்மா நீ? தாலி கட்டுற நேரத்தில் வந்து பிரிச்சனை செய்துட்டு இருக்க. உன் வயித்துல வளர்ற குழந்தைக்கு என் புள்ளை தான் அப்பானு எதை வச்சி சொல்ற. நான் ஒன்னும் என் புள்ளையை முறை தப்பி போற அளவுக்கு வளர்க்கல. அவன் சொக்க தங்கம்" என்று சொன்னதை கேட்ட மணமகனாக அமர்ந்து இருந்த கலியுகவரதனுக்கே தன் அன்னை பேசுவது கொஞ்சம் ஓவராக தான் போகிறதோ என்று தோன்றியது.
அங்கே மார்புக்கு நடுவே கரங்களை கட்டிக் கொண்டு தன்னை சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டு நின்று இருந்தவளை, என்ன என்று புருவத்தை உயர்த்தி சைகையால் அவன் கேட்க,
அவளோ, "த்தூ" என்று துப்பிவிட்டு, "என் வயத்துல வளர்ற குழந்தைக்கு உங்க புள்ள தான் அப்பா. இதை நிரூபிக்க டெமோ ஏதாவது காட்ட முடியுமா என்ன?" என்று கடுப்புடன் கேட்டவளை பார்த்து,
"ஹா" என்று வாயை பிளந்தார் அவர்.
"பொண்ணு மாதிரியா பேசுற நீ" என்று கேட்டுக் கொண்டே வரதனின் தந்தை ராஜேந்திரன் முன்னே வர, அவரை ஏற இறங்க பார்த்தவள்,
"இந்த வா போ னு பேசுற வேலையெல்லாம் வேணாம். அப்புறம் நானும் அப்படி தான் பேசுவேன்" என்றாள் திமிராக.
அவள் கூறுவதோ, தன் எதிரே இருப்பவர்கள் அவளை எப்படி நடத்துகிறார்களோ அப்படி தான் தானும் நடந்துக் கொள்வேன் என்பது போல் இருக்க. முகம் சுருங்கி போனது அவருக்கு.
அதுவரை அமைதியாக மணமேடையில் அமர்ந்து இருந்த கலியுகவரதன் சற்றே கோபத்துடன் எழுந்து மங்கையின் அருகில் வந்தவன் அவளை அருவெறுப்பாக பார்த்து, "இங்க பாரு மாயா, உன்னோட இந்த அகங்காரத்தை வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ. என் குடும்பத்துகிட்டையும் என் கிட்டையும் வச்சிக்காத. ஆமா குழந்தை குழந்தைனு சொல்றியே..." என்று கேட்டுக் கொண்டே அவள் வயிற்றை சுட்டிக் காட்டி, "இதுக்கு நான் தான் காரணம்னு எதை வச்சு டி சொல்ற?" என்று எரிச்சலுடன் கேட்டான்.
"அதுக்கு, நமக்குள்ள நடந்ததை வீடியோவா எடுத்து வச்சிட்டு இருக்க முடியும்..? ஒருவேளை நீ இப்படியெல்லாம் கேட்பனு அன்னிக்கே தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா வீடியோ எடுத்து இருப்பேன்டா" என்று அவனுக்கு சற்றும் சலிக்காத குரலில் எந்த தயக்கமுன்றி பேசுபவளை பார்த்து வெறுத்து போனான் கலியுகவரதன்.
சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று கவலையே கொள்ளாமல் பேசுபவளை கண்டு அனைவராலும் "பொண்ணா இது" என்று முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை.
அந்நேரம் மணமேடையில் அமர்ந்து இருந்த கீர்த்தனா சட்டென்று மயக்கம் போட்டு விழவும், அனைவரின் கவனமும் அவள் மீது திரும்பியது.
திருமணத்திற்கு வந்து இருந்த மருத்துவர் ஒருவர் கீர்த்தனாவை பரிசோதித்து விட்டு, குரலை சரி செய்துக் கொண்டே தயக்கமாகவே, "கீர்த்தி பிரக்னண்டா இருக்கா" என்று அனைவரின் தலையிலும் மேலும் ஒரு குண்டை தூக்கி போட,
காஞ்சனாவோ ஆவேசமாக கீர்த்தனா அருகில் சென்று, "யார் இதுக்கு காரணம்?" என்று அவளிடம் கேட்க, கீர்த்தனா தலையை குனிந்து கண்ணீரோடு விழிகளை உயர்த்தி, "மாமா தான்" என அங்கே இறுகி போய் நின்று இருந்த கலியுகவரதனை விரல் நீட்டி காட்டினாள்.
இதை கேட்டு மேலும் அனைவருக்கும் பேரதிர்ச்சி ...
சிலர் "மாப்பிள்ளை ஒரே கல்லுல இரண்டு மாங்கா அடிச்சிட்டார்" என்று கூற,
மேலும் சிலரோ, "மாப்பிள்ளை ஜகஜால கில்லாடி தான்" என்றனர்.
ஒரு சிறிய விஷயத்தையே ஊதி எப்படி பெரியதாக்க வேண்டும் என்று தெரிந்த நம் மக்களுக்கு... இத்தனை பெரிய செய்தியை எவ்வாறு பூகம்பம் போல் வெடித்து சிதற விட வேண்டும் என்று சொல்லியா கொடுக்க வேண்டும். இதில் எல்லாம் அவர்கள் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே..!
முதல் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன் பேபிஸ்... படித்து விட்டு உங்கள் பொன்னான கருத்துகளை கூறி...
என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துங்கள்.
கருத்து லிங்க்
Thread '(VVA) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
மாயா எப்போ பொய் சொன்னா டியர். நன்றி டியர்.Adeii ennada natakkuthu Inga....keerthana orginal karpam....appo Maya ean poi sollanum.... interesting epi❤️💖 waiting for your next epi sis💖💖💖
நன்றிம்மாசுவாரஸ்யமான கதையா இருக்கும் போலேயே செம டியர் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️