வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விடையறியா வினா அவள்!

Status
Not open for further replies.
அத்தியாயம்- 4

ராஜேந்திரன், காஞ்சனா தம்பதியினருக்கு இரு மகன்கள் மூத்தவன் இளங்கோ இளையவன் கலியுகவரதன்.

ராஜேந்திரனின் தந்தை பெயர் தான் இளையவனுக்கு வைத்து இருந்தார் அவர். தாயையும் தந்தையையும் இளங்கோ பிறந்த ஒரு வருடத்தில் விபத்தில் பறிக் கொடுத்தவர், உடன் பிறந்த தம்பி மூர்த்திக்கு ராஜேந்திரன் தான் தந்தை ஸ்தானத்தில் முன் நின்று மரகதத்துடன் திருமணம் நடத்தி வைத்தார்.

இளங்கோ பிறந்து இரண்டு வருடத்தில் கலியுகவரதன் பிறக்க... அந்த வீட்டில் மகிழ்ச்சி இருந்தாலும் பணம் பற்றாக்குறை தான்.

அண்ணனை போல் மூர்த்திக்கு புத்திசாலி தனம் இல்லாததால் அண்ணனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை.

ஆரம்பத்தில் மரகதத்திற்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், மகள் லாவண்யா பிறந்ததும் தான்... அந்த வீட்டில் கணவனின் நிலை என்னவென்று தெரிய ஆரம்பித்தது.

குழந்தைக்கு மருத்துவமனை செலவிற்கு கூட அண்ணனின் முன் கைகட்டி நின்று காசை வாங்கிக் கொண்டு வரும் கணவனை பார்த்தால் எந்த மனைவியால் தான் தாங்க முடியும்.

அதன் விளைவு தான் மரகதம் கணவனை மதிக்காமல் போக ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் காஞ்சனா நல்ல விதமாக பேசி பழகினாலும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவர் பேச்சு இருக்க... பொறுத்து பொறுத்து பார்த்த மரகதம் ஒரு கட்டத்தில் எதிர்த்து பேச ஆரம்பித்து இருந்தார்.

ராஜேந்திரன் தான் இரு குடும்பத்தையும் முன் நின்று எடுத்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார்.

சொந்தமாக தொழில் இருந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்.

வரும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை ஓரளவிற்கு படிக்க வைத்து இருந்தார்.

இளங்கோ படித்து முடித்ததும், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிக்க...

கலியுகவரதனோ சொந்தமாக ஒரு கூரியர் அலுவலகம் ஒன்றை திறந்து சட்டபூர்வமாக அனுமதி வாங்கி இரு நபர்களை வேலைக்கு அமர்த்தி தொழிலை தொடங்கினான்.

ஆரம்பத்தில் எந்த வருமானமும் இல்லையென்றாலும், சிறிது கையிருப்பிற்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு பணம் வர ஆரம்பிக்க... அதை பெருமையாக வீட்டில் சொன்னவனை கேவலமாக பார்த்து விட்டு கடந்துச் சென்றனர்.

அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவன் தன் தொழிலை கேவலமாக நினைக்காமல் அதில் எப்படி முன்னேற வேண்டும் என்று அயராது உழைத்தான்.

சொந்த ஊரில் முதலில் சிறியதாக ஆரம்பித்த அவன் கூரியர் அலுவலகம், அடுத்த ஊரிலும் அனுமதி பெற்று மற்றொரு கூரியர் அலுவலகத்தை திறந்தான்.

அங்கே இரண்டு நபர்களை வேலைக்கு நியமித்து அவன் தொழிலை கவனிக்க தொடங்கி இருந்த சமயம்,

ஒரு நாள் இரவு மற்றொரு ஊரிலிருந்த அலுவலகத்தை அடைத்து விட்டு அவன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டு இருந்தவன் கண்ணில் சாலையோரம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் தன்னை குறுக்கிக் கொண்டு நடுங்கிக் கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்தான்.


அப்பெண்ணோ, 'ஏதோ ஒரு வண்டி வருது. அவங்க கிட்டையாவது உதவி கேட்டு பார்ப்போம்' என்று நினைத்துக் கொண்டு இருக்க.

வண்டியோ அவள் அருகில் நிறுக்காமல் அவளை கடந்துச் சென்றது.

அதை உணர்ந்தவள், 'என்ன இது... ஒரு ஆளு இருக்கிறது கூடவா தெரியாம போறான். இப்போ என்ன பண்ணலாம்?' என்று யோசித்தவள், 'சரி மயங்கி சரிஞ்ச மாதிரி நடிப்போம். திரும்பி பார்க்கிறானா பார்க்கலாம்' என்று யோசித்துக் கொண்டே மயங்கி கீழே விழுந்தாள்.


கலியுகவரதனோ, 'இந்த நேரத்தில் பேய் பிசாசாக இருக்கும்' என்று எண்ணியவன்
வண்டியை நிறுத்தாமல் ஓட்ட, சிறிது தூரம் தள்ளி சென்றதும் வண்டியின் முன் கண்ணாடி வழியாக அந்த இடத்தை பார்த்தான்.

அமர்ந்து இருந்த பெண் இப்பொழுது தரையில் மயங்கி விழுந்து இருப்பதை கண்டு சட்டென்று வண்டியை நிறுத்தியவன் ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டான்.

அவன் மனதில் சற்று பயம் இருந்தாலும் அப்பெண்ணை அப்படியே விட்டு போக மனமில்லாமல், தன் கைப்பேசியை எடுத்து அதில்,

"கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்" என்று
கந்தசஷ்டி கவசம் பாரயாணம் பாடலை போட்டவன்,

எப்பொழுதும் வண்டியில் வைத்து இருக்கும் விபூதியை எடுத்து நெற்றியில் பட்டையை போட்டுக் கொண்டு தைரியம் பெற்றவனாக வண்டியை திருப்பிக் கொண்டு அந்த நிறுத்தத்தை நோக்கி விரைந்தான்.

அருகில் சென்று வண்டியை நிறுத்திவிட்டு நெஞ்சை தட்டியபடி சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே விழுந்து இருந்த பெண் அருகில் சென்றான்.

அவள் மனமோ, 'அடபாவி! என்னை பார்த்தா பேய் மாதிரியா இருக்கு? பேய்க்கு பயந்தவனே' என்று நினைத்தவள்,

அரை மயக்கத்தில், "தண்ணீ தண்ணீ" என்று கூற,

அவள் என்ன கூற வருகிறாள் என்று சரியாக காதில் விழவில்லை அவனுக்கு.

குனிந்து, "என்னம்மா சொல்ற?" என்று கேட்க, மீண்டும் "தண்ணீ" என்று சொல்லவும் வண்டியில் வைத்து இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து,

சற்று குனிந்து, "இந்தா ம்மா தண்ணீ. எழுந்து குடி" என்று சத்தமாக அவளை அழைத்தான்.

அவளோ "என்னையே பேய்னு நினைச்சிட்டல்ல. என்னால இதை தாங்கவே முடியலடா. இரு உனக்கு இருக்கு" என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டே குரல் வந்த சத்தம் கேட்டு
குனிந்து இருந்தவனை பாதி இமையை மட்டும் திறந்து பார்த்தவள் கண்களுக்கு அந்த முருகனே நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு கையில் வேலுடன் "காக்க காக்க" என்ற பாடல் ஒலிக்க நின்று இருப்பதை பார்த்து,

"அப்பனே வேலய்யா! உன் பக்தையை காக்க தாமே நேரில் வந்து விட்டீரோ!" என்று தன் வசீகர சிரிப்பை உதிர்த்தாள்.

"ஏது வேலய்யாவா? என்னை பார்த்தா முருகனை போலவா இருக்கு" என்று தன் தாடியை தேய்த்தவன் கண்களின் ஓரம் மகிழ்ச்சியில் இரண்டு கோடுகள் வேறு விழுந்தன.

அப்பெண்ணோ அடுத்தபடியாக,

"கந்தா"

"ஹான்... என்னையா?" என அவன் கேட்க,

"கடம்பா"

"யாரு..?" என்று பின்னால் திரும்பி பார்த்தான்.

"கதிர்வேலா, உம்மை தான்" என அவள் பற்களை கடித்துக் கொண்டு சொல்ல,

"நானா?" என்று தன்னை நோக்கி விரலை நோக்கி காட்டினான்.

அவளோ தன் இருக்கரம் கூப்பி,
"இப்புவியிலிருந்து எனக்கு முக்தி கொடுத்து என்னை உன்னுடனே அழைத்துச் செல். நிச்சயமாக வள்ளிக்கும் தேவயானிக்கும் போட்டியாக வர மாட்டேன். எனக்கு முக்தி கொடுத்தாவே போதும்" என்ற வசனத்தை கேட்டவனுக்கு,

'லூசா இருக்குமோ?' என்று நினைத்தான் வரதன்.

அவளோ அதற்கு அடுத்த படியாக நின்று இருந்தவனின் காலை பிடித்து, "இந்த அபலை பெண்ணை கை விட்டு விடாதீர்கள் முருகா" என அவன் காலை பிடித்து ஆட்ட ஆரம்பிக்க,

அவனோ நிற்க முடியாமல் ஆடிக் கொண்டே, "அட பைத்தியம், என் காலை விடு..." என்று சொல்லிக் கொண்டே நிலையில்லாமல் கீழே கிடந்தவளின் மீதே விழுந்தான்.

அவனின் உடல் கனம் தாங்க முடியாமல் சத்தமாக அலறியவளின் வாயை சட்டென்று பொத்தியவன், சாலையில் யாராவது இருக்கிறார்களா என்று தான் முதலில் பார்த்தான்.

யாரும் இல்லை என்று அறிந்தவன் அப்பொழுது தான் அவர்கள் இருக்கும் நிலையை கண்டு பதறி எழுந்தான்.

அவளுக்கும் அப்பொழுது தான் மூச்சே வந்தது.

பின்னே அவர்கள் இருந்த நிலையை கண்டால், யாராக இருந்தாலும் தவறாக அல்லவா நினைத்துக் கொண்டு போவார்கள்.

நல்லவேளையாக அந்த சமயத்தில் யாருமே அங்கே இல்லாமல் போனது அவனுக்கு மட்டுமில்லாமல் அவளுக்கும் சேர்த்து தான் நிம்மதியை கொடுத்தது.

அவளோ விடாமல் அந்நிலையிலும், "ஏன் முருகா எழுந்து விட்டாய்" என்று கேட்க,

அதற்கு மேல் பொறுமையாக இருக்க அவன் ஒன்னும் முட்டாள் இல்லையே!

"அடிங்" என்று நாக்கை மடித்து கடித்தவன் கரத்திலிருந்த தண்ணீரை அவள் முதத்தில் அப்படியே ஊற்றினான்.

இதை எதிர்பார்க்காதவள் தன் நடிப்பை கைவிடவும் முடியாமல் அப்படியே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தாள்.

"அய்யோ மழை மழை... முருகா உன் வேலை குடையாக்கி என்ன காப்பாற்று" என்று அவள் பிதற்றிக் கொண்டு இருக்க...

அவனிடம் இருந்த கொஞ்சம் நஞ்சம் பொறுமையையும் கை விட்டவன்,

"எப்படியோ போ" என சொல்லிவிட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட போனான்.

அவன் விலகிச் செல்வதை திடுக்கிட்டு பார்த்தவள், "அய்யோ ரொம்ப ஓவரா நடிச்சிட்டோமோ" என்று தன்னை தானே கடிந்துக் கொண்டு, சட்டென்று யோசனை வந்தவளாக,

அந்நேரம், "அய்யோ அம்மா வயிறு வலிக்குதே" என்று அவள் வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டாள்.

சத்தம் கேட்டு திரும்பியவன் அவளை அப்படியே விட்டு போகவும் ஏனோ அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

வண்டியிலிருந்து மீண்டும் இறங்கியவன் விறுவிறுவென அவள் அருகில் சென்று தரையில் சுருண்டு இருந்தவளை தூக்கி பிடித்து அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்தான்.

இம்முறையும் அரை மயக்கத்தில் அவனை பார்த்தவள், "அப்பனே முரு" என்று சொல்ல வந்தவளின் உதட்டில் ஒற்றை விரலை வைத்து,

"உஷ்... எதுவும் பேசாதே" என்றவன் முதலில் அவன் அடித்து இருந்த அந்த பட்டையை கலைத்து விட்டான்.

பாதியாக திறந்து இருந்த கண்களின் வழியே பார்த்தவள்,

"ஏன் முருகா பட்டையை கலைக்கிறாய்? அந்த பட்டை தான் உமக்கு அழகே. ஆனால் பட்டையை விட, நாமம் போட்டால் அதை விட மிகவும் அழகாக தெரிவீர்கள்" என்று அழுத்தமாக சொன்னவளை திரும்பி முறைத்தவன்,

"உனக்கு பேசுற அளவுக்கு தெம்பு இருக்குல. சரி சொல்லு யார் நீ? இந்த டைம்ல இங்கே என்ன பண்ற?" என்று கேட்டான் வரதன்.

அவள் மனமோ, 'பேசுற அளவுக்கு தெம்பு இருக்கா? அய்யோ அப்போ அப்படியே விட்டு போயிடுவாரோ? நைட் நம்ம எங்கே தங்குறது?' என்று யோசித்துக் கொண்டே,

தலையை பிடித்தபடி, "என்னை காப்பாத்துங்க. பசியில நான் செத்திடுவேன் போல" என்று மயக்க நிலைக்கு செல்ல போனவளை தாங்கி பிடித்து அவள் கன்னத்தை தட்டி,

"ஏய் உன் பெயர் என்னனு சொல்லிட்டாவது மயங்கி தொலை" என்று எரிச்சலாக சொன்னான்.

அவளோ அவன் மீது சாய்ந்தவாறே,

"மாயா" என்று சத்தமாக முணுமுணுக்க,

"பேருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்றவனுக்கு அவளை அப்படியே விட்டு போக வேற மனம் இடம் கொடுக்கவில்லை.

"பார்க்க வேற செம அழகா இருக்கா. இப்படியே விட்டு போனா யாராவது இவளை ரேப் பண்ணிட்டு கொன்னு போட்டா என்ன பண்றது" என்று வாய் விட்டே கூற,

மயங்கி இருந்தவளுக்கோ, 'ஏதே ரேப்பா? விட்டா இவனே பண்ணிடுவான் போலையே. போதாதற்கு இவன் மேலேயே சாய்ந்து இருக்கோம். இப்போ நகர கூட முடியாதே. இல்லனா மயங்கின மாதிரி நடிச்சிட்டு இருப்பதை கண்டு பிடிச்சுடுவானே' என்று யோசித்தவள்,

"இப்போதைக்கு இவனை விட்டாலும் நமக்கு வேற வழியில்லை. என்ன தான் பண்றான்னு பார்ப்போம்" என்ற முடிவோடு அவன் மீது சாய்ந்து இருந்தாள் மாயா.
Thread '(VVA) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/vva-கருத்து-திரி.26/
 
Status
Not open for further replies.
Top