அத்தியாயம் 02
கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த அத்தனை மூத்த பத்திரிகையாளர்கள் முகத்தில் பலவருடங்கள் கழித்து சந்தோஷப் புன்னகை அதிலும் விஸ்வநாதன் கண்களில் ஆனந்த கண்ணீர், குயிலியின் அருகில் அமர்ந்திருந்தவரோ அவளை அணைத்துக் கொண்டு,
"நீ சாதிச்சுட்ட பிள்ள உன்ர அப்பா மாதிரி சனத்துக்காக உழச்ச எத்தனையோ ரிப்போர்ட்டஸ்க்கான நியாயத்தை வாங்கிக் கொடுத்துட்டா"
என விம்ம குயிலியின் கண்களிலும் கண்ணீர் கருவிழிகளோ மாநந்தவை தான் நிலைகுத்தி பார்த்திருந்து அந்த விழிகளில் நன்றியுணர்வும் வலியும் கொட்டிக் கிடக்க உதடுகளோ
"தேங்க்ஸ் மனு" என அவனுக்கு மட்டும் தெரியும் விதமாக முணுமுணுக்க, அவன் கண்களும் யாருமறியாது அவளை பார்த்து மென்னகை புரிந்துக் கொண்டிருக்க,
மாநந்தவிடம் விரைந்து வந்த சரத்தோ அவனது காதில் எதையோ பரபரப்பாக மொழிய, ஒரு நொடி அதிர்ந்தாலும் பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் மூளையோ அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென கணக்கிட
குயிலியினருகே வந்த மாநந்தவோ
“வா போகலாம்” என அவளுடன் கை கோர்த்தபடி நீதிமன்றத்திலிருந்து வெளியேற முற்பட அவர்களை ஊடகவியலாளர்கள் முற்றுகை இட்டபடி,
“சார் உங்களுக்கும் மிஸ் ரிச்சர்ட் பெர்னாண்டஸுக்கும் என்ன தொடர்பு?”
பற்களை நற நறவென கடித்தவனோ,
“ஷீ இஸ் மை வைப்” என்று கூறியபடி நகர முற்பட
“சார் நீங்க தான் இந்த கேஸ பின்னாடி இருந்து புல்லா மூவ் பண்ணிங்கனு சொல்றாங்க உண்மையா?”
என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென முகத்தை நிர்மலமாக வைத்து கொண்டு,
“சட்டத்திற்கு முன்னால் எல்லாரும் சமம் தான் குற்றவாளிகள் தண்டிக்கபடனும் தண்டிக்கப்பட்டா தான் மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும் அதற்காக எனக்கு முடிஞ்ச பங்களிப்ப நான் செஞ்சிருக்கேன் அவ்ளோ தான்”
என்றவன் மேற்கொண்டு ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காது குயிலியுடன் இலங்கையின் பிரபல தனியார் மருத்துவமனையான ‘சென்ட்ரல் ஹாஸ்பிடல்’ நோக்கி பயணிக்க,
குயிலியோ, “மனு நான் நம்ம காதலுக்கு” என மென்று விளங்கியவளை நோக்கி,
“உண்மையா இருக்கல குயில் நீ ரிச்சர்ட் பெர்னாண்டஸோட மகள இருந்திருக்க என்னோட பொண்டாட்டியா என்னோட சரி பாதியா என்னைக்குமே யோசிக்கல யோசிச்சிருந்தா என்கிட்ட உன்ன பத்தின உண்மைய சொல்லிருப்ப நான் தான் யாரோவாச்சே?”
என்று வார்த்தைகளை கடித்து துப்ப, அதில் கண்கலங்கி போன பெண்ணவளோ,
“இல்ல மனு அது வந்து நான்” என்று ஆரம்பிக்க,
“இங்கே பாரு குயில் உன்ன காயப்படுத்த கூடாதுன்னு நினைக்குறேன் அது உன்ன என்ன நம்ம குழந்தைய எல்லாரயும் பாதிக்கும்”
என்று தணிந்த குரலில் கூற, அவனை பார்த்து அதிர்வது இப்போது அவளது முறையானது அவனோ,
“உன்ன பத்தி உன்ன விட எனக்கு நல்லா தெரியும்டி”
என இறுகிய குரலில் கூற அதற்கு மேல் அவளும் பேசவில்லை அவனும் பேசவில்லை. அரைமணி நேரத்தில் வைத்தியசாலையை வந்தடைய
அதிர்ச்சியிலும் கவலையிலும் அவ்வளவு நேரம் எங்கே செல்கிறோம் என்ன செய்கிறோமென புரியாமல் இருந்தவள் சற்றே சுதாரித்துக் கொண்டு, பழைய குயிலியாக
“மனு என்ன ஏன் இங்க கூட்டிட்டு வந்து இருக்க? இன்னும் ரெண்டு நாளுல எனக்கு ஃப்ளைட் நான் பேக் பண்ணணும்”
சீற முகம் இறுக அவளை பார்த்து இருந்தவனோ,
“உள்ள வா சொல்றேன்” என்றபடி அழைத்துச் சென்றது என்னவோ அவசர சிகிச்சை பிரிவிற்கு தான் அவசர சிகிச்சை பிரிவிற்கு முன்னால் பதறியபடி நின்ற மானெல்லோ குயிலியிடம்
“குயிலிம்மா உன் அம்மா.. நம்ம மனோவுக்கு பிரைன்..” என்று ஏதோ கூற வருவதும் தடுமாறுவதுமாக இருக்க,
குயிலியோ தன்னை கஷ்டப்பட்டு சமன் செய்து கொண்டவள் இறுகிய தொனியில்,
“என்ன ஆச்சு ஆன்ட்டி அம்மாவுக்கு?”
“பிரைன் கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜாம்” என்று வாயை மூடிக் கொண்டு அழ,
தொப்பென்று அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவள் முகம் அடிப்பட்ட குழந்தையின் பாவத்தை தத்தெடுக்க,
ஒரு தடவை ஆழமூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டவள் எப்போதும் தந்தையின் நினைவாக வைத்திருக்கும் ஒலி பதிவு கருவியை காதருகில் வைத்து உயிர்ப்பிக்க அதிலோ அன்பும் பாசமும் பொங்க ஆர்வத்துடன்,
“பேபிம்மா எப்பவும் தைரியமா இருக்கணும் அப்பா கூட இருந்தாலும் கூட இல்லாட்டியும் அம்மாவ நல்லா பார்த்துக்கணும் சரியா குட்டி”
என ரிச்சர்ட்டின் குரல் கூறி முடித்த நொடி ஒலி பதிவு கருவியின் செயற்பாட்டை நிறுத்தியவள் கண்களில் கண்ணீர் மட்டும் ஆறாக பெருகி வழிந்தது. அனால் தலையை இடம் வலமாக ஆட்டியவள் உதடுகளோ எதிர்மாறாக கஷ்டப்பட்டு புன்னகை பூத்தது.
அதனை தொடர்ந்து அங்கு வந்த மருத்துவரிடம் மாநந்த ஏதோ கேட்க முற்பட அவனை தடுத்து நிறுத்தியவள் நடுக்கத்துடன் கம்மியபடி வந்த குரலை கஷ்டப்பட்டு சமன் செய்தவாறே,
"டாக்டர் இன்னும் எவ்ளோ நாள் என் அம்மா என்கூட இருப்பாங்க ? அதாவது எந்த டிரீட்மென்ட்டும் இல்லாம"
"அது வந்து எதையும் உறுதியா சொல்ல முடியாது மேம் ஒரு வாரம் தான் தாக்குப்பிடிக்கும் குறைஞ்ச பட்சம் ஆனா நாங்க டாக்டர்ஸா ஒரு உயிர காப்பாத்தத்தான் பார்ப்போம் டிரீட்மென்ட் மூலமா குறைஞ்சது ஒரு மாசமாவது உயிரோட இருப்பாங்க சோ"
என்று அவர் எதையோ புரியவைக்க முற்பட கையை நீட்டி ஏதும் பேசாதே என்று பாவனை செய்தவள், கண்களில் வழிந்த கண்ணீரை நடுங்கிய கரத்தால் துடைத்தபடி,
"வேணாம் டாக்டர் எங்கம்மா எங்கப்பாவ ரொம்ப லவ் பண்ணாங்க ஆனா வாழ்க்கையில நடந்த சதியோ இல்ல விதியோ அவங்கள சேர விடல இவ்ளோ நாள் தான் எனக்காக பிடிக்காம இந்த உலகத்துல வாழ்ந்துட்டாங்க,
என்று கூறியவள் தொண்டையை பெரும் பாரம் அழுத்த அதை விழுங்கிக் கொண்டு,
இனிமேலாச்சு அவங்க காதல் கதைக்கு அழகான முடிவு கொடுப்போம்"
என்று நடுக்கத்துடன் கூற அவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டான் மாநந்த அவனது மார்பில் குழந்தையென தஞ்சம் ப்புகுந்தவள் விழிகளில் கண்ணீர் பொலபொலவென கொட்ட, அவனது வெண்ணிற சட்டையில் அவளது கண்ணீர் சுவடுகள்,
சிறிது நேரம் கழித்து அவளை சமாதானம் செய்து அவனது வீட்டிற்கு அழைத்து வந்த மாநந்தவை வெறித்து பார்த்தவள் என்ன நினைத்தாளோ,
"மனு இந்த உலகத்துல எனக்கு மட்டுமே தெரிஞ்ச அழகான ஆழமான காதல் கதையோட புத்தகத்தை உன்கிட்ட நான் தரட்டுமா ?"
என்று ஆழ்ந்த குரலில் வினவ, அவனோ மூச்சை இழுத்துவிட்டபடி,
"இதபத்தி பிறகு பேசலாம் குயில் இப்போ சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு"
என்றவனை இடைமறித்தவளோ,
"முடியாது மனு நான் உனக்கு நியாயமா இல்லங்குற குற்றவுணர்ச்சி என்ன கொலையா கொல்லுது அதுக்கான தண்டனையா தான் நான் இப்போ யாருமில்லாத " அனாதையா நிக்குறேன்,
என்று சொல்லி முடிக்கும் முன்பே அவள் இதழ்களில் வன்மையாகவும் அழுத்தமாகவும் முத்தமிட்டு விலகியவன், கண்களில் தீப்பொறி பறக்க
"இனி அனாதை அப்டி இப்படின்னு வார்த்தை வந்துச்சு தொலைச்சிருவேன்டி உன்ன, நீ எதுக்காக என்ன லவ் பண்ணிருந்தாலும் உன்ன என்னால வெறுக்க முடியாதுடி, உனக்காக என் அப்பனையே தூக்கி போட்டுட்டு வந்துருக்கேன் இத விட உனக்கு எப்படி என்ன நிரூபிக்கிறதுன்னு தெரில
என்று கோபத்துட எழப்போனவனின் கையைபற்றி தடுத்தவள் பெருமூச்செறிந்தபடி
"அது உன் பெருந்தன்மை இருந்தாலும் எனக்கு மனசு கேட்கல"
என்று கூறிக்கொண்டே அவனருகே இரண்டு நாட்குறிப்பு புத்தகங்களை நகர்த்தி வைக்க என்ன நினைத்தானோ அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவன் ஒவ்வொரு பக்கமாக புரட்ட தொடங்கினான்.
1998 காலங்களின் ஆரம்பத்தில்...
பெரிதாக தொழிநுட்ப சாதனங்களில் புழக்கமில்லாத காலகட்டம், மிஞ்சி மிஞ்சி போனால் வானொலி பெட்டிகளும், தொலைக்காட்சிகளும் ஆங்காங்கே காண கிடைக்கும்.
இலங்கையில் மத்திய பிரதேசமான கண்டியில் நடுத்தர வர்க்கத்தினரிலும் பார்க்க சற்று மேல் தட்டு வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி அங்கு காணப்படும் கணக்காளர் பழனியப்பனின் வீட்டில் இரவு ஏழு மணியளவில்
"தம்பி ப்ளீஸ்டா கொஞ்ச நேரம் இங்கிலீஷ் நியூஸ் மட்டும் பார்த்துட்டு தாறேன்டா என் செல்லமில்ல"
மனோசித்ரா கெஞ்சிக் கொண்டிருக்க அவளது இளைய சகோதரன் மித்ரனோ, "செல்லமும் இல்ல தங்கமும் இல்ல நான் தரமாட்டேன்"
என்று வானரமாக துள்ள சித்ராவும் அவனுக்கு சளைத்தவள் அல்ல என்பது போல் அவனை மடக்கி பிடித்து ரிமோட்டை பிடுங்க முயற்சி செய்துக் கொண்டிருக்க
இவர்களது சத்தத்தை கேட்டுக் கொண்டிருந்த அன்னை தேவகியோ,
"ரெண்டுபேரும் பேசமா உட்காருறீங்க இல்ல அகப்பையோட நான் அங்க வரட்டுமா ?"
என்றது தான் தாமதம் கப்சிப்பென சத்தம் அடங்கி போனது. அதற்கு பிறகு இருவருக்குமிடையில் மௌனம் ஆட்சி செய்ய அவர்களது அமைதியை கலைக்கும் விதமாக, தொலைக்காட்சி பெட்டியிலிருந்த ரிச்சர்ட் பெர்னாண்டஸ் தனது கணீர் குரலில்
"குட் ஈவினிங் எவரிபோடி"
செய்தியை வாசிக்க தொடங்க மனோசித்ராவும் சரி மித்ரனும் சரி அவரது ஆங்கில உச்சரிப்பை கண்வெட்டாமல் பார்த்திருக்க அதே சமயம் வீட்டினுள் நுழைந்த பழனியப்பனோ,
"தேவிம்மா இங்க கொஞ்சம் வாயேன் நம்ம மனோவுக்கு ஜெயவர்தனபுர யூனிவெர்சிட்டில மேனேஜ்மேண்ட் பாகல்ட்டி கிடைச்சிருக்கு"
என்று சந்தோஷத்துடன் மொழிய, அவ்விடத்திற்கு விரைந்து வந்த தேவகியோ,
சந்தோஷத்துடன் மகளை கட்டி தழுவியபடி, "வாழ்த்துக்கள்டா ம்மா " என்று முத்தம் வைக்க, உலகம் தெரியா அப்பாவி பெண்ணின் மனமோ,
'இவ்வளவு நாள் திரையில மட்டும் ரசிச்ச ரிச்சர்ட் சார பார்த்து ஒரேயொரு ஆட்டோகிராப் மட்டும் வாங்கிரனும் அதுக்காக தான் கஷ்டப்பட்டு படிச்சு கொழும்புக்கு போறேன் ஜாலி ஜாலி'
என்று குத்தாட்டம் போட அதில் உலைவைக்கவென்றே அடுத்த இரண்டு நாட்களில் வீட்டில் ஏதும் விஷேசமா? என்று நினைக்கும் அளவிற்கு அனைத்து உறவினர்களும் கூடியிருக்க சித்துவோ
' நானே இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன் அதுக்கெல்லாம் சேர்த்து உலை வைக்க கூடிட்டாய்ங்க அதுலயும் அந்த ராட்சசி அத்த வேற ஆளும் மூஞ்சியும் தானும் வாழாது அடுத்தவனையும் வாழ விடாது.'
அவர்களை மனதுக்குள் வறுத்தெடுக்க, அவளது காதில் தேனருவியாய் பாய்ந்தது தந்தையின் சொற்கள்,
"இங்க பாருங்க என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கையிருக்கு அவ என் மானத்த வாங்குற மாதிரி எந்த வேலையும் செய்யமாட்டா அதே மாதிரி அவளுக்கு புடிச்ச நம்ம குடும்பத்துக்கு எல்லா விதத்துலயும் ஏத்த பையனா எங்க அனுமதியோட கல்யாணம் பண்ண விருப்படுறானா அதுக்கு நானும் தடையா இருக்க மாட்டேன் அதனால உங்க பிரசாங்கத்த இத்தோட நிப்பாட்டுங்க"
என்றபடி எழுந்துக் கொண்டவர்,
"மனோ இங்கவாம்மா " என்றழைக்க அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வந்தவளோ,
"என்னப்பா ? சொல்லுங்க " என்றாள் ஆர்வத்துடன் அவளது தலையை ஆதுரமாக வருடியவரோ,
"வாம்மா நம்ம உனக்கு யூனிவர்சிட்டி போக தேவையான பொருளெல்லாம் வாங்கிட்டு வரலாம் உன் அம்மாக்கிட்ட மட்டும் சொல்லிட்டு வா போதும்"
என்று கூற தேவகியிடம் மாத்திரம் விடைபெற்றுக் கொண்டு துள்ளி துள்ளி தந்தை பின்னால் ஓடிச்சென்ற பெண்ணவள் அன்று அறிந்திருக்கவில்லை அவளது வாழ்க்கையை திருப்பி போட போகும் நபர்களை சந்திக்க போகும் காலம் வெகுவிரைவில் என்று.
தொடரும்...
*****************************************************************************************************