அத்தியாயம் 23
சரியாக மாலை ஐந்து மணிக்கு அந்த மண்டபத்தின் முன் காரிலிருந்து இறங்கினர் தர்ஷினியும் வெற்றியும்.
தர்ஷினியின் அழகான அந்த கிரீம் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் வெற்றியும் கோட் அணிந்து வந்து இருந்தான். அவனுக்கு அந்த உடை மிகப் பொருத்தமாக இருந்தது. ஏற்கனவே அழகனாக இருந்தவனை இன்னும் அழகாக மெருகேற்றி காட்டியது அந்த உடை.
இருவரும் இணைந்து இறங்க அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.
அவர்களின் வருகைக்கு முன்னவே வெற்றியின் உறவினர்கள் வந்திருக்க அனைவரையும் பார்த்து நலம் விசாரித்து கொண்டே சென்றான்.
தர்ஷினியின் விரல்களோடு தனது விரல்களையும் சேர்த்து கெட்டியாக கோர்த்து கொண்டான்.
அவளுக்கு தான் மிகுந்த சங்கடமாக இருந்தது. தற்பொழுது அனைவரின் பார்வையும் அவர்களின் மேல் இருக்க அவனது கைகளை உதறிவிட்டு அவனை உதாசினப்படுத்தவும் முடியாத நிலையில் அல்லவா இருந்தாள்.
மிகவும் மும்முரமாக அவர்களிடம் பேசி கொண்டிருந்த வெற்றியிடம் எவ்வாறு அழைத்து அவனிடம் கைகளை விடும்படி கூற செய்ய என்று யோசித்து கொண்டிருந்தாள் தர்ஷினி.
அவளின் கைகளோடு இணைந்திருந்த அவனின் கைகளில் உள்ளங்கையை மெதுவாக சுரண்டினாள் தர்ஷினி.
அவனோ அப்பொழுதும் அதை உணர்ந்தான் இல்லை. இது வேலைக்காகாது என்று நினைத்த தர்ஷினியோ தனது கையை பிடித்திருந்த வெற்றியின் கைகளின் மணிக்கட்டின் மேற்புறம் மற்றொரு கைகளினால் யாவரும் அறியாமல் கிள்ளினாள்.
அவனுக்கு அப்பொழுது அது உரைத்தது. ஆனால் அவள் புறம் திரும்பாமல் அவர்களிடம் மேலும் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டே மேடையை நோக்கி நகர்ந்து சென்றான்.
“ஏய் எதுக்குடி இப்ப கிள்ளுன?” என்றான் மிக மெல்லிய குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாக. பேச்சு மட்டுமே அவளிடம் பார்வை சுற்றியிருப்பவர்களிடமே இருந்தது.
“நான் ஒன்னும் ஓடி போக மாட்டேன். எதுக்கு இப்ப கையை இப்படி கெட்டியா பிடிச்சுகிட்டே வர்றீங்க??”
“சரி… கையை பிடிக்கலை…” என்றவன் அவளது இடையினை பிடித்திருந்தான்.
சேலையின் இடையில் தெரிந்த அவளது வெற்று இடையில் அவனது கரங்களின் சூடு பட்டதுமே அவளது மேனி ஒரு நிமிடம் சிலிர்த்தது.
அதை வெற்றியுமே உணர்ந்தான்.
அதே சமயம் அவர்களின் அருகே வந்த வெற்றியின் உறவினர் ஒரு பெண்ணோ “என்னமா நல்லா இருக்கயா?? ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் சூப்பர். கல்யாணத்துக்கு தான் எங்களை கூப்பிடல ரிஷப்சனாவது வச்சீங்களே…” என்று தர்ஷினியிடம் ஆரம்பித்து வெற்றியிடம் அங்கலாய்த்து கொண்டே கூறினார்.
வெற்றிடையில் அவனது கைகளின் குறுகுறுப்பு தாங்க முடியாமல் நின்று கொண்டிருந்த தர்ஷினிக்கோ அவஸ்தையாக இருக்க அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் கஷ்டப்பட்டு சிரித்து வைத்தாள்.
அவளுக்கும் சேர்த்து அவனே பதில் கூறி சென்றான்.
“ப்ளீஸ் கையையே பிடிச்சுக்கோங்க… எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு… கையை எடுங்க…” என்று கெஞ்சினாள் தர்ஷினி.
அவளை திரும்பி பார்த்தவன் “இனி மேல் எப்பவும் கையை பிடிச்சா விடுனு சொல்ல மாட்டியே…” என்று அவளை பார்த்து கேட்டான்.
“இல்ல…” என்று கூறிக்கொண்டே அவனை பார்த்து இடவலமாக தலையாட்டினாள்.
அவனும் அவளது இடையினை விடுத்து கைகளை பிடித்து கொண்டான்.
இவர்கள் விவாதம் நிற்க அதேசமயம் மேடை மீது ஏறியிருந்தனர்.
மேடையேறிய மஹாலட்சுமியோ யாழினியின் கைகளில் இருந்த தட்டில் வைக்கப்பட்டிருந்த மாலையில் ஒன்றை எடுத்து வெற்றியின் கைகளில் கொடுத்து அணிவிக்க கூறினாள்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு நிற்க வெற்றியோ அந்த அழகிய இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்களின் கொண்டு வடிவமைக்கப் பட்டிருந்த அந்த மாலையின் இடையே தாமரை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதை ரசித்து பின் தன் கைகளில் ஏந்தி அவளின் சங்கு கழுத்தில் போட்டு விட்டான்.
அவனில் இருந்த ரசனை அவளுக்கு சுத்தமாக இருக்கவில்லை போலும் ஏதோ கடனுக்கே என்று அந்த மாலையினை எடுத்து வெற்றியின் கழுத்தில் இட்டாள்.
அவளுக்கு தான் காதல் என்பது இல்லை ஆனால் அவன் அதை காதலோடு ஏற்று கொண்டான்.
அதன் பிறகு நேரம் சிறிது சிறிதாக கழிய உறவினர்கள் அவனின் உடன் பணிபுரிவோர் என அனைவரும் சிறிது சிறிதாக வரத் தொடங்கினர்.
மேடையேறி அவர்களுக்கு உண்டான பரிசுப்பொருட்களை கொடுக்க இருவரும் சேர்ந்தே வாங்கி கொண்டனர்.
மணமக்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க நின்றனர்.
புகைப்பட கலைஞர் வெற்றியின் அருகே வந்து “ஸார்… நீங்க லவ் மேரேஜ் தானே…” என்று கேட்டான்.
அவனோ நெற்றியை சுருக்கி “ஆமா… எதுக்கு இப்ப இதை கேட்கறீங்க…” என்றான்.
“இல்ல சார்… அவங்க போட்டோக்கு சிரிக்கவே மாட்டேங்குறாங்க… அதான் கட்டாய கல்யாணமோ என்னமோனு தான்…” என்று தயக்கமாக கேட்டான்.
அவனின் கேள்வியில் வெற்றிக்கு சிறிது கோபம் வந்தது. தனது அந்தரங்கத்தை பற்றி மற்றவர்கள் விவாதிப்பதை விரும்ப மாட்டான்.
“காதல்ல ஊடல் இல்லாம இருக்குமா???” என்று சிரித்து கொண்டே அவனை பார்த்து கேட்டான்.
“ஓ… அது சரி தான் சார்… ஆனா இது உங்க் வாழ்க்கையில முக்கியமான மொமன்ட்… இனி ஒரு போதும் இந்த நொடி திரும்ப கிடைக்காது. சோ அவங்கள கொஞ்சம் சிரிக்க சொல்லுங்க… இங்க பாருங்க இந்த போட்டோவ…” என்று இதற்கு முன்னர் எடுத்த புகைப்படத்தில் தர்ஷினியின் புகைப்படத்தை காட்டினான் தன்னுடைய புகைப்பட கருவியின் வாயிலாக.
மேலும் “அவங்க சண்டையை ஒரு ரெண்டு மணி நேரம் ஒதுக்கி வைக்க சொல்லுங்க சார்… ப்ளீஸ்… இல்லனா போட்டோ நல்லா வராது…” என்றான்.
“சரி நான் பார்த்துக்கறேன்.” என்றவன் திரும்பி தர்ஷினியின் பக்கம் குனிந்து நம்ம ப்ர்ஷனல் நம்மளோட இருக்கட்டும். மத்தவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டாதா… கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்..” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக முகத்தில் புன்னகையும் வார்த்தையில் சூட்டோடும் கேட்டான்.
அவளுக்கும் அந்த போட்டோ கிராபர் பேசியது கேட்டதால் அவனிடம் பதில் கூறாமல் முகத்தை சிரித்த மாதிரி வைத்து கொண்டாள்.
அதன்பின்பு எடுத்த புகைப்படங்களில் தர்ஷினியின் முகத்தில் புன்னகை இருந்தது. ஆனால் அதில் உயிர்ப்பு இல்லை.
சிறிது நேரம் கழித்து அங்கே போலீஸ் கமிஷனர் தியாகு வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
“சார்… வாங்க… வாங்க…” என்று சிரிப்புடனே கூறினான் வெற்றி.
“வெற்றி இதெல்லாம் நல்லாவே இல்ல சொல்லிட்டேன். எங்க கூட தான்டா ராயன் கேசுல சுத்திட்டு இருந்த… எப்ப நீ கல்யாணம் பண்ணிகிட்ட??” என்று கேட்டு கொண்டே அவனது தோளில் தட்டினார்.
அவனோ சிரித்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
தர்ஷினியோ அவர்களின் பேச்சினை சுவாரஸ்யம் இல்லாமல் கேட்டுகொண்டிருந்தாள்.
“என்ன மேன்… என்னை எல்லாம் உன் வொய்ஃபுக்கு இன்ற்றோ கொடுக்க மாட்டியா?? பாரு புரியாத ஒரு பார்வையோட என்னை பார்க்குறா??” என்று வெற்றியிடம் கூறினார்.
“சாரி சார்… தேவா இவர் தான் கமிஷனர் தியாகு. சார் இவ என் வொய்ஃப் தேவதர்ஷினி.”
அவரும் சிரித்து கொண்டே “என்னமா தேவதர்ஷினி… பையன் என்ன சொல்றான்? வீட்டுல ரொம்ப மிரட்டுறானா? ஏதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறினார்.
அவளோ வலுக்கட்டாயமாக சிரித்து கொண்டே “அப்படி எல்லாம் இல்ல சார்…” என்று கூறினாள்.
“சார்… என்னை பார்த்தா கொடுமை படுத்தரவன் மாதிரியா தெரியுது?”
“யாரு சொன்னாங்க அப்படி? உன்னை மாதிரி ஒரு தங்கமான புள்ளைய எங்கேயும் பார்க்க முடியாது…” என்று கூறிக்கொண்டே அவர்களின் அருகே வந்தார் ஜெயந்தி. அவர் கமிஷனரின் மனைவி.
“வாங்கமா…” என்று அவரையும் வரவேற்றவன் “எங்கே அந்த வாண்டு??” என்று மேலும் கேட்க, ஜெயந்தியின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அந்த இருபது வயது பெண்.
“என்ன வெற்றி??? என்னைய தானே எதிர்பார்த்த?” என்று கூறினாள்.
அவனும் சிரித்தபடியே ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“நானில்லாம உன் ரிஷப்ஷன் நடந்துருமா?? கல்யாணம் தான் சொல்லாம பண்ணிகிட்ட…”
“ஏய்… அவன் உன்னை விட வயசுல மூத்தவன்… அண்ணானு கூப்பிடுனு எத்தனை தடவை சொல்றது?” என்று ஜெயந்தி மிரட்டினாள்.
“விடுங்கமா… சின்ன பொண்ணு தானே…” என்றான் வெற்றி.
“பார்த்தயா சப்போட் எனக்கு தான்… வெற்றி இருக்க பயமேன்…” என்றவள் அவர்களின் அருகே சென்று “எனிவே… ஹாப்பி மேரீட் லைஃப்…” என்று இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள்.
“என்ன வெற்றி… உன் வைஃப் பேசவே மாட்டீங்குறாங்க??” என்றாள் தேவதர்ஷினியை வம்பிழுக்கும் விதமாக.
ஜெயந்தியோ “எல்லாரும் உன்ன மாதிரி நான் ஸ்டாப்பா பேசிட்டே இருப்பாங்களா? அந்த பொண்ண பார்த்தாலே தெரியல? ரொம்ப அமைதியா நல்ல பொண்ணு மாதிரி தெரியுது…” என்றார் தர்ஷினியின் கைகளை பிடித்து கொண்டு.
“அமைதியா??? அதெல்லாம் நமக்கு செட் ஆகாதே…” என்று கூறியவள் “வெற்றி… பெட் ரமாஸ் லைட்டே தான் வேணுமா???” என்றாள் குறும்புத்தனத்தோடு.
அவனோ தர்ஷினியின் தோளில் கை போட்டு கொண்டே “கண்டிப்பா…” என்றான் சிரித்து கொண்டே…
“அப்ப உன் தலையெழுத்து அவ்வளோ தான்…” என்றவளை கண்டு ஜெயந்தியோ “வாணி…” என்று அதட்டினார்.
பின்பு தர்ஷினியிடம் திரும்பியவர் “மன்னிச்சுடு மா… அவ ஏதோ சின்ன பொண்னு தெரியாம பேசறா…” என்றார்.
இதற்கு வெற்றி பதில் கூற முனையும் முன் இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த தர்ஷினியோ “ஐயோ… அம்மா… எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க??? சின்ன பொண்ணு தானே… துருதுருனு விளையாட்டு தனமா பேசறா… எனக்கு வாணிய ரொம்ப பிடிச்சுருக்கு…” என்றாள் அவரை சமாதானப்படுத்தும் விதமாக.
அதற்குள் கமிஷனர் தியாகுவோ “ஜெயந்தி இது ரிஷப்ஷன் நாமளே ரொம்ப நேரமா நின்னு பேசிட்டு இருக்கோம்… இன்னும் எத்தனை பேர் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க பாரு…” என்றார்.
பின்பு அனைவரும் நின்று புகைப்படம் எடுத்து கொள்ள கிளம்பி செல்லும் முன் “வெற்றி… கண்டிப்பா ரெண்டு நாள்ல நீங்க வீட்டுக்கு விருந்துக்கு வரனும்…” என்று கூறினார் ஜெயந்தி…
அவர்களும் சிரித்த முகமாகவே சரி என்று கூறினார்.
அடுத்தடுத்து உறவினர்கள் வருகை புரிந்திருந்தனர்.
இதற்கிடையே கல்யாண மண்டபத்தில் தயங்கி தயங்கி இரு ஜீவன்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே நுழைவாயிலிலிருந்து வரவேற்பிற்கான அலங்கார மேடை தெரிந்தது. அதில் நின்று கொண்டிருந்த வெற்றியையும் தர்ஷினியையும் கண்ட இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வழிந்தது.
அவர்களின் வருகையை எதிர் பார்த்து காத்திருந்து வாயிலையே பார்த்து கொண்டிருந்த வெற்றிக்கோ அவர்களின் உருவம் தெரிய அருகே நின்றிருந்த அன்னையை கண்டு அவர்களை காட்டி அழைத்து வர சொன்னான்.
உடனே மஹாலட்சுமி தனது கணவரை அழைத்து கொண்டு வேக வேகமாக அவர்களின் அருகே சென்று “என்ன சம்பந்தி இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க… நேரத்திலயே வர வேண்டாமா??? “ என்று மஹாலட்சுமி கூறினார்.
சீனிவாசனோ “மன்னிச்சுடுங்க… எங்களுக்கு உங்களை தெரியல… இந்த வெற்றியும் எங்ககிட்ட சொல்லல… இல்லனா நாங்களே நேர்ல வந்து கூப்பிட்டுருப்போம்..” என்று அவரும் அவரது பங்கிற்கு கூறினார்.
அதை கேட்ட தர்ஷினியின் பெற்றோர்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு பெரிய மனுஷங்க நம்ம கிட்ட மன்னிப்பு கேட்கறாங்களே…” என்று எண்ணிய தர்ஷினியின் தந்தையோ “அச்சோ… நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுண்டு… பரவாயில்லை…” என்றார்.
“சரி… சரி… வாங்க அவங்கள வந்து ஆசிர்வாதம் பண்னுங்க…” என்று மஹாலட்சுமி கலாவதியின் கைகளை பிடித்து இழுத்தார்.
“அச்சோ… நாங்க எல்லாம் எதுக்கு? இங்க இவ்வளவு பெரிய மனுஷாலுங்க இருக்காங்க…” என்று அவரின் இழுப்புக்கு செல்லாமல் நின்றார்.
“இதென்ன இப்படி சொல்லிட்டீங்க… மத்தவங்கள விட பெத்தவங்க ஆசிர்வாதம் தான் முக்கியம்… நல்ல வேளை நீங்க வந்துட்டீங்க… இல்லனா எனக்கு ஏதோ குறையிருக்கற மாதிரியே தோணிட்டு இருக்கும்… வாங்க” என்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கொண்டு சென்றனர்.
எந்தவொரு தாய் தந்தைக்கும் தனது மகளை மணமகள் கோலத்தில் பார்க்க யாருக்கு தான் தெவிட்டாமல் இருக்கும். இதோ மணமக்கள் நின்று கொண்டிருந்த மேடைக்கு அருகே வரவர அவளை கண்களால் நிறைத்து கொண்டனர் இருவரும்.
எங்கேயோ பார்த்து கொண்டிருந்த தர்ஷினியை “ஏய் தேவா… இங்க பாரு யாரு வந்திருக்காங்கனு…” என்று அவளிடம் கூற அவளும் பார்க்க ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டாள்.
யாரை தன் வாழ்நாளில் சந்திக்க மாட்டோமா என்று ஏங்கியிருந்தாளோ அவர்களே தன் கண்முன்னால் வந்து நிற்க அவளின் உலகமே அசைவற்றது போல் இருந்தது. கண்களில் கண்ணீர் நிறைந்து அவளின் பார்வையை மறைக்க அதை சட்டென்று தனது புறங்கைகளினால் துடைத்து கொண்டாள்.
துடைக்க துடைக்க அவளது கண்களில் ஊற்று போல பெருக்கெடுத்தது… அவளின் கண்ணீரை கண்ட வெற்றி “தேவா… என்னதிது… சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டே இருக்க… பாரு மேக்கப் எல்லாம் கலையுது…” என்றான்.
அவனின் பேச்செல்லாம் அவளுக்கு ஏறினால் போல் தெரியவில்லை. அவனை கண்டு “அ.. ம்மா… அ…ப்பா…” என்று அப்பொழுது தான் பேச கற்றுக்கொள்ளும் குழந்தை போல் திணறினாள்.
அவளின் அந்த குழந்தை தனத்தை பார்த்தவுடன் அவளின் தோளோடு கைபோட்டு தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டே “ஆமா உங்க அம்மா… அப்பா தான்… நான் தான் அவங்ககிட்ட பத்திரிக்கை கொடுத்து உன்னை பத்தின எல்லா உண்மையும் சொல்லி அழைச்சுட்டு வந்தேன்… போதுமா… இப்ப சந்தோஷமா…” என்றான்.
அவளும் “ரொம்ப தேங்க்ஸ்…” என்றாள் கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்போடும்.
“ஏய்… நமக்குள்ள என்ன தேங்க்ஸ்… உன்ன சந்தோஷமா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு கண்ணம்மா…” என்றான் கண்களில் காதலோடு…

Last edited: