#பிரம்மாஸ்திரம்2023
#வெண்பனியில்கரைந்ததீந்தணல்06
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கௌதம் கரிகாலன்... கோபம் கர்வம் அகங்காரம் திமிர் என ஆறு அடிக்கு கம்பீரமாக வளர்ந்து நிற்கிறான் .. இவனுக்கு பிடிக்காத வார்த்தை இரக்கம் பாவம் என்பதே... யாரும் தன்னிடம் இரக்கம் காட்டவோ தனக்கு பாவம் பார்க்கவோ கூடாது என்பதற்காகவே இவனும் யாருக்கும் அதை காட்ட மறுக்கிறான்... அப்படி இரும்பென இறுகி நிற்கும் இவனின் மனதில் இருப்பது தான் என்ன. .🤔 தனிமையை வெறுக்கும் இவன் அந்த தனிமையிலேயே வாழ்வதினால் தானா... இப்படி சுட்டெரிக்கும் சூரியனாக தகித்து நிற்கும் இவனையும் கரையும் வெம்பனியாக மாற்ற வருகிறாள் சாதனா... இவளை வம்படியாக இவளின் அண்ணனிடம் கோபமாக மிரட்டி இவளை திருமணத்திற்கு பேசும் இவன் தாலி கட்டிய பின்பு தெரிகிறது அவள் வாய் பேச முடியாத ஒரு காது கேட்காத பெண் என்பது... அதிர்ந்து கோபம் முகம் காட்டும் இவன் அங்கேயே வெறுத்து விடுகிறான் தன்னவளை😔 அப்படி வெறுத்ததாக நினைத்துக் கொண்டானோ.. 😔. சாதனா.. வாய் பேச முடியாமல் ஒரு காது கேட்காமல் இருந்தாலும் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் இவளின் நிமிர்வு வெகு அழகு👏 இரு முறை ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் துணிச்சலோடு தைரியத்தோடும் வாழ்க்கையை எதிர்நோக்கும் இவளின் தைரியமும் அழகு 👏👏 தாலி கட்டிய கணவனின் பாராமுகத்தை நினைத்து வருந்தினாலும் தன் அண்ணன் பிரபு மற்றும் அண்ணி ரேவதிக்காக அவர்களின் மகிழ்விற்காக அவனோடு வாழ முடிவு செய்து அவன் வீட்டிற்கு செல்லும் இவள் அவன் மேல் இருக்கும் காதலை உணர்ந்து மகிழ்ந்தாலும் அவனின் வெறுப்பை தாங்கிக் கொள்ள சக்தி இல்லாமல் பிரிந்து செல்கிறாள் அவனை விட்டு நிரந்தரமாக... 😔 தன்னை விட்டு பிரிந்த பின்னே தன்னவளின் மேல் கொண்டுள்ள காதலை புரிந்து அவளை தேடி தவிக்கிறான்... கண்டுபிடித்தானா... கண்டவளை காதலால் மீட்டெடுத்தானா என்பது கதையில்...
சந்தோஷ்.. கௌதமின் நண்பன்.. அனைவருக்கும் ஜி கே வாக தகிக்கும் இவன் தன்னவர்களுக்காக மட்டுமே கௌதமாக குளிர்விக்கிறான்.. அப்படி சந்தோஷிடம் மட்டுமே இவனின் சாந்த முகமும் சிரித்த முகமும் வெளிப்படுகிறது நண்பன் தவறு செய்யும் போது அதை கண்டிக்கும் சந்தோஷ் அதனால் நண்பன் கோபம் காட்டும் போது வலியோடு அதை ஏற்கிறான் 😔 விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 🥰👏💐
Good luck dear 🥰❤️💐