வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம் 1

GG writers

Moderator
அத்தியாயம் 1

"மாமு... மாமு... முத்து மாமு..நான் பாஸ் ஆயிட்டேன்.. நான் பாஸ் ஆயிட்டேன்..." என்று கூவலுடனே தனது தாவணியின் பாவாடையை ஒற்றை கையில் தூக்கிப் பிடித்தவாறு வேகமாக வாய்க்கா வரப்பில் ஓடி வந்தாள் 18 வயது கூட நிரம்பாத சங்கீதா.


"அடியே கீது ..பொறுமையா தான் வாயேன் ,எதுக்கு இவ்வளவு வேகமா ஓடியார ?தத்தக்கா புத்தக்கானு ..எங்கயாவது கீழே விழுந்து வாரி தொலையாத ..அப்புறம் எவனும் உன்னை கட்டிக்க கூட மாட்டானுங்க "என்று தனது அக்கா மகளை சீண்டி கொண்டே கீழே குனிந்து வயலில் இருக்கும் பில்லு, பூண்டுகளை புடுங்கிக் கொண்டிருந்தவன் .தனது அக்கா மகள் சங்கீதாவின் குரலில் நிமிர்ந்து வாய்க்காலில் இருக்கும் தண்ணீரில் கைகளை கழுவிக்கொண்டு அங்கே வைத்திருக்கும் துண்டை எடுத்து தன் கைகளை துடைத்துக் கொண்டே அவளிடம் வந்தான்.

அவனிடம் மூச்சு வாங்க வந்து நின்றவள் . இதழ்களில் புன்னகையை சிதற விட்டவாறே அவனைப் பார்க்க.

"கொஞ்சம் மூச்சு இழுத்து விடு கீது மா.இப்படி மூச்சு வாங்க ஓடி வந்து என்னத்தை சாதிக்க போறவ ?எதுக்கு இம்புட்டு வேகம்" என்றான்.

" ஏன் ?மாமு சொல்ல மாட்ட"என்று மூச்சு வாங்க சொன்னாள். " கொஞ்சம் இரு" என்று அங்கு குடத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து அவளிடம் நீட்ட.வாங்கி குடித்துவிட்டு லேசாக மூச்சு வாங்கியவள் ."மாமு.. மாமு" என்றாள் குதூகலமாக..

"என்ன புள்ள ?எதுக்கு இப்படி கத்துறவ" என்றான். அவளை கரிசனையாக பார்த்துக் கொண்டே. "நான் பாஸ் ஆயிட்டேன்" என்றாள் கண்கள் மின்ன.. உதட்டில் மென்னகைத் தவழ..

அவளைப் பார்த்து சிரித்தவன். "ஊர் உலகத்துல அவங்க அவங்க ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துட்டேன்னு சந்தோசத்தோட ஊர் உலகத்துக்கு சொல்லுவாங்க.ஆன, நீ என்னமோ பாஸ் பண்ணதுக்கு இப்படி ஊரையே கூட்டுறவ" என்று புன்னகைத்தான்.

தான் தண்ணீர் குடித்த சொம்பாலே அவனது முதுகில் இரண்டை போட்டவள். "நான் எப்படி படிப்பேன் என்று உனக்கு தெரியாதா ? என் படிப்பை நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? நான் பாஸ் பண்ணதே பெருசாக்கும் ,இதுல உன் அக்கா மக ஸ்கூல் ஃபர்ஸ்ட் வேற எடுக்கணுமா? உனக்கு" என்று புன் சிரிப்புடன் சொல்ல.

அவளைப் பார்த்து முறுவலித்தவன். "நான் எப்போ அப்படி சொன்ன கீது மா .சும்மாதான் உன்னை வம்பு இழுத்தேன்..என் அக்கா மகளை நான் வம்பு இழுக்காம வேற யார் வம்பு இழுப்பா "என்று பல்வரிசை தெரிய தன் சிரிப்பை உதிர்த்தான்.

"அதுக்கு என்ன ?உன் அக்கா மகளை சீண்டிப் பார்க்க உனக்கு சொல்லியா தரணும் "என்று புன்னகைத்தாள்.

"சரி சரி எத்தனை மார்க் எடுத்து இருக்க" .

"பரவால்ல மாமு . என்னோட பேப்பரை திருத்தின மகராசன் ஏதோ சந்தோச மனநிலையில இருந்து இருப்பாங்க போல ஏதோ ஜஸ்ட் பாஸ் ஆகுற அளவுக்கு பாஸ் போட்டு விட்டுட்டாங்க.எல்லா பாடத்துலையும் ஜஸ்ட் பாஸ் ஆயிட்டேன் . 80க்கு மேல எடுத்திருக்கேன் .அந்த கருமம் புடிச்ச இங்கிலீஷ்ல மட்டும்தான் 77 மார்க்கு" என்று முனக .

" ஏதோ, பாஸ் பண்ணிட்ட போ.. நீ சொன்னது போல உன் பேப்பரை திருத்தினவங்க ஏதோ நல்ல மூட்ல இருந்து இருப்பாங்க போல உன்னை பாஸ் போட்டு விட்டுட்டாங்க .இல்லன்னா கோழி கிறுக்கினாப்புல இருக்குற உன்னோட கையெழுத்துக்கும் , மண்டையில இருக்க மசாலாவுக்கும் நீ பாஸ் ஆனது பெருசு தான் "என்று சிரித்தான்.

" போ மாமு. எப்ப பாத்தாலும் ,என்ன உரண்டை இழுத்துக்கிட்டே "என்று வாயைக் கோணித்துக் காண்பித்தாள்."உன்னை உரண்டை இழுக்காமல் வேற யாரு கிட்ட உரண்டை இழுக்க போறேன் "என்று சொல்லி அவள் இடுப்பில் சொருகி இருந்த பாவாடையை கீழே இறக்கி விட்டவன். "ஏதாச்சு சாப்பிடுறியா ?மாங்கா பெரிச்சு தரட்டா ?"என்றான்.

"இது என்ன கேள்வி மாமு . மூச்சு வாங்க இவ்வளவு தூரம் உன்னை பார்க்க ஓடியாந்து இருக்கேன் .உன் அக்கா கிட்டயும் ,உங்க மாமா கிட்டயும் இதுக்காக நான் வாங்கின பாட்டு இருக்கே கொஞ்சமா நஞ்சமா . பாஸ் ஆகி தொலையிலனா எவன் தலையிலாவது உன்ன கட்டி வச்சுருவேன் என்று என்னை மிரட்டிக்கிட்டு ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து நேத்தியிலிருந்து வையிஞ்சிக்கிட்டே தான் இருந்தாங்க "என்று புலம்பினாள்.

" பல்வரிசை தெரிய சிரித்து விட்டு என்னமோ போ "என்று உதட்டில் புன்னகையை தவழ விட்டவன். அவளுக்கு மரத்தில் ஏறி இரண்டு மாங்காய்களை பறித்து போட்டான். "ரெண்டே ரெண்டு தானா?.ஏன் அதுக்கு மேல பரிச்சி போட்டா உன் அப்பன் வீட்டு சொத்தா அழிஞ்சிடும்" என்றாள் நக்கலாக..

மேலிருந்து ஒரு மாங்காவை அவளது தலையில் தூக்கி போட்டவன்." வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிட்டே போகுது "என்று முறைத்தான்.

"உன் கிட்ட மட்டும் தானே மாமு உரிமையா பேச முடியும்" என்று சிரிக்க.

" ஏன் ?உன்ன கட்டிக்க போறவன் கிட்ட பேச மாட்டியா ?".

"அது வரப்ப பாத்துக்கலாம் .அதுக்கு என்ன இப்போ அவசரம்"என்றாள்.

"அது என்னவோ உண்மை தான் "என்று சொல்லிவிட்டு அவன் தனது வேட்டியில் இன்னும் ஐந்து ,ஆறு மாங்கா பிஞ்சுகளை பறித்து போட்டுக் கொண்டு கீழே இறங்க,

" அதான பார்த்தேன் .என் மாமுனா மாமு தான்" என்று அவனது மீசையை முறுக்கி விட்டு சிரித்தாள் .

"ஓவரா ஐஸ் வைக்காத "என்று விட்டு அங்குள்ள ஒரு பையில் மாங்காயை போட்டவன் ."வீட்டுக்கு எடுத்துட்டு போய் தின்னு,ஒரே நேரத்தில் அதுக்குனு சாப்டு, உன் அம்மாகிட்ட வாங்கி கட்டிக்காத. உன்னை மட்டும் திட்டாம என்னையும் சேர்த்து திட்டும் .வீட்டுக்கு வந்து ஆத்தா கிட்டயும் போட்டு கொடுத்துட்டு போகும் " என்றான்.

அவனை பார்த்து பல் வரிசை தெரிய சிரித்து விட்டு,"உன் அக்காவை பத்தி உனக்கு தெரிஞ்சா சரிதான்" என்று லேசாக உதட்டில் புன்னகையை தவழ விட்டாள்.

"என் அக்காவையும் , மாமாவையும் குத்தம் சொல்லாம உன்னால இருக்கவே முடியல" என்று விட்டு "சரி மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு இருக்க "என்றான்.

" அது தான் மாமு. உன்கிட்ட பேச வந்தேன்".


"ஓ அப்போ மேடம் நீ பாஸ் ஆயிட்டன்னு சொல்ல வரல. என்னை பார்த்து உன் காரியத்தை சாதிச்சிக்க வந்து இருக்க அப்படி தான "என்றான்.

"நான் எப்போ அப்படி சொன்னேன். பாஸ் ஆனத சொல்ல தான் அவ்வளவு வேகமாக ஓடியாந்தேன் மூச்சு வாங்க. உன் கிட்ட தான் முதல்ல சொல்றேன். உங்க அக்காவும் ,மாமாவும் கூட என்னனு கேட்டாங்க வாயவே திறக்கலையே .வேகமா முதல்ல உன் கிட்ட தான் சொல்ல ஓடி வந்து இருக்கேன்" என்று முகத்தை திருப்பினாள்.

அவளது தலையை ஆதுரமாக வருடியவன்.அவளை கேள்வியாக பார்க்க.

"மாமு என்னை ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடு".

"மாமா. அதான், உன் அப்பா இருக்கும்போது என்கிட்ட வந்து கேட்கலாமா ? மாமா தப்பா நினைக்க மாட்டாங்களா ? கீது மா ".

"உங்க மாமா தானே". என்று விட்டு "நீ வாங்கி இருக்க மார்க்குக்கு இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை "என்று சொல்வாங்க என்று தன் தந்தை போல் சொல்லி பழித்து காட்டினாள்.

"அவரு உன்ன படிக்க வைப்பாரு கீது மா .மாமா அப்டி பட்ட ஆள சொல்லு, என்னையவே படிக்க வச்சவரு அவரு தான "என்று தன் மாமாவின் பக்கம் பேச.

"நான் அவரு படிக்க வைக்க மாட்டருனு சொல்லல ஆனா,"என்று விட்டு அமைதியானாள் .

"வெளியே போய் படிக்க ஆசைப்படுறியா? கீது" என்றான் அவளது கண்களை ஊடுறுவி கொண்டு..

"மாமு 12 வருஷமா இந்த ஊரையே தான் சுத்தி சுத்தி வரேன். வேற எங்கவும் கூட்டிட்டு போக மாட்டாங்க. நம்ம வீடும் இங்கவே இருக்கு. எனக்கு அப்பாயி ,தாத்தா எல்லாம் நான் பொறக்கும் போதே இறந்துட்டாங்க. யாரும் இல்லை வெளி ஊர்ல .அப்பா கூட பொறந்தவங்களும் வேற யாரும் இல்ல .அம்மா கூட பொறந்தது நீ மட்டும் தான் .நீ இந்த ஊரிலேயே இருக்க. ரெண்டு தெரு தள்ளி..நடக்கிற தூரத்துல நம்ம வீடு வந்துரபோது. வேற எங்க என்னை கூப்பிட்டு போறீங்க, நல்ல நாள் பெரிய நாள்னா பக்கத்துல இருக்க டவுனுக்கு கூட்டி போறீங்க. அதை தாண்டி வேற எங்கேயாவது கூட்டிட்டு போறீங்களா ?கேட்டா பொட்ட புள்ள வெளியே உனக்கு என்ன வேலைன்னு உங்க அக்காவும், மாமாவும் வாயை அடைச்சிடுறாங்க. எனக்கு வெளிய போய் படிக்கணும் மாமு..நானும் வெளி உலகத்த பார்க்க வேண்டாமா? இப்ப பாக்காம எப்ப பார்ப்பேன் " என்று லேசான மனக்குமுறலுடன் சொன்னாள்.

அவள் சொல்வதும் உண்மை என்பதால் "சரி ,நான் வீட்ல மாமா , அக்கா கிட்டையும் பேசுறேன். நேரம் ஆகுது பாரு நீ வீட்டுக்கு கிளம்பு .வீட்ல வேற சொல்லாம வந்திருக்கனு சொல்ற ரெண்டு பேரும் உன்னை தேடுவாங்க பாரு ."என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே .. கீழே கழட்டி வைத்திருந்த அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த போன் அலறியது.

"உன் மாமாவா தான் இருக்கும். இல்ல ,உன் அக்காவா தான் இருக்கும் போன எடு "என்று புன்னகையுடன் சொல்ல.

அவளைப் பார்த்து முறுவலித்தவன் போனை எடுக்க. அவள் சொன்னது போலவே தனது அக்கா தான் போன் செய்திருக்க .வேகமாக போனை எடுக்க ,அவனிடம் இருந்து பிடுங்கி போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

அவளை முறைத்து விட்டு ,"சொல்லுக்கா "என்றான் .

"டேய் எங்க டா ..நான் பெத்த சீமையில இல்லாததா மகராசி. பாஸ் பண்ணிட்டாளா ?இல்லையான்னு தெரியாம நானும் அவரும் இங்க காலையில இருந்து அன்னம் தண்ணி இல்லமா உட்கார்ந்து இருக்கோம்.ஆன, அவளுக்கு இருக்க திமிரு என்னடி ஆச்சுன்னு கேட்டா வாயை கூட திறக்காம ,வேகமா ஓடி வரா உன்னைய பார்க்க.. அவ கூட படிக்கிற புள்ள பக்கத்து வீட்டு கோதை தான் வந்து உன் மக பாஸ் பண்ணிட்டா அத்தை அப்படின்னு வந்து சொல்லிட்டு போறா .என்னடா நெனச்சிட்டு இருக்கா ?எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தாண்டா" என்று தனது தம்பியை ஏகபோக வசனத்தில் திட்ட..

முத்து வேலனோ சிரித்துக் கொண்டே.." வீட்டுக்கு கிளம்பிட்டோம் கா. நீயும் ,மாமாவும் நம்ம வீட்டுக்கு வந்துருங்க "என்று விட்டு போனை வைத்தான்.


சங்கீதாவை கைப்பிடித்து "வீட்டுக்கு கிளம்பு போகலாம்" என்று சொல்லிவிட்டு அங்கே இருப்பவற்றை சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு அவளையும் கையோடு அழைத்துக் கொண்டு தனது புல்லட்டில் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

போகும் வழியெங்கும் ஒரு சில வயாதான பெண்மணிகள்" அடியே சங்கீதா பாஸ் பண்ணிட்டியா ?இல்லையா ?உன் ஆத்தா வேற புலம்பிட்டே இருந்தா ?ஒரு வாரமா ?"என்று கேட்க,

அனைவரையும் முறைப்புடன் பார்த்தவள் .வாயைக் கோணித்துக் காண்பித்து விட்டு அமைதியாக வர.

அனைவரிடமும் முகம் கொள்ளா புன்னகையுடன் " என் அக்கா மக பாஸ் பண்ணிட்டா. அவளை என்ன நெனச்சீங்க ?"என்று வீரப்பாக சொல்லிக் கொண்டே அருகில் உள்ள ஸ்வீட் கடையில் ஸ்வீட்டும், சாக்லேட்டும் வாங்கிக் கொண்டு வந்தவன்.

ஊர் ஆரம்பத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒவ்வொரு வீடாக சங்கீதா உடனே சென்று அவள் பாஸ் பண்ண விவரத்தை ஊருக்கே சொல்லி ஊரில் உள்ள ஒரு வீடு கூட விடாமல் ஸ்வீட் , சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தான்.

" ஏன் மாமு இப்படி என் மானத்தை வாங்குற ..நீ ஏதோ விளையாட்டுக்கு தான என்ன கேட்ட... ஏதோ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துட்ட கணக்கா பாஸ் பண்ணத இப்படி கத்திட்டு வரேன்னு...இப்போ நீ என்ன பண்றவ..நான் ஏதோ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்த மாதிரி ஊருக்கே சாக்கெட் வாங்கி தர"என்று நொடிந்து கொண்டாள்.

"என் அக்கா மக பாஸ் பண்ணாலே ,அது எனக்கு பெரிய விஷயம் தான்" என்று பல்வரிசை தெரிய தன் சிரிப்பை உதிர்த்து விட்டு.. அவளுடன் தன் வீடு நோக்கி சென்றான்.

இருவரையும் பார்த்த ஒரு சிலர் .."அக்கா மக பாஸ் பண்ணதுக்கே ஊருக்கே சாக்லேட் , ஸ்வீட் குடுக்கிறியே முத்துவேலா .நாளைக்கு உன் கல்யாணத்துக்கு அப்ப ஊரையே கூப்டு பந்தி வைப்ப தான.. "என்று சிரித்தார்கள். ஒரு சில வயதான பெண்மணிகள் ..

திரும்பி நின்று இடுப்பில் கை ஊன்றி அனைவரையும் முறைத்த சங்கீதா.."என்ன நினைச்சீங்க நீங்க எல்லாம்.. என் மாமுவ அவர் கல்யாணத்துக்கு ஊரையே கூப்பிட்டு பந்தி பரிமாறி விட மாட்டேன். என் அம்மாயிக்கும் ,தாத்தாவுக்கும் ஒத்த புள்ள, எங்க வீட்டு இளவரசர் இல்லையா ?எங்க மாமு "என்று அவனது தோளில் கை வைத்தவள். "என் மாமு கல்யாணத்தை ஊரே மெச்சுற அளவுக்கு எங்க அம்மாயியும் , தாத்தாவும் நடத்தி கட்டுவாங்க பாருங்க" என்று சொல்லிவிட்டு அவன் கையோடு கைகளை பின்னிக் கொண்டு நடந்தாள்.
 
Last edited:
ஆக இவ படிச்சு பாஸ் பண்ணல எதோ வாத்தியார் மனசு வச்சு மார்க் போட்டுருக்காரு 🤭
இதுல மாமன் வேற ஊருல எல்லா வீட்டுக்கும் ஸ்வீட் குடுக்குறான் 😆

நல்ல ஆரம்பம் 💚......
 
ஆக இவ படிச்சு பாஸ் பண்ணல எதோ வாத்தியார் மனசு வச்சு மார்க் போட்டுருக்காரு 🤭
இதுல மாமன் வேற ஊருல எல்லா வீட்டுக்கும் ஸ்வீட் குடுக்குறான் 😆

நல்ல ஆரம்பம் 💚......
அச்சோ இப்படி கட்டி சோத்தை கூட்டத்துல பிரிக்கலாமா
 
Top