வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம் 13

GG writers

Moderator
கவி வீட்டிற்கு சென்றவள் நேராக தன் அப்பா தூங்குவதை ஒரு எட்டு பார்த்துவிட்டு, தன் தங்கையிடம் சென்றாள்.

"கீதா" என்று அவளிடம் பேச முயல, அவளும் இவளை அமைதியாக பார்த்தாள்.

" நீ என் கூட வந்துடு டி.நான் உன்னை கூட்டிட்டு போறேன், அங்க வந்து உனக்கு என்ன படிக்க விருப்பமோ அந்த கோர்ஸ் எடுத்து படிச்சுக்கோ, இதுக்கு முன்ன என் கூட வர மாட்டேன்னு சொன்ன தான். இருந்தாலும், இப்ப இருக்க சூழ்நிலைக்கு" என்று நிறுத்த,

கீதா அமைதியாகவே இருக்க,

" என்ன டி நான் இவ்ளோ பேசுறேன் நீ அமைதியா இருக்க".

அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க,


"படிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கியா?இல்லையா? வேற என்ன பண்ணலாம்னு நீ யோசிச்சி இருக்க. இங்கவே இருக்க போறியோ? இல்லை "என்று விட்டு அவளது கழுத்தை பார்க்க,

குனிந்து தன் கழுத்தை பார்த்த கீதா."இதுக்கு பதில் எனக்கு தெரியாது கவி. சரியா?நீ லாஸ்ட்டா நிறுத்தினதுக்கு பதில் என்கிட்ட இல்ல. ஆனா, ஒன்னே ஒன்னு நான் படிக்கிறேன். படிக்கணும்னு ஆசைப்பட்டு தான், வெளியே போய் படிக்கணும்னு கேட்டேன். இப்பவும் சொல்றேன் நான் வெளிய போய் படிக்க தான் போறேன்.நீ சொன்னது போல சூழ்நிலை இருக்கு.அதனால உன் கூடவே வந்து படிக்கிறேன். நான் ஆசைப்பட்ட கோர்ஸ் தான் எடுத்து படிக்க போறேன்.ஆனா, இப்போ இன்னைக்கு நைட் நீ ஊருக்கு கிளம்பு".

" என்னடி விளையாடுறியா?" என்று கவி கேட்க,

" விளையாடல கவி. உண்மைய தான் சொல்றேன். இப்போ இங்க இருந்து நீ என்ன பண்ண போற?,நான் எங்கேயும் போக மாட்டேன். இங்க தான் இருக்க போறேன்னு சொல்லிட்டேன் சரியா?அதும் மேற்கொண்டு படிக்க உன் கூட தான் வரப்போறேன் என்றும் சொல்லிட்டேன்.ஆனா, எனக்காக நீ உன் படிப்ப ஸ்பாயில் பண்ணிக்க வேணாம்.எவ்ளோ நாளைக்கு இங்கையே இருப்ப? உனக்கும் எக்ஸாம் நெருங்கிடுச்சு,நீயும் படிக்கணும், எப்படியும் நான் இப்பவே உன் கூட வர முடியாது. வந்தாலும்,அங்க வந்து நான் ஒன்னும் பண்றதுக்கு இல்ல, எனக்கு டிசி ,மார்க் சீட் எல்லாம் வாங்கணும்.எனக்கு நிறைய பிராசஸ் இருக்கு,அதுக்கு அப்புறம் அட்மிஷன் எப்போ போடுறாங்களோ அப்போ தான் வர முடியும்.உனக்கும் இன்னும் இந்த வருஷம் படிப்பு முடியல, இந்த வருஷம் செமஸ்டர் எக்ஸாம் இனிமேதான் ஸ்டார்ட் ஆக போது,சோ நீ இங்க இருக்கறதால உன்னோட படிப்பு தான் வீணா போகுது.எனக்காக நீ யோசிக்காத! உன்னோட வாழ்க்கையையும் பாரு.உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு உன்னோட கனவை இலட்சியத்தை பாரு. நான் எங்கேயும் போக மாட்டேன். நான் நானா தான் இருக்கேன் சரியா?என்ன நம்பலாம்.நீ போயிட்டு உன்னோட படிப்பை பாரு"என்றாள் தெளிவாக,

கவி அவளை பார்க்க,

" நான் தெளிவா தாண்டி பேசுறேன். நம்பு!"என்றாள்.

"அதுதான் எனக்கு இப்போ இன்னும் பயத்தை தருது கீதா" என்றாள் கவி பாவமாக,

"எது தெளிவா இருக்கிறதா?" என்று அவள் புன்னகைக்க,

"ஆமாம் டி! அதுதான் எனக்கு இன்னமும் பயத்தை தருது நீ அமைதியா இருந்திருந்தா கூட பரவாயில்லை.நீ இவ்ளோ யோசிச்சு ஒரு முடிவு எடுத்து என்ன இங்க இருந்து போக சொல்லுறது எனக்கு பயமா இருக்கு.நான் தப்பு பண்ணிட்டு, உன்னையும் தப்பு பண்ண வைக்கிறேனோனு தோணுது"என்றாள் லேசாக கண்கள் கலங்க,

சிரித்த கீதா, "நீ! எதுவும் பண்ணல. நான் தாண்டி தப்பு பண்ணேன். நான் அங்க போனது தப்பு, அதுக்கப்புறம் நடந்த எதுவும்" என்று விட்டு தன் முத்து மாமு மீது பழியை சுமத்த விரும்பாமல், அமைதியாகி விட்டாள்.

" கீதா" என்று அவளது அருகில் வர,

" ஒன்னும் இல்ல கவி. விடு! நீ போயிட்டு உன்னோட படிப்ப பாரு. நான் படிப்பேன், உன் கூட வரேன்,நீ என்ன பத்தி நெனச்சிட்டு இங்க இருந்து உன்னுடைய படிப்பை வீணாக்கிக்காத! உனக்கு எக்ஸாம் இருக்கு நீ இங்க இருக்க வேணாம்.இப்போ என்னால அப்பாவும் ,அம்மாவும் கூட வேலை பாக்காம இருக்காங்க. நம்மளோட படிப்பும் சரி, எதிர்காலமும் சரி அப்பாவும் ,அம்மாவும் வயலில் கீழே குனிஞ்சு நிமிந்து உழைச்சா மட்டும் தான் உண்டு. என்னால அவங்களும் உடைத்து விடக்கூடாது.நான் பண்ண தப்பை நானே முடிஞ்ச அளவுக்கு சரி பண்றேன்.நீ போயிட்டு உன்னோட படிப்பை பாரு" என்று சொல்ல.

கவி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி இவ்ளோ சொல்றேன்.நீ என்னவே பார்த்துட்டு இருக்க. நான் தெளிவா தான் இருக்கேன்"என்று உள்ளுக்குள் வலியுடன் புன்னகைத்தாள்.

"அதுதான் எனக்கு பயமா இருக்கு டி. கீதா நீ இவ்ளோ தெளிவா இருக்குறது தான் எனக்கு இப்போ பயமா இருக்கு, உள்ளுக்குள்ள ஏதோ உறுத்துது, உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது.நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல உறுத்துது"என்றாள்.

"ஒன்னும் இல்ல கவி".

"இல்ல கீதா.உனக்கு ஸ்கூல்ல" என்று கவி ஆரம்பிக்க,

"எனக்கு மார்க் சீட், டிசி எல்லாம் தருவதற்கு கொஞ்ச நாள் ஆகும். உடனே எதுவும் கிடைக்காது ஓகேவா! தரும்போது தான் தருவாங்க.அதுவரைக்கும் நீ இங்க என் கூட உட்கார்ந்து இருக்க முடியாது.உன்னோட படிப்ப பாரு, எனக்காக உன்னுடைய எதிர்காலத்தை வீண் அடிக்காத, நான் இங்கதான் இருக்க போறேன்.நான் எங்கேயும் போக மாட்டேன்.வீட்ல இருந்துப்பேன், அப்பா இருக்காரு,மேற்கொண்டு என்னென்ன பண்ணனும்னு அவருக்கு தெரியாதா?அவர வச்சு நான் பாத்துக்குறேன்"என்று சொல்ல,

அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தவள். 'தன் தங்கை ஏதோ ஒன்றை முடிவு செய்துவிட்டாள்.ஆனால், அது நல்லதா? கெட்டதா? என்று புரியாமல், அவள் தெளிவாக பேசுவது உள்ளுக்குள் பயத்தையும் தோற்றுவிக்க, எதுவா இருந்தாலும், பாத்துக்கலாம். வீட்ல பேசலாம்' என்று எண்ணிய கவி "சரி"என்று அமைதி ஆகிவிட்டாள்.

இங்கு மாலை போல் வீட்டிற்கு வந்த, வேலன் நேராக அவனது ரூமுக்குள் நுழைய,

அப்பொழுது ஹாலில் உட்கார்ந்து இருந்த, வடிவு தான் "ஏன்யா! வேலா "என்று அழைக்க,

அமைதியாக நின்றான். "காலையில வீட்டை விட்டு போனவன், இப்பதான் வீட்டுக்கு வர சாப்டியா? இல்லையா?வேலா ஆத்தா பேசினது தப்புதான். அதுக்குன்னு வீட்ல அன்னம் ஆகாரம் கூட சாப்பிட மாட்டேன், தண்ணி குடிக்க மாட்டேனா என்னப்பா அர்த்தம்"என்றார் நா தழுத்தழுக்க,

அவன் அமைதியாகவே இருக்க,

"வடிவு! என்ன பண்ணிட்டு இருக்க. கொஞ்ச அமைதியா இரு, அவனே இப்போதான் வயலில் இருந்து வரான். குளிச்சிட்டு வரட்டும்"என்றார்.

தன் ஐயாவை அமைதியாக பார்த்தவன் ஒரு தலை அசைப்போடு வேறு எதுவும் பேசாமல் தனது ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.

குளித்து முடித்து வேறொரு உடை அணிந்து கொண்டு வர,

"நான் பண்ணது தப்புதான் வேலா ஏதாவது சாப்பிடு" என்றவர் டீ கொண்டுவந்து கொடுக்க,

அவன் அதை வாங்கவில்லை. அவனது தலையை கோதிய வடிவு அவனது அருகில் வந்து கையை பிடித்துக் கொண்டார்.அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

"இப்போ நான் உன் அக்கா மகளை பேசினது தானே தப்பு.நீ உன் அக்கா மகளை வீட்டுக்கு கூட்டிட்டு கூட வா. நான் எதுவும் சொல்லல, இனி எதுவும் நான் பேசமாட்டேன். அவளை" என்றார்.லேசாக கண்கள் கலங்க,

அப்போதும்,அமைதியாகவே தன் ஆத்தாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு," சரி டா உன் பொண்டாட்டியை நீ கூட்டிட்டு வா.நான் எதும் சொல்லல,உன் பொண்டாட்டிக்கு உரிமை இல்லாத இடத்தில் நீ எந்த உரிமையும் கொண்டாட மாட்ட என்று நான் நினைக்கிறேன்.இந்த வீட்டில உனக்கு என்ன உரிமை இருக்கோ, அதே உரிமை உன் பொண்டாட்டிக்கும் இருக்கு. நீ வீட்டுக்கு கூட்டிட்டு வா,அவ இங்க உன் பொண்டாட்டியா எப்படி இருக்கணுமோ? அப்படியே இருக்கட்டும். நான் எதுவும் பேசல, நான் பேசின வார்த்தை எல்லாமே தப்புதான், நான் கொட்டின வார்த்தையையும் அல்ல முடியாது, ஒத்துக்குறேன்.ஆனா,"என்று அவர் மேற்கொண்டு பேச முயல,

"அவளா போனவளுக்கு வர தெரியாதா? நீ போயிட்டு உன் வேலை என்னவோ பாரு. நீயும், நானும் அவளை இந்த வீட்டை விட்டு போக சொல்லல" என்றவன் எழுந்து கொள்ள,

"வேலா" என்றார்கள் அதிர்ச்சியுடன் கந்தசாமி ,வடிவு இருவரும்.

அவன் அமைதியாக நிற்க,

கந்தசாமி தான் "என்னடா பேச்சு பேசுற! அதுக்குன்னு கீதாவை அங்கவே இருக்கட்டும்னு சொல்றியா? நீ கட்டின தாலி கீதா கழுத்துல இருக்குது டா மறந்திடாத"என்றார்.

அமைதியாக நின்று கண்களை மூடி திறந்தவனின் கண்கள் ரத்த நரம்பு ஓடி இருக்க,"இப்பவும் சொல்றேன்.நம்ப அவளை போக சொல்லல.போனவளுக்கு வர தெரியும். திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன்,நீங்க உங்க பேத்தியை போய் பார்க்க,போறத நான் இப்பவும் எப்பவும் தடுக்க மாட்டேன். ஆனா, என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்குள்ள நீங்க போய் கூட்டிட்டு வர வேணாம் அவளை, போனவளுக்கு வர தெரியும். அது வரை நீங்க போய் அவளை கூப்பிட வேணாம். அவ்வளவுதான், சொல்லுவேன். இல்ல, அப்படின்னா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்" என்றவன் வேறு எதுவும் பேசாமல் இருவரும் கூப்பிட கூப்பிட காதில் கூட வாங்காமல் வெளியே சென்று விட்டான்.

"ஏதாவது குடிச்சிட்டாச்சு போயா "என்றார் வடிவு கவலையாக,

திரும்பியவன். எதுவும் பேசாமல் லேசான புன்னகையுடனே கீழே இறங்க,

அவனது புன்னகையில் உள்ள வலியை உணர்ந்தார். வடிவுக்கு உள்ளம் பெற்ற தாயாக பதறியது. இருந்தும்,எதுவும் செய்ய முடியாத நிலையில் அமைதி காத்தார். தனது கணவனை பார்க்க, "கொஞ்சம் பொறு வடிவு ஏதாவது முடிவு பண்ணுவோம்.எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பண்ண முடியாது" என்றவர் அமைதியாகி விட்டார்.

அன்று இரவு வெளியே சாப்பிட்டு விட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான்.

"வாயா சாப்பிடலாம்" என்று வடிவு அழைக்க,

"இல்ல ஆத்தா வெளியே சாப்பிட்டேன்" என்று அவன் வேறு எதுவும் பேசாமல் சென்றுவிட,

வடிவுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவன் சாப்பிட்டு விட்டானா? என்று மருதுக்கு ஃபோன் பண்ணி கேட்டு விட்டு கொஞ்சம் அமைதியானார்.

மறுநாள் காலை ஆறு மணி போல கவி வேலன் வீட்டிற்கு வந்திருக்க,வந்தவள் வீட்டை சுற்றி கண்களை சுழல விட, "மாமா இல்லையா அம்மாயி"என்று ஹாலில் உள்ள சாமி படத்திற்கு பூ வைத்துக் கொண்டிருந்தவரிடம் கேட்டாள்.

அவளை வேகமாக வந்து கட்டி அணைத்தவர். நா தழுத்தழுக்க "அ...அ...அம்மாயி நே..நேத்து பேசினதெல்லாம் தப்பு தான் டா க..கவி குட்டி மன்னிச்சிரு அம்மாயியை, அந்த நேரம் என்ன பேசுறதுன்னு தெரியாம ஏதோ பேசிட்டேன்.பேசின அத்தனை வார்த்தையும் தப்புதான்.அதை மாத்த முடியாத. ஆனா,"என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

வேலன் அவனது ரூமில் இருந்து வெளியில் வந்தவன்.

"வா கவி! என்ன காலையிலையே இந்த பக்கம்"என்றான் எப்பொழுதும் போல,

"இ...இ..இல்ல மா..மாமா உன்ன பார்த்து பேசிட்டு போலாம் என்று தான்"என்று விட்டு அமைதியானாள்.

அவனும் அமைதியாக அவளை பார்க்க,

"கீதா என் கூட அங்க வந்து என்னோட காலேஜ்ல படிக்க ஓகேன்னு சொல்லிட்டா.எனக்கும் எக்ஸாம் நெருங்கிடுச்சு நான் காலேஜுக்கு கிளம்புறேன் இன்னைக்கு,அவளும் இங்க வீட்டிலேயே உட்கார்ந்து இருக்க முடியாது இல்ல மாமா, அதனால அவளோட மார்க் சீட் ,டிசி எல்லாம் கொடுக்கும் போது வாங்கிட்டு என்கூட அடுத்த வருஷம் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன். அதுக்கு அவளும் சம்மதம் சொல்லிட்டா, அவளும் அவளோட லட்சியத்தை நோக்கி போகணும் இல்ல மாமா"என்றவள் மேற்கொண்டு பேச முடியாமல் அவனது முகத்தை பார்த்துவிட்டு அமைதியானாள்.

அவன் அமைதியாக பார்வையை வேறெங்கோ பதித்திருக்க,

"இதை சொல்லிட்டு போக தான் மாமா வந்தேன், எனக்கும் எக்ஸாம் நெருங்கிடுச்சு அதனால காலேஜ் போகலாம்னு இருக்கேன். அம்மாகிட்டயும் ,அப்பா கிட்டயும் பேசிட்டேன். அவங்க சரி போ அப்படின்னு சொல்லிட்டாங்க, அதான் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன் மாமா" என்று பேச்சை மென்று முழுங்கினாள்.

"என்கிட்ட சொல்ல இதுல என்ன இருக்கு கவி.உன் படிப்ப பாக்க நீ கிளம்புற இதுல என்ன இருக்கு போயிட்டு வா" என்று மட்டும் பட்டும் படாமல் சொல்ல,

" மா..மாமா"என்று இழுத்தாள்.

"நான் சொல்ல வர்றது உனக்கு புரியுது.ஆனா,எனக்கு எதுவும் புரிய வேணாம் கவி.நீ உன் படிப்ப பாரு இப்பவும் சொல்றேன். என் அக்கா மக படிச்சா எனக்கு நல்லது தான். யாரோட படிப்பும் என்னால கெட வேணாம். நீ போய் படி உன்னை எதுவும் நான் சொல்லல கவி"என்று விட்டு அமைதியாகி விட்டான்.

" கீதா"என்று கீதாவை பற்றி கேட்க வந்த வடிவின் பேச்சு பாதியிலே நின்றது தனது மகனின் பார்வையில்,

கவி அமைதியாக வேலனை பார்த்தாள்.

வேலன் ஒரு நிமிடம் தன் தாயை திரும்பிப் பார்த்தவன். "சரி கவி நீ பாரு எனக்கு வேலை இருக்கு வயல்ல" என்று விட்டு செல்ல,

போகும் வேலனை பாவமாக பார்த்தவள்."மாமா நான் அவளை என்கூட கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்.இப்போ உள்ள சூழ்நிலைக்கு அவ என் கூட வர்றதுதான் நல்லதுன்னு எனக்கு தோணுது"என்றாள்.

" நேத்தே இதுக்கு பதில் சொல்லிட்டேன் கவி" என்றவன் வேறு எதுவும் சொல்லாமல் நடையை கட்டினான்.

வடிவு தான் "என்னடி சொன்னான் நேத்து உன் மாமன்" என்று தனது பெரிய பேத்தியின் முகத்தையே பார்க்க,

கவியோ,வேலனின் பட்டும் படாமல் பேசும் இந்த புதிய பரிமாற்றத்தில் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள்.
 
Тема интересна, приму участие в обсуждении. Я знаю, что вместе мы сможем прийти к правильному ответу.
тренинги в столице позволяют обрести навыки, treningi-i-kursy.com способствующие грамотному ведению бизнеса и управлению персоналом - все способы надежны и гарантируют положительный результат.
 
Думаю, что нет.
and {this is|such a moment|the mentioned factor|such a nuance} {more|additionally|in addition|to the same} not {everything|every}: we {monitor|monitor} {increase|growth|increase} {the number|number|set} of sites that sell forecasts, {here|here|where|with us} {you|user|client} {buy|acquire|receive|order} and sell shares {depending on|based on|depending on} the probability of {one or another|any|any {specific|specific} event. #file_links["C:\Users\Admin\Desktop\file\gsa+en+Phoenix20k50k100k200k677URLBB.txt",1,N] offers an investment approach {compared|in comparison|if compared} with the {Russian|traditional} model of {bookmakers|bc|bookmakers} with {rigid|rigidly fixed|fixed|stipulated|specific|defined} odds.
 
Top