GG writers
Moderator
சங்கீதா தன் மாமுவுடன் குதூகலத்துடன் வீட்டிற்குள் நுழைய.." வாடி எடுபட்ட சிறுக்கி .நானும் உன் அப்பனும் அங்க அன்னம் தண்ணி இல்லாம தவிச்சு போய் இருக்கோம் பாஸ் பண்ணி தொலையிறியோ இல்லையோன்னு பயத்துல. உனக்கு எம்புட்டு கொழுப்பு இருந்தா எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம உன் மாமன தேடி போயிருக்க. ஏன் அவன தேடி போயிட்டா நாங்க உன் மேல கை வைக்க மாட்டடோம்ன்ற எண்ணமோ "என்று அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வர.
"அக்கா என்ன பண்ணிட்டு இருக்க, கீதுமாவை இப்போ எதுக்கு அடிக்கிற, நீ பெத்த புள்ள தானே என்ன பேச்சு இது? "என்று அடிக்க வந்தவரின் குறுக்கே வந்து நின்று அவரது கையை பிடிக்க..
தன் தாயின் செயலில் பயந்து கண்களை இருக்க மூடிக்கொண்டு நெஞ்சம் படபடக்க நின்றாள்.
"அம்புட்டும் நீ கொடுக்கிற இடமும், செல்லமும் தாண்டா அவளுக்கு கொஞ்ச நஞ்சம் எங்க மேல இருந்த பயமும் போச்சு, இப்படியே செல்லம் கொடுத்துட்டே இரு.ஒரு நாளைக்கு உன் தலையிலே கைய வைக்க போற" என்று முறைத்தார்.
அவன் வாய் திறப்பதற்குள்ளையே தன் தாயைப் பார்த்து இவ்வளவு நேரம் பயத்தில் கண்களை இறுக்க மூடி கொண்டு நின்றவள்.. காமாட்சியை முறைத்து விட்டு "தோ பாரு உன்மேல இருக்க பயம் போயிடுச்சுன்னு சொல்லு ஒத்துக்கிறேன், அதுக்காக என் மாமுவை என்ன பண்ணிடுவேன் நான்.. என்னவோ அவர் தலையிலே கையை வைப்பேன் என்று சொல்ற" என்று வாயைக் கோணித்து காண்பிக்க.
" ஏற்கனவே அது கத்திட்டு இருக்கு. நீயும் வாய வச்சிக்கிட்டு அமைதியா நிக்காது சரியா? ஆத்தாவுக்கு ஏத்த புள்ள, எப்ப பாத்தாலும் ஏட்டிக்கு போட்டி நிண்ணு கிட்டு இருக்க வேண்டியது அது கிட்ட " என்று தன் அக்கா மகளின் தலையில் லேசாக கொட்டியவன்..
"இப்படி நீ என்னத்தையாவது வாய வெச்சுட்டு கம்முனு இல்லாம உரண்டை இழுக்க வேண்டியது நடுவுல மாட்டிட்டு முழிக்க வேண்டியது நானு"என்று லேசாக முனக,
அவனது வார்த்தையில் தன்னையும் மீறி சிரிப்பு தோன்ற அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அவளது சிரிப்பில் அக்கா, தம்பி இருவரும் சங்கீதாவை முறைக்க. தன் சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியவள் கையை வாயின் மீது வைத்துக் கொள்ள.
அவளது சிறுபிள்ளைத்தனத்தில் பெற்ற தாய்க்கு மேலும் கோபம் கொழுந்து விட்டு எறிந்தது. தாய்மாமனுக்கோ 'இவள வச்சுக்கிட்டு என்னதான் செய்யறதுன்னு தெரியல' என்று முனகல் மட்டும் தான் வந்தது ..
அக்கா மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ,காமாட்சியையும் திரும்பி ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, சங்கீதாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு சென்று தன் அப்பா ,அம்மாவின் காலில் விழ வைத்தான்.அவள் காலில் விழுந்தவுடன் , நெட்டி முறித்த வடிவுக்கரசி ."என் பேத்தி இப்ப போல எப்பவும் சிரிச்ச முகமாக இருந்தா போதும் டி ராசாத்தி "என்று உச்சியில் கைவைத்து ஆசீர்வாதம் செய்ய..
அவளும் புன்னகைத்து விட்டு ,தன் அப்பா அம்மாவை குறுகுறுவென பார்க்க ..
"இவ பரீட்சை எழுதி பாஸ் பண்ண லட்சணத்துக்கு நீஊருக்கே ஸ்வீட் கொடுத்து வேற கொண்டாடி இருக்க, அவ அவளும் நாக்கு மேல பல்லை போட்டு பேசிட்டு போறாளுங்க, ஏன்டா இப்படி மனத்த வாங்குறீங்க ,அவ எடுத்து வச்சிருக்க மார்க்குக்கு ஊர் புல்லா பாஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டு திறியுறானா , அவ கூட சேர்ந்து நீயும் ஏன் டா இப்படி பண்ற.. ஊர் உலகத்துல அவன் அவனும் எம்புட்டு மார்க் எடுத்துட்டு கொண்டாடறாங்க நீ என்னவோ இவ பாஸ் பண்ண லட்சணத்திற்கே இப்படி ஊரையே கூட்டுறியே "என்று குறைப்பட்டார்.
"இப்ப என்ன தான் கா உனக்கு பிரச்சனை இம்புட்டு நாளா இவ பாஸ் பண்ணுவாளோ ? இல்லையான்னு புலம்பிட்டிருந்த..இப்ப மார்க் அதிகமா வாங்கலைன்னு புலம்புற.. இருக்கிறத வச்சு வாழவே தெரியாதா ?நமக்கு என்ன கிடைச்சிருக்கோ அதை வச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். பறக்குறதுக்கு எதுக்கு ஆசைப்படணும், நம்ம புள்ள எந்த அளவுக்கு படிக்கும் நமக்கு தெரியும், பாஸ் பண்ணா சரி சந்தோசமா விட்டுட்டு போக வேண்டியது தானே, நீயும், மாமாவும் அடுத்தவங்க வீட்ட எதுக்கு நாம எட்டி பாக்கணும். அடுத்தவங்க வீட்ல என்னென்னமோ நடக்குது ,படிச்சா மட்டும் போதுமா ?புள்ள ஒழுக்கம் பழுக்கமா இருந்தா போதும்.நீ நல்ல மார்க் எடுத்து இருக்குனு சொல்ற பிள்ளையோட லட்சணம் உனக்கே தெரியும் தானே. பாஸ் பண்ணிட்டா இல்ல அப்புறம் என்ன உனக்கு? எந்த நேரம் பார்த்தாலும் அவளை வையிஞ்சிக்கிட்டே இருக்கிறதே வேலையா வச்சிருக்க. போய் வேற என்ன வேலையோ அதை போய் பாரு போ,அதான் பாஸ் பண்ணிட்டா இல்ல "என்று விட்டு தன் மாமாவை பார்த்தான்.
அவர் "என்ன மச்சான்" என்று அவனை பார்க்க. அவரது அருகில் வந்தவன். "மாமா கீது மா பாஸ் பண்ணிட்டா, மேற்கொண்டு படிக்க வைக்கணும்"..
" புரியுது மச்சான், நான் என்ன படிக்க வைக்க மாட்டேன்னா சொல்றேன்".
"அப்படி சொல்லல மாமா. ஆனா "என்று ஒரு நிமிடம் தயங்கியவன். பின்பு , 'இன்றே பேசி விடுவது தான் சரி 'என்று எண்ணி விட்டு "கீதுமாவை வெளியே அனுப்பி படிக்க வைக்கலாம்.அவ என்ன கோர்ஸ் எடுத்து படிக்க விரும்புறாளோ அதையே படிக்க வைக்கலாம்"என்று அவரது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் அவரது பதிலுக்காக..
அவனை சங்கடமாக பார்த்தவர்
" அவ விரும்புற கோர்ஸ் படிக்க வச்சிடலாம் மச்சான் ,அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல.ஆன , வெளியே அனுப்பி அப்படின்றது சரிப்பட்டு வராது மச்சான். உனக்கே தெரியும் அவளுக்கு வெளி உலகம் பெருசா தெரியாது வெளியே அனுப்பி படிக்க வச்சா எப்படி செட் ஆகுமா?" என்றார் .
தன் தந்தையின் பேச்சில் கோபமடைந்தவள், வேகமாக தனது தந்தையின் அருகில் வந்து, "நீங்க என்னைய வெளி உலகம் தெரியாம வளர்த்துட்டு, எனக்கென்ன வெளி உலகம் தெரியாதுன்றீங்க ,என்ன இந்த ஊரை தாண்டி வேற எங்கேயும் தனியா அனுப்பினது கிடையாது. நீங்க என்னை வெளியே விடாம வீட்டுக்குள்ளேயே நத்தை மாதிரி அடச்சி வச்சதுக்கு , நான் எப்படி பொறுப்பாவேன்.நான் வெளி உலகத்தை பார்க்கலைன்னா ?எப்படி பாப்பேன் "என்று சீறிக்கொண்டு தன் தந்தையிடம் வாதாட..
இவ்வளவு நேரம் தனது கணவனும் ,தம்பியும் பேசிக் கொண்டிருந்ததால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி. தன் மகளின் இந்த பேச்சால் பெற்ற தந்தையே எதிர்த்து பேசுகிறாளே என்று கோபத்துடன் அவளது கையை வேகமாக பிடித்து இழுத்து" அவர் உன்ன பெத்தவரு டி உன்னோட அப்பா. உன் வாழ்க்கையில் எது நல்லது கெட்டதுன்னு முடிவு எடுக்கிற உரிமை அவருக்கு இல்லையா ? இல்ல, உன்ன பத்தி அவருக்கு ஏதும் தெரியாதது தான் நீ தெரிஞ்சுக்கிட்டியா ? என்று சங்கீதாவிடம் வேகமாக சண்டைக்கு மல்லு கட்டிட்டு வர "..
" அக்கா கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன் ஆத்தாவும் ,புள்ளையும் .நான் மாமா கிட்ட தானே பேசிட்டு இருக்கேன். நீ ஏன் குறுக்க வர".
"நான் எங்கடா வந்த. நீங்க ரெண்டு பேரும் பேசுறீங்கனு நானும் அமைதியா தான நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். நான் பெத்த மகராசி என்று தன் அடிவயிற்றில் இரண்டு போட்டுக் கொண்டவர் .அவ அமைதியா இருந்தா நான் ஏன்டா பேச போறேன். எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு மாமியா இல்லாத குறைய தீர்க்கவே வந்து இருக்கா டா "என்று புலம்பினார்.
"பெத்த அப்பன்னு கூட இல்லாம, எப்படி சண்டைக்கு வர பாரு" என்று காமாட்சி ஆதங்கமாக குறைபட்டுக் கொள்ள,
"அவ சண்டைக்கு வரல கா,அவளுக்கு தேவையானத கேக்குறா, அந்த உரிமை கூட அவளுக்கு கிடையாதா? நீ சொல்ற தான பெத்த அப்பான்னு, அப்போ பெத்த அப்பா கிட்ட தனக்கு இது வேணும்னு கேக்குற உரிமை கூட அவளுக்கு இல்லையா ?"என்றவுடன் காமாட்சி வாய மூடிக் கொண்டார் .
தன் அக்காவிடம் பேசிவிட்டு தன் மாமாவின் புறம் பார்வையை திருப்ப,
"மச்சான், உனக்கு நான் சொல்லி அவளை பத்தி தெரிய வேண்டியது இல்லை. அவளுக்கு இந்த ஊரையும் நம்மலையும் விட்டா வேற என்ன தெரியும்னு நினைக்கிற ?"என்றார் பொறுமையாகவே,
" டேய் அவர் சொல்றதுல என்னடா தப்பு அவளை நம்பி பக்கத்து தெருவுக்கு அனுப்பவே பயந்து வருதுடா. இத நான் உனக்கு சொல்லனுமா ?எங்க போய் யார்கிட்ட வம்பு சண்டை இழுத்துட்டு வருவான்னு தெரியாது".
" அக்கா அது வேற, இது வேற இல்லையா ?".
"இன்னும் சின்ன புள்ளத்தனமா தான்டா நடந்துக்குறா, வயசுக்கு ஏத்த அறிவு வேண்டாமா, எங்க எப்படி நடந்துக்கணும் தெரிய வேணாமா ? எங்களை விட அவளை பத்தி உனக்கு நல்லாவே தெரியும். போதும் வேலா என்னால் உண்மையாவே முடியாது. அவ இல்லாமலும் எங்களால் இருக்க முடியாது .என்னதான் ஏட்டிக்கு போட்டி பேசிகிட்டு சண்டை போட்டுக்கிட்டு எங்க கூட வம்பு இழுத்துக்கிட்டு இருந்தாலும், அவளை விட்டுட்டு என்னாலையும் சரி, அவராலையும் சரி இருக்க முடியாது.அவளை வெளிவூர்ல படிக்க அனுப்பிட்டு புள்ள அங்க எப்படி இருக்கோன்னு தின, தினம் செத்து பொழைக்க முடியாது, இங்கனகுள்ள சுத்துறதுக்கே உன்ன நம்பி தான் அவளை விட்டு வச்சிருக்கேன்"என்று தன் மனதில் உள்ள அத்தனையையும் கொட்டி தீர்த்து விட்டார் காமாட்சி.
"அக்கா ஏன்? இப்படி ஒரு புள்ள கண்ணுல நெய்யும், இன்னொரு புள்ள கண்ணுல தண்ணியும் வைக்கிற,நம்ம சங்கவியை வெளியே அனுப்பி வச்சு தானே படிக்க வைக்கிற, அப்போ இவளை மட்டும் அனுப்ப உனக்கு என்ன அவ்வளவு கஷ்டமா இருக்கு".
" டேய் வேலா, இவ்வளவு தான் நீ இம்புட்டு நாளா இந்த அக்காவை புரிஞ்சுகிட்டதா ?சட்டுனு கேட்டுப்புட்ட என்னதான் வார்த்தைக்கு வார்த்தை பேசினாலும் உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டா பேசுறேன்"..
"அக்கா நான் அப்படி சொல்லல" என்று அவன் பேச வரும்போதே,..
"நீ புரிஞ்சி தான பேசுற, அவ ஆறாவது படிக்கும்போதே ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்னு சொன்னா, இவள கேட்டதுக்கு நான்லாம் உங்கள விட்டு தனியா ஹாஸ்டல்ல போய் இருக்க மாட்டேன்னு அழுதவளாச்சே டா ".
"அக்கா அப்போ அவளுக்கு என்ன வயசு,இப்போ என்ன வயசு"..
" அப்ப இருந்த வயசுக்கும், இப்ப இருக்க வயசுக்கும் தான்டா வித்தியாசம் இருக்கு .அறிவு அதே அளவுல தானே இருக்கு .அவளுக்கு இப்பயும் யார்கிட்ட எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும் ஏதாச்சும் தெரியுதா? எத நம்பி அவளை வெளியே அனுப்பி படிக்க வைக்க சொல்லி அவர்கிட்ட இப்போ நீ இவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கன்னு எனக்கு சுத்தமா புரியல"
" அக்கா ப்ளீஸ், அவள வெளியே அனுப்பி படிக்க வை க்கா.. இப்ப போய் அவ வெளிய நாலு பேத்த பாத்தா தான் உண்டு, நீ சொல்றது போல தான்,அவ நாலு நல்லவங்களையும், கெட்டவங்களையும் பார்த்த தான் வெளி உலகத்தை தெரிஞ்சுக்க முடியும். நாள பின்ன நம்ப ஒரு இடத்துல கட்டி கொடுத்தாலும் அவ அங்க எப்படி நடந்துக்கணும்னு கத்துக்க முடியாம போயிடும். நம்ப கூடவே, குருவி கூட்டுக்குள்ள போட்டு அடைச்சு வச்ச மாதிரி அடச்சு வச்சிருந்தா ,ஊர் உலகத்துல எல்லாருமே நல்லவங்க மட்டும் தானா, எப்படித்தான் அவ எல்லாத்தையும் தாண்டி கடந்து வருவா ? இந்த உலகத்துல கெட்டவங்களும் , இருக்க தான் செய்யுறாங்க, அவங்கள எல்லாம் ஃபேஸ் பண்ண வேண்டாமா? நல்லவங்க கெட்டவங்கள விடு, சூழ்நிலையை பேஸ் பண்ண வேண்டாமா? எந்த நேரமும் நான் அவ பின்னாடியே சுத்திட்டு நிப்பனா? நீ சொல்றதுக்கே வரேன். நாளைக்கு அவ கட்டிட்டு போற வீட்டுக்கு நான் எல்லா நேரமும் போய் நிக்க முடியுமா ?இல்ல நீ எல்லா நேரமும் போய் நிக்க முடியுமா ?ஏதோ ஒரு பிரச்சனை நாளும் அதை அவ கடந்து வரணும் அக்கா . நம்ப எல்லா நேரமும் அவ பின்னாடியே நிக்க முடியாது. சப்போர்ட் பண்றது வேற, அவ பண்ற எல்லாத்தையுமே நம்ம மூலமா தான் பண்ணனும் நினைக்கிறது வேற, அக்கா" என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே, அவனது போன் சட்டை பாக்கெட்டில் அதிர ..
போனை எடுத்து பார்க்க. காமாட்சியின் முத்த மகள் சங்கீதாவின் அக்கா சங்கவி இடமிருந்து போன் வந்திருந்தது.
போனை எடுத்தவன் "சங்கவி "தான் என்று விட்டு ,"சொல்லு கவி" என்று சொல்ல,.
"மாமா சங்கீதா ரிசல்ட் என்ன ஆச்சு ?, அவ பாஸ் பண்ணிட்டாளா?"..
போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டவன்.தன் அக்காவின் மூத்த மகளிடம் பேச ஆரம்பித்தான்.
" அவ பாஸ் பண்ணிட்டா கவி" என்றான்..
" அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு மாமா" என்று அவள் அந்த பக்கம் பெருமூச்சு விட,
இந்த பக்கம் லேசாக வேலனின் உதட்டில் புன்னகை அரும்பியது. தன் அக்கா மற்றும் தாய்மாமாவின் செயலில் சங்கீதாவிற்கு கோபம் வர,
வேலனை முறைத்துக் கொண்டு பார்த்தாள். அவளைப் பார்த்து லேசாக முறுவலித்துவிட்டு "உன் தங்கச்சி என்னவோ பாஸ் பண்ணிட்டா தான். ஆனா, உன் அம்மா தான் அவளை வெளியே அனுப்பி படிக்க வைக்க யோசிக்கிறாங்க .அதை பத்தி தான் இப்போ உங்க அப்பா, அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன்"..
"என்ன மாமா சொன்னாங்க ரெண்டு பேரும்" .
"அக்கா வேணாம்னு சொல்லிட்டு இருக்கு. மாமா இன்னும் பதில் சொல்லல".
"மாமா உனக்கு அவளை வெளியே அனுப்பி படிக்க வைக்க எந்த பிரச்சனையும் இல்லையே" என்று சங்கவி கேட்க,..
" நீயும் அக்கா மாதிரியே கேட்கிற "என்றான் ஆதங்கமாக,
"நான் அம்மா மாதிரி அவளை வெளியே விட நினைத்தோ , இல்ல பயந்தோ கேக்கல மாமா, அவளுக்கு வெளி உலகம் தெரியணும் .ஆனா ,அவளை வெளியே அனுப்பிட்டு எங்க எப்படி நடந்துப்பாளோ அப்படின்னு பயந்துட்டு இருக்க முடியாது இல்லையா ?பெத்தவங்களா அம்மா அவங்களோட பயத்தை சொல்றாங்க. நீ என்ன யோசிச்சிருக்கனு நான் கேட்டேன் மாமா.. என்ன இருந்தாலும் என்ன விட அவ உனக்கு உசத்தி தான ,இன்னும் சொல்லப்போனா, உங்க அக்காவை விட உனக்கு உன் அக்கா பெத்த மக கீதுமா உசத்தி தான, அவ இல்லாம நீ இருந்துடுவியா? அவளை விட்டுட்டு ,சின்ன வயசுல இருந்து நீ தூக்கி வளர்த்த பிள்ள மாமா .அவளும் நீ இல்லாம இருந்துருவாளா?".
சங்கவியின் பேச்சில் ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்தவன். சங்கீதாவை நேருக்கு நேர் பார்த்துவிட்டு, இனி உங்க அப்பா ,அம்மா தான் பதில் சொல்லணும் கவி. எனக்கு அவளை வெளியே அனுப்பி படிக்க வைக்கலாம்னு தோணுது.ஆனா ,என்ன இருந்தாலும் பெத்தவங்களா உன்னோட அப்பா ,அம்மா தான் முடிவு எடுக்கணும் . இதக்கு மேல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல "என்று அமைதியாகி விட்டான்.
அதன் பிறகு, வீட்டில் உள்ள அனைவரிடமும் கவி பேசிவிட்டு தன் அப்பாவிடம் இறுதியாக "அப்பா அவளை வெளியே அனுப்பி தான் படிக்க வையுங்களேன் "என்று கேட்க,
"உன் கூட வேணா அனுப்பி வைக்கட்டா அவளை பத்திரமா பாத்துகுவியா? "என்றார். இறுதியாக தனது மச்சானுக்காக இறங்கி வந்தார். அதுவும் ,
இங்கு சங்கீதாவோ மொத்த குடும்பத்தையும் முறைத்துக் கொண்டு ஆதாங்கத்துடன் நின்று கொண்டு இருந்தாள்.
காமாட்சியின் கணவர் பாண்டியன் பேசிக்கொண்டு இருக்கும்போதே , "சரி டி அவ பேச்சு இருக்கட்டும். நீ எப்ப டி வர" என்று காமாட்சி கேட்டார்.
" நான் நாளைக்கு சாயங்காலம் தான் வருவேன். இன்னைக்கு என்னால அங்க வர முடியாது" என்று சொல்ல,
"என்னடி இப்படி சொல்ற. இன்னும் ரெண்டு நாள்ல , உன் மாமனுக்கு நிச்சயம் இருக்கு அது உன் நினைப்புல இருக்கா இல்லையா? உனக்கும், உன் தங்கச்சிக்கும் அத்தனையும் இழுத்து போட்டு ஓடி ஆடி இப்போ வரைக்கும் செய்யுறவனே அவன் தான் டி. அவன் இல்லன்னா நானே ஒன்னும் இல்லடி "என்றார் சேலை தலைப்பால் கண்களை துடைத்தவாறு,.
வேலன் தான் "அக்கா என்ன பேச்சு இது? "என்று காமாட்சியின் அருகில் வர..
"நீ வேற ஏன் மா, எனக்கு மட்டும் உங்க கூட எல்லாம் ரெண்டு நாள் வந்து தங்கணும்னு ஆசை இல்லையா? இப்பன்னு பார்த்து ஒரு ப்ராஜெக்ட் இருக்கு, அதை முடிச்சு கொடுத்துட்டு தான் லீவு எடுக்கணும். அதுவரைக்கும் லீவ் எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க .இல்லனா இன்டர்னல் மார்க்ல கை வச்சிருவேன்னு சொல்லிருங்காங்க. அப்புறம் நான் இம்புட்டு நாள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போய்டும் .படிச்சதும் வீணா போய்டும் .அதான் முன்னாடி நாள் நைட்டே நான் ஊருக்கு வந்துருவேன்னு சொல்றேன் இல்ல ,காலேஜ் முடிஞ்சதும் கிளம்பிடுவேன் .. இப்பவே லீவு கேட்டு வாங்கிட்டேனா அப்புறம் கல்யாணத்துக்கு லீவு போட வேணாமா ?"என்றாள்.
"வேணாம் டி. நீ அப்ப லீவ் போடனும், இப்ப நீ காலேஜ் முடிச்சுட்டு முன்னாடி நாள் நைட்டு ஊருக்கு வந்து சேர்ந்தா சரி" என்று சொல்ல,
இவ்வளவு நேரம் அனைத்தையும் ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த சங்கீதா,"அவளை மட்டும் நைட் நேரமா இருந்தாலும் ,தனியா வர சொல்ற அளவுக்கு இருக்கீங்க. ஆனா ,என்ன நம்பி வெளியே படிக்க கூட விட மாட்டீங்க இல்லையா ?நான் அவள் கூட எல்லாம் போய் படிக்க மாட்டேன். என்ன வேற எங்கேயாச்சும் நல்ல காலேஜா பார்த்து தான் சேர்த்து விடணும் . நான் தனியா இருக்கணும்னு கேட்டேன். நீங்க என்ன அவ கூட கொண்டு போய் விட பாக்குறீங்க" என்று சங்கீதா குதிக்க..
சங்கீதாவின் வார்த்தையில் அவளது சிறுபிள்ளைத்தனமே தெரிய, கோபத்திற்கு பதில் வேலனுக்கு என்னவோ அதரங்களில் புன்னகை தான் தோன்றி மறைந்தது.
தன் மாமாவின் செயலில் அவனை முறைத்துவிட்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பினாள்.
"நீ உன் அக்கா கூட தங்கி படிக்கிற மாதிரினா வெளியே தங்கி படிக்கலாம். இல்லனா ,இங்கிருந்து காலேஜ் போ அவ்வளவுதான் சொல்லுவேன். இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது. இதுவே உன் மாமனுக்காக தான் எடுத்திருக்கேன் இந்த முடிவை. இதுக்கு மேல எல்லாம் என் மனசு மாறாது. வேணும்னா ,நீ வீட்டிலிருந்து காலேஜ் போ ,பக்கத்துல இருக்க காலேஜுக்கு நம்ம ஊருக்கே பஸ் வருது இல்ல, இங்கிருந்து போற பசங்களோட போயிட்டு சாயங்கால வீடு வந்து சேந்துரு" என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் காமாட்சி தன் கணவனை பார்க்க.
அவர் அமைதியாக நின்றார்." நீங்க வீட்டுக்கு வரீங்களா? இல்லையா? உங்க மக பண்ண கூத்துல போட்டது போட்டபடி கிடக்குது இன்னைக்கு
பொழப்பே நாறிடுச்சு "என்று முறைத்தார்.
"சரி மச்சான் பாரு "என்று விட்டு பாண்டியன் கிளம்பி விட .காமாட்சியும் பின்னாடியே சென்றார் .