GG writers
Moderator
சங்கீதா தன் அப்பா அம்மா இருவரும் கிளம்பியவுடன் வேலனின் புறம் திரும்பியவள்."எல்லாம் உன்னால தான் மாமு, நான் கேட்டும் உன்னால செய்யமுடியாது இல்ல போ "என்று அவனைப் பார்த்து முறைத்து விட்டு கோபத்துடன் தன் அப்பா ,அம்மாவுடன் தன் வீட்டை நோக்கி கிளம்பினாள்.
" இவளை வச்சுட்டு என்னதான் பண்றதுன்னு தெரியல ,எதுக்கு எடுத்தாலும் முகத்தை திருப்பிக்கிட்டு போற, என்னை ஏதுன்னு புரிஞ்சுக்காம கிளம்புறா பாரு" என்று வாய்விட்டு முனைவி விட்டு வேலன் திரும்ப,
அவனது அய்யா கந்தசாமியும் ,ஆத்தா வடிவுக்கரசியும் தன் மகனைப் பார்த்து இதழ்களில் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.
"உங்க ரெண்டு பேத்துக்கும் என்ன பாத்தா எப்படி இருக்கு. என்னவோ சிரிச்சுக்கிட்டு நிக்கிறீங்க. நீங்க பெத்த உங்க மக கிட்டயும் ,அது பெத்த மக கிட்டயும் மாட்டிட்டு முழிக்க வேண்டியது நான தான இருக்கு தினமும்.. இதுங்க கூட ஒரே பஞ்சாயத்தா இருக்கு. சக்காளத்தி சண்டையை விட பெரும் சண்டையா இருக்கு உங்க மக சண்டையும், உங்க பேத்தி சண்டையும்" என்று அதரங்களில் புன்னகையுடன் சொல்ல,
அவனைப் பார்த்து சிரித்தவர்கள். "நீ ஏன்டா மவனே அம்மா ,மக சண்டைக்குள்ள போற" என்றார்கள் ஒரே நேரத்தில்,
தன் அய்யா,ஆத்தா இருவரையும் முறைத்தவன் "ஏன் சொல்ல மாட்டீங்க,என்று விட்டு சரி சரி நேரம் ஆகுது எனக்கு அவ வேகமா வந்து சொல்லவும் அக்கா போன் பண்ணவும் ,நானும் போட்டது போட்டபடி விட்டுட்டு அப்படியே வீட்டுக்கு வந்துட்டேன். நான் போய் வேலையை பாக்குறேன்" என்று நகர,
"டேய் வேலா சாப்பிட்டு போடா ஒரு வாய் "என்றார் வடிவுக்கரசி
" இப்பவே என்ன ஆத்தா வரேன் இருங்க".. என்று விட்டு தான் விட்ட வேலையை பார்க்க கிளம்பி விட்டான் முத்துவேலன்.
வேலன் வயலில் தன்னுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அப்போது சங்கீதா தந்தையிடம் சண்டையிட்டது தான் அவனது நினைவில் வந்து சென்றது.
அதை யோசித்துக்கொண்டே வேலையை முடித்துவிட்டு மாலை போல் வீட்டிற்கு வந்திருந்தான்.
மதியவேளை சாப்பாட்டிற்கு அவன் வீட்டிற்கு சென்றால், வேலை கெட்டு விடும் என்பதால், தன் ஆத்தாவிற்கு போன் செய்து "ஆள் அனுப்பி விடுறேன் சாப்பாடு கொடுத்து அனுப்பிடுங்க" என்று சொல்ல, அவரும் "அப்பவே கையோடு சாப்பிட்டு போக சொன்னேன் தான டா வேலா"என்று சொல்ல ,
"ஆத்தா " என்ற அவனது ஒற்றை வார்த்தையில் அவரும் சூழ்நிலையை உணர்ந்து அமைதியாகி விட்டார்.
தன் அய்யா, ஆத்தா இருவரிடமும்" மாமா கிட்ட பேசி கீதுமாவை வெளிய அனுப்பி படிக்க வைக்க ஏதாவது ஏற்பாடு செய்யுங்க" என்று சொல்ல,
இருவரும் அவனை பாவமாக பார்த்தார்கள்." தெரிஞ்சு தான் பேசுறியா வேலா, அவளால நம்ப எல்லாத்தையும் விட்டுட்டு இருக்க முடியுமா? அது மட்டும் இல்லாம வயசு தான் அவளுக்கு ஏறி இருக்கே தவிர , ஆளுதான் வளர்ந்திருக்காளே தவிர ,வெளி உலகம் தெரியாதே டா ,பக்குவம் இல்லையே டா ".
"அதுக்குன்னு இப்படியே பொத்தி பொத்தி உங்க கைக்குள்ளேயே வச்சிருக்க போறீங்களா ?அப்புறம் எப்ப தான் வெளி உலகத்த அவ தெரிஞ்சுக்க. போற இடத்துல அப்புறம் எப்படி தான் வாழ செய்வா, அவ வாக்க பட்டு போற வீட்டுல இருக்கவங்க எல்லாத்தையும் இவ எப்படி தான் சமாளிப்பா.எல்லோரும் நம்மள மாதிரியே ,இவளுக்கு ஏத்த மாதிரியே நடந்துபாங்கன்னு நினைக்கிறீங்களா? இல்ல எல்லா விஷயத்துக்கும் அவ அங்க இருக்குறவங்கள கேட்டு கேட்டு தான் ஒவ்வொன்னும் செய்யணும் நினைக்கிறீங்களா? அவளுக்குன்னு சின்ன சின்ன ஆசை கூட இருக்க கூடாதா ?அதை நிறைவேத்திக்கணும்னு நினைக்க கூடாதா?" என்று தன் அய்யா, ஆத்தாவிடம் வாதாடி கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் நுழைந்தார் பாண்டியன்.
" நான் அப்படி சொல்லவே இல்லையே மாச்சான்" என்று சொல்லிக் கொண்டே வர ..
"மாமா" என்று விட்டு ,"இல்ல மா...மாமா அ..அது" என்று பேச்சை முழுங்கினான்.
" இப்பவும் சொல்றேன் மச்சான் நான் அவளை வெளியே அனுப்ப மாட்டேன்னு சொல்லல. ஆனா, தனியா அனுப்ப பயமா இருக்கு, சொன்னாலும் சொல்லாட்டியும் ஆளு தானே வளர்ந்து இருக்கா. அவள பத்தி நான் உனக்கு சொல்லனுமா?" என்று கேள்வியாக நிறுத்த,
"தெரியுது மாமா இருந்தாலும்"
"அவ ஆசைப்பட்டானு நீ கேட்கிற மாப்பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா ?".
"அவ ஆசைப்பட்டான்றதுக்காக மட்டும் நான் கேட்கலையே மாமா , எனக்கும் தெரியும் ஆசைப்பட்டா தான் .ஆனா,அதையும் தாண்டி அவ எப்பதான் வெளியே போய் நாலு விஷயத்தை தெரிஞ்சுக்கிறது, அவ வெளியே போனா தான் அவளுக்கும் கஷ்ட ,நஷ்டம் என்ன ?யார்கிட்ட எப்படி பேசணும்னு தெரிய வரும் .இங்க நம்ம கைக்குள்ளே பொத்தி வச்சுக்கிட்டு இருந்தா, அவ எப்பதான் வெளி உலகத்தை பார்ப்பா . அவ கேட்கிறது அவ சுயமா முடிவெடுக்க, சந்தோஷமா இருக்கனு யோசிக்கிறா, அதுல இருக்க சாதக,பாதகம் எல்லாத்தையுமே நம்ம கையை விட்டு வெளியே போய் பார்த்தா மட்டும் தான் மாமா அவளுக்கு தெரிய வரும். நம்ம கட்டி கொடுத்துட்டு பின்னால போற வீட்ல எப்படி வாழ்வாளோ ?என்று பயப்படத் தேவையில்லை. இப்ப அந்த பயம் உங்களுக்கு நம்ம கவி மேலே கொஞ்சம் கூட இல்லைல. போற இடத்துல சமாளிச்சிடுவா என்ற எண்ணம் இருக்குல்ல, அதுபோல அவளும் வெளியே போன உடனே கொஞ்ச நாள் கஷ்டப்பட்டாலும் ,பின்னாடி அவ எந்த பயமும் இல்லாமல், அவ வாழ்க்கைக்கு தேவையான முடிவை எடுக்கிற மனநிலையில வந்து நிப்பா" என்றவுடன்..
அவரும் "ஆமாம்" என்பது போல் தலையாட்டினார்.
ஆனால், இப்போது அவன் சொன்ன வார்த்தையே பின்னாளில் அவளே தன் வாழ்க்கைக்கான ஒரு முடிவை எடுத்துக் கொண்டு யார் பேச்சையும் கேட்காமல், அனைவரையும் எதிர்த்து , தன்னையும் எதிர்த்து நிற்பாள் என்பதை இப்போது அவன் யோசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
"அவ்வளவுதான் மாமா இனி நீங்கதான் யோசிக்கணும் .அக்கா கிட்ட நீங்க தான் பேசணும். இனியும் நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல "என்று விட்டு தன்னுடைய ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
மேலும் இரண்டு நாட்கள் சென்றது .
காலை வேளையில் அவன் வயலில் மடை திருப்பிக் கொண்டு இருக்க. அப்பொழுது அங்கு வந்த அவனது வயதை ஒத்த பக்கத்துக் காட்டுக்காரன் "என்னலே வேலா இங்கன என்ன உக்காந்து இருக்கவ அங்க உன்னோட அக்கா மக சங்கீதா பக்கத்து தோப்புக்கு போயிட்டானு ஊரே அங்க கூடி நிக்குது.நீ என்னனா இங்க மடை திருப்பிட்டு இருக்கவ" என்று சொல்ல.
" என்ன டா முருகா சொல்ற" என்று கேட்டுக் கொண்டே வேகமாக நிமிர்ந்தவன். சட்டை இல்லாமல் பனியன் வேஷ்டியோடு இருக்க. "ஆமா டா போய் பாரு "என்று விட்டு அவன் நகர்ந்து விட..
வேகமாக தன் கையில் இருக்கும் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு சட்டையை கூட மேலே எடுத்து போடாமல் அங்கு வயலுக்கு பாயும் தண்ணீரில் தன் கை,கால்களை அலம்பி கொண்டு இடுப்பில் கட்டி இருந்த துண்டால் கையைத் துடைத்துக் கொண்டே வேகமாக பனியன், வேஷ்டி முழுவதும் சேரும் ,சகதியுமாக பக்கத்து தோப்பை நோக்கி ஓடினான்.
அங்கு அவன் செல்லும் பொழுது தன் அய்யா,ஆத்தா , அக்கா ,மாமா நால்வரும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் கையை பிசைந்து கொண்டு கண்கள் கலங்க நிற்க. சுற்றி முக்கால்வாசி ஊரே கூடி நிற்க.அவர்களுக்கு நடுவில் சங்கீதா பயத்துடன் கையை பிசைந்து கொண்டு பாவமான முகத்துடன் நின்று கொண்டிருப்பதை பார்த்தான். அனைவரையும் தள்ளிவிட்டு உள்ளே நுழைய..
வேகமாக அவனிடம் ஓடி வந்த சங்கீதா அவனின் தோளில் சாய்ந்து கொண்டு அவனது கையை ஒரு பக்கமாக கெட்டியாக பிடித்துக் கொண்டு "முத்து மாமு"என்றாள் லேசான விம்மலுடன் ..
"என்ன ஆச்சு கீதுமா" என்று அவளது தலையை ஆதுரமாக வருட..
"என்ன வேலா, இன்னும் செல்லம் கொஞ்சிட்டு இருக்க. உன் அக்கா மக பண்ணி வச்சிருக்க கூத்தை ஊரே பார்த்துட்டு நிக்குது. இப்ப வந்து என்ன ஆச்சுன்னு கேக்குற ".
"மாமா எனக்கு இப்போதான் செய்தி கிடைச்சுச்சு பக்கத்து காட்டு முருகன் இப்பதான் வந்து சொல்லிட்டு போறான். அப்போ எனக்கு முழு விவரம் தெரியாது இல்லையே. என் வீட்டு புள்ளைய கேட்காம, சுத்தி நின்னு வேடிக்கை பாக்குற உங்க கிட்ட கேட்க சொல்றீங்களா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா இல்ல கதை கட்டி விடுவீங்க ?என்ன நடந்துச்சுன்னு முழுசா என் அக்கா மக கிட்ட கேட்காம அப்புறம் வேற யாரை கேட்க. அவ பக்கம் என்ன இருக்குனு நான் கேட்கணும் இல்ல " .
"சரில நீ சொல்றபடியே வருவோம். உன் அக்கா மகளையே நீ கேளு .என்ன நடந்துச்சுன்னு "என்று ஒரு பெரியவர் சொல்ல.
"என்ன கீதுமா உனக்கு என்ன இந்த தோப்புல வேலை "என்று அமைதியான முகத்துடன் கேட்டான்.
அவர்களிடம் அவன் பேசிய முகத்திற்கும் ,சங்கீதாவிடம் பேசும்போது இருக்கும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.. அவன் பேசிய தோணியே வேற .சுற்றியுள்ளவர்கள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
புறங்கையால் தன் கண்களை துடைத்த வாரே "மு...மு...முத்து மா..மாமு அ..அ..அது நா..நான் "என்று திக்கித் திணறினாள். அவளது தலையை ஆதுரமாக வருடியவாறு " நீ சொல்லு கீது மா"என்றான்.
" நா..நான் இங்க மாங்கா பெறிக்க வந்தனா" என்று விட்டு நிறுத்தினாள்.
அவளது முகத்தை தான் பார்த்துக் கொண்டு நின்றான் முத்துவேலன். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "உங்ககிட்ட இல்லாத தோப்பா ?,இல்ல உன் மாமாகிட்ட இல்லாத தோப்பா ?முத்துவேலா. இப்படி உன் அக்கா மக பக்கத்து தோப்புக்கு எதுக்கு மாங்கா பெரிக்க வந்திருக்கா? இந்த தோப்புக்கு சொந்தக்காரன் மலையன்னு உன் அக்கா மகளுக்கு தெரியாதா? , இல்ல அவனோட குணத்தை பத்தி தான் இவளுக்கு தெரியாதா?ஊருக்கே தெரியும் அவனை பத்தி.அவன் பொம்பள பொறுக்கினு அப்படி இருக்க இங்க என்ன உன் அக்கா மகளுக்கு வேலை"என்றார் நாக்கில் விஷம் தடவிய வார்த்தைகளாக..
"கொஞ்சம் வார்த்தையை பார்த்து பேசுங்க சித்தப்பு "
"என்னய்யா பார்த்து பேச. கேட்டா மாங்கா பெறிக்க வந்தனு தான் அந்த புள்ள சொல்லுது.மாங்கா பெரிக்க தோப்புக்கு வந்தவளுக்கு மோட்டார் ரூமுக்குள்ள என்ன வேலை ? மாந்தோப்பு உன்கிட்ட இல்லாததா? இல்ல உங்க மாமா கிட்ட தான் இல்லையா? உன்ன விட கம்மியா கூட தான் இருக்கட்டும் ஆனா, அவர் கிட்ட இல்லாத தோப்பா?அப்படி என்ன உன் அக்கா மகளுக்கு பக்கத்து தோப்பு மாங்கா கேக்குது ".
"சித்தப்பு வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்க" என்றான் லேசான எரிச்சலுடன்..
"நான் கேக்கல வேலா. இதையே தான் எங்ககிட்ட மலையன் இவ்வளவு நேரம் கேட்டுட்டு இருந்தான் நீயே அவன் கிட்ட பதில் சொல்லுவியோ ?,இல்ல அவன்கிட்ட மல்லுக்கு நிப்பையோ ?"என்று அவர் அமைதியாகிவிட.
அப்போது அங்கு கலை கொத்த வந்த பெண்மணி ஒருவர். "ரெண்டு பேரும் ஒண்ணா தான வேலா மோட்டார் ரூம்ல இருந்து வெளியே வந்தாங்க .அத நான் மட்டும் இல்ல என் கூட கல கொத்த வந்த பொம்பளைங்க எல்லாருமே தான பாத்தோம் இல்லைன்னு சொல்ல சொல்லு உன் அக்கா மகள?" என்று சொல்ல.
அவளை திரும்பி பார்த்தான் .அவள் கண்கள் கலங்க அவனை பார்த்துக் கொண்டு நிற்க. தன் அக்கா ,மாமா ,ஐயா ,ஆத்தாவை பார்த்தான். அவர்களும் கையை பிசைந்து கொண்டு கண்ணீர் மல்க நின்றார்கள். நால்வரையும் பார்த்தவன் அவர்கள் எதுவும் பேசாமல் நிற்கவும் அவனுக்கு கோபமும் ,எரிச்சலும் தான் உண்டானது. 'தன் வீட்டுப் பிள்ளையை தானே சொல்கிறார்கள். ஏதோ? அடுத்த வீட்டுப் பிள்ளையை சொல்வது போல எனக்கு என்ன என்பது போல் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே 'என்று நினைத்தான் .
தன் அக்காவின் அருகில் வந்தவன் " என்ன பேச்சு பேசுறாங்க.நீ என்னனா அமைதியா எவனுக்கு வந்த விருந்தோனு நின்னு வேடிக்கை பாக்குற. அவ நீ பெத்த புள்ள தான் அது நெனப்புல இருக்கா" என்றான் கோபத்துடன்.
"என்ன என்ன தான்டா பண்ண சொல்ற. இவளுக்கு இங்க என்ன வேலை. ஊரார் வாயுல விழனும்னு தலையெழுத்தா? மொத்த குடும்பத்தையும் இங்க வந்து நிக்க வச்சு இருக்கா ?அவங்க சொல்றதுல என்ன டா தப்பு இருக்கு. நியாம தான கேள்வி கேக்குறாங்க? நம்ம கிட்ட தோப்பு இருக்க, இவளுக்கு என்ன பக்கத்து தோப்புல வேல அதுவும் மலையனை பத்தி தெரிஞ்சி இருந்தும், மோட்டர் ரூமுக்குள்ள என்ன வேலை ?ஊரார் முன்னாடி நம்ப குடும்பம் தான்டா தலை குனிஞ்சி நிக்கிது.அவங்க கேக்குறது பதில் பேச முடியாம உங்க மாமா கூனி குறுகி போய் நிற்கிறாரு பாரு"என்றார் ஆதங்கம் தாங்காமல் காமாட்சி.
"அக்கா அவ நீ பெத்த மக .நீயே என்ன பேச்சு பேசுற"..
" நான் பெத்தவ தான்டா இல்லைன்னு சொல்லல .நம்ம தோப்பு இருக்க அவளுக்கு இங்க என்ன வேலை ?"என்று கேட்க.
"அவ மேல உனக்கு நம்பிக்கை இல்லையா ?" என்றான் முறைப்புடன்.
"நம்பிக்கை இல்லாம இல்ல டா .ஏன்டா புரிஞ்சுக்க மாட்ற .இப்போ அவ பேரு தான கெட்டுப் போய் நிக்குது. அவ வாழ்க்கை தாண்டா வீணா போகுது"என்றார் மனக்குமுறலுடன்.
சுற்றி உள்ள அனைவரையும் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச .. "சீக்கிரம் அவளுக்கு சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணி வைக்கிற வேலைய பாருங்க முத்துவேலா உன் அக்கா மகளுக்கு உடம்பு தெனவெடுத்து பொய் இருக்கு போல, யாரு கண்டா உடம்பு அரிப்பு எடுத்து போயி இங்கன வந்திருக்கா போல" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பேச ...
அனைவரையும் கண்ணில் ரத்த நரம்புகள் ஓட முறைப்புடன் பார்த்துக் கொண்டு மேற்கொண்டு பேச வர அவனது கையை வேகமாக பிடித்து இழுத்தார்கள் .ஒரு பக்கம் அவனது ஆத்தா வடிவுக்கரசியும் ,இன்னொரு பக்கம் அக்கா காமாட்சியும் "வேண்டாம்" என்பது போல் தலையசைக்க..
சங்கீதாவின் அம்மாயியும் ,தாத்தாவும், பெற்றவர்களுக்கும் காது கூச.. இரு பெண்களும் கைகளால் காதை பொத்திக் கொண்டு கண்ணீர் மல்க நின்றார்கள்.அனைவர் பேசுவதையும் கேட்டவனுக்கு கைகள் முறுக்கேற கோபம் தான். ஆனாலும், இதற்கு மேல் இவர்களிடம் பேசி பயனில்லை என்று உணர்ந்தவன். சங்கீதாவின் அருகில் வர..
அவள், அவனது தோளில் தலையை சாய்த்து கொண்டு ,கையை இறுக்கமாக கட்டிக்கொண்டாள் .
அப்போதும் சுற்றியுள்ள மக்கள் அமைதியாக இல்லாமல் ," சீக்கிரம் இவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைங்க ,அதுவும் இவன் கூட மோட்டார் ரூம்ல தனியா இருந்தானு தெரிஞ்சா எவனும் பொண்ணு கேட்டு கூட வர மாட்டானுங்க. என்னத்த பண்ண போறீங்களோ ?ஏற்கனவே இவளை நினைச்சு வயித்துல நெருப்பை கட்டிட்டு இருந்தா காமாட்சி. இப்போ இந்த மாதிரி பண்ணி வச்சிருக்கா .எவன் இவளை கட்டிக்கிட்டு வாழ போறானோ ? அவ அப்பன் ஆத்த பேரை கெடுக்கனே வந்து இருக்கா அவங்களோட சின்ன குட்டி சங்கீதா "என்று சுற்றியுள்ள பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச..
ஒரு நிமிடம் அவளை பார்த்தவன். அவளது கையை மெதுவாக எடுத்து விட. "மாமு "என்றாள் வெளிவராத குரலில்..
அவளைப் பார்த்து கண் மூடி திறந்து விட்டு, தன் அக்காவின் அருகில் வர. அவரும் அழுகையுடன் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். தன் அக்காவின் புடவை முந்தானையில் முடிந்து இருந்த மாங்கல்யத்தை வெளியில் எடுத்தான்." டேய் வேலா இத எதுக்குடா இப்போ எடுக்கிற "என்று அவர் கேட்க கேட்க ,காதில் வாங்காமல் வேகமாக சங்கீதாவின் அருகில் வந்தான்.
தன் தம்பியின் திருமணத்திற்காக அதாவது, காமாட்சி முத்துவேலனின் திருமணத்திற்காக அவர்களது ஊர் அம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு சீக்கிரம் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக முடிந்து வைத்திருந்த தாலியை தான் தன் அக்காவின் முந்தியிலிருந்து உருவி இருந்தான் முத்துவேலன்.
சுற்றி உள்ளவர்கள் கத்த கத்த யாரையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் கத்துவதையும் காதில் வாங்காமல் சங்கீதாவின் மிரட்சியான பார்வையும் கண்டுகொள்ளாமல் "யாரும் என் அக்கா மக சங்கீதா கழுத்துல தாலி கட்டவும் வேணாம்.அவ வாழ்க்கையை பத்தி கவலைப்படவும் வேணாம். நீங்க நினைக்கிறது போல அவ இந்த மலையன் கூட இருந்ததா கூட இருக்கட்டும்.இனியும் அவ
வாழ்க்கை ஊரார் வாயில அக பட வேணாம்" என்றவன் அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருந்தான் .அவளது தாய் மாமனாகிய முத்துவேலன்..