வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம் 4

GG writers

Moderator
முத்துவேலனின் அருகில் வந்த காமாட்சி "வேலா என்ன பண்ணிட்டு இருக்க "என்று ஓங்கி அவனது கன்னத்தில் ஒன்று விட்டிருந்தார்.

"அ..அம்மா" என்று வேகமாகவே சங்கீதா அழைத்து இருக்க ,

அவளை ஒரு முறைப்புடன் பார்த்தவர்.தன் தம்பியின் புறம் திரும்பி, "என்னடா பண்ணிட்டு இருக்க, அவதான் கூறு கெட்ட தனமா இங்க வந்து நிக்கிறானா, நீயும் ஏன்டா இப்படி எங்களை படாத பாடு படுத்துற"என்று அழுது வடிந்த முகத்துடன் ,அதிகபட்ச வலியுடன் அவரது வார்த்தை வெளிவந்தது..

" அக்கா போதும். எதுவா இருந்தாலும் ,வீட்ல போய் பேசிக்கலாம். ஊருக்கு முன்னாடி நடந்த வரைக்கும் எல்லாமே போதும்னு நினைக்கிறேன்" என்று விட்டு தன் மாமாவை பார்த்தவன். "மாமா வீட்டுக்கு எல்லாத்தையும் கூட்டிட்டு வாங்க" என்று சங்கீதாவின் கையை பிடித்து அவள் திமிர திமிர அவளை அழைத்துக்கொண்டு தன் வயல்வெளி வழியாக வீட்டிற்கு கிளம்பினான்.


சுற்றி நின்ற கூட்டத்தில் உள்ள அனைவரும் போகும் குடும்பத்தை வாயில் வந்தபடி பேச, ஒரு நிமிடம் திரும்பி நின்றவன். தன் மாமாவை வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்ல சொல்லிவிட்டு, "இவ்வளவு தூரம் பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சிட்டீங்க இல்ல, அடுத்த வீட்டு பிரச்சனையை புரணி பேசுறதை விட்டுட்டு, தன் வீட்டில் நடக்கிற நல்லது, கெட்டதை போய் பார்த்தா நல்லதுனு நினைக்கிறேன், அடுத்து வேற ஒரு பிரச்சினை வர வரைக்கும் இத பேசாம ஓய மாட்டீங்க இல்லையா? அவங்க அவங்க வீட்டுல யாருக்கும் வேலையே இல்லையா? "என்று முறைப்புடன் சொல்லிவிட்டு சுற்றியுள்ள ஒரு சில பெரியவர்களையும் பார்த்தவன். எதுவும் பேசாமல் அவளது கையைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தான்.

சிறிது தூரம் அமைதியாக திமிரி கொண்டே வந்தவள். அவனது கையை உதிரி விட்டு அவனை முறைத்து பார்த்தாள்."இ... இப்போ எ.. எதுக்கு மா..மாமா என் கழுத்துல தாலி கட்டின "என்று அழுகையும், கோபமும் சம பங்காக போட்டி போட்டுக் கொண்டு வார்த்தை வர, அவனிடம் கேள்விக்கணைகளை தொடுக்க,

"நீ தான சொன்ன ,உன்ன மாதிரி புருஷன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் மாமுனு .அதான் ,உனக்கு நானே புருஷனா கிடைச்சுட்டேன்ல அப்புறம் என்ன?" என்றான் லேசான புன்னகையுடன்..

அவனைப் பார்த்து முறைத்தவள். "உன்ன மாதிரி வேணும்னு தான் சொல்லி இருந்தேன், நீயே வேணும்னு சொல்லல "என்க,

"ஏன்? எனக்கு என்னடி குறைச்சல், நல்லா தான இருக்கேன் "என்று சொல்ல,

அவனை பாவமாக பார்த்து கொண்டு நிற்க,

அவளது கையைப் பிடித்தவன். "கீது கொஞ்ச நேரம் அமைதியா வீட்டுக்கு வா போகலாம் , இனியும் இங்கேயே நின்னு அடுத்தவங்க வாய்க்கு அவுலாக வேணாம்".

அவனது கையை உதறிவிட்டு காலை உதறியவள்,வாய்க்க வரப்பில் நடக்க, கால் இடறி கீழே விழ போனாள் ,அவளது இடுப்பை வலைத்து பிடித்தவன்" பார்த்து" என்க,

" எனக்கு தெரியும் நான் பார்த்து போயிப்பேன் "என்று வாயைக் கோணித்து காண்பித்தாள்.

"என் கண்ணு குட்டிக்கு பார்த்து எல்லாம் போக தெரியுமோ ?"என்று முத்து பற்கள் தெரிய சிரிக்க," இவ்வளவு நடத்திருக்கு இப்பவும் எப்படி மாமு சிரிக்கிற ,என் மேல தான தப்பு, உனக்கு என் மேல கோபமே வரலையா?"என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க,

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல கீதுமா வா" என்று அவளது கையை பிடிக்க வர ,"ஒன்னும் வேணாம் நானே போய்ப்பேன்".

" எப்படி இப்படியே நடந்தே போயிருவியோ ?"என்றான் நக்கலாக,அவனது வயலுக்கும் வீட்டுக்குமான தூரம் 1 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்,அப்படி இருக்க எப்படி நடந்து செல்வாள், அதுவும் இதுவரை நடந்து சென்றதில்லை,இவன் கூட தான் வருவாள்,இல்லையென்றால் அடுத்தவர்களிடம் உதவி கேட்டு வருவாள் அப்படி இருக்க, எப்படி? என்ற எண்ணத்தில் அவன் கேட்டிருக்க ,

அவனை முறைத்து விட்டு"நான் போறேன்,எனக்கு வழி தெரியும்" என்று முனைவி கொண்டே காலை உதறிக் கொண்டே நடக்க," கன்னுக்குட்டி நில்லு "என்று வேகமாக அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியில் தன் வண்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தான்.

பிறகு, அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய, அவர்களுக்கு முன்பாகவே வீட்டில் மற்ற நால்வரும் கூடி இருக்க, வடிவுக்கரசி தான் அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே,"டேய்!அங்கையே நில்லு டா "என்றார் வேகமாக,

"ஏன்? ஆத்தா"என்று சிரித்த முகத்துடன் கேட்க,

" நீ மட்டும் வரதுன்னா வா, இல்லன்னா அப்படியே வெளியே போயிடு,இந்த சிரிக்கியோட தான் வீட்டுக்குள்ள வருவேனா வாரதா".

"ஆத்தா அவ உன் பேத்தி" என்றான் பற்களை கடித்தவாறு,

"இத்தனை நாளும் அப்படித்தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன். இப்பவும் சொல்றேன், அவ என் பேத்தியா இந்த வீட்டுக்குள்ள வரலாம், ஆனா உன் பொஞ்சாதியா, இந்த வீட்டு மருமகளா இப்போ இல்ல எப்பவும் வர முடியாது ".

"ஆத்தா "என்று குரலை உயர்த்த,

" குரலை உயர்த்தி பேசினா பயந்துருவோமா?" என்றார்.

" என்ன அய்யா,ஆத்தா இப்படி பேசுறாங்க,நீங்க அமைதியா இருக்கீங்க".

"இப்போ எதுக்கு டா உங்க அய்யன இதுக்குள்ள இழுக்குற?".

"என் பேத்தி, என் பேத்தி, இவளுக்கு தான் இந்த மொத்த சொத்தும், இந்த வீட்டுக்கு சொந்தக்காரி கூட இவ தானு, இம்புட்டு நாளா சொல்லிட்டு திரிஞ்ச இப்ப என்ன ஆத்தா?".

"அத தான் நானும் சொல்றேன். என் பேத்திக்கு தான் இந்த மொத்த சொத்தும் சொன்னேன்.ஆனா, உன் பொஞ்சாதிக்கு நான் சொல்லலையே?"

" ஆத்தா! அப்போ நான் மட்டும் உனக்கு வேணும், என் பொஞ்சாதி வேணாமா?"

"நீ இவளை தவிர, வேற எவ கழுத்துல தாலி கட்டி இருந்தாலும், நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன் டா "என்க,

இவ்வளவு நேரம் அவர் பேசும் வரை அமைதியாக தன் மீது தவறு இருப்பதால் குனிந்த தலை நிமிராமல் இருந்த சங்கீதா. இவளை தவிர வேறு எவ கழுத்துல தாலி கட்டி இருந்தாலும்,என்றவுடன் வேகமாக நிமிர்ந்து தன் அம்மாயியை நிலை குத்திய பார்வை பார்த்தாள்.

"அந்த மலையன் கூட மோட்டார் ரூமுக்குள்ள இருந்துட்டு வந்தவ,என் வீட்டுக்கு மருமகளா ?என் மகனுக்கு பொஞ்சாதியா ?".

"ஆ..ஆ...ஆத்தா" என்று கண்களில் ரத்த நரம்பு ஓட ,கைகள் முறுக்கேற, வீடே அதிரும் அளவிற்கு கத்தினான்.
இவ்வளவு நேரம் அவர் பேசியதை ஆதங்கத்தில் பேசுகிறார் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன்.இப்பொழுது அவரது வார்த்தையில் அருகில் உள்ள சொம்பை தூக்கி சுவற்றில் அடித்து இருந்தான்.

அவனது அய்யா கந்தசாமி "என்ன டா வேலா இது பழக்கம்" என்க,

"இம்புட்டு நேரம் ஆத்தா பேசுறத கேட்டுட்டு தான இருந்தீங்க?என்ன பேச்சு பேசுறாங்க? அவங்க தூக்கி வளர்த்த பிள்ளை,நம்ம வீட்டு பிள்ளை,ஊர் தான் அப்படி பேசுதுன்னா,இவங்க கூட பேசுவங்களா?இவங்களுக்கு தெரியாதா? இவளை பத்தி "என்று முறைப்புடன் பார்த்துவிட்டு, இவ்வளவு நேரம் அமைதியாக வேலனையே பார்த்துக் கொண்டிருந்த, தன் அக்கா மாமாவை எதிர்பார்வை பார்த்தான்.

இருவரும் அமைதியாகவே இருக்க,"நீங்க பெத்த புள்ள தானே, யாரையோ சொல்றது போல, அப்படியே செஞ்சு வச்ச மன்னார் சாமி போல நிக்குறீங்க? இரண்டு பேரும்"

"வேற என்னய்யா எங்கள பேச சொல்ற? நாங்க பெத்த புள்ளையா இருந்தாலும், அவ பண்ண வேலைக்கு என்ன பண்ண சொல்ற?"என்றார் பாண்டியன்.

"மாமா போதும். முதல்ல எங்கள வீட்டுக்குள்ள விடுறீங்களா? இல்லையா?அங்க இருக்கவங்க பேசினது பத்தாதுன்னு, இப்போ நீங்களும் பேசி இவளை மொத்தமா சாகடிக்க பாக்குறீங்க?"என்று அவளைப் பார்க்க, அமைதியாக தலையை கீழே குனிந்து கொண்டாள்.

"இப்ப என்ன ஆத்தா,உனக்கு நான் இந்த வீட்டுக்குள்ள வரலாமா ?வரக்கூடாதா?"

" நீ மட்டும் வரதுனா வா".

"அப்போ, என் பொஞ்சாதியோட வரேன்னா, நான் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது, அப்படித்தானே",

"அப்படித்தான்டா"என்றார் வீம்பாக,

"சரி நான் தோப்பு வீட்ல போய் இருந்துக்கிறேன்" என்று விட்டு அவன் பின்னோக்கி ஒரு அடி எடுத்து வைக்க,

"வேலா "என்றார்கள் மற்ற மூவரும்.ஆனால், கொஞ்சம் கூட மனம் இறங்காத,வடிவுக்கரசி "தோப்பு வீட்ல இருந்தா,தினம் ஒவ்வொரு தோப்பா போயிட்டு வருவாளோ? உன் பொண்டாட்டி" என்க,

"போ..போதும் "என்று அவளை இறுக பற்றி இருந்த அவளது கையை உதறிவிட்டு, அங்கு கீழே உள்ள பொருளை காலால் எட்டி உதைத்தான். "அதிகமா பேசுற ஆத்தா, நீ தூக்கி வளர்த்த பிள்ளைன்றத மொத்தமா மறந்துட்ட,இம்புட்டு நாளும் இந்த வீட்டுக்கு சொந்தக்காரி இவ தானு சொல்லிட்டு திரிஞ்ச" என்று கண்களில் ரத்த நாளங்கள் ஓட, தன் பெற்றவர்களை முறைத்துவிட்டு, அவளுடன் படிகளில் கீழே இறங்க,

"மா..மாமு" என்றாள்.

" இப்போ உனக்கு என்னடி? வேணும் "என்றான் கோபமாக,

"அவனை மிரட்சியுடன் பார்த்தவள். நா தழுதழுக்க "நா...நா..நான் நான் வீட்டுக்கு போறேன், நீ வீட்டுக்குள்ள போ மாமு"என்க,

"எந்த வீட்டுக்கு போக போற, நான் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கு,இனி இதுதான் உனக்கும் வீடு, நீ தான் என் பொஞ்சாதி, நான் தான் உன் புருஷன், இந்த வீட்டை தாண்டி வேற எந்த வீட்டிலும் உனக்கு வேலை இல்லை, இருந்தா சேர்ந்து இருப்போம், இல்லையா வெளியே கிளம்புவோம்" என்று அவளிடமும் கத்திவிட்டு கீழே இருங்க,

"வேலா ஒரு நிமிஷம் நில்லு" என்றார் கந்தசாமி.

அவன் அப்பொழுதும் இறங்க, "மா..மாமு தாத்தா கூப்பிடுது"என்றாள் லேசான நடுக்கத்துடன்,

அவளை முறைப்புடன் பார்த்தவன்.அமைதியா நிற்க,

" வீட்டுக்குள்ள வாயா! எதுவா இருந்தாலும், பேசிக்கலாம்".

"அத தான நானும் இம்புட்டு நேரம் சொன்னேன்".

" சரிடா உள்ள வா.உனக்கு மட்டும் கோவமோ ,வருத்தமோ இருக்கும்.ஆன, நீ செஞ்ச செயலால உன் ஆத்தா ஒரு வார்த்தை கூட சொல்லக்கூடாது இல்லையா? என்றவுடன்,

அமைதியாக அவன் வீட்டுக்குள் நுழைய,வாய்க்குள் முனைவி கொண்டே தான் இத்தனை நாட்களாக தூக்கி வளர்த்த தன்னுடைய ஆசை பேத்தியை வாயில் மென்று கொண்டே ஓர் இடத்தில் சென்று அமைதியாக உட்கார்ந்தார் வடிவுக்கரசி.

"நாங்க சங்கீதாவை கூட்டிட்டு வீட்டுக்கு போறோம் மச்சான்" என்று விட்டு பாண்டியன் அருகில் வர,

"மாமா ஒரு நிமிஷம்.என் அக்கா புருஷனா உங்க மேல எனக்கு மரியாதையும், பாசமும் இருக்கு.ஆன,இப்போ அவ என் பொண்டாட்டி, உங்க பொண்ணு மட்டும் கிடையாது. இனி,அவ எங்கையும் வர மாட்டா, இங்க தான் இருப்பா" என்று சங்கீதாவின் இன்னொரு கையை பிடித்தவரின் கையின் மீது பார்வையை பதிக்க,

அவனது பார்வையில் மெதுவாக கையை கீழே விட்டவர்.அவனை அமைதியாக பார்க்க,

"மாமா அவ முழு பொறுப்பு, இனி நான் தான்.எனக்கு என் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்னு தெரியும்" என்று விட்டு அமைதியாகிவிட,

அவனை முறைத்த காமாட்சி,"ஏங்க வாங்க நம்ம போலாம். இனி யார் சொன்னாலும் எதுவும் கேட்க மாட்டான். அதான் யார் கெட்டா எனக்கு என்னன்னு இருக்கான், அவனுக்கு அவன் வாழ்க்கை தான் முக்கியம் போல, வேற யாரும் முக்கியம் இல்ல போல" என்று முறைத்து விட்டு தன் கணவனை பார்க்க,

"காமாட்சி அவன் பேசுறது உன் பிள்ளைக்காக,அவன் தூக்கி வளர்த்த பிள்ளைக்காக,அத மறந்துடாதா?"என்றார் கந்தசாமி.

"அவனுடைய வாழ்க்கையை தான் குழி தோண்டி புதைச்சிட்டாளே, அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கின்ற எண்ணம் கூட இல்லமா அவளுக்காக கூட பிறந்த என்னையும், பெத்த உங்களையும் எதிர்த்து நிக்கிறானே அய்யா" என்று கண்கள் கலங்க புலம்பி தவித்தார்.

"மாமு மாமுனு அவன் பின்னாடியே சுத்தினா, ஆனா இப்ப அவனோட வாழ்க்கையை மொத்தமா சிதச்சிட்டா, நாளைக்கு அவனுக்கு நிச்சயம் பேசி இருக்கோம் தெரியும் இல்ல, இப்படி ஊரார் முன்னாடி அவன் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிக்க இவ தான முழு காரணமும்"என்று சொல்லும் பொழுதே,

" அ...அக்கா" என்று வீடே அதிரும் அளவுக்கு கத்தியவன், "அவ எதுவும் பண்ணல இல்ல, நான் தான அவ கழுத்துல தாலி கட்டினேன்".

" அது தான்டா ஏன் கட்டின"என்று அவரும் வாய்க்கு வாய் வாதாட,

"அ..அக்கா" என்று அவர் அருகில் செல்ல,

"வேண்டாம்" என்று எதுவும் பேசாமல் தன்
பெற்றவர்களையும், மகளையும், உடன் பிறந்தவனையும் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு வேகமாக வெளியில் தன் கணவனுடன் சென்று விட்டார் காமாட்சி.
 
என்ன இப்படி பேசுறாங்க 😳 கீதா மேல கோபம் இருக்கலாம் நாலு அடி கூட அடிக்கலாம் ஏன் அங்க போனா ன்னு கேட்டு..... ஆனா இவங்க எல்லாம் அவளை ஊரார் மாதிரியே சந்தேகப்படுறாங்க தப்பா பேசுறாங்க அவங்க வீட்டு பொண்ணுன்னு நினைக்காம...... அதுவும் பெத்த அம்மாவும் 🙄
 
என்ன இப்படி பேசுறாங்க 😳 கீதா மேல கோபம் இருக்கலாம் நாலு அடி கூட அடிக்கலாம் ஏன் அங்க போனா ன்னு கேட்டு..... ஆனா இவங்க எல்லாம் அவளை ஊரார் மாதிரியே சந்தேகப்படுறாங்க தப்பா பேசுறாங்க அவங்க வீட்டு பொண்ணுன்னு நினைக்காம...... அதுவும் பெத்த அம்மாவும் 🙄
அதான் பாருங்களேன்
 
Top