வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம் 5

GG writers

Moderator
காமாட்சி தனது கணவனுடன் சென்றவுடன் ,தன் பெற்றவர்களை திரும்பி பார்த்தான் வேலன்.

அவனது அய்யா கந்தசாமி எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, ஆத்தா வடிவுக்கரசி முகத்தை திருப்பியவர் எதுவும் பேசாமல் சமையல் கட்டுக்குள் நுழைந்து கொண்டார்.

இறுதியாக, ஒரு மூலையில் கைகளை பிசைந்து கொண்டு கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த கீதாவின் அருகில் வந்தவன்." கீது "என்றழைக்க, அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டவள், அமைதியான முகத்துடன் அவனைப் பார்க்க,

"நீ ரூம்குள்ள போயிட்டு இரு. நான் வரேன்" என்க,

வேகமாக அவனது அருகில் வந்து அவனது கைகளை கெட்டியமாக பிடித்தவள். "இல்லை" என்பது போல் தலையாட்ட, அவள் இத்தனை நாட்களாக சுதந்திரமாக சுற்றித்திரிந்து உலா வந்த வீட்டில் இன்று தனியாக இருப்பதை நினைத்து பயந்திருப்பதை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் தன்னுடைய ரூமுக்குள் அவளை அழைத்துக் கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைக்க,

"மா..மா..மாமு" என்று திக்கி திணற, அவளது கையில் அழுத்தம் கொடுத்து தட்டிக் கொடுக்க,

" நா..நா..நான் வீட்டுக்கு போறேன் மா..மாமு,இங்க வேணாம்" என்று லேசான திணறலுடன் சொல்ல,

இதுவரை அவள் பார்க்காத முகத்தை பார்க்க நேரிட்டது. கோப விழிகளுடன் அவளை முறைத்தவன், அவளது கையை வேகமாக உதறி இருந்தான்.

அவனது முகத்தை பாவமாக பார்க்க, "உனக்கு அவ்வளவு தான் மரியாதை அமைதியா உட்காரு, இவ்வளவு நேரம் பேசினது அவங்களுக்கு மட்டும் இல்ல, உனக்கும் சேர்த்து தான் இவ்வளவும் பேசின பிறகு, நான் போறேன்னு சொல்ற,அப்போ என் பேச்சுக்கு என்ன டி மரியாதை, இப்போ என்னடி உனக்கு, உங்க அம்மா வீட்டுக்கு போகணுமா ?ஏன் இங்க இருக்க முடியாதா? என்ன பார்த்தா மனுஷன் மாதிரி தெரியலையோ? மிருகம் மாதிரி தெரியுதோ?"என்று எரிந்து விழுந்தான்.

இதுவரை தன்னிடம் அன்பும், அக்கறையும் நிறைந்த முகத்துடன் இருந்தவர் இன்று கோப முகத்துடன் இருப்பதை பார்த்தவள் கண்களை உருட்டி தன் பயத்தை வெளி காட்டியவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

அப்படியே மாலை பொழுது ஆகியது. அதுவரை யாரும் சாப்பிடவில்லை. அவளுக்கு பசி எடுக்க ஆரம்பிக்க, ஒரே இடத்தில் உட்கார முடியாமல், தனக்கு பசிக்கிறது என்பதையும் வெளியில் சொல்ல முடியாமல், அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்க,

சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்தவனுக்கு தெரியாதா? அவள் எப்போது எப்படி நடந்து கொள்வாள் என்று 'பசி தாங்க மாட்டாள்' என்பதையும் உணர்ந்தவன். "இங்கையே ஒரு பத்து நிமிஷம் இரு நான் வந்துடுறேன்" என்று விட்டு வெளியில் வர,

" மா..மா..மாமு" என்க,அவன் பார்த்த பார்வையில் அமைதியாகி விட்டாள்.

தன்னுடைய ரூமில் இருந்து வெளியில் வந்தவன் நேராக சமையல் அறைக்குள் நுழைய போக,

ஹாலில் உட்கார்ந்து இருந்த வடிவுக்கரசி "இங்க நான் ஒன்னும் சத்திரம் வச்சு நடத்தல, வரவங்க போறவங்களுக்கு எல்லாம் சாப்பாடு போட, உனக்கு வேணும்னா சாப்பாடு வடிச்சு வச்சு இருக்கேன், நீ கூப்பிட்டு வந்து வச்சிருக்கவங்களுக்கு எல்லாம் இங்க எதுவும் வடிச்சு வைக்கல, அவளுக்கு வடிச்சு போட நான் வேலைக்காரியும் இல்ல" என்று தான் தூக்கி வளர்த்த தன்னுடைய ஆசை பேத்தி என்பதையும் மறந்து ஈவு இரக்கம் இல்லாமல் பேச,

தன் ஆத்தாவை முறைப்புடன் பார்த்தவன்,"இப்போ அவளுக்கு உன்னால சாப்பாடு தர முடியுமா? முடியாதா?ஆத்தா"என்று லேசாக குரலை உயர்த்த,

அவரும் ஒரே வார்த்தையாக "முடியாது டா" என்றார்.

கந்தசாமியும் "வடிவு" என்க ,

"நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா?" என்று விட்டு தன் மகனின் புறம் திரும்பியவர், "உனக்கு மட்டும் வேணும்னா இருக்கு டா, உன்ன சாப்பிட வேணாம்னு நான் எதுவும் சொல்லல" என்று அமைதியாக,

"அவளுக்கு இல்லாத அப்போ எனக்கு மட்டும் எதுக்கு சாப்பாடு, நீங்களே ஆக்கி வச்சத கொட்டிக்கோங்க" என்றவன் எதுவும் பேசாமல் தனது சட்டை பாக்கெட்டில் உள்ள போனை துளாவி எடுத்து தனது நண்பன் மருதுக்கு அழைத்திருந்தான்.

அவனும் போன் எடுத்தவன், "சொல்லுடா மாப்பிள்ளை" என்க,

" இரண்டு சாப்பாடு பார்சல் வாங்கிட்டு வாடா "என்றான்.

தனது ஆத்தா போன் செய்து காலையிலிருந்து இங்கு நடந்து விஷயத்தை முழுமையாக சொன்னதால், தனது நண்பனுக்கு திடீரென திருமணம் நடைபெற்ற வரை அனைத்தையும் கேள்விப்பட்டவன், வீட்டில் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ என்ற யோசனையில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தவன் வேலனின் போனில் தெளிவு பெற்று போனை எடுத்து என்னடா என்று கேட்க,

சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டு வர சொல்லவும்,
ஒரு நிமிடம் அவனிடம் அமைதியே நீடித்தது,

"டேய்! மருது உன் கிட்ட தான் பேசுறேன் கேக்குதா?" என்று கேள்வி எழுப்ப,

யோசனையில் இருந்து மீண்ட மருது,எதுவும் பேசாமல் "சரி டா "என்று வைத்துவிட,

அடுத்த 20 நிமிடங்களில் தனது நண்பனின் வீட்டை அடைந்திருந்தான் மருது.

சாப்பாட்டு கவருடன் வீட்டிற்குள் நுழைய, அவனை முறைப்புடன் பார்த்தார் வடிவுக்கரசி.

மருது வீட்டுக்குள் நுழைந்தவன் எதுவும் பேசாமல் ஹாலில் நின்று கொண்டிருந்த வேலனிடம் சாப்பாட்டுக்கவரை நீட்ட,

"டேய்! மருது தண்ணி வேணும் சொல்ல மறந்துட்டேன்" என்றான்.

அவனுடைய தண்ணி வேணும் என்ற வார்த்தையில் சுற்றி தன் கண்களை சுழல விட்ட மருது, ஹாலில் ஒரு மூலையில் கோப முகத்துடன் உட்கார்ந்து இருந்த வடிவுக்கரசியை பார்த்தவுடன் 'ஏதோ சரியில்லை' என்று மட்டும் உணர்ந்து விட்டு, எதுவும் பேசாமல் பக்கத்தில் இருக்கும் தன் வீட்டிற்கு வேகமாக ஓடிச் சென்று இரண்டு வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி கொண்டு வந்தவன், கையோடு இரண்டு தட்டுகளையும் தூக்கிக் கொண்டு வந்தான்.

"ஏன்? டா இந்த வீட்ல எதுக்கும் வக்கில்லையோ ?"என்றார் வடிவுக்கரசி, ஒரு நிமிடம் நின்று தன் ஆத்தாவை முறைத்த வேலன். "எனக்கு மட்டும் எடுக்கறதுனா எடுத்துக்கலாம், நான் மட்டும் இருக்கறதுனா இருந்துக்கலாம், என் பொண்டாட்டிக்கு எதுவும் பண்ண கூடாதுன்னு சொன்னீங்க, அப்போ தட்டு மட்டும் எடுத்துக்க விட்ருவீங்களா? இல்ல, தண்ணி தான் எடுக்க விட்ருவீங்களா?" என்று முறைப்புடன் சொல்லிவிட்டு அவன் ரூமுக்குள் வேகமாக நுழைந்து கொண்டு கதவை அடைக்க,

ஹாலில் நின்று கொண்டிருந்த மருது அவரை பாவமாக பார்க்க, "ஆமான்டா அவன் பொண்டாட்டி இந்த வீட்டுக்குள்ள இல்லாம தான் இருக்கா பாரு,இந்த வீட்டுக்குள்ள இருக்க எதையும் தொடாமல் தான் இருக்க போறா பாரு" என்றார்.

"ஆத்தா உன் பேத்தி என்றத மறந்துடாத "என்றான் மருது.

இவ்வளவு நேரம், அமைதியை கடைப்பிடித்த வடிவு,மருதுவின் பேச்சில் கோபம் எழ," எவ அவ எடுபட்ட சிறுக்கி ,என் பேத்தியா?"என்று ஏதோ கூற வந்தவர் ,வேகமாக கதவை திறந்த, தனது மகனின் கோப விழிகளை கண்டவர், வாயை மூடிக்கொண்டார்.

அவரது செயலில் கந்தசாமி , மருது இருவருக்கும் தான் லேசான புன்னகை தோன்றி மறைந்தது அதரங்களில்,

இருவரையும் முறைத்தவர் "ஏன்? சிரிக்க மாட்டீங்க, என் பொழப்பே அப்படித்தான இருக்கு" என்று வாயைக் கோணித்து காண்பித்தவர்,

"ஏங்க இப்ப நீங்க சாப்பிட வரிங்களா ?இல்லையா? டேய் மருது நீ வா சாப்பிடலாம்"என்க,

"இல்ல ஆத்தா எனக்கு வேணாம்" என்று சொல்ல,

" ஏன் அம்புட்டையும் பண்ண அவனும், அவன் பொண்டாட்டியும் சாப்பிடலாம், நம்ப என்னத்துக்குடா பட்டினி கிடக்கணும், உங்க அய்யன் மாத்திரை போடணும் ,நானும் மாத்திரை போடணும் நீ ஏன் பட்டினி கிடக்கவ வா வந்து பேசாம உட்காரு " என்றார்.

இருவருக்கும் பரிமாறி விட்டு அவரும் உட்கார,சாப்பாட்டை வாய் அருகே கொண்டு சென்றவருக்கோ கண்கள் கலங்கியது, "வடிவு "என்று அவரது கையை பிடித்து கந்தசாமி அழுத்தம் கொடுக்க,

"ஒன்னும் இல்லங்க, காமாட்சி சாப்பிட்டாளா? இல்லையானு தெரியல" என்க,

" மாப்பிள்ளை பார்த்து பாரு வடிவு"என்றார்.

எதுவும் பேசாமல் அமைதியானவர்,மருதுவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க,

"நீ சங்கீதாவை எதுவும் வார்த்தையை விடாத ஆத்தா,சின்ன புள்ள, நம்ம வீட்டையே சுத்தி சுத்தி வந்த புள்ள அது பண்ணது சரியா ?தப்பா?இல்ல, வேலன் பண்ணது சரியா? தப்பானு நான் இங்க பேசல, ஆனா, நீ வார்த்தையை விட்டுட்டா பின்னாடி நீ தான் ஆத்தா உக்காந்து அழுவனும், நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல" என்று கண்கள் கலங்க கூறியவன், எதுவும் பேசாமல் எழுந்து,"நான் போயிட்டு அக்காவை என்னன்னு பாக்குறேன், நீ வெசன பாடாதா" என்று விட்டு காமாட்சி வீட்டை நோக்கி சென்றான்.

காமாட்சி கைகளை தலைக்கு கொடுத்து அழுது வடிந்த, வீங்கிய முகத்துடன் உட்கார்ந்து இருக்க,"அக்கா" என்ற அழைப்புடனே வீட்டிற்குள் நுழைய,

"வாடா மருது வேலன் பண்ணி வச்சிருக்க கூத்த பாத்தியா? என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான் பாத்தியா? நாளைக்கு நிச்சயத்த வச்சுகிட்டு, இன்னக்கி அந்த சிறுக்கி கழுத்துல தாலி கட்டிப்புட்டானே என்னடா இது, இப்ப நான் அவங்க வீட்டுக்கு என்னடா பதில் சொல்லுவேன், என் தம்பியோட வாழ்க்கை போச்சே டா ,மொத்தமா போச்சே டா"என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ,

வேகமாக அவரது கையை தட்டி விட்ட பாண்டியன்" காமாட்சி என்ன பண்ணிட்டு இருக்க",

" உங்களுக்கு என்ன வந்துச்சு, என் வூட்டு குலதெய்வத்தோட வாழ்க்கை தான் மொத்தமா போச்சே "என்று ஆதங்கமாக தனது கணவனை பார்க்க,

மருது பாண்டியனை திரும்பி பார்த்து, "மாமா நீங்க போயிட்டு தண்ணியும் ,சாப்பாடும் எடுத்துட்டு வாங்க",

"இப்ப அது ஒன்னு தான் கேடா"என்றார் கோபமாக காமாட்சி.

பாண்டியன் எதுவும் பேசாமல், தட்டில் சாதத்தை போட்டு எடுத்துக் கொண்டு வந்தவர், மருதுவை பார்க்க,

" மாமா உங்களுக்கும் சேர்த்து போட்டு எடுத்துட்டு வாங்க, நீங்களும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்" என்றான்.

" இ..இல்லப்பா அ..அது" என்க,

அவன் அமைதியாக பார்க்க, அவர் தனக்கும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்து உட்கார,

"அக்கா இங்க பாரு வேலன் செஞ்சது தப்புதான் சரியா? எதா இருந்தாலும் பொறுமையா முடிவெடுப்போம், எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் செய்ய முடியாது ,அவன் பண்ண மாதிரி யோசிக்காம நாமும் எதையும் செஞ்சுற முடியாது, ஆத்தா போன் பண்ணி சொல்லுச்சு, நான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கும்போது தான்,அவன் போன் பண்ணி சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னான் "என்று விவரத்தை சொல்ல,

அவனை முறைத்தவர்," அந்த சிறுக்கிக்கு சாப்பாடு ஒன்னு தான் கேடா, அவளுக்கு என்னடா ?அங்க வேலை, அந்த தோப்புல என்ன வேலை சொல்லு"என்று ஆதங்கமாக கத்த,

"அக்கா மொத இருந்து ஆரம்பிக்காத, அவன் கோபத்தை நீயே அதிகப்படுத்தி விடாதா, ஊர்ல இருக்கவங்க ஆயிரம் பேசட்டும், நம்ம புள்ளைய பத்தி நமக்கு தெரியும் அக்கா, அதுக்காக நீயும் ஆத்தாவும் நம்ப சங்கீதாவா என்ன வேணாலும் பேசுவீங்களா? நீ பெத்த புள்ளனு கூட இல்லாம என்னா பேச்சு பேசி இருக்க, ஆத்தாவும் தூக்கி வளர்த்த புள்ள என்பதை மறந்துடுச்சு இல்லையா? அவளை பத்தி உங்க ரெண்டு பேருக்கும் தெரியாத என்ன? சின்ன புள்ள ஓடியாடி விளையாண்ட புள்ள கா".

"அதுக்கு தாண்டா தல பாடா அடிச்சிக்கிட்டேன் வீட்டை விட்டு எங்கேயும் போகாதடி போகாதடின்னு",

"அக்கா முடிஞ்சி போனத பேசி இனி ஒன்னும் ஆக போறது இல்ல",

"இப்போ,என் தம்பி வாழ்க்கை இல்லடா போச்சு" என்று ஆதங்க பட்டார் .

"அவன் வாழ்க்கை, எங்கையும் போகல அக்கா,இனி நல்லாவே இருப்பான்"

"எப்படி டா அவ கூடவா?"

" அக்கா ப்ளீஸ் மொத இருந்து ஆரம்பிக்காத,அவன் தாலி கட்டிட்டான், முடிஞ்சிருச்சு, இனிமே அதை பேசி ஒண்ணுமே ஆக போறது கிடையாது, இத எப்படி சரி பண்ணலாம்னு மட்டும் இப்போ பாப்போம், அதை விட்டுட்டு இப்படி ஒரு மூலையில அடஞ்சி உட்கார்ந்து இருப்பதால ஒன்னும் நடக்க போறது இல்ல, கொஞ்சம் நிதானமா யோசி, அவ்வளவு தான் சொல்லுவேன்" என்று அவரது கையில் தட்டை கொடுத்தவன், "அமைதியா சாப்பிடு, நீ சாப்பிடாம இருந்து உன் உடம்பை கெடுத்து கிட்டா மட்டும் இங்க எல்லாம் சரியாகிட போகுதா என்ன?" என்று இன்னும் என்ன என்னவோ பேசி அவரை சரிகட்டி அவர் சாப்பிட்டு முடியும் வரை அங்கிருந்து விட்டு எழுந்தான்.

"டேய் அவன் சாப்பிட்டானா? இல்லையா?" என்க ,

"தெரியல கா வாங்கி கொடுத்தேன். போய் தான் பாக்கணும்".

"சரி கா"என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் பாண்டியன் இடம் அக்காவை பார்த்துக் கொள்ளுமாறு கண்காட்டி விட்டு தனது நண்பனின் வீட்டை நோக்கி சென்றான் மருது.
 
வீட்டுக்குள்ளயே தனிக்குடித்தனமா 🤨🤨🤨
வடிவு ரொம்ப பேசுறாங்க 🤫🤫🤫

காமாட்சி ரொம்ப நியாயவாதி தான் நீங்க....😏. உங்க தம்பிக்கு நிச்சயம் பண்ணப் போற பொண்ணை பத்தி கவலைப்படுறீங்க சரி தான்..... அவசரப்பட்டு தாலி கட்டின தம்பி வாழ்க்கைக்காக வருத்தப்படுறிங்க.... ஆனா உங்க பொண்ணை பத்தி யோசிக்க மாட்டேங்குறீங்க..... என்ன நடந்ததுன்னு கேட்கவே இல்ல யாரும்..... 😤
 
Top