வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம் 6

GG writers

Moderator
மருது வேலனின் வீட்டை சென்று அடையும் நேரம் சங்கீதாவும், வேலனும் அவர்களது ரூமில் இருக்க,

அவன் வீட்டிற்குள் நுழையும் போதே, வடிவு அவனை கேள்வியாக பார்க்க,"அக்காவை சாப்பிட வச்சுட்டேன் மா. இருங்க வரேன் "என்று வேலனின் ரூமுக்குள் நுழைய,

கதவு லேசாக தான் சாத்தியிருந்தது, அவனுக்கு தட்டி விட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தோன்றவும் இல்லை, தன் நண்பன் சாப்பிட்டானா ?இல்லையா? என்ற எண்ணத்தில் எப்போதும் போல ரூமுக்குள் நுழைய, அங்கு சங்கீதா அவனிடம் கெஞ்சி கூத்தாடி அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.

அதைப் பார்த்தவுடன் மருதுவிற்கு லேசாக கண்கள் கலங்க," மாப்ள "என்று அவனது தோளில் கை வைக்க,

சங்கீதா தான் "என்னால தான எல்லாம் இப்படி இருக்காங்க மா...மா..மாமா அ..அம்மா சாப்பிட்டாங்களா ?"என்றாள் திக்கி திணறி, அவளுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தவன்.

"நீ சாப்பிடு "என்றான்.

"அ..அம்மாயி?" என்றாள்.

"இரண்டு பேருமே சாப்டாங்க, நீங்க சாப்பிடுங்க"என்று விட்டு நகர,

" மா..மாமா நீங்க சாப்டீங்களா? இல்லையா?".

"நானும் சாப்பிட்டேன். நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு வாங்க" என்று விட்டு வெளியில் வந்தான்.

சிறிது நேரத்தில் பிறகு, "சரி கொஞ்ச நேரம் தூங்கு கீது கொஞ்சம் வெளிய வேலை இருக்கு" என்றான் வேலன்.

" மா..மாமு இ..இல்ல அ..அது நா..நான்" என்று விட்டு வேறு எதுவும் பேச முடியாமல் தயங்கி நிறுத்த,

"இப்படியே எப்படி இருப்ப, உன் டிரஸ் எப்படி இருக்கு, வேற டிரஸ் மாத்தணும் இல்ல, டிரஸ் வாங்கிட்டு வரேன். இங்க இருந்து எடுத்தா அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க" என்றான்.

அவளுக்குமே டிரஸ் மாற்ற வேண்டும் தான்.ஆனால், இப்பொழுது தன்னை இங்கு தனியாக விட்டுவிட்டு செல்வது ஏதோ போல் இருக்க, "நானும் உன் கூடவே வரேன் மாமு" என்றாள்.

"நீ இந்த நேரத்துல வேணாம்" என்க,

"வரட்டும்.இங்க தனியா இருக்க பயப்படுது போல" என்றான் மருது.

" சரி இப்படியே வா" என்று யோசித்தவன். ஒரு நொடி பொழுதில் பக்கத்தில் இருக்கும் ரூமுக்குள் நுழைந்து ஒரு கவர் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் நீட்ட,

"என்ன மாமு"என்றாள்.

"இத புடி போட்டுக்கோ ,நான் வெளியே இருக்கேன்" என்று சொல்ல,

அவளுக்கு அந்த துணியை பார்த்தவுடன் கண்கள் கலங்கியது.

அதை கவரில் இருந்து எடுத்தவள். அழுகையுடன் அவனைப் பார்க்க,

"ஒன்னும் இல்ல கீது போட்டு வா" என்க,

"மா...மா...மாமு இ..இது நீ நாளைக்கு உன்னோட நிச்சயத்துக்கு எனக்காக ஆசையா எடுத்து கொடுத்த தாவணி பாவாடை மா..மாமு" என்றாள் கேவலுடன்,

ஹாலில் இருந்த வடிவுக்கு மனம் ஆறாமல்," ஆமா அவனோட நிச்சயத்துக்குன்னு சொல்லி, எனக்கு இது தான் வேணும்னு ஓடி ஓடி போயி வாங்குனவ, இப்போ மொத்தமா இல்ல வேற எவளும் சொந்தம் கொண்டாட முடியாம வந்து உட்கார்ந்து இருக்கவ "என்று குத்தம் சொல்ல,

திரும்பி தன் தாயை ஒரு பார்வை பார்த்தவன். எதுவும் பேசவில்லை. ஆனால், இங்கே சங்கீதாவிற்கு தான் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது..

"கீது இதை போட்டுக்கோ, நேரமாகுது இப்பவே" என்றான். வேறு எதுவும் பேசாமல், அவளும் மாற்றிக் கொண்டு வர,

மூவரும் சென்று ஒரு சில பொருட்கள், அவளுக்கு தேவையானது, வாங்கிக் கொண்டு இரவு உணவையும் வெளியவே முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய,

கரெக்டாக அவர்கள் வீட்டிற்கு வந்து ஒரு ஐந்து நிமிடமே இருக்கும். கீதா ரூமுக்குள் நுழைந்தவுடன் "பாவாடை தாவணியோடு எவ்வளவு நேரம் இருப்ப சுடிதார் மாத்திக்கோ வாங்கிட்டு வந்ததில் "என்று விட்டு வேலன் வெளியில் வரவும்... சங்கீதாவின் அக்கா சங்கவி வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

இரவு 9 மணி இருக்கும் அப்பொழுதுதான் காலேஜ் முடிந்தவுடன் பஸ் பிடித்தவள் இப்பொழுதுதான் ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

"மாமா" என்று வீடே அதிரும் அளவிற்கு குரல் கொடுக்க,

" என்ன கவி வரும்போதே,எதுக்கு இவ்வளவு சத்தம்" என்றான்.

"நீ பண்ணி வச்சிருக்க காரியத்துக்கு சத்தம் போடாம வேற என்ன பண்ண சொல்ற ?"என்று கவி அவனைப் பார்க்க,

"கவி"என்று அழைத்து கொண்டே வடிவு அவளது அருகில் வர,

அவரை பார்வையாலே எட்டி நிறுத்தியவள்.

"என்ன காரியம் மாமா பண்ணி வச்சிருக்க, இந்த நேரத்துல நான் வரதுக்கு என் மாமா என்ன கூப்பிட வந்திருப்பார் என்ற ஆசையில வந்து நான் டவுன் பஸ் ஸ்டாண்ட்ல இறங்கினேன். ஆனா அங்க இறங்கின பிறகு தானே, என்ன விஷயம்னு எனக்கு தெரிய வருது, எதுவும் நடந்தா கூட யாரும் எனக்கு போன் பண்ணி கூட சொல்ல மாட்டீங்க இல்லையா?"என்று குரல் கம்ம கேள்வி கேட்க,

"க..கவி அ..அது" என்று அவன் அவளது அருகில் வர,

"ஒன்னும் வேணாம்.பஸ்ட் யாரை கேட்டு மாமா நீ கீதா கழுத்துல தாலி கட்டின, எந்த உரிமையில் கட்டின",

"கவி "என்றான் வேகமாக மருது,

"நான் என்னோட மாமா கிட்ட பேசிட்டு இருக்கேன்.வேற யார்கிட்டயும் பேசல "என்க,

"கவி என்ன பேச்சு இது" என்றான் அதட்டலாக வேலன் .

"எனக்கும் மரியாதை கொடுக்க சொல்லி, எங்க அப்பா, அம்மா, அம்மாயி, தாத்தா, என் மாமா எல்லாம் சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்காங்க மாமா. ஆனா, நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் வேற யாரும் குறுக்க வராம இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன். அப்புறம் மரியாத இல்லாம பேசிட்டேன்னு சொல்ல வேணாம்" என்று ஒரு பார்வை மருதுவை பார்த்து சொல்லி விட்டு வேலனிடம் பேச ஆரம்பித்தாள்.

"உங்க வயசு என்ன?அவ வயசு என்ன மாமா?சூழ்நிலையை மட்டும் காரணம் சொல்லாத மாமா. எந்த சூழ்நிலையா கூட இருக்கட்டும், அந்த சூழ்நிலையில் அங்க என்ன நடந்துச்சுனு நீங்க அவ கிட்ட கேட்டு இருக்கணும். தப்பு முழுக்க உன் மேல, அவ அங்க போனது தப்புதான், இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா, அவ கிட்ட கேட்காமலே அவ கழுத்துல தாலி கட்டுனது நீ. ஆனா, இப்போ மொத்த பேச்சும் வாங்கிட்டு இருக்கிறது என்னவோ அவ,என்னவோ அவ உன்ன தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நின்ன மாதிரியும்,நீ வேண்டாம்னு சொல்லி விருப்பம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டுன மாதிரியும் இல்ல இங்க எல்லாம் நடந்துட்டு இருக்கு,என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? எனக்கு ஒன்னும் புரியல, வாழ வேண்டியவ மாமா அவ,மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டா வெளியே போய்,அவளை நீங்க வெளியே அனுப்பி படிக்க வைக்கலனா கூட பரவால்ல, அவ வாழ்க்கையை மொத்தமாக சிதைக்காதீங்க" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வீட்டிற்குள் வேகமாக நுழைந்தார்கள் பாண்டியனும் ,காமாட்சியும்,

"இங்க என்னடி உனக்கு வேலை"என்று காமாட்சி கேட்க,

"ஏன்? எப்பவும் வந்தா இங்க தான முதல்ல வருவேன். என்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்து இருக்கேன். இப்ப மட்டும் என்ன?. உன்னால கூட ஒரு போன் பண்ணி சொல்ல முடியலல"என்று தன் அன்னையை ஆதங்கமாக பார்க்க,

"இ..இல்லடி அ..து".

" வேணாம் மா உனக்கு உன் தம்பியும்,தம்பியோட வாழ்க்கை மட்டும் தான் முக்கியமாக தெரியுது இல்ல. நீ பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளையோட வாழ்க்கையை பத்தின கவலை இல்லல,அவ வாழ்க்கை பாழாகி இருக்கிறது கொஞ்சம் கூட உன் கண்ணுக்கு தெரியல இல்லையா? இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் நீ புலம்பினது எல்லாம் உன் தம்பிக்கு நாளைக்கு நிச்சயத்தை வச்சுட்டு இப்படி ஆகி போச்சேனு தான்.தாலி கட்டினது அவரு மா.என் தங்கச்சி வந்து காலிகட்டுங்க தாலி கட்டுங்கன்னு போய் நிக்கல இல்ல. ஆனா, கொஞ்சம் கூட உனக்கும், உன் அம்மாவுக்கும் மனசாட்சியே இல்லல. எல்லா தப்பும் என் தங்கச்சி மேல தான் இருக்குன்னு பேசி இருக்கீங்க இல்லையா?"..

" உனக்கு யாரு இதெல்லாம் சொன்னா"என்று காமாட்சி கேட்க,

"போதும் நிறுத்து! எனக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் டவுன் பஸ் ஸ்டாண்ட்ல எப்படியும் என்னை கூப்பிட மாமா வரும்னு நின்னுட்டு இருந்தேன். அங்க தான் நம்ம பக்கத்து தெரு வசந்தி அக்கா சொன்னாங்க. அவங்க சொன்னதுக்கு அப்புறமா ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு விதமா பேசும்போது தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீயும், உங்க அம்மாவும் கூட என் தங்கச்சியை என்ன என்ன பேச்சு பேசி இருக்கீங்கன்னு, முழு தப்பும் என் தங்கச்சி மேல மட்டும் தான் போட்டு இருக்கீங்க இப்போ வரை.அவ அந்த தோப்புக்கு போனது தப்பு தான்.ஆனா, அங்க வச்சி என்ன நடந்துச்சுனு உன் தம்பி கேட்டிருக்கலாம்.இல்லையா?அங்க வச்சு கேட்க முடியலையா? வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கேட்டிருக்கலாம்.ஆனா,அதுக்காக அவ கழுத்துல தாலி கட்டணும்னு எந்த அவசியமுமே இல்லையே?அவர் என்னன்னா அவளோட விருப்பம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டி வீட்டுக்கு கூப்பிட்டு வருவாரு, உங்க அம்மா என்னன்னா அவளை இந்த வீட்டுக்குள்ள விட மாட்டேன்னு சொல்வாங்க இல்லையா? நீயும் அவளை நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்ட இல்லையா? நல்லா பண்றீங்க குடும்பத்தோட,நீயும் ,உங்க அம்மாவும், உன் தம்பியும், ஆனா,இதுல முழுசா மாட்டிட்டு முழிக்கிறது என்னவோ என் தங்கச்சி.அவளை ஏன் ?குத்தம் சொல்ல மாட்டீங்க,உங்க பின்னாடியே உங்க காலையே சுத்தி சுத்தி வந்ததுக்கு நல்ல தண்டனை குடுத்து வச்சு இருக்கீங்க குடும்பத்தோட"என்று கண்களில் கண்ணீருடன் சொல்ல,

"கவி நீ அதிகமா பேசிட்டு போற" என்றான் மருது.

" நான் ஒரு டைம் தான் சொல்லுவேன். நான் என் மாமா கிட்ட பேசிட்டு இருக்கேன். இப்போ, எங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்கேன். இதுக்கு மேல பேசினா தப்பாயிடும்" என்று விட்டு அமைதியாக,

பாண்டியன் தான் அவளது அருகில் வந்தவர் "கவி என்ன பேச்சு இது மருது கிட்ட"என்றார்.

"உங்க கிட்ட நான் பேசல ப்பா" என்றவுடன் அவரும் அமைதியாகி விட்டார்.

சத்தம் கேட்டு வேகமாக துணியை மாற்றிக் கொண்டு வெளியில் வந்த சங்கீதா. "க...க...கவி" என்ற கேவலுடனே வேகமாக ஓடி வந்து அவளை கட்டிக்கொள்ள,

அவளது தலையை ஆதுரமாக தடவியவள். தோளோடு அணைத்துக் கொண்டு "உன்னை யாரு டி அந்த தோப்புக்கு போக சொன்னா.இவர் தாலி கட்டுற வரைக்கும் எதுக்கு அமைதியா இருந்த" என்று கேட்க,

அவளிடம் இருந்து பதிலாக அழுகை மட்டுமே வந்ததே தவிர,அவளுக்கு நா எழவில்லை, .

அனைவரையும் அமைதியாக பார்த்த கவி"யாரும் அவ்வளவு கஷ்டப்பட்டு என் தங்கச்சியை இந்த வீட்டுக்குள்ள வச்சுக்க வேண்டிய அவசியமில்லை" என்று வடிவை பார்த்து சொல்லியவள்.

"அப்பா கீதாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்" என்க,

"யாரை கேட்டு நீ! என் பொண்டாட்டியை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போற கவி"என்றான் வேலன் கோவமாக,

"இன்னும் அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிற வயசு கூட வரல, இப்ப போய் கேஸ் கொடுத்தா கூட செல்லுபடியாகும்.உங்கள தான் தூக்கி உள்ள வைப்பாங்க" என்று தன் தாய் மாமனாகிய முத்துவேலனை பார்த்து விரல் நீட்டி எச்சரித்தவள்.

தன் தங்கையின் கையை கெட்டியமாக பிடித்துக் கொண்டு, "வா நம்ப வீட்டுக்கு போலாம் கீதா"என்க,

அவளோ "இல்லை" என்பது போல் மண்டையை மட்டும் ஆட்ட,

"என்னடி" என்றாள் அதட்டாலாக,தன் தங்கை இனியும் இங்கு இருந்து பேச்சு வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில்,

"கவி நீ மேல மேல தப்பு பண்ணிட்டு போற"என்றான் மருது.

"நானும் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க முடியாது. இந்த விஷயத்துல நீங்க அடிக்கடி குறுக்க வராதீங்கன்னு" என்று அவள் சொல்லி கொண்டு இருக்க, வேலனின் முழு பார்வையும் சங்கீதாவின் மீது இருக்க. ஆனால், அவளோ தன் அக்காவிடமே இன்னும் இன்னும் ஒட்டி கொண்டிருந்தாள்.

அவளது கையை கெட்டியாக பிடித்த கவி "அப்பா இவளை நம்ம வீட்டுக்குள்ள சேர்த்துப்பீங்களா? இல்ல எப்படி நீங்களும் சேர்த்துக்க மாட்டீங்களா?"என்றாள்.

அவரோ "நான் மதியமே கூப்பிட்டேன் கவி" என்று விட்டு அமைதியாகி விட,

"அவ்வளவுதான். என் தங்கச்சியை நான் கூப்பிட்டு போறேன். நீங்க உங்க குடும்பத்தையும், உங்க வாழ்க்கையையும் பாத்துக்கலாம். என் தங்கச்சி எப்பவும் உங்க தனிப்பட்ட வாழ்க்கையில குறுக்க வரமாட்டா"என்று வேலனை பார்த்து சொல்லி விட்டு "தன் தங்கையின் கையை தரதரவென பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல,

'போக வேண்டாம்' என்று வேலன் சொல்ல மாட்டானா? என்று சங்கீதாவும்,' நான் வரல. இங்கே தான் இருப்பேன் மாமு கூட 'என்று கீதா சொல்ல மாட்டாளா? என்று வேலனும் எண்ணி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இருவரும் அவன் சொல்ல மாட்டானா? அவள் சொல்ல மாட்டாளா? என்று காத்துக் கொண்டிருந்தார்களே தவிர, தங்களுக்கு தேவையானதை தாங்கள் தான் கேட்க வேண்டும் என்பதை மறந்து அமைதியாக இருக்க, இங்கு கவி ஒரு முடிவு எடுத்தவளாக தன் தங்கையை தன் கையோடு பிறந்த வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

போகும் வழியெங்கும் யாரும் எதுவும் பேசவில்லை.கீதா இங்கே இருக்கட்டும் என்றோ,கூட்டிட்டு போக வேண்டாம் என்றோ யாரும் சொல்லவும் இல்லை.தடுக்கவும்.

யாரும் எதுவும் பேசாத காரணத்தினால் கவியுடன் தன் பிறந்த வீட்டிற்கு நெஞ்சம் முழுவதும் வலியுடன் வேலனை ஏக்கமாக பார்த்து கொண்டே சென்றாள் சங்கீதா.
 
கவி சூப்பர் 🥰🥰🥰🥰 எல்லாரையும் நல்லா கேட்டா 👏

மருது தான் கவிக்கு pair ஆ 🤔
 
Top