GG writers
Moderator
சங்கவி சங்கீதாவை அழைத்துக் கொண்டு சென்றவுடன், வீட்டிற்கு சென்று முதல் வேலையாக சங்கவி தன் அம்மாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாள்.
"உன் தம்பி உனக்கு முக்கியம் தான்.நான் வேணாம்னு சொல்லல, அதுக்காக பெத்த மக எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று நினைப்பியா?" என்க,
அவர் பேச வருகையில்,"எதுவும் பேச வேண்டாம் காலையில இருந்து நீயும் ,உங்க அம்மாவும், இந்த ஊர்ல இருக்கவங்களும் பேசின வரைக்கும் போதும், இனியும் பேசி யாரையும் சாகடிக்க வேணாம்" என்றவள்.
மேற்கொண்டு,எதுவும் பேசாமல்,"எதுவும் ஆக்கி வச்சி இருக்கியா? இல்ல எப்படி?" என்றாள்.
அவர் "இருக்கு கவி" என்க,
"வாடி சாப்பிட" என்று கீதாவின் கையைப் பிடிக்க,
" நான் சாப்பிட்டேன். வெளியே மாமு கூட தான் சாப்பிட்டு வந்தேன்"என்றாள்.
காமாட்சி அவளை முறைத்து விட்டு,"இதுக்கு ஒன்னும் கேடு இல்லை"என்க,
"அம்மா போதும்!" என்று விட்டு எதுவும் பேசாமல் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து தனக்கு சாப்பாடு அள்ளி போட்டு சாப்பிட்டு விட்டு தன் தங்கையை அழைத்துக்கொண்டு ரூமுக்குள் நுழைய,
"கவி" என்றார் காமாட்சி.
"மணி இப்பவே 11.இதுக்கு மேலையும் யார்கிட்டயும் கத்துற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல" என்று விட்டு கதவை அடைத்து விட்டாள்.
இங்கு சங்கவியுடன் சங்கீதா சென்றவுடன் மருது தான் "மாப்ள" என்று வேலனின் தோளில் கை வைக்க,
"டேய்! மருது நேரம் ஆகுது நீ வீட்டுக்கு கிளம்பு. ஆத்தா தேடும் பாரு" என்றான் தன்னை சரி செய்து கொண்டு,
"இ...இல்லடா அ..அது".
"ஒன்னும் இல்லடா போ" என்று விட்டு தன் அய்யாவை பார்த்தவன் "அய்யா நேரமாகுது நீங்க போய் படுங்க" என்றான்.
" வேலா"என்றார்.
"ஒன்னும் இல்ல.போங்க போய் படுங்க"என்று விட்டு தனது ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
அவனுக்கு தூக்கம் தான் எட்டாக்கனியாக இருந்தது.அவள் கவியுடன் செல்லும்பொழுது அவளது கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றவுடன் அவனுக்கு இன்னும் இன்னும் சங்கீதாவின் மீது தான் கோபம் எகிறியது.
' உன் அக்கா கூப்பிட்டா எதுவும் பேசாம, சொல்லாம கொள்ளாம போயிடுவியாடி. அவ்வளவு தானா?" என்ற எண்ணம் மட்டுமே அவனது மனதிற்குள் இருந்தது.
இங்கே கவி தன் தங்கையை என்ன என்னவோ சொல்லி தூங்க வைக்க முயன்றாள்.ஆனால்,அவளுக்கு தூக்கம் ஒரு பொட்டு கூட வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் .'அவ்வளவு தான மாமு, உனக்கு நான்.சங்கவி கூப்பிடுறா அமைதியா எதுவுமே பேசாம,என்ன போகாதன்னு கூட சொல்லாம அமைதியா நிக்குற!' என்று யோசனையிலையே விடிய விடிய புலம்பி கொண்டு இருந்தாள். தன்னையும் மீறி அவளது கண்கள் கலங்கியது.
இரவு முழுவதும் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் அவனது நினைவில் வாடினாள். கவியோ காலேஜ் முடிந்து வந்த அலைச்சலிலும், வீட்டில் நடந்த பிரச்சனையிலும் அசந்து தூங்கிவிட்டாள்.
காலை பொழுது யாருக்கும் காத்திராமல் நன்றாக புலர்ந்தது.வேலன் காலையில் எழுந்த உடனே குளித்து முடித்து வேறொரு உடை அணிந்து கொண்டு வெளியில் வர,
வடிவு தான் "டீ குடிக்கிறியா வேலா ?"என்றார். தன் தாயை அமைதியாக பார்த்தவன்.சுற்றி கண்களை சுழல விட, "இன்னும் "அய்யா எழுந்திரிக்களா வேலா" என்றார்.அவன் எதுவும் பேசாமல் வெளியில் செல்ல,
" கோவமா ஆத்தா மேல"என்றார் கண்கள் கலங்க குரல் கம்ம,
ஒரு நிமிடம் நின்றவன். வேறு எதுவும் அவரிடம் பேசாமல் ஹாலில் சென்று அமர்ந்தான். சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவன். அவர் டீ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, "எனக்கு எதுவும் வேணாம்" என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் எழுந்து செல்ல,
தனது மகனின் குணம் அறியாதவரா ?தான் நேற்று பேசிய பேச்சாலே வேண்டாம் என்கிறான் என்பதை உணர்ந்தவர்.
"ஏய்யா!ஒரு வாய் காப்பி தண்ணி மட்டும் குடிச்சிட்டு போயா!" என்றார்.
எதுவும் பேசாமல் அமைதியாக வெளியில் சென்று அருகில் உள்ள தனது நண்பன் மருதுவை அழைத்துக் கொண்டு செல்ல,
அப்பொழுதுதான் எழுந்து வந்தார் கந்தசாமி.தனது மனைவியின் அருகில் வந்து தோலை தொட்டவர்."நீ நேத்து பேசின கோவத்துல இருப்பான் வடிவு. கொஞ்சம் விட்டு பிடிப்போமே! அமைதியா தான் இரு" என்க,
வடிவு எதுவும் பேசவில்லை. தன் கண்களில் வழிந்த கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்தவர் அமைதியாக,
மருதுவும்,முத்துவேலனும் சென்று நின்ற இடம் அவனுக்காக இன்று நிச்சயம் செய்ய இருந்த பெண்ணின் வீட்டிற்கு தான்.
இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே,வேலனின் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தான் வேலனுக்கு பார்த்திருந்த பெண் பார்வதியின் அத்தை மகன் குணா.
பின்னாடியே வந்து பார்வதியின் அண்ணன் அவனை அடிக்க கை ஓங்கி கொண்டு வர ,
வேலனின் மீது இருந்த குணாவின் கையை எடுத்து விட முயற்சி செய்து கொண்டு இருந்தான் மருது.
அப்போது வேகமாக ஓடி வந்த பார்வதியின் அப்பா தனது மகனின் ஓங்கிய கையை பிடித்துக் கொண்டார். "என்னையா பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்" என்றார் பார்வதியின் அப்பா மாணிக்கம்.
" பின்ன! என்ன மாமா பண்ண சொல்றீங்க? நம்ம வீட்டு புள்ளையை இன்னைக்கு நிச்சயம் பண்றேன்னு சொல்லிட்டு, நேத்து என்னவோ அவங்க அக்கா மக கழுத்துல ஊருக்கு முன்னாடி வச்சு தாலி கட்டியிருக்காரு, நேத்தே வகுந்தெடுத்து இருப்பேன் வகுந்து,நீங்க சொன்ன ஒரே வார்த்தைக்காக தான் அமைதியா இருக்கேன்".
"இப்பயும் அதானே சொல்றேன். அமைதியா இரு, உன் மாமா பேச்சுக்கு மரியாதை தருவியா? மாட்டியா ?"என்றார்.
"இல்ல மாமா! அது, நம் வீட்டு புள்ளையை ",
"இரு ய்யா அவரும் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செஞ்சிட மாட்டாங்க,நாங்க பார்த்த மாப்பிள்ளை என்பதற்க்காகவோ, இல்ல,அவரு செஞ்சது தப்புன்றதுக்காகவோ மொத்தமாக அவரையே தப்பு சொல்லிட முடியாது இல்ல. நல்ல குடும்பம்,அவரோட குண நலன்கள், பழக்க வழக்கம் எல்லாத்தையும் மனசுல வச்சு தான நம்ப வீட்டு புள்ளைக்கு மாப்பிள்ளையா பேசி முடிச்சோம்.பெரியவங்களுக்கு மதிப்பு ,மரியாதை கொடுக்க தெரிஞ்சவரு, குடும்பமும் ஊரே மதிக்க கூடிய வகையில் கொஞ்சம் பெரிய இடம் தான்"என்றார்.
"என்ன! மாமா இப்படி சொல்றீங்க? என்ன பெரிய இடம் சொத்து? பத்தா?" என்று குணா எகுற,
"சொத்து பத்துக்கு யாரு யா இங்க சொல்லுறாங்க, ஊரே மதிக்கிற,கை எடுத்து கும்பிடுற அளவுக்கு நல்லவங்க குணா.அவங்க அய்யா தான் அந்த ஊருக்கு எல்லாமே,அதனால தான நம்ம புள்ள அவங்க வீட்டுக்கு வாக்க பட்டு போனா நல்லா இருக்கும் அப்படின்னு நினைச்சது. கொஞ்சம் பொறுமையா இரு.என்ன ஏதுன்னு பேசுவோம்.நம்மள தேடி வந்து இருக்காங்க தானே! நமக்கு மரியாதை கொடுத்து தான பேச தானே வந்திருக்காங்க,என்ன சொல்றாங்கன்னு நிறுத்தி நிதானமா கேட்ட தானே வேணும் நம்பளும்"என்றார்.
"நீங்க சொன்னீங்கன்னு தான் நான் அமைதியா இருக்கேன். இல்லனா நேத்தே போய் பொலி போட்டு இருப்பேன். நேத்து நான் கிளம்பும்போதே நீங்கதான் சொன்னீங்க வேணாம் மாப்பிள்ளை கொஞ்சம் அமைதியா இருங்க, அவங்க வீட்டு பிள்ளையை தான் அதுவும் கல்யாணம் பண்ணி இருக்காரு அவங்க வீட்டுக்குள்ளவே பிரச்சனை போயிட்டு இருக்கோம். நாம, இப்ப போய் அங்க நிக்க வேணாம்னு சொன்னீங்க, அதனால தான் நாங்க அமைதியா இருக்கோம். இப்ப நம்ப வீடு தேடி தானே வந்திருக்கான்"என்று சொல்ல,
"அதை தான்யா நானும் சொல்றேன்.நம்ம வீடு தேடி வந்துருக்காங்க.அவங்க செஞ்சதுக்கான விளக்கத்தை சொல்ல வந்திருக்காங்க. அப்படித்தான பா " என்று வேலனை பார்க்க,
அவன் தலை கீழே குனிந்தது.
"பார்த்தியா! ஒரு ஊரையே கட்டி ஆளுற சாமி பா.ஆனா,தான் செஞ்சது தப்புனு, அங்க நடந்த விசியம் எப்படியோ, ஆன,நம்ம வீட்டு பிள்ளைக்கு செஞ்சது தப்புனு நினைக்க போய்தான் தலை குனிஞ்சு மண்ண பாத்து நிக்கிறாரு.நம்மளும் அவங்களுக்கு மரியாதை தரணும்.நம்ம மேல மரியாதை வச்சு தான வீடு தேடி வந்திருக்காங்க. நேத்து சூழ்நிலையில் வர முடியாமல் இருக்க போய் தானே, இன்னைக்கு வந்து இருக்காங்க, நம்மளும் அதுக்கு ஏத்தாப்புல நடந்துக்கணும்" என்று தனது மருமகனிடம் மாணிக்கம் எடுத்து சொல்ல,
மாணிக்கத்தை பார்த்து விட்டு, வேலனின் சட்டையிலிருந்து கையை வேகமாக உதறிவிட்டு, "உனக்கு இருக்குடி என்னைக்கா இருந்தாலும்" என்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொள்ள,
"மன்னிச்சிருப்பா! வீட்டுக்குள்ள வாங்க. என் தங்கச்சி மகன் என் மேல இருக்க பாசத்துல கை வச்சுட்டாப்ல"என்றார்.
"இல்லைங்க! என் மேல தான் தப்பு மன்னிச்சிடுங்க" என்று கை எடுத்து கும்பிட்டான்.
மருது தான் "வேலா" என்று அவனின் கை மீது கை வைத்தான் அதிர்ச்சியாக,
"நீ உள்ள வா பா பேசிக்கலாம்" என்றார்.
மருதுவும் ,வேலனுடன் வீட்டுக்குள் நுழைந்தான். இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மாணிக்கம் தனது மனைவியை அழைக்க,
அவர் "ஏன்! ப்பா வேலா உன்னை நம்பி தானே நிச்சயம் வரைக்கும் பேசினது, இப்படி என் புள்ள வாழ்க்கையில மண்ணள்ளி போட்டுட்டியே "என்று ஆதங்கமாக கேட்க,
"என்ன புள்ள பண்ணிட்டு இருக்க" என்றார் மாணிக்கம்.
" உங்களுக்கு உங்க பிரச்சனை, எனக்கு என் புள்ளை வாழ்க்கை போச்சுன்னு அடி வயிறு கலங்குதுங்க ,உங்களுக்கு என்ன? வந்துச்சு பொட்ட புள்ள நிச்சயம் வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போனா, ஊர்ல என்னென்ன பேச்சு பேசுவாங்க என்று எனக்கு தானே தெரியும், இப்போ என் புள்ளையோட வாழ்க்கை தான கேள்விக்குறியா? நிக்குது"என்று புலம்ப,
"இப்ப என்ன ஆயிப்போச்சு நிச்சயம் வரைக்கும் தான வந்திருக்கு, நிச்சயமே இன்னும் பண்ணலையே, அதுக்கு ஏன் இம்புட்டு தலை பாடா அடிச்சுக்கிட்டு புலம்புற"என்க,
எழுந்து நின்ற வேலன்." தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க! இதுக்கு நான் எவ்வளவு காரணம் சொன்னாலும் ஈடாகாது,நான் பண்ணது தப்புதான், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நிச்சயம் வரைக்கும் ஒரு பொண்ண கொண்டு வந்து விட்டுட்டு, வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டினது என்னோட தப்பு தான்,அதுக்கு நான் சூழ்நிலையை காரணம் காட்டினாலோ,இல்லை, எந்த ஒரு காரணம் சொன்னாலும் சரி வராது. ஆனா, என் பக்கம் இருந்து என் தப்பையும் ஒத்துக்கணும். என்னோட தப்பால இப்போ உங்க பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்பட்டு நிக்குது, என்னால முடிஞ்ச அளவுக்கு அதை சரி பண்ணவும் முயற்சி செய்யணும். அதோட முழு பொறுப்பும் என்ன சார்ந்தது, அதையும் பாக்கணும் இல்லையா ?அதனாலதான் உங்க வீடு தேடி வந்து இருக்கேன். பெரியவங்க வந்து பேசலன்னு தப்பா எடுத்துக்காதீங்க! இன்னும் யாரும் என்னோட கல்யாணத்திலிருந்து வெளிவரல. நான் பண்ணுவதும் தப்பு இல்லையா? அதுவும் என் சொந்த அக்கா மக கழுத்தில் தாலி கட்டிருக்கேன். என் வீட்டிலிருந்து வந்து பேசணும்னா எங்க அய்யனோ ,மாமாவோ, அக்காவோ தான் வரணும். ஆத்தா பெருசா வெளியே எங்கேயும் போகாது, உங்களுக்கே தெரியும். அக்காவும் மனசு உடைஞ்சு போயிருக்கு, அய்யாவும்,மாமாவும் எப்படி சொல்ல தெரியல, அதான் நானே பேசலாம்னு வந்திருக்கேன். பெரியவங்க வந்து பேசலனு தப்பா எடுத்துக்காதீங்க! எப்படியும் அவங்களே கொஞ்சம் சரியாகியிட்டு வருவாங்க. இருந்தாலும், என் பக்கம் இருந்து என் தப்பை நான் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது.என்னால முடிஞ்ச அளவுக்கு அதை நான் சரி பண்ணவும் பாக்கணும் இல்லைங்களா? அதான் உங்க வீடு தேடி வந்து இருக்கேன் "என்று சொல்லும்போதே,குணா எகிறி கொண்டு வந்தான்.
"நீ என்னடா சரி பண்ண போற, எங்க வீட்டு புள்ளையோட வாழ்க்கையை அழிச்ச வரைக்கும் பத்தாத, அதான் நீ எங்க வீட்டு புள்ளை வேணாம்னு சொல்லிட்டு உன் அக்கா மக கழுத்துல தாலி கட்டிட்ட இல்ல, அப்புறம் என்ன? இங்க உனக்கு வேலை ?"என்று சொல்ல,
மாணிக்கம் முறைத்த முறைப்பில் அமைதியானன் குணா.
"மா..மாமா அது"..
"நான் தான் சொல்றேன்ல குணா. கொஞ்சம் அமைதியா தான் இரு. அவர் என்னதான் சொல்ல வராருன்னு கேட்போம். இப்பவும் செஞ்சது சரின்னு சொல்லல இல்ல ,சூழ்நிலையையும் அவர் காரணம் காட்டல.நான் செஞ்சது தப்புன்னு தானே சொல்றாரு".
"அந்த மண்ணாங்கட்டியை இங்க யாரு கேட்டாங்க மாமா".
"கொஞ்ச நேரம் கம்முனு இருக்கணும் குணா. மரியாதை கொடுத்து பேச பழகு சரியா?".
"அந்த மரியாதையை அவர் நமக்கு தரலையே மாமா".
"என்னய்யா தரல. மரியாதை இருக்க போய் தான இவ்வளவு தூரம் நம்பலை தேடி வந்து பேசுறாரு",
"நேத்தே வந்து பேசல,இன்னைக்கு வந்து சாவகாசமா பேசிட்டு இருக்காரு, அது மட்டும் இல்லாம, அவங்க அப்பாவோ,இல்ல வீட்டுல இருக்க பெரியவங்களோ வந்து இப்ப வர பேசவும் இல்ல, அதுக்கும் ஏதோ ஏதோ காரணம் சொல்லிட்டு இருக்காரு, நீங்களும் அமைதியா கேட்டுட்டு இருக்கீங்க" என்று எகிறினான்.
"நானும் நேத்து அதை தானே சொன்னேன். இன்னைக்கும் அதை தான் சொல்றேன். கொஞ்சம் அமைதியா தான் இரு. என்ன நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும். இது தான் நம்ப விதின்னா அத ஏத்துக்கிட்டு தான் ஆகணும், சரியா? நிச்சயம் பண்ணதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஆயிருந்தா என்ன பண்ணி இருப்ப ?அதைவிட கஷ்டமா இருந்திருக்கும் இல்ல, கொஞ்ச நேரம் அமைதியா இரு! எனக்கு அவர் மேல கோவம் இல்லைனு நான் சொல்லல, அதுக்காக வீடு தேடி வந்தவங்வ மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுற பழக்கத்தை நிறுத்திக்கோ!" என்றார்.
கண்கள் கலங்கியது இங்கு வேலனுக்கு, மருது எதுவும் பேசவில்லை.
வீட்டிலிருந்து கிளம்பி வண்டியில் வரும்போதே வேலன் சொல்லி விட்டான். "நம்ம நிச்சயம் பண்ண இருந்த பொண்ணு வீட்டுக்கு போக போறோம், அங்க எதுவும் பேசக்கூடாது மாப்ள நீ, என்னை யாராவது திட்டினாலும், அடிக்க வந்தாலோ அமைதியா இருக்கணும்.நான் உன்னை என் கூட துணைக்கு தான் கூட்டிட்டு போறேன்,அங்க சண்டை போட இல்ல,என் மேல எந்த அளவுக்கு உனக்கு கோபம் இருக்குன்னு எனக்கும் தெரியும். ஆனா எனக்காக என் கூட இப்போ வரை சப்போர்ட்டா நிக்குற, உனக்கே இந்த அளவுக்கு கோபம் இருக்குன்னா,பொண்ணை பெத்தவங்க , அவங்களுக்கு எந்த அளவுக்கு கோவம் இருக்கும்ன்னு உனக்கும் புரியும். அதனால, அவங்க எது பேசினாலும் சரி, அடிக்க கை ஓங்கினாலும் சரி, எதுவும் பண்ண கூடாது, பேசக்கூடாது" என்று வழி நெடுக்க, அவனுக்கு பாடம் எடுத்த வாக்கிலே தான் வந்தான் முத்துவேலன்.
'அவனுக்கும் வேலன் செய்த தவறு புரியும் அல்லவா! தன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு நிச்சயம் வரை சென்று அந்த மாப்பிளை வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் ,தனக்கும் வலிக்க தான் செய்யும். தனக்கும் கூட பிறந்த தங்கைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்' என்று உணர்ந்தவன். ஒரு தலையசைப்போடு அமைதியாக இருந்தான்.
'அவனுக்கு தன் நண்பன் மீதும் கோபம் இருக்கிறது.ஆனால், அதை இப்போது காட்டக்கூடிய நேரம் அல்ல, அதேபோல், அவனுக்கு பக்க பலமாகவும், இருக்க வேண்டும். அவன் செய்தது தவறுதான் என்று அவனுக்கும் புரிகிறது. ஆனால், அவன் செய்ததற்கான காரணம் இன்று இல்லை என்றாலும், என்
றோ ஒருநாள் சொல்வான், அவன் சொல்லா விடில் என்றாலும், என்றோ,ஒரு நாள் தன்னால் வெளிவர செய்யும் அதுவரை அமைதி காப்போம்' என்று அமைதியாக இருக்கிறான்