வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வேலனின் கீதம்

GG writers

Moderator
டீஸர் 1:


"சரில நீ சொல்றபடியே வருவோம். உன் அக்கா மகளையே நீ கேளு .என்ன நடந்துச்சுன்னு "என்று ஒரு பெரியவர் சொல்ல.

"என்ன கீதுமா உனக்கு என்ன இந்த தோப்புல வேலை "என்று அமைதியான முகத்துடன் கேட்டான்.

அவர்களிடம் அவன் பேசிய முகத்திற்கும் ,சங்கீதாவிடம் பேசும்போது இருக்கும் முகத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.. அவன் பேசிய தோணியே வேற .சுற்றியுள்ளவர்கள் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் .

புறங்கையால் தன் கண்களை துடைத்த வாரே "மு...மு...முத்து மா..மாமு அ..அ..அது நா..நான் "என்று திக்கித் திணறினாள். அவளது தலையை ஆதுரமாக வருடியவாறு " நீ சொல்லு கீது மா"என்றான்.

" நா..நான் நான் இங்க மாங்கா பெறிக்க வந்தனா" என்று விட்டு நிறுத்தினாள்.

அவளது முகத்தை தான் பார்த்துக் கொண்டு நின்றான் முத்துவேலன். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "உங்ககிட்ட இல்லாத தோப்பா ?,இல்ல உன் மாமாகிட்ட இல்லாத தோப்பா ?முத்துவேலா. இப்படி உன் அக்கா மக பக்கத்து தோப்புக்கு எதுக்கு மாங்கா பெறிக்க வந்திருக்கா? இந்த தோப்புக்கு சொந்தக்காரன் மலையன்னு உன் அக்கா மகளுக்கு தெரியாதா? , இல்ல அவனோட குணத்தை பத்தி தான் இவளுக்கு தெரியாதா?ஊருக்கே தெரியும் அவனை பத்தி.அவன் பொம்பள பொறுக்கினு அப்படி இருக்க இங்க என்ன உன் அக்கா மகளுக்கு வேலை"என்றார் நாக்கில் விஷம் தடவிய வார்த்தைகளாக..

"கொஞ்சம் வார்த்தையை பார்த்து பேசுங்க சித்தப்பு "

"என்னய்யா பார்த்து பேச. கேட்டா மாங்கா பெறிக்க வந்தனு தான் அந்த புள்ள சொல்லுது.மாங்கா பெறிக்க தோப்புக்கு வந்தவளுக்கு மோட்டார் ரூமுக்குள்ள என்ன வேலை ? மாந்தோப்பு உன்கிட்ட இல்லாததா? இல்ல உங்க மாமா கிட்ட தான் இல்லையா? உன்ன விட கம்மியா கூட தான் இருக்கட்டும் ஆனா, அவர் கிட்ட இல்லாத தோப்பா?அப்படி என்ன உன் அக்கா மகளுக்கு பக்கத்து தோப்பு மாங்கா கேக்குது ".

"சித்தப்பு வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்க" என்றான் லேசான எரிச்சலுடன் கோபமாக கண்கள் சிவக்க..
 
Top