GG writers
Moderator
வைரம் 1
பசும்பொழில் கிராமம்...
பெயருக்கேற்ப பசுமை எழில் நிறைந்த வயல் வெளிகள், வாய்க்கால்கள் சூழ எழில் கொஞ்சும் கிராமம்...
ஊரின் மத்தியில் அமைந்துள்ள அந்த திருமண மண்டபத்தில் பரபரப்பாக திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
உறவினர்கள் ஒருபக்கம், பந்தி ஒருபக்கம்ஊரே கூடி இருந்தது.
மங்கள வாத்தியங்கள் முழங்க,நிறைந்து வழிந்த சீர்களுடனும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த ஊர் தலைவர் அருணாச்சலத்தின் மகன் வைரவனின் திருமணம்.
கண்ணாடியின் முன்பு அமர்ந்து தன் கைகளில் வளையலை அணிந்து கொண்டிருந்த மலர்விழியின் முகமோ பளீறிடும் புன்னகையில் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது.
அவளின் முகத்தை திருப்பிய அவளின் சித்தி மகள் அருந்ததியோ "என்ன மலரு மாமன்கூட டூயட்டா, எந்த ஊரு ஊட்டியா காஷ்மீரா?"என்றவளின் கேள்வியில் குங்குமமாய் சிவந்து போனவள் வெட்கத்தில் தலைக்கவிழ, அருகிலிருந்த தோழிகள் பட்டாளம் கொல்லென சிரித்தது.
அந்த கூட்டத்தில் இருந்த அமுதா என்பவள் "என்ன அருந்ததி வைரவன் அண்ணே,உனக்கும் மாமன் தானே, அவரை கட்டிக்கிட உனக்கு விருப்பம் இல்லையா? அவரை கட்டிக்கிட குடுத்து வச்சிருக்கோணும்.இப்படியே ஒரேடியா எந்த மறுப்பும் சொல்லாம மலருக்கு விட்டு குடுத்திட்டியே"என்றவள் முடிப்பதற்குள் அவளின் கன்னம் பழுத்துப்போனது.
அவள் ஆரம்பிக்கும் போதே சைகை காட்டிய அருந்ததியை கவனிக்க மறந்தது அவளின் கெட்ட நேரமே...
கன்னத்தில் கைவைத்த அமுதா அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க கண்கள் சிவக்க கோபத்தில் நின்றிருந்தாள் மலர்விழி.
"என்னடி சொன்ன, என் மாமனை கட்டிக்கவே தவம் இருக்கேன் நான், என் முன்னாடியே இன்னோருத்தியே கேக்குறியே எம்புட்டு தைரியம் உனக்கு? "என்று கேட்டவளை கண்டவளோ "இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு என்னை அடிக்கிறவ நீயி, அவளும் முறைப் பொண்ணாச்சேன்னு கேட்டேன்" என்று கூறிக்கொண்டே மலரின் அருகில் வந்தவள் "வாயால கேட்டதுக்கே இப்படி அடிக்கிறியே, ஒருவேளை அப்படி நடந்துருந்தா" என்றவளின் வாக்கியம் முற்றுப்பெருமுன்னே "அறுத்துப்போட்ருவேன்"என்றவளின் ஆக்ரோசத்தில் திகைத்து தான் போயினர் அங்கிருந்தோர் அனைவருமே...
சூழ்நிலையை கருத்தில் கொண்ட அருந்ததியோ "அமுதா உனக்கு எப்போ எங்க என்ன பேசணும்னு தெரியாதா , இன்னும் கொஞ்சம் நேரத்துல மாமனுக்கும் அவளுக்கும் கல்யாணம் இப்படி பேசுறது தப்பு"என்றவள் மலரின்
அருகில் வந்து "அவ ஏதோ தெரியாம பேசிட்டா நீ கோவப்படாத மலரு, இன்னுஞ் சித்த நேரத்துல மாமனுக்கு பொண்டாட்டி ஆகிடுவ அப்போ போய் இப்படி கோவ முகத்தோட இருந்தா நல்லாவா இருக்கும், வா"என்று நைச்சியமாக பேசி அவளை அமைதியாக்கி விட்டவள் அலங்காரத்தை தொடர்ந்தாள்.
அந்த அமுதா என்னும் பெயர் கொண்டவளோ கன்னத்தை தேய்த்து கொண்டே வெளியேறியவள் அவள் உடன் வந்தவளிடம் "எப்படியாச்சும் கடைசி நேரத்துல ஏதோ ஒரு அதிசயம் நடந்து வைரவன் அண்ணன் இந்த ராங்கி காரிகிட்ட இருந்து தப்பிச்சா நல்லாருக்கும்"என்று பேசிக்கொண்டே வர அவள் உடன் வந்தவளுக்கும் அதே எண்ணம் தான்.
பசும்பொழில் கிராமத்தின் தலைவர் அருணாச்சலத்தின் மனைவி வடிவழகி அவரின் மகவுகள் இளவரசி, பரிமளம், சீதா. இவர்களுக்கு பின் நீண்ட வருட தவத்துக்குப் பின் பிறந்த ஒற்றை வைரமாய் கிடைத்தவன் வைரவன்.
வைரவன் விவசாயம் படித்து தந்தையின் தொழிலுக்கு உதவியாக ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் கைத்தேர்ந்து விளங்குபவன் அசரடிக்கும் அழகிலும் அவனின் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் மென்னகையிலும் மயங்காதவர் இல்லை...
இன்று அவனுக்கும் அவனின் இரண்டாவது அக்கா பரிமளாவின் மகள் மலர்விழிக்கும் தான் திருமணம். தந்தையின் கட்டாயத்திலும் தமக்கையின் வாழ்விற்காகவும் தன்னை விட பலவருடங்கள் சிறியவளான மலர்விழியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருந்தான்.
அவனின் முதல் அக்கா இளவரசி அந்த காலத்திலேயே அவர்களின் வீட்டில் வேலை செய்த டிரைவர் லக்ஷ்மனுடன் காதல் திருமணம் செய்து கொண்டு சென்று விட, மற்ற இருமகள்களுக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்திருந்தார் அருணாச்சலம்.
பரிமளாவிற்கும் சீதாவிற்கும் ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் அன்பரசன், அறிவரசன் என்பவர்களை திருமணம் செய்து வைத்திருந்தார். அன்பரசன் சிறிதும் அன்பில்லாதவர் அவரின் ஒரே குறிக்கோள் அருணாச்சலத்தின் சொத்துக்கள் மட்டுமே...
அதன் விளைவே சிறு வயதிலிருந்தே மலரை வைரவனின் மனைவி நீ தான் என்று அவளின் மனதில் பதிய வைக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு அதுவே வெறியாகிப்போனது.
தன் சித்தப்பா மகள் அருந்ததி வைரவனிடம் நின்று பேசினால் கூட அவளை பேசியே கொல்வாள், அவளுக்கு பயந்தே அருந்ததி வைரவனிடம் அதிகமாக ஒட்டுவதில்லை.
அவளின் பிடிவாதத்தின் விளைவே இந்த திருமணம்.
மண்டபத்தில் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்த அருணாசலத்திடம் வந்த, வடிவழகி"ஏனுங்க இன்னும் வைரவனை காணுமே, இன்னும் சித்த நேரத்துல முஹூர்த்தம் மாப்பிள்ளை வேற நம்ம மவகிட்ட கத்துறாரு, புள்ள முகமே வாடிக்கிடக்கு"என்றவள் மகளை பார்க்க அவருக்கு சற்று தள்ளி "உன்ர தம்பி மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்து கழுத்தறுத்து என்ர மக வாழ்க்கைக்கு ஏதும் பங்கம் வந்துச்சு நடக்கறதே வேற"என்று அவரை மிரட்டிக் கொண்டிருக்க பரிமளம் தவிப்பாக தாயை பார்க்க அவருக்கும் கவலையாக இருந்தது.
திருமணம் என்று தெரிந்தும் இரண்டு நாட்களுக்கு முன் தொழில் விசயமாக சென்றே ஆக வேண்டும், தாலிக்கட்டுவதற்கு முன்பு வந்துவிடுவேன் என்று கூறி அவரின் மறுப்பையும் பொருட்படுத்தாமல் தந்தையிடம் கூறிவிட்டு சென்ற மகனை நினைத்து ஆத்திரப்படத்தான் முடிந்தது அவரால்...
அருணாச்சலத்திற்கு மகன் எப்படியும் சரியான நேரத்திற்கு வந்து விடுவான் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க அதனால் அமைதியாக இருந்தார்.
வடிவழகிக்கு இருப்புக் கொள்ளவில்லை, அவருக்கு ஏதோ தவறாக நடப்பது போல நெஞ்சம் அடித்துக்கொள்ள, மண்டபத்தின் வாசலில் வந்து நின்று மகன் வருவானா என்று வழியையே பார்த்திருக்க, அங்கு வந்த பரிமளா "ஆத்தா தம்பி எங்க முஹூர்த்த நேரம் வந்துட்டுது, இன்னும் காணலையே மலரு அப்பாரு வேற என்னைய முறைச்சுகிட்டும் வஞ்சிகிட்டும் திரியுறாரு, கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்கையும் அனுப்பாதீங்கனு சொன்னேனுல்ல இப்போ பாருங்க " என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மண்டபத்தின் வாசலில் வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கிய வைரவனை கண்டு மகிழ்வுடன் முன்னேறி சென்ற இருவரின் கால்களும் அவன் கைப்பற்றி இறக்கிய பாவையையும் அவளின் கழுத்தில் இருந்த தாலியையும் கண்டு அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
அதற்குள் வாசலில் நின்று இருந்த ஒருவன் "வைரவன் அண்ணே வந்துருச்சு" என்று குரல் குடுத்ததில் அவர்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் மகிழ்வுடன் அவனை வரவேற்க வெளியே வந்தவர்களும் அவனின் செயலில் அதிர்ந்து போய் நின்றனர்.
"வைரம் என்ன காரியம்ல பண்ணிருக்க, இவ்ளோ தைரியம் எங்கிருந்து இருந்து வந்துச்சு"என்று தாயின் குரலில் கண்களை மூடி திறந்தவன் அவர் அருகில் நின்று தன்னையே அழுத்தமாய் பார்த்திருக்கும் தந்தையின் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் திணறிக் தலைகுனிந்தான்.
அதற்குள் பரிமளம் தலையில் அடித்துக்கொண்டு
"யாத்தே கூட பிறந்தவன்னு நம்பினேனே, இப்படி கடைசி நேரத்துல என் தலைல கல்ல இறக்கிட்டானே , பொறந்ததுல இருந்து உன்னையே புருஷன்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்க என் குலசாமிய ஏமாத்தி போட்டியே நல்லாருப்பியா நீ "என்று கத்தியவரின் குரலில் மண்டபத்தில் இருந்த மிச்சம் இருந்த அனைவரும் வந்திருக்க, அவர்களுக்கு முன் மூச்சு வாங்க ஓடி வந்து அவனின் முன் நின்று இருந்தாள் மலர்விழி.
அவனுக்கருகில் வந்த வடிவழகி "இத்தனை வருசமா உன்னையே நினைச்சுக்கிட்டு இருந்தவளுக்கு என்னடா பதில் சொல்ல போற, இப்படி யாரு என்னனு தெரியாத ஒருத்தி கழுத்துல தாலி கட்டி வந்து நிக்கிறியே, இப்படி என் மக வாழ்க்கையையும் என்ர பேத்தி வாழ்க்கையையும் அழிக்க எத்தனை நாளா காத்து கிட்டு கிடந்த ஆத்தே என் பேத்திக்கு என்னலே நான் பதில் சொல்லுவேன்"என்று அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு கத்தியவர் அதே ஆத்திரத்துடன் அவனருகில் பயத்துடன் அவனின் கைகளை பற்றிக்கொண்டு மருண்ட பார்வையுடன் அவரை பார்த்தாள் சிவன்யா .
சிவன்யாவை கண்டு கோபத்தில் அவளின் கைகளை வெடுக்கென பிரித்தவர் "எந்த ஊர் சிறுக்கிடி நீயி, என்ர மவனை ஒட்டிக்கிட்டு என் பேத்தி வாழ்க்கையே அழிச்சுபோட்டியே, உன்னைய சும்மா விடமாட்டேன்"என்றவர் அவளை பிடித்து தள்ளப்போக,அதில் பதறி போய் அவளை பிடித்து நிறுத்திய வைரவனோ "என்ன ஆத்தா பண்ணிட்டு இருக்க, விடு அவளை"என்று அவரின் கையை உதற, அவன் கையை பிடித்து உதறியதில் தடுமாறியவர் கீழே விழப்போக, அருந்ததி அவரை தாங்கி பிடித்து நிறுத்தினாள்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அருணாச்சலம் "உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல வைரவா"என்ற தந்தையின் அதிருப்தி குரலில், கண்களை மூடியவன் செவியில் "விட்ராத வைரம்"என்ற அழுகுரல் கேட்க அவன் உடலும் உள்ளமும் துடித்து அடங்கியது.
அன்பரசன் எதுவும் பேசவில்லை, அதற்கு மாறாக அவர் முகம் கோவத்தில் ஜொலித்து கொண்டிருந்தது...
தந்தையை நோக்கி தன் பார்வையை செலுத்தியவனோ "என்னை மன்னிச்சிடுங்க அய்யா, எனக்கு இவளை தான் பிடிச்சிருக்குது... மலரை கட்டிக்க எனக்கு விருப்பம் இல்லை, உங்களுக்கு பேச்சுக்காக இன்னிக்கு அவளை கட்டிக்கிட்டு அவளையும் கஷ்டப்படுத்தி நானும் துடிக்க விரும்பல"என்றவனின் பேச்சில் மலருக்கு மேலும் ஆத்திரம் பெருகியது.
அவளுக்கு இதற்கு அனைத்திருக்கு காரணமானவளின் மீது அவளின் மொத்த ஆத்திரமும் திரும்ப, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியிருந்தவள் அவளின் அருகே வாழைமரம் வெட்டிய, கத்தி கண்ணில் பட, ஒரே நிமிடம் தான் அதை பாய்ந்து சென்று எடுத்தவள் இன்னும் சற்று நேரத்தில் அவன் கட்டபோகும் மாங்கல்யத்துக்காக காத்திருந்தவள் அந்த உரிமையை அவளிடம் இருந்து பறித்து கொண்டு அவள் மாமனின் கரங்களில் தாலியை வாங்கிக்கொண்டு நின்றிருந்த சிவன்யாவின் வயிற்றை நோக்கி குத்த, அதில் அனைவரும் அதிர்ந்து போக ரத்தத்தை கண்டு மயங்கிய சிவன்யாவை தாங்கிக் கொண்டான் வைரவன்.
வருவான்...

Last edited: