GG writers
Moderator
வணக்கம் நண்பர்களே...
நான் அஸ்திரம் 79...தாய்மாமன் காதல்...
கதையின் பெயர் வைரவனின் வரமவள்...
கதையில் இருந்து சிறு துளி...
அந்த திருமண மண்டபத்தின் வாசலில் கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்த தாய் வடிவழகியிடம் வந்த பரிமளா "ஆத்தா தம்பி எங்க முஹூர்த்த நேரம் வந்துட்டுது, இன்னும் காணலையே மலரு அப்பாரு வேற என்னைய முறைச்சுகிட்டு திரியுறாரு, கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்கையும் அனுப்பாதீங்கனு சொன்னேனுள்ள இப்போ பாருங்க " என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மண்டபத்தின் வாசலில் வந்து நின்ற வண்டியிலிருந்து இறங்கிய வைரவனை கண்டு மகிழ்வுடன் முன்னேறி சென்ற இருவரின் கால்களும் அவன் கைப்பற்றி இறக்கிய பாவையையும் அவளின் கழுத்தில் இருந்த தாலியையும் கண்டு அதிர்ந்து நின்றிருந்தனர்.
"யாத்தே கூட பிறந்தவன்னு நம்பினேனே, இப்படி கடைசி நேரத்துல என் தலைல கல்ல இறக்கிட்டானே , பொறந்ததுல இருந்து உன்னையே புருஷன்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்க என் குலசாமிய ஏமாத்தி போட்டியே நல்லாருப்பியா நீ "என்று கத்தியவரின் குரலில் மண்டபத்தில் இருந்த அனைவரும் வந்திருக்க, அவர்களுக்கு முன் மூச்சு வாங்க ஓடி வந்து அவனின் முன் நின்று இருந்தாள் மலர்விழி.
இன்னும் சற்று நேரத்தில் அவன் கட்டபோகும் மாங்கல்யத்துக்காக காத்திருந்தவள் அந்த உரிமையை அவளிடம் இருந்து பறித்து கொண்டு அவளின் தாய்மாமனுடன் அவனின் கரம் பற்றி இருந்தவளை கண்டவள் நொடியும் தாமதிக்காமல் அருகில் சமையல்காரர் கையிலிருந்த கத்தியை பிடுங்கி வைரவனின் கரம் பற்றி இருந்த சிவன்யாவின் வயிற்றில் செருகியிருந்தாள் யாரும் எதிர்பாராத நேரத்தில்...