வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️- கதை திரி

Status
Not open for further replies.
விவாஹஸ்திரமே கதையின் பதிவுகள் இவ்விடம் பகிரப்படும்
 
Last edited:
விவாஹம் 1:

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்த மனையாளை தொந்தரவு செய்ய விரும்பாமல் சத்தமின்றி உள்ளே நுழைந்த ஆடவன்,தன்னுடைய சட்டையை கழற்றி அதனை கொரண்டியில் மாட்டிவிட்டு திரும்ப நினைத்தான்.

அச்சமயத்தில் அவனை திரும்ப விடாமல் மேல் சட்டையின்றி வெற்று தேகத்துடன் இருந்தவனின் முதுகை ஒரு வளையல் கரம் சுற்றி வளைத்தது.

அதில் அவனது முகத்தில் ஒரு இளநகை மலர "ஏய் திருட்டுப்பூனை…இன்னும் தூங்கலையா நீ?" என அதீத காதலுடன் குழைந்து வந்த குரலில் உருகிய அவனது மனையாளோ "நீங்க வராமல் என்னைக்கு தூங்கியிருக்கேன் மாமா" என்றுரைத்தவளிடம் "நீ தூங்காமல் இருக்கிறதும் எனக்கு நல்லது தான் பேபி" என விஷமத்துடன் இதழ்மடித்து சிரித்தவனின் பளிங்கு முதுகில் வெட்கத்துடன் தன் முகத்தை புதைத்து அதில் அழுத்தமான முத்தமொன்றை கொடுத்தாள்‌ அப்பெண்.

அதில் அவன் தேகமோ சிலிர்க்க அப்படியே சில நொடிகள் மயக்கத்தில் விழி மூடி சிலிர்ப்புடன் கைமுஷ்டி இறுக நின்றுக்கொண்டிருந்தான் ஆடவன்.

பெண்ணவளோ முன்னால் இருந்த தன் பூங்கரம் கொண்டு உடற்பயிற்சியினால் முறுக்கேறி இருந்த அவனது படிக்கட்டு தேகத்தை பின்னால் இருந்தப்படியே வருடியவாறே "மாமா யூ ஆர் சோ ஹாட்" என்றவளின் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.

பட்டென்று விழி திறந்த ஆடவன் அதற்கு மேல் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் அவளின் கைப்பிடித்து முன்னால் இழுத்து நிறுத்தியவன் "நான் எவ்வளவு ஹாட்டுன்னு உனக்கு காட்டறேன் பேபி" என சிரித்தப்படி கூறியவன் புடவையினூடே கைவிட்டு அவளை தன்னோடு இழுத்தணைத்து நெருக்கினான்.

அத்தோடு பெண்ணவளின் கண்ணோடு கண் நோக்கி அவளின் சிவந்த இதழ் நோக்கி முத்தமிட குனிந்திருந்தான்.

அப்பெண்ணும் இதழை குவித்து அவனது முத்தத்திற்கு தயாராக அவனது கழுத்தை கட்டிக்கொண்டு விழி மூடி காத்திருக்க,மனையாளின் இதழை நெருங்குவதற்கு நூலளவு இடைவெளியில் பெண்ணவளின் முகம் பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களில் அதுவரை இருந்த கிறக்கம் காணாமல் போக கொலைவெறியில் விழிகள் இரத்தநிறத்தை பூசிக்கொண்டது.

பின்பு தன் கால்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த இரவின் ஒளியை கிழித்துக் கொண்டு பளபளத்த கத்தி கொண்டு அவளது இடையிலேயே சராலென்று பல முறை குத்தியவனின் இதழ்களிலோ ஒரு குரூர புன்னகை தோன்ற அவளது காதரோம் "ரெஸ்ட் இன் பீஸ் மை பேபி" என சீறலான குரலில் கூறி அவளை கீழே தரையை நோக்கி தள்ளிவிட்டிருந்தான் மனித உருவில் இருந்த அந்த அரக்கன்.

இறந்து கிடந்த அந்த சடலத்தையே இதழை வளைத்து சில நிமிடங்கள் கொடூரமாய் ரசித்து அவன் பார்த்திருந்த நேரத்தில் "கட்…கட்.." என்ற இயக்குனரின் சத்தத்தில் அவ்விடத்திலிருந்த அத்தனை விளக்குகளும் ஒளிர்ந்தது.

ஆம்,நாக தேவ் ஒரு பிரபலமான திரைப்பட நடிகன்.அவன் நடித்த அத்தனை படங்களும் கதாப்பாத்திரங்களுமே விண்ணை தொடும் அளவு வெற்றியை பெற்றிருந்தது.

பொதுவாக தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இயக்குனரின் கதையை வைத்து நாயகனை தேடுவார்கள்.ஆனால் நாக தேவ் விஷயத்திலோ அவன் தான் இயக்குனரை தேர்வு செய்து,அதற்கு ஏற்ற தயாரிப்பாளரை தேர்ந்தெடுக்கும் அளவு உயர்ந்திருக்கிறான்.

அதுவும் கடந்து இரண்டு வருஷத்தில் அவன் நடித்து வந்த படங்கள் அனைத்தும் அசுரத்தனமாக ஓடி அமோக வெற்றியை அடைந்திருந்தது.

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தன்னுடைய கடின உழைப்பினால் மட்டுமே அவன் மக்கள் மதிக்கும் நட்சத்திரமாக அவர்களின் மனதில் ஜொலித்துக் கொண்டிருக்கிறான் திரையுலக சூப்பர் ஸ்டார் நாக தேவ்.

சினிமாவில் நடிக்க தொடங்கிய நாட்களில் பவ்யமாக அனைவருக்கும் மரியாதை கொடுத்து நடந்துக் கொள்ளும் நாக தேவ்வின் நடவடிக்கைகள் தொடர்ந்து நான்கு வெற்றி படங்களில் நடித்து உலக புகழ் பெற்று,அவனது கையில் கோடி கோடியாக பணம் புரள தொடங்கியவுடன் ஒரு அந்தஸ்து நடிகர்களுக்கே உரிய கர்வமும் மமதையும் அவனிடத்தில் உருவாகியிருந்தது.

அவனையும் குறை கூறுவதற்கில்லை.வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் அவனிடத்தில் நீக்கமற நிறைந்திருந்து அவனை திமிர்ப்பிடித்தவனாக மாற்றியிருந்தது.

நடித்துக்கொண்டிருந்த வேளையில் பல உணர்ச்சிகளை பிரதிபலித்த அவனது முகமோ,இயக்குனர் 'கட்' என கூறியவுடன் இப்போது கடும்பாறையென இறுகி அவனது நிஜமான முகத்திற்கு மாறியிருந்தது.

அவன் அங்கே தனக்கென போடப்பட்டிருந்த பிரத்யேக நாற்காலியில் அமர்ந்தவுடன்,அவனது உதவியாளினி ஓடி வந்து குட்டி மின் விசிறியை அவனை பார்த்து உயர்த்தியோடு வேறொரு புதிய சட்டையையும் அவன் கையில் பவ்யமாக வழங்கினாள்.

அவனிடம் வேலைக்கு சேர்ந்த நாட்களின் தொடக்கத்தில் அவனிடம் வசவுகளை மட்டும் பரிசுகளாக பெற்றிருந்தவள்,இப்போதெல்லாம் அவன் கண் பார்த்து செயல்படும் அளவில் வளர்ந்திருந்தாள் ஷாலினி.

தன் பணியை சரியாக செய்ய தொடங்கியவுடன்,அவனிடமிருந்து ஒரு பாராட்டிற்காக அவனையே ஏக்கத்துடன் பார்ப்பாள்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

இப்போதும் தனது முதலாளியை பார்க்க,தேவ்வோ அவளை பாராட்டும் விதமாக எந்த வார்த்தையும் கூறாமல் சட்டையை அணிந்து கொண்டு மேல் இரண்டு பொத்தான்களை கழட்டி விட்டு தன் நெஞ்சுரத்தை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியப்படி கால் மேல் கால் போட்டு ஆணவத்துடன் அமர்ந்திருந்தான்.

அதன்பிறகே தன்னை பார்த்து கையை பிசைந்துக்கொண்டிருந்த இயக்குனரை அவனருகே கையசைத்து அழைத்தவன் 'என்ன' என்பது போல் தன் கூர் விழிகளால் அவரை துளைத்தெடுத்தப்படி பார்த்திருந்தான்.

அவரோ அவனருகே நெருங்கி வந்தவர் சிறிது தயக்கத்துடனே "சார்…நீங்க கொலைப்பண்ணற சீனுக்கு முன்னால் ஒரு லிப்லாக் பண்ணனும்" என்னும்போதே,

"யா ஐ நோ" என அலட்சியமாக கூறியவன் 'அதுக்கு என்ன?' என்பது போல் அவரை உறுத்து நோக்க,

'தெரியும்…ஆனாலும் அதை செய்யவில்லை' என்பது போன்ற பாவனையில் திமிராக கூறியவனிடம் 'என்ன' என்று கேட்க முடியாமல் தன்னையே நொந்துக்கொண்டு "ஒண்ணுமில்லை சார்…நீங்க மறந்திட்டிங்களோன்னு நினைச்சு கேட்க வந்தேன் சார்…வேற ஒண்ணுமில்லை…நான் கிளம்பறேன்" என்றவரை ஒற்றை புருவம் உயர்த்தி ஊசியின் கூர்மையோடு கைகள் கட்டி பார்த்திருந்தான் நாக தேவ்.

பின்பு 'என்ன நினைத்தானோ?' அவரை சொடக்கிட்டு அழைத்த தேவ்,அவர் தன்னை நோக்கி திரும்பியவுடன் தன் முழு உயரத்திற்கும் எழுந்து தன் கால்சட்டை பையினுள் கைவிட்டு காலை அகட்டி திமிராக நின்றவன் அந்த படத்தின் நாயகியை கண்ணால் காட்டி "இனிமேல் இந்த மாதிரி சீப்பான பொண்ணுங்களை நடிக்க கூட்டி வந்தீங்க…நான் எடுக்கப்போற முடிவு விபரீதமா இருக்கும்…காட் இட்" என கர்ஜிக்கும் தோரணையுடன் தன்னை மிரட்டியவனை பார்த்து பயத்துடனே தலையசைத்து வைத்தார் அந்த இயக்குனர்.

உடனே கால்சட்டை பையிலிருந்து கையை எடுத்து தேவ் ஒற்றை கையை மேலே தூக்கி சொடக்கிட்டவன்,அந்த படப்பிடிப்பு தளத்திலிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீது பீதியுடன் ஒரு சேர குவிய "பேக் அப்" என ஆணை பிறப்பித்துவிட்டு விறுவிறுவென்று நடிகர்களுக்கு என வழங்கப்படும் கூண்டு வண்டியை நோக்கி நடந்தான்.

இயக்குனரோ 'அடேய்…இங்க நான் இயக்குனாரா நீயாடா?முடியலை' என்பது போல் நொந்துப்போய் கதாநாயகியாக நடித்த அந்த பெண்ணிடம் 'நீ எதாவது சொதப்பினீயா?' என்று வேறுவழியின்றி அவளை வறுத்தெடுத்து கொண்டிருந்தார்.

வண்டியை நெருங்கியதும் அவனது உதவியாளினி ஓடி வந்து கதவை திறந்துவிட மெச்சுதலாய் கூட ஒரு பார்வை பார்க்காமல், 'நீ வர வேண்டாம்' என்பது போல் அவளின் முன்பு ஒற்றை கையை மட்டும் நீட்டி தடுத்துவிட்டு உள்ளே சென்று கதவை அடித்து சாற்றிக்கொண்டான்.

அவன் அடித்து சாற்றியே வேகமே அவனது சினத்தை அங்கிருந்து அனைவருக்கும் எடுத்துரைத்தது.

அவன் உள்ளே செல்லும் நிமிடம் வரை மழை பேய்ந்து ஓய்ந்தது போல் அவ்விடமே நிசப்தமாக இருக்க,அவன் உள்ளே சென்று தஞ்சமடைந்த அடுத்த வினாடியே பெரிய சலசலப்பு அவ்விடம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது.

அனைவரும் அந்த பெண்ணை சுற்றிக்கொண்டு கேள்வியால் துளைத்தெடுக்க,அவள் 'என்ன' கூறுவது என்று தெரியாமல் இரத்தம் தோய்ந்த காட்சியில் நடித்த அதே புடவையுடன் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தாள்.

பின்பு அவள் வளர்ந்து வரும் நடிகை என்பதால் இப்போது அவள் செய்து வைத்த காரியத்தை கூறினால் சமூகத்தில் அவளிற்கு இருக்கும் பெயர் சீரழிந்து,தன்னுடைய சினிமா சந்தையில் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று எண்ணி துணிச்சலை வரவழைத்து "டைரக்டர் சார்…நேத்து ஹீரோ சார் என்னை அவரோட ரூமுக்கு கூப்பிட்டாரு…நான் அந்த மாதிரி பொண்ணில்லைன்னு சொல்லி அதை மறுத்திட்டேன்னு என்னை இப்போ பழிவாங்கிட்டு போறாரு…நீங்களும் அதை நம்பிட்டு என்னை கேட்கறீங்களே?" என இரண்டு சொட்டு முதலை கண்ணீர் சிந்தவும்,

அதனை நிஜமென்று நம்பிய சில கூட்டம் தேவ்வை குற்றம் கூறியது என்றால்,இயக்குனர் உட்பட அவளை பற்றி நன்கு அறிந்த சிலர் அவளை நம்பாத பார்வை பார்த்திருந்தனர்.

ஏனென்றால் பணத்திற்காக அவள் என்னவெல்லாம் செய்வாள் என்பதை நன்கு அறிந்தவர்கள் 'இவள் என்ன செய்தாளோ?ஹீரோ சார் கோபப்பட்டு போயிட்டாரு' என இவளின் மீது கண்டனம் செலுத்தி அடுத்த வேலையை பார்க்க சென்றனர்.

"யாரு மேலே தப்புன்னு எனக்கு தேவையில்லை…தேவ் சார் சொன்ன மாதிரி இந்த படத்திலிருந்து உன்னை தூக்கியாச்சு" என்று இயக்குனர் சிறிதும் இரக்கமின்றி கூறவும்,

அவளோ "நான் புரோடியூசர் சார்கிட்ட பேசிக்கிறேன்" என்று குதிக்கவும்,

அவரோ 'நீ யாருக்கிட்ட வேணா பேசு…கடைசியா தேவ் என்ன நினைக்கிறானோ?அதான் நடக்கும்' என எரிச்சலாக தன்னிலையையும் நொந்தப்படி அந்த இடத்தை காலி செய்திருந்தார் இயக்குனர்.

அவரின் தலை மறைந்தவுடன் அவளது முகம் விகாரமாக மாற,மூடியிருந்த தேவ்வின் வண்டியை வன்மத்துடன் நோக்கி "உன்னை நான் சும்மாவே விடமாட்டேன்டா" என்றப்படி தொப்தொப்பென்று நடந்து தனக்குரிய வாகனத்தில் ஏறி பறந்திருந்தாள்.

இங்கு நாக தேவ்வோ அவளின் மீதிருந்த கடும்கோபத்தில் சிகரெட்டை வாயில் வைத்து வளையம் வளையமாய் புகையை வெளிவிட்டு கொண்டிருந்தான்.

'எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் அனுமதியின்றி இவ்வாறு செய்திருப்பாள்' என மனமெல்லாம் கொந்தளித்த தேவ் தனது அலைப்பேசியை எடுத்து அவனது மேலாளருக்கு தொடர்பு கொண்டான்.

"மோகன் அந்த டயானாவை என்னுடைய கேரவனிற்கு சீக்கிரம் அனுப்பு" என்றவுடன்,

"நோ ஜி…அவங்க வேற ஒரு கஸ்டமர் கூட…" என்னும் போதே,

"கோ டூ ஹெல்" என நரம்புகள் புடைக்க கத்திவிட்டு அலைப்பேசியை தூக்கி கீழே எறிய,அதுவோ தூக்கு நூறாக உடைந்து சிதறியது.

வெளியில் நின்றிருந்த ஷாலினியோ இரைச்சல் கேட்டு "150" என முணுமுணுத்து இரண்டு காதையும் கைகளால் பொத்திக்கொண்டாள்‌.

 
இவ்வளவு ஆளுமையும் ஆக்ரோஷமும் கர்வமும் நிறைந்தவனிற்கு நேரெதிராக அவனது இல்லத்தில் இருந்தவர்களோ வெகு சாந்தமாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.

அவனிடம் பணம் கோடியில் புரண்டாலும் இப்போதும் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலே உள்ள வசதியுடனே மிக சிறிய அளவில் தேவைகளுக்கு ஏற்ப அறைகளுடன் வெகு அழகாக கட்டப்பட்டிருந்தது அந்த 'விவாஹா' இல்லம்.

அதிகாலை ஆறு மணியளவில் சாம்பிராணி புகையின் நறுமணம் வீடெங்கும் வாசம் வீச,பூஜையறையில் ஒரு கணீர் குரலில் தெய்வீக பாடல் ஒன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

அது ஒரு கலாச்சாரங்களை தன் உயிர்மூச்சாய் பின்பற்றும் சாதாரண கூட்டு குடும்பம்.

அந்த குடும்பத்தின் ஆணிவேர் பாண்டியம்மாள்.

தலை முடியை கொண்டையிட்டு நெற்றியில் பெரிய வட்ட வடிவ பொட்டு வைத்து கழுத்தில் இரட்டை வடை சங்கிலியுடன் அடர் நிறத்தில் பருத்தி புடவை உடுத்தி கிராமத்து மண் மணம் வீசும் அறுபது வயது மதிக்க தக்க பெண்மணி தான் அவர்.

அவரது கண்ணில் அன்பும் கனிவும் தாண்டவமாடினாலும் அது அவர்களது பிள்ளை செல்வங்களிடம் மட்டுமே வெளிப்படும்.

ஏனெனில் ஏனையோர்களிடம் இப்போதும் ஒரு வித சிடுசிடுப்புடனும் கண்டிப்புடனேயே வலம் வருவார்.

நான்கு குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு குழந்தைகளுடன் தன்னை தனியே தவிக்க விட்ட சென்ற கணவரை எண்ணி வேதனை கொண்டு துவண்டு போகாமலும்,தவறான பாதையில் காலடி எடுத்து வைக்காமல் எடுப்பிடி வேலைகள்,வீட்டு வேலைகள் என ஒன்றையும் விடாமல் தான் உணவருந்தவில்லை என்றாலும் குழந்தைகளை அவர் என்றுமே பசியில் வாடவிட்டது இல்லை.

மிகுந்த சிரமம் கொண்டு குடும்பத்தை எடுத்து நடத்தி நல்வழியில் கொண்டு சென்றதோடு,பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி கல்வியறிவையும் சேர்த்து வழங்கினார்.

அவர்களும் தாயின் துயரங்களை உணர்ந்த சமத்து பிள்ளைகளாய் பள்ளியிலிருந்து கல்லூரி வரை தங்களது முயற்சியினால் படிப்பில் முதல் இடத்தில் வந்து இலவச கல்வி பயின்று தங்களது படிப்பை முடித்தார்கள்.

அவருக்கு மொத்தமாக நான்கு பிள்ளைகள்.

அதில் மூத்தவனான கௌதம் தேவ் கல்லூரி படிப்பை முடித்து உயர் காவலருக்கான தேர்வை எழுதி அதிலும் முதல் மதிப்பெண் பெற்று இரண்டு வருட பயிற்சிக்கு பிறகு சென்னையின் உயிர் அதிகாரியாக பொறுப்பேற்றான்.

அவன் வளர்ந்து வந்து குடும்பத்தை தலையெடுக்க ஆரம்பித்தவுடன்,தன் தாயை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்து தானே பொறுப்பெடுத்து தங்கை,தம்பிகளை தன் செலவில் படிக்க வைத்தான்.

அவன் காவலராய் பொறுப்பேற்ற அடுத்த வருடமே பாண்டியம்மாளின் இரண்டாவது தவப்புதல்வனான நாக தேவ்வும் தன்னுடைய படிப்பை முடித்து சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி அலைந்துக்கொண்டிருந்தான்.

அது அவனது தாய் மற்றும் தமையனிற்கு பிடிக்கவில்லை என்றாலும் விடாமல் முயற்சி செய்து அடுத்த இரண்டு வருடத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது.

அதனை இரும்பாக பற்றிக்கொண்ட நாக தேவ்விற்கு அதன் பிறகு திரை துறையில் என்றும் ஏறு முகம் மட்டும் தான்,அவனது சொந்த வாழ்வை தவிர!

மீதமிருக்கும் இருவரும் ஒரே கர்ப்பத்தில் பிறந்த சகோதர சகோதரி என்பதால் இருவரும் ஒரே நேரத்தில் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தார்கள்.

அச்சமயம் கௌதம் தேவ்விற்கு ஒரு நல்ல வரன் வர,அவளை தன்னில் சரிப்பாதியாய் ஏற்று கரம் பிடித்து கைக்கோர்த்தவள் தான் குந்தவை.

பெயருக்கு ஏற்றது போல் பேரழகியும் கூட!!

அவ்வீட்டின் முதல் குத்தவிளக்கை ஏற்றி இல்லத்திற்கு வெளிச்சத்தை கொண்டு வந்த மகாலட்சுமி.

இப்போது கூட தெய்வ கடாட்சம் நிறைந்த அந்த குரலுக்கு சொந்தக்காரி அவ்வீட்டின் மூத்த மருமகள் குந்தவையே.

கடவுளை கண்ணில் நிறைந்த நீருடன் விழுந்து வணங்கிவிட்டு பூஜையறையில் இருந்து வெளிவந்த குந்தவை நேரே சமையல் வேலை தொடங்கி,வீட்டிலிருக்கும் அனைத்து வேலைகளையும் ஒற்றை ஆளாய் பம்பரமாய் சூழன்று செய்து முடித்து நிமிர்கையில் காலை எட்டரை மணி.

அப்போது தான் அந்த வீட்டிலிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக குளித்துவிட்டு கீழிறங்கி வந்தார்கள்.

அவளது மாமியார் நேரே பூஜையறைக்குள் சென்று கடவுளை மனமாற வணங்கி நெற்றியில் பட்டையிட்டு கொண்டே வெளியே வந்தவர் "ஏய் குந்தவை…சாப்பாடு தயாராடீ" என வீடே அதிரும் படி சத்தம் கொடுக்க,

அவளோ பவ்யமாக அவரின் முன்பு ஓடி வந்து நின்றவள் இதயம் படபடக்க "நீங்க இராத்திரி சொன்ன மாதிரி எல்லாமே செஞ்சிட்டேன் அத்தை…சாப்பிட வாங்க" என மூச்சு வாங்க உரைக்கவும்,

அவளை மேலிருந்து கீழாக நக்கலாக பார்த்தவர் "உனக்கெல்லாம் இந்த வயசுக்கே மூச்சு வாங்குது…நானெல்லாம் உன் வயசுலே எவ்வளவு வேலை செய்வேன் தெரியுமா?இப்படி நோஞ்சனா இருந்தால் புள்ளை எங்கடீ பொறக்கும்?" என அன்றைய நாட்களுக்கான சுப்ரபாதத்தை அப்போதே தொடங்கி வைத்திருந்தார்.

அவரின் வார்த்தைகள் குந்தவையின் நெஞ்சில் ஊசியால் குத்திய உணர்வை கொடுத்தாலும் சிரித்த முகமாகவே "சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…வாங்க அத்தை" என உணவு மேசையை நோக்கி நடந்தவளின் கண்களில் நீர் வழிந்தது.

அதனை அவள் புறங்கையால் துடைத்துக்கொண்டு செல்வதை பார்த்தப்படியே அவளது மணாளன் கீழிறங்கி வந்தான்‌ கௌதம்.

தாயின் சொற்கள் அவனிற்கும் மிகுந்த வேதனையை கொடுத்தாலும்,தங்களை சிறு வயதிலிருந்து சுமைகளாய் அன்று சுகமாய் பாசம் காட்டி வளர்த்த தாயின் மீதிருந்த அன்பு அவரிடம் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத வகையில் வாயை இறுக்கி மூட வைத்திருந்தது.

எதுவும் செய்ய முடியாத இயலாமையில் இறுகிய முகத்துடன் வந்தவனை "ஹே கௌதம் கண்ணா வந்துட்டியாய்யா…சாப்பாடு எல்லாம் தயாரா எடுத்து வைச்சிட்டேன்…நீ வா கண்ணா சாப்பிடுவோம்" என மகனை வாஞ்சையுடன் அழைத்து சென்று மேசையில் அமர வைத்து உணவை பரிமாறினார்‌.

அவரே காலையில் எழுந்து மகனுக்காக உணவை சமைத்தது போல் மருமகளை அருகே நெருங்க விடாமல் அவரே தன் கணவனிற்கு தேவையான அனைத்தையும் செய்வதை ஒரு வித விரக்தியுடன் நின்று பார்த்திருந்தாள் குந்தவை.

அவளது கணவனுக்கான உரிமையும் அன்பும் அவர்களது பிரத்யேக அறையினுள் இருக்கும் வரை மட்டுமே செலுப்படியாகும்.

அவன் அந்த அறையை தாண்டி வெளியே கால் எடுத்து வைத்துவிட்டால் அது குந்தவையின் கணவன் அல்ல,மாமியார் பாண்டியம்மாளின் தலைமகன் கௌதம் தேவ் மட்டுமே‌!!

திருமணமாகி இத்தனை வருடங்களில் இரவு நேரத்தை தவிர மற்ற வேளைகளில் அவள் கணவனுக்கு உணவை பரிமாறியதுமில்லை.அவனை நெருங்க முற்பட்டதுமில்லை.அதிலும்,சில நாட்களில் கணவன் விரைவாக வீட்டிற்கு வந்துவிட்டால் மகனிற்கு தன் கையாலே உணவை பரிமாறி ஒரு வாய் உணவை ஊட்டி விடாமல் பாண்டியம்மாள் இருந்ததில்லை.

கணவனை ஏக்கமாக பார்த்தப்படி நின்றிருந்த வேளையில் "ஏய் இங்க மசமசன்னு நிற்காமல் பையனுக்கு சூடா ஒரு முட்டை தோசை ஊத்தி எடுத்திட்டு வா" என அவளை அதட்ட,

கௌதமோ மனையாளின் துக்கமறிந்த கணவனாய் தாயின் கைப்பிடித்து "அம்மா உங்க கையால் தோசை சுட்டு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு…ஒரே ஒரு தோசை நீங்க சுட்டுட்டு வாங்கம்மா" எனவும்,

மகன் அவ்வாறு கேட்கவும் மறுப்பு கூற இயலாமல் "இதோ கண்ணா" என்று சமையலறைக்குள் நுழைந்ததற்கு பிறகு கண்ணால் மனையாளை 'கிட்ட வாடீ' என அழைத்தவனிடம் 'இல்லை அத்தை இருக்காங்க' என்பது போல் கண்ணால் சிணுங்கிய மனையாளின் அழகில் கொள்ளை போன கௌதம் 'கிட்ட வாடிங்கறேன்' என இதழ்கடித்து செல்லமாய் அவளை அருகழைக்க,

அவளோ தயக்கத்துடன் 'ஏன் கௌதம் இப்படி செய்யறே?' என முணுமுணுத்து சிணுங்கி கொண்டே சமையலறையை ஒரு முறை பார்த்துவிட்டு நடந்து வந்தவளின் கையை எட்டிபிடித்து தன்னருகே இழுத்தவன் மீசை முறுக்கி "ஹே ஜில்லு இன்னைக்கு நீ செம்ம அழகா இருக்கடீ" என கிறக்கத்துடன் கூறி அவளது கன்னத்தில் அழுத்தமான முத்தமொன்றை வைத்தான்‌.

அதில் தன் கோலிக்குண்டு கண்ணை விரித்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்து வெட்கத்தில் சிவந்தவளின் மற்றொரு கன்னத்தையும் ஒற்றை கையால் அருகில் இழுத்து அதிலும் மீசை குறுகுறுக்க முத்தமிட்டு சிவக்க வைத்தவன் "அதையும் ஏன் விட்டு வைக்கணும் ஜில்லு" என குறும்புடன் கூறி கண்சிமிட்டியவுடன் அதுவரை அவளது நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பாரம் தூர விலகி விட,அவளது மனம் சந்தோஷத்தில் மிதந்தது.

இருப்பினும் 'மாமியார் வந்துவிடுவாரோ' என்ற அச்சத்துடன் சமையலறையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே "கௌதம் என்ன செய்யறே?அத்தை வந்தால் என்னாகும்" என அவனை கடித்துக்கொள்ளும் போதே அவளது குட்டி வாயினுள் தோசை வில்லை வைத்து அடைத்திருந்தான்‌.

அவள் அப்பாவியை தோசையுடன் அவனை பார்க்கவும் அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி "நீ எல்லா வேலையும் முடிச்சிட்டு சாப்பிட எப்படியும் பதினொன்று ஆகிடும்…அதான் நீ சாப்பிடு ஜில்லு" என்றான் கனிவு நிறைந்த குரலில்.

கணவனின் இந்த காதலுக்காகவே இன்னும் எத்தனை துயரங்களையும் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ளலாம் என அவளது மனம் கூப்பாடு போட்டது.

அவனது தாய் வெளியே வருவதற்குள் மேலும் இரண்டு வில்லை தோசையை ஊட்டிவிட்ட கௌதம்,தாய் வரும் அரவம் கேட்டு அவசரமாக அவளது இதழை உள்ளங்கையால் துடைத்துவிட்டு நிமிர்ந்து நேராக அமர்ந்தவன் "குந்தவை சட்னி கொஞ்சம் ஊத்தும்மா" என அவனது தோரணை மாறியதிலே மாமியாரின் வருகையை உணர்ந்த குந்தவை பெருமூச்சுடன் கணவனின் தட்டில் சட்னியை ஊற்றிவிட்டு விலகிக்கொண்டாள்‌.

ஏனெனில் கணவன் மனைவி நெருக்கத்தை தங்களது மாமியார் விரும்புவதில்லை வந்த சில மாதங்களில் உணர்ந்துக்கொண்டு இருவருமே அவரின் முன்பு விலகியே கண்ணால் காதல் செய்ய பழகிக்கொண்டார்கள்.

அனைத்தையும் புரிந்துக்கொண்டு செயல்படும் அவனது மனையாளின் மீது உயிரை வைத்திருந்தான் கௌதம்.அவளை பார்க்காமல் ஒரு நாள் உயிர் வாழ முடியாது என்பது நிலையில் மனையாளின் கொள்ளை கொள்ளையாய் ஆசையும் காதலும் வைத்திருந்தான் தேவ்.

பாண்டியம்மாள் "கண்ணா தோசை கொண்டு வந்துட்டேன்" என்றப்படி அவனருகே வந்தவர்,

அவனது தட்டில் அதனை வைத்து "சாப்பிடு" என ஆதுரத்துடன் கூறி முழுமையாய் வயிறு நிறைய உண்ண வைத்து பிறகு புடவை முந்தானையால் அவனது வாயை துடைத்துவிட்டவர் "கண்ணா பார்த்து சூதானமா வேலையை செய்" என அவனது தலையை வருடி பணிக்கு அனுப்பி வைத்தார்.

கௌதமோ தாயறியாமல் கண்ணாலே மனையாளிடம் 'கிளம்பறேன்' என்று கூறியவன்,இதழ் குவித்து முத்தமிட்டு சிரித்தப்படியே தன்னுடைய வண்டியில் ஏறி புறப்பட்டான்.

அவனது அந்த முத்தமே அன்றைய நாள் முழுவதும் மாமியாரின் வசவுகளில் இருந்து பெண்ணவளை காக்கும் ஊக்க மருந்து.

ஊரில் இருக்கும் பெரும்பாலான கணவன்கள் இவ்வாறு தான் மனைவி மற்றும் தாயின் உறவை பிறழ்வு ஏற்படாமல் சமநிலையில் வழிநடத்தி செல்கின்றனர்.


படித்துவிட்டு தங்களது கருத்துக்களை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

 
விவாஹம் 2:

images - 2023-02-04T131358.299.jpeg
சென்னையிலுள்ள பிரசித்தி பெற்ற தி.நகர் சாலையில் பத்து மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று உள்ளது.

அதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்கள் இரண்டையும் பாதுகாவலருக்கான முகமையகம் ஒன்று முகாமிட்டு இருந்தது.

அரசியல் தலைவர்கள்,திரைப்பட நடிகர்கள் தொடங்கி பேரங்காடி,கடைகள்,வீடுகள் என அவர்களின் பாதுகாப்பிற்காக மெய்க்காப்பாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை இவர்களின் நிறுவனம் மூலமாக சென்னையில் பெரும்பாலான இடங்களுக்கு விநியோகம் செய்கின்றார்கள்.

அவர்களது நிறுவனத்தின் வழியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவரின் பெயர்கள் மற்றும் அடையாளங்கள் அனைத்தும் முக்கிய பிரபலங்களின் தற்காப்பு நிலை கருதி நிர்வாக குழுவை சார்ந்த நபர்களால் ரகசியமாகவே வைப்பட்டிருந்தது.

அத்தோடு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவரின் பின்னணி முதற்கொண்டு தனிமனித ஒழுக்கம்,அவர்களின் பலம் ஆகியவற்றை முழுமையாய் அலசி ஆராய்ந்தற்கு பிறகே வேலையில் பணியமர்த்தம் செய்யப்படுவார்கள்.

அதில் சிலர் திரைத்துறையின் மீது கொண்ட மோகத்தால் நடிகர்களுக்கு பாதுகாவலராய் இணைந்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெறுவதற்காகவும் இந்த வேலையில் சேர விரும்பி விண்ணப்பம் போடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாளில் நேர்காணலின் மூலம் அவர்களின் திறமையையும் சமயோஜித புத்தியையும் பரிசோதித்து,அதனை வைத்தே எந்த இடத்தில் பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்று நிர்வாகம் முடிவு செய்யும்.

இதைப்பற்றி அறியாமல் சிலர் பலத்தை மட்டும் வைத்து இந்த வேலைக்கு முயற்சித்து நேர்காணலில் தோற்று சென்றுயிருக்கிறார்கள்.

இவர்களது நிறுவனத்தின் இந்த கோட்பாடுகளும்,அவர்களை தேடி வரும் அனைவருக்கும் நாணயம் தவறாமல் நீதியையும் நேர்மையையும் பின்பற்றி அவர்களின் இரகசியம் காக்கும் கடமையை சிறப்பாக செய்வதாலும் தமிழ்நாட்டில் இருக்கும் பெரும் புள்ளிகள் மற்றைய பாதுகாப்பு முகமையகத்தை விடுத்து நம்பிக்கையுடன் இவர்களின் நிறுவனத்தை தேடி வருகின்றார்கள்.

இவர்களது நிறுவனத்தின் பெயரே 'கியரண்டி செக்யூரிட்டி ஏஜென்சி சர்வீஸ்'.

எங்களை நாடி வருபவர்களுக்கு அரணாக இருந்து எந்த ஆபத்தும் நேராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று உறுதியளிக்கும் வகையில் இந்த பெயரை சூட்டியிருந்தார்கள்.

அத்தோடு வேலையில் சேருபவர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலும் குரல் கொடுக்க இந்த நிறுவனம் தவறுவதில்லை‌.

அதனாலே இங்கு விண்ணப்பிக்கும் ஆட்களில் பெண்களும் இருக்கிறார்கள் என்று குறிப்பிடத்தக்கது.

நிறைய பிரபலங்களும் அங்காடிகளும் அவர்களது நிறுவனத்தை நாடி வருவதால் ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதினால் இன்றும் அவர்களது முகமையகம் சார்ப்பாக நேர்காணல் ஒன்று நடத்தப்பட இருக்கிறது.

வெறும் ஐம்பது பேருக்கான வேலை நியமனத்திற்காக இரண்டாயிரம் பேர் விண்ணப்பத்திருந்தார்கள்.

அவர்களில் தங்களது தேடுதலுக்கு ஏற்ற தகுதி உடையவர்களை மட்டும் வடிகட்டி இருநூறு பேரை தேர்ந்தெடுத்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் நேர்காணலிற்காக வந்திருந்ததினால் இடப்பற்றாக்குறை காரணமாக வேறோரு இடத்தில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானம் ஒன்றில் அவர்கள் அமருவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலை பத்து மணிக்கு நடக்க விருக்கும் நேர்காணலிற்காக பல மாநிலங்களில் இருந்து ஆட்கள் எட்டு மணிக்கே அவ்விடத்தை சூழ்ந்துக்கொண்டார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரும் வெகு நேர காத்திருப்பிற்கு பிறகே ஒன்பது மணிக்கு மேலாகவே உள்ளே அழைக்கப்பட்டனர்.

அந்த இருநூறில் முற்பது பெண்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அனைவரும் உடற்பயிற்சியினால் வலுவேறிய கட்டுடல் மேனியுடன் பார்ப்பதற்கே சராசரியான அழகுடன் முரட்டுத்தனமான தோற்றத்துடன் இருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு சற்றும் பொருந்தாத வகையில் பெண்ணவளின் அங்க வளைவுகளை வெளியே எடுத்துக்காட்டும் வகையில் சிவப்பு நிற முழு நீள சுடிதாரில் பால் வெண்ணையில் குழைந்தெடுத்த சருமத்துடன் அழகு தேவதையாய் இருந்த ஒரு மங்கையை பார்த்த அனைவரும் வாயை பிளந்தனர்.

ஆண்கள் சிலரின் பார்வை இவளை கள்ளத்தனமாக ரசித்தது என்றால்,பெண்களின் பார்வையோ 'சின்ன வயசிலிருந்து அழுக்கு படாமல் வளர்ந்திட்டு இவயெல்லாம் இங்க எதுக்கு வேலை வந்திருக்காளோ?' என்பது போல் அலட்சியமாக படிந்தது.

அதிலும் ஒரு பெண் "ஏய் பொண்ணே,இது ஏதோ ஐடி இன்டர்வியூன்னு நினைச்சு வந்திட்டியா நீ?" என்றாள் எகத்தாளமாக.

அவளை உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்த அந்த அழகிய மங்கையோ "என்ன இன்டர்வியூன்னு தெரியாமல் வர நான் ஒண்ணும் உன்னை மாதிரி கூமுட்டை இல்லை" என இதழை சுழித்து தக்கப்பதிலடி கொடுத்து தலையை வேறுப்புறம் திருப்பிக் கொண்டாள்.

அதில் உடனிருந்த மற்றவர்கள் கொல்லென்று சிரிக்க,அவமானத்தில் முகம் கறுக்க "என்னடீ கொழுப்பா?" என பல்லை கடிக்க,

"ஆமா…நீ தான் எனக்கு சோறுப்போட்டு வளர்த்தே…ஆளையும் முகரையும் பாரு" என சீற,

"ஏய்…என்னடி லந்தா?பார்க்க சுண்டக்கா சைஸீல் இருந்திட்டு என்கிட்டயே எகிறீயா?வரீயா?நீயா நானான்னு ஒத்தைக்கு ஒத்தை பார்ப்போம்" என தனது சட்டையின் கையை மடித்துவிட்டு நாக்கை கடித்து சண்டைக்கு தயாராகினாள்.

அவளோ 'நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா?' என்பது போல் இகழ்ச்சியாக இதழை சுழித்தவள்,அவளை கண்டுக் கொள்ளாமல் சுற்றிலும் விழிகளை சுழற்றி அலசி ஆராய ஆரம்பித்திருந்தாள்.

ஆண்கள் சிலரின் பார்வை இவர்களின் மீது சுவாரசியமாக விழுந்ததோடு பெண்கள் குழுக்களாக கூடி நமுட்டு சிரிப்புடன் இவளை காணவும்,

அதில் கடுப்பான அந்த பெண்ணோ "உனக்கெல்லாம் அவ்வளவு திண்ணக்கமா?" என்று கேட்டப்படி கைமுஷ்டியை இறுக்கி அவளின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுவதற்காக அவள் கையை உயர்த்திய வேளையில் "ஆ" என்ற அலறலுடன் அடிப்பட்டு கீழே விழுந்திருந்தாள்.

"அம்மாஆஆஆ" என இடையை பிடித்துக்கொண்டு 'தன்னை யார் அடித்தது?' என்பது போல் முகம் சுருக்கி பார்க்க,

தன் கரங்களை தட்டிக்கொண்டு துப்பட்டாவை நேர்த்தியாக போட்டு இவளை பார்த்து 'எப்படி?' என்பது போல் ஏளனமாக புருவம் உயர்த்தி சிரித்தது வேறு யாருமில்லை,சாட்சாத் அந்த அழகிய மங்கையே தான்.

'பார்க்க எலி சைஸ்ஸில் இருக்கா?அடிச்சா இடி மாதிரி விழுவுது?யாருடா இவ?' என ஆண், பெண் என இருப்பாலரும் அவளை வாயை பிளந்து பார்த்திருந்தினர்.

அவள் வேறு யாருமல்ல,குந்தவையின் முதல் பாசமிகு தங்கை மற்றும் பராந்தகன் மற்றும் மாதேவியின் இரண்டாம் அருந்தவ புதல்வி நந்தினி.

பொன்னியின் செல்வன் நாவலின் மீது அவர் கொண்ட பற்றே அவரின் பெண்களுக்கு அந்த நாவலின் கதாப்பாத்திரத்தின் பெயரை சூட்டியதற்கு காரணமாய் இருந்தது.

நந்தினியோ "அசந்த நேரமா பார்த்து மேலே கைவைக்க வரீயா?யாருக்கிட்ட?" என திமிராக விரல் நீட்டி எச்சரித்ததோடு சுற்றியிருக்கும் அனைவரையும் ஒரு ஏளன பார்வை பார்த்தப்படி அங்கிருந்த கல்மேடை ஒன்றின் மீது ஏறி நின்று அவ்விடமே அதிரும் வகையில் கைத்தட்டியவுடன் வேகமாக ஓரிடத்தில் இருந்து வந்த ஒரு ஆஜாபாகுவான இளைஞன் அவளிடம் பவ்யமாக ஒரு ஒலிவாங்கி கொண்டு வந்து நீட்டினான்.

அதைக்கண்டு அனைவரும் 'இங்கு என்ன நடக்கிறது?' என்று ஒன்றும் புரியாமல் பரபரப்புடன் அவளை பார்ப்பது போல் நின்றிருக்க,கீழே விழுந்திருந்த பெண்ணும் இடையை பிடித்து எழுந்து நிற்க,

தொண்டையை செருமிய நந்தினி தன்னுடைய கணீர் குரலில் "ஹாய் லேடிஸ் அன்ட் ஜென்டில் மேன்…நான் யாருன்னு உங்களுக்கெல்லாம் குழப்பமா இருக்கில்லை" எனவும்,

'ஆமாம்' என அவர்கள் தலையாட்டவும்,

அனைவரையும் பார்வையால் துளைத்தப்படி "ஐயம் ஒன் ஆஃப் தி பார்ட்னர் ஆஃப் கியாரண்டி செக்யூரிட்டி ஏஜென்சி சர்வீஸ்" ஆளுமை நிறைந்த குரலில் கூறினாள்.

அதைக்கேட்டு மற்றவர்களோ பேரதிர்ச்சியுடன் "ஏதே பார்ட்னரா?" என தங்களுக்குள் சலசலக்க,

அவளை சீண்டி வம்பிழுத்த பெண்ணோ 'உன் கதை கந்தல்' என எச்சலை கூட்டி விழுங்க,

அவர்களது பேச்சுக்குரல்கள் அனைத்தும் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்த "ஜஸ்ட் ஷட் அப்…" என அரங்கமே அதிர அவள் சீறியவுடன்,

அவ்விடமே குண்டு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்பது போல் நிசப்தமாக இருந்தது.

அதில் "குட்" என்று சுற்றியிருக்கும் அனைவரையும் அழுத்தமாக பார்த்தவள் "உங்களோடு இன்டர்வியூ முடிந்தது…தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் யாரெல்லாம் என்பதை என்னோட ஆஸிஸ்டென்ட்ஸ் சொல்லுவாங்க…கைஸ்" என்று அவள் விரல் சொடக்கிட்ட நொடியினில் அந்த இருநூறு பேரிலிருந்து பதினைந்து பேர் தனியாக பிரிந்து அவளருகே வந்தவுடன் "ஆ" என மொத்தக்கூட்டமும் வாயை பிளந்து பார்க்க,

"மை டியர் பாய்ஸ் இந்த கூட்டத்தில் யாரெல்லாம் செலக்ட் ஆனாங்களோ அவங்கயெல்லாரையும் நம்ப கம்பெனி சி.ஈ.ஓ கிட்ட அனுப்பிடு…மீதி பேரையெல்லாம் இப்படியே வீட்டுக்கு அனுப்பிடுங்க" என மடமடவென ஆணைப்பிறப்பித்தவள்,

சற்று முன்பு அவளை அடிக்க பாய்ந்த அந்த பெண்ணை இகழ்ச்சியாக பார்த்து விரல் கொண்டு சுட்டி காட்டியவள் "ஹலோ…யூ…நீயெல்லாம் இந்த வேலைக்கு கொஞ்சமும் பிட் இல்லை…இந்த வேலைக்கு எவ்வளவு முரட்டுத்தனமும் பலமும் தேவையோ அதே அளவு நிதானம் ரொம்பவே அவசியம்…உனக்கு சுட்டுப் போட்டாலும் அதெல்லாம் கிடையாது…இந்த மாதிரி எமோஷனல் இடியட்ஸ் இங்க வேண்டாம்…கெட் அவுட் ஆஃப் மை பிளேஸ்" என முகத்திலடித்தாற் போன்று கூறி அவளை அரங்கத்திலிருந்து வெளியே அனுப்பினாள்.

அத்தோடு ஆண்களை பார்த்து "யூ ஆர் சச் அ ஜொள்ளு பாய்ஸ்…பொண்ணுங்களை பார்க்காதது மாதிரி அப்படி வாயை பிளந்து பார்த்திட்டு இருக்கீங்க?பியூச்சரில் ஏதாவது ஹீரோயினுக்கு பாடிகாடா போய் எங்க நிறுவனத்தோடு மானத்தை வாங்காதீங்க…உணர்ச்சிகளை கட்டுப்படுத்தறவன் தான் மனுஷன்…திஸ் இஸ் தி பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்" என கர்ஜிக்கும் குரலில் எச்சரித்து கீழே இறங்கினாள்‌.

உடனே அங்கே கூடியிருந்த கூட்டம் இரண்டாக பிரிந்து நிற்க,அதனை பார்வையால் மெச்சியவள்,ஒலிவாங்கியை அணைத்துவிட்டு பின்னோடு வந்த அவளது உதவியாளர் ஒருவரிடம் கொடுத்து "பாய்ஸ்…ஜொள்ளு பசங்களை சலிச்சு விட்டுட்டு சின்சியரா இருந்த பசங்களை மட்டும் செலக்ட் பண்ணி ஜீ.டி கிட்ட அனுப்புங்க…அன்ட் ஆல்சோ பொண்ணுங்களில் அதோ ஓரமா ஓய்ட் டீசர்ட் போட்டிருக்க பொண்ணையும் அந்த பிளாக் டிரஸ் போட்ட பொண்ணையும் தவிர,மீதியெல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுங்க‌…அது பத்து பேரா இருந்தாலும் சரி…யாராலையும் நம்மோட ஏஜென்சி நேம் ஸ்பாயில் ஆகக்கூடாது…குரேஷி நீ தான் எல்லாரையும் லீட் பண்ணனும்…செலக்ட்டர்ஸ் லிஸ்ட்,அவங்களோட பின்னணி,அவங்களுக்கான சிட்டிசன் ப்ரூப்…" மேலும் சில தகவல்களை கூறிக்கொண்டே அரங்கத்தின் வெளியே வந்திருந்தவள் தன் வண்டியில் ஏறி அமர்ந்து,

"எல்லாத்தையும் பரிசோதித்து எனக்கு அனுப்பிடுங்க…இதிலே எந்தவொரு தப்பும் நடக்கக்கூடாது…நான் கூட சும்மா விட்டிருவேன்…ஆனால் சார்?அதுக்கு என்ன தண்டனை கொடுப்பாருன்னு தெரியுமில்லை…சோ வொர்க் சின்யர்" என எச்சரித்துவிட்டே தனது சிவப்பு நிற இரு சக்கர வாகனத்தில் அவ்விடத்திலிருந்து சிட்டாய் பறந்திருந்தாள்.

என்றுமே வெளியுலகத்திற்கு புயலை போன்று காட்சியளிக்கும் அவள் ஒரு கானல் நீர் என்பது அவளை நன்கு அறிந்த ஒருவனிற்கு மட்டுமே தெரியும்.ஏனெனில் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் நந்தினியை போன்றே உலகத்திற்கு தெரியாமல் அவள் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் ஏராளம்.

மொத்தத்தில் அழகிற்குள் ஒளிர்ந்திருக்கும் அமுத விஷம் தான் நந்தினி‌.

சிறிது நேரத்தில் அந்த மைதானத்திற்குள் ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் அவளது உதவியாளர்கள் முதற்கொண்டு நேர்காணலுக்கு விண்ணப்பித்தவர்களும் ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டு முடிப்பதற்கு முன்பே தலைமை பொறுப்பை கொடுத்துவிட்டு சென்ற குரேஷி என்பவன் "ஏய் மேடம்…அடுத்த கால் பண்ணறதுக்குள்ள லிஸ்ட் அனுப்பணும்…இல்லை ஜீ.டி சார் நம்மை கண்டம் பண்ணிடுவார்…வாங்க" என்றான் சற்றே பயத்துடன்.

உடனே மற்றவர்களும் விரைவாக தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்புற செய்து அவளிற்கு பெயர் பட்டியலை அனுப்பி வைத்த கையோடு அவர்களால் "ஜீ.டி சார்" என்று அழைக்கப்பட்டவனிடம் தேர்வானவர்களை அழைத்து சென்றார்கள்.

இறுதியாக,அவர்களின் பலத்தை பரிசோதித்தில் வெறும் இருபது பேர் மட்டுமே அந்த ஜீ.டி என்பவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

எவ்வளவு நுண்ணியமாக உத்வேக திறமையுடன்,அதேசமயம் மிக எளிமையாக ஒரு நேர்காணலை நடத்தி முடித்திருந்தது அந்நிறுவனம்.

*************
தன் கையில் வைத்திருந்த பொருளை வெறித்து பார்த்திருந்தவளிற்கு கோபம்,எரிச்சல்,வெறுப்பு,இயலாமை என உலகத்திலிருக்கும் அத்தனை உணர்ச்சிகளும் ஒரு நேரத்தில் தோன்றியது.

அத்தோடு இதற்கெல்லாம் முழுமுதற்காரணமான தனது கணவனை எண்ணுக்கையில் முகமெல்லாம் இரத்த நிறத்தை பூசி சிவந்துப்போனது.

அதனால் பெரும் சீற்றத்தோடு குப்பை தொட்டியில் அந்த பொருளை வீசியெறிந்தவள் அலங்கார மேசையின் முன்பு வந்து நின்றாள்.

கண்ணாடி முன் நின்று இப்படியும் அப்படியுமாக திரும்பி தன் அழகை ஒரு முறை பார்வையால் அளந்தவளிற்கு கர்வத்தில் அவள் கண்கள் மின்ன 'வாவ் ஷ்ரேயா…நீ செம்ம அழகுடீ' என தன் எழில் மேனி வளைவுகளில் சொக்கியவளின் கரம் வயிற்று பகுதியை ஒரு முறை தொட்டு தடவியவுடன் மீண்டும் விடைப்பெற்றிருந்த சினம் தலைத்தூக்கியது.

அதில் "ஊப்" என உஷ்ண பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள் 'எல்லாருக்கும் இந்த உண்மை தெரிந்தால் தானே பிரச்சனை…நான் யாருக்கிட்டயும் சொல்லறதா இல்லை…இதை இன்னைக்கே அழிச்சிடறேன்' என எண்ணி ஒரு கொடூர முடிவை எடுத்துவிட்டாள் பாவையவள்‌.

அதன்பிறகே சிறிது ஆசுவாசமடைந்தவளாய் இதழிற்கு சாயம் பூசிக்கொண்டிருந்த வேளையில் அவளது கையிலிருந்த பொருள் வேகமாக பறிக்கப்பட,அதற்கு காரணம் 'யார்' என்பதை அறிந்தவளாய் முகம் சுழித்து "சித்து உனக்கு வேற வேலையே இல்லையா?உனக்கு நான் மேக்கப் பண்ணிக்கிட்டா என்ன வந்தது?" என எரிச்சலுடன் கத்த,

அவனோ அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவளை பின்னாலிருந்து அணைத்தவன் காதரோம் "ஷ்ரேயு செல்லக்குட்டி…நீ மேக்கப் போடாமலே செம்ம அழகுடீ" என கிறக்கத்துடன் கூறவும்,

அதில் மயங்கியவளும் "அப்படியா?" கண்ணாடியின் வழியே தெரிந்த அவனது உருவத்தை பார்த்து கேட்கவும்,

அவளை தன்புறமாக திருப்பிய அவளது கணவன் பெண்ணவளின் விரிந்திருந்த இதழின் வழியாக இலேசாக வெளியே தெரிந்த பல்லை தொட்டுக்காட்டி "ஆமாம்டீ செல்லம்…அதுவும் உன்னோட தெத்து பல் இருக்கே…அதை உலக அழகியால் கூட அடிச்சுக்க முடியாது…அவ்வளவு அழகு" என சரசத்துடன் கூறியப்படி குனிந்து அவளின் இதழை சிறைப்பிடித்தான்.

அவனை மிகவும் கவர்ந்திழுத்த அந்த பல்லிற்கு சிறப்பான பரிசு ஒன்றையும் வழங்க,அதுவரை கணவனின் மீது கடும் கோபத்தில் இருந்தவளிற்கு அவை எங்கோ காணாமல் போக அவளும் அவனோடு உருகி இழைய தொடங்கினாள்.

விழிகள் சொருக "மாமூஊஊ" என உணர்ச்சி பெருக்குடன் அழைத்தப்படி அவனது சிகையை நெறித்து அவனோடு ஒத்துழைத்தவுடன்,மனைவி எப்போதோ ஒரு முறை தான் தன்னில் மயங்கி அவ்வாறு அழைப்பால் என்பதை அறிந்த கணவனின் கரம் சற்று எல்லை மீற எண்ணி அவளின் புடவையின் வழியாக கைவிட்டு முன்னேற முயன்றது.

பெண்ணவளின் அடிவயிற்றை அவனது கரம் அழுத்தமாக வருடியதற்கு பிறகே சுய உணர்விற்கு வந்த ஷ்ரேயா வெடுக்கென்று தன் கணவனை தன்னிலிருந்து பிரித்தெடுத்து தள்ளிவிட்டாள்.

அவள் தள்ளிய வேகத்தில் ஒல்லியான உடல்வாகுடன் இருந்த அவளது கணவன் அதிர்ச்சியுடன் "ஷ்ரேயு" என மெத்தையில் விழுந்திவிட,

அவளோ பத்ரகாளியாய் உருவெடுத்து நாசி விடைக்க "உன் மேலே நான் செம்ம கடுப்பில் இருக்கேன்….ஷ்ரேயு…ம…" என ஒரு நொடி நிறுத்தியவள் மீண்டும் "மண்ணாங்கட்டி கொஞ்சுட்டு கிட்ட வந்தே…நடக்கிறதே வேறே‌…போய்யா முதல்ல ரூமை விட்டு வெளியே" என ஆக்ரோஷமாக கத்தினாள்.

மனையாள் அவனை திட்டுவது ஒன்றும் புதிதல்ல,ஆனால் இன்றைய அவளின் அதீத ஆத்திரத்திற்கும் மரியாதைக்குன்றிய அழைப்பிற்கும் காரணமறியாமல் குழப்பமடைந்தாலும்,அவளின் மீதிருந்த நேசத்தினால் "ஷ்ரேயு…என்னாச்சுப்பா?உடம்பு ஏதும் சரியில்லையா?" அப்போதும் படுக்கையிலிருந்து எழுந்து வந்து அக்கறையுடன் வினவ,

அதில் ஒரு நொடி குற்றவுணர்ச்சியில் தலைக்குனிந்து இதழ்கடித்தாலும் சடுதியில் சுதாரித்து நிமிர்ந்தவள் "யோவ்…உன்னை வெளியே போன்னு சொன்னேன்…போ" என வாசலை நோக்கி கைக்காட்டினாள்‌.

இதைவிட ஒரு ஆண்மகனிற்கு பெரிதான அவமானம் வேறு எதுவுமில்லை.

ஆனால் அவன் தான் என்றோ தன்மானம்,சுயமரியாதை அனைத்தையும் இழந்து பெற்றோரை விட்டு தன்னவளிற்காக வீட்டோட மாப்பிள்ளையாக திருமணம் செய்து வந்துவிட்டான் என்பதால் விரக்தியாக மனையாளை ஒரு பார்வை பார்த்ததோடு அறையிலிருந்து வெளியேறிவிட்டான்.

பெண்ணவளோ அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவள் 'முதல்ல இந்த கருமத்தை எப்படியாவது ஒழிச்சாகணும்…அப்போ தான் எனக்கு நிம்மதி' என முடிவெடுத்து மருத்துவமனையை நோக்கி தனது வாகனத்தில் செல்ல தொடங்கினாள் பாண்டியம்மாளின் மூன்றாம் வாரிசு ஷ்ரேயா.

அவள் அழகில் பேரழகி தான்,ஆனால் குணத்தில் ஒரு காட்டேரி.

ஏனெனில் இப்போது அவள் எடுத்திருக்கும் விபரீத முடிவு,தன் வயிற்றில் வளரும் சிசுவை துடிக்க துடிக்க கொல்வதற்கு என்று கூறினால் மனையாளின் மீது உயிரையே வைத்திருக்கும் கணவனால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

அத்தோடு அவ்வீட்டிலே ஒரு பெண் குழந்தைக்காக தவமிருக்க,மற்றொரு பெண்ணோ உருவாகிய சிசுவை இரக்கமின்றி அழிக்கும் முடிவை எடுத்திருக்கிறாள்.

விதியின் விளையாட்டு சற்றே விசித்திரமானது போலும்.


https://pmtamilnovels.com/index.php?threads/❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️-கருத்து-திரி.118/
 
விவாஹம் 3:


காலையில் எழுந்ததிலிருந்து குந்தவையின் நெஞ்சம் ஏனோ படபடவென அடித்து கொண்டிருந்தது.


ஒவ்வொரு மாதமும் இந்த ஒரு நாள் அவளது வாழ்வில் என்றென்றும் மிகவும் முக்கியமானதாக அவள் கருதும் நாள்.


சுப மங்களத்திற்கு முன்பான பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள் எந்த அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றதோ,அதே அளவு திருமணமாகிய ஒவ்வொரு பெண்ணிற்கும் கடந்து செல்லும் மாதவிடாய் காலங்கள் தான் புனிதமான நாட்களாக கருதப்படும்.


ஏனெனில்,அவையே பெண்ணவளின் கருவில் ஒரு உயிர் ஜீவித்ததற்கான அறிகுறி.


குந்தவையும் மாதவிடாய் காலம் தள்ளி சென்ற உற்சாகத்திலும்,அதேசமயம் ஒவ்வொரு மாதமும் எதிர்நோக்கி ஏமாந்த அதிருப்தியில் உண்டான பதட்டத்திலும் கர்ப்பம் பரிசோதிக்கும் கருவியை கையில் வைத்துக்கொண்டு தவிப்புடன் நின்றிருந்தாள்.


குளியலறை முன்பு நின்று 'உள்ளே செல்வதா?வேண்டாமா?' என்ற யோசனையுடன் நின்றிருந்தவளின் இதயம் தடதடக்கும் ஓசை வெளியே கேட்டுவிடுவது போல் படபடவென அடித்துக்கொண்டது.


அச்சமயம் அவளை பின்னாலிருந்து வயிற்றோடு அணைத்துக்கொண்ட கௌதம் "ஜில்லு எதுக்குடீ இப்போ இந்த பதட்டம்?" என காதோரம் மீசை ரோமம் உரச பேச,


அதில் அவளின் கவனம் களைந்து மேனி சிலிர்த்து அடங்கினாலும், தற்போது நெஞ்சை ஆட்கொண்ட அச்சத்தை மறைத்து முகத்தை மட்டும் பின்னால் திருப்பி மெல்லியதாக புன்னகைத்தவள் "நாள் தள்ளிப்போயிருக்கு கௌதம்" என கூற,அதில் மகிழ்ச்சியை விட குரலில் தவிப்பே முதன்மையாக வெளிப்பட்டது.


அதனை உணர்ந்த கௌதம் பெண்ணவளை நன்றாக தன்புறம் திருப்பி,அவளின் கண்களில் தெரிந்த வலியும் இதழ்கள் துடித்த விதமும் குந்தவையின் மன துயரத்தை அவனிற்கு தெள்ள தெளிவாக எடுத்துரைத்தது.


அவளை இமை சுருக்கி செல்லமாக முறைத்து "ஜில்லு…ஜில்லு" என நெற்றியோடு நெற்றி முட்டி,


"இப்போ எதுக்கு உனக்கு பதட்டம்?குழந்தை உருவாகுவதற்கு முதல் எதிரியே இந்த மன அழுத்தம் தான்…எப்போதும் மனசை ஒருநிலை படுத்தி அமைதியா இரு…நல்லதே நடக்கும் செல்லம்" என அவளின் கன்னம் பற்றி சமாதானம் செய்தான் அவளின் ஆதர்ஷ கணவன்.


குந்தவையோ விழிகள் கலங்க "நான் பதட்டப்படக்கூடாதுன்னு நினைச்சாலும் என்னை அறியாமலே அந்த படபடப்பு வந்திடுதுங்க…நான் என்ன செய்யறது?" என்றாள் நலிந்த குரலில்.


அவளின் துயரம் அவனின் இதயத்தை புழுவாய் அரித்தாலும் அதை அடக்கி மனையாளின் விழியோடு விழி நோக்கி "ஜில்லு நான் எப்போவும் சொல்லற அதே விஷயத்தை இப்போதும் சொல்லறேன்…நமக்கு வாழ்க்கை முழுவதும் குழந்தை இல்லைனா கூட உனக்காக நானும் எனக்காக நீயும் இருந்தால் போதும்டீ…வேறு எதுவும் நமக்கு வேணாம்" என மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு நெஞ்சை கல்லாக்கி கொண்டு அதை கூறினான்.


ஏனெனில்,யாருக்கு தான் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்காது‌.


குந்தவையோ கணவன் கூறியதில் பதறிப்போய் அவனின் முரட்டு அதரங்களை தன் கரம் கொண்டு மூடி "கௌதம் அப்படி மட்டும் சொல்லாதீங்க…எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் குழந்தையும் எனக்கு ரொம்ப முக்கியம்" என்றாள்.


இவனோ அவளை ஆழ்ந்து பார்த்து 'பிறக்காத குழந்தையும் நானும் ஒண்ணா?' என மனம் சுணங்கினாலும் வெளியே அதனை மறைத்து,அவளின் கரத்தை விலக்கி "எல்லாம் சரிடீ..முதல்ல புள்ளை வேணும்னா?போய் கார்ட் போட்டு பார்த்தால் தான் புள்ளை வருமா இல்லையானு தெரியும்…அதைவிட்டுட்டு போவோமா வேணாமான்னு கபடி ஆடிட்டி இருந்தால் எப்படிடீ செக் பண்ணறது?போ போய் முதல்ல செக் பண்ணு" மனையாளின் தோளில் கைவைத்து குளியலறை உள்ளே தள்ளிவிட,


அவளோ தலையை மட்டும் இவன்புறமாக திருப்பி இதழ்கள் துடிக்க "பயமா இருக்கு கௌதம்" என கலக்கத்துடன் கூற,


அதில் அவனது நெஞ்சம் விம்மினாலும் மறைத்துக்கொண்டு பெண்ணவளை குறுகுறுவென பார்த்து "இப்போ என்ன உனக்கு தனியா உள்ளே போக பயமாயிருக்கு…சரி விடு…நானும் உன் கூடவே வந்து செக் பண்ண வரேன்…வா…வா…எனக்கு வேலைக்கு நேரமாகிடுச்சு" என பரபரப்புடன் கூறி அவளை இடித்துக்கொண்டு அவனும் குளியலறைக்குள் நுழைய போனான்.


அதில் தன் துக்கம் மறந்து முகம் சிவந்தவள் "ஐய்யோ கௌதம்…விடு" என அவனின் மனைவி காலை உதறி சிணுங்க,


"ஏய் நீ தானேடி…தனியா போக பயமா இருக்குன்னு சொன்னே…அப்புறம் என்ன துணைக்கு நானும் வரேன்…அப்போ தான் அச்சாரத்தை ஆழமா போடமுடியும்" என விஷமத்துடன் கண்சிமிட்டி பெண்ணவளின் புடவையின் கொசுவத்தில் கைவைக்க,குந்தவையோ துள்ளி குதித்து "ஐய்யோ…என்ன செய்யறே கௌதம்?எனக்கு பயமே போயிடுச்சு விடுடா" என அவனது கரத்தை தட்டிவிட்டவளின் மேனியெல்லாம் குப்பென்று சிவந்துவிட்டது‌.


அவனோ குறும்பாக மீசையை முறுக்கி "ஜில்லு உனக்கு உதவி செய்ய தானே டி…" என மீண்டும் அவளை அணைக்க வந்தவனின் முகத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டவள் "கம்முன்னு இங்கே இருக்கலை…அடி வெளுத்திடுவேன்" என விரல் நீட்டி எச்சரித்தாள்.


அவனோ போலியாக அவளை முறைத்து "ஏய் நான் போலீஸ்காரன் டி…என்னையே நீ இப்படியெல்லாம் மிரட்டறே?" என,


அவளோ இதழை சுழித்து இமை சுருக்கி "போலீஸ்காரனெல்லாம் இந்த வீட்டுக்கு வெளியே தான்..இங்க நீங்க போலீஸ் ஆபிசர் கௌதம் தேவ் இல்லை…வெறும் கௌதம் மட்டும் தான்…புரிஞ்சுதா?" என அவனின் மீசையை பிடித்து ஆட்ட,


"ஆ..வலிக்குதுடீ" என அலறியவனின் கரமோ அதற்கு நேர்மாறாக பெண்ணவளின் இடையை பிடித்து தன்னருகே இழுத்தது.


அவனது கரம் பட்ட மேனியோ அவனிடம் உருகி கரைந்தாலும் "ஐய்யோ மாமா‌‌…நீ எதுக்கு அடிப்போடறேன்னு தெரியும்…ஆளை விடுங்க சாமி" என புன்சிரிப்புடன் அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு வெட்கத்துடன் குளியலறைக்குள் ஓடி கதவை சாற்றி கொண்டாள்.


மனையாளின் வெண்ணிற வட்டவடிவ மதிமுகம் சிவந்து பார்ப்பதற்கு பேரழகியாய் காட்சியளித்தவளை கண்டு வாய்விட்டு தலைக்கோதி சத்தமாக சிரித்த கௌதம் "ஏய்…நில்லுடி" என கதவை தட்ட,


"சும்மா இருங்க கௌதம்" என அவள் நாண சிணுங்கலோடு அவனை அடக்கிவிட்டு சிரித்த முகமாக திரும்பியவளின் அழகிய வதனம் கையிலிருந்த அந்த சாதனத்தை பார்த்தவுடன் வெளிறிப்போனது.


அதேப்போல் தன் இல்லாள் உள்ளே நுழைந்ததற்கு பிறகு வெளியே நின்றிருந்த கௌதமின் முகத்திலிருந்த சிரிப்பு துடைத்தெறியப்பட்டு கடும்பாறையென இறுகிப்போனது.


அவனிற்கு எட்டு வருடங்களாக குழந்தையில்லாத வேதனையை விட,தாய் முதல் சுற்றத்தார் வரை குந்தவையை 'மலடி' என வஞ்சிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் சாடுவதினால் உண்டான வலியை அனுபவித்த மனையாளின் மெல்லிய மனதை எண்ணியும்,ஒவ்வொரு மாதமும் குழந்தையை எதிர்ப்பார்த்து ஏமாந்துப்போகும் அந்த பேதை பெண்ணின் துயரம் மட்டுமே அவனிற்கு மிகுந்த வலியையும் சினத்தையும் கொடுத்தது.


ஏனெனில்,திருமணமாகி எட்டு வருடங்கள் கடந்த ஒரு தம்பதியினர் இருவரில் குழந்தை உருவாகாத காரணத்திற்காக ஆடவனை விட்டு பெண்களை மட்டுமே காரணகர்த்தாவாக்கி பழி சொல்லும் இழிவான உலகத்தில் பிறந்ததற்கு கௌதம் தன்னையே வெறுத்தான்.


'அது என்ன ஆண்கள் மட்டும் எப்போதும் திடாக்காத்திரமாக இருப்பார்களா?அல்லது பெண்கள் தான் பிறக்கும் போது குறையோடு பிறப்பார்களா?எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டும் குறை கூறி இழிவுப்படுத்துவது எதற்காக?' என பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் மொத்த சமுதாயத்தின் மீதும் கௌதம் ரௌத்திரம் கொண்டான்.


வெளியுலகத்தில் காவல் அதிகாரியாக ஊரையே தன் கட்டுப்பாட்டில் வைத்து குற்றவாளிகளுக்கு சிம்மச்சொப்பனமாய் விளங்கும் கௌதமோ,வீட்டிலோ மனையாளின் அன்பிற்கு அடிபணிந்து தன்னவளின் மீது வைத்திருக்கும் நேசத்திற்காக அவளிற்காக வருந்தி தன் அறையினுள்ளே நடைப்பயின்றான்.


புருவம் நெரிய தன்னவளிற்காக காத்திருந்த நொடிகள் அனைத்தும் அவனது இதயம் நின்று துடித்துக் கொண்டிருந்தது.


'குழந்தை அல்ல' என்று அறிந்தால் மனையாளின் முகத்தில் தோன்றும் கவலையை கண்கொண்டு காணமுடியாமல் உண்டான தவிப்பே அவனை பலவீனப்படுத்திக்கொண்டிருந்தது.


அனைத்திலும் நேர்த்தியாக இருக்கும் கௌதமிற்கு மிகப்பெரிய பலவீனம் அவனது தாயும் இல்லாளும் தான்!!


அன்னையின் மீதுள்ள அன்பினால் அவர் குந்தவையை அடிமை போல் நடத்துவதை கூட பொறுத்துக்கொள்பவனால் குழந்தை சம்பந்தமாக அவர் ஏதேனும் ஒரு வார்த்தை கூறினால் எரிமலை சீற்றத்துடன் பொங்கி சீறி எழுந்து விடுவான்.


அதனால் மகனின் முன்னிலையில் பெரும்பாலும் குறை கூறாமல் அடக்கிவாசிப்பவர்,அவன் வாசலை தாண்டிய நொடி தொடங்கி,நாக்கை சாட்டையாய் மாற்றி அவளை விளாசி தள்ளிவிடுவார்.


அதையும் தன்னவனிற்காக நிதானித்துப்போகும் குந்தவையால் குழந்தைபேறு இல்லாத குறையை அவர் குத்திக்காட்டுவதை மட்டும் தாங்கிக்கொள்ள முடியாமல் மனம் உடைய கண்ணீரால் கரைந்துப்போவாள்.


தாயின் நேரத்திற்கு ஏற்றது போல் நிறம் மாறும் அவரின் குணம் பற்றி குந்தவை எதுவும் கூறவில்லை என்றப்போதிலும், மேலோட்டமாக அதனையெல்லாம் அறிந்தே இருந்தான் கௌதம்.


ஆயினும்,தன் இரத்தத்தை அமுதாக்கி தன்னுயிர் பாதுகாத்து வளர்த்து வந்த தாயினை எதிர்த்து கேள்வி எழுப்பமுடியாமல் மனக்குமுறலை அடக்கி கொண்டிருந்தான்.


இன்றும் தனக்கு வாரிசு வேண்டும் என்ற ஆசையை காட்டிலும்,மனையாளின் வேதனை நீக்குவதற்காகவேனும் ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்று தனக்குள்ளே பிரார்த்தித்தப்படி இருந்தான்.


அச்சமயம் குளியலறை திறக்கும் ஓசை கேட்டு நடையை நிறுத்தி,சொர்க்க வாசல் திறந்ததும் கடவுளை தரிசிக்கும் பரவசத்துடன் தன்னவளை நோக்கி திரும்பினான்.


விடயத்தை மனையாட்டியின் முகத்திலிருந்தே அவதானிக்க முயன்றான் கௌம்.


அவளின் முகம் கலங்கி இருண்டிருந்த விதமே,அவனிற்கு கறந்த பாலை போல் உண்மையை வெளிச்சமிட்டு காட்டியது.


குந்தவையோ ஏமாற்றம்,வலி,துயரம்,குற்ற குறுகுறுப்பு போன்ற கலவையான உணர்ச்சிகளோடு தன்னவனை கண்ணீரோடு பார்த்திருக்க,தன்னவனோ மனதின் பாரம் தாங்காமல் அவளை தாவி வந்து அணைத்துக்கொண்டான்‌.


பெண்ணவளும் கணவனின் நெஞ்சில் தலைசாய்த்து கண்ணீர் சிந்த,ஆடவனோ வார்த்தையில் வெளிப்படுத்தாமல் தன் செயலின் மூலம் ஆறுதல் அளிப்பது போல் அவளின் சிரத்தில் தலைவைத்து அழுத்தி,அவளின் முதுகை பரிவுடன் நீவிவிட்டான்.


மனைவியின் சுகத்தில் பங்கெடுத்து கொள்வது மட்டுமின்றி அவளது துக்கத்திலும் பங்கெடுத்து கொள்ளும் ஆண்மகனே சிறந்த கணவான் ஆவான் என்பதற்கு ஏற்ப கௌதம் நல்ல கணவனாக குந்தவைக்கு பக்கப்பலமாக இருந்தான்.


சில நிமிட நேர அணைப்பும் இதமான வருடலும் 'உனக்காக நான் இருக்கிறேன்' என நம்பிக்கையை விதைத்து குந்தவையின் துயரத்தை நீக்கி அமைதியை கொடுத்தது.


அதனால் கணவனிடமிருந்து விலகி கண்களை துடைத்துக்கொண்டு மெல்லியதாக முறுவலித்த காரிகை 'தேங்க்ஸ்' என்பது போல் விழியாலே அவனிற்கு செய்தி அனுப்பி நுனிக்காலில் எம்பி அவனது கன்னத்தில் முத்தமொன்றை பதித்தவளின் முகம் இப்போது பரபரப்புக்கு தாவியது‌.


தன் தலையிலே தட்டி "ஐய்யோ கௌதம்…மணி எழாகிடுச்சு…நான் இன்னும் சமைக்கவேயில்லை…அத்தைக்கு வேற பசியெடுத்திடும்…யாதவ் வேற இன்னைக்கு முதல் முதலாக வேலைக்கு கிளம்பறான்…அவனை வேற வழியனுப்பணும்…சித்துவும் ஏதோ முக்கியமான வேலையா வெளிய போகணும் சீக்கிரம் எழுப்பி விடுங்க அக்கான்னு சொல்லிட்டு இருந்தாரு…உங்களுக்கும் பசியெடுக்கும்…நீங்களும் சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட வாங்க" என நொடி நேரத்தில் துக்கத்தை தூக்கியெறிந்து வீட்டின் குடும்ப தலைவியாக தன் பொறுப்பை ஏற்க சென்ற மனையாளை வியப்பாக பார்த்திருந்தான் கௌதம்.


சமுதாயத்தில் இருக்கும் பல பெண்கள் குடும்பத்தில் நிறைய சிக்கல்கள் இருந்தாலும்,அதை தூசியென தட்டிவிட்டு தங்களது கடமையிலிருந்து தவறாமல் குடும்ப உறுப்பினர்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


திருமணமாகிய பெண்களின் உணர்ச்சிகள் குடும்பமென்னும் அச்சாணியை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.


அவர்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள்.அவர்கள் வருந்தினால் அவளும் வருந்துவாள்.அவர்கள் கோபம் கொண்டால் தாயாய் மாறி அவர்களை சேயாய் அரவணைத்து மன்னித்து மறந்து செல்லுவாள்.


குந்தவையும் அதற்கு விதிவிலக்கல்ல!!


அது பெண்களுக்கு வரமா?சாபமா? என்பது அவரவர் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு உட்பட்டது.


கௌதமோ 'பெண்களின் பிறவியே சற்று விசித்திரமானது போலும்…இத்தனை நேரம் குழந்தைக்காக வேண்டி அழுதது என்ன?இப்போது தன் குடும்பத்தின் நலனிற்காக தாயாய் மாறி மற்றவர்களுக்காக கவலைக்கொள்வதென்ன?யூ ஆர் இம்பாசிபிள் ஜில்லு' என அதீத நேசத்தோடு தலையசைத்து சிரித்தப்படி பூந்துவாலையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.


குந்தவையோ சற்று முன்பு மனதை வருத்திய இன்னலை கூட மறந்துவிட்டு எப்போதும் போல் பம்பரமாய் சுழன்று அன்றாட வேலைகளை செய்ய தொடங்கிவிட்டாள்.


பாண்டியம்மாள் வழக்கம் போல் "ஏய் என்னடீ?இன்னுமா சோறு தயார் பண்ணலை?உன்னாலே என் புள்ளைகளாம் பட்டினி கிடக்கணுமா?வூட்டுலே நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்கிட்டு தானே இருக்கே…இதை கூட நேரத்துக்கு செய்யமுடியலைனா நீயெல்லாம் என்ன பொம்பளை?மேலே அப்படி என்ன தான் வெட்டி முறிச்சே?புருஷன் கூட இராத்திரி கொஞ்சு குலாவினது பத்தாதா?விடியற்காலையில் வெரசா எழுந்திரிச்சு வந்து வேலை பார்க்கறதை விட்டுவிட்டு அவனோட சேர்ந்து நீயும் ஏறிட்டு படுத்துட்டு இருந்தியா?" என்பது போல் வரம்பு மீறிய வார்த்தைகளை உதிர்த்து பெண்ணவளின் மனதை கூறுப்போட்டாலும் இதழ்கடித்து அழுகையை கட்டுப்படுத்தி முதுகு விறைக்க தன் பணியை செய்துக்கொண்டிருந்தாள் அந்த பேதை பெண்.


தன்னை உருக்கி வெளிச்சத்தை கொடுக்கும் மெழுகுவர்த்தியாய் மாறி அந்த குடும்பத்திற்காக கடந்த எட்டு வருடங்களாய் அயராது உழைத்துக்கொண்டிருக்கும் குந்தவையை பார்த்து தான் அநாகரீகமான கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார் பாண்டியம்மாள்.


இது தினந்தோறும் கிடைக்கும் வசைவுகள் என்றாலும் கணவருடனான தன்னுடைய அந்தரங்கத்தை பற்றி வரவேற்பறையில் விமர்சிப்பது அவளிற்கு பெருத்த அவமானத்தை கொடுத்து நெஞ்சை குமுற வைத்திருந்தது.


'பிள்ளை இல்லாததை தவிர நான் வேறு எந்த குற்றமும் செய்யவில்லையே?எனக்கு எதற்கு இத்தனை பெரிய தண்டனை?' அவரின் சொற்கள் உயிரை உருக்க கடவுளிடம் மனதோடு அரற்றினாள்.


அந்நேரம் அவளை வசைவுகளிலிருந்து காப்பதற்காகவே "அம்மா…அம்மாஆஆஆ" என பதட்டத்தோடு அழைத்துக்கொண்டு அவரது செல்ல மகள் ஸ்ரேயா ஓடி வந்தாள்.


அதேசமயம் குளித்து தயாராகி கௌதமும் கீழே இறங்கி வர,ஸ்ரேயாவின் பின்னோடு அவளின் கணவன் சித்துவும் இணைந்து வரவேற்பறைக்கு வந்து சேர்ந்தார்கள்.


பாண்டியம்மாளோ மகள் ஓடி வரும் வேகத்தை கண்டு அதுவரை இருந்த பாவனை மாற மென்மையான முகத்துடன் "கண்ணு…மெதுவா வா…எதுக்கு இந்த வேகம்?" என செல்லமாக கடிந்துக்கொண்டவர்,அவளை பிடித்து தன்னருகே இருந்த நீள்விரிக்கையில் அமர வைத்து "பாரு மூச்சிறைக்குது" என அவளின் நெஞ்சை கனிவுடன் வருடிவிட்டார்.


அவளோ எரிச்சலோடு முகம் சுழித்து கையை தட்டிவிட்டு "அம்மாஆஆ நான் முக்கியமான விஷயம்…" என ஆரம்பிக்கும் போதே,


"செத்த இரு கண்ணு நீ ஆசுவாசமாகு" என்றவரின் முகம் இப்போது மாறி கடுகடுக்க குந்தவையிடம் "ஏய்…இந்தாடீ…என் புள்ளைக்கு மூச்சு வாங்கறது தெரியலை…பின்ன எதுக்கு மசமசன்னு நிற்கறே…போய் என் பொண்ணுக்கு ஒரு சொம்புலே தண்ணீ கொண்டா" என அவளை அதிகாரத்தோடு விரட்டினார்.


மகளிடம் ஒரு முகமும் மருமகளிடம் ஒரு முகத்தையும் காட்டும் தனது தாயை அழுத்தமாக பார்த்த கௌதம் தலையசைத்து ஒரு பெருமூச்சோடு தங்கையின் அருகே அமர்ந்தான்.


வீட்டின் மாப்பிள்ளை அந்நேரம் வரையிலும் நின்றிருப்பதை பாண்டியம்மாள் கண்டுக் கொள்ளாமல் இருப்பதினால் குடும்ப தலைவனாக "சித்து வாங்க வந்து உட்காருங்க" என்று உபசரித்து தங்களுக்கு பக்கவாட்டில் இருக்கும் இருக்கையை கைகாட்டினான் கௌதம்.


வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளைக்கு இந்த அவமரியாதையெல்லாம் நடக்கும் என்பதை அறிந்த சித்துவும் அதையெல்லாம் எதிர்ப்பாராதவனாய் சகஜமாக மனைவிக்கு பின்னால் சென்று நின்றுக்கொண்டான்.


அதைக்கண்டு தோளை குலுக்கிவிட்டு தங்கையை பார்த்தான் கௌதம்.


பாண்டியம்மாளோ அப்போதும் சித்துவை கண்டுக்கொள்ளாமல் "ஏய் இந்தாடீ…இங்கியிருக்க சமையல் கட்டிலிருந்து தண்ணீ மொண்டு வர உனக்கு இம்புட்டு நேரமா?" என உள்நோக்கி பார்த்து உரத்தக்குரலில் பெரும் அதட்டல் போட,


"இதோ வந்துட்டேன் அத்தை" என பரபரப்புடன் மேனியெல்லாம் வியர்வையில் குளிக்க ஓடி வந்தவளை கண்டு சித்துவிற்கும் கௌதமிற்கும் இரக்கம் சுரந்தது‌.


'என்னை மாதிரியே தெரியாத்தனமாக இந்த குடும்பத்தில் வந்து கல்யாணம் பண்ணிட்டு அவஸ்தைபடறாங்க இந்த அக்கா…இந்த கௌதம் மாமா அவங்க அம்மாவை இரண்டு போடு போட்டால் அடங்கி போகும்…ஆனால் அதை செய்ய மாட்டிக்கீறாரு…அப்படி என்ன தான் கண்ணை மறைக்கிற அளவு தாய் பாசமோ?' என உடன்பிறவாத சகோதரிக்காக மனதிற்குள் புலம்பி தங்களது வாழ்க்கையின் இழிநிலையை நொந்துக்கொண்டான்.


"இந்தாங்க" என்று பவ்யமாக குனிந்து பாண்டியம்மாளிடம் தண்ணீர் செம்பை நீட்ட,


வெடுக்கென்று அதனை பிடிங்கிக்கொண்டு அவளை உறுத்து விழித்தவர் "வெரசா வர தெரியாதா உனக்கு?தின்னு தின்னு உடம்பு மட்டும் நல்லா பெருத்து போயிருக்கு…வேலை செய்ய மட்டும் உடம்பு வளைய மாட்டிக்குது" அப்போதும் ஒரு பல்லவியை படிக்க தொடங்க,அதில் அவளின் முகம் கறுத்தாலும் சுற்றியிருக்கும் யாவரின் முகத்தையும் பாராமல் ஓரமாக சென்று நின்றுக்கொண்டவளின் இதழ்கள் துடித்தது.


அதைக்கண்டு சினத்தில் நரம்புகள் புடைத்தாலும் தன் கைமுஷ்டியை இறுக்கி ஒரு முறை கண்மூடி திறந்தவனின் கண்ணில் ஓடுங்கிப்போய் சமையலறை வாசலில் ஓரமாய் நின்றிருந்த மனையாளை எண்ணியவனிற்கு நெஞ்சம் ரணமாய் வலித்தது.


அந்நேரமும் கணவனின் விழிகளில் இருந்த சிவப்பை கொண்டே அவனின் மனக்கொதிப்பை அறிந்தவள் பதறிப்போய் 'எதுவும் பேச வேண்டாம்' என்பது போல் தலையசைத்து கண் மூடி திறந்து கண்ணாலே 'லவ் யூ' என்பது போல் காதல் செய்தி அனுப்பியவுடன் அவனது ஆத்திரம் சிறிது மட்டுப்பட்டது.


அவளை இத்தனை அவமானப்படுத்தியும் தன் குடும்பத்திற்காக பார்க்கும் அவளது வெள்ளை குணம் அவனின் மனமெங்கும் ஆதர்ஷிக்க,அவளின் மேல் காதல் பெருகியது.


அதனால் அவனும் கூரிய விழிகள் கொண்டு பெண்ணவளின் கண்களின் வழியே இதயத்தை ஊடூருவும் பார்வை பார்த்து 'லவ் யூ டூ ஜில்லு' என மௌனமொழி பேசி யாவரும் அறியாமல் இதழ்குவித்து பறக்கும் முத்தம் வழங்கினான் அந்த நேச கள்வன்.


அதில் பெண்ணவளின் முகம் சிவக்க அவனது கண்களின் வீரியத்தை தாங்க முடியாமல் வெட்கத்துடன் முகத்தை வேறுப்புறம் திருப்பிக்கொண்டவளின் இதழோரம் முறுவல் பூத்தது.


அவனது தாயினால் காயம்பட்ட மனதிற்கு கணவனின் இச்செயல் மயிலிறகால் வருடியது போல் இதமாக இருக்க இழந்த புன்னகை மீண்டும் உயிர்பெற்றது.


மனையாளின் முகத்தில் மகிழ்ச்சியை கண்டதற்கு பிறகே ஆசுவாசமடைந்த கௌதம் தங்கையின் புறம் கவனத்தை திசைத்திருப்பினான்.


ஆண்மகன் அனைவருக்கும் ஸ்ரேயா மட்டுமே ஒற்றை சகோதரி என்பதால்,அவளின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தார்கள்.


சிறு வயதிலிருந்தே அவளிற்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்காமல் தங்கள் வீட்டின் இளவரசியாய் தாங்கி வந்தவர்களுக்கு அவளை திருமணம் செய்து வேறோரு வீட்டிற்கு அனுப்பி வைக்க மனமின்றி,அவளிற்கு சித்துவை திருமணம் செய்து வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க வைத்திருந்தனர்.


ஏற்கனவே,தாயை போலவே மற்றவரை மதிக்காமல் ஆணவத்தில் ஆடும் பெண்ணவளிற்கு இவை இன்னும் வசதியாகிவிட,அனைவரும் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை நெருப்பிலிட்டு பொசுக்கி குளிர் காய நினைக்கும் சுயநலவாதியாகவே மாறியிருந்தாள்‌.


அதேநேரம் தன் பாதங்களை நிலத்தில் விடாமல் கூட தாங்கும் தங்களது சகோதரர்களின் மீது அளப்பரிய அன்பும் இருக்கவும் செய்தது.


ஆனால் மற்ற இருவரை விட அவ்வீட்டின் இரண்டாம் வாரிசான நாகதேவ்வின் மீது சற்றே அன்பு அதிகமாக இருந்தது.


ஏனெனில் மற்ற இரு சகோதர்களையும் ஒப்பிடும் போது அவன் செல்வத்தில் மட்டுமின்றி புகழிலும் யாவரும் தொடமுடியாத உச்சியில் இருப்பதினாலே அவளிற்கு இரண்டாம் தமையனிடம் கூடுதலான சுயநல அன்பு.


அவள் ஒன்றை கேட்கும் முன்பே அதை செய்து கொடுக்கும் தமையனை யாருக்கும் தான் பிடிக்காது.


அவர்கள் அவளிற்கு கொடுக்கும் சுதந்திரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வயிற்றில் வளரும் சிசுவை அழிப்பதற்காக வீரியமிக்க மாத்திரைகளை வாங்கி வந்திருந்தாள்.


ஆனால் அந்த விஷயத்தை யாரிடமும் பகிராமல் இரகசியமாய் தன் நெஞ்சினுள் வைத்து புதைத்து பாதுகாத்திருந்தாள் அந்த அரக்கமனம் கொண்டவள்.


தற்போது தன் தாயினால் வஞ்சிக்கப்பட்ட குந்தவையை இதழை சுழித்து இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அன்னை கொடுத்த தண்ணீரை வாங்கி மடமடவென வாயில் சரித்துவிட்டு அவள் பதறி ஓடி வந்ததற்கான விஷயத்தை குடும்பத்தினரிடம் பகிரத்தொடங்கினாள்.


அவள் கூறியதை கேட்ட அனைவரும் 'என்ன சொல்லறே?' என்பது போல் அதிர்ச்சியில் திக்பிரம்மை பிடித்தது போல் உறைந்துபோயிருந்தனர்.


அவள் கூறிய சாராம்சம் இதுவே,


'நாக தேவ்விற்கும் பிரபலமான நடிகை ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திதாளில் பிரச்சுரிக்கப்பட்டிருந்தது'.


அந்த தகவலோடு அரைக்குறையான உடையில் நாக தேவ்வும் அந்த பெண்ணும் பின்னி பிணைந்தது போல் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது.


அந்த பிரபலமான நடிகை வேறு யாருமில்லை,இரண்டு நாட்களுக்கு முன்பு நாக தேவ்வினால் படப்பிடிப்பிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அந்த படத்தின் நாயகி ரஞ்சனா தான் அது!!


 
விவாஹம் 4:

குடும்பமே அதிர்ச்சியில் உறைந்திருக்க அதில் முதலில் சுதாரித்து நிகழ்காலத்திற்கு வந்தது பாண்டியம்மாள் தான்.

"ஐய்யோ…ஐய்யோ நான் தவமா தவமா இருந்து பெத்த பையன் இப்படி நாசமா போக தானா?என் பையன் சும்மா இருந்தாலும் இந்த சண்டாள சிறுக்கிங்க சும்மா இருக்கமாட்டாங்களா?என் பெத்த வயிறு பத்தி எரியுதே??" நெஞ்சம் வயிறு இரண்டையும் அடித்துக்கொண்டு தனது ஒப்பாரியை தொடங்கிவிட,அந்த இரைச்சல் வீடெங்கும் எதிரிலோளிக்க அதிர்ச்சியில் இருந்த அனைவருக்கும் தேகம் தூக்கிவாரிப்போட நிகழ்காலத்திற்கு வந்தார்கள்.

அதற்குள் நாசியை புடவை முந்தானையில் சிந்தி "விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதாம்…எவளோ ஒருத்தி இத்தனை வருஷம் பெத்து பாதுகாத்து வைச்சிருந்தால் இவளுங்க அதையும் இதையும் காட்டி மயக்கி வசியப்படுத்திப்புடறாங்களே…" வாயிற்கு வந்தது போல் தகாத வார்த்தைகளால் அந்த பெண்ணை வஞ்சித்தோடு தன்னுடைய வளர்ப்பையும் சேர்த்து அசிங்கப்படுத்தியவர்,

"ஐய்யோ…ஒரு முறை என் புள்ள அனுபவிச்சது பத்தாதா?மறுபடியும் என் புள்ளை வாழ்க்கையை கெடுக்கவே கங்கணம் கட்டிக்கிட்டு நீயு நான்னு போட்டி போட்டு அலையறாளுகளே…ஏழரை சனி வந்தாலும் வந்தது…என் புள்ளையை இந்த பாடு படுத்துதே…கடவுளே உனக்கெல்லாம் கண்ணுயில்லையா?நெத்தமும் உன்னை மட்டும் தானே நினைச்சிட்டே இருக்கேன்…என் குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் வராதா?" என இடைவெளி சிறிதுமின்றி புலம்பியவரின் கட்டை குரலால் வீடே குட்டி களேபரமானது.

ஸ்ரேயாவோ 'இதோ ஆரம்பிச்சிடுச்சு கச்சேரியை' என எரிச்சலோடு மானசீகமாக தலையிலடித்தவள்,அவ்வப்போது சுய உணர்வை இழந்து சாமி ஆடுபவர் போல் தன்னை வந்து இடித்து காயப்படுத்திய அன்னையினால் உண்டான வலியினால் முகத்தை சுழித்து கமுக்கமாக நீள்விரிக்கையிலிருந்து எழுந்து தாயிடமிருந்து தள்ளி சென்றிருந்தாள்.

சித்துவும் 'இந்த மாமியார் கிழவி ஆரம்பித்தால் நிறுத்தவே நிறுத்தாதே' என சிறிது அச்சதோடு செவியினுள் இருந்த ஜவ்வு கிழியும் வகையில் கத்தி கூப்பாடு போட்டவரை முகம் சுழித்து கடுப்போடு பார்த்திருந்தான்.

இடையே கௌதம் தாயின் கரத்தை பிடித்து "அம்மா பொறுமையா இருங்க…நியூஸ் பேப்பரில் வரதெல்லாம் உண்மையில்லை…என்ன விஷயம்னு நான் நடுக்குட்டிகிட்ட விசாரிக்கிறேன்" அன்னையை சமாதானம் செய்ய கூறியதை அவர் காற்றோடு பறக்க விட்டு தேம்பியப்படி,

"என் புள்ளைங்க மட்டும் இருந்தவரை இந்த குடும்பம் அழகான கூடா இருந்தது…என்னைக்கு வெளியில் இருந்து வந்த மகராசிங்க இந்த வூட்டுலே காலடி எடுத்து வைச்சாங்களோ?அன்னைக்கே இந்த வூடு ஒண்ணுமில்லாமல் மண்ணோட மண்ணா போயிடுச்சு…காலம் பூராவும் என் புள்ளைங்கயெல்லாம் வாரிசு இல்லாமல் மொட்ட பயலுகளா திரியணும்னு விதிச்சிருக்கே…எல்லாம் இவளுக்க காலடி எடுத்து வைச்ச நேரம் தானோ" என வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல் குந்தவையையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாடி பெண்ணவளின் மென்மையான மனதை நோகடித்தார்.

குந்தவையோ கண்களில் கோர்த்த நீருடன் மாமியாரை இயலாமையோடு நோக்கிய வேளையில் கௌதமிற்கோ எந்த வித தொடர்புமில்லாத தன் மனையாளையும் இதனுள் இழுத்து பிழை கூறிய தாயின் வார்த்தைகள் உண்டாகிய சினத்தோடு கழுத்து நரம்புகள் புடைக்க "அம்மாஆஆஆ" என பெரும் அதட்டல் ஒன்றை போட,

அதில் அவரது வயோதிக மேனி தூக்கிவாரிப்போட,அழுகை நின்று மகனை திகைப்போடு நோக்கினார்.

'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்பது போல் குடும்பத்தில் தன் கடமையை நிறைவேற்றிய போதும்,அவர்களது தனிப்பட்ட வாழ்வில் மூக்கை நுழைத்திடாத மனையாளை குறை கூறவும் கௌதம் பொங்கிவிட்டான்.

'என்னை ஒரு வார்த்தை கடிந்து பேச தெரியாத மகனா இப்படி என்னை அதட்டியது?' என்று பார்த்தவரின் நெஞ்சம் சுருக்கென்று தைத்தது.

சித்துவோ 'அட்றா சக்கை' என சீட்டியடிக்காத குறையாக உள்ளுக்குள் குதுகலமாக தனது மச்சானை பார்க்க,இதர பெண்கள் இருவரும் கௌதமை விழி விரிய அதிர்ச்சியோடு பார்த்திருந்தனர்.

பிள்ளையின் சிறு அதட்டலிற்கே பாண்டியம்மாளின் மனம் காயம் கொண்டது என்றால்,வடுச்சொற்களை பயன்படுத்தி மருமகளின் நெஞ்சை குத்தி கிழிக்கும் செயலினால் அவளிற்கு எத்தகைய பெரிய துன்பம் உண்டாகும் என்பதை அந்த தாயுள்ளம் நினைத்து பார்க்கவில்லை போலும்.

அதைக்குறித்தே திருவள்ளவரும்,

"தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" என்று தன் தெளிவான விளக்கவுரையை மையப்படுத்தியே இரண்டடி குறளை கூறியுள்ளார்.

முகம் சுருங்க தன்னை மிரட்சியோடு பார்த்த தாயின் பாவனை அவனது சினத்தை ஒரு நிமிடம் கூட நீடித்து நிலைக்க விடவில்லை.

அவரது அந்த வேதனை அவனிற்கும் வருத்தத்தை உண்டாக்கிட,உடனடியாக சிகையை அழுந்தக்கோதி "ஊப்" என பெருமூச்சை வெளியிட்டு தாயிடம் சரணடையும் தலைமகனாய் அவரை நெருங்கி அமர்ந்து தோளோடு அணைத்தான் கௌதம்.

"சாரி அம்மா…நான் சொல்லறதை கேட்காமல் உங்களை நீங்களே வருத்தப்படுத்தற மாதிரி அழுதுக்கிட்டே இருக்கவும்,சத்தம் போட்டுட்டேன்" என,

அவரோ 'உன் பொண்டாட்டிக்காக என்கிட்டயே சத்தம் போட்டயில்லை…எல்லாத்துக்கும் காரணம் அந்த ஆள் மயக்கி தான்' என்பது போல் வன்மத்தோடு மருமகளின் மீது பழிவெறி தாண்டவமாடினாலும் மகனிடம் தேனாய் இனிக்கும் குரலில் "ஐய்யோ பரவாயில்லை கண்ணா…என் புள்ளைய பத்தி எனக்கு தெரியாதா?" என அவனின் சிகையை பரிவுடன் வருடியவரின் விழிகள் மருமகளை ஒரு முறை குரூரமாக பார்த்துவிட்டு மகனிடம் திரும்பியது.

ஒரே ஒரு நொடி என்றாலும் அவரின் விழிகளில் தோன்றிய அந்த வெறி பெண்ணவளின் நெஞ்சில் நீர் வற்றிப்போக செய்தது‌.

அவர் தன் மேல் கரம் வைக்கவில்லை என்றாலும்,இன்று கணவன் வெளியேறியதற்கு பிறகு அதிரடி பூஜை ஒன்று இருக்கிறது என்பதை குந்தவைக்கு நன்றாகவே புரிந்தது.

கௌதமோ குற்றவுணர்வுடன் மீண்டும் ஒரு முறை தாயிடம் மன்னிப்பை யாசித்தவன் "அம்மா நாகாவை பத்தி உங்களுக்கு தெரியாதா?எனக்கு என்னவோ அந்த நடிகை தான் இதில் கேம் விளையாடற மாதிரி இருக்கு…முதல்ல அவனுக்கு ஒரு போனை போட்டு என்ன ஏதுன்னு விசாரிப்போம்" என முன்பிருந்த கோபத்தை துடைத்தெறிந்து மென்மையாக பேசினான்.

ஸ்ரேயாவும் தாயை நெருங்கி அவரின் தோளில் கைவைத்து "அம்மா கௌதம் அண்ணா சொல்லறது தான் சரி…இந்த நடிகை சரியான தில்லாலங்கடி…ஏற்கனவே நிறைய ஹீரோ கூட தொடர்பு வைச்சிருக்கிற மாதிரி போட்டோஸ் வெளியாகியிருக்கு…அதுவுமில்லாமல் நாகா அண்ணா அவ்வளவு ஈஸியா அவ வலையில் விழற கேரக்டர் இல்லை…அதனால் கவலைப்படாமல் இரு" என தனது இரண்டாம் தமையனிற்காக வரிந்து கட்டி தாயை சமாதானம் செய்தாள்.

மகனின் இணக்க மொழிகளை விட மகளின் சொற்கள் சற்றே ஆசுவாசத்தை கொடுக்க "சரி நடுக்குட்டிக்கு போனை போட்டு என்ன ஏதுன்னு விசாரி பெரியவனே" என புடவை முந்தானையினால் முகத்தை அழுந்தத்துடைத்து இடையில் சொருகி கௌதமை எதிர்ப்பார்ப்போடு பார்த்தார்.

சித்துவோ 'ஐய்…இன்னைக்கு நமக்கு ஒரு என்டர்டெயின்மென்ட் இருக்கு' என உற்சாகத்துடன் கரங்கள் இரண்டையும் தேய்த்துக்கொண்டு தயாராக இருக்க,

குந்தவையோ 'யாருக்கு வந்த விருந்தோ?' என்பது போல் சமையலறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

ஏனெனில் நாக தேவ்வின் மீது அவளிற்கு எப்போதும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை.

அதுவும் கடந்த சில வருடங்களாக பெண்கள் விஷயத்தில் மோசம் என்பதை கேள்வியுற்றதிலிருந்து அவனோடு பேசுவதை கூட நிறுத்திவிட்டாள்.

ஆனால் நாக தேவ்வோ பெற்ற தாயையே ஒதுக்கிவிட்டு தனிமையில் மிகப்பெரிய பங்களா ஒன்றில் குடியிருப்பவனிற்கு இவளது ஒதுக்கமெல்லாம் காலுக்கு அடியில் விழுந்த தூசிப்போல் தான்!!

அதற்கெல்லாம் கவலைக்கொண்டு பந்தத்தை நாடி அலையும் அன்புக்குரியவனும் அல்ல.

படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்று வந்தால் தங்கைக்காகவும் தாயிற்காகவும் மட்டும் ஏதேனும் வாங்கி அனுப்புவான்.அத்தோடு இந்த குடும்பத்தினுடனான அவனது உறவு இருக்க,மற்றவர்களிடம் ஒட்டுதலின்றி விலகியே இருந்தான்.

தங்களை காரணமின்றி தன்னுடைய மகிழ்ச்சிக்காக விலகி வைத்திருக்கும் ஆணவம் கொண்ட சகோதரனின் மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும் தன் அன்னையின் வேண்டுகோளிற்காக அவனிடம் பேச நினைத்தான் கௌதம்.

தற்போது தாயின் துயர் நீக்க வேண்டிய கடமை தவறாத தலைமகனாய் அவனது சொந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.

ஆனால் அழைப்பு சென்று கொண்டிருந்ததே ஒழிய யாரும் எடுப்பதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை.

கௌதமோ தாயிடம் 'அவன் எடுக்கவில்லை' என்பது போல் இதழை பிதுக்கினான்.

ஸ்ரேயா "நான் போடறேன் அண்ணா" என முன்வந்து அவளது அலைப்பேசியிலிருந்து அழைப்பு விடுக்க,அதுவும் எடுக்கப்படவில்லை.

அதற்குள் தனது செவிலிய தோழியிடம் பணம் கொடுத்து மருத்துவரின் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக வாங்கி வந்திருந்த கருவை கலைக்கும் மாத்திரையை உட்கொள்ள வேண்டிய சமயம் வந்ததினால் "அம்மா நாகா அண்ணா எடுக்கலை…மேபி இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்ன்னு யோசித்திட்டு இருப்பாங்க…பிறகு அவரே கூப்பிடுவார்…நீ ஃப்ரீயா விடு…எனக்கு பசிக்குது…நான் போய் சாப்பிடறேன்" என அங்கிருந்து நழுவினாள்.

அதையறியாத அப்பாவி ஜீவனான அவளது கணவன் சித்துவோ "ஸ்ரேயுமா நானும் வரேன்…எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு" என மனையாளின் பின்னோடு வால் பிடித்து சென்றுவிட்டான்.

கௌதமும் தாயை ஒரு முறை தோளோடு அணைத்து விடுவித்தவன் "அம்மா நம்ப குட்டிம்மா சொன்ன மாதிரி அவனே பிரச்சனையை தீர்த்திட்டு வருவான்…நீங்க வாங்க சாப்பிடலாம்" என பாண்டியம்மாளை சமாதானம் செய்து உணவருந்த அவரை அழைத்து சென்றான்.

அதேநேரம் நாக தேவ்வின் அலைப்பேசியை கையில் வைத்திருந்த அவனது உதவியாளினி ஷாலினி 'போனை எடுத்து பேசுவதா?வேண்டாமா?' என தனக்குள்ளே ஒரு பெரிய பட்டிமன்றமே நிகழ்த்தி கொண்டிருந்தாள்.

சொந்தபந்தம் மற்றும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட அசகாயசூரனான தேவ்வோ அவளிற்கு விடுவித்த முதல் கட்டளையே 'எனது வீட்டிலிருந்து வரும் எந்த வித அழைப்பையும் எடுக்கக்கூடாது' என்பது தான்.

தற்போது 'எதற்காக அவர்கள் வீட்டு எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது?' என்பதை அறிந்துக்கொள்வதற்கு பெரிதாக அறிவு ஒன்றும் இருக்க வேண்டியதில்லை.

ஏனென்றால்,செய்தித்தாளில் வெளியிடப்பட்ட தகவலை படித்துவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து அலைப்பேசியில் குவிந்துக்கொண்டிருக்க,அனைவருக்கும் பதில் கூற முடியாமல் ஒற்றை ஆளாய் தவித்துக்கொண்டிருந்தாள் ஷாலினி.

ஆனால் இந்த சிக்கல்களில் எல்லாம் நேரடியான தொடர்புடைய நாக தேவ்வோ சாகவாசமாக 'இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை' என்பது போல் அன்றாட உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தான்.

அவனது மேலாளரான மோகனோ சற்றே தள்ளி நின்று அலைப்பேசியில் கோபத்துடன் உரையாடி கொண்டிருந்தான்.

காலையில் விஷயம் கேள்வியுற்ற நொடியினில் பதறியடித்து நாக தேவ்வை பார்க்க ஓடி வந்துவிட்டிருந்தார்கள் ஷாலினியும் மோகனும்!!

ஆனால் அவனோ தகவலை கேள்வியுற்று படுக்கையில் தலைக்கு மேலே கையை உயர்த்தி நெட்டி முறித்தப்படி 'அப்படியா?' என்பதோடு நிறுத்திவிட்டான்.

குளியலறையினுள் புகுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தவன் மேல்சட்டையின்றி உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட 'அடேய்…எவ்வளவு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு…இப்போ உனக்கு உடற்பயிற்சி ரொம்ப அவசியமா?' என உள்ளுக்குள் அலறிப்போய் அவனை பார்த்திருந்தாள் ஷாலினி.

மோகனோ அவன் கண்ணாலே இட்ட கட்டளையை அறிந்தவனாக ஷாலினியிடம் "ஏய் மென்டல்…முதல்ல வர காலை எடுத்து பேசு…நான் அந்த பத்திரிக்கைக்காரனை பிடித்து என்ன ஏதேன்னு விசாரிக்கிறேன்" என அவளிடம் ஒரு வேலையை பிரித்துக்கொடுக்க,

முகத்தை சுழித்து 'நீ தான்டா மென்டல்' என வாயிற்குள் திட்டிக்கொண்டே இவளும் அவன் தனக்கிட்ட செய்ய தொடங்கினாள்.

அதனை கண்ணிற்கே தெரியாத சிறு புன்னகையுடன் பார்த்துவிட்டு மோகனும் தன்னுடைய பணியை மேற்கொள்ள சென்றான்.

அவர்கள் இருவருமே தேவ் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக திகழ ஆரம்பித்தவுடனே அவனிடம் பணியில் சேர்ந்திருந்தனர்.

அவனிற்கு மற்றவரின் உதவி அவசியமில்லை என்றாலும்,சமுதாயத்தில் தன்னுடைய நடிகர் அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்கும்,அத்தோடு அவனது வேலைப்பளுக்களும் நாளுக்கு நாள் அதிகமாகியதாலும்,தன்னுடைய அந்தரங்க செயல்களை வெளியுலகத்திலிருந்து மறைப்பதற்காகவும் இவ்விருவரையும் அதிக ஊதியம் கொடுத்து பணிக்கு எடுத்திருந்தான்.

ஷாலினி அவனது திரைக்கு முன்புள்ள வெளியுலக வேலைகளை பார்த்துக்கொண்டாள் என்றால்,மோகனோ திரை மறைவுக்கு பின்னான அவனது சிற்றின்ப மகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துக்கொடுக்கும் சேவகனாக இருந்தான்.

அவ்வப்போது மோகனும் மிகப்பெரிய பட வாய்ப்புகள் வருகையில் அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதோடு,தேவ் மதுப்போதையில் ஏதேனும் தகறாறு செய்து இக்கட்டில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவன் தவறு செய்ததற்கான தடயமே இல்லாமல் பூர்ணமாக அழித்துவிடும் பணியையும் சிறப்பாக செய்துவிடுவான்.

இப்போதும் அந்த செய்தித்தாளில் வந்த விவகாரத்தை பற்றி தான் அதை பிரசுரம் செய்த பத்திரிகை நிரூபரிடம் கத்திக்கொண்டிருந்தான்.

தேவ்வோ இதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதியாமல் உடற்பயிற்சியை செய்துவிட்டு வெளியே வந்தவன்,வியர்வையினால் குளித்திருந்த தனது முறுக்கேறிய படிக்கட்டு தேகத்தை துவாலையால் துடைத்தப்படி இருக்கையில் கால் மேல் கால் போட்டு தோரணையுடன் அமர்ந்தான்.

அதற்காகவே காத்திருந்தாற் போன்று அவனருகே ஓடி வந்த ஷாலினி "பாஸ்" என பவ்யமாக அழைக்க,

முகத்தை துடைத்துக்கொண்டிருந்த துவாலையை அகற்றிவிட்டு 'என்ன' என்பது போல் புருவம் உயர்த்தினான் தேவ்.

சிறிது பதட்டத்தோடு "பாஸ் காலையிலிருந்து நூறு பேருக்கு மேலே கால் பண்ணிட்டாங்க…கூடவே உங்க குடும்பத்திலிருந்தும் அழைச்சிட்டே இருக்காங்க…பேசாமல் ஒரு பிரஸ் கான்பிரன்ஸ் வைச்சு நம்ப சைடு இதுக்கு விளக்கம் கொடுத்திடலாமா பாஸ்?" என்னும் போதே,

மோகனோ 'செத்தான்டா சேகரு' என இதழோரம் பூத்த நக்கல் புன்னகையோடு அவளை பார்த்திருக்க,

தேவ்வோ மேலிருந்து கீழாக அவளை ஒரு மாதிரி பார்த்தவன் இருக்கையில் இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்து இமைகள் இடுங்க தாடையை தடவியவன் "ஷாலினி நீ சொல்லறதும் நல்ல ஐடியாவா தான் இருக்கு" என்றவுடன் பெண்ணவளின் முகம் பளிச்சிட்டது.

மோகனோ 'அதுக்குள்ள சந்தோஷப்பட்டா எப்படி?இப்போ வரும் பாரு ஆப்பு' என நமுட்டு சிரிப்புடன் அலைப்பேசியில் உரையாடி கொண்டிருந்தாலும் செவியை கூர்த்தீட்டி இங்கு தான் வைத்திருந்தான்.

புருவத்தை நீவி "இப்போ நீ என்ன செய்யறேன்னா?நீயும் நானும் நெருக்கமா இருக்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்து பிரஸூக்கு கொடுத்து தேவ் என்னை ஏமாத்திட்டாருன்னு நியூஸை பரவ விடு…அதுக்கு பிறகு நான் வந்து இரண்டு விஷயத்துக்காகவும் எல்லார்க்கிட்டயும் விளக்கம் கொடுக்கறேன்…இஸ் இட் ஓகே ஷாலினி" மின்னாமல் முழங்காமல் இடியை அவள் தலையில் இறக்கிவிட்டான்.

அவளோ அதிர்ச்சியில் "பாஸ்" என கூவியவளின் முகம் இருள 'நீயெல்லாம் மனுசனே இல்லை தெரியுமா?' என்றவளின் விழிகள் அவனை பாவமாக பார்க்க,

ஆடவனோ நாசி விடைக்க "நான் என்ன செய்யணும்?என்ன செய்யக்கூடாதுன்னு நீ ஆர்டர் போடாதே?நான் என்ன சொல்றனோ அதை செய்தா மட்டும் போதும்…காட் இட்" என்றான் கர்ஜனையுடன்.

அவள் கண்ணில் நீர் கோர்க்க "சரி" என தலையசைத்தவளை தன் கூரிய விழிகளால் உறுத்து விழித்தவன் "போ…போய் ஷூட்டிங் ஷேடியுலை பாரு" என்றான் சற்றும் இரக்கமில்லாத கடினக்குரலில்.

"சரி" என தலையாட்டி சென்ற ஷாலினியின் முதுகை வெறித்த ஆடவன் இகழ்ச்சியாக இதழை வளைத்துவிட்டு "மோகன்" என அந்த அறையே அதிர அழைத்தான்.

"ஜி" என்றவன் அவன் எதற்காக அழைத்திருக்கிறான் என்பதை அறிந்தவனாய் மடமடவென்று தான் இதுவரை விசாரித்து அறிந்த தகவல்களை ஒப்புக்க ஆரம்பித்திருந்தான்.

"ஏதோ அன்நோன் நம்பரிலிருந்து தான் அவங்களுக்கு இந்த நியூஸ் வந்திருக்கு…அந்த நம்பரை கேட்டதுக்கு தரமுடியாதுன்னு ரூல்ஸ் பேசினாங்க ஜி…அதனால் அந்த கம்பெனியிலே வேலை பார்க்கிற ஒரு ஆளை பிடிச்சு அது யார் நம்பர்ன்னு கண்டுப்பிடிச்சுட்டோம்…அந்த நம்பர் வைச்சிருக்கிறவனுக்கும் ரஞ்சனா மேடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…ஆனால் ரஞ்சனா மேடத்தோடு அஸிஸ்டென்டுக்கும் அவனுக்கும் எக்கச்சக்கமான சம்பந்தம் இருக்கு"

ஒரு மர்ம புன்னகையுடன் "ஓ…" என்றதோடு இதழை இகழ்ச்சியாக பிதுக்கிய தேவ் துவாலையை கழுத்தை சுற்றி போட்டு "அப்போ சம்பந்தமில்லாதவங்களை சம்பந்தம் படுத்திடுவோம்" என்றவனின் விழிகளில் தெரிந்த வன்மத்தில் மோகன் மிரண்டு பின்னால் ஓரடி எடுத்து வைத்தாலும் அவனை "ஜி என்ன சொல்லறீங்கன்னு புரியலை" என்று கேட்டான்.

அவனை அழுத்தமாக பார்த்த தேவ் "அதெல்லாம் புரிஞ்சிட்டால் நீ தான் எப்போவோ ஜனாதிபதியாகிருப்பியே" என நக்கலாக பதிலளித்தவன்,அவனது முகம் மாறுவதை கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாய் தோளை குலுக்கி தன்னுடைய திட்டத்தை ஒவ்வொன்றாய் கூற ஆரம்பித்தான்.

அவனது கொடூரமான திட்டத்தை கேட்டு மோகனது நெஞ்சமே பதைபதைக்க "ஜிஈஈ" என விழி விரிய மிடறு விழுங்கி அவனை பார்த்திருக்க,

அவனோ 'என்ன' என்பது போல் சினத்தோடு இமைகள் இடுங்க மோகனை பார்க்க,எங்கு அவனது அந்த குரூர ஆக்ரோஷத்தில் தானும் சிக்கிக்கொள்வோமோ என்று அஞ்சி "ஒண்ணுமில்லை ஜி…ஒண்ணுமேயில்லை" என பதட்டத்துடன் பதிலளித்து "நீங்க சொன்னதை இப்போவே செய்து முடித்திடறேன் ஜி" என அவசரமாக பதிலளித்தவன் ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து சென்றுவிட்டான் மோகன்.

செல்லும் அவனின் முதுகை துளைத்தவனின் ஆத்திரம் முழுவதும் ரஞ்சனாவின் மீது திரும்பிவிட முகம் விகாரமாய் மாற "நான் யாருன்னு தெரியாமல் என்கிட்ட மோதிட்டயில்லை நீ…உன்னோட கேரியரையே ஸ்பாயில் பண்ணி தெருவுலே பிச்சை எடுக்க வைக்கலை…என் பேரு நாக தேவ் இல்லைடீ…பிளடி ***" என வஞ்சம் வைத்த வார்த்தைகளால் அவளை தன் கையாலே கொன்று குவிக்கும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் நாக தேவனின் நஞ்சுண்ட குணத்தை கொண்டு பிறந்திருந்த நாக தேவ்.

இவனை பழிவாங்கிய திருப்தியில் 'ரஞ்சனாவா கொக்கா?' என கொக்கரித்து கொண்டிருந்த ரஞ்சனாவின் உதவியாளன் "மேடம்…மேடம்" என பதறிப்போய் ஓடி வர,

"வாட்?" என இமை சுருக்கி கேட்டவளின் முன்பு மூச்சிறைக்க நின்றவன் "மே..டம்…மே‌..டம் எ.ல்..லாமே போ..ச்சு…உங்க கெ..ரியரே போச்சு" என திக்கி திணறி பேசி அரண்டுப்போய் விழித்தவனின் சொற்களின் அர்த்தம் புரியாமல் பார்த்திருந்தவள்,

அவன் அரைக்குறையாக கூறிய தகவலே இவளது இரத்தழுத்தத்தை ஏகத்திற்கும் எகிற வைத்திருக்க "யோவ் முதல்ல விஷயத்தை தெளிவா சொல்லுய்யா" என அவனிடம் எரிந்து விழுந்தாள்.

"மேடம் இந்தாங்க…இதை பாருங்க…அந்த தேவ்வை பகைச்சுக்கிட்டது ரொம்ப பெரிய தப்பு" என புலம்பியவனின் கண்களே தன்னுடைய எதிர்க்கால வாழ்வை எண்ணி கலங்கியிருந்தது.

அவசரமாக அதை வாங்கி பார்த்தவளின் விழிகள் இரண்டும் வெளியே தெறித்துவிடுவது போல் விரிய 'ஐய்யோ என் வாழ்க்கையே போச்சு' என இடிந்துப்போய் செய்தித்தாள் கீழே நழுவியது கூட தெரியாமல் தரையில் மயங்கி சரிந்தாள்.

இன்று காலை நாக தேவ்விற்கும் ரஞ்சனாவிற்கும் திருமணம் என்று பிரசுரித்த அதே பத்திரிக்கை அவளது வாழ்வையே நிர்மூலமாக்கும் படியான மற்றொரு செய்தியை மாலையே அச்சிட்டு பரப்பிவிட்டிருந்தது‌.

அது என்னவென்றால்??

 
Status
Not open for further replies.
Top