வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️ -டீசர்

Status
Not open for further replies.
ei2QYJS32337.jpg

இது ஒரு எதார்த்தமான பல திருப்பங்கள் நிறைந்த காதல் கதைகள்.

என்னடா காதல் கதைகள்ன்னு சொல்லறேன்னு நினைக்கிறீங்களா?

ஆமாங்க...இந்த கதையில் நான்கு இளம் ஜோடிகள் வலம் வந்து அவங்க காதலால் உங்களை திக்கு முக்காட வைக்கப்போறாங்க.

காதலில் தொடங்கி திருமணத்தில் முடியும் ஒரு வகையினர் என்றால்,திருமணத்தில் இணைந்து நேசத்தில் முடிவடையும் வகையினரும் இருக்கவே செய்கிறார்கள்.

இதிலே இன்னொரு வகையாறாவும் இருக்கின்றார்கள்...அது என்னவென்றால் எல்லாத்தையும் இங்கியே சொல்லிட்டால் கதையில் என்ன படிப்பீங்க?😉

அதனால் நான் மௌனம் காப்பேன்😷

இது ஒரு நேசம்❤️,மோதல்🤼,அன்பு👩‍❤️‍👨,பாசம்🧑‍🤝‍🧑,அழுகை😭,சண்டை😤,உணர்ச்சிகள்😍,எதிர்ப்பாராத திருப்பங்கள்🏹 என்று அனைத்து விதமான கலவைகளும் இணைந்த கூட்டுக்குடும்பத்தினரின் பாசம் நிறைந்த குருவி கூடு தான்.

இந்த 'விவாஹஸ்திரமே' நாவல்.

விவாஹம் -திருமணம்
அஸ்திரம் - சக்தி வாய்ந்த ஆயுதம்

திருமணம் என்றாலே ஒரு போர்க்களம் தானே?அதில் சக்தி வாய்ந்த கணைகள் இல்லையென்றால் வாழ்வு எவ்வாறு சிறக்கும்?

முதல் முறையாக எழுத்துலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு உங்களது ஆதரவை தாருங்கள்.

விரைவில் கதாப்பாத்திரங்களின் பெயர்களோடு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

இப்படிக்கு,
உங்களது விவாஹா❤️
 
Last edited:
❤️❤️விவாஸ்திரமே❤️❤️

விரைவில் கதையோட கதாப்பாத்திரத்தோடு வரேன்னு சொன்ன மாதிரியே வந்துட்டேன்.

குடும்பத்தின் ஆணிவேர்(ஹெட் மாஸ்டர்😛)

மாமியார்: பாண்டியம்மாள்

images - 2023-02-04T125129.282.jpeg

நான்கு குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு தன்னை தனித்து விட்டு சென்ற கணவனை கண்ணில் பட்ட தூசியாக தட்டிவிட்டு வீட்டு வேலைகள் செய்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பாசம் மிகுந்த தாய்.

அதேநேரம் கொஞ்சம் கண்டிப்பானவர்.

அவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.இதில் இரு மகனிற்கும் ஒரு மகளிற்கும் ஏற்கனவே திருமணம் நடைப்பெற்றிருந்தது.

திருமண வயதை எட்டியிருக்கும் கடைக்குட்டிக்கு அவனது தாய் மணப்புரிய பெண் பார்த்து வருகிறார்.முதல் மகன்: கௌதம் தேவ்
அவனது மனைவி: குந்தவை

images - 2023-02-04T120553.737.jpeg


இரண்டாவது மகன் : நாக தேவ்

images - 2023-02-04T001358.361.jpeg

மூன்றாவது மகள்: ஷ்ரேயா
மாப்பிள்ளை : சித்து

images - 2023-02-04T130644.765.jpeg
நான்காவது மகன்: யாதவ் தேவ்

images - 2023-02-04T130446.332.jpeg

குந்தவையின் முதல் தங்கை: நந்தினி

images - 2023-02-04T131358.299.jpeg


குந்தவையின் இரண்டாவது தங்கை: பூங்குழலி

images - 2023-02-04T130903.722.jpeg
குந்தவையின் தாய் தந்தை: பராந்தகன் மற்றும் மாதேவி

images - 2023-02-04T131510.106.jpeg

கதை மாந்தர்களின் பெயர்களை தெரிந்து கொண்டாகிவிட்டது.இதற்கு மேல் ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாறு (அதாங்க இஸ்டீடி☺️) பற்றி அறிவோம்.

காத்திருங்கள் அன்பர்களே!!

இன்னும் சில மணி துளிகளில் கதையின் முதல் முன்னோட்டத்தோடு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் விவாஹா❤️
 
Last edited:
❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️

கதையின் முதல் முன்னோட்டம்:

இது ஒரே ஒரு ஜோடிக்கான முன்னோட்டம் மட்டும் தான்.மீதமியிருக்கும் ஜோடிக்களை பற்றிய விபரத்தை அடுத்தடுத்த முன்னோட்டங்களில் பார்ப்போம்.

கௌதம் தேவ்- குந்தவை

images - 2023-02-04T120049.740.jpeg

விவாஹஸ்திரமே முன்னோட்டம் 1:

இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் முகமோ எதையோ எண்ணி பதட்டத்துடன் வெளிறி போயிருந்தது.

மடி மீது வைத்திருந்த அவளின் கரம் சில்லிட்டு பயத்துடன் நடுங்க,கண்களோ அவ்வப்போது ஒரு அறையின் கண்ணாடி கதவை திறந்து வரிசையாக உள்ளே சென்று வந்துக்கொண்டிருந்த இளம் பெண்களின் மீது விழுந்து மீண்டுக்கொண்டிருந்தது.

அப்போது பார்த்து தன் நெஞ்சை ஒரு முறை கைமடக்கி குத்தி இதழ்குவித்து ஊதியப்படி ஆறடிக்கு சிறிது குறைவான உயரத்துடன் அமைதியாக இருக்கும் அவ்விடமே அதிரும் வகையில் பழுப்பு நிற பூட்ஸ் அணிந்து வந்துக்கொண்டிருந்தவனிற்கு அங்கு அமர்ந்திருக்கும் பெண்ணை போலவே பதட்டம் இருந்தப்போதும் முகத்தில் எதையும் காட்டாமல் உணர்ச்சிகளற்று அவளருகே வந்தான்.

அவன் அணிந்திருந்த காக்கி நிற காவலர் உடையை கண்டு சிலர் மிரட்சியுடன் நோக்க,அவனோ யாருடைய பார்வையும் சட்டை செய்யாதவனாக 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல் அந்த பெண்ணின் அருகே இருந்த இரும்பு இருக்கை கீறிச்சிட அமர்ந்தான்.

அது அந்த வளாகத்தையே ஒருமுறை அதிர வைக்க அனைவரின் பார்வையும் அவ்விடத்தை நோக்கி ஒன்றாக குவிய எதையும் கண்டுக்கொள்ளாதவனாக கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து "ஜில்லு என்ன செய்யறடீ?" என்று அவள் புறமாக சாய்ந்து வினவினான்.

"ஹான் வந்துட்டீயா கௌதம்?" என்று கேட்டவளின் குரலில் தான் எத்தனை கலக்கம்.

அதை பார்த்து மென்மையாக புன்னகைத்த கௌதம் அவளின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கி கட்டை விரல் கொண்டு அவளது மிருதுவான கன்னத்தை வருடி கண்ணோடு கண் கலந்தவன் "உன்னை இந்த மாதிரி சூழ்நிலையில் தனியா விட்டிருவேனாடீ ஜில்லு" என காதலாய் உரைத்து அவளின் நெற்றியோடு நெற்றி முட்டினான்.

அதில் நாணத்தில் சிவந்த குந்தவை "வெளியே வைச்சு என்ன செய்யற கௌதம்…கையை எடு" என செல்லமாய் அதட்டி அவனது கையை பிரித்தெடுத்தவளிடம் முன்பிருந்த பதட்டம் சிறிது குறைந்து மனம் இலகுவாகியிருந்தது.

****

வீட்டிற்குள் அழுகையில் சிவந்த கண்களுடன் உள்ளே நுழைந்த பெண்ணவளை "ஏய் நில்லுடி" என்ற அதிகார குரல் ஒன்று தடுத்து நிறுத்தியது.

அதில் மிரண்டு அவ்விடத்திலே நின்றிருந்தவளிற்கு உடம்பில் இருக்கும் அத்தனை பாகங்களும் பயத்தில் உதற "அ..த்தை" என நடுக்கத்துடன் குரல் வெளிவர அவரை நெஞ்சம் குமுற ஏறிட்டு பார்த்தாள்.

எள்ளலாக புருவம் உயர்த்தி "என்னடீ?அப்படியே கண்டுக்காத மாதிரியே போறே?என்ன இந்த முறையும் புட்டுக்கிச்சா?" ஒரு பெண்ணாக இருந்தப் போதிலும் மருமகளின் வேதனையை சிறிதும் அறியாமல் இரக்கமின்றி இகழ்ச்சியாக பேசியவரை எதுவும் கூறாமல் அமைதியாக இதழ்கடித்து தலைக்குனிந்தாள் குந்தவை.

'இதற்குமேல் அவரிடமிருந்து வரும் இழிவான வார்த்தைகளை கேட்கமுடியாது' என்பதை அறிந்தப்போதிலும் எதிர்த்து எதுவும் கூற முடியாத இயலாமையில் வெளிவர துடித்த அழுகையை இதழ்கடித்து அடக்கி வரப்போகும் கணைகளை நேராக நெஞ்சில் ஏந்த கழிவிரக்கத்துடன் நின்றிருக்க,

அவள் நினைத்தது போலவே ஆவேசமாக எழுந்து நின்றவர் "ஏன்டி?புள்ளை பெத்துக்க முடியாதவ எல்லாம் எதுக்குடீ கல்யாணம் பண்ணி எங்க உயிரை வாங்கறீங்க?நீயெல்லாம் கல்யாணம் பண்ணி கன்னி கழியலைன்னு யார் அழுதா?நீயெல்லாம் என்ன ஜென்மமோ தெரியலை?நீ செத்து ஒழிஞ்சாலாவது என் மகனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பேன்…அதுக்கும் வழியில்லாமல் பிசினு மாதிரி கூடவே ஒட்டிக்கிட்டு எங்களுக்கெல்லாம் உபத்தரம் பண்ணிட்டு இருக்கே" உச்சஸ்தாயில் உக்கிரத்துடன் கத்தி ஏற்கனவே காயம்பட்டிருந்த குந்தவையின் நெஞ்சை ஈட்டியால் குத்தி கிழித்தார்.

அதுமட்டுமின்றி நெஞ்சில் அடித்துக்கொண்டு "ஐய்யோ…ஐய்யோ‌…வெறும் வெள்ளை தோளை நம்பி இப்படி ஏமாந்திட்டனே" என மூக்கை புடவையால் சிந்தி ஒப்பாரி வைத்துக்கொண்டே "நீ என்னைக்கு இந்த வூட்டுலே காலடி எடுத்து வைச்சியோ அன்னைக்கே நல்லா இருந்தே என் குடும்பம் உருப்படாமலே போயிடுச்சு சனியனே…என்னைக்கு என் மகன் வாழ்க்கையை விட்டு போறீயோ?அன்னைக்கு தாண்டீ இந்த குடும்பத்துக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும்…இப்படி குடும்பத்தை கெடுத்து குட்டி சுவராக்கின நீயெல்லாம் நாசமா தாண்டீ போவே" என மனசாட்சி சிறிதுமின்றி ஆக்ரோஷமாக பேசி கைகளை முறித்து சாபம் விட்டவர்,மேலும் சில வார்த்தைகளால் அவளது மெல்லிய இதயத்தை குத்தி கிழித்து ரணமாக்கினார்‌.

அவர் தன்னை வஞ்சித்த அவமானத்தில் 'இப்போதே மண்ணுக்குள் உயிருடன் புதைந்துவிடமாட்டோமா?' என உடலின் உள்ள ஒவ்வொரு அணுவும் துடிக்க,அப்போதே குற்றுயிராய் அவ்விடத்திலே சிலையாய் நின்றிருந்த பேரிளம் பெண்.

அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அவர் முன் எதையும் காட்டாமல் அழுத்தமாக தலைக்குனிந்திருந்தவளிற்கு இப்போதெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப்போய் உணர்ச்சிகள் மரத்துப்போயிருந்தது.

ஆயினும்,தினந்தோறும் கிடைக்கும் வசைவுகள் என்றாலும் இன்று சற்று அதிகப்படியான வார்த்தைகளை பிரயோகித்த மாமியாரின் வன்மம் கலந்து வந்த பேச்சுகள் அவளை வேறொரு வீபரித முடிவை எடுக்க வைத்திருந்தது.

அதன்படி இரவில் தன்னை அணைக்க வந்த கணவனின் கரங்களை விலக்கிய குந்தவை அவனிடம் கூறிய சொற்களை கேட்டு அதுவரை மனையாளிடம் சரசம் புரிந்துக்கொண்டிருந்த கௌதம் சட்டென்று ரௌத்திரமானவன் "என்னடீ சொன்னே?" என அறையே அதிரும் அளவு கர்ஜித்து பூப்போன்ற அவளின் கன்னத்தை தன் முரட்டு கரங்களால் சிவக்க வைத்திருந்தான்.

உங்களது கருத்துக்களை இவ்விடம் பகிருங்கள்,

 
Last edited:
ஹாய் அன்பர்களே!!

இது ஒரு காரமான முன்னோட்டம்.

நாக தேவ்❤️

images - 2023-02-04T001410.196.jpeg

நள்ளிரவு 12.30 மணி,


சென்னையில் உள்ள பிரபல மதுப்பான இரவு விடுதியில் ஒரு கையில் மதுப்புட்டியையும் இன்னொரு கையில் சிகரெட்டையும் வாயினுள் வைத்து புகையை உள்ளிழுத்தவாறு போதை தலைக்கேற தள்ளாடியப்படி பெண்களோடு நெருங்கி நின்று நடனமாடிக்கொண்டிருந்த தனது நண்பனைக் கண்டு கொலைவெறியானான் ஹரிஷ்.


ஏனெனில் ஒரு காலத்தில் அவனது தந்தையே ‘ஏன்டா எருமை மாடு…தேவ் கூட இத்தனை வருஷமா ப்ரெண்டா இருக்கியே…அந்த புள்ளைகிட்ட இருக்க ஒரு நல்ல பழக்கத்தையாவது கத்துக்கிட்டியா தடிமாடு?முதல்ல வயசுல பெரியவங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும் கத்துக்கோடா…பெத்தால் அவனை மாதிரி ஒரு புள்ளைய பெக்கணும்டா…இல்ல பெத்துக்காமலே இருக்கணும்…நீயும் தான் எனக்கு வந்து பொறந்திருக்கியே…தண்டச்சோறு தடிமாடு’ என தனது நண்பனை புகழ்ந்து தன்னை திட்டியிருக்கிறார்.


ஆனால் இப்போதோ ‘டேய் தடிமாடு…அந்த பொறுக்கி கூட எல்லாம் ஏன்டா சகவாசம் வைச்சிருக்கே?அவனோடு சேர்ந்து கெட்டு சீரழிஞ்சு போகலாம்னு மட்டும் நினைக்காதே…அதை நான் உயிரோடு இருக்கிற வரை அனுமதிக்கமாட்டேன்…எனக்கு மானம் மரியாதை தான் முக்கியம்…அதையும் மீறி நட்பு,நண்பன்னு அவன் தான் முக்கியம்னு அவனோட சேர்ந்து திரிஞ்சே…இந்த அப்பனை உயிரோடு பார்க்கமுடியாது’ என உச்சஸ்தாதியில் கத்தி தனது நண்பனை வானளவு வெறுத்தும் பேசியிருக்கிறார்.


இதற்கெல்லாம் காரணம்,இவனின் தற்போதைய தீய பழக்கவழக்கங்கள் அல்லவா?அதனால் கோபத்தில் தன் நண்பனைப் பிடித்து இழுந்து வந்து ஒரு மேசையில் அமர வைத்தான்.


தனது நண்பனைப் பார்த்த நாக தேவ் புகையை உள்ளிழுத்தவாறு போதையில் “டேய் மாப்ஸ்…எப்போடா ஊரிலிருந்து வந்தே” என நலம் விசாரிக்க,


அதில் எரிச்சலான ஹரிஷ் “டேய் கூறுக்கெட்ட கூபே…நல்லா என் வாயில் கிரீன் கிரீனா வரப்போகுது…நான் வரது இருக்கட்டும்…நாளைக்கு கல்யாணத்தை வைச்சுக்கிட்டு இங்க என்னடா பண்ணிட்டு இருக்கே?" என சுற்றி ஒரு முறை பார்த்து முகத்தை சுழித்தவன்,


"இதுவரை பொம்பளை சகவாசம் மட்டும் தான் இல்லாமல் இருந்துச்சு…இப்போ அதையும் பண்ண ஆரம்பிச்சிட்டியா? ஒரு கல்யாணம் பண்ணி வைச்சாவது திருந்துவேன்னு தான் அம்மா அதுக்கு ஏற்பாடு பண்ணாங்க?நீ என்னடானா இப்பிடி லேடிஸோட கூத்தடிச்சிட்டு இருக்கே?இது உன்னை நம்பி வரப்போற பொண்ணுக்கு நீ செய்கிற துரோகம் மச்சான்" நாளை மணமகளாக அவனின் கையால் தாலியை வாங்கும் அப்பாவி பெண்ணிற்காக வருத்தம் கொண்டு பேசினான்.


அவனோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் மதுப்புட்டியையும் வாயில் சரித்துக்கொண்டிருக்க,அதைக்கண்டு எரிச்சலானவன் சிகரெட்டை பிடுங்கி "என் அப்பன் என்னடானா உன் கூட சேர்ந்தால் தூக்குமாட்டி செத்திடுவேனு சொல்லறான்…நான் ஒண்ணே ஒண்ணு கேட்கறேன்…என்ன தான்டா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க?அந்த சம்பவம் நடந்து இரண்டு வருஷமாகிடுச்சு…அதை ஜஸ்ட் பாஸிங் க்ளவுடு மாதிரி அந்த சம்பவத்தை மறந்திட்டு அடுத்த வேலை பார்ப்பியா??அதை விட்டுட்டு குடிச்சு குடிச்சு உன்னை நீயே ஏன்டா கெடுத்துக்கிட்டு இருக்கே?” என ஆத்திரத்தில் தொடங்கி நண்பனின் மீது பெரும் கவலைக்கொண்டவனாய் தன்மையாய் முடிக்க,


அவனோ தோளை குலுக்கி அலட்சியமாக ஹரிஷ் பேசுவதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமர்ந்திருந்த நீள்விரிக்கையில் சாய்ந்து அமர்ந்து தனது இரண்டு காலையும் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த ஹரிஷின் முகத்திற்கு நேரே மேசையின் மீது நீட்டி தன் கையில் இருந்த மதுவை முழுவதுமாக தன் வாயில் சரித்துக்கொண்டிருந்தான்.


அது மேலும் அவனது ஆத்திரத்தை கிளறி விட “டேய் உனக்கெல்லாம் வாயில் சொன்னால் சரிப்படாது” என்றவன் விருட்டென்று எழுந்து வந்து,அவனது கையில் இருந்த மதுப்புட்டையைப் பிடிங்கி கீழே உடைத்துவிட்டான்.


அதுவரை நண்பனின் பேச்சிற்கு அலட்டிக்கொள்ளாமல் இருந்த நாக தேவ்,இதுவரை தனக்கு கிடைத்த சொர்க்கம் பறிப்போன ஆத்திரத்தில் வெகுண்டெழுந்து விழிகள் இரண்டும் சிவக்க “ஏய்” என அவ்விடுதியே அதிரும் படி கர்ஜித்து அவனது கழுத்தைப் பிடித்து மூச்சை இறுக்கியிருந்தான்.


அங்கு ஓடி கொண்டிருக்கும் இசையைத் தாண்டி கேட்ட அவனது கர்ஜனையில் அங்கு இருந்த அனைவரும் ஆடுவதை நிறுத்திவிட்டு பயத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருக்க ஹரிஷோ மூச்சிற்காக சிரமப்படுவதைப் பொருட்படுத்தாமல் எப்போதும் குழந்தைத்தனம் மிளிரும் தனது தோழனின் முகத்தில் இப்போது ஒரு வித குரூரம் கலந்த கொலைவெறித்தாண்டவமாடியதைக் கண்டு அவனது விழிகள் இலேசாக கலங்க நெஞ்சில் சுருக்கென ஒரு வலி எழுந்தது.


அவனின் கழுத்தை நெறித்தவனின் மனதிலும் வலி வந்ததுவோ என்னவோ “ச்சை” என அவனை கோபத்தில் உதறித்தள்ளி,இறங்கிய போதையை மீண்டும் ஏற்றிக்கொள்ள ஒரு மதுபானபுட்டியை எடுத்துக்கொண்டு “மியூஸ்க்” என்று குரல் கொடுக்க,அது ஒலிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் மதுவை வாயில் சரித்துக்கொண்டு மாதுவை தன் கையில் ஏந்தி சரசத்துடன் ஆட ஆரம்பித்துவிட்டான்.


ஹரிஷிற்கு இப்போது கோபத்திற்கு பதிலாக தனது நண்பனின் மீது பரிதாபமே எழ, ‘எப்படி இருந்தவன்…எப்படி ஆகிவிட்டான்’ என விழியிலிருந்து கண்ணீர் வழிய,தனது நண்பனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்ட நிகழ்வினால் ஏற்பட்ட இழப்பை எண்ணி கண்ணீர் வடித்தான்.

கருத்து திரி,

 
Last edited:
ஹாய் அன்பர்களே,
❤️❤️❤️விவாவஹஸ்திரமே❤️❤️❤️

நாக தேவ் ❤️ நந்தினி

முன்னோட்டம் 3:

images - 2023-02-04T131358.299.jpeg

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் அதிகாலை நான்கு மணிக்கு திருமணம் என்ற நிலையில் நந்தினியால் அதற்கு மேலும் விருப்பமில்லாத இந்த திருமணத்தில் இணைவதற்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.


அத்தோடு அவளது உறுத்தலுக்கு பின்னால் சிதம்பர ரகசியத்தை விட அதி பயங்கரமான குடும்பத்தின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் வகையில் ஒரு பிரம்மாஸ்திரம் அவளது கையில் இருந்தது.


அதை எண்ணியே அவளது நெஞ்சமெல்லாம் பதற 'இப்போதே கல்யாண மண்டபத்தை விட்டு ஓடி விடலாமா?' என்ற விபரீத எண்ணங்களும் மூளையில் இரயில் வேகத்தில் ஓடியது.


அதனால் மணமகள் அறையிலே அங்குமிங்கும் பதட்டத்துடனே நகம் கடித்து நடந்துக்கொண்டிருந்தவளிற்கு பல்வேறு யோசனைகள் ஓடி கொண்டிருந்தது.


தன் தாய் தந்தையிடம் தன்னிலையை உரைத்து திருமணத்தை நிறுத்திவிடலாமா என்றும் சிந்திக்க,


'ஹூக்கும்…இதுக்கு அவங்க ஒத்துக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க' என எரிச்சலாக எண்ணினாள்.


பின்பு 'சாட்சிகாரனின் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்' அதற்கு மேலாக ஒரு அதிரடி முடிவை எடுத்து வாழ்க்கையின் பெரும் சூறாவளியில் மாட்டிக் கொள்ள தயாராகிவிட்டாள் நம் நாயகி.


****


அப்போது தான் பொது விடுதியில் வயிறு நிறைய மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்த நாக தேவ்வின் அலைப்பேசி ஒலியெழுப்ப,அதில் இலேசாக உறக்கம் களைந்து 'யாரிந்த நேரத்தில்?' என்ற புருவ சுழிப்புடன் அலைப்பேசியை காதில் வைத்தான்.


ஏனெனில் அது சேமித்து வைத்திராத எண்ணிலிருந்து வந்த அழைப்பு என்பதால் எரிச்சல் கலந்த குரலில் "ஹூ இஸ் ஸ்பிக்கீங்?" என்றான் கர்ஜனையுடன்.


எதிர்ப்புறம் இருந்தவளோ சற்று தயக்கத்துடனே "நான் நந்தினி பேசறேன்" என்றாள் பதட்டமாக நகம் கடித்து.


பட்டென்று விழி திறந்து "ஓ…அந்த பொன்னியின் செல்வன் நந்தினியா?சொல்லுங்க ஐஸ்வர்யா மேடம்" என இகழ்ச்சியாக இதழை வளைத்தான்.


ஏனெனில் நாளை திருமணம் செய்யவிருக்கும் மணமகளின் பெயரை கூட அவன் அறிந்து வைத்திருக்கவில்லை.


இவளிற்கும் இப்போதும் கோபம் வரப்பெற பல்லை கடித்து "நான் உங்களை கல்யாணம் செய்துக்க போறே நந்தினி பேசறேன்" என்றதற்கு "சோ வாட்…எதுவா இருந்தாலும் நாளைக்கு நைட் பேசுவோம்" என்றவன்,


பின்பு அவனாகவே "அங்கயெல்லாம் பேசறதுக்கு எனக்கு நேரமிருக்காது…ஜஸ்ட் ஒன் அவர் தான் உனக்கு டைம்…அதுவும் உன் பர்பார்மென்ஸை பொறுத்து மறுப்படும்…அதுக்கு அப்புறம் எனக்கு வேற கம்மிட்மெண்ட் இருக்கு‌…நீ என்ன செய்யறே என்கிட்ட பேசறதுக்கு இன்னைக்கே என் மேனேஜர்கிட்ட அப்பாய்மெண்ட் புக் பண்ணிடு…என் பர்சனல் நம்பருக்கு கூப்பிடறது இதுவே கடைசியா இருக்கட்டும்…காட் இட்" என்று சிறிதும் இரக்கமின்றி நாளை தன் மனைவியாக போறவளிடம் முன்பதிவு செய்யது பேசுமாறு ஆணையிட்டு பட்டென்று முதத்திலடித்தாற் போன்று கூறிவிட்டு வைத்துவிட்டான்.

இப்படிக்கு,
உங்கள் விவாஹா❤️❤️

கருத்து திரி,

 
❤️❤️❤️விவாஹஸ்திரமே❤️❤️❤️

இக்கதையின் கடைசி முன்னோட்டம் இதுவே.

நாளையிலிருந்து இக்கதை தளத்தில் பதிவிடப்படும்.

பல முடிச்சுகள் கொண்ட முன்னோட்டம்‌ 4:


யாதவ் தேவ்❤️பூங்குழலி❤️நந்தினி


"தாடி" என ஓடி வந்து தன் கால்களை கட்டியணைத்து கொண்ட மகனை "கிருஷ் குட்டி" என இதழ் முழுக்க புன்னகையுடன் வாரியணைத்து தூக்கிக் கொண்டான் யாதவ் தேவ்.


மகனின் பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்ட யாதவ்வை போலவே,அவனது மகனும் "நானு நானு" என துள்ளிக்குதித்து அவனது கழுத்தை கட்டிக்கொண்டு தந்தையின் கன்னத்தை எச்சில் செய்தான்.


குழந்தையின் கண்கள் வேறு யாரையோ பின்னால் தேடி அலைமோத "டாடி அம்மா வரலையா?" என ஏக்கமாக கேட்ட குழந்தையின் குரலில் இவனும் முகம் சுருங்கி நிற்க,


"அம்மா…இதோ வந்துட்டேன்" என குழந்தை ஏமாற்றமடைவதற்கு முன்பே யாதவின் கரங்களிலிருந்த பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தனயனை கையில் ஏந்தி தூக்கி சுற்றினாள் நந்தினி.


யாதவோ 'இவளை யாரு இங்க வர சொன்னது' என பல்லை கடித்தவாறு அவளை கொலைவெறியோடு நோக்கினான்.


*******

உயிரை உருக்கும் குரலில் "குழலி ஐ லவ் யூ" என அவளின் முன்பு மண்டியிட்டு பூங்கொத்தை காதலாய் நீட்ட,


பூங்குழலியோ "டேய் நான் உன்னை ஒரு அண்ணனா தான் நினைக்கிறேன்…என்னை போய் காதல்" என கோபத்தோடு ஆரம்பித்து வருத்தத்தோடு முடிக்கவும்,


'எது அண்ணனா?' என அவனது முகம் வேப்பம் இலையை சாப்பிட்டது போல் அஷ்டக்கோணலாகிவிட்டது.******


"டேய் யாதவ்…பேரிலே கிருஷ்ணனை வைச்சுக்கிட்டு ஏதாவது சேட்டை பண்ணே உன்னை தொலைச்சு எடுத்திடுவேன் ராஸ்கல்" என நந்தினி ஆத்திரத்தோடு சீற,


"ஏய்…நான் என்னமோ செய்திட்டு போறேன்டீ…உனக்கு என்ன பிரச்சனை?" இவனும் பதிலுக்கு உறும,


"யாதவ் விளையாடாதே…நாளைக்கு மட்டும் நீ கல்யாணத்தை நிறுத்தலை…என் சாவுக்கு காரணம் நீ தான்னு லெட்டர் எழுதி வைச்சிட்டு செத்திடுவேன்" என மிரட்ட,


"ஹப்பா இப்போ தான் நிம்மதி…எப்போ சாவு போறேன்னு சொல்லு லைவ்வா வந்து பார்த்து ரசிச்சிட்டு போறேன்…கோ டூ ஹெல்" என கோபமாக உரைத்து அலைப்பேசியை அணைக்க சென்றவனின் காதில் "டேய் வைச்சிடாதே யாதவ்…நம்ப பையன் கிருஷ்ஷை நினைச்சு பாருடா" என கெஞ்சலாய் அவள் உரைத்ததை காதில் கேட்காமலே பட்டென்று அணைத்துவிட்டான் யாதவ்.

கருத்து திரி,

 
Status
Not open for further replies.
Top