#நீங்காத_ரீங்காரமாய்
ரைட்டர் ஜி எப்படி எழுதி முடிச்சீங்க😳
சமூகத்தில் வெகு சாதாரணமாக நடக்கும் விசயத்தை எடுத்து அழுத்தமா குடுத்து இருக்கீங்க ஜி...
சிந்தியா--படிச்சாலும் கல்யாணம் தான பண்ண போறேன் என.... ஆசையாய் கல்யாணம் பண்ணி போனால்😔😔😔 ஒருநாள் ஒருவாய் சோறு கூட நிம்மதியா சாப்பிட முடியா வாழ்வு வந்தால்.....?
பெண் எடுக்கும் வரை பவ்யமாய் பேசிட்டு, கல்யாணம் முடிந்த நாளே மாமியார், நாத்தனார் செய்யும் அட்டூழியங்கள்😡😡
வாயை திறந்தாலே பொய்யாய் பேசி, மகனின் முன் செம்மையாய் நடிக்கும் மாமியார் பரிமளம்😡😡
என்ன நடந்தாலும் கண்டுக்காம, மருமகளை குறை சொல்ல மட்டுமே செய்யும் மாமனார்😡
கணவன் சாப்பிடாமல் சாப்பிட கூடாது என்ற சட்டங்களில் சிக்கி தவிச்சா, அவனோ காலையில் 12 மணிக்கு சாப்பிடுரான்😳 சீக்கிரம் சாப்பிட எழுப்பினா, கடுப்பில் அவளை முழு நாளும் சாப்பிட முடியாம பண்ணும் அவனோட திருகுதாளங்கள் 🤬🤬 இப்படியும் மனிதர்களா🤬🤬🤬
ஒரு நாத்தனார், அண்ணன் பொண்டாட்டியை மதிக்காமல், அவளை தன் காலுக்கு கீழ் நடத்தனும் என்று தாயிற்கு, அவளுக்கு தீங்கு செய்ய சொல்லி கொடுப்பது, அவர் செய்யும் எல்லாம் ஆதரிப்பது🤬🤬
இன்னொன்னு நல்லவ போல வந்தா ஆனா 🤬🤬 அவளோட தேவைகள் நிறைவேறின உடனே அவளோட குணம் அப்படியே மாறி போச்சு🤬🤬 ஆனால் இவளோட குணம், தாய், தமக்கை பற்றி நல்லா தெரிந்தும் அவ சிந்த்தியாவை அலட்சியப்படுத்தி நடத்தின எல்லாம் முன்னாடி சொன்ன அவ குணத்தோடு கொஞ்சம் கூட ஒத்து போகல🤷♀🤷♀
தவறு அனைத்தும் கணவன் செய்த போதும் அவளின் கோபத்தை கூட காட்டாது, தானே சமாதானம் செய்து, அவனிடமே அன்பை எதிர்பார்த்தது🙄🙄 ஆரம்பத்தில் சரியா இருந்தாலும் பிற்பாதியில் சிந்தியா செயல்கள் கொஞ்சமும் ஏற்புடையதாக இல்ல எனக்கு😡
இதில் எப்படி அவ வாழ்க்கை கடலில் மூழ்கி நீந்தி கரை சேறுவாளா? இல்லையா என்பது கதையில்....
சிந்தியா parents ஆரம்பத்தில் சராசரி பெற்றோராய் இருந்தாலும் பின்பு இவளுக்காக எதையும் செய்ய முன் வந்த போது, இவ அவங்களுக்காக மாறி, அவங்களோட இருந்து இருக்கலாம்..
சிந்தியா ஹாஸ்பிடல் விசயம் அவ மேல தப்பு இல்லாதபோது அங்க சுதாரிச்சி இருக்கணும்... இல்லை அதன் பின்னாவது அவ சூட்சுமமா இருந்து இருக்கணும்🙄 எதும் பண்ணாம அம்மா வீட்டுக்கு போன பின் கூட அவளை அவள் திடம் செய்யாம அவளோட செயல்கள் ஏற்க முடியல😡 அவ உடன்பிறப்புகளுக்கு ஒரு ரோல் மாடலா இல்ல😡😡 படிச்ச பொண்ணு ஏற்கவே முடியல சில செயல்கள்😡😡😡 சில நேரங்களில் இவளோட சிந்தனையும், பிறகு அவனை கண்ட பின் இவளோட எண்ணங்கள், சிந்தனை எல்லாம் என்னவோ ஒரு நிலையா இல்லாம இருந்தா போல ஃபீல்...
கல்லானாலும் கணவன்🤬 என இருக்கும் கேரக்டர் இல்ல இவ, சில இடங்களில் அப்படி காட்டி இருக்கீங்க... அப்பறம் இவளே இறங்கி, காலில் விழுந்து போகும் போது வித்தியாசமா இருக்கு இவளோட கேரக்டர்...
கண்ணன் 🤬🤬🤬 இவன் எல்லாம் மனுஷனா இருக்க தகுதியே இல்ல🤬🤬🤬 பொண்டாட்டி பத்தி தெரிஞ்சும் இவனோட கேவலமான நியாயங்கள்🤮🤮🤮 சுந்தரை மேல அப்படினு ஆக்கிட்டாண் இவன்🤬🤬
சுந்தர்🤮🤮🤬🤬 இதெல்லாம் பொறந்தே இருக்க வேண்டாம்🤬🤬
பரிமளம், பிரியா, சங்கீதா🤬🤬🤮🤮🤮🤬🤬🤬🤬🤬🤬🤬
இப்படி முடிவை குடுத்து இருக்க வேண்டாம் ஜி... கொஞ்சமாவது சுயபுத்தி கொடுத்து யோசிக்க விட்டாவது இருக்கலாம்... இப்படி கொடுமைகளுக்கு இது தீர்வு அல்லவே😳😳 கதையிலாவது தீர்வுகள் கான முயன்று இருக்கலாம்🙄🙄
என்னோட எண்ணங்களை சொல்லி இருக்கேன்... நிதர்சனம் என்றாலும், இதை கடக்கும் பெண்களுக்கு ஒரு தைரியம் கதையிலாவது கொடுத்து இருக்கலாம் என்பதே என் எணணம்...
வாழ்த்துகள் ஜி💐💐