வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹21.ஏய் மெக்கானிக் காதல் சொல்ல வா - விமர்சன திரி

#JAHUREVIEWS
#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்லவா

அதிரடியாக நுழையும் தேவி
அவங்க ரெண்டு பேரோட லவ் தான் கதையே 🥰🥰
ஸ்டோரி முழுக்க கலகலப்பா இருந்துச்சு 🤣🤣🤣
ரூபன் அவங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது எல்லாம் செம காமெடி சிரிச்சு முடியல 🤭🤭🤭
தேவி ரூபன் வாழ்க்கையில் நுழைந்து அவன் வாழ்வை அவ்வளவு அழகா மாத்துறா 😍😍😍
அமுதம் நல்ல மாமியார், செம அம்மா 😜😜😜
கதை முழுவதும் எந்த டென்ஷன்னும் இல்லாம ஜாலியா ரசிச்சு சிரிச்சிட்டே படிக்கலாம்
இவ்வளவு ஜாலியான ஸ்டோரி கொடுத்ததுக்கு நன்றி ரைட்டர் 😂😂
கடைசியில் அமுதா அம்மாவை ஏமாத்தி பயபுள்ள சாதிச்சுட்டான் 🤭🤭🤭 சரியான கேடி பய 🤪🤪
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💕💕💕

Link

 
#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்ல_வா_விமர்சனம்


மிக எளிமையான காதல் மற்றும் குடும்பக் கதை❤
தேவி ரூபனின் அதிரடியான திருமணத்தில் ஆரம்பிக்குது கதை 🤣 அடடா இதுவல்லவா திருமணம் 🤣🤣


அதிரடி தேவிக்கும் அப்பாவி ரூபனுக்குமான பொருத்தம் அருமை❤
தேவி தனியா இருந்ததுனால ரூபன் குடும்பத்தின் ஆளுங்களை நல்லா புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்குறா❣️


ரூபன் கதிர் நட்பு நல்லா இருக்கு❣️
ரூபனின் ஆடி மாதம் அலப்பறைகள், திவாகரை தேவி கூட சேர்ந்து ஓட விடுறது , தேவிக்கிட்ட காதல சொல்ல போராடுவது எல்லாம் கலகலப்பான பகுதிகள்🤣🤣🤣
தேவி அவங்க அம்மா அப்பாவை ரூபனில் தேடுர காட்சி ரொம்ப இயல்பானதா இருந்தது❤ ஒரு ஏழ்மையான குடும்ப சூழலை சிறப்பா சொல்லிருக்கீங்க👏


ரூபனின் கனவு நினைவானது போல போட்டியில் வெற்றி பெற நினைக்கும் உங்கள் கனவும் நினைவாக வாழ்த்துக்கள் 👍
 
#GG21

#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்லவா

#விமர்சனம்

ரொம்ப ஜாலியான என்டர்டைன்மென்ட் ஆன கதை

மண்டபத்துல,கோவில்ல,ரெஜிஸ்டர் ஆபீஸ் கல்யாணம் பண்ணி பார்த்திருப்பீங்க பைக்கில் கல்யாணம் பண்ணி பாத்து இருக்கீங்களா இங்க நம்ம ஹீரோ மெக்கானிக்கும், ஹீரோயின் பார்லர் அம்மாவுக்கும் ஸ்கூட்டியில் கல்யாணம் நடக்குது.அது ஏன் பண்றாங்க எப்படி பண்றாங்கன்னு கதையை படித்து தெரிஞ்சுக்கோங்க.

மெக்கானிக் ரூபன் வாழ்க்கையில் அதிரடியா நுழைகிறாள் பார்லரம்மா தேவி.

ரூபன் வாழ்க்கையில் அதிரடியாக நுழைந்து அவனோட வாழ்க்கையை அழகாக மாற்றுகிறாள் தேவி 😍😍

கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும் உறவுகள் இல்லாத தேவி புகுந்த வீட்டில் உறவுகளோடு அனுசரித்து குடும்ப உறவுகளை அன்போடு அரவணைத்து வாழும் வாழ்க்கை அழகு👌👌

சந்தர்ப்பம் கிடைத்தால் மருமகளை குறை சொல்லும் மாமியார்களுக்கு மத்தியில் மருமகளின் மீது சாட்சியோடு பழி போடும் போதும் அதை நம்பாமல் மறுமகளுக்கு ஆதரவாக நிற்கும் அமுதம் சிறந்த மாமியார், மகன் மகள்களின் வாழ்க்கையில் பொறுமையாக யோசித்து முடிவு எடுக்கும் இடத்தில் சிறந்த அம்மா மொத்தத்தில் நல்ல பெண்மணியாக மனதில் பதிகிறார். அமுதம் 👌👌👌

ரூபன் தேவியை நெருங்காமல் இருக்க காவல் காக்கும் அமுதத்திடம் மாட்டி ரூபன் அடிவாங்கும் காட்சிகள் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂😂

அடுத்ததாக விஜிதா மீதான கதிரின் ஒரு தலை காதல். இவங்க காதல் சேருமா? சேராதனு ஒரு எதிர்பார்ப்போடுவே கதை நகர்த்திக் கொண்டு போனாங்க.

என்னதான் கல்யாண விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு அவசரத்திற்கு உதவும் கதிரோட குடும்பம் சூப்பர் 👌👌

டம்மியா ஒரு வில்லனை இறக்கி அவன் தேவியிடம் மாட்டி அடி வாங்கும் காட்சிகள் இவனுக்கு இது தேவை என்றுதான் தோண வைக்குது 😂😂

விஜிதாவை காதலை ஒத்துக்க வைக்க கதிரும் வேலனும் திட்டம் போடும் காட்சிகளும் ரோபனின் முன்னாடியே இஜிதாவிடம் கதிர் காதலை சொல்லும் காட்சிகளும் கலகலப்பா இருக்கு 😂😂😂

குடும்பத்தில் எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்காமல் அன்போடும் அரவணைப்போடும் இருப்பது அருமை 👌👌👌

ஆரம்பத்துல ஐயோ பாவம் அப்பாவின்னு நினைச்ச ரூபன் முடிவில் இவனையா அப்பாவின்னு நினைச்சேன்னு சொல்ற அளவுக்கு அடப்பாவி ரூபனா மாறி அவனோட காரியத்தில் கண்ணாக இருக்கிறான்😍😍😍😍

மொத்தத்துல படிக்கிறவங்க வாய்விட்டு சிரிக்கிற அளவு ரொம்ப ரொம்ப ஜாலியான கலகலப்பான கதை சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐
 
#gossip_glories_25

#கௌரிவிமர்சனம்

#ஏய்_மெக்கானி்க்_காதல்_சொல்ல_வா….

ரக்கெட் ஹீரோயின், அப்பாவி ஹீரோக்குமான கதை🤩🤩🤩🤩🤩

ரூபன் சொன்ன மாறியே ரொம்ப அப்பாவி தான்….ஆன தேவி கிட்ட மட்டும் அடப்பாவி🤭🤭🤭🤭….

தேவி எல்லாருக்கும் ரக்கெட்டான பொண்ணு தான்…ஆன ரூபன் கிட்ட மட்டும்🥰🥰🥰🥰🥰….

கதையை அதிரடியா தான் ஆரம்பிச்சி இருக்காங்க…..

இப்படி ஒரு கல்யாணம் 🤣🤣🤣🤣🤣🤣……

ரைட்டர் தின்கிங் வேற லெவல் 😂😂😂😂😂😂….

திடீர் கல்யாணம் மூலம் ரூபன் வாழ்க்கையில் தேவி வரா…..

அவங்க வாழ்க்கை தான் கதையே….

ரூபன், ஆரம்பத்தில் தேவி கிட்ட பம்மி பம்மி நடப்பதும், அம்மா கிட்ட அடி வாங்குவதும் என இருந்தாலும்…..

சில விசயங்களில், அப்பாவி தான் டா நானு ஏமாளி இல்லைனு உணர்த்தும் இடம் அவளோ அழகு🤩🤩🤩🤩

தேவி மீது அவன் உணரும் காதல் நிச்சயமா ரொம்ப ரசிக்க வைக்குது♥️♥️♥️♥️♥️

தேவி, அவன் மீது உள்ள காதலை அதிரடியா காமிச்சாலும்…அதில் அவனை அடிமையாக்கும் எண்ணம் இல்ல….

இவளின் காதல் ஒரு வித ஆளுமை நிறைந்ததா இருக்கு….ரொம்ப கியூட்…..

வேலன் & சித்து, விஜி, அமுதம், கதிர், சரவணன், கவிதா எல்லாம் ரொம்ப நிறைவான கேரக்டர்ஸ் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

அதும் கதிர் அம்மா🤣🤣🤣🤣🤣

திவா….குட்டி வில்லன் 🤭🤭🤭🤭🤭

கதை எதார்த்தமா நகர்ந்த விதம் 👌👌👌👌👌….

கதையின் அழகே, பொறாமை அற்ற உறவுகள், தோழமை கொண்டு இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇

 
போட்டிக் கதை 21 ஏ மெக்கானிக் காதல் சொல்ல வா எனது பார்வையில். அழுக்கு மெக்கானிக்கான அப்பாவி ரூபனை அவனின் தங்கையின் தோழி தேவி ஸ்கூட்டியில் வைத்து ஏமாற்றி அதிரடியாக திருமணம் நடத்திக் கொள்கிறாள். அப்பா இல்லாத ரூபன் குடும்பத்திற்காக படிக்கும் வயதில் இரண்டு சக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் வேலை செய்ய பெற்றோரை கொரனாவில் இழந்த தேவி திருமணம் செய்து கொண்டதை ரூபனின் வீட்டில் ஏற்றுக் கொள்ள இருவரின் வாழ்வில் நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகளை நகைச்சுவையுடன் தந்திருக்கிறார்.

தேவியின் அதிரடி, ரூபன் அம்மா மற்றும் அவனின் அக்கா, தங்கை என்று பெண்களின் ஆளுமைகள் அதை எந்த வித மனச் சுணக்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் ரூபன் அப்பாவியாக தோன்றினாலும் காரியத்தில் கண்ணாக வாழ்க்கையில் வெற்றி பெறும் நேர்மறை கதை. நல்ல எழுத்து நடையில் தந்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்.
 
#JAHUREVIEWS
#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்லவா

அதிரடியாக நுழையும் தேவி
அவங்க ரெண்டு பேரோட லவ் தான் கதையே 🥰🥰
ஸ்டோரி முழுக்க கலகலப்பா இருந்துச்சு 🤣🤣🤣
ரூபன் அவங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது எல்லாம் செம காமெடி சிரிச்சு முடியல 🤭🤭🤭
தேவி ரூபன் வாழ்க்கையில் நுழைந்து அவன் வாழ்வை அவ்வளவு அழகா மாத்துறா 😍😍😍
அமுதம் நல்ல மாமியார், செம அம்மா 😜😜😜
கதை முழுவதும் எந்த டென்ஷன்னும் இல்லாம ஜாலியா ரசிச்சு சிரிச்சிட்டே படிக்கலாம்
இவ்வளவு ஜாலியான ஸ்டோரி கொடுத்ததுக்கு நன்றி ரைட்டர் 😂😂
கடைசியில் அமுதா அம்மாவை ஏமாத்தி பயபுள்ள சாதிச்சுட்டான் 🤭🤭🤭 சரியான கேடி பய 🤪🤪
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💕💕💕

Link

சாரி சிஸ் லேட்டா நன்றி சொல்ல வந்ததுக்கு. உங்கள் விமர்சனம் தான் என்னை போன்ற புது எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் அங்கிகாரம். விமர்சனம் மூலம் பலருக்கு என் கதையை கொண்டு சேர்த்த உங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை. நன்றி நன்றி நன்றி.....
 
#ஏய்_மெக்கானிக்_காதல்_சொல்ல_வா_விமர்சனம்


மிக எளிமையான காதல் மற்றும் குடும்பக் கதை❤
தேவி ரூபனின் அதிரடியான திருமணத்தில் ஆரம்பிக்குது கதை 🤣 அடடா இதுவல்லவா திருமணம் 🤣🤣


அதிரடி தேவிக்கும் அப்பாவி ரூபனுக்குமான பொருத்தம் அருமை❤
தேவி தனியா இருந்ததுனால ரூபன் குடும்பத்தின் ஆளுங்களை நல்லா புரிஞ்சு அனுசரிச்சு நடந்துக்குறா❣️


ரூபன் கதிர் நட்பு நல்லா இருக்கு❣️
ரூபனின் ஆடி மாதம் அலப்பறைகள், திவாகரை தேவி கூட சேர்ந்து ஓட விடுறது , தேவிக்கிட்ட காதல சொல்ல போராடுவது எல்லாம் கலகலப்பான பகுதிகள்🤣🤣🤣
தேவி அவங்க அம்மா அப்பாவை ரூபனில் தேடுர காட்சி ரொம்ப இயல்பானதா இருந்தது❤ ஒரு ஏழ்மையான குடும்ப சூழலை சிறப்பா சொல்லிருக்கீங்க👏


ரூபனின் கனவு நினைவானது போல போட்டியில் வெற்றி பெற நினைக்கும் உங்கள் கனவும் நினைவாக வாழ்த்துக்கள் 👍
லேட்டா வந்து நன்றி சொல்ல வந்ததுக்கு ஒரு சாரி சிஸ். உங்க விமர்சனம் மிகவும் அருமையா இருந்துச்சு. எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு தேவை. நன்றி நன்றி நன்றி....
 
Top