Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா இந்த பிழைகள் லாம் திருத்தி next story ah better ah kodukkuren உங்க எல்லாருடைய ஆதரவும் விமர்சனமும் தான் எனக்கு motivation tharum thanks க்கா 🥰🥰🥰🥰🥰😊😊😊பிரம்மாஸ்திரம் 2023
காலகேயனின் காதல் வதம்
விமர்சனம்
தலைப்புக்கு ஏற்றவாறு கதை அமைந்துள்ளது.
தனது ஆராய்ச்சிக்காக ஒரு ஊரையும் இரண்டு இளம் பெண்களையும் காதல்,பாசம் என்ற இரண்டு அப்பாவி பெண்களை வதம் செய்யும் ஒரு அரக்கனின் கதை.
முன் ஜென்மத்தில் தாங்கள் இழந்த காதலயும் நம்பிக்கையையும் பெறப் போராடும் அபிஜித்,பைரவ் . அவர்களால் பாதிக்கப்பட்டு மறு ஜென்மம் எடுத்தும் அவர்களை ஏற்க மறுக்கும் லோச்சனா அனிதா.
அன்று, இன்று னு முன் ஜென்மத்தையும் நிகழ்காலத்தையும் கதையின் ஓட்டத்தில் தெளிவாகக் கொண்டு சென்ற விதம் அருமை.
முன் ஜென்மத்தில் அகனின் அரக்கு குணத்தை படிக்க படிக்க செம கோவம் வருது.
தாராக்கு அகன் மீதும் அவனுடைய மாபெரும் மீதும் சந்தேகம் வந்த பிறகும் அவனை நம்பும் தாரா மீதும் கோபம் தான் வருது.
முன் ஜென்மத்தில் அவன் செய்த கொடுமைகளை இந்த ஜென்மத்தில் நினைக்கும்போது கோபமடையாமல் கோபமும் காதலும் வந்து மதில் மேல் பூனை மாதிரி இப்படி அப்படி என்று மாறி மாறி பேசுறது கோபத்தை கொண்டு வருது.
எழிலியோட குடும்பத்தையும் ஊர் மக்களையும் என்ன சொல்றதுன்னு தெரியல. பணத்துக்காக சொந்த தங்கச்சியை பத்தி தப்பான செய்திகளை பரப்பும் ராசு. சொந்த ஊரில் தங்கள் கண் முன் வளரும் பிள்ளைகளை அடுத்தவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி அவதூறாக பேசும் ஊர்காரர்கள் இவர்களை எல்லாம் என்ன சொல்லுவது.
கதைக்காக வேணாம் முடிவு நல்லபடியா இருக்கலாம்.
ஆனா ஒருத்தன் எவ்வளவு தப்பு பண்ணி இருந்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தன் தவறை உணர்ந்து நாலு சொட்டு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டவுடனே அவனை மன்னித்து எதுவுமே நடக்காத மாதிரி அவன்கூட வாழறது மாதிரியான முடிவ நிஜமா ஏத்துக்க முடியல.
நல்ல கதை விறுவிறுப்பா போச்சு இன்னும் கொஞ்சம் முடிவு மாற்றி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐💐💐
Thank you very much அக்கா உங்கள மாதிரி readers ஓட விமர்சனம் தான் எனக்கு motivation அடுத்த கதைக்கான திறவு கோல் கண்டிப்பா அடுத்தடுத்த stories better ah kodukkuren Thank you very much again and again ♥️♥️♥️♥️💙💙💙💙💙🥰🥰🥰🥰🥰கதை அருமை. ஹீரோ ஹீரோயின் ஜென்மம் தாண்டி காதல் துரோகம் பழி உணர்ச்சி என்று விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கேங்க.அகன் அரக்கன் இவன் நினைச்சதை சாதிக்க வேண்டும் வெறியில் தன் மனதின் காதலை கூட உணராமல் அரக்கத்தனமாக நடந்து சாபம் பெற்று அழைவதும் பின்னர் ஜென்மங்களிலும் அப்படியே இருந்து அபி ஜென்மம் எடுத்து அப்போதும் பழி உணர்ச்சி மனதில் இருப்பதை ஹீரோயின் லோச்சு உணர வைக்க அவளும் தண்டனை போதும் நம் வம்சத்திற்கு செல்ல வேண்டும் அபியும் அவளை தேவதையாக உணர்ந்து சரணாகதி அடைந்து வாழ்வை சுபமாக முடிப்பது செம. அகன் பைரவ் மற்றும் உறவுகள் ஊர்மக்கள் அடிக்கத் தோன்றுகிறது அவர்கள் தண்டனை செம. அனி இவளை பிடிக்க வில்லை. இவளால் குழந்தை இழக்கிறாள்.லோச்சு தாரா இரு ஜென்மங்களிலும் காதலில் உறுதியாகவும் தண்டனை கொடுப்பதும் சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். காதல் இருவரின் சாபத்தையும் வாழ்வையும் கொடுத்து உள்ளது
Okka நெக்ஸ்ட் story la எல்லாம் திருத்திர்ரேன் thank you so much எனக்காக time எடுத்து review சொன்னதுக்கு. நான் யார்னு கூட உங்களுக்கு தெரியாது but எனக்காக time எடுத்து நீங்க குடுக்குற review தான் எனக்கு motivation அடுத்தடுத்த story இன்னும் better ah kodukkuren க்கா thank you so much again and again 💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰💙💙💙💙💙😍😍😍#காலகேயனின்_காதல்வதம்
இந்த கதையை எழுதி முடித்ததற்கே முதலில் வாழ்த்துகள்💐💐💐
செய்த வினைகளின், துரோகங்களின் பயனால்... ஜென்ம ஜென்மமாய் நாயகனை தொடரும் சாபம்😳😳
நாயகன் மட்டுமல்ல அவன் நண்பனையும் தொடர.... பாவத்தில் பங்கெடுத்து பாவமும் செய்தால் தண்டனையும் பங்கு வரத்தானே செய்யும்🤭🤭🤭
இந்த ஜென்மத்தில் அபியாய்... சாபவிமோசனம் பெற லோச்சனாவை சார்ந்து இருக்கும் நிலை....
அதையும் யாரும் அறியாது நேக்காக அவளையும், நண்பி அனிதாவையும் கடத்தி, காதலை பெற நினைக்கிறான்😡😡😡
அவனிடம் அவளுக்கு தெளிவில்லாமல் இருந்த முன் ஜென்ம ஞாபகங்களை முழுதாய் தூண்டி விட🙄🙄🙄
இருவருக்குமான போராட்டம் ஆரம்பம்.....
அவனிடம் இருந்து தப்பிப்பாளா...!? இல்லை விமோட்சனம் கொடுப்பாளா.....!?
அன்றும் இன்றுமாய் பயணிக்குது கதை....
அன்றைய எழிலி பெரிதாக படிக்கா விட்டாலும்... புத்தி கூர்மை கொண்டவள்... குழந்தை மனம் கொண்ட தோழி பூவரசி...
புதிதாக அவர்கள் எஸ்டேட் kku வந்த அகன் அண்ட் தரன் இருவரின் கேள்விகளிலே உள்ளுணர்வு எச்சரிக்கை செய்யூது ..
அகனின் பேராசையும், ஆராய்ச்சியும் உடன் துணையாக தரன்😡😡😡
அகனுக்கோ எழிலி மீது ஆசை, அதற்கு அவன் காதலி மித்தில்டா உடந்தை🤬🤬🤬
தரன் நண்பனுக்கு மேல் இவன்😡😡 நல்லவன் போல பேசி பூவரசி மேல் காதல் என்று இவன் செய்பவை எல்லாம்🤬🤬🤬 மனுச ஜென்மமே இல்ல இவனுங்க 😡
பூவுக்கு நடப்பவை😭😭 அண்ணன் என்று சொல்லி நம்பிக்கை வார்த்தை குடுத்து அகன் செய்பவை😡😡😡
ஊரில் நடக்கும் விசயங்களை கண்டு சந்தேகம் கொண்டு, தேடி எழில் கண்டறிபவை 😳😳😳
அத்தனைக்கும் பின் அகன்....
தீர்வாக குறி கேட்டு அவள் அறிவதை சரியாக மொழி பெயர்க்காது போய்...
அகனின் அன்பு வார்த்தையில் அறிவை கடன் கொடுத்து, அவன் மேல் இருந்த சந்தேகங்களை மறந்து, அவனை நம்பி... சறுக்கி அவள் செய்யும் தவறு😡😡😡
அவள் வாழ்வையே அழிச்சுத் தான் போகுது😢😢
அவனின் சுயநலங்களையும், துரோகத்தையும் கண்டறியும் போது காலம் கடந்து போய்....
தோழியையும் காக்க முடியாது... தன்னையும் காக்க முடியாது... துரோகத்தின் பலன் சாபத்தில் போய் முடியுது😳😳
அவனின் ஆராய்ச்சி என்ன...!? பூவுக்கு என்ன ஆச்சு....!? என்ன சாபம்....!? எல்லாம் கதையில் வாசியுங்கள்.....!!!
அகனும் சரி, அபியும் சரி... திமிரும், கர்வமும் கலந்த கலவை தான்😡
அபி காதல் என்று லோச்சு பின் போனாலும், அவன் சுயநலம் மட்டுமே பிரதானம்😡
அதை லோச் கண்டும் அதையும் மீறிய அவள் காதல்😡 அடிப்போடி பைத்தியக்காரி நீயும் உன் வெங்காய காதலும்😡
தரன் கேடுகெட்டவன் அப்படினா, பைரவ்வாகவும் பிடிக்கல எனக்கு😡 காதல் காதல்நு அனிதா பின் சுத்தும் போது மூக்குல குத்த தான் தோணுச்சு...
ரெண்டு பேருக்கும் பழசு நினைவிலேயே இல்லாத மாதிரி தான்... ஆளும் மூஞ்சிகளை பாரு.. வந்திட்டானுங்க 😡😡
பழசு முழுமையாக தெரிய வந்தப்போ....
லோச்சனாவின் கதறலும், ஏக்கமும் சேர்ந்து....
அவனுங்கள அம்மிக்கல் வச்சு இடிச்சு, நசுக்கி சாகடிக்க தான் தோணுச்சு😡😡
இல்லனா கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு அகன், தரன், மித்தில்டா எல்லாரையும் பொரிக்க ஆசை வருது😡😡
வனதேவதை இவனுங்க விமோட்சனம் பெற வேற எதுவும் சொல்லி இருக்கலாம்😡
குற்றவுணர்வு இல்லாம என்னமா காதல் சொல்லிட்டு, ஆர்டர் போட்டு, டார்ச்சர் பண்ணிட்டு திரியுறானுங்க😡😡😡
அவளின் துன்பங்கள் புரிந்து, அவனின் உண்மையான நோக்கம் அவள் கண்டறிந்து விட்டாள் தெரிந்து, என்னமோ அவனே மனசு மாறி சாக போனால்😳
லோச்சனா மனுசியாடி நீ😡 நானும் அதான் அவ எதிர்பார்ப்பு நினைச்சா🙄🙄 அவ வச்சா பாருங்க டுவிஸ்ட் 😡 அவனை விட்டு அவளை போட்டு தள்ளினா என்னனு தான் என் எண்ணம்😰 கிறுக்கி, கிறுக்கி...
ஆனால் அதற்கு அவள் சொன்ன காரணம் அவள் வரையில் சரியா தான் இருக்கு😊 எதற்குமே தீர்வென்று ஒன்று இருக்கணும் தானே😏😏 அமைதியை, நிம்மதியை தொலைத்து எவ்வளவு நாள் மன அழுத்தத்தில் வாழ முடியும்🥰 அவள் முடிவை, அவளுக்காக, இந்த முறை அனி விசயத்தில் அவன் முட்டாள்தனம் செய்யாம இருந்ததற்காக accept செய்யலாம்😍 மன்னிப்பு கடினம் தான்... மறக்க முயலலாம்...
அனி அதுக்கும் மேல... என்ன தான் தங்கை சொன்னாலும் அவனோட சுயநலத்துக்கு, அன்னைக்கும் அவன் செஞ்சது, அவளை கஸ்டபடுத்ததான் செஞ்சது😢 எல்லாம் மறந்து அவனுக்கு support செய்ய எப்படி முடியுது இவளால்😡 எப்படி.,.....!? சப்புன்னு ரெண்டு வைக்க தான் என் கை பரபரண்ணு இருக்கு😡 கிறுக்கியின் தோழி எப்படி தெளிவா இருப்பா🤦♀🤦♀
ரெண்டு பக்க உறவுகள்🤬 நல்லகுடி நாணயம் தான் அம்புட்டும் 🤦♀
ராசு, ராமு, விதுரன்🤬🤬 என்ன ஜென்மங்களோ... இவனுங்க ஒழுங்காய் இருந்து இருந்தால் அவளுங்க அவ்வளவு கஷ்டபட்டு இருக்க வேண்டாம்😡😡
மொத்த ஊரும் சரியான பைத்தியக்கார கும்பல்🤬🤬🤬 பயங்கர கோபம் எனக்கு...
சில விசயங்கள் கொஞ்சம் கவனிங்க... லோச்சனாவின் மனநிலை குழம்பி ஸ்டெடி ஆன ஃபீல்.... அனி கோபமா இருந்துட்டு, எல்லாம் தெரிந்தும் அபிக்கு support செஞ்சது குழப்பம்(எனக்கு), அவ்வளவு வன்மமாய் இருந்த அபியின் மனமாற்றம் ரொம்ப குயிக் ஆ இருந்த ஃபீல்...!!
இப்படி ஒரு விசயத்தை எழுதும் போது கண்டிப்பா மனசு ஸ்ட்ராங் ஆ இருக்கணும்... சொல்ல வந்ததை எதையும் யோசிக்காம சரியா குடுத்து இருக்கீங்க(லோச்சனா முடிவு) பாராட்டுகள் 🤩🤩🤩
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐