வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹25.கிள்ளை மொழி கவிதையிவள் - விமர்சன திரி

GG writers

Moderator
இவ்விடத்தில் இக்கதைக்கான உங்களது விமர்சனத்தை தெரிவியுங்கள் டியர்ஸ்!
 
Very nice writing.கதையை interesting ஆக எழுதியுள்ளார்.ஆவலாக ஒவ்வொரு நாளும் காத்திருந்து வாசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
#கிள்ளை_மொழி_கவிதையவள்_விமர்சனம்


மாஸ் ஹீரோ ருத்ரபிரதாப் மல்கோத்ராக்கும் துருதுரு சைத்ராக்குமான அழகான கதை ❤❤


கதையோட ஆரம்பமே ஒரு குட்டி பொண்ணு மயூரியோட பிரசவம்தான் அங்கேயே அழுக வெச்சிடுறீங்க 😭😭
அந்த பொண்ணுக்கு ஏன் இப்படியாச்சு? யாரு காரணம்னு கதை முழுக்க யோசிக்க வெச்சு ரொம்ப ரொம்ப சுவாரசியமாக கொண்டுபோறீங்க❤
மயூரி அனுபவிச்ச கொடுமைகள் 😰😰 அப்பப்பா உங்கள் எழுத்து மூலமா அப்படியே எங்களுக்கும் அந்த வலிய கடத்துனது அருமை 👏👏


சைத்துவோட திருமண உடை 😲😲எப்படி இப்படி யோச்சீங்க ❤❤மற்றும் சரகஸி பற்றிய தகவல்களில் உங்கள் மெனக்கெடல் நல்லா தெரியுது 👏


ஸ்வேதா சைத்து அஜய் மூனு பேரு கோம்போவும் பிடிச்சிருக்கு ❤
சைத்து மைன்ட் வாய்ஸ் எல்லாம் அருமை 🤣🤣அதுவும் காஜி அங்கிள் எல்லாம் சிரிச்சு முடியல 🤣🤣


டேவிட் ஸ்வேதா ரெண்டு பேரும் மனசுல நிக்கறாங்க.
மதுபாலவோட சூழ்நிலை புரியுது ஆனால் ஒரு அம்மாவ அவங்க தோத்து போயிட்டாங்க 😔


சைத்து ❤ ருது காதலும் ரொமான்ஸும் 🙈🙈 ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க❣️❣️
கடைசி ஸ்கை டைவிங் ரொமான்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு ❣️


அரிமா என் மனசையும் கொல்லையடிச்சு🥰🥰


இந்த கிள்ளை மொழி அனைவரின் மனதையும் கவர்ந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#GG25

#கிள்ளை_மொழி_கவிதையிவள்

#விமர்சனம்.

கதைய படிச்ச உடனே யாரு சாமி இந்த ரைட்டர்னு தான் தோணுச்சு.

ஆரம்பமே ஒரு 16 வயசு சின்ன பெண்ணோட பிரசவ வலியில ஆரம்பிச்சு கண்ணு கலங்க வச்சுட்டாங்க.
அந்த சின்ன பெண் வாழ்க்கையில் என்ன நடந்தது எப்படி கர்ப்பம் ஆனால் அவள் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற கேள்விகளோடு தான் கதை படிக்க ஆரம்பிச்சேன்.

அடுத்தடுத்த அத்தியாயங்களில் அந்த அழுத்தத்தை அப்படியே குறைக்கிற அளவு சைத்ராவோட கலாட்டாகள் மனசை இலக வைக்கும் படியாக இருந்தது.

ஸ்வேதா,சைத்ரா, அஜய் இவங்களோட பாச பிணைப்பு ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌

ஹீரோ ருத்ரா ஆரம்பத்துல அஜய் சைத்ரா மீது காட்டும் கடுமையில் இவன் மேல கழுத்தளவு கோவம் இருந்தாலும் . அடுத்தடுத்து சைக்காவுக்காக அவன் பார்த்து பார்த்து செய்து செயல்களில் அவன் மீதான கோபம் அப்படியே வடிந்துவிட்டது.

ரோபோ மாதிரி சுத்திக்கிட்டு இருந்தவன ரெமோவா மாத்தின நம்ம சைட்ரோவோட திறமை சூப்பர்👌👌👌

மதுபாலா அவங்களோட சூழ்நிலை காரணமாக மகள் வாழ்க்கையில் தடம் மாறி போயிருந்தாலும் ஒரு அம்மாவை அவங்க நிஜமாவே தோத்துட்டாங்க. மகளோட வாழ்க்கையை பற்றி யோசிக்காம அவங்க அந்த நிமிஷம் எடுத்த முடிவு நிஜமா ஏத்துக்க முடியல 😡😡

மயூரி ஒரு 15 வயசு பொண்ணோட வாழ்க்கையில நடந்த கொடுமைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதது நிஜமாவே பிளாஷ்பேக் படிச்சுட்டு நைட்டு தூங்க முடியல 😔😔😔

டேவிட், ஸ்வேதா,ராகவ் உங்களோட கேரக்டர்கள் ரொம்ப நல்லா இருந்தது மனசுல பதியுறாங்க ❤️❤️

பூமர் அங்கிள்,காஜி அங்கிள், சைத்தான் என்று ருத்ராவை சைத்து மைண்ட் வாய்ஸ் இல் திட்டும் காட்சிகள் அருமை 😂😂😂

சைது ருத்ர ரொமான்ஸ் காட்சிகளும், ஸ்கை டைவிங்கில் ருத்ராவிடம் வம்பிழுத்து ப்ரொபோஸ் காட்சிகள ம் செம்ம ❤️❤️❤️👌👌👌

கதைக்காக எழுதணுமேன்னு எழுதாம ஒவ்வொரு விஷயத்தையும் விவரமா விளக்கி எழுதினதுல எழுத்தாளர் ஓட உழைப்பு தெரியுது 👏👏👏

அழுத்தம், காதல்,ரொமான்ஸ், காமெடினு கதையிலே எல்லா உணர்வுகளையும் கொண்டு வந்து கதையோட கட்டிப்போட்ட எழுத்தாளரோட எழுத்து திறமை அருமை 👏👏👏

அருமையான உணர்வுகள் நிறைந்த கதை சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#JAHUREVIEWS
#கிள்ளை_மொழி_கவிதையிவள்

ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா கதையின் நாயகன்

பர்ஸ்ட் எபி படிக்கும் போது இவனை அவ்வளவு திட்டிட்டே படிச்சேன் இவன் நல்லவனா கெட்டவனா னு புரியாத புதிரா இருந்துச்சு

கதையோட நாயகி யாருனு சில எபி வரைக்கும் கண்டு பிடிக்கவே முடியல அவ்வளவு சுத்தலில் விட்டுட்டீங்க 🫣🫣🫣
கதையே ட்விஸ்ட்ல தான் இருக்கு 👌👌👌
மயூரிக்கு நடந்தது எல்லாம் கொடுமை 🥹🥹🥹 அவ அம்மா, டாக்டர் எல்லாரும் சேர்ந்து அவளுக்கு எவ்வளவு பெரிய துரோகம் பண்ணி இருந்து இருக்காங்க 😡😡😡😡
ஸ்வேதா எனக்கு ரொம்ப பிடிச்சது சைத்துக்கு ஒரு அம்மாவா அக்காவா அவ மேல அவ்வளவு பாசமா பார்த்துகிட்டது நல்லா இருந்துச்சு
ஸ்வேதா டேவிட் லவ் நல்லா இருந்துச்சு
இந்த ராகவ்க்கு கூட ஒரு ஜோடி சேர்த்து இருக்கலாம் பாவம் பையனை சிங்கிள் ஆஹ் சுத்த விட்டுட்டீங்க 🤣🤣🤣
கடைசியில் எதிர் பார்க்கவே இல்ல செம ட்விஸ்ட் 🥰🥰
ருத்துவை தப்பா நினைச்சுட்டோமேனு அம்புட்டு பீல் பண்ணேன் 😒😒😒
ஹீரோ ஹீரோயின் லவ் அவ்வளவு அழகா இருந்துச்சு அங்கிள்னு கூப்பிட்டே கவுத்துட்டா காஜி ஏஞ்சல் வேற லெவல் 🤭🤭🤭
கதை நல்லா விறு விறுப்பா சுவாரஸ்யமா ட்விஸ்ட்டோட கொண்டு போனீங்க 👌👌👌👌
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் 💞💞

Link

 
போட்டிக் கதை 25. கிள்ளை மொழி கவிதையிவள் எனது பார்வையில். ருத்ர பிரதாப் மல்ஹோத்ரா திருமணமாகாமல் வாடகைத் தாய் மூலம் தனது மகன் அஜயை பெறும் அவன் மகனை தனது தொழில் மீதுள்ள ஈடுபட்டாள் அதிகம் கவனிக்காமல் விட்டுவிடுகிறான். அஜய் தனது அப்பாவின் உறவுப் பெண் சைத்ரா மற்றும் அவனை கவனித்துக் கொள்ளும் ஸ்வேதாவின் மீதும் அதிக அன்பை வைக்கிறான். ஆனால் அஜய் மற்றும் சைத்ராவின் நெருக்கத்தை விரும்பாத ருத்ரா சைத்ராவை கண்டிக்கிறான். ஆனாலும் இருவரின் நெருக்கத்தை எந்த விதத்திலும் மாற்ற முடியாது போக சைத்ராவை அவளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறான். ஆனால் அஜயை விட்டு பிரிய மனமில்லாமல் மணமேடையில் சைத்ரா ருத்ராவை விரும்புகிறேன் என்று சொல்வதால் ருத்ரா மற்றும் சைது திருமணம் நடக்கிறது. இருவரின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டதா என்பதை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். தொடக்கத்தில் என்ன மனிதன் இவன் என்று ருத்ராவை நினைக்கும்படியும் நிறைவில் அடடா என்ன ஒரு குடும்பத் தலைவன் என்று நினைக்க வைத்தது. நல்ல சரளமான எழுத்து நடையில் காதல் காட்சிகளையும் தந்திருக்கிறார். வாடகைத் தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளையும் அதனால் பாதிக்கப்படும் இளம் பெண்களையும் பற்றிய தகவல்களையும் மனம் கனக்கத் தந்திருக்கிறார்.வாழ்த்துகள்.
 
Top