Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
அழகான, ஆழமான, அதே சமயம் சஸ்பென்ஸ் எதையும் உடைக்காம விமர்சனம் கொடுத்ததுக்கு மிக்க நன்றி சிஸ் 😍#தூறலா_நீ_கானலா_நீ
சஸ்பென்ஸ் கலந்த காதல் கதை💖
கதையை முன் பின் கலந்து, பிரிச்சு குடுத்த விதம் நல்லா இருந்தது😍
பிரபாவின் மனைவி அமுதாவின் நினைவாற்றல் இழப்பில், மகள் குட்டியம்முவோடு ஆரம்பிக்கும் கதை..... !
எதுவுமே ஞாபகத்தில் இல்லாது அமுதாவிற்கு ஆயிரம் சந்தேகம்😱
அவளின் உடல்நிலை காரணம் அவனோ எதையும் சொல்ல மறுக்க....!
குழந்தையின் சாயலே போதும்🤦♀ சந்தேகம் வர😒😒😒
குழந்தை அவளது இல்லை என உறுதியாய்(!?🤔) கண்டு கொள்ளும் நேரம்😱😱 கையில் சிக்கும் பிரபாவின் புகைப்படம்🤔 வேறொரு பெண்ணோடு மணக்கோலத்தில்😳😳😳
அப்போ அமுதா🙄🙄🙄
துண்டு துண்டாய் வந்த நினைவுகளில் பார்த்தவன் இடையில் புக... அவன் திட்டத்திற்கு ஏதுவாக, பிரபாவும் எதையும் சொல்லாது மறுக்க, நம்பிக்கை குன்றி ஜித்துவுடன் வீட்டை விட்டு வெளியேறும் அமுதா& குட்டியம்மு😳😳
மறுபக்கம் அடிபட்டு இருக்கும் இந்தர், காரணம் ஆனவர்களை முடிக்க துடிக்கும் அப்பா திலக்😳 யாரையோ தேடும் அவன்🙄🙄 காரணம் யாரோ...!?
கணவனின் மேலும், கணவன் குடும்பத்தின் மேலும் கடுப்பில் இருக்கும் காவ்யா😢😢 இறந்து விட்ட(!?) அம்முவின்🤔 நினைவில் வாடும் பெற்றோர்😔 மறுக்கும் காவ்யா😳 பின்னணியை தேடும் ரஞ்சன்🙄 என்ன மர்மமா இருக்கும்...!?
அமுதா & பிரபா உறவு என்ன....!? குட்டியம்மு யார்....? பெற்றோர் யார்....? பிரபாவின் பெண் தானா...!? புகைப்படத்தில் இருப்பது யார்...!? அமுதா நினைவிழப்பு ஏன்&எப்படி....!?
ஜித்து யாரவன்&ஏன் அமுதாவை கூட்டி போனான்...!? எல்லாவற்றையும் சஸ்பென்ஸ் ஓடு கதையில் குடுத்து இருக்காங்க... வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்😊
காதல்💖 எத்தனை இருந்தாலும் அவனோட காதல் எனக்கு ரொம்ப பிடிச்சது😍😍 அதற்காக அவனின் செயல்கள்👏👏 அவன் காதலின் ஆழத்தை அவனோட வார்த்தைகளும், அவனவளின் எண்ணங்களை மதிக்கும் செயலும் அழகா சொல்லும்😍😍
யாராய் இருந்தால் என்ன தப்புக்கு தண்டனை குடுக்கணும் என்ற அவர்களின் எண்ணம்👏👏 வைஷ் சூப்பர்ப்😍😍
அம்முவின்1 காதலும் அழகு🤩🤩 அவளின் பிரபா மேல அவள் கொண்ட நம்பிக்கை அண்ட் பாண்டிங் சூப்பர்ப்🤩🤩
அம்முவுக்கு நடந்த எல்லாம்😢😢 கொஞ்ச நாள் என்றாலும் அவளுக்கான காதல் அருமையா கிடைச்சுட்டு😍😍
பிரபா குடும்பம் ரொம்ப பிடிச்சது😍 சுபி அண்ட் பாட்டியின் அலும்புகள், அன்னத்தின் புலம்பல்கள், பாசம் எல்லாம் சூப்பர்... குடும்பமா அவங்க அம்மு மேல வச்ச பாசமே போதும் அவங்களை பிடிக்க🤩🤩 பிரபாவின் சொல்லை ஏற்று எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்று அவங்க காட்டின பாசம் சூப்பர்... சுபியின் அண்ணன் மீதான நம்பிக்கை👏👏
காவ்யா ஒரு நல்ல தோழி🤩 நல்ல காதலி, மனைவி😍 அவளுக்கு ஏத்த ரஞ்சன்😍 நல்ல நண்பன், அண்ணன்... இருவரும் சரியான டாம் அண்ட் ஜெர்ரி couple 🤣 அதன் அவங்களுக்கு அழகா இருக்கு😍 எப்போவும் இப்படியே கிண்டலும் கேலியும் சிரிப்பும் சந்தோஷமுமாக வாழட்டும்💐💐
அமுதா அவளின் ஜீத்து மேல கொண்ட நம்பிக்கை எங்கேயும் தவறவே இல்லை🤩🤩 கடைசி வரை சூப்பரா காப்பாத்திட்டான்😍😍
அவளோட காதலும் அழகு... பதின் வயதில் வந்து அழகாக கை சேர்ந்து இருக்கு... மூவரின் நட்பும், புதிதாய் துளிர் விடும் நட்பும் அருமை👏
பிரபஞ்சன்😍 பேரே பிடிச்சது... அம்மு மேல இவன் வச்ச பாசம் சூப்பர்ப்😍 குட்டியை இவன் பார்த்து கொள்வது😍 சுரபி மீதான் இவன் காதல் சொல்லிக்கலை என்றாலும் சூப்பர்ப்😍😍 பொறுமை போகாம, அந்த காதலுக்காக பிடிக்காத இடத்தில் கூட போய் நிற்பது, குடும்பத்திடம் கூட விட்டு கொடுக்கா அவன் செயல்👏👏😍
Nice ஜி💖... வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
அழகான ரிவியூ சிஸ் 😍பிரம்மாஸ்திரம் 2023
தூறலா நீ கானலா நீ
விமர்சனம்
குடும்பம் நட்பு காதல் பாசம் சஸ்பென்ஸ் மூடநம்பிக்கை எனை எல்லாம் கலந்த ஒரு அருமையான கதை.
நினைவுகளை இழந்து அருகில் மகள் குட்டியம்முவுடன் பிரபஞ்சனின் வீட்டில் கண் விழிக்கும் அம்முவிடம் இருந்து தொடங்குகிறது கதை.
அம்முவுக்கு என்ன ஆச்சு?
பிரபஞ்சன் அம்முவுக்கு என்ன உறவு கணவனா? காதலனா?
குட்டியம்மு யார் குழந்தை? என்ற நிறைய கேள்விகளுடன் கதை ரொம்ப சுவாரசியமாக நகர்கிறது.
இடை இடையே பிட்டு பிட்டாக வரும் ஞாபகங்களும் அம்முவிற்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கு தீர்வு காண அவர் எடுக்கும் முடிவுகளும் ரொம்ப விறுவிறுப்பா இருக்கு
அம்மு, அமுதா, சுபி,பிரியன், காவியா, தர்ஷன், அஞ்சு, ஜித்து, ரஞ்சன், இந்தர், அமி எனப் பெயர்களை வைத்து கதையில் ஆட்டம் காட்டிய விதம் சூப்பர்.
அம்மு,பிரபஞ்சன், ஜித்து, காவியா,தர்ஷன் எல்லாரையும் ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதத்தில் அறிமுகப்படுத்தி ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பை கதையின் போக்கில் விளக்கி எல்லாரையும் ஒரே புள்ளியில் கொண்டு வந்த விதம் அருமை.
அம்மு பிரபஞ்சன் புரிதல்கள் சூப்பர்.
தர்ஷன் காவியா காம்போ சூப்பர்.
நல்ல தோழியாக நல்ல மனைவியாக காவியாவும், நண்பன் மனைவி தங்கை என்று மாட்டி முழிக்கும் எல்லாரிடமும் தர்ஷனும் செம மனதில் நிலைத்து நிற்கின்றனர்
தன் ரித்துவின் ஆசைக்காகவும், குட்டியம்மு, பிரபஞ்சன், அம்மு இவர்களுக்காகவும் யோசித்து இந்தர் எடுக்கும் முடிவு ரொம்ப நெகிழ்ச்சியாக அமைகிறது.
யாரு நல்லவன் யாரு கெட்டவன் என்று யோகிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு எபியும் சஸ்பென்ஸோட ரொம்ப விறுவிறுப்பா கொண்டு போன விதம் சூப்பர்.
கதை ரொம்ப அருமை நிறைய சஸ்பென்ஸ்களோட மூன்று ஜோடிகளின் காதலையும் கொடுத்து ஒரு நல்ல குடும்ப கதையோட ஒரு நல்ல சோசியல் மெசேஜையும் கொடுத்து இருக்காங்க ரைட்டர்.
கரெக்டா யூ டி கொடுத்து கதையை இப்படி நல்லபடியா முடிச்சதுக்கே இந்த ரைட்டர நான் பாராட்டணும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரைட்டரே 💐💐💐💐