#GG27
#ரேணுகாவேலன்
#விமர்சனம்
தலைப்பு பார்த்த உடனே இது ரெண்டு பேரோட காதல் கதை அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அவங்க ரெண்டு பேரோட காதல் மட்டும் இல்லாமல் குடும்பத்தில் அன்பு எத்தகைய முக்கியத்துவம் பெற்றது என்பதையும் எடுத்து சொல்லி இருக்காங்க.
ரேணுகா வேலன் காதல் கல்யாணத்தில் பிரியிற குடும்பம் இளைய தலைமுறையின் காதலில் இணைகிறது.
கதையோட தலைப்பு ரேணுகா வேலன்னு சொல்லி ரேணுகா வேலனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் கதையில் ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் சக்தி.
எந்த ஒரு சூழ்நிலையிலயும் புரிந்து அவங்கவங்க பக்கம் இருந்து யோசிச்சு ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட தவறை புரிய வைத்து எல்லாரையும் அரவணைச்சு ஒன்று சேர்க்கணும்னு நினைக்கிற சக்தியோட குணம் அருமை


எல்லாரும் நல்லா இருக்கணும் அன்போடு இருக்கணும்னு நினைச்ச சக்திக்கு அவளோட வாழ்க்கையில் அப்படி நடந்திருக்க வேண்டாம்


45 நாள் சேலஞ்ச் வைத்து அந்த 45 நாள் சேலஞ்சுக்காக நாத்தனாரின் மாமியாரும் மருமகளின் நாத்தனாரும் செய்யும் அலப்பறைகளும் அருமை


சக்தி சுகானா இருவருக்கும் மனம் முழுவதும் காதல் இருந்தாலும் அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பு ரொம்ப உணர்வு பூர்வமா இருந்தது
லேகா கோவக்காரியா வெளிய கட்டிக்கிட்டாலும் சுஹானா மீது காட்டும் அன்பும் அக்கறையும் சூப்பர்


வேலன் விஜயகுமாரின் சுயநலமில்லாத அன்பும் காதலும் அருமை

எல்லாருடைய உணர்வுகளையும் எடுத்துக்காட்ட கேமரா ஒரு முக்கிய பங்கு வகிச்சி இருக்கு ஆனா எனக்கு இந்த கேமராவோட புக்கிய பங்கு பிடிக்கல
கேமரா மூலமாக தான் ஒருத்தரோட அன்பு புரிஞ்சுக்கணும்னு இல்ல உண்மையான அன்பு மனசளவுல அடுத்தவங்க மேல உள்ள நம்பிக்கையில வரணும்
பணம் கௌரவம் தான் பெருசுன்னு நம்பிக்கிட்டு இருந்த ஸ்ரீலேகா பாட்டிக்கு அன்பும் பாசமும் தான் பெருசுன்னு சக்தி நிரூபிச்சு இருக்காங்க.
மொத்தத்தில வாழ்க்கைக்கு பணமும் கௌரவம் பெருசு இல்ல அன்பும் பாசமும் தான் முக்கியம் என்று ரொம்ப நல்லா எடுத்து சொல்லி இருக்காங்க
குடும்ப உறவுகளின் அன்பையும் பாசத்தையும் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் நல்ல கதை சூப்பர்



வாழ்த்துக்கள்


