GG writers
Moderator
வாசகர்களே!இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடம் பதிவிடுங்கள்!!
மனமார்ந்த நன்றி... நன்றி... நன்றி...#JAHU REVIEWS
#GG 30
#கல்லில்_பூக்கும்_மலர்க்கொடி
மலர் திரு லவ் தான் ஸ்டோரி
அவங்க லவ்வ அவ்வளவு அருமையா சொல்லி இருக்காங்க ரைட்டர்திரு அவங்க பேமிலி மேல வைச்ச லவ்வ அவங்க தப்பா யூஸ் பண்றது கொடுமையின் உச்சம்
பாவம் திரு
மலர் அக்கா அகல்யாக்கு நடந்தது எல்லாம் மனசு பதறுது
மாதேஷ் இவன் எல்லாம் மனுஷனே இல்ல
அவனுக்கு இந்த தண்டனை பத்தாது
அண்ணா பாசம் கூட இல்ல அந்த ****க்கு
பிரஷாந்த், ஆதவன், மாமி, கல்பனா எல்லாரும் மனசுல நிறைந்து நிற்குறாங்க
இந்த ராஜ்ஜய்யன் மாதிரி ஆளுங்கள எல்லாம் திருத்தவே முடியாது
ஸ்டோரி அவ்வளவு சூப்பரா விறு விறுப்பா இருந்திச்சு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
link
தொடர் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும்... அழகான விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றி அக்கா#gossip_glories_25
#கௌரிவிமர்சனம்
#கல்லில்_பூக்கும்_மலர்க்கொடி
ரைட்டர் பொய் சொல்லிட்டாங்க….
மென்மையான காதல் அப்படினு சொல்லிட்டு ஆழமான அழுத்தமான கதையை கொடுத்து இருக்காங்க
திரு & மலர் ஓட செயல்கள் எல்லாம் மேலோட்டமா பார்த்தா மென்மை தான்….
ஆன அவங்க கண் பார்த்து, மனம் பேசி, புரிந்து கொண்ட காதல் அவளோ அழமா, அழுத்தமா பதிவு செய்ய பட்டு இருக்கு….
காதலை சொல்லாமல் பிரிந்து போறாங்க திருவும், மலரும்….
திரு ஓட அன்பை வைத்து அவன் குடும்பம் அவனுக்கு துரோகம் செய்ய…..
முற்றிலும், குடும்பத்தை விட்டு பிரிஞ்சி இருக்கான்….
மலரும் அதே போல….
அவளின் குடும்ப சூழல்….அவளை நிக்காம ஓட செய்து…..
இவர்களின் இந்நிலை கண்ட காதலும்….
தானே முன் வந்து அவர்களை சேர்த்து வைக்குது….
நிவி மூலமாக…..
எப்படி????
திரு…..ப்பா…, ஜீரோ ஈகோ கொண்ட காதலன்…அப்பறம் கணவன்…
நிவிக்கு இவனை விட சிறந்த தந்தை இருக்க முடியாது…
அதே போல, கணவனாக மலருக்கும்…..
குடும்பத்தின் துரோகம் தெரிந்து….மலரிடம் செல்லும் அத்தனை வழி இருந்தும்….
திரு போகல….
அவன் சொன்ன காரனம்….
அவள் அவனுக்கு சாய்ஸ் இல்ல….
எப்படி ஒரு காதல் அவளிடம் கொண்டு இருந்தால்….
இப்படி ஒரு எண்ணம் வரும் திருக்கு
பின், மலரின் கண் பார்த்தே கை பற்றினான்….
இவங்க கூடவே, ஆதவன், ஜனனி, பிரஷாந்த், கல்பனா, ராஜ் நாத், மாமி, கிருஷ்ணன் எல்லாம் அவளோ நிறைவான கேரக்டர்ஸ்…..
முக்கியமா திரு மலரின் நிவி….
அகல்யா & சரண்…. கண்களை கலங்க வைத்தவர்கள்….
திருந்தாத சிலர் இருக்காங்க….அவங்களை பத்தி நாம பேச வேணாம்…..
கதை ரொம்ப சூப்பர் ரைட்டர்….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
லிங்க்
தொடர் கருத்துகளுக்கும், ஊக்கத்திற்கும், அழகான விமர்சனத்திற்கும், மனம் நிறைந்த பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்#கல்லில்_பூக்கும்_மலர்கொடி_விமர்சனம்
திரு நன்மாறன் ❤ மலரினி இவங்க இரண்டு பேருக்கும் இருக்கும் சொல்லாத காதல் எப்படி கைக்கூடுதுன்றது தான் கதை ❤
இரண்டு பேரு காதல சொல்லிக்கல ஏன் பேசுனது கூட இல்ல. ஆனா அந்த காதலோட ஆழம் ரொம்ப பிரம்மிக்க வெக்குது ❤தவிர்க்க முடியாத காரணத்துனால பிரிஞ்சுடுறாங்க
கண் பார்வைலயே ஒருத்தர் மனச இன்னொருத்தர் புருஞ்சுக்கறது எல்லாம் அருமை அருமை
இது மறுமணம் கதைனு சொல்லுறாங்க ஆனா என் பார்வைக்கு இது ரொம்ப மெல்லிய அழகான காதல் கதையாதா தெரியுது ❤
இந்த கதையில எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது அவங்களோட எழுத்து நடை ❤ ஒவ்வொரு உணர்வுகளையும் ரொம்ப அழகா உணர வெச்சுடுறாங்க. முக்கியமா திரு மற்றும் மலரோட காதல், தவிப்பு, வலி, ஏக்கம், கோவம்,அழுகை,ஏமாற்றம்னு எல்லாமே அருமையா சொல்லிருக்கீங்க
நிவி ❤திரு இவங்க ரெண்டு பேரும் வரும் இடம் எல்லாம் அழகு ❤
பிரஷாந்த் மற்றும் ஆதவன் இரண்டு பேரும் அருமையான கதாபாத்திரம். இவங்க எப்படியாச்சும் திரு வாழ்க்கை நல்லா இருக்கணும் அவங்க மெனக்கெடல் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது ❤ இப்படி ஒரு நட்பு நமக்கும் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனவெச்சுட்டிங்க ❤ இவங்க இரண்டு பேருனால கொஞ்சம் கலகலப்பாகவும் இருந்துச்சு
இந்த கதையோட வில்லன்ஸ் இரண்டு பேரு. மாதேஷ் அவன் ஒரு கொ*காரன்ராஜய்யன் கெளவரவத்துக்காக கொ* செய்யும் அளவுக்கு போக கூடிய துரோகி
இரண்டு பேரையும் நினைச்சா இப்பவும் பதருது.
இப்படி எல்லா கதாபாத்திரத்தையும் செதுக்கிருக்கீங்கஅந்தந்த அத்தியாயத்தின் இறுதியில் வரும் கவிதை நல்லா இருக்கு❤
கல்லுல மட்டும் இல்ல என் நெஞ்சிலும் இந்த திரு.மலர் பூத்துறுச்சு
போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்![]()