வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹31.அக்னிதீரனின் மார்கழி பூவையவள்- விமர்சன திரி

அக்னிதீரனின் மார்கழிப் பூவையிவள்

விமர்சனம்

அழகான ஆழமான அருமையான காதல் கதை.

தாமரைச்செல்வி கதையோட நாயகி. குறுகுறுப்பான சுட்டிப்பெண், தூக்கத்துல கும்பக்காரனுக்கே டஃப் கொடுக்குறவ.😂😂

தாமரைக்கு தூக்கத்துல மலர்வதனி அக்னி தீரனோட காதல் கதை தினமும் கனவா வருது. இப்படி தூக்கத்துலையும் கணவளையும் ஆழ்ந்து இருக்கும் நம்ம நாயகி புதுசா சேர்ந்திருக்குற வேலைக்கு லேட்டா போகிறாள்

டைமை பெருசா மதிக்கிற கதையோட நாயகன் ஆதிரன். இப்படி லேட்டா வருகிற இவளை வேலையை விட்டு துரத்த அவளுக்கு அதிக வேலைகளை கொடுக்கிறான். ஆனால் தாமரை கும்பகர்ணனுக்கு போட்டியாக இருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்ற மாதிரி வேலையில் கரெக்டா இருக்கிறான்.

இப்படி போயிட்டு இருக்க தாமரையோட கனவுல மலர்வதனிக்கு அவர் வீட்டில் இருக்கிறவங்க வேற ஒருத்தன் கூட கல்யாணத்தை ஏற்பாடு பண்ண திடீரென உள்ளே புகுந்து தாலிய கட்டிட்டு அக்னிதீரன் போயிடுறான். அந்த கனவோட தாக்கத்திலேயே வேலைக்கு வரும் தாமரை அங்க ஆதிரனைப் பார்த்து ஏன்டா என் கழுத்துல தாலிய கட்டிட்டு விட்டுட்டு போனேன்னு கேட்கிறாள்.

மலர் அக்னி திடீர் கல்யாணத்திற்கு பிறகு தாமரை எவ்வளவு முயற்சி பண்ணியோ அவளுக்கு கனவு வரல.

தாமரைக்கு ஏன் கனவு வரல? மலர்வதனி அக்னி தீரன் கல்யாண வாழ்கை அதுக்கு பிறகு என்ன ஆச்சு? தாமரை ஏன் ஆதிரணை பாத்து என் கழுத்துல தாலி கட்டிட்டு ஏன்டா விட்டுட்டு போனன்னு கேக்குறான்ற கேள்விகளோட கதையை ரொம்ப சுவாரசியமா கொண்டு போயிருந்த விதம் சூப்பர் 👌👌👌

மலர் அக்னி வீரன் ஓட ஆழமான புரிதலான காதலும், தாமரை ஆதிரனோட சுற்றித்தனமும் சீண்டெலுமான காதலும் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌

மலர்வதனுக்காக அக்னி தீரன் செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவ்வளவு நெகிழ்வாய் இருந்தது 👏👏👏

ஆழமான காதல், பக்தி,துரோகம் பாசம், பகை,முன் ஜென்மம்னு கதை ரொம்ப சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்போடும் நகர்த்தின விதம் அருமை 👏👏

நிறைவேறாத காதல் தான் அடுத்த ஜென்மம் எடுத்து வரணும் இல்ல நிறைவேறி நல்லா வாழ்ந்த காதலும் ஒவ்வொரு ஜென்மமும் அவ்வளவு அன்பான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்து மனம் உருகி இறைவனிடம் வேண்டி மறு ஜென்மம் எடுத்து காதலை மீண்டும் வாழலாம்னு ரொம்ப நிறைவாய் இருந்தது😍😍

அருமையான எழுத்து நடை அழகான காதல் கதை சூப்பர்👌👌

வாழ்த்துக்கள்💐💐💐
 
அவ்வ், எவ்வளவு அழகான புரிதலோடான விமர்சனம், மிக்க நன்றி சிஸ். உங்களுக்கு என்னோட கதை பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம் சிஸ்,
 
#பிரம்மாஸ்திரம்_2024

#கௌரிவிமர்சனம்

#அக்னிதீரனின்_மார்கழிப்_பூவையிவள் ….

மறுஜென்மம் பத்தின கதை……

மலர்வதனி, முன் ஜென்மத்தில் அக்னிதீரனை கல்யாணம் பண்ணிக்கரா….அதே போல அவனையே கல்யாணம் பண்ணிக்கணும்னு இந்த பிறவியிலும் அவள்…..தீரா காதலுடன் அவன்……

தாமரைக்கு கனவுகள் வருது, அவள் முன் ஜென்மத்தை நியாபகம் படுத்தும் படி…

அதிலே தெளிவில்லாமல் வரும் அக்னி தீரன் மேல ஏதோ ஈர்ப்பு…..

கனவில் கண்டவனை, தன் முதலலியாக நேரில் பார்க்கவும் அதிர்ச்சி & ஆச்சிரியம்…..

கண்ணிலே காதல் செய்யும் அக்னிக்கும், பார்த்தது முதல் சீண்டி விளையாடும் ஆதிரனுக்கும் நிறைய வித்தியாசங்கள்…..

விளையாடலும் அவளின் மேல் ஈர்ப்பு + சின்ன ஈகோ…..

அவளின் வேலை பாங்கில் அந்த ஈகோவும் மொத்தமாக அடிபட்டு போக……

காதலை உணர்கிறான், அவளிடமும் உரைக்கிரான்….

அவனின் காதலை ஏற்கிறாள் …..

இது அவள் அப்பாவிற்கு தெரிய வர….

பல திருப்பங்கள் கதையில்…..

முன் ஜென்மத்தை கனவிலே கொண்டு போகாமல், இப்படி அவர்களே படிக்கும் படி தந்தது சூப்பர்……

தீரன் தாமரையை விட, அக்னி வதனி கதை ரொம்பவே விறுவிறுப்பா இருந்தது…..

அக்னியை தான் எனக்கு ரொம்பவும் பிடிச்சி இருந்தது….

விஷ்வா, செம்ம டுவிஸ்ட் இவன்…..எதிர்பார்க்கவே இல்ல…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
ஜென்மங்கள் தண்டிய ஆழமான உணர்வு பூர்வமான காதல் கதை...........
தாமரை ஆதிரன் இருவரின் காதலை விட அக்னி வதனி காதல் ஆழமானது அருமையானது..
கதை விறு விறுப்பாக நகரும் அழகான காதல் கதை.......
நமக்கும் அக்னி அல்லது ஆதிரன் போன்று காதலன் கிடைக்க வேண்டும் என எண்ணும் வகையில் அமைந்தது. அருமையான..
இறுதியில் விஷ்வா பற்றிய twist நான் எதிர்பார்க்கவில்லை..
வாழ்த்துக்கள்.......
Super story
 
Thank you so much sis
 
Top