Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனங்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்!!
Thank you so much sisபிரம்மாஸ்திரம் 2023
காதலுக்காக காத்திருக்கிறேன் காதலுடன்
விமர்சனம்
ரொம்ப உணர்வுபூர்வமான காதல் கதை.
கதையோட தலைப்பை பார்த்துவிட்டு அப்படி என்னதான் காத்திருப்பு பார்க்கலாம் என்று தான் படிக்க ஆரம்பிச்சேன் கதிரழகி கந்தர்வனோட காத்திருப்பு 100% தலைப்பிற்கு பொருந்தி இருக்கு.
ஆரம்பமே சோகமாக இருந்தாலும் ஒரு அழகான ஆழமான காதலை ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க.
ஒரு சாதாரண பெண்ணுக்கும் திரையுலகில் பிரபலமான ஒருவருக்கும் இடையே ஒரு நாள் இரவில் சில மணி நேரத்துளியில் முகம் காணாமல் ஏற்படும் காதல்.
கந்தர்வன் தன் வெளிநாடு செல்லு விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சில மணி நேரத்தில் கதிர்ழகியின் முகம் காணாமலேயே அவள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தனக்காக காத்திருக்கும் படி கூறி விட்டு வெளிநாடு சென்று விடுகிறான்.
கந்தர்வன் திரும்பி வந்தானா? கதிர்ழகி கந்தர்வனுக்காக காத்திருந்தாளா? என்பதை கதையில் ரொம்ப அருமையா உணர்வப்பூர்வமா ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க.
கதிரழகியின் காதலை சொல்ல வார்த்தைகளே இல்லை இப்படியும் காதலிக்க முடியுமா? எழுத்துக்களில் எவ்வளவு உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதை நிரூபிச்சு காட்டி இருக்காங்க ரைட்டர் ரைட்டர் ஒரு பெரிய பாராட்டுக்கள்.
நளினா இவ எல்லாம் ஒரு பொண்ணா சரியான ஒரு சுயநல பேய். சந்தனம் வைக்க வேண்டிய இடத்தில் சாக்கடையை கொண்டு வந்து வச்சிருக்காங்க என்று எண்ண வச்ச ஒரு கேரக்டர். இவளுக்கு கொடுத்த ஒரு தண்டனை எனக்கு ரொம்ப சின்னதாக தான் தெரிந்தது.
முருகன், முரளி இருவரும் கந்தர்வனுக்கும் கதிரழகிக்கும் பொக்கிஷங்களாக கிடைத்த நண்பர்கள். அழகி நீ தானா முருகனின் பாசம் ரொம்ப அருமை.
முருகனின் பெற்றோர்கள் இவர்களின் பாசம் உண்மையிலேயே சிறந்தது தன் பிள்ளையின் தோழி என்று நினைக்காமல் தன் மகளாக நினைத்து அவை எதிர்பார்ப்பில்லாமல் அவர்கள் காட்டு அன்புக்கு ஈடு எதுவும் இல்லை
காத்திருக்கும் காதலர்கள் சந்திக்கும் நேரத்தில் கந்தர்வனின் அவசரத்தினால் ஏற்படும் விளைவுகளும் அதனால் கதிர் அழகிரிக்கு ஏற்படும் ஆபத்தும் ரொம்ப கோபத்தை ஏற்படுத்தி விட்டது ரைட்டர் எதிரில் இருந்தால் அவர்கள் சட்டை பிடித்து ஏன் இப்படி பண்றணீங்கன்னு கேக்குற அளவுக்கு அப்படி ஒரு கோபம்.
ஏன் இவ்வளவு கோவம் வந்ததுன்னு கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரொம்ப அருமையான உருக்கமான காதல் கதையை எங்கும் தொய்வில்லாமல் ரொம்ப நிறைவா முடித்த எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்![]()
Thank you so much bawanima#பவாவிமர்சனம்
#காதலுக்காககாத்திருக்கிறேன்காதலுடன்..
#அஸ்த்திரம் 31
நாயகன்- கந்தர்வன்
நாயகி - கதிரழகி.
ஒரு நிமிட நிலைகள் பலநிமிட யாசிப்புகள்
இரவின் மடியிலோ புதுலோக வரவேற்பு இங்கே..
எத்தனை ஜென்மங்களோ இங்கே பார்த்த நொடி
விழித்தேடி காதல் வளர்க்க..
தனித்திரு விழித்திரு காத்திரு
உனக்காய் நானே வருவேன் என காத்திருக்க..
காதலுடன் காதல் காத்திருக்க
காதல் அழியாத கோலமல்லவா..
ஆன்மநிலைகள் காதலை பொய்ப்பிக்கவிடுவதில்லையே
அதுவே தீரா காதலின் தீர்க்க சக்தி ஆனதே...
காதலுக்காக காத்திருக்கிறேன் முகம் மறைத்தே
காதலுடன் என்னவளே(னே)..!!
கந்தர்வா- இசைபாடக நாயகன் முகம் மறைத்த பெண்ணவளை சந்தித்த நொடி விழிகளை மட்டுமே வைத்து காதலிக்க .அடுத்த நிலையே பிரிவை சந்திக்க .எப்படி வந்து கண்டு பிடிப்பான் என காத்திருக்க வைத்தே சென்றான்.ஒரு பொருளை அவளிடம் கொடுத்தே செல்கிறான் அவளை நீங்கி.❤
காதலி தன்னை நினைக்கும் தருணங்களில் அவனின் உணர்வில் நாமும் சிலிர்த்தே போகிறோம் . பல இடங்களில் இவன் நம்மை கோபபடுத்தி பீபி எகிற வைத்தாலும் அட பாவமே என தோன்றியது.
அழகி- எனக்கு மிகவும் பிடித்த நாயகி இவள். காதலுக்காக இவள் படும் பாடுகள் சொல்லி மாளாது. இப்படியும் காதலிக்க முடியுமா என எம்மை பிரமிக்க வைத்து சென்றாள்.❤
அவனுக்காக இவள் செய்யும் காதல் நிலைகள் எல்லாம் அவ்வளவு அழகு. சில நேரம் ஐயோடா என்றிருக்கும்.
முருகன் - நட்பு மற்றும் சகோதர பாசத்திற்கு இவனை மிஞ்சவே முடியாது. தன் நண்பியின் நலனுக்காக இவன் செய்யும் பல செயல்கள் ரசனையும் விழிநீரும்.❤
முரளி- நண்பனுக்காக பாசவலை விரித்தாலும், பல நேரங்களில் அடேய் மடையா என சொல்லவே தோன்றும் .
முருகன் பெற்றோர்கள் உண்மையிலேயே தெய்வங்கள் தான்.❤❤
ஆக ஆசிரிய தோழியே.
மிகவும் உணர்வூ பூர்வமான கதை .ஆரம்பத்திலேயே எம்மை அழவைத்து , ஐயோட என்றிட வைத்து , இந்த கதையின் தலைப்புக்கு கிரீடம் சேர்த்து உள்ளிர்கள். அருமைமா.❤
அதுவும் நாயகன் நாயகி பெயர்கள் எல்லாம் மிகவும் அருமை.
காதலை இப்படியும் காத்திருக்க வைத்தே சொல்ல முடியும் என்பதை மனதோடு உருக வைத்தது சொல்லி சென்றது அருமைமா.
அழகி கிருஷ்ணனை வேண்டும் போது எம்மையும் வேண்டுதல் வைக்க சொல்லாமலே சொல்லி சென்றீர்கள்.
கந்தர்வா உணர்வின் பிடியில் சிலிர்க்கும் போது நாமும் சிலிர்த்தே போனோம். அது காதலின் உச்சநிலை அல்லவா.❤❤
ஒரு உருக்கமான மனதை நெகிழ செய்த காதல் கதையை எங்கேயும் தொய்வில்லாமல் அழகாக அருமையாக கொண்டு சென்று நிறுத்தியது அருமைமா.
அந்த டயரியின் வார்த்தைகள் எல்லாம் காதலின் வலிகளா அல்லது காதலர்களின் உணர்வா என புல்லரிக்க வைத்துவிட்டிர்கள்மா.
அருமையான காதல் கதையை படித்த திருப்தி வாழ்த்துக்கள் மா.
போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.![]()
Wow thank you so much sis. அழகான விமர்சனம். நன்றி#காதலுக்காக_காத்திருக்கிறேன்_காதலுடன்
தலைப்பே கதை சொல்லும்ஒவ்வொரு எபிசோட் வரும் போதும் என்ன ஆகும், சரியா நடக்குமா அப்படினு ஒரு பதட்டத்திலே வச்சு நம்மளையும் காத்திருக்க வச்சுட்டாங்க ரைட்டர்
காரிகை
உணர்ந்திட்ட காதலுடன்
உரைத்திட்ட காதலுக்காய்
காத்திருக்கிறாள் கனவுகளுடன்
கிடைப்பதோ
காளையவன்
ஓர் இரவு
குளிர் நிலவு
கனவுகளை தாங்கி,
லட்சியம் நோக்கிய பயணம்...
சிறு இடர்பாட்டில்
இடைப்பயன துணையாக கன்னியவள்...
வழித்துணை என நினைக்க
வாழ்க்கை துணை என மங்கையின் மான்விழிகள் மன்னவனிடம் காட்டி கொடுக்க
கன்னியின் கண்ணியமான கரைகாணாக் காதலில் காளையும் கவிழ்ந்திட
உணர்ந்த நேசத்தை
உரைத்து விட்டு செல்கிறான்
உறுதி கொடுத்து விட்டும் செல்கிறான்....
கனவோடு, புது நேசமும் கொண்டு செல்பவனுக்கு கை சேருமா இரண்டும்...!?
இனிமையாக போகுதோ என்று பார்த்தால் ரைட்டர் செய்யும் சதிகளில் நம்ம bp ஏறி ஏறி இறங்கி, நாயகனின் செயல்களில் நிரந்தரமா high ல நின்னுடும்
என்ன தான் நடக்கும் பார்த்தா அசால்ட்டா "அவள் இனி இல்லை" சொல்லி கந்தர்வனை மட்டுமல்ல நம்மையும் ஷாக் ல தள்ளிட்டாங்க
ரைட்டரின் சதி சதிராடுதா..?
இவர்களின் விதி விளையாடுதா...?
இல்லை இரண்டும் கைகோர்த்து
டப்பாங்குத்து ஆடுதா....?
என்ன தான் நடந்துச்சு....? உண்மையில் கதிர் இல்லையா....!? ஏன், எப்படி, யாரால்...!? எல்லாம் தெரிய கதையை வாசிங்க....
முரளி♀ என்னோட ஒட்டு மொத்த கோபத்தையும் நண்பனோடு பங்கு போட்ட பெருமை இவனையே சாரும்
இவன் பண்ற எல்லாம் சாமி டேய் உனக்கு மூளை இருக்கா, இல்லையா என்று போய், இவனை வில்லன் range kku நினைக்க வச்சுட்டான்
நண்பனுக்கு நல்லது செய்றேன் என்ற பெயரில் சொதப்பல், சொதப்பல், சொதப்பலோ சொதப்பல்
♀
ரொம்ப நல்ல நண்பன்... நண்பனுக்காக இவன் செய்யுற எல்லாம் முதல் பாதியில் ப்பா என்ன நண்பன் டா நீனுசொல்ல வச்சு, அடுத்த பாதியில் ப்பா என்னடா நண்பன் நீனு சொல்ல வைப்பான்
கந்தர்வன்பாசமான ஒருத்தன் தான்... அழகிக்கு குடுத்த உறுதிக்கு ரொம்பவே உண்மையா இருக்கான்.. தெளிவா யோசிச்சு காய் நகர்த்தும் இவன் சொதப்பல் ஆரம்பிப்பது எல்லாம் இவனின் சர்ப்ரைஸ் பிளான் ல தான்
இவனின் மூளையே ஒழுங்கா யோசிக்காது, அதுவே அதிசயமா எதும் செஞ்சா கூட இவன் ஒத்த ரோசா நண்பன் விட மாட்டான்
உண்மைகளை உணர்ந்த நிமிடம் இவனின் வலிவழியே இல்லை போக்க
முருகன்wow கேரக்டர் டா நீ... ரொம்ப பிடிச்சது இவனை
நட்புக்காக என்ன என்ன செய்யுறான்
வலியில் கூட இருப்பது முதல், அதில் வழி நடத்துவது வரை சூப்பர் இவன்
இவனோட parents
என்ன சொல்ல அவ்ளோ நல்லவங்க
இவங்க உறவும், நட்பும் கிடைக்க blessed
கதிரழகிunconditional love
ரொம்ப ரொம்ப அழகான காதல் அவளோடது... இப்படிபட்ட நேசம் எல்லாம் வரம்
எதையுமே எதிர்பாராத நேசம், பதிலான நேசத்தை கூட
காதலுக்காக இவள் செய்யும் ஒவ்வொன்றும்
ஏமாற்றம் சூழ்ந்த போதும் கூட இவளின் மனசு, செயல்
இவளின் அதீத நேசமே இவளை மரணத்தில் தள்ளியது
இவளின் சில செயல்கள், மலைக்கு போறது, பைத்தியக்காரினு சொல்ல தோணுச்சு
நேசமே நேசிக்கும் இவள் நேசம் பார்த்து
அவனை ஒரு வார்த்தை சொல்லாத இவளின் அன்பு அபூர்வம் தான்
எவ்வளவு ஆழமான காதலாய் இருந்தால் அப்படியே ஏற்கும் மனம் வரும்
she is such a beautiful soul
பரத் பாவம் டா ஒரு சிங்கிள் பையன் சாபம் சும்மா விடாது யாரையும்
மகேஷ் எதிர்ப்பார்க்காத ஒரு ஆள் இவன்... இவனை நினைச்சு வச்சதுக்கு மாறா இவனோட செயல் சூப்பர் டா
டயரி கூட ஒரு கேரக்டர் போல வந்துட்டு
காதல் காதல் காதல் தான் கதை முழுவதும்சந்தோஷமா, சோகமா, வலியா, வருத்தமா, என பல உணர்வுகளோடு நேசம் மட்டுமே பயணிச்சு இருந்துச்சு
உணர்வுகளை நல்லா வார்த்தைபடுத்தி கடத்தி இருந்தீங்க சூப்பர்
வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி![]()