Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான விமர்சனத்தை இவ்விடத்தில் தெரிவியுங்கள்..!!
Wow 🤩 Romba Romba nanri ma. Alaha solli irukkenga. Alahana vimarsanam. Ungal thodar aadharavukkum anbukkum enrum en nanrigal 😘😘பிரம்மாஸ்த்திரம் 2023
தி டிவோர்ஸ்
விமர்சனம்.
கோவமும்ஈகோவும் பெருசா பிடிச்சுக்கிட்டு தொங்கிக்கிட்டு பெண்களின் மீது நல்ல எண்ணமும் மரியாதையும் இல்லாமல் வெறுப்போடு சுற்றும் நாயகன் ஆரிய விக்ரமன்.
தாயும் நண்பர்களையும் தவிர்த்து உலகம் மரியாதை தங்கக் கூண்டு கிளியாக வலம் வரும் நாயகி ஆதன்யா.
தவறான சூழ்நிலையில் தவறான பார்வையில் புரிந்து கொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் தவறான எண்ணத்தில் மனதில் பதிகின்றனர்.
பெற்றோர்களின் திருமண ஏற்பாட்டால் மணமேடையில் நேருக்கு நேர் சந்திக்க ஆதன்யா தன் தவறான புரிதலினால் மனமேடையில் விக்ரமனை அவமானப்படுத்த அதனால் அவள் மீது அளவுக்கு மீறி கோபம் கொள்ளும் விக்ரமன்.
தவறான புரிதல் அளவுக்கு மீறிய கோபம் கோவம் கொண்டு வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் உடலும் கூடலுமே கதை.
ஆதன்யாவின் குறும்பு குணமும் விக்ரமனை டென்ஷன் படுத்தும் ஒவ்வொரு செயல்களும் ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கு.
விக்ரமனின் பெண்களின் மீதான வெறுப்பிற்கு ஒரு அழுத்தமான fb இருந்தாலும் எல்லா பெண்களின் மீதும் வெறுப்புக் கொள்வது சரியாக இல்லை.
ஆதன்யா அவ தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு இறங்கி வரும்போது இவன் முறுக்கி கொண்டு திரிவதும். அவளாக தன்னிடம் இறங்கி வர மாட்டாளா என்று இவன் ஏக்கம் கொள்ளும்போது அவ முறுக்கிக் கொண்டு திரிவதும் கதைக்கு சுவாரசியத்தை சேர்க்கிறது.
விக்ரமன் விஜிதா உறவு முறையை விளக்கும்போது கொஞ்சம் முன்னுக்கு பின் முரணா இருந்தது அதை கொஞ்சம் சரியாக விளக்கி இருந்திருக்கலாம்.
விக்ரமன் தான் கொண்ட ஈகோ தான் பெருசு தான் நினைச்ச மாதிரி தான் ஆதன்யா இருக்கணும்னு கோபத்துடன் சுற்றியது கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படி இல்ல.
புரிதல் இல்ல கணவன் மனைவி வாழ்க்கை நிகழ்வுகளை மிகை படுத்தாமல் எதார்த்தமாக கட்டிய விதம் அருமை.
நல்ல கதை நிறைவான முடிவு.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐