Priyanka Muthukumar
Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்
நன்றி. இப்போது தான் படித்தேன். எதிர்பார்க்காத சந்தோஷம்#பிரம்மாஸ்திரம்_2023
#கௌரிவிமர்சனம்
#தேன்_சிந்துமா_வானம்....
ரொம்ப எதார்த்தமான கதை🤩🤩🤩🤩🤩
முந்திய தலைமுறையில் இருந்து ஆராமிக்குது கதை🥰🥰🥰🥰🥰
ராம் & நாகா, லவ் பண்ணி பெற்றோர் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கராங்க.......
ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கார்மன்ஸ் ஆரம்பிக்க, குழந்தையும் பிறந்து வாழ்க்கை ரொம்ப நல்லா போகுது......
தொழிலில் அடுத்த அடுத்த முன்னேற்றம், குழந்தையின் வளர்ச்சி என்று நல்லா போற வாழ்க்கையில் இடி போல ஒரு சம்பவம்😥😥😥😥😥😥
ராம் இல்லாம ஒரு பார்ட்டிக்கு போகும் நாகாவிடம் யாரோ தப்பா நடந்து கொள்ள, விளைவு??????
அவங்க மனநிலையில் பெரிய மாற்றம்......
ராமையும் பக்கத்தில் நெருங்க விடலா, தான் ராமுக்கு தகுதி இல்லாதவள் ஆயிட்டோம்னு எண்ணம்.....
எதிலும் பற்றற்ற ஓர் விரத்தி நிலை🥺🥺🥺🥺🥺🥺
சில காலம் இப்படி போக, அவங்க கர்ப்பமா இருக்கறதை உணராங்க😳😳😳😳😳
அது தன் ராமின் குழந்தை அல்ல அப்படினு ஓர் பொல்லா எண்ணம்....விளைவு??????
அந்த குழந்தைக்கு பால் கூட தர மறுக்க......அந்த குழந்தை சிமி தாய் பாசத்திர்க்கும் அரவணைப்பிர்க்கும் ஏங்கி நிற்க்குது 😭😭😭😭😭😭
இங்க இப்படி இருக்க, நம்ம ஹீரோ வீடு ரொம்பவே பாரம்பரியம் ஆனது.....பெரிய தொழில் குடும்பமும் கூட......
ஆன அங்க அன்பு செய்து, அன்னம் ஊட்ட தான் ஆள் இல்ல, பெற்றோர் இருந்தும்🤷🤷🤷🤷🤷🤷
இயற்கையிலே கொஞ்சம் அடம் பிடிக்கும் பிள்ளையா இருக்கற நம்ம சாஹிலை ஹாஸ்டலில் சேர்க்க அவன் கூடவே சுற்றி திரியும் அவன் அத்தை மகனான ரிஷியும் சேர்க்க படுகிறான்.......
இப்படி சின்ன வயசில் இருந்தே பெற்றோர் இருந்தும் அன்பு, பாசம் இல்லா வளரும் சிமி & சாஹி ரெண்டு பேரும் எப்படி வாழ்க்கையில் சேர்ந்தார்கள் அப்படிகரது மீதி கதை🥰🥰🥰🥰🥰🥰
ராம் - திருமணம் அதும் காதல் திருமணம், சொல்லவே வேணாம் வாழ்க்கை ரொம்ப அழகா போச்சி, அந்த சம்பவம் நடக்கும் வரை.....
அதற்கு பின் ராமின் வாழ்க்கையில் இன்பமே இல்ல, சிமி மட்டும் தான் ஒரே ஆறுதல்🥺🥺🥺🥺🥺
பாவம்யா மனுஷன், எவளோ பட முடியுமோ அவளோவும் பட்டுட்டார்......மனைவி எந்த நேரம் எப்படி ஆர்ப்பாட்டம் செய்வா, தாய் அன்பிற்கு ஏங்கும் குழந்தையை பார்க்கணும், வளர்ந்து நிக்கற தொழில்களை பார்க்கணும்...... தனி மனுஷனா ரொம்ப காலம் தனியாவே ஓடிட்டார்.......
அதனாலோ என்னவோ முதுமை வரும் நேரம், நிரந்தர ஓய்வு தேவை பட்டதா🤧🤧🤧🤧🤧🤧🤧
நாகா - இவங்களை குறை சொல்லி ஆக போறது இல்ல......
ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்ச அதீத காதலே, குற்ற உணர்வில் தள்ளி விட்ருச்சி இவங்கள🥺🥺🥺🥺
சிமிக்கு எதுவும் செய்யாம இருந்தது தான் கோவம் வர வெச்சது......
தனிலே மூழ்கி, அந்த குழந்தை ஓட பாதுகாப்பையும் சரி வர கவனிக்கலை 🤷🤷🤷🤷🤷
அதன் விளைவு, தன் சொந்த அக்காவால் நித்தம் ஒரு கொடுமை சிமிக்கு😳😳😳😳
பொதுவாகவே பின்னாடி பிறந்த குழந்தைகள் மேல முன்னாடி பிறந்த குழந்தைகளுக்கு பொறாமை இருக்கும்......அதை பெற்றோர் தான் களைந்து விட வேண்டும்.......
ஆன இங்க அதுவும் சிமிக்கு எதிராக தான் நடந்து இருக்கு🤧🤧🤧🤧🤧
வைஷு - சிமி பிறக்கர வரை பெற்றோரின் இளவரசியாக இருந்தவள், சிமி வந்ததும் தன் உரிமைகள் போய் விட்டதுனு தப்பா முடிவு எடுத்து அதை தன் ஆழ்மனதில் பதிய வெச்சிக்கர🙄🙄🙄🙄
அன்றைக்கு ஆரம்பமான சிமி மீது உண்டான வெறுப்பு கடைசி வரை போகல🤷🤷🤷🤷🤷
முத்தாச்சி & தாத்தா - ராம் ஓட அப்பா, அம்மா ...... சிமியை செம்மையாக வளர்த்தது இவங்க தான்🥰🥰🥰🥰🥰
சாஹி - சிறு வயதில் இருந்தே ஹாஸ்டல் வாசம்......கொஞ்சம் முரடனும் கூட🤷🤷🤷🤷🤷
ஐயோ போச்சி, இந்த பயல் கிட்ட மாட்டிட்டு என்ன பண்ண போற சிமினு பார்த்தா.....
சும்மா சொல்ல கூடாது, பயலோட சொல்லாத இல்லனா இது காதல் இல்ல, அவ சின்ன பொண்ணு அப்படினு நினைக்கர காதல் அவளோ அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰
கடைசி வரையுமே 🤭🤭🤭🤭 ....
வாழ்க்கையில் இந்த காதல் சேராதுனு அவனே முடிவு பண்ணி, வேற வழியில் செல்ல.....செம்ம காண்டு தான் ஆச்சி இவன் மேல.......
ஆன அவனோட காதல் அங்கையும் கண்ணியம் காத்து நிற்க, aww சாஹி😘😘😘😘😘😘😘😘😘😘
அவளோ பிடிச்சது அப்ப🥰🥰🥰🥰🥰
சிமி - உண்மையா பாவம், ராம் & அவர் அப்பா அம்மா இல்லனா இவ வாழ்க்கை???????
எதனால் தாய் & தமக்கையால் ஒதுக்க படரோம்னு தெரியாம இருக்கும் அந்த நிலை😭😭😭😭😭
பிறகு, தாய்னா தானாவே ஒதிங்கிக்க பழகிட்ட.......
பக்குவம் வந்த பிறகு, அந்த ஒதுக்கதிர்க்கான காரணம் தெரிய வர, தாய் ஓடு நல்ல இணக்கம் கொண்டு வரவே முயல்கிறாள்.....
அதுவும் கூட நாகாவை நல்ல நிலைக்கு கொண்டு வர உதவுது.......
கடைசில நாகா தெளிவு பெற்ற விதம்👌👌👌👌👌👌, இந்த அடி அண்ணிக்கு அடிச்சி இருந்தா அவங்களுக்கு இந்த நிலமை இல்ல, ம்ச்.......
சாமு - ஆரம்பத்தில் கெட்டவள் போல இருந்தாலும், சில பல தவறுகள் செய்து இருந்தாலும்.......
இவளையும் மாற்றியது இவளோட உண்மை காதல் தான்......
சாஹி, வாழ்க்கையை விட்டு விலகி போகும் போது இருந்த தெளிவு இவ வாழ்க்கையை மட்டும் அல்ல, அவனோட வாழ்க்கையையும் சிறப்பா அமைச்சிக்கா உதவிச்சி.....
ரங்கநாதன் - வில்லத்தனம் பண்ணிட்டு குறுக்க மறுக்க போய்ட்டு இருந்தார்🤭🤭🤭🤭🤭🤭🤭.......
இவர் தான் சிமிக்கு ஐ ஒபனர் 🫢🫢🫢🫢🫢....
ரிஷி - சாஹி போல லூசு இல்ல எல்லா விசயத்திலும் தெளிவு தான்.....ரொம்ப நல்ல நண்பன்🤩🤩🤩🤩🤩🤩
இவனை சிங்குளா வெச்சிட்டின்க ரைட்டர்🤷🤷🤷🤷🤷
இவன் குடும்பமும், சூப்பர்..... சிமிக்கு ராம் எப்படியோ அதே போல சாஹிக்கு இவன் குடும்பம் பாசத்தை காட்ட 🥰🥰🥰🥰🥰🥰
நாகா அவங்களை சுத்தி தான் கதையே......அதை எதார்த்தம் மீறாம அழகா கொடுத்து இருங்காங்க ரைட்டர் ஜி👌👌👌👌👌👌
ஒரு ஒரு எபிசோட்க்கும் அந்த எபிசோடில் என்ன இருக்கோ அதை அப்படியே எபிசோட் தலைப்பா வெச்சது சூப்பர் ஜி👏👏👏👏👏👏
கடைசில தேன் சிந்தியது வானம்🥰🥰🥰🥰🥰🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐
லிங்க்👇👇👇👇
Thanks ji, உங்களை தெஞ்சிக்க ஆவல்🤩🤩🤩🤩நன்றி. இப்போது தான் படித்தேன். எதிர்பார்க்காத சந்தோஷம்
விமர்சனம் அருமையா இருந்தது. நன்றி.பிரம்மாஸ்திரம் 2023
தேன் சிந்தும் வானம்
விமர்சனம்
ரொம்ப எதார்த்தமான ஃபீல் குட் குடும்ப கதை.
நாயகன் நாயகி இடமிருந்து இல்லாமல் அவர்களை பெற்றவர்களிடம் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
தந்தையிடம் கோபித்துக் கொண்டு மும்பை செல்லும் ராம் பிரசாத் நாகாவின் தந்தையுடன் ஏற்படும் தொழில் பழக்கத்தினால் நாகாவை காதலித்து இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார் இருவரும் ஒரே துறையில் கற்றதனால் இருவரும் இணைந்து தொழில் தொடங்குகின்றனர்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்து முதல் குழந்தை வைஷ்ணவி பிறந்த உடன் சந்தோஷமாக குடும்பம் குழந்தையாக இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் பெரும் புயலை வீசுகிறது ஒரு சம்பவம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகா இரண்டாவது கர்ப்பம் தரிக்கும் சமயம் அதை உணர்வதற்கு முன்னரே சூழ்நிலை காரணமாக கணவன் இல்லாமல் தொழில்துறை பார்ட்டிக்கு தனியாக போகும் நாகாவிடம் யாரோ தவறாக நடந்து கொள்ள அதனால் அவரின் மனநிலையில் மிகவும் மாற்றம் அடைகிறது.
தான் தன் கணவனுக்கு தகுதி இல்லாதவள் என்று நினைக்கிறார். தன்னைத்தானே குறுக்கிக் கொண்டு தனக்கான ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அது தன் கணவனின் குழந்தை இல்லை என்று மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு அந்த குழந்தை சிமியை அறவே வெறுக்கிறார் .
நாயகி சிமியின் குடும்பம் இப்படி இருக்க
நாயகன் சாஹிலின் நிலையும் இதுதான் பெரிய பாரம்பரியமான குடும்பத்தில் செல்வ செழிப்பில் இருக்கும் சாஹிலுக்கும் அன்புதான் பிரச்சனை அப்பா அம்மா இருந்தும் பணத்தின் பின்னால் சுற்றும் அவர்கள் மகனுக்கு அன்பு காட்ட தவருகின்றனர்.
அப்பா அம்மா பாசம் இன்றி பிடிவாத குணத்தோடு இருக்கும் சாஹிலை அவனின் நிலை அறியாமலேயே ஹாஸ்டலில் சேர்க்கின்றனர் அதில் இன்னும் தனிமையில் முரட்டுத்தனமாக வளர்கின்றான் நாயகன்.
இப்படி பாசத்திற்காக ஏங்கும் சிமி,சாஹில் இருவரும் எப்படி வாழ்க்கையில் சேருகிறார்கள் என்பதை மீதி கதையில் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறார் ரைட்டர்.
சிமி_ அம்மாவுக்கு நடந்த சம்பவம் தெரியாமல், தாயும் தாயை பின்பற்றி தமக்கையும் ஏன் தன்னை வெறுக்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களின் பாசத்திற்காக ஏங்கி ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை விட்டு ஒதுங்கி, தன் படிப்பிலும் தன் திறமையிலயும் தன் கவனத்தை செலுத்தி தாத்தா, பாட்டி, அப்பாவின் அரவணைப்பில் வளரும் சிறு பெண்.
சாஹில் ராம்பிரசாத்தின் தொழிலுடன் ஏற்படும் பழக்கத்தில் அவரின் வீட்டின் விசேஷத்திற்காக செல்லும் தருணத்தில் திமியை பார்க்கும் முதல் பார்வையிலேயே அவளின் பால் ஈர்க்கப்படுகிறான்.
தனக்கும் சிமிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை நினைத்து தன் காதல் நிறைவேறாது, சாந்தினி நினைப்பது தவறு என்று தனக்குள்ளேயே உழன்று அவன் எடுக்கும் ஒரு முடிவு என்னடா இப்படி ஒரு முடிவு எடுத்துட்டான் என்று எண்ண வைக்கிறது.
சாமுக்கு ஏற்படும் கல்யாணம் இரு தொழில் குடும்பங்களில் செல்வ நிலையை முன்னிறுத்தி நடத்த நடத்தப்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு சாமுவின் புரிதலான முடிவு அருமை.
ரிஷி தோள் கொடுப்பான் தோழன் என்ற வாக்கியத்திற்கு அர்த்தம் சேர்க்கும் இவனுடைய நட்பு அருமை 👏👏
முத்தாச்சி தாத்தா இவங்ள ரொம்ப ரொம்ப எனக்கு புடிச்சி இருந்தது இந்த கதையில. மருமக மனநிலை அறிந்து அவளை எந்த குறையும் சொல்லாமல் பாசத்திற்கு ஏங்கும் கிளியை பொறுப்பாக வளர்த்த இவங்களோட குணம் ரொம்ப புடிச்சி இருந்தது.
ராம் பிரசாத் கதையோட ஆணிவேரே இவர் தான் இவரோட நிலை தான் ரொம்ப பாவம். வயசான அம்மா, அப்பா, காதலித்த மனைவியின் ஒதுக்கம், தொழில் பிரச்சனை, தாய் பாசம் இன்றி தவிக்கும் மகளின் பொறுப்பு என்று எல்லா பிரச்சினையும் சமாளிக்க இதனால் ஏற்படும் மன அழுத்தத்தில் இவருக்கு ஏற்படும் நிலை ரொம்ப வருத்தமா இருந்தது.
ஒரு அருமையான குடும்ப கதையை ரொம்ப யதார்த்தமா கொடுத்த ரைட்டர்க்கு பாராட்டுக்கள் 👏👏
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 💐💐💐
விமர்சனம் படித்தேன். நன்றி சகோதரிபிரம்மாஸ்திரம போட்டிக் கதை 52 தேன் சிந்துமா வானம் எனது பார்வையில். ராம்குமார் மற்றும் நாகா தொழிலில் முன்னேறி வரும் வேளையில் நாகா ஒரு தொழில் விருந்துக்கு தனியாக சென்ற பொழுது உடலளவில் பலவந்தப்பட்ட பின் அவர்களுக்கு பிறந்த பெண் சிமி என்பதால் நாகா மனம் ஏற்றுக் கொள்ளாமல் மனநோய் ஏற்பட்டு சிமியை வெறுக்கிறாள். மூத்த பெண் வைஷ்ணவி மற்றும் நாகாவால் வெறுக்கப்படும் சிமியை ராம் மற்றும் அவரது பெற்றோர் பாசத்துடன் வளர்கிறார்கள். இந்தியாவில் பெரிய வியாபாரக் குடும்பத்தின் மூத்த மகன் ஷாஹில் வியாபாரிகள் குடும்பத்தின் மூத்த வாரிசு என்று கட்டாயமத்தால் ஊட்டியில் பள்ளிப் படிப்பை படிக்க வைப்பதால் குடும்பத்துடன் விலகி நிற்கிறான். சிமியை ஒரு விழாவில் பார்க்கும் ஷாஹிலுக்கு அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அவள் பள்ளிப் படிப்பில் இருக்கிறாள் என்பது ஏமாற்றம் அளிக்கிறது. ராம்குமார் உடல் நிலை சரியில்லை என்பதால் தொழில் பங்குகளை மகளுக்கு எழுதி வைத்து தொழில் பங்குதாரர் மற்றும் நம்பிக்கைக்குரிய ஷாஹிலை பாதுகாவலராக நியமிக்கிறார். ஷாஹில் தொழில் முறையில் தொடர்பு உள்ள இணை அமைச்சர் மகள் சாமுத்ரிகாவை திருமணம் செய்து கொள்கிறான். இருவரின் மனம் ஒட்டாததால் சாமுத்ரிகா வெளிநாடு சென்றுவிடுகிறாள். விபத்தின் காரணமாக தாத்தா மற்றும் பாட்டியை இழக்கும் சிமி உடல் நிலை சரியில்லாமல் அப்பாவையும் இழந்த அவளின் நிலை என்னவானது என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார் எழுத்தாளர். சம்பவங்கள் அதிகம் இல்லாமல் மன உணர்வுகளை வெளிப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். நாகாவால் மீண்டு வர முடியாததை யதார்த்தமாக தந்திருக்கிறார். ராம் சிறந்த மனிதர். சாதாரண கதை ஆனால் எழுத்தாளர் அதை தந்த விதம் சிறப்பாக யதார்த்தமாக உள்ளது.