வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹6.வெண்பனியில் கரைந்த தீந்தணல் - விமர்சன திரி

santhinagaraj

Active member
பிரம்மாஸ்திரம் 2023

அஸ்திரம் 6

வெண்பனியில் கரைந்த தீந்தனலே

நிஜமாவே தலைப்புக்கு ஏற்ற மாதிரி சஹானா என்னும் வெண்பனியில் கௌதம் எனும் தீந்தனல் கரைந்த கதை தான்

ஆணிற்கே உரிய கம்பீரத்துடனும் பணத்தினால் வந்த கர்வத்துடனும் வலம் வரும் நாயகன் கௌதம் கரிகாலன் நாயகி சகானாவை பார்த்ததும் காதலில் விழுகிறான்.
சஹானாவை பற்றி முழுவதும் அறியாமலே மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளைப் பற்றி முழுமையாக அறிந்த பின் அவளை விலகவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் இரண்டு மனநிலையில் தவிக்கிறான்.

வாய் பேச முடியாமல் ஒரு காதும் கேட்காத சஹானா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் முன்னிறுத்தி கௌதமிடம் பயமும் வெறுப்பும் கொள்கிறாள்.

சஹானா, கெளதம் இருவரும் புரிதல் இல்லாத பிரிவில் தங்களை எப்படி உணர்கிறார்கள் எவ்வாறு தவிக்கிறார்கள் என்பதை உணர்வு பூர்வமாக விலக்கிய விதம் சூப்பர்.

கௌதம் துர்காவின் அப்பா மகள் உறவும் அவர்களின் உணர்வும் அருமை.கௌதம் துர்கா காகவும் சஹானாக்காகவும் பார்த்து பார்த்து செய்யும் செயல்கள் யாவும் வார்த்தையில் அடங்காத அன்பின் வெளிப்பாடக மனதில் பதிகின்றன.
கௌதம், சஹானா மீதான சந்தோஷின் எதிர்பார்பில்லாத நட்பும் அக்கறையும் ரொம்ப நெகிழ்ச்சி அடைய வைக்கிறது. சந்தோஷ் மாதிரி நட்பு கிடைப்பதெல்லாம் வரம்.

வாய் பேச முடியாத ஒரு காது கேட்காத பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவளின் உணர்வுகளையும் ரொம்ப அழுத்தமாகவும் அழகாகவும் தன் எழுத்து திறமையால் கண் முன்னால் காட்சிகளாக கொண்டு வந்து நிறுத்தி எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் ❤️❤️

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ 💐💐💐💐
 
Thank u so so much sis❤️❤️❤️🙏

கௌதம் மற்றும் சஹானாவைப் பற்றி அவ்வளவு அழகா சொல்லிட்டீங்க🙏🙏💞💞💞💞💞💞💞

சந்தோஷின் நட்பை பத்தியும் ஆழமாக சொல்லிருக்கீங்க டியர்💞💞💞💞💞
Your review made my day dear💞💞💞💞💞🙏

Thank u so much for the wonderful review dear💞💞💞💞💞💞
 
கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன். கௌதம் சஹானாவை பார்த்தவுடன் காதல் வந்து தனக்கே எல்லாம் அவள் என்று நினைத்து திருமணம் செய்கிறான். திருமணம் ஆனவுடன் தான் திருப்பங்கள் நடக்கிறது. திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவளிடம் விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறான் சந்தோஷ் நண்பனாக அவனுடைய காதல் ஜெயிக்க வேண்டும் என்று அவனுக்கு எதிராக செயல் படுகிறான். சஹானா சமாதான படுத்தி அனுப்புகிறார்கள். அவளுக்கு பிரச்சினை வரும் போது என் சஹானா என்றும் அவள் பிரச்சினைகளை களைந்து அவர்கள் உண்டு இல்லை பண்ணுவதால் சஹானா காதல் வந்து இருவரும் இணைகிறார்கள். பின்னர் பிரச்சினை வான்மதி மூலம் ஆரம்பித்து அதனால் அவள் பிரிந்து விடுகிறாள். அவளின் பிரிவின் போது அவளின் மேல் காதலை உணர்ந்து நாலுவருசமாக தேடி கண்டுபிடித்து தனது நிலைமையும் அவளின் நிலைமையும் உணர்ந்து அவளையும் அவனின் மகளையும் வீட்டுக்கு கூட்டி வந்து இல்லறம் இனிமையான நல்லறமாகவும் மாறுகிறது. மொத்தத்தில் கதை அருமை. காதலுக்கு மொழி தேவையில்லை அன்பு உணர்வுகள் போதும். என்பதை அழகாக கொண்டு போயிருக்கேங்க சகி. வாழ்த்துக்கள். நட்பு அண்ணா அண்ணி பாசம் செம. வாழ்க வளமுடன். கௌதம் ஆரம்பத்தில் பிடிக்க வில்லை ஆனால் அவனின் சூழ்நிலையில் அவன் அழகுதான். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை.
 
bawanibala

New member
#பவாவிமர்சனம்

#வெண்பனியில்கரைந்ததீந்தணல் ..

விழிகள் கலந்தபோது மௌனங்கள் தெரியவில்லை
மொழிகள் வலம்பெற துடித்தபோது மௌனங்கள் கசந்ததோ..

தனிமை தவத்தின் விடியல் இருண்டவானமாக தொடர
தனிமை சாபமாக இங்கே பயணித்ததோ..

இல்லை காதலோடு கலந்து வா
உன்னிலை மௌனங்கள் மொழிபேசுமே..

தீந்தணலாய் அவனாக பனிமலராய் அவளாக
மௌன மொழிகளோ கரைந்து காதலோடு உறவாகியதே..!!

மௌன மங்கைக்கும் தனிமை உறைவிடமாய் கொண்ட ஆணுக்கும் ஏற்படும் மௌன போராட்டம் கலந்த உணர்வுசூழ் கதை.👌👏👏❤

நாயகன் .கௌதம் கரிகாலன் ஆண்மையின் கம்பீர நெடு நெடு நெடுமால்.தொழில் இவனை சாய்க்க முடியாதவன். அத்தோடு கர்வம் எனும் முகாந்திரத்துடன் வலம் வரும் அசாரா நாயகன்.
இவனுக்கு சலுகை ,பரிதாப நிலை கொண்டோர் என கண்டாலே பிடிக்காது.👌👌👌💓💓💓

அவனை அசரவைத்த அந்த விழிகளுக்காக ஏங்கி திருமணம் செய்ய. அங்கே இவனின் துன்பங்கள் தொடங்கி.காதலா, ஏளனமா என ஏங்கி தவிக்கும் இவனின் நிலை பரிதாபமே.இவனை பொறுத்தவரை இவனின் அந்த திமிரான இயல்பு கடைசிவரை வந்தது அருமை.👌👏👌👌

நாயகி .சஹானா அமைதியான பெண் இவளின் வாழ்வை பல புயல்கள் சுருட்டிபோட .அதிலிருந்து மீண்டு வந்த போது இன்னொரு பெரும் புயல் காதல் என்ற பெயரோடு திருமணம் என்ற நிலையோடு சுழற்றி சுழன்றாட வைப்பது பாவமே இந்த பெண் என தோன்றியது . 😔👌🌺

சஹானாவின் மன குமுறல் எல்லாம் செய்கை வடிவில் வந்து நம்மை வதைப்பது கவலையே. காதலும் வந்து அதனோடு பிரிவும் வந்து இவளை ஓட வைப்பது சாபமே.😐😐

சந்தோஷ் . இடுக்கை களையும் இனிமையான நண்பன் என்றால் மிகையில்லை . தன் நண்பன் கௌதமுக்காக இவன் செய்யும் பல செயல்கள் நண்பேண்டா நீ என உரக்க கூவவே தோன்றும் .
நண்பனின் காதலை அவனோடு சேரவிட்டு அழகு பார்ப்பது, அவனின் தனிமைக்கு தோள் கொடுப்பது, தப்பென்றால் தட்டி கேட்பது , அவனை புரிந்து உதவுவது என !!!!என்ன நட்புடா இது!?? என சொல்லலாம். சந்தோஷின் சந்தோசமே கௌதம் என்பதே தகும்.❤❤💓💓💓

பிரபு . பாசக்கார அண்ணணாய் பல இடங்களிலும் பரிதவிப்பது பாசமே. தன் தங்கை வாழ்வுக்காக தன் வாழ்வையும் தேடி கொண்டு அவளை காப்பது மிக அருமை.❤❤👌

துர்கா . தன் தந்தையின் உணர்வுகளோடு விளையாடி அதை பாசத்தோடு அப்பா என்ற விளிப்போடு மெய்பிக்கும் அந்த இடம் எனக்கே கண்கலங்கிவிட்டது.👌❤❤

இப்படி நிறைய கதாபாத்திரங்கள் நம்மை வலம் வந்து இந்த கதையோடு பின்னி பிணைந்து பயணிப்பது அருமை.❤❤

ஆக ஆசிரிய தோழியே.
யார்ம்மா நீங்கள் !??? இப்படி ஒரு கதையை போட்டி கதைக்கு கருவாக கொண்டு வந்ததிற்கு சபாஷ் போட வேண்டும் .👌👏👏👏

நல்ல முதிர்ந்த எழுத்து நடை. எந்த குறைகளும் இல்லாது கதையை நகர்த்திய விதம் அருமை . பழக்கப்பட்ட எழுத்தாகவும் இருக்கிறது அருமை.👌👏❤❤

பல இடங்களை சுட்டிக்காட்ட ஆசை.விமர்சனம் வளருமே தவிர குறையாது!! நாயகன் நாயகி இணைந்த பின்பும் அவர்களை உடனே இணைய விடாமல் தனிமையை தந்து, இருவருக்குமே கால அவகாசம் தந்து நல்ல புரிதலோடு காதலை உணர்ந்து இணைத்திருப்பது. ஷப்பா இதுவே உங்களின் எழுத்தின் வீரியமான உணர்வுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் .👌👏👏👏👏

நட்பை அழகாக காட்டி அதையும் கோபுர கலசமாய் ஏற்றியது அருமை.👌❤❤

குறைகளை களைந்துப்பார் உண்மையான நேசம் பாசம் காதல் என மூன்றும் முக்கனிச் சாராய் உன்னிடம் நிறைந்திருக்கும் என சொல்லாமல் சொல்லி சென்றது அருமை.👌👌👏❤

மௌன மொழிகளை கூட உணர்வு கொண்ட எழுத்து வடிவங்களாக கொடுத்து எமை அழவைத்து காதலில் திளைக்க வைத்து சென்றது என்ன சொல்ல இருக்கிய அணைப்புகள்மா.👩‍❤️‍👩❤❤❤

சஹானா பாத்திரத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து அவளின் உணர்வுகளை நீங்கள் எமக்காக பேசும்போது பேச்சிழந்தது நான் தான்.மெர்ஷல்மா.👌👌🌺🌺

கௌதம் பாத்திரத்தில் அவன் இயல்பை ஒரு துளி அளவும் குறையாது கொண்டு சென்றது அருமை. அதிலும் சஹானாவின் கௌதம் வேறு உலகுக்கு ஜிகே வேறு ஹப்பா எப்படிமா இப்படி !!!❤👌👏😊😊

"எனக்கு தனிமை புதுசு இல்லை ஆனால் அதை உணரும் இந்நொடி புதுசு"!!!! கௌதம் காதலை அந்த பிரிவில் சொல்வது எழுத்தின் உச்சவடிவம் மா.❤❤❤❤❤❤

ஒவ்வொரு கதை பாத்திரவடிவங்களையும் பல உணர்வுகளோடு விளையாடி எம்மோடும் விதி வழியேன விளையாடி கடைசியில் சுபம் சேர்த்தது அழகு. வாழ்த்துக்கள் .👏👏❤❤

ஒரு உணர்வூபூர்வமான கதை படித்த திருப்தி வாழ்த்துக்கள் மா👏👏🌹🌹

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.👏🌹🌹👏
 
மிக்க மிக்க நன்றி மா😍😍😍😍🙏💕🙏

கதையைத் தொடர்ந்து ஆதரவித்து, என்னை ஊக்கவித்து என்னுடன் பயணித்தமைக்கு பல நன்றிகள் மா💕💕💕🙏🙏

கதையின் விமர்சனம் ரொம்ப அருமையா இருக்கு மா💕🙏
 
நேரம் எடுத்து கதையைப் படித்ததற்கும், என்னுடன் தொடர்ந்து பயணித்து ஆதரவித்து என்னை ஊக்கப்படுத்தியதற்கும் என்னுடைய கோடி நன்றிகள் மா🙏💕

உங்களுடைய விமர்சனம் கண்டிப்பாக எனக்கு பொக்கிஷம் தான்💕💕💕🙏🙏

எல்லாருடைய உணர்வுகளையும் முக்கியமாக கௌதம் மற்றம் சஹானாவின் நிலையை ரொம்ப அழகா விவரிச்சிருக்கீங்க மா🙏💕

என்னுடைய கோடி நன்றிகள்💕💕🙏
 
Ruby

Well-known member
#வெண்பனியில்_கரைந்த_தீந்தணல்

ஒரு அழகான சாப்ட் லவ் ஸ்டோரி💘💘💘

நண்பன் சந்தோஷ் குடும்பத்தை தவிர தனிமையே துணையாக கொண்ட கௌதம் @ GK.....!

GK தணல் தான் இவன்🔥🔥 பரிதாபம், இரக்கம் எல்லாம் துளியும் பிடிக்காது... உடல் ஊனமுற்றோர் என்றால் கூட பரிதாபம் எல்லாம் அவன்கிட்ட இருக்காது, யாரிடமுமே...!!

கண்டதும் காதலில் விழுந்து, அவளை(சஹானா) தன் வாழ்வில் கொண்டு வர முயற்சிக்கும் போது அவள் அண்ணன் பிரபு சொல்லும் ஒரு காரணத்தையும் கேட்க பிடிக்காது, காது கொடுத்து கேட்காது விட்டு,

பிடிவாதம் பிடித்து திருமணம் செய்த உடன் சஹானா பற்றி தெரிய வரும் விசயங்களில், தாலி கட்டியவுடன் வேண்டாம் என பிடிவாதம் பிடிக்கிறான்😳😳😳

காரணம், அவன் வெறுக்கும் விசயங்கள்😳😳

நண்பனின் காதலை உணர்ந்த சந்தோஷ், அவனின் தப்பை சரி செய்ய பிரபுவுடன் சேர்ந்து முயற்சிக்க😊😊

சஹானா அவளுக்கு நடந்த விசயங்களில், அவனின் காதலும் தெரியாது, அவனை தவறாக நினைத்து வெறுக்க🙄🙄🙄

வேண்டா வெறுப்பாய் அவளை அழைத்து சென்று divorce வாங்க நினைக்க 😡😡😡

அவனின் மதியை விதி வெல்ல😱😱😱 குறுக்க மறுக்க அவன் pa வான்மதி வேறு ஓட😆😆😆 அவன் அவளை விட வேண்டாம் என நினைக்கும் பொழுது, ரைட்டரின் சதியால்😠😠 அவன் ஆசைப்பட்ட பிரிவு, (அவள்) ஆசைப்படாத நேரத்தில்😥😥😥

தேடி அவளை கண்டு கொள்வானா..? அவ ஏன் பிரிஞ்சி போனா...!? எப்படி சேருவாங்க .. காதல் இருந்தும் இவன் அவளை விலக்கும் காரணம் என்ன...!? அவள் வாழ்வில் நடந்தவை என்ன...?? எல்லாம் கதையை வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க.....!!

"தனிமை புதிது அல்ல, உணர்வது புதிது உன் பிரிவில்" GK @கௌதம்💘💘 போதுமே அவன் காதலை சொல்ல😘😘

கௌதம்😍 அன்புக்கு ஏங்கும் குழந்தை போல தான் இவன்..... பிடிக்காத விசயம், பிடித்தத்தோடு சேர்ந்து வந்த போது மனதுக்கும் மூளைக்கும் போராடி களைத்து போறான்🤭🤭

முதல்ல அவன் செயல் எல்லாம் கடுப்பா வந்துச்சு😡😡 காதல்ல சுயம் இழந்துடுவோம் என எவனாவது தள்ளி நிற்பானா🤦🤦🤦

ஆனால் அவன் விளக்கம் குடுக்கும் விதம், காதலை சொல்லும் விதம்😘😘😘 எனக்கு ரொம்ப பிடிச்சது... தணல் குளிர்ந்து போகும் போது ஒரு இதம் தருமே அப்படி😍😍

GK எங்குமே, எதிலுமே, எப்பொழுதுமே அவன் standards விட்டு வரவே இல்ல🤩🤩 மனைவியை நேசித்த போதும், மனைவியை போன்றோருக்கு எத்தனையோ உதவிகள் செய்த போதும் அவன் நிலை விட்டு இறங்கா விதம் 👏👏👏 வினய் கிட்ட கௌதமாய் வரவேற்கும் அவன் GK ஆக தள்ளி தான் வைக்கிறான்🤩🤩

சஹானா மேல சில நேரங்களில் அடியே ஏண்டி சொதப்புற என்று தோன்றினாலும், பேசாது ஒதுங்கிய போது என்ன பண்ணுற என கடுப்பு வந்தாலும், அவளோட நிலையில், அவளின் நிமிர்வு, தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் சூப்பர்ப்👏👏👏 அவளோட உணர்வுகள் ரொம்ப அழகா வந்து இருக்கு ஜி❤️ அவள் நிலை, கஷ்டங்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வெளி வந்து தைரியமாய் இருப்பது எல்லாம் சூப்பர்❤️

இருவரின் காதலும் சூப்பர்ப்💞 அதை அவங்க உணர்த்தும் விதம்💘💘 உணர்ந்து, புரிந்து, புரிதலில், காத்திருத்தலில் வரும் காதல் wow ல😱😱 gk எதிலும் வித்தியாசம் தான்🥰🥰

சுதீப் ஒரு நல்ல மனிதன்... அவனின் தாய் சராசரி, பிராக்டிகல் பெண்மணி என்றாலும் அவரின் நியாயம் அவருக்கு .. அவரை போல தானே நாம் பலரும்❤️

பிரபு ஒரு அண்ணனா ரொம்ப சரியா, அவளை காக்க அவளுக்கே எதிராக பேசுவது எல்லாம் சூப்பர்... ரேவதி🤩 சூப்பர் அண்ணி இவ... இவளை போல ஒருத்தி எல்லாம் சஹா லக்கி❤️

சந்தோஷ்💝 ரொம்ப பிடிச்ச ஒருத்தன்... ஒரு நண்பனா, உரிமையா, பாசமா, கண்டிப்பா அவன் நிற்கும் சூழல் எல்லாம் சூப்பர்ப்💛 நண்பனே என்றாலும் அவன் தப்பை திருத்த அவனையே எதிர்த்து செய்யும் வேலை எல்லாம்👌👌👌GK வேண்டாம், கௌதம் போதும் சொல்றது🤩🤩 GK is blessed 🥰🥰🥰

அருண்💙 இவனையும் ரொம்ப பிடிச்சது... இவனா இருக்க போய் GK கிட்ட தாக்கு பிடிக்கிறான்🤭🤭🤭 கொஞ்சமா வந்தாலும் பிடிச்சது எனக்கு💞 வான்மதி ஒரு லூசு🤦🤦🤦

ரொம்ப பெருசா போய் கிட்ட்டே இருக்கு ஜி... நான் ஸ்டாப் பண்ணிக்கிறேன்...!

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐
 
Top