#அழகிய_காதல்_நிலவே
அனுஷ் வரதன் யாரை கண்டாலும் இவ்னுக்கு வெறுப்பு தாங்க 🤭🤭🤭
பள்ளிக்கு புது correspondent ஆ போறான்... அங்கே ஆசிரியையான அஸ்மி வாய்ஸ் கேட்டதும் வெறுப்பு😳😳 ஏன் டா🤔
அவனுக்கு நிச்சயிக்க பட்டு இருக்கும் நிகிதாவை பார்த்தாலே வெறுப்போ வெறுப்பு😂😂😂 அப்ரம் ஏன் டா நிச்சயம்🤔🤔
அவங்க அம்மா மேல அதுக்கும் மேல வெறுப்பு😳😳😳 என்ன டிசைன் டா நீ🙄 உனக்கு என்ன தான் டா பிரச்சனை🤔
நிகி வச்சு அஸிய கடுப்பாக்க நினைச்சு, நிகியால் அவன் தான் கடுப்பாகி போறான்😂😂😂
அஸ்மி🌹 தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்க அவளுக்கு அனிஷ் ஒரு தொல்லை என்றால்🙄 ஹேமந்த் ஒரு தொல்லை🙄 அதிர்ச்சியா இவளுக்கு ஒரு மகன் வேற 😳 இவனுங்களுக்கு இடையில் என்ன சம்மந்தம்🤔🤔🤔
கண்ணன் வேலை இல்லாது இருக்க... அவனின் தாய் கலை அவனை மிக கேவலமாக நடத்த, நண்பனின் மூலம் கிடைக்கும் வேலைக்கு சென்றால், அங்கு அவனின் ஒருதலை காதலி ஈஸ்வரி😍😍😍
நடக்கும் சில விஷயங்களால் எதிர்பாராத விதமாக இருவரும் திருமணம் புரிய 😳 மகனுக்கு பணக்கார பெண்ணை பேசி இருக்கும் கலைவாணி கடுப்பாகி 😳
மகனின் முன் நடித்து😡😡 பின் பிரிக்க பலவிதமான சதிகளை செய்யுறாங்க 😡 வெற்றி பெற போவது, இவங்க காதலா🤔 அவரோட சதியா 🤔🤔
திருநெல்வேலி.... தைரியமான, ஊரே புகழும் பண்ணையாரம்மா ❤️ ஊருக்கு புதிதாக வரும் பெண் அவரினைப் பற்றி அறிந்து கொள்ள அவரைப் பின்பற்றி போக, அங்கு அதிர்ச்சி அவளுக்கு காத்து இருக்கு அவர் பிள்ளை வடிவில்😳😳🤔
அவர்களை பற்றி அறிந்து, பண்ணையாரம்மா அவங்களுக்கு உதவிட மனதில் முடிவெடுத்து தன் ஊர் போகிறாள்... அவளால் முடிந்ததா🤔🤔
இப்படி மூன்று கோணங்களும் ஒரு புள்ளியில் சந்தித்தால்......... நமது குழப்பம், கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும்..... கண்டுபிடிக்கும் விதத்தில் இருந்தாலும் எப்படி நடந்து இருக்கும் என்ற கேள்விகளுக்கு பதிலை அவர் நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர்❤️
நாகேஸ்வரி🤎 பொண்ணுக்கு பயங்கர support... அவ தைரியமா, தப்பை தட்டி கேட்டு, ஸ்ட்ராங் ஆ இருக்க இவங்க ஒரு காரணமா இருக்கும்.. என்ன செஞ்சாலும் உடன் நிக்குராங்க, ஊக்கம் குடுக்குறாங்க🤩 சொல்லாம அவ செஞ்ச அவ்வளவு பெரிய விசயத்தை கூட பெரிது பண்ணல அவங்க...
பத்மானந்தம்😍 இப்படி ஒரு அப்பாவுக்கு அப்படி ஒரு மகள்🤮🤬 மகள் வாழ்வு என்று எல்லாம் இல்லாது நியாயமாக இருக்கிறார்🤩 என்ன ஆனாலும் என்று விட்டு கொடுக்காது இருக்கும் ஆட்கள் மத்தியில் இவர் வேற தான்...
பண்ணையாரம்மா❤️ ஒரு சீன் ல செம்மையா ஸ்கோர் பண்ணிட்டாங்க🤩 கணவனையும், மகளையும் பத்தி பேசும் போது அவங்களோட அந்த பெருமை😊 மகளால் என்ன விளைந்து இருந்த போதும் அவளின் பக்க நியாயம் புரிந்து அவளை காக்க அவர் செய்வது எல்லாம்👏
மலர்💙 இவளோட குறும்புகள் அருமை.. குறும்பு பெண்ணின் இன்னொரு முகம்😱 பண்ணையாரம்மா அவங்களுக்காக அவ செய்யுறது சின்ன விசயம் என்றால் மனம் உவந்து செய்வது சூப்பர்ப்🤩
மலர், சின்மயி, அஷி நட்பு சூப்பர்🥰 நட்புக்கு தன்னால் முடிந்த நல்லவைகளை செய்ய நினைக்கும் நண்பர்கள்😍
ஈஸ்வரி❤️ படுபயங்கர தைரியமான பெண் ... ஆனால் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு, அவன் நிம்மதிக்கு என்று எத்தனை கஷ்டங்கள்😢 யோசிக்காது மனதை குழப்பி கொண்டதன் விளைவுகள் சூழ்ச்சியில் சிக்கி எவ்வளவு கஷ்டம்😢 ஆனால் இவ பண்ண சில விசயம்😡😡 தைரியம் எங்க போச்சோ🤦🤦 ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை வச்சு நடந்ததை ஆராய்ந்து இருக்கணும்🤦
கண்ணன் இவன் மேல பல கடுப்பு எனக்கு😡 அம்மா பத்தி தெரிஞ்சும் இவன் செஞ்ச எல்லாம், அதுவும் கடைசியா பண்ணது முட்டாள்😡 இவன் காதல் சூப்பர்😍😍 ஆனால் தெளிவாய் ஆராயாமல் இருக்கிறது தான் கடுப்பு😏 என்ன பேசின போதும் அவன் குடும்பத்தை விடாம இருக்கிறது, அவளின் கஷ்டம் புரிந்து அவளுக்காக அவன் நிற்பது, செய்வது, அவள் நிம்மதிக்காக தனியா செல்வது எல்லாம் சூப்பர்🥰
அனிஷ் எப்போ பாரு மூஞ்சியில் முள்ளை வச்சிட்டு🤦🤦 ஒழுங்கா என்ன ஏதுன்னு விசாரிக்காமல்😡 ருத்ரணை பார்த்தும் உடனே விசாரிக்காமல் எதுக்கு வெயிட் பண்றான் புரியலை, அதுவா தெரியும் வரை🤦🤦 பெரிய பிள்ளை தான அவந்தி ஸ்கூல் ல சேர்க்காமல் வச்சிட்டு, எல்லார் மேலயும் ஏன் கோபப்படனும் 😡 லூசு..... அவந்தி பாவம்...
காதல்ல தெளிவா இருக்கானுங்க எல்லாரும்😂🤩😍 இவனோட காதலும்🤩🤩 பொண்ணுங்க ரொம்ப தெளிவு பா காதலில்.. ஆரம்பம் முதல் இறுதிவரை 😍😍
அஸ்மி புள்ளை பூச்சி போல இருக்கா ஆனால் ஹேமந்த் அவனுக்கு செஞ்ச விசயம்👏 பிறவி குணம் மாறாதுப்பா 😆🤣 தெளிவா பிளான் பண்ணி execute பண்ணிட்டா🤣🤣 ஒரு அறை என்றாலும்👌👏
ருத் ஏக்கம்😢 நிகிதா, கலைவாணி🤬😡🤐
சில விசயங்கள் தெளிவு இல்லாம இருக்கு... அதை நான் ஆல்ரெடி comments thread ல site ல போட்டு இருக்கேன்... அவை தெளிவாய் இருந்து இருக்கலாம்... கதை நல்லா இருக்கு😍 காதல், பொறாமை, துரோகம், நட்பு, பாசம் எல்லாம் கலந்து கொடுத்து இருக்கீங்க🥰🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐