வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹9.தீண்டாயோ வண்ணமலரே!!- விமர்சன திரி

Gowri

Well-known member
#தீண்டாயோ_வண்ணமலரே

#கௌரிவிமர்சனம்

இதுவும் காதல் கதை தான் ஆன கொஞ்சம் வித்தியாசமான கதை......

அமுதரசியை அவ மாமன் மகன்கள் ரெண்டு பேரும் விரும்ப அவளுக்கு யாரை பிடிச்சி கல்யாணம் நடந்தது?????

அதிலும் இவளுக்கு அவள் மாமன் வீட்டுக்கு மருமகளா போக கூடாதுனு ஒரு எண்ணம் ஏன்??????

ஆன அவ அம்மா ஒரு சபதமே போட்டு இருக்காங்க, அவங்க அண்ணன் பையனுக்கு தான் தன் பொண்ணுணு.....அது யார்?????

அன்பு ஓட அண்ணன் அண்ணிக்கு பெருசா விரும்பம் இல்ல இந்த கல்யாணத்தில், ஏன்?????

இதில் யார் மனதில் நினைத்த எண்ணம் நிறைவேறியது, யார் கூட யார் சேருவாங்க, அமுதா மனதில் இருக்கும் மாமன் மகன் யார்?????

இது எல்லாம் கதையில்......

அமிதரசியை முதலில் பிடிச்சது, தன் தாய் தப்பு செய்தாலும் அதை சுட்டி காட்டுவது, தோழிகள் மீது உள்ள பாசம், எல்லாம் ரொம்ப அழகா இருந்தது......

கார்த்திகா போல அமுதா இல்லையோனு போக போக தோன ஆரமிச்சிருச்சி.....

அதாவது இவ கிட்ட சுயநலமே அதிகம் இருந்தது போல இருக்கு.....

காதலை விட்டு கொடுத்து தியாகி ஆக வேணாம், இதை முன்னாடியே சொல்லி இருந்தா, எத்தனையோ மன கசப்புகள் இருந்து இருக்காது....

தன் காதல் கைகூடின உடன், கார்த்திகா வாழ்க்கையை பத்தி யோசிக்கவே இல்லையே.....இதுவே கார்த்தி தான் அவளுக்காக யோசிச்சா அப்ப இருந்து.....

கார்த்திகா, நல்ல ப்ரெண்ட், சுயநலம் இல்லா குணம்🥰🥰🥰🥰

இந்த குணமே, கிடைச்ச வாழ்க்கையை அழகா அமைச்சிக்க முடிஞ்சது..

சாகி - அமுதாக்காகவே போலீஸ் ஆணவன், நிறையா காதல் அவள் மேல்.....

சக்கவர்த்தி - சாகி ஓட அண்ணன், இவனோட காதலும் காத்திருப்பும் 👏👏👏👏....

அன்பு - இவங்க நல்ல தாய் தான் அமுதவிர்க்கு மட்டும், மத்தபடி😤😤😤😤

மாணிக்கம் - இவருக்கு இப்படி ஆகி இருக்கா வேணாம்🤧🤧🤧🤧

அமுதவாணன் - காசு இருந்தா சரி😏😏😏

மணிமேகலை - நியாயமா பேச கூடிய ஒரு ஆள், நிறைய இடத்தில் இவங்க இப்ப பேசுவாங்கனு பார்த்தேன் ஆன🤷🤷🤷🤷

கதைக்களம் நல்லா இருக்கு, இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்து இருக்கலாம் ரைட்டர் ஜி......

எனக்கு ரொம்ப பிடிச்சது, சக்கி & கார்த்தி தான்🤩🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க் 👇👇👇

 

santhinagaraj

Well-known member
பிரம்மாஸ்திரம் 2023

தீண்டாயோ வண்ண மலரே

விமர்சனம்

நல்ல ஒரு குடும்ப பின்னணி உள்ள காதல் கதை.

அமுதவாணன் வீட்டு மருமகளாக மாட்டேன் என அழுத்தமான எண்ணம் கொண்ட அமுதரசி.

திருமணத்தின் பிறகு ஏற்படும் பிறந்த வீட்டு உரிமை இழப்பை தன் மகளின் மூலம் நிலை நாட்ட தன் அண்ணன் மகன்களில் ஒருவருக்கு தான் தன் மகள் என சபதம் விடும் அன்பரசி.

அத்தை மகள் மீது காதல் கொள்ளும் இரு மாமன் மகன்கள் சாகித்தியன், சக்கரவர்த்தி
அமுதரசி மீதான காதலில் சிறு வயதில் இருந்து சிரிப்பை தொலைத்து அவளின் காதலுக்காக காத்திருக்கும் சக்கரவர்த்தி

அம்முவின் மீது தான் கொண்ட காதலுக்காக அவளுக்காக போலீசாகும் சாகித்யன்.
மாமன் மகன்களில் ஒருவனை காதலிக்கும் அமுதரசி.
சக்கரவர்த்தி சாகித்தியன் இருவரில் அமுத ராசியின் ஜோடி யார் என்பதை கதையில் ரொம்ப விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதம் சூப்பர்.
அம்மு, கார்த்திகா, நளினா இவர்களின் கல்லூரி அரட்டை செம.
நல்ல தோழியாக பாசமான மகளாக நல்ல ஒரு பெண்ணாக ஆரம்பத்தில் மனதில் இடம் பிடிக்கும் அமுதரசி தன் திருமணத்தில் எடுக்கும் சுயநலமான முடிவு மனதில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
தன் சுயமனலா முடிவால் ரெண்டு பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகி அந்தரத்தில் நிற்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் தன் வாழ்க்கை தன் சந்தோஷம் என்று இருப்பது சுயநலத்தின் உச்சமாக தெரிகிறது.
கார்த்திகா தோழியாகவும் சரி மனைவியாகவும் சரி அவளோட புரிதலும் பொறுமையும் பாராட்டத்தக்கது அம்முவுக்காக பார்த்து பார்த்து செய்யும் அவளின் ஒவ்வொரு செயலும் அருமை
அன்பரசி இவங்க அம்முக்கு மட்டும் தான் நல்ல அம்மா இவங்க மத்தவங்க கிட்ட பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இவங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு தோன்ற வைக்குது.
மாணிக்கம் ரொம்ப நல்ல மனிதர் நேர்மையானவர் அவருடைய முடிவு இவரை ஏன் டா இப்படி பண்ணீங்கன்னு எண்ண வைக்குது.

மணிமேகலை ஆரம்பத்தில் நியாயமாக பேசி நேர்மையாக தெரிந்தவர் பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்தது ஏற்கும் படியாக இல்லை.
அமுதவாணன் யார் எப்படியோ போங்க எனக்கு பணம் இருந்தால் எல்லாம் சரிதான் என்ற கேரக்டர்.
அமுதரசி, சக்கரவர்த்தியின் மனநிலை கார்த்திகா அவளுடைய வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட விதம் இவற்றை இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கி இருக்கலாம்.

ஒரு சில இடங்களில் பெயர் குழப்பங்களும் எழுத்து பிழைகளும் ஒரு நல்ல கதையை ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பை குறைத்து இறுதியில் குழப்பத்தில் கொண்டு வந்து அவசரகதியில் முடித்துவிட்டார்களோ என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்துகிறது
எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்க ரைட்டரே
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
#பவாவிமர்சனம்

#தீண்டாயோ #வண்ணமலரே..

#அஸ்திரம்9

வண்ணங்களாய் காதல் எண்ணங்களாய் தொடர
யாரின் நிலை யாரோ என ஓவியம் தீட்ட..

நெஞ்சோடு மறைத்த காதல் சூது வஞ்சால் கரைய
நெஞ்சமெல்லாம் நீயே என கை தூவி தூதிட...

பழைய சூது நிலை தள்ளியே வைக்க
காதலும் கரையுடைத்து வெள்ளமாக பாய..

உறவை கைசேர்க்க பல வண்ணங்கள் கொண்டே
மலர்ந்தன காதலும் உறவும்..

உறவுமுறை பெரியோர்களால் வீசப்படும் வாய் வார்த்தைகள் எவ்வளவு தூரம் பாதிப்பை ஏற்படுத்தி உறவை பிரிக்கும் என்பது கதை சாரம்.👏👌

சாகித்தியன் - தன்னவளுக்காய் காவலனாய் மாறி அவளை திருமணம் பந்தத்தில் இணைக்க நினைக்க .விதியோ பல உறவின் வழியே அவனை தாக்க .அவன் காதலை அடைய போராடும் பல இடங்கள் கவலையே.❤❤❤

சக்கரவர்த்தி - தன் அத்தை மகளின் மேல் சிறுவயதிலிருந்தே காதலாக பயணித்து அவளை கரம் பிடிக்க இவன் போக விதியோ வேறு விளையாட்டை ஆரம்பித்து மீண்டும் ஒரு காதல் இவனோடு கலப்பது சுபமே.❤❤

அமுதரசி - கலகலப்பான பட்டத்து இளவரசினு சொல்லலாம். ஆனாலும் இவளுக்குள்ளும் உறவின் மூலம் ஏற்படும் வடுவான காயம் உண்டு அதோடு காதலும் உண்டு. அதை மனதில் வைத்தே உறவுகளை தள்ளி வைப்பது பாவமா பரிதவிப்பா சுயநலதவிப்பா என புரியாத பாவை இவள்.👌👏🌹

கார்த்திகா- அருமையான தோழி. அவளின் நிலையில் திடிர் திருமணம் வந்து சேர அதனால் ஏற்படும் பல சிக்கல்கள் . அவளை கண்ணீரோடு பயணிக்க வைக்கிறது.🙂🙂

ஆசிரிய தோழியே.
அழகான உறவுமுறைக்குள் ஏற்படும் ரசவாதங்களையும்,அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வு ,பகை, மனகசப்பு என கதை கொண்டு சென்றது சுவாரசியமே.👏👌👏

ஒரு பெண்ணால் ஏற்படும் காதலை பெயர் பிரச்சினையால் ஏற்படும் மாற்றத்தை அவளை சுற்றியே கதையை கொண்டு. அவளோடு கதையை நகர்த்தி. உறவு விரிசலை கூட அதே பெண்ணால் தீர்த்து வைத்தது அருமை.❤❤

ஆனாலும் குடும்பம் என்றிருந்தால் சச்சரவு இருக்கத்தான் செய்யும் .
அதற்கு முற்றுப்புள்ளி கிடையாது என்பதை அழகாக இறுதிவரை காட்டி சென்றது அழகுமா.❤❤

சக்திகளின் காதலை அமுதங்களில் கரைத்து வர்ணங்களாக்கி சென்றது அருமை.❤❤

வாழ்த்துக்கள் மா.🌹👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐
 

zeenath

Member
#பிரம்மாஸ்திரம்2023
#தீண்டாயோவண்ணமலரே09
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதை...
சக்கரவர்த்தி..சாகித்யன்... உடன் பிறந்தவர்கள் போல் இல்லாமல் நண்பர்களாக ஒருவருக்கொருவர் அன்போடும் அதே நேரம் வம்பு இழுத்துக் கொண்டும் இருப்பது அழகு... 🥰 இவர்களோடு சிற்றப்பாவின் மகன்களாக சக்திவேல் மற்றும் சத்யன் கதையின் இறுதியில் இணைந்து கொள்கிறார்கள் கலாட்டாக்களில்... அனைவருக்கும் ஒரே பெயர் சக்தி😀😀இப்படி அண்ணன் தம்பி பாசமாக இருந்தாலும் இருவருக்கும் காதல் வருகிறது அத்தை மகளான ஒருவள் மீதே 😔 ஒருத்தியின் மீது இருவரும் விருப்பம் கொண்டிருப்பதை தெரிந்தால் இவர்களின் அன்பும் பாசமும் என்னாகும் 🤔 இப்படி அண்ணன் தம்பி இருவரையும் சுற்றலில் விடும் அமுதரசி முடிவு செய்யும் ஒரே விஷயம் அமுதவாணன் வீட்டிற்கு மருமகளாக போகக்கூடாது என்பதே... ஆனாலும் அவளின் காதல் மனது ஒருவனின் முகத்தை மட்டும் மனதில் அச்சடித்து வைத்துக் கொள்கிறது யார் அவன்🤔 இவர்கள் இருவரில் ஒருவனா அல்லது வேறொருவனா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. அமுதரிசி கார்த்திகா நளினா இவர்களின் நட்பும் நூட்டிகளும் அருமை 🥰👏 மணிமேகலை.. சக்கரவர்த்தி சாகித்தியனின் தாய் கோபத்தில் ஒரு வார்த்தையை விட்டு விட்டாலும் அதற்காக வருந்தும் நல்ல உள்ளம் கொண்டவர் மகன் மனதில் இருக்கும் காதலை எப்பாடுபட்டாவது சேர்த்து வைக்க துடிக்கும் ஒரு சிறந்த அம்மா 🥰 மாணிக்கம் அருமையான கதாபாத்திரம் அமுதரசின் தந்தை.. மகளின் மேல் அதிக பாசம் கொண்டு அவள் எடுக்கும் முடிவில் உறுதியாக நின்று மனைவியின் மனநிலையையும் புரிந்து அவரின் குணம் அறிந்து அவருக்கேற்றவாறு நடந்து கொள்வதும் சிறப்பு 👏👏 அன்பரசி... அமுதரசியின் தாய்.. இவர் நல்லவரா கெட்டவரா என்பதே தெரியவில்லை 🙄 இதற்கிடையில் கார்த்திகாவிற்கும் சாகித்தியனுக்கும் திருமணம் முடிவாகிறது இது ஏன்... அமுதரிசியின் மனதில் இருந்தது என்ன சக்கரவர்த்தி மற்றும் சாகித்யனின் காதல் என்னானது என அனைத்து புதிருக்கும் விடை கதையில்.. அருமையாகவே இருந்தது கதை 👏👏 இதற்கிடையில் ஒரு கடத்தலும் அதை சாகித்யன் கண்டுபிடிக்கும் விதமும் அருமை 👏👏
ஆனால் ரைட்டர்ஜி மன்னித்துக் கொள்ளுங்கள் இதை சொல்வதால்... 😔 வேறு வழி இல்லை.. அதிகமான எழுத்துப் பிழைகள் இருந்தது கதையில்😔 நிறைய வாக்கியம் முடிவடையவே இல்லை.. கோடிட்ட இடத்தை நிரப்புவது போல அங்கங்கு வாக்கியங்கள் துண்டு துண்டாக இருந்தது அதை நாங்களே அதற்கு உண்டான சொல்லை பொருத்தி படித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது... முடியும் என்ற சொல் இருந்தால் அதில் முடியு வரைக்கும் தான் இருக்கிறது ம் மை காணவில்லை இப்படி கதை முழுவதும் 😔 இது படிக்கும் ஆர்வத்தை மிகவும் குறைத்தது... ஆனால் கதையின் போக்கு மிகவும் இன்ட்ரஸ்டிங்காகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததால் கதையை முழுவதும் படித்து முடிக்க தூண்டியது... முடிந்தால் மறுபடியும் கதையின் பிழைகளை திருத்தி சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.. அது இனி படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் 🥰👍
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰👏💐
Good luck dear 🥰 ❤️💐
 
#நதி_வியூ

#பிரம்மாஸ்திரம்_2023

#தீண்டாயோ_வண்ணமலரே

🌻🌹தீண்டாயோ வண்ணமலரே - அஸ்திரம் - 09 🌻🌹

🌹குடும்ப உறவுகளுக்குள்ளே ஏற்படும் பாசப் பிணக்குகளையும் நெருங்கிய உறவுகளுக்கிடையே ஏற்படும் காதல் ரசவாதங்களையும் அழகாக சொல்லிச் சென்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!

ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரும் என்னை மிகவும் கவர்ந்தது. சக்கரவர்த்தி, சாகித்யன், அமுதரசி, கார்த்திகா, சத்யன், சக்திவேல், மணிமேகலை என்று அழகான பெயர்கள் எல்லாமே.

அண்ணன், தம்பி மாமன் மகளான ஒரே பெண்ணைக் காதலிக்க, அவள் மனதிலும் ஒருவன் வீற்றிருக்கிறான். ஆனால் அவளோ மாமன் மக்களை மணக்க மாட்டேன் என, அவளின் தாயாரோ மாமன் மகன் ஒருவனைத்தான் மணந்தே தீர வேண்டும் என சபதமே எடுத்திருக்கிறார்.

யார்? யாருக்கு? யாரால்? எப்படி? மாலை சூட்டினார்கள்? மணம் முடித்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் எழுத்தாளர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடைய மனிதர்கள். நம்மிடையே உலாவிச் செல்பவர்கள் என்பது புரிகிறது. அமுதரசியை நாயகியாக எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு.. அவளின் முடிவு சுயநலமாகவே இருந்தாலும் கூட யதார்த்தத்தில் ஒரு பெண் இப்படியொரு முடிவு எடுத்திருக்க வாய்ப்புண்டு தானே.

கார்த்திகா, நாயகி இவளோ என்ற எண்ணம்.. திடீர் திருமணத்தை எதிர்கொளபவளின் பக்குவம் இப்படியும் சில பெண்கள் என்று வியக்க வைக்கிறாள்.

சாகித்யனும் சக்கரவர்த்தியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

கதை கலகலப்பாகவும் செல்கிறது. சில இடங்களில் உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. அண்ணனா? தம்பியா? யார் மாமன் மகளை மணப்பது என்று சுவாரஸ்யமாகக் கொண்டு சென்ற விதம் அருமை.🌹

அழகான கதையைக் கொடுத்த எழுத்தாளருக்குப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். 💐

அன்புடன்
உங்கள்
#அஸ்திரம்43
#பிரம்மாஸ்திரம்2023

31.03.2023
 

Ruby

Well-known member
#தீண்டாயோ_வண்ணமலரே

ஒரு அத்தை பெண்ணை மாமன் மகன்கள் இருவரும் காதலித்தால்...? அதுவும் ஒருவரின் எண்ணம் மற்றவருக்கு தெரியாது போனால்....!?

சக்ரவர்த்தி, சாகித்யன் ரெண்டு பேரும் அமுதாவ லவ் பண்ண... அவளின் என்னமோ...!? 🤔🤔

குடும்பமே இரண்டுபட்டு இருக்க, அமுதவானன்(அமுதா மாமா) வீட்டு மருமகளா போக கூடாது என்ற எண்ணம் மட்டுமே அமுதா மனதில்🙄🙄 எதனாலோ..!?

அண்ணன் வீட்டுக்கு மருமகளாக மகளை அனுப்பிய தீருவேன் என்று அவளின் சிறு வயதிலே சபதம் எடுத்த தாய் அன்பரசி😳😳 ஏனோ...!?

அமுதவானன்,மனைவி மணிமேகலை இருவருக்கும் கூட விருப்பம் இல்லாத போது... மகன்களின் காதல் தனி தனியாக தெரிய வந்தால்🤔🤔🤔 என்ன செய்வாங்க...!?

என்ன நடக்கும்....? அவள் காதல் யார் மீது...? அவளின் எண்ணம் மீறி அன்பு சபதம் ஜெயிக்குமா..? சக்கி, சாகி இருவரில் யாரின் காதல் ஜெயிக்கும்🤔🤔🤔 கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்....

பிரகாஷ் ஒரு நல்ல நண்பன்😍😍 ஆனால் அவன் சந்தேகங்களை நண்பனிடம் சொல்லி இருக்கலாம், என் எண்ணம்😒😒

கார்த்தி தான் பாவம்... சொன்னதை அவளிடம் முழுசாக சொல்லாமல் ,அவளாய் புரிந்து எத்தனை இக்கட்டுகள்😢😢😢 அவ அம்மா அண்ட் அவளுக்கு தான் கஷ்டம்... இவ நட்பு உண்மை ஆனால் அவ😠😠 அவளுக்கு அழகான லைஃப் கிடைச்சு இருக்கு😍😍 அவனை புரிஞ்சு அவ வாழ்வை அழகா அமைச்சுக்கிட்டா😍😍

திடீர் திருமணம், ஆனாலும் இவளோட பக்குவம் சூப்பர் ஜி😍 ரொம்ப பிடிச்சது இவளை😍😍

அவள் சக்தி மனமாற்றம் சூப்பர்🤩 எத்தனை கஷ்டம் வந்த போதும் அழகாய் வாழ்வு கை சேர்ந்து இருக்கு😍😍😍 எல்லாம் கடந்து மனைவிக்காக👏👏 குடும்ப ஒற்றுமைக்காக, நட்புக்காக இருவரின் செயலும் சூப்பர்🥰🥰🥰

கீர்த்தனா 🤬🤬 இதெல்லாம் என்ன ஜென்மமோ😡😡 சுயநலவாதி

அமுதா - நல்லா தான் போச்சு... ஆனால் விசயங்கள் தெரிந்தும் அதை முடிக்காது இவளாய் மனதில் ஒன்றை நினைத்து, அடுத்தவரை கஷ்டபடுத்தி, சந்தர்ப்பம் கிடைத்ததும் அவ ஆசையை நிறைவேற்றிக் கிட்ட போல ஃபீல் எனக்கு... தாய் தவறுகளை இவள் சுட்டினாலும் இவள் தவறை😡 புரிதலும் இல்லாம, இவ நினைப்புக்கு எப்போவும் எல்லாம் செஞ்சு என்னவோ சுற்றம் சரியாக அமைய போய் பிரச்சனை இல்லை🥰🥰🥰 அம்மாவை கொஞ்சம் அடக்கி வச்சாலே😊😊😊

சக்கி & சாகி அவன் அவனுக்கு அவன் அவன் காதல், நேசம் சுயநலம் பெருசா போச்சு இல்ல... சரி சொல்றதும்😡 அப்பறம் வேண்டாம் சொல்றதும்😡 அடுத்தவர் மனதை புரிந்து கொள்ளாமல் இவங்க மனசை மட்டும் பார்க்கிறது எல்லாம்🤦‍♀🤦‍♀🤦‍♀ குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் அவனோட செயல்கள் எல்லாம்😡😡 சுயநலமா தான் எனக்கு தோணுச்சு...

எல்லாருக்கும் ஒரே பேர் சமமான அன்பை காட்டினாலும் அதனாலும் கூட வந்த தவறான புரிதல்கள், அதை கலையாது வளர விட்டு கஸ்டபடுத்தினது 😡😡😡 எனக்கு பிடிக்கல...

அன்பரசி🤬🤬🤬 நிஜமா கடுப்பு தான் இந்தம்மா மேல குறையவே இல்லை கடைசிவரை... சுயநலவாதி😡😡

மாணிக்கம்😢😢 அமுதவாணன்🤬 அட போயா என்ன மனுஷனோ🤦‍♀🤦‍♀ கடைசியில் எங்க ஆளையே காணோம்🤔🤔 மணி😢 குடும்ப அரசியல்ல சிக்கி, வெளியில் சொல்லவும் முடியாம ஆள் ஆளுக்கு பேசி நல்லா பெருசு பண்ணி விட்டுட்டாங்க😆😆😆

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாத மறுப்பும் கூட அடுத்தவரை உயிர் வரை கொல்ல தான் செய்யும்😔😔

குடும்பத்தில் சண்டைகள் எல்லாம் கடல்ல அலை ஓயட்டும் குளிக்கலாம் நிலை தான்😆😆😆 வாய்ப்பே இல்ல... அதை அப்படியே அழகா maintain பண்ணி, நிதர்சனத்தை குடுத்து இருக்கீங்க ஜி சூப்பர்...

அதும் அன்பரசி எல்லாம் மாறவே இல்ல🤣🤣🤦‍♀🤦‍♀ அப்படியே விட்டீங்க சந்தோஷம் ஜி... சிலவை மாறவே மாறாது உலகில்...

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
பிரம்மாஸ்திரம் போட்டிக் கதை 9 தீண்டாயோ வண்ணமலரே எனது பார்வையில். அமுதரசியின் அம்மா அன்பரசி தன் மகளை தன் அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அமுதவாணன் மருமகள் ஆக்குவேன் என்று சபதம் போட்டதை நிறைவேற்ற மகளை அண்ணன் மகன்களில் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டி அவளை வற்புறுத்துகிறார். ஆனால் அமுதரசியின் 13ம் வயதில் இந்தப் பிரச்சினையில் அமுதவாணன் மனைவி அமுதரசியை கேவலப்படுத்துவதால் அவள் மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். அவளின் மாமாவின் இரண்டு மகன்களும் இவளை விரும்புகிறார்கள். மூத்த மகன் சக்ரவர்த்தியின் விருப்பம் தெரிந்து அவனுக்காக அமுதரசியை பெண் கேட்டு செல்கிறார். அமுதரசியின் தோழி கார்த்திகா அவள் மாமா மகன் சக்தியின் மீது விருப்பம் இருந்தாலும் மறுக்கிறாள் என்பதை அவளின் பெற்றோருக்கு தெரிவிக்கிறாள். இளைய மகன் காவல்துறை அதிகாரி சாகித்தியனுக்கு கார்த்திகாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். அமுதரசி மாமா மகனை திருமணம் செய்தாளா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வாழ்த்துகள்.
 
Top