வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹9.தோகை வருடும் தாகமழையே

தோகை வருடும் தாகமழையே

விமர்சனம்.

உலகநாதன் மாங்குடி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் தன் பகுதியில் ஆளும் செல்வாக்கினாலும் அவர் ஊர் மக்களை ரொம்பவும் கீழ் தரமாக நடத்து வருடம் பல ஊழல் செயல்களையும் செய்கிறார்.

அதே ஊருக்கு புது வீ ஏ ஓ வாக வரான் ஹரிஹரன். அவனால் தனது ஊழலுக்கும் வருமானத்திற்கும் ஏதாவது இருந்தல்கள் வரும் என்று தனது மகள் நந்தனாவை அவனுக்கு திருமணம் வைத்து அவனை கைக்குள் போட்டுக் கொள்ள முடிவு எடுக்கிறார் உலகநாதன்.ஆனால் ஹரிஹரன் ஏதோ ஒரு திட்டத்தை வைத்து தான் அந்த ஊருக்கு விஏஓ வாக வருகிறான்.

உலகநாதனின் மகன் தமிழ்ச்செல்வன். அப்பாவின் சொல்தட்டாத அவருக்கு அடங்கி நடக்கும் கைப்பிள்ளை. ஆனாலும் மனதளவில் ரொம்ப நல்லவன்.

செல்வாவின் நண்பன் ராஜா ஜாதி பெண்ணான மகேஸ்வரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க செல்வா அவளை காப்பாற்றுகிறான். ராஜாவால் மறுபடியும் அவளுக்கு எந்தவித ஆபத்தும் வரக்கூடாது என்று நினைத்து அவளை தனது நெல்லில் வேலைக்கு அமர்த்தி தன் பார்வை வட்டத்தில் வைத்துக் கொள்கிறான்.

செல்வாவின் மில்லில் வேலை செய்யும் மகேஷ்வரி அங்கு சூப்பர்வைசர் செய்யும் திருட்டுத்தனத்தை செல்வாவிடம் காட்டிக் கொடுக்க அவன் அவளை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராஜாவும் அந்த சூப்பர்வைசரும் வன்மம் வைத்து செல்வாவின் நிச்சயதார்த்த விழாவில் மகேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவனை நிச்சயிக்க நிறுத்தி விடுகிறார்கள்.

நிச்சயதார்த்தம் என்ற கடுப்பில் உலகநாதன் மகேஸ்வரி பெற்றோரை ரொம்ப கீழ்த்தரமாக பேசி அவளை அவமானப்படுத்தி விட அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஹரி என்ன திட்டத்தோட விஏஓ வாக அந்த ஊருக்கு வந்திருக்கிறான்? செல்லா மகேஸ்வரி வாழ்க்கை என்ன ஆகிறது? உலகநாதரின் ஜாதி வெறியும் தோழனும் முடிவுக்கு வந்ததா என்று விறுவிறுப்பாக கதை நகர்கிறது.

நந்தனா அறை புரிதலான காதல் அருமை 😍😍

மகேஸ்வரி செல்வா ஜோடி ரொம்ப பிடிச்சிருந்தது 👌👌

உலகநாதனோட உண்மை குணம் தெரியும் போது நந்தனாவின் உணர்வுகளை இன்னும் கொஞ்சம் நல்லா காட்டி இருக்கலாம்.

ஹரியோட பிளாஸ்பேக் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்து இருக்கலாம் முடிவு நிறைவாய் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விரிவா தெளிவா கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது நல்ல ஒரு கிராமத்து கதை சூப்பர்👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
மிக்க நன்றி. தங்களின் கருத்துக்களை வாசிக்கும் போது மனம் நிறைந்த உணர்வு. விரைவில் இந்த கதையின் பகுதி இரண்டு போட்டி முடிந்தவுடன் வரும்.🙏🙏💞💞💕💕❤️❤️💜
 
#பிரம்மாஸ்திரம்_2024

#கௌரிவிமர்சனம்

#தோகை_வருடும்_தாகமழையே….

காதல் கதை தான், கொஞ்சம் சஸ்பென்ஸ் உம் இருக்கு…..

உலகநாதனை கண்டா அந்த ஊரே பயப்படுது…. ஊர் தலைவரா இருக்கும் இவர் பண்ணாத தப்பே இல்ல…..

எதிலும் தனக்கு லாபம் என்ன வரும்னு பார்க்கும் நபர்…..

ஹரி, அந்த ஊருக்கு புதுசா வர விஏஓ…அவரை எதிர்க்கற மாறி வருவான் அப்படினு நினைச்சா வந்தவனும் அவர் கூட சேர்ந்துக்கரான்…..

அவருக்கு ஒரு பையன் & பொண்ணு….

பையன் செல்வாவும் உலகநாதன் சொல் படி கேட்டாலும் நல்லவன்…..

பொண்ணு நந்து, அவரோட செல்லம்….அதுக்கும் காரணம் இருக்கு….

ஹரிக்கும் நந்துக்கும் கல்யாணம் பண்ணி வெச்சி, அவனையும் கூடவே சேர்த்துக்கலாம் அப்படினு நினைக்க…..

கல்யாணம் முடிவானதும் உலகநாதனை ஹரி மதிப்பது இல்ல…..

ஏன்?????

சில காரணங்களால் செல்வா கல்யாணம் நின்ணு போக, அவன் விரும்பியவளை கல்யாணம் செய்ய போக…..

அதுக்கு துணையாய் ஹரி…..

ஹரியின் எண்ணம் என்ன, இனி உலகநாதன்??????

ஹரி, இந்த கதையில் ஹீரோ அப்படினாளும் எனக்கு செல்வாவை ரொம்ப பிடிச்சது…..

நந்து, இவ கேரக்டர் இன்னும் அழுத்தமா கொடுத்து இருக்கலாம்…..

செல்வா, ஆரம்பத்தில் இவனை பிடிக்கவே இல்ல…..பட் அவன் அப்பா போல இல்ல அப்படினு தெரிய வர….கொஞ்சம் கொஞ்சமா பிடிச்சது….

அதுவும் இவன் காதல், ஜஸ்ட் வாவ் ஃபீல்….

மகேஸ்வரி, பாவம் இவ எந்த தப்பும் செய்யாம, பெற்றோரை இழந்து ரொம்ப கஷ்ட பட்டுட்டா…..

அதுக்கு எல்லாம் ஈடு செய்யும் விதமா செல்வா…..

Predictable story line….இன்னும் கொஞ்சம் அழுத்தமா கொடுத்து இருக்கலாம் ரைட்டர் ஜி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
பிரம்மாஸ்திரம் 2024 Priyanka Muthukumar அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்

🏹9.தோகை வருடும் தாக மழையே

உலகநாதன்.. ஊராட்சி மன்ற தலைவர்.. தன் பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் ஊரையே ஆட்டி வைக்கிறார்.. இவருக்கு அஞ்சி வாழும் மக்கள் இவர் மீது கோபம் கொண்டிருந்தாலும் இவரை எதிர்க்க துணிவின்றி வாழ்கிறார்கள் இவரிடம் அடிமைப்பட்டு..
அந்த ஊருக்கு விஏஓ வாக வருகிறான் ஹரிஹரன்..
ஆரம்பத்தில் உலகநாதனை மதிக்காமல் இருக்கும் இவன் போகப்போக அவரோடு சில ஊழல்களில் துணை போகிறான்.. ஆனால் இவன் மனதில் ஏதோ ஒரு வஞ்சம் இருக்கிறது.. இவர் மகள் நந்தனாவை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது இவனுக்கு.. ஆனால் பழி உணர்ச்சி முன்னிருக்க என்ன செய்தான் இவன் என்பது கதையில்..
தமிழ்ச்செல்வன்.. உலகநாதனின் மகன் தந்தை சொல் கேட்டு நடக்கிறான்...ஆரம்பத்தில் இவனும் தந்தையின் பாதச்சுவட்டையை பின்பற்றுகிறான்... பின் மகேஸ்வரி என்ற பெண்ணாலும் சூழ்நிலையாலும் நல்லவனாகிறான்.. எது இவனை மாற்றியது என்பதும் கதையில்..
விறுவிறுப்பாகவே நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👏
Good luck 🥰🌹💐
 
#Yagnithaareview

தோகை வருடும் தாகமலையே

சஸ்பென்ஸ் நிறைந்த காதல் கதை....
உலகநாதன் ஊர் தலைவர் இவரால் அந்த ஊருக்கே சாபக்கேடு என்று சொல்லலாம்.... பணம் ஜாதி இரண்டிலும் வெறி பிடித்த ஈடுபாடு.... அதிலும் மக்கள் காசை கொள்ளை அடிப்பதில் பரம ஆனந்தம்.....
அந்த ஊருக்கு புதுசா விஏஓ வா வராரு ஹரி...
இளமை ரத்தம் துள்ளி எழுன்னு நினைச்சா, அவர் கூட கைகோத்ததன் மாயம் என்னவோ......
இவன் இந்த ஊருக்கு வந்ததன் நோக்கம் முடிந்ததா எதற்காக வந்தான்...
நாதன் தன் பையன ஒரு அடிமை மாதிரி , சொல்றத மட்டும் செய்ற கிளிப் இல்லையா வெச்சிருக்கார் அதுவும் பட்டப்படிப்பு படித்த கிளிப்பிள்ளை ......
பெற்ற பயனையே மதிக்காதவர் தன் வளர்ப்பு மகளிடம் இருக்கும் நேசத்திற்கு காரணம் என்னவோ.......
செல்வாவிற்கு திருமணம் முடிக்க பார்க்க, நாதனின் ஜாதி வெறியினால் செய்யாத தப்புக்கு பழி சுமத்தும் போதுதான் அந்தக் கிளிப்பிள்ளைக்கு புத்தியில் உரைத்தது தான் செய்த தவறு.....
பிறகு தான் விரும்பிய வாழ்க்கையை ஹரியின் துணையோடு அமைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையை மட்டுமல்லாது ஊர் மக்களின் வாழ்க்கையும் மாற்றுகிறான் வெற்றி.....
நந்து இன்னும் கொஞ்சம் இவ தெளிவா இருந்திருக்கணும்னு தோணுது எல்லா விஷயத்தையும், கண்மூடித்தனமான நம்பிக்கை எல்லாருமேலையும்....
ஹரி, வெற்றி இருவருமே மாஸ் ஹீரோஸ்😍😍
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
 
Top