வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹91.பனியில் உருகிய பகலவன் - விமர்சன திரி

GG writers

Moderator
இக்கதைக்கான உங்களது விமர்சனங்களை இவ்விடம் தெரிவியுங்கள்!!
 
#பனியில்_உருகிய_பகலவன்

ஒரு மோசமான அப்பா... பொண்ணு பண்ற தப்பை எல்லாம் கண்டுக்காம அவளுக்கு சப்போர்ட் பண்ணி அதுனால ஒரு குடும்பமே பாதிக்கப்படுது அதை சுத்தி தான் கதையே...
மகேஷ்வரன் இவன் எல்லாம் ஒரு அப்பா 😬😬😬
நல்ல புருஷனாவும் இல்ல அவன் அப்பாவுக்கு நல்ல பையனாவும் இல்ல இவனை எனக்கு சுத்தமா பிடிக்கல 🤮🤮🤮
ஸ்ரீ லதா ரொம்ப அடாவடி பொண்ணு அவ அப்பாவோட தப்பான வளர்ப்பு
லக்ஷ்மணன் பிரகதீஸ்வரி லவ் நல்லா இருந்துச்சு
பிரதீஷ் நம்ம ஹீரோ தங்கச்சி மேல அவ்வளவு பாசம்... அவளுக்காக எல்லாம் செய்வான் அவ இப்படி ஆக காரணமானவளை கல்யாணம் பண்ணினதை தான் ஏத்துக்கவே முடியல 🫤🫤🫤
இந்த மகேஷ்வரனுக்கு ஒரு தண்டனையும் இல்லாம விட்டது தான் கஷ்டமா போச்சு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🩷🩷
 
#பனியில்_உருகிய_பகலவன்_விமர்சனம்


திமிரு பிடிச்ச ஸ்ரீ லதாவை திருமணம் செய்து எப்படி ப்ரகதீஷ்குமார் திருத்துராங்கருது தான் கதை.


ஸ்ரீ லதா யாருக்கும் அடங்காம யாரையும் மதிக்காம சுயநலத்தின் உச்சமா இருக்கா. அதுவும் அவங்க அம்மாவையும் தம்பியையும் அவங்க அப்பா இருக்கும் தைரியத்துல மதிக்காம நினைச்சத சாதிக்கிறாள். ரொம்பவே எரிச்சலும் கோபமும் வருது 😡 ஸ்ரீ மேல.


பிரகதீஸ் நடக்க முடியாத தங்கை ப்ரகதீஸ்வரி மேல காட்டும் அன்பும் அக்கறையும் நல்லா இருக்கு.
லட்சுமணன் ப்ரகதீஸ்வரி காதல் நல்லா இருக்கு❤


ஸ்ரீ லதா திருந்துவது மற்றும் இறுதி கடத்தல் காட்சில ஒரு தெளிவு இல்லை. ஸ்ரீ அப்பா என்ன ஆனாரு திருந்துனாரா?இல்லையா? மேனேஜர் கையெழுத்து வாங்குனது எதுக்கு?இப்படியான கேள்விகளுக்கு விடை தெரியல. நிறைய எழுத்து பிழைகள் இருக்கு.


நல்ல முயற்சி.பிழைகளை தவிர்த்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
 
#GG91

#பனியில்_உருகிய_பகலவன்

#விமர்சனம்

அற்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான் என்று ஒரு பழமொழி இருக்கு. அந்த மாதிரி அதிர்ஷ்டவசத்தால் பணக்காரனாகும் ஒருத்தர் எப்படி தனது பணபலத்தை அடுத்தவர்கள் மீது காண்பித்து அவர்களை காயப்படுத்துகிறார் என்பதை கதை மூலமாக நல்ல விளக்கி இருக்காங்க.

தன் அப்பாவின் பண பலத்தாலும் அவர் தன் மீது காட்டும் அளவு கடந்த பாசத்தினாலும் அடங்காப் பெண்ணாக அம்மா, தம்பி முதல் ஒருவரையும் மதிக்காமல் பணத்திமிர் பிடித்து சுற்றுகிறாள் ஸ்ரீ லதா.

பணம் இருந்தால் எதையும் அடைந்து விடலாம் என்று நினைக்கும் ஸ்ரீலதா எதிர்ப்பாராக இதமாக நாயகன் பிரதீஷ்குமார் மீது காதல் வயப்பட தந்தையிடம் ஏதோ பொருளை கேட்பதைப் போல அவனை தனக்கு கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்கிறாள் அவரும் கடையில் விற்கும் பொருளை வாங்கிக் கொடுப்பது போல சரி என்று சொல்கிறார்.

மகளுக்காக பிரகதீஸ் பற்றி விசாரிக்கும் போது தான் தெரிகிறது தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்து பையன் என்று.

ஸ்ரீலதாவின் பணத்திமிரால் பாதிக்கப்பட்ட பிரகதீஷ் அவளை கல்யாணம் பண்ண சம்மதிப்பானா இல்லை கல்யாணம் பண்ணி அவளையும் அவளின் அப்பாவையும் பழிவாங்குவானா என்று கதை நகர்கிறது.

பிரகதீஷ் லக்ஷ்மணன் காதல் ரொம்ப அருமையா இருந்தது ❤️❤️

பிரகதீஷ் பிரகதீஸ்வரி இருவரின் அண்ணன் தங்கை பாசம் நெகிழ வைக்கிறது 😍😍😍😍

மகேஸ்வரன் ஸ்ரீ லதா இருவரும் பண திமிரால் அடுத்தவர்களிடம் காட்டும் அலட்சியமும் அகம்பாவமும் ரொம்ப கோவமா வர வைக்கிறது😡😡

மகேஸ்வரன் மனைவிக்கு நல்ல கணவனாவும் இல்ல,பிள்ளைக்கு நல்ல அப்பாவாவும் இல்ல,அவரோட அப்பாவுக்கு நல்ல பிள்ளையாகவும் இல்ல மொத்தத்துல இவரு மனுசனே இல்ல 😡😡😡

ஸ்ரீ லதா கடத்தின இடத்துல அவளை எப்படி காப்பாற்றிக் கொண்டு வந்தாங்க,அவ திருந்துற காட்சிகள இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருக்கலாம்.

மகேஸ்வரன் திருந்துனாரா? இல்லையா? அந்த மேனேஜர் அவரிடம் ஃபைல்களில் திருட்டுத்தனமாக கையெழுத்து வாங்கினது எதுக்காக இப்படியான கேள்விகளுக்கு தெளிவான பதில் கொடுக்கவில்லை மகேஸ்வரனுக்கான தண்டனை எதுவுமே கொடுக்காதது ஏத்துக்க முடியல.

அங்கங்க கேரக்டர் பெயர்கள் மாறி இருந்தது. எழுத்துப் பிழைகளும் நிறைய இருந்தன.

கதையில சொல்ல வந்த கருத்து நல்லா சொல்லி இருந்தீங்க. பிழைகளை தவிர்த்து இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருந்தால் கதை இன்னும் நல்லா இருந்திருக்கும்

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#gossip_glories_25

#கௌரிவிமர்சனம்

#பனியில்_உருகிய_பகலவன்

காதல் கதை தான்….

லதா, சரியான திமிர் பிடித்த பெண்….அப்படி கூட சொல்ல கூடாது…

திமிர் சில இடங்களில் நல்லா இருக்கும்…..

ஆன இவ, ஆணவம், தான் தான் அழகு அப்படிக்கற அகங்காரம் எல்லாம் நிறைந்த பொண்ணு….

அதுக்கு பாதி காரணம் அவ பெற்றோர் தான்….

முக்கியமா அவ அப்பா….

அவள் அதிஷ்ட தேவதை அப்படினு அவர் இஷ்டத்துக்கு வளர்த்து வெச்சி இருக்கார்….

தன் அழகின் மேல் கொண்ட கர்வத்தில்….

பல பேரை பின்னால் அழைய வைப்பது தான் வாடிக்கை….

அதில் தப்பித்தவன் தான் பிரதீஷ்….

அதில் அவ கர்வம், அடிவாங்க…அவனையே கல்யாணம் பண்ண நினைக்கரா….

திட்டதட்ட ஆன்டி ஹீரோயின்….

அதுக்கு அவ அப்பாவும் ஓகே சொல்ல…

அவ அப்பா மாப்பிள்ளை கேட்டு போக, அவருக்கு ஷாக் அவனை பார்த்து….

ஏன்????

அவனும், அவர் பெண்ணை கல்யாணம் செய்ய, பெண் எடுத்து பெண் கொடுத்தா ஓகேனு சொல்ல…..

அவரும், பெண் மேல அதீத பாசத்தால்…

சரினு சொல்லிட்டார்….

இனி????

கதை….நிறைவு ஃபீல் தரல….

சில இடங்கள் அப்படியே மாறின ஃபீல்….

லதா எப்படி அப்படியே திருந்தினா?????

அவ அப்பாவை ஏமாத்த பார்த்த மேனேஜர்?????

அவ அப்பா திருந்தினாரா????

இது எல்லாம் incomplete…..

இன்னும் பிரதீஸ் காதலே எனக்கு வியப்பு….

ஏனோ ஒட்டல எனக்கு….

போட்டிக்கு எழுதும் போது, கதையில் இன்னும் தெளிவு வேணும், அழுத்தம் வேணும்…..

இனி வரும் கதைகளில் கொஞ்சம் கவனமா எழுதுங்க ரைட்டர்….

போட்டியி
ல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் 💐💐💐💐💐
 
Top