GG writers
Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...
டீசர்...
"எம்புட்டு தெகிரியம் இருந்தா அந்த மெட்ராஸ்காரி என் தம்பியவே வேணாம்னு சொல்லி இருப்பா... என்ன பட்டனத்துக்கு போயிட்டோம்னு மெதப்புல பேசுறாளோ.... கூடப் பொறந்த பொறப்புன்னு கொஞ்சமாச்சும் மனசுல ஈரமிருந்தா இப்படியெல்லாம் பேசுவாளா..."டீசர்...
"ஏம்மா அவ குணம் தெரிஞ்சும் அவ வூட்டுல போய் பொண்ணு கேட்டு இருக்கியே உனக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்கா... டிவியில வேலை பார்க்கிறவ எப்படி இருப்பாளோ... என் தம்பிக்கு பொண்ணு கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டு திரியூறாக... நீயென்னனா அந்த வூட்டுல சம்பந்தம் பார்க்க போயிருக்க..." என்று படபடவென்று பொறிந்த தன் மூத்த மகள் குணலட்சுமியை அமைதிபடுத்த இயலாது கையை பிசைந்தபடி நின்றார் செண்பகவள்ளி....................................................................................................................................
வாசலில் தோரணம் கட்டிக் கொண்டிருந்தவனை சுற்றியே அவள் பார்வை வட்டமடித்து கொண்டிருந்தது. சற்று நேரம் முன்பு தான் வாழை மரத்தை தூக்கி கட்டியிருப்பான் போல... அதன் கரை வெள்ளை சட்டையில் பளிச்சென தெரிந்தது.
வியர்க்க விறுவிறுக்க வேலை செய்தவனை விடாது பார்த்திருந்தவளின் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. இங்கு ஒருவளின் பார்வை தன்னை சுற்றியே வட்டமடிப்பதை அறியாது வேலை செய்து கொண்டிருந்தவனின் பார்வை வாசல் புறம் நோக்க...
அங்கு வருபவளை கண்டு இவனின் நெஞ்சம் இனித்திட... பார்வையில் மின்னல் வெட்டிட கொடி இடையாளோடு நடந்து வருபவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.... அதனை சாளரம் வழியே கண்டவள் மனமோ, 'நான் உனக்கு முக்கியமே இல்லதான மாமா' என்று ஊமையாய் கதறியது..........................
*************
ஹாய் மக்களே,
டீசர் படிச்சிட்டு எதாச்சும் கெஸ் பண்ண முடியுதா... கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்... நாளை முதல் அத்தியாயம் போடுறேன்...
நன்றி!
- gg_97
Last edited: