வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பூமியின் பூங்குழலி

inbound8223449790818357799.jpg

பாகம்.. 1

விமானம் சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆக.. பூமிநாதன் @ பூமி..ஐந்து வருடம் கழித்து அன்று தான் துபாயில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்தான்.

தன் அம்மாவின் மறைவுக்கு பின்பு இந்த ஊரில் அவனுக்கு தன் அப்பா சந்திரனை தவிர வேறு எந்த சொந்தமும் இல்லை ..ஆகையால் தான் அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அவன் வெளிநாட்டுக்கு பயணம் கொண்டான்...
தன் தந்தையை எவ்வளவு முறை அழைத்தும் அவர் அவனிடம் வர மறுத்ததால் இவன் வேறு வழி இன்றி தான் தந்தையின் கடைசி காலத்தில அவருடன் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனின் ஊருக்கு திரும்பினான்..
பூமியின் ஊர் ஒரு கிராமம் தான்..
எனினும் அங்கே எல்லா வசதியும் இருக்கும் ...ஆகையால் தன் தந்தைக்கு அவன் எல்லா தேவைக்க்களையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தான்.. ..இத்தனை வருடம் கழித்து தன் மகனின் வருகையை கண்டு சந்திரனின் மனம் ஆனந்தத்தில் அகம் மகிழ்ந்தது ...

"வா பா பூமி எப்படி பா இருக்குற, இப்ப தான் இந்த அப்பாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா"..என்று சந்திரன் கண்கள் கலங்கி கேட்டதும் அவன் அவரை கட்டி அனைத்தவன்..

"ஏன் பா அப்படி பேசுறீங்க,நான் எங்க இருந்தாலும் உங்க பிள்ளை தான் அப்பா ...எனக்கு மட்டும் என்ன உங்களை பிரிந்து இருக்கணும்னு ஆசையா சொல்லுங்க"..என்று சந்திரனை இவன் கட்டி கொண்டான்

"சரி சரி நீ களைப்பா வந்து இருப்ப, வா பா உள்ள வா"..என்று பூமியை இவர் அழைத்ததும், இவன் வீட்டுக்குள் செல்ல,அவன் கண்களில் முதலில் தென்பட்டது தன் அம்மாவின் புகை படம் தான்.... சின்ன மாடத்தில் தன் தாயின் புகை படத்தின் அருகில் விளக்கு ஏற்றப்பட்டு ஊது வத்தியின் வாசனை அவன் மூச்சில் கலந்திட, தன் தாயின் நினைவுகளை தட்டி எழுப்பியது ....

பூமியின் அம்மாவுக்கு நடுத்தர வயது தான்.. இருப்பினும் நோய் வாய்ப்பட்டு இறந்த அவரின் மறைவை இன்றளவும் இவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் அவன் இருந்தான் ..
பூமியின் கண்கள் கலங்கி நின்று இருப்பவன் அருகில் வந்த சந்திரன் அவனை கட்டி அணைத்தபடி

"அம்மா எங்கேயும் போகல பா இங்க தான் இருக்காள் ..நீ போ போய் குளிச்சுட்டு வா சேர்ந்தே சாப்பிடலாம் அப்பா உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் மாங்காய் போட்டு வச்சி இருக்கேன்,கூடவே உனக்காக கொத்தரங்கை வத்தாலும் இருக்கு"

என்று சந்திரன் சொன்னதும் அவன் அவரை பார்த்து புன்னகையை சிதறவிட்டபடி குளியல் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து தன் அம்மாவின் புகை படத்திற்கு முன்பு கண்கள் மூடி அவரை வேண்டி கொண்டு மீண்டும் சமையல் அறைக்கு செல்ல

"வா பா சாப்பிடலாம்".. என்று தன் தந்தை அழைத்ததும் அவன் அவர் அருகில் அமர்ந்தவன்

"நீங்களே ஊட்டி விடுங்க பா".. என்று ஆ காட்டியதும்
சந்திரன் சந்தோஷத்துடன் மகனுக்கு உணவை ஊட்டி விட
இவனும் பதிலுக்கு தன் தந்தைக்கு ஊட்டி விட ..இந்த நிகழ்வை புகை படத்தில் இருந்தபடி பூமி நாதனின் அம்மா ஜெயா பார்த்து கொண்டு இருக்கிறாள் என்பதை அவர்கள் நம்பினார்கள்...
இருவரும் சாப்பிட்டு முடிக்க

"சரி பா நீ போய் ரெஸ்ட் எடு...இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம பக்கத்து ஊருக்கு போகணும்" என்று சந்திரன் சொல்ல.. பூமி அவரை கேள்வியோடு பார்க்க

"உனக்கு என் friend ராஜனின் மகள் பூங்குழலியை பெண் கேட்கலாம்னு இருக்கேன்"..
என்றதும் பூமிக்கு சற்று எரிச்சலாக இருந்தது ..அவன் முகம் வாடியதை பார்த்து சந்திரன் அவன் தோள் மீது கை வைத்தவர்..

"என்ன பா என்னாச்சு" என்று கேள்வி கேட்டதும்...

"இல்ல பா.. இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கேன்..அந்த வெளிநாட்டுல இயந்திர வாழ்க்கை என்னோட வாழ்க்கையை வாழ எனக்கு நேரமே இல்ல ..ஏதோ இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து நிம்மதியா மூச்சு விடுற மாதிரி இருக்கு.. அதுக்குள்ள கல்யாணம் காட்சின்னு மூச்சு முட்ட வைக்காதிங்க"..
என்று பூமி சொன்னதும் சந்திரன் சிரித்துக்கொண்டே

"நீ இனியாவது சந்தோஷமா வாழணும்னு தான் பா உனக்கு நான் கல்யாண ஏற்பாடு பண்ண போறேன்.. நீ என்கூட வந்து பெண்ணை பாரு.. உனக்கு பிடிச்சா தான் கல்யாணம்.. இல்லையா கொஞ்ச நாள் போகட்டும்".. என்று கெஞ்சும் தோரணையில் தன் தகப்பன் பேசுவதை மறுக்க முடியாத பூமி.. அவர் அழைப்புக்கு மதிப்பு தந்து அன்றைய தினம் மாலை நேரம் பக்கத்து ஊரில் இருக்கும் சந்திரனின் நண்பன் ராஜன் வீட்டுக்கு செல்ல ..

"வாங்க வாங்க உள்ள வாங்க....வா டா சந்திரா"... என்று ராஜன் உரிமையோடு உள்ள அழைக்க ... ராஜனின் வீடு முழுதும் பூக்களால் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது...வாசலில் பெரிய கோலத்தில் நல் வருகை என்று எழுதி இருந்தது ...பூமியை பார்த்ததும் அங்கே இருந்த எட்டு வயது சிறுமி ஒருவள் ஒரு அறைக்குள் ஓடி போய் டீச்சர் மாப்பிளை சார் வந்துட்டாரு.. என கொஞ்சும் தமிழ் பேசும் குரலை கேட்டபடி பூமியும் அவன் அப்பா சந்திரனும் உள்ளே நுழைய

"உக்காருங்க மாப்பிள்ளை ஊர் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது" என்று ராஜன் உரிமையாக பூமியை வினவினார்

"என்னடா பூமி அப்படி பாக்குற...உன்னை அவன் பெண்ணுக்கு இவன் கட்டலைனாலும் இவன் உன்னை மாப்பிள்ளைன்னு தான் கூப்பிடுவான்... ஏன்னா உன் அம்மா இவனுக்கு தங்கச்சி மாதிரி"..என்று சந்திரன் சொன்னதும் பூமியின் இதழோரத்தில் புன்னகை மலர்ந்தபடி அந்த வீட்டை நோட்டமிட..அந்த வீட்டின் வலது பக்கத்தல் பட்ட படிப்பு முடித்ததும் தோழிகளுடன் சேர்ந்து எடுக்க பட்ட புகை படம் இருந்தது.. இவனை அறியாமல் இதில் இவன் பார்க்க வந்த பெண் யார் என்று மனசு கேள்வி கேட்க.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடுமே என்று அவன் மூளை பதில் சொன்னது

"சரி சரி சீக்கிரம் என் மருமகளை வர சொல்லுங்க "என்று சந்திரன் சொன்னதும் .......
மஞ்சள் நிற சீலையில் பச்சை நிற கரையில் பட்டு புடவையும் அதற்கு பொருத்தமான ரவிக்கையில் கையில் காபி தட்டுடன் பூமியின் முன் வந்து நின்றாள் பூங்குழலி.....

அவளை பார்த்தும் மீண்டும் திரும்பி பார்க்க தோன்றும் அழகுக்கு சொந்தக்காரி ....அளவான நெற்றி, கூர்மையான மூக்கு,ஆர்ப்பரிக்கும் கண்கள்,பாதி கோவை பழத்தின் மிஞ்சிய அளவில் இதழ்கள் என்று கவிதையாக தெரிந்த பூங்குழலியை பார்த்ததுமே
பூமிக்கு மிகவும் பிடித்து போனது

ஆனால் அவளுக்கு இவனை பிடிக்குமா என்று வரும் பாகத்தில் பார்ப்போம்..

தொடரும்....நன்றி.....
 
Last edited:
View attachment 842

பாகம்.. 1

விமானம் சென்னை ஏர்போர்ட்டில் லேண்ட் ஆக.. பூமிநாதன் @ பூமி..ஐந்து வருடம் கழித்து அன்று தான் துபாயில் இருந்து தன் தாய் நாட்டிற்கு வந்தான்.

தன் அம்மாவின் மறைவுக்கு பின்பு இந்த ஊரில் அவனுக்கு தன் அப்பா சந்திரனை தவிர வேறு எந்த சொந்தமும் இல்லை ..ஆகையால் தான் அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி அவன் வெளிநாட்டுக்கு பயணம் கொண்டான்...
தன் தந்தையை எவ்வளவு முறை அழைத்தும் அவர் அவனிடம் வர மறுத்ததால் இவன் வேறு வழி இன்றி தான் தந்தையின் கடைசி காலத்தில அவருடன் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனின் ஊருக்கு திரும்பினான்..
பூமியின் ஊர் ஒரு கிராமம் தான்..
எனினும் அங்கே எல்லா வசதியும் இருக்கும் ...ஆகையால் தன் தந்தைக்கு அவன் எல்லா தேவைக்க்களையும் ஏற்பாடு செய்து தந்து இருந்தான்.. ..இத்தனை வருடம் கழித்து தன் மகனின் வருகையை கண்டு சந்திரனின் மனம் ஆனந்தத்தில் அகம் மகிழ்ந்தது ...

வா பா பூமி எப்படி பா இருக்குற, இப்ப தான் இந்த அப்பாவை பார்க்க உனக்கு நேரம் கிடைச்சுதா..என்று சந்திரன் கண்கள் கலங்கி கேட்டதும் அவன் அவரை கட்டி அனைத்தவன்..

ஏன் பா அப்படி பேசுறீங்க,நான் எங்க இருந்தாலும் உங்க பிள்ளை தான் அப்பா ...எனக்கு மட்டும் என்ன உங்களை பிரிந்து இருக்கணும்னு ஆசையா சொல்லுங்க..என்று சந்திரனை இவன் கட்டி கொண்டான்

சரி சரி நீ களைப்பா வந்து இருப்ப, வா பா உள்ள வா..என்று பூமியை இவர் அழைத்ததும், இவன் வீட்டுக்குள் செல்ல,அவன் கண்களில் முதலில் தென்பட்டது தன் அம்மாவின் புகை படம் தான்.... சின்ன மாடத்தில் தன் தாயின் புகை படத்தின் அருகில் விளக்கு ஏற்றப்பட்டு ஊது வத்தியின் வாசனை அவன் மூச்சில் கலந்திட, தன் தாயின் நினைவுகளை தட்டி எழுப்பியது ....

பூமியின் அம்மாவுக்கு நடுத்தர வயது தான்.. இருப்பினும் நோய் வாய்ப்பட்டு இறந்த அவரின் மறைவை இன்றளவும் இவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் அவன் இருந்தான் ..
பூமியின் கண்கள் கலங்கி நின்று இருப்பவன் அருகில் வந்த சந்திரன் அவனை கட்டி அணைத்தபடி

அம்மா எங்கேயும் போகல பா இங்க தான் இருக்காள் ..நீ போ போய் குளிச்சுட்டு வா சேர்ந்தே சாப்பிடலாம் அப்பா உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் மாங்காய் போட்டு வச்சி இருக்கேன்,கூடவே உனக்காக கொத்தரங்கை வத்தாலும் இருக்கு

என்று சந்திரன் சொன்னதும் அவன் அவரை பார்த்து புன்னகையை சிதறவிட்டபடி குளியல் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து தன் அம்மாவின் புகை படத்திற்கு முன்பு கண்கள் மூடி அவரை வேண்டி கொண்டு மீண்டும் சமையல் அறைக்கு செல்ல

வா பா சாப்பிடலாம்.. என்று தன் தந்தை அழைத்ததும் அவன் அவர் அருகில் அமர்ந்தவன்

நீங்களே ஊட்டி விடுங்க பா.. என்று ஆ காட்டியதும்
சந்திரன் சந்தோஷத்துடன் மகனுக்கு உணவை ஊட்டி விட
இவனும் பதிலுக்கு தன் தந்தைக்கு ஊட்டி விட ..இந்த நிகழ்வை புகை படத்தில் இருந்தபடி பூமி நாதனின் அம்மா ஜெயா பார்த்து கொண்டு இருக்கிறாள் என்பதை அவர்கள் நம்பினார்கள்...
இருவரும் சாப்பிட்டு முடிக்க

சரி பா நீ போய் ரெஸ்ட் எடு...இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம பக்கத்து ஊருக்கு போகணும் என்று சந்திரன் சொல்ல.. பூமி அவரை கேள்வியோடு பார்க்க

உனக்கு என் friend ராஜனின் மகள் பூங்குழலியை பெண் கேட்கலாம்னு இருக்கேன்..
என்றதும் பூமிக்கு சற்று எரிச்சலாக இருந்தது ..அவன் முகம் வாடியதை பார்த்து சந்திரன் அவன் தோள் மீது கை வைத்தவர்..

என்ன பா என்னாச்சு என்று கேள்வி கேட்டதும்...

இல்ல பா.. இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து இருக்கேன்..அந்த வெளிநாட்டுல இயந்திர வாழ்க்கை என்னோட வாழ்க்கையை வாழ எனக்கு நேரமே இல்ல ..ஏதோ இப்போ தான் நம்ம நாட்டுக்கு வந்து நிம்மதியா மூச்சு விடுற மாதிரி இருக்கு.. அதுக்குள்ள கல்யாணம் காட்சின்னு மூச்சு முட்ட வைக்காதிங்க..
என்று பூமி சொன்னதும் சந்திரன் சிரித்துக்கொண்டே

நீ இனியாவது சந்தோஷமா வாழணும்னு தான் பா உனக்கு நான் கல்யாண ஏற்பாடு பண்ண போறேன்.. நீ என்கூட வந்து பெண்ணை பாரு.. உனக்கு பிடிச்சா தான் கல்யாணம்.. இல்லையா கொஞ்ச நாள் போகட்டும்.. என்று கெஞ்சும் தோரணையில் தன் தகப்பன் பேசுவதை மறுக்க முடியாத பூமி.. அவர் அழைப்புக்கு மதிப்பு தந்து அன்றைய தினம் மாலை நேரம் பக்கத்து ஊரில் இருக்கும் சந்திரனின் நண்பன் ராஜன் வீட்டுக்கு செல்ல ..

வாங்க வாங்க உள்ள வாங்க....வா டா சந்திரா... என்று ராஜன் உரிமையோடு உள்ள அழைக்க ... ராஜனின் வீடு முழுதும் பூக்களால் அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது...வாசலில் பெரிய கோலத்தில் நல் வருகை என்று எழுதி இருந்தது ...பூமியை பார்த்ததும் அங்கே இருந்த எட்டு வயது சிறுமி ஒருவள் ஒரு அறைக்குள் ஓடி போய் டீச்சர் மாப்பிளை சார் வந்துட்டாரு.. என கொஞ்சும் தமிழ் பேசும் குரலை கேட்டபடி பூமியும் அவன் அப்பா சந்திரனும் உள்ளே நுழைய

உக்காருங்க மாப்பிள்ளை ஊர் பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது என்று ராஜன் உரிமையாக பூமியை வினவினார்

என்னடா பூமி அப்படி பாக்குற...உன்னை அவன் பெண்ணுக்கு இவன் கட்டலைனாலும் இவன் உன்னை மாப்பிள்ளைன்னு தான் கூப்பிடுவான்... ஏன்னா உன் அம்மா இவனுக்கு தங்கச்சி மாதிரி..என்று சந்திரன் சொன்னதும் பூமியின் இதழோரத்தில் புன்னகை மலர்ந்தபடி அந்த வீட்டை நோட்டமிட..அந்த வீட்டின் வலது பக்கத்தல் பட்ட படிப்பு முடித்ததும் தோழிகளுடன் சேர்ந்து எடுக்க பட்ட புகை படம் இருந்தது.. இவனை அறியாமல் இதில் இவன் பார்க்க வந்த பெண் யார் என்று மனசு கேள்வி கேட்க.. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடுமே என்று அவன் மூளை பதில் சொன்னது

சரி சரி சீக்கிரம் என் மருமகளை வர சொல்லுங்க என்று சந்திரன் சொன்னதும் .......

நன்றி.....
🤗🤗
 
Already படிச்சிட்டேன் சிஸ்டர் மீண்டும் படிக்க ரொம்ப நல்லா இருக்கு
 
பாகம் 2

சந்திரன் - "வாமா எப்படி இருக்கிற"

பூங்குழலி - "நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க"

சந்திரன் - "எனக்கென்னமா நல்லா இருக்கேன்"

என்று சந்திரன் சொல்ல...பூமியின் விழிகள்... பூங்குழலியை விட்டு நகர மறுத்தது.... தன் தந்தை மேல் அவளுக்கு இருந்த பாசமும் மரியாதையும் அவளின் ரம்மியமான குரலில் தென்பட்டது..

"என்னமா கையில காப்பியை வச்சுக்கிட்டு அப்படியே நிற்கிற உன் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் காப்பியை கொடு".. என்று ராஜன் சொல்ல இவர்களை நோக்கி அடிமேல் அடி எடுத்து வைத்து வந்த பூங்குழலி சந்திரனின் எதிரில் காபி தட்டை நீட்டியவர் இன்னொரு கோப்பையை தன் தந்தைக்கு தர

"என்னமா நீ மாப்பிள்ளைக்கு காப்பி தராம எங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கிற"..என்று ராஜன் கேள்வி கேட்க.. பூமியின் செவிகள் அவள் பதிலுக்காக காத்திருந்தது

"இல்லப்பா உங்களுக்கும் மாமாவுக்கும் பில்டர் காபி பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. இவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாது அதான் அவர் காப்பி, டீ,பால் எது குடிப்பார்ன்னு கேட்டுட்டு தரலாம்ன்னு நினைச்சேன்"

என்று பூங்குழலி சொன்னதும் பூமிநாதனின் கண்களில் மற்றவர்களில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெண்ணாக பூங்குழலி பிரதிபலித்தாள்..

"என் பையன் டீ காபி ரெண்டுமே குடிப்பான்..நீ ரெண்டுல எது வேணும்னாலும் கொடு மா"..என்று சந்திரன் சொன்னதும் மின்னல் வேகத்தில் சமையலறைக்குள் பூங்குழலி நுழைய

ராஜன் - "மாப்பிள்ளை நீங்க என் பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு நினைச்சீங்கன்னா மொட்டை மாடியில போய் பேசிட்டு வாங்க"என்றதும்
பூமிநாதன் தன் தந்தையை பார்க்க....

"போடா..ராஜன் இந்த காலத்து மனுஷன் அவனுக்கு எல்லாருடைய உணர்வுகளும் புரியும்.... நீ பூ கிட்ட தனியா பேசணும்னு ஆசைப்பட்டா போய் பேசு"

என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் பூமிநாதன் இருக்கையை விட்டு எழுந்தவன் மொட்டை மாடிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று படிக்கட்டை தேட..

ராஜன் சிரித்தபடி..வலது பக்கம் தான் மாப்பிள்ளை படிக்கட்டு இருக்கு என்று சொன்னதும் பொறுமையாக வீட்டை மீண்டும் நோட்டமிட்டபடி பூமிநாதன் மாடிக்கு ஏறி செல்ல....

இவன் மாடிக்கு சென்றதும்.. அங்கே அழகான மொட்டை மாடியின் நடுவில் துளசி செடியும் அந்த மாடத்தில் ஒரு விளக்க்கும் ஏற்றப்பட்டு இருந்தது.....மொட்டை மாடியின் மதில் மேல் முழுவதும் நிறைய தாவரங்கள் இவன் கண்ணுக்கு தென்பட்டது.....
புறா கூண்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது......அதில் சில புறாக்கள் தன் ஜோடிகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தது....இன்னொரு புறம் தென்ன மர கீற்றின் அசைவில் சங்கீதம் ஒலிக்க..அந்த காற்றோடு கலந்து சலங்கை சத்தமும் இவன் செவியில் ஒலித்தது......இவன் விழிகள் அவளுக்காக காத்திருந்தது...மீண்டும் அவளின் சலங்கையின் சத்தம் இவனை நெருங்கும் படி கேட்டு பூமியின் விழிகள் அவளை காண திரும்ப... கையில் இரண்டு கோப்பையுடன் பூங்குழலி பூமிநாதனை நெருங்கி வந்தவள் அவன் முன் தட்டை நீட்டினாள்....அவன் மீண்டும் கேள்வியோடு அவள் விழிகளை நோக்க...

மென்மையான குரலில் அமைதியாக...
"மாமா நீங்க டீ காபி இரண்டும் குடிப்பீங்கன்னு சொன்னாங்க...ஆனா இப்போ உங்களின் தேவை என்னன்னு எனக்கு தெரியல.. அதான் இரண்டையும் எடுத்துட்டு வந்தேன்"...

என்று அவள் சொன்னதும் இவன் புன்னகையை சிதறவிட்ட படி அவளைப் பார்த்தவன்...

"இப்போ எனக்கு காபி பிடிக்கும்னா அப்ப இந்த டீ வேஸ்ட் ஆயிடும் இல்லையா"...

என்று அவன் அவளைப் பார்த்து முதலில் ஒரு கேள்வி எழுப்ப.... அவளும் பதிலுக்கு சிறு புன்னகையை உதிர்த்த படி....

"எனக்கு டீ காபி ரெண்டுமே பிடிக்கும்...நீங்க எதை எடுத்துக்கிட்டாலும் மீதம் இருக்கிறத நான் எடுத்துப்பேன்"...

என்று அவள் சொன்ன பதில் அவனுக்கு அவளை அதிகமாக பிடித்துப் போக காரணமாக இருந்தது....

"இப்ப நான் காப்பி எடுத்துக்கணுமா டீ எடுத்துக்கணுமா "என்று பூமிநாதன் பூங்குழலியை பார்த்து கேள்வி கேட்க

"உங்களுக்கு இப்போ என்ன குடிக்கனும்னு தோணுதோ அதையே எடுத்துக்கோங்க"

என்று பூங்குழலி சொன்னதும், பூமிநாதன் கையில் ஒரு கோப்பையை எடுத்தவன்
அந்தக் கோப்பையில் உள்ள தேநீரை சுவைத்து அருந்திக்கொண்டு இருந்தவனை ஓரக்கண்ணில் பூங்குழலி பார்த்துக் கொண்டிருந்த சமயம்..

"இந்த செடி கொடி எல்லாம் நீ தான் பாத்துக்குறியா"..
என்று அவன் தோழமை தோரணையில் ஒருமையில் பேசியவனின் கேள்விக்கு விடை தந்தவள்..

"ஆமா..நம்ப செய்கிற ஒவ்வொரு விஷயமும் அடுத்தவங்களுக்கும் நமக்கும் பயனுள்ளதா இருக்கணும்ன்னு என் அப்பா சொல்லுவாரு.... அதனாலதான் அழகுக்காக பூச்செடி எல்லாம் வளர்க்காமல் காய்கறி தாவரங்கள் எல்லாம் வளர்த்துக்கிட்டு இருக்கிறேன்"...

என்று இயல்பாக பூங்குழலி அவன் கேள்விக்கு பதில் அளிக்க.. தேநீரை குடித்து முடித்ததும் கோப்பையை மதில் மேல் வைத்தவன்

"நீயும் காபி குடிக்கலாமே" என்று பூமி சொன்னதும் மீதம் இருந்த கோப்பையில் உள்ள காப்பியை பூங்குழலி குடித்து முடித்தவள்....தேநீர் கோப்பையையும் சேர்த்து இரண்டு கோப்பைகளையும் அவள் கொண்டு வந்த தட்டில் வைத்து அதை ஓரமாக கீழே வைக்க....
சில நொடி இருவரும் அமைதியாக இருந்த காரணத்தால் தெருவில் சைக்கிள் மோட்டார் எழுப்பும் சத்தமும் இவர்களை சுற்றி மரங்களின் இலைகள் காற்றில் அசையும் இசையும் கேட்டிருக்க முதலில் மௌனத்தை உடைப்பது யார் என்ற கேள்விக்கு பதிலாக

"என் பெயர் பூமிநாதன்.....என்னை பூமின்னு friends and family members எல்லாம் கூப்பிடுவாங்க....நான் மதுரையில தான் படிச்சேன்....அம்மா இருக்கும் பொழுதே வெளிநாட்டுக்கு போய் வேலை செய்யணும்னு தான் ஆசை...அங்க எல்லாம் போக கூடாதுன்னு அம்மா செல்லமா சொன்னதால இங்கேயே பாதி நேரம் படிப்பு, பாதி நேர வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்... 5 வருஷத்துக்கு முன்ன அம்மா இறந்துட்டாங்க.. So இங்கே இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு......அப்பா ஒரு மாற்றமா இருக்கட்டும் நீ வெளிநாட்டுக்கு வேலைக்கு போன்னு சொன்னாரு.... So கடந்த 5 வருஷமா வெளிநாட்டில் தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்... இன்னைக்கு காலைல தான் நம்ம ஊருக்கு வந்தேன்... வந்ததும் அப்பா இன்னைக்கு சாயங்காலமே பொண்ணு பாக்க போகணும்னு சொன்னதும் எனக்கு அவர் பேச்சை மறுக்க முடியல...... and எனக்கு எந்த ஒரு நல்ல பழக்கமும் இல்லை"....

என்று பூமி சொல்ல அது வரை சீலை முந்தானையின் நுனியை கொண்டு தன் விரல்களால் சுற்றி கொண்டு இருந்த பூங்குழலியின் இரண்டு விழிகளும் அவனை பார்க்க....அவன் மீண்டும் சிரித்தபடி..

"அதாவது நான் சிகரெட் தண்ணி எல்லாம் பிடிக்க மாட்டேன்.....ஒரு முறை பிரண்ட்ஸ் கூட பீர் குடிச்சிட்டு வரும்போது அம்மா ரொம்ப கவலை பட்டாங்க....அப்போ அம்மாவுக்கு பண்ண சத்தியம் அந்த நொடியில் இருந்து இந்த நொடி வரைக்கும் எதையும் தொட்டதில்லை"..

என்று பூமிநாதன் சொன்னதும் பூங்குழலி மீண்டும் தன் விழிகளை அந்த பூமியிடம் இருந்து விளக்கி...நம் பூமி மாதாவை நோக்கி தலை குனிந்தவள்...அவனின் அடுத்த வார்த்தைக்காக காத்திருக்க..

"actually எனக்கு இந்த பொண்ணு பார்க்குற formality எல்லாம் பிடிக்காது... அப்பா அவரோட friend வீட்டுக்கு ஜஸ்ட் காபி குடிக்கிறது போல வந்தா போதும்னு சொன்னாரு.. கண்டிப்பா உனக்கு இந்த மாதிரி ஒரு situation நெருடலா இருக்கும்னு எனக்கு தெரியும்"...என்றான் பூமி

"அப்டி எல்லாம் இல்ல... நேத்து சந்திரன் மாமா எங்க அப்பாகிட்ட இன்னைக்கு உங்கள அழைச்சிட்டு வரேன்னு சொன்னாரு...அவருமே நீங்க நட்பின் ரீதியா தான் பாக்க வரீங்கன்னு சொன்னாரு"..

என்று அலட்டால் இல்லாமல் பூங்குழலி சொன்னதும் தன் மூக்கு கண்ணாடியை கழட்டிய பூமிநாதன் தன் pant பாக்கெட்டில் இருந்து எடுத்த கைக்குட்டையில் தன் கண்ணடியை துடைத்தபடி அடுத்த கேள்வியை அவளை பார்த்து கேட்க..

பூமி - "நீ டீச்சரா"....

பூங்குழலி - "இல்ல நான் மதுரை ஹாஸ்பிடல்ல head nurse"

என்று பூங்குழலி சொன்னதும்... தன் கண்ணாடியை மீண்டும் அணிந்து கொண்டவன் அவன் புருவத்தை மேல் உயர்த்தியப்படி

"but நான் நம்ம வீட்டுக்குள்ள நுழையும் போது ஒரு குட்டி பாப்பா உன்னை டீச்சர்ன்னு கூப்பிட்ட மாதிரி கேட்டுச்சு"..

என்று பூமிநாதன் கேட்டதும் அவள் மீன் விழிகள் தண்ணீரே இல்லாமல் நடனமாடும் தோரணையோடு அவன் வினாவிற்கு விடை அளிக்க..

பூங்குழலி - "நான் நம்ம தெரு பிள்ளைகளுக்கு danceம் பாட்டும் கத்து தருவேன்"

பூமி - "really...நீ dance ஆடுவியா"...
என்று ஆச்சிரியமாக பூமி கேட்க...

அவளின் கயல் விழிகள் நளினத்துடன் பேசும் அழகை மெய் மறந்து பார்த்து கொண்டு இருந்த பூமிக்கு பூங்குழலியை அந்த நொடியே கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...

மீண்டும் இவர்களின் இடையே மௌவனம் தலை தூக்க....இவர்களின் இடைவெளியை குறைக்க எட்டு வயது சிறுமி மாடிக்கு வர...

"டீச்சர் தாத்தா இந்த mixturai இந்த சார் க்கு தர சொன்னாரு"....

என்று பாவாடை சட்டையில் இரட்டை ஜடையுடன் மழலை மாறாமல் சொன்ன குட்டி பெண்ணை பார்த்து பூமிநாதன் அவன் அருகில் அவளை அழைத்தவன்

பூமி - "உன் பெயர் என்ன பாப்பா"...என்று இவன் கேக்க

"என் பெயர் கலையரசி"..
என்று குட்டி பெண் சொன்னதும் பூமிநாதன் அவள் கன்னத்தை ஆசையாக கிள்ள போனவனின் கரங்களை தடுத்த கலையரசி

கலை - "சார் தொடாமல் பேசுங்க....நமக்கு தெரிஞ்சவுங்களா இருந்தாலும் நம்மை தொடும் உரிமையை நாம் தான் தரணுமே தவிர அவர்களே எடுத்துக்க கூடாதுனு எங்க பூ டீச்சர் சொல்லி இருக்காங்க"....

என்று குட்டி பெண் கலையரசியின் சொற்களில் இருந்த ஆழத்தை உணர்ந்த பூமிநாதன் ஆண் பெண் என்ற ஆங்காரம் இல்லாமல்

பூமி - "I am Sorry.... என்னை மன்னிச்சுடு பாப்பா"...

என்று அவன் தாழ்மையுடன் பேசும் பணிவில் முதல் முறையாக பூங்குழலியின் இதயத்தில் பூமி மீது மரியாதை ஏற்பட்டது ..

பூமி - "சரி என்னை பற்றி மேற்கொண்டு சொல்ல வேற ஒன்னும் சுவரசியமா இல்ல..நீ என்கிட்ட எதாவது கேக்கணும் சொல்லணும்ன்னு ஆசை படுறியா"...
என்று பூமி கேட்ட அடுத்த நொடி..

பூங்குழலி - "ஆமா.... நான் உங்ககிட்ட மூணு கேள்வி கேக்கணும்"..

பூமி - "ஏன் அதுக்கு மேல கேள்வி கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா"

பூங்குழலி - "தேவையில்லாத பதில்கள் ஆயிரம் இருந்தாலும்.. எனக்கு தேவையான மூன்று கேள்விக்கு உண்டான பதில் மட்டுமே எனக்கு போதுமானது"..

என்று பூங்குழலி சொல்ல.... பூமியுடன் சேர்ந்து நாமும் காத்து இருப்போம் பூங்குழலியின் வினாவிற்கு விடை தெரிந்து கொள்ள....

தொடரும்.. நன்றி 🙏🏼
 
Attachments

  • inbound742829075305859341.jpg
    inbound742829075305859341.jpg
    70.7 KB · Views: 0
Last edited:
பாகம் 2

சந்திரன் - வாமா எப்படி இருக்கிற

பூங்குழலி - நல்லா இருக்கேன் மாமா.. நீங்க எப்படி இருக்கீங்க

சந்திரன் - எனக்கென்னமா நல்லா இருக்கேன்

என்று சந்திரன் சொல்ல...பூமியின் விழிகள்... பூங்குழலியை விட்டு நகர மறுத்தது.... தன் தந்தை மேல் அவளுக்கு இருந்த பாசமும் மரியாதையும் அவளின் ரம்மியமான குரலில் தென்பட்டது..

என்னமா கையில காப்பியை வச்சுக்கிட்டு அப்படியே நிற்கிற உன் மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் காப்பியை கொடு.. என்று ராஜன் சொல்ல இவர்களை நோக்கி அடிமேல் அடி எடுத்து வைத்து வந்த பூங்குழலி சந்திரனின் எதிரில் காபி தட்டை நீட்டியவர் இன்னொரு கோப்பையை தன் தந்தைக்கு தர

என்னமா நீ மாப்பிள்ளைக்கு காப்பி தராம எங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கிற..என்று ராஜன் கேள்வி கேட்க.. பூமியின் செவிகள் அவள் பதிலுக்காக காத்திருந்தது

இல்லப்பா உங்களுக்கும் மாமாவுக்கும் பில்டர் காபி பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. இவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாது அதான் அவர் காப்பி, டீ,பால் எது குடிப்பார்ன்னு கேட்டுட்டு தரலாம்ன்னு நினைச்சேன்

என்று பூங்குழலி சொன்னதும் பூமிநாதனின் கண்களில் மற்றவர்களில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் பெண்ணாக பூங்குழலி பிரதிபலித்தாள்..

என் பையன் டீ காபி ரெண்டுமே குடிப்பான்..நீ ரெண்டுல எது வேணும்னாலும் கொடு மா..என்று சந்திரன் சொன்னதும் மின்னல் வேகத்தில் சமையலறைக்குள் பூங்குழலி நுழைய

ராஜன் - மாப்பிள்ளை நீங்க என் பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு நினைச்சீங்கன்னா மொட்டை மாடியில போய் பேசிட்டு வாங்க

பூமிநாதன் தன் தந்தையை பார்க்க....

போடா..ராஜன் இந்த காலத்து மனுஷன் அவனுக்கு எல்லாருடைய உணர்வுகளும் புரியும்.... நீ பூ கிட்ட தனியா பேசணும்னு ஆசைப்பட்டா போய் பேசு

என்று ராஜன் சொல்லி முடிப்பதற்குள் பூமிநாதன் இருக்கையை விட்டு எழுந்தவன் மொட்டை மாடிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று படிக்கட்டை தேட

ராஜன் சிரித்தபடி..வலது பக்கம் தான் மாப்பிள்ளை படிக்கட்டு இருக்கு என்று சொன்னதும் பொறுமையாக வீட்டை மீண்டும் நோட்டமிட்டபடி பூமிநாதன் மாடிக்கு ஏறி செல்ல....

இவன் மாடிக்கு சென்றதும்.. அங்கே அழகான மொட்டை மாடியின் நடுவில் துளசி செடியும் அந்த மாடத்தில் ஒரு விளக்க்கும் ஏற்றப்பட்டு இருந்தது.....மொட்டை மாடியின் மதில் மேல் முழுவதும் நிறைய தாவரங்கள் இவன் கண்ணுக்கு தென்பட்டது.....
புறா கூண்டு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது......அதில் சில புறாக்கள் தன் ஜோடிகளுடன் விளையாடிக் கொண்டும் இருந்தது....இன்னொரு புறம் தென்ன மர கீற்றின் அசைவில் சங்கீதம் ஒலிக்க..அந்த காற்றோடு கலந்து சலங்கை சத்தமும் இவன் செவியில் ஒலித்தது......இவன் விழிகள் அவளுக்காக காத்திருந்தது...மீண்டும் அவளின் சலங்கையின் சத்தம் இவனை நெருங்கும் படி கேட்டு பூமியின் விழிகள் அவளை காண திரும்ப... கையில் இரண்டு கோப்பையுடன் பூங்குழலி பூமிநாதனை நெருங்கி வந்தவள் அவன் முன் தட்டை நீட்டினாள்....அவன் மீண்டும் கேள்வியோடு அவள் விழிகளை நோக்க...

மென்மையான குரலில் அமைதியாக...
மாமா நீங்க டீ காபி இரண்டும் குடிப்பீங்கன்னு சொன்னாங்க...ஆனா இப்போ உங்களின் தேவை என்னன்னு எனக்கு தெரியல.. அதான் இரண்டையும் எடுத்துட்டு வந்தேன்...

என்று அவள் சொன்னதும் இவன் புன்னகையை சிதறவிட்ட படி அவளைப் பார்த்தவன்...

இப்போ எனக்கு காபி பிடிக்கும்னா அப்ப இந்த டீ வேஸ்ட் ஆயிடும் இல்லையா...

என்று அவன் அவளைப் பார்த்து முதலில் ஒரு கேள்வி எழுப்ப.... அவளும் பதிலுக்கு சிறு புன்னகையை உதிர்த்த படி....

எனக்கு டீ காபி ரெண்டுமே பிடிக்கும்...நீங்க எதை எடுத்துக்கிட்டாலும் மீதம் இருக்கிறத நான் எடுத்துப்பேன்...

என்று அவள் சொன்ன பதில் அவனுக்கு அவளை அதிகமாக பிடித்துப் போக காரணமாக இருந்தது....

இப்ப நான் காப்பி எடுத்துக்கணுமா டீ எடுத்துக்கணுமா என்று பூமிநாதன் பூங்குழலியை பார்த்து கேள்வி கேட்க

உங்களுக்கு இப்போ என்ன குடிக்கனும்னு தோணுதோ அதையே எடுத்துக்கோங்க

என்று பூங்குழலி சொன்னதும், பூமிநாதன் கையில் ஒரு கோப்பையை எடுத்தவன்
அந்தக் கோப்பையில் உள்ள தேநீரை சுவைத்து அருந்திக்கொண்டு இருந்தவனை ஓரக்கண்ணில் பூங்குழலி பார்த்துக் கொண்டிருந்த சமயம்..

இந்த செடி கொடி எல்லாம் நீ தான் பாத்துக்குறியா..
என்று அவன் தோழமை தோரணையில் ஒருமையில் பேசியவனின் கேள்விக்கு விடை தந்தவள்..

ஆமா..நம்ப செய்கிற ஒவ்வொரு விஷயமும் அடுத்தவங்களுக்கும் நமக்கும் பயனுள்ளதா இருக்கணும்ன்னு என் அப்பா சொல்லுவாரு.... அதனாலதான் அழகுக்காக பூச்செடி எல்லாம் வளர்க்காமல் காய்கறி தாவரங்கள் எல்லாம் வளர்த்துக்கிட்டு இருக்கிறேன்...

என்று இயல்பாக பூங்குழலி அவன் கேள்விக்கு பதில் அளிக்க.. தேநீரை குடித்து முடித்ததும் கோப்பையை மதில் மேல் வைத்தவன்

நீயும் காபி குடிக்கலாமே எ..ன்று பூமி சொன்னதும் மீதம் இருந்த கோப்பையில் உள்ள காப்பியை பூங்குழலி குடித்து முடித்தவள்....தேநீர் கோப்பையையும் சேர்த்து இரண்டு கோப்பைகளையும் அவள் கொண்டு வந்த தட்டில் வைத்து அதை ஓரமாக கீழே வைக்க....
சில நொடி இருவரும் அமைதியாக இருந்த காரணத்தால் தெருவில் சைக்கிள் மோட்டார் எழுப்பும் சத்தமும் இவர்களை சுற்றி மரங்களின் இலைகள் காற்றில் அசையும் இசையும் கேட்டிருக்க முதலில் மௌனத்தை உடைப்பது யார் என்ற கேள்விக்கு பதிலாக

என் பெயர் பூமிநாதன்.....என்னை பூமின்னு friends and family members எல்லாம் கூப்பிடுவாங்க....நான் மதுரையில தான் படிச்சேன்....அம்மா இருக்கும் பொழுதே வெளிநாட்டுக்கு போய் வேலை செய்யணும்னு தான் ஆசை...அங்க எல்லாம் போக கூடாதுன்னு அம்மா செல்லமா சொன்னதால இங்கேயே பாதி நேரம் படிப்பு, பாதி நேர வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்... 5 வருஷத்துக்கு முன்ன அம்மா இறந்துட்டாங்க.. So இங்கே இருக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு......அப்பா ஒரு மாற்றமா இருக்கட்டும் நீ வெளிநாட்டுக்கு வேலைக்கு போன்னு சொன்னாரு.... So கடந்த 5 வருஷமா வெளிநாட்டில் தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்... இன்னைக்கு காலைல தான் நம்ம ஊருக்கு வந்தேன்... வந்ததும் அப்பா இன்னைக்கு சாயங்காலமே பொண்ணு பாக்க போகணும்னு சொன்னதும் எனக்கு அவர் பேச்சை மறுக்க முடியல...... and எனக்கு எந்த ஒரு நல்ல பழக்கமும் இல்லை....

அது வரை சீலை முந்தானையின் நுனியை கொண்டு தன் விரல்களால் சுற்றி கொண்டு இருந்த பூங்குழலியின் இரண்டு விழிகளும் அவனை பார்க்க....அவன் மீண்டும் சிரித்தபடி..

அதாவது நான் சிகரெட் தண்ணி எல்லாம் பிடிக்க மாட்டேன்.....ஒரு முறை பிரண்ட்ஸ் கூட பீர் குடிச்சிட்டு வரும்போது அம்மா ரொம்ப கவலை பட்டாங்க....அப்போ அம்மாவுக்கு பண்ண சத்தியம் அந்த நொடியில் இருந்து இந்த நொடி வரைக்கும் எதையும் தொட்டதில்லை...

என்று பூமிநாதன் சொன்னதும் பூங்குழலி மீண்டும் தன் விழிகளை அந்த பூமியிடம் இருந்து விளக்கி...நம் பூமி மாதாவை நோக்கி தலை குனிந்தவள்...அவனின் அடுத்த வார்த்தைக்காக காத்திருக்க..

actually எனக்கு இந்த பொண்ணு பார்க்குற formality எல்லாம் பிடிக்காது... அப்பா அவரோட friend வீட்டுக்கு ஜஸ்ட் காபி குடிக்கிறது போல வந்தா போதும்னு சொன்னாரு.. கண்டிப்பா உனக்கு இந்த மாதிரி ஒரு situation நெருடலா இருக்கும்னு எனக்கு தெரியும்...

அப்டி எல்லாம் இல்ல... நேத்து சந்திரன் மாமா எங்க அப்பாகிட்ட இன்னைக்கு உங்கள அழைச்சிட்டு வரேன்னு சொன்னாரு...அவருமே நீங்க நட்பின் ரீதியா தான் பாக்க வரீங்கன்னு சொன்னாரு..

என்று அலட்டால் இல்லாமல் பூங்குழலி சொன்னதும் தன் மூக்கு கண்ணாடியை கழட்டிய பூமிநாதன் தன் pant பாக்கெட்டில் இருந்து எடுத்த கைக்குட்டையில் தன் கண்ணடியை துடைத்தபடி அடுத்த கேள்வியை அவளை பார்த்து கேட்க..

பூமி - நீ டீச்சரா....

பூங்குழலி - இல்ல நான் மதுரை ஹாஸ்பிடல்ல head nurse

என்று பூங்குழலி சொன்னதும்... தன் கண்ணாடியை மீண்டும் அணிந்து கொண்டவன் அவன் புருவத்தை மேல் உயர்த்தியப்படி

but நான் நம்ம வீட்டுக்குள்ள நுழையும் போது ஒரு குட்டி பாப்பா உன்னை டீச்சர்ன்னு கூப்பிட்ட மாதிரி கேட்டுச்சு..

என்று பூமிநாதன் கேட்டதும் அவள் மீன் விழிகள் தண்ணீரே இல்லாமல் நடனமாடும் தோரணையோடு அவன் வினாவிற்கு விடை அளிக்க..

பூங்குழலி - நான் நம்ம தெரு பிள்ளைகளுக்கு danceம் பாட்டும் கத்து தருவேன்

பூமி - really...நீ dance ஆடுவியா...
என்று ஆச்சிரியமாக பூமி கேட்க...

அவளின் கயல் விழிகள் நளினத்துடன் பேசும் அழகை மெய் மறந்து பார்த்து கொண்டு இருந்த பூமிக்கு பூங்குழலியை அந்த நொடியே கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...

மீண்டும் இவர்களின் இடையே மௌவனம் தலை தூக்க....இவர்களின் இடைவெளியை குறைக்க எட்டு வயது சிறுமி மாடிக்கு வர...

டீச்சர் தாத்தா இந்த mixturai இந்த சார் க்கு தர சொன்னாரு.....

என்று பாவாடை சட்டையில் இரட்டை ஜடையுடன் மழலை மாறாமல் சொன்ன குட்டி பெண்ணை பார்த்து பூமிநாதன் அவன் அருகில் அவளை அழைத்தவன்

பூமி - உன் பெயர் என்ன பாப்பா...என்று இவன் கேக்க

என் பெயர் கலையரசி..
என்று குட்டி பெண் சொன்னதும் பூமிநாதன் அவள் கன்னத்தை ஆசையாக கிள்ள போனவனின் கரங்களை தடுத்த கலையரசி

கலை - சார் தொடாமல் பேசுங்க....நமக்கு தெரிஞ்சவுங்களா இருந்தாலும் நம்மை தொடும் உரிமையை நாம் தான் தரணுமே தவிர அவர்களே எடுத்துக்க கூடாதுனு எங்க பூ டீச்சர் சொல்லி இருக்காங்க....

என்று குட்டி பெண் கலையரசியின் சொற்களில் இருந்த ஆழத்தை உணர்ந்த பூமிநாதன் ஆண் பெண் என்ற ஆங்காரம் இல்லாமல்

பூமி - I am Sorry.... என்னை மன்னிச்சுடு பாப்பா...

என்று அவன் தாழ்மையுடன் பேசும் பணிவில் முதல் முறையாக பூங்குழலியின் இதயத்தில் பூமி மீது மரியாதை ஏற்பட்டது ..

பூமி - சரி என்னை பற்றி மேற்கொண்டு சொல்ல வேற ஒன்னும் சுவரசியமா இல்ல..நீ என்கிட்ட எதாவது கேக்கணும் சொல்லணும்ன்னு ஆசை படுறியா...
என்று பூமி கேட்ட அடுத்த நொடி..

பூங்குழலி - ஆமா.... நான் உங்ககிட்ட மூணு கேள்வி கேக்கணும்..

பூமி - ஏன் அதுக்கு மேல கேள்வி கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா

பூங்குழலி - தேவையில்லாத பதில்கள் ஆயிரம் இருந்தாலும்.. எனக்கு தேவையான மூன்று கேள்விக்கு உண்டான பதில் மட்டுமே எனக்கு போதுமானது..

அருமை...
 
Top