வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

🏹36.தீரா உலா தீரா கனா - விமர்சன திரி

தீரா உலா தீரா கனா

விமர்சனம்

ஸ்ருதி சொந்த பந்தம் யாரும் இல்லாமல் ஆசிரமத்தில் வளரும் பெண்.

அபர்ஜித் பெரிய ராஜ வம்சத்தை சேர்ந்தவன் ஸ்ருதியை பார்த்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொண்டு அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு அவளிடம் கேட்க முதலில் மறுத்தாலும் பிறகு அவனோட காதலை ஏற்றுக் கொண்டு கல்யாணத்திற்கு சம்மதிக்கிறாள்.

ஆனால் அபர்ஜித்தின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு அனாதை பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் அபர்ஜித்தின் அத்தையும் அவரது மகளும் அபர்ஜத்தின் சொத்துக்காக அவனை கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டு ஸ்ருதியை கொல்ல வேற முயற்சி பண்ணுகின்றனர்?

இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி அபர்ஜித் ஸ்ருதியை கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்க வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்கின்றான். அவர்ஜெட்டை பிரிந்து தனிமையில் இருக்கும் இந்த சமயத்தில் ஸ்ருதி வளர்ந்த ஆசிரமத்தின் தலைவி மூலமாக அவளுக்கான உறவுகளைப் பற்றிய விவரங்கள் தெரிய அடிக்கடி அவர்களை சந்தித்து பேசுகிறாள் .

இதனால் அபர்ஜீத்துக்கு ஸ்ருதியின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் அவளை வார்த்தையால் ரொம்ப காயப்படுத்துகிறான்.

ஸ்ருதியோட அந்த உறவுகள் யாரு? அவர் அபர்ஜுத்தின் சந்தேகம் அவர்களின் வாழ்வில் எவ்வாறு புயலை வீசுகிறது என்பதை மீதி கதையில் ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லி இருக்காங்க.

அபர்ஜித் ஸ்ருதி கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசி இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது.

நிச்சயமா ஸ்ருதிக்கு இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

கதை கரு ரொம்ப நல்லா இருந்தது.

வாக்கிய பிழைகள் எழுத்து பிழைகள் நிறைய இருந்தது. அவற்றைத் தவிர்த்து இருந்தால் கதை இன்னும் ரொம்ப அருமையாக இருந்திருக்கும்

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#பிரம்மாஸ்திரம்_2024

#கௌரிவிமர்சனம்

#தீரா_உலா_தீரா_கனா….

இதுவும் காதல் கதை தான்…..

ஜித், அரண்மனை வாரிசு….இல்லத்தில் வளர்ந்த பெண் ஸ்ருதி மீது காதல்….

ஜீத், காதலுக்கு எதிர்ப்பு வருது அவன் அம்மா மூலமா….

அவன் தாத்தா துணை கொண்டு கல்யாணமும் பண்ணிரான் ஸ்ருதியை…..

இதுக்கு அப்பறம் உண்மையில் ஸ்ருதி யாருனு தெரிய வர…..

குடும்பத்தில் எல்லோருக்கும் அதிர்ச்சி….

முதலில் அவளுக்கே அதிர்ச்சி தான்….

இதை ஜித்யிடம் சொல்லாமல் மறைக்க, அவனுக்கோ அவனோட உரிமை உணர்வு உரிமை கொண்டு எழ…..

வார்த்தைகள் தடித்து….வாழ்க்கையை இழுத்து மூட வெச்சிருது…..

ஜித், பேசினது ரொம்ப ரொம்ப அதிகம் தான் அப்படினாலும், இவனுக்கு கிடைத்த தண்டனை ரொம்ப பெருசு🤧🤧🤧🤧🤧….

என்னால தாங்கவே முடியலை 🥺🥺🥺🥺….

அவ மறைக்க போய் தானே என்ன பேசரோம் அப்படினு தெரியாம பேசிட்டான்…

அதுக்குன்னு இப்படியா …..

யோவ் ரைட்டர்😬😬😬😬😬….

ஸ்ருதி, அவனுக்கு கொஞ்சமும் குறைவில்லா காதல் தான் இவளதும்…..பட் ஏன் மா இப்படி…..

அச்சோ….இன்னும் இதில் இருந்து என்னால வெளி வர முடியல….

எல்லா தப்பும் செய்தா அந்த வில்லி ரம்யாக்கு எல்லாம் நல்லது செய்யரிங்க…..

ஆன 🥺🥺🥺🥺

இப்படி செய்து இருக்க வேனாம் ரைட்டர் நீங்க…..எனக்கு ரொம்ப வருத்தம் பா…..

என்னமோ போங்க…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
 
Top