வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இராவணனே என்னை சிறை எடு - டீசர் 3

Status
Not open for further replies.
டீசர் 3
1.jpg
பெண்ணவளின் மென் கரங்களும், தளர்ந்த கால்களும் அமர்ந்திருந்த நாற்காலியுடன் பிணைக்கப்பட்டிருக்க, அவளது உடல் அதீத பயத்தில் வேகமாக நடுங்கி கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கே கருப்பு நிற கோர்ட் சூட்டில் கம்பீரத்துடன் அவள் முன்பு வந்து நின்றான் அந்திரன் ராவண ஈஷ்வரன்.
உணர்வுகள் துடைக்கப்பட்ட இறுக்கமான முகத்துடன், தன் முன் இரும்பு மனிதனை போல நின்றிருந்த ராவணனை பார்க்கப் பார்க்க அஜூதியாவுக்கு கண்களிலிருந்து கண்ணீராக வந்தது. எவ்வளவு நம்பிக்கை எவ்வளவு காதல் அத்தனையும் ஒரு நொடியில் தரைமட்டம் ஆகிவிட்டதே, அஜூதியாவுக்கு மனம் ஆறவே இல்லை.

இதயத்தை யாரோ நெருஞ்சி முள்ளால் தொடர்ந்து குத்திக்கொண்டே இருப்பது போல வலித்தது. என்ன செய்ய? தன் விதியை எண்ணி வருந்தியவள் அமைதியாக அவனைப் பார்த்தாள். கருப்பு நிற கோர்ட் சூட்டில் வழமை போல அவளது மனதை கொள்ளையடித்து கொண்டிருந்தான்.

என்ன கொள்ளையடிக்கிறானா! முட்டாளா நீ! என அவளது மனம் அவளைச் சாடியது. ஆம் முட்டாள் தனம் தான்! புரியாமல் இல்லை ஆனால் மானம் கெட்ட மனது ஒன்றை எண்ணிவிட்டால் அதிலிருந்து மாற மறுகின்றதே, தன் நிலையை எண்ணி தானே மிகவும் வருந்தியவள், இப்பொழுது முயன்று அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்.

அப்பொழுது தனக்கு போடப்பட்ட இருக்கையைத் தன் ஒற்றை கரத்தால் தூக்கி அவள் முன்னால் போட்டு அதில் வந்து அமர்ந்தவன் அவளைப் பார்த்து,
"ஆர் யு ஓகே" கேட்டானே ஒரு கேள்வி அதில் விழுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் கண்கள் வலியில் சிவந்திருக்க, அப்பொழுது தான் யோசித்தவன் உடனே தன் பணியாளுக்குக் கண்களைக் காட்ட அஜூதிய்யாவின் கைகளும் கால்களும் விடுவிக்கப் பட்டது.

நீண்ட நேரம் பிணைக்கப்பட்டிருந்ததால் மணிக்கட்டு பகுதியில் சிவந்து வலி ஏற்பட்டிருக்க, அதை மெதுவாகத் தடவி விட்டவள், மறந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் அவன் அவளைத் தான், பார்த்துக்கொண்டிருந்தான்.

"ஏதாவது சாப்பிடுறியா" என்ற அவனது மென்மையான குரல் அவளை எதோ செய்யக் கண்களை இறுக்கமாக மூடிகொண்டவள்,

"வேண்டாம்" என்று மறுக்க,

"நிமிர்ந்து என்னைப் பாரு அஜூதியா" மென்மையாகத் தான் அழைத்தான் ஆனால் அந்தக் குரலில் "பார்" என்ற கட்டளை ஒளிந்திருந்தது.

மெதுவாக நிமிர்ந்து அவன் விழிகளைப் பார்த்தாள். அவனும் பார்த்தான். அவளைப் பார்த்தபடியே, "பென்ட்ரைவ் எங்க" என்று அவளிடம் வினவினான்.

"என்கிட்ட இல்லை" 'இவன் கேட்பானாம் நான் தூக்கி கொடுக்க வேண்டுமாம் ஹ்ம்' கோபம் வந்தது ஆனாலும் அடக்கிகொண்டவள் நிதானமாகவும் திடமாகவும் பதில் கூறினாள். அந்திரனின் கைமுஷ்டி இறுகியது.

"பிடிவாதம் பண்ணிட்டு இருக்க நீ" எனத் தன் பற்களைக் கடித்தபடி கூறினான். அவள் அமைதியாக இருந்தாள்.

'கொஞ்சம் சத்தமாகப் பேசினாலே கீழே விழுந்துவிடுபவள் போல இருந்து கொண்டு என்னிடம் பொய் சொல்ல எவ்வளவு துணிச்சல் ஹ்ம் இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இவள் பொய்யை நான் நம்பிவிடுவேனா என்ன?' எரிச்சலையும் கோபத்தையும் தாண்டி, இவ்வளவு நடந்தும் பிடிவாதமாகச் சொன்னதையே சொல்லும் இவள்மீது வந்த ஆச்சரியத்தை வெளிக்காட்டாதவன், தன் கண்களை இறுக்கமாக மூடித் திறந்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தவளை ஒருகணம் பார்த்தவன், தன் கரம் அசைத்துத் தன் சகாக்கள் அனைவரையும் வெளியே செல்லுமாறு செய்கை செய்தவன், அப்படியே சிசிடிவி இணைப்பையும் துண்டிக்குமாறு தன் விரல் அசைத்துக் கூறினான்.

அனைவரும் செல்லும் வரை அமைதியாக இருந்தவன் அவர்கள் சென்றதும், தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்த அவளைப் பார்த்து,

"லுக் அஜூதியா" என்று அழைத்தான். அவனது குரல் கேட்டும் அவள் செய்விகொடுக்காமல் அமர்ந்திருக்க, தன் கரத்தைத் தனது தொடையில் குத்தி கோபத்தை அடக்கியவன்,

"பாருன்னா பாரு" என்றான் கண்டிக்கும் குரலில்.

"அஜூதியா பென்ட்ரைவை கொடுத்திரு நான் உன்னை இங்க இருந்து தப்ப வைக்கிறேன்" மிகவும் நிதானமாகக் கூறினான்.

"என்கிட்ட இல்லை" சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினாள்.

"பொய் சொன்னா எனக்குச் சுத்தமா புடிக்காது" தன் கண்கள் இடுங்க அவளைப் பார்த்து எச்சரிக்கும் குரலில் கூறினான்.
அவன் பார்வையும் அவனது குரலும் அவளுக்குள் அதிர்வை ஏற்படுத்தியது. அவள் கொண்ட பயம் அவளது முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அதை உள்வாங்கிக் கொண்டவன்,

"அஜூதியா உன்னைக் காயப்படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை, பென்ட்ரைவ் எங்க இருக்குனு சொல்லு" தன்மையாக வினவினான்.

"தெரியாது" தலையை அசைத்தபடி கூறினாள், அவ்வளவு தான் இவ்வளவு நேரம் அந்திரன் இழுத்துவைத்த பெருமையெல்லாம் காற்றில் பறக்க, கோபத்தில் அவன் முகம் அகோரமாய் மாறியது. அவளைத் தீப்பார்வை பார்த்தபடி, தான் அமர்ந்திருந்த நாற்காலியைப் பின்னுக்கு தள்ளியபடி எழுந்து நின்றவன், துப்பாக்கியை அவளது நெற்றியில் வைத்து,

"இரெண்டு நிமிஷம் டைம், உண்மைய சொல்றியா இல்லை, இப்பவே என் கையால செத்து போறியா"என்று கண்கள் சிவக்க கத்தினான்.

"ஐ ட்ரஸ்ட்டட் யு" கண்களில் நீர் வழிய கூறினாள், பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவனால் அதற்கு மேல் அவளை வற்புறுத்த முடியவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன், அவளை என்ன செய்வதென்று புரியாமல் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

"ராவணன் ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க" மெல்ல முணுமுணுத்தாள். பதில் பேசாமல் பல்லைக்கடித்தபடி தான் நின்றிருந்த வாக்கிலே பக்கவாட்டாகத் திரும்பி அவள் முகம் பார்த்தான்.

"நீங்க ரொம்ப நல்லவ..." "தப்பு ரொம்ப ரொம்ப கெட்டவன், நீ நினைக்கிறதை விட மோசமானவன்" அஜூதியா முடிப்பதற்குள் அவளை இடையிட்டு அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் இருபுறமும் தன் கரங்களை ஊன்றிப் பயங்கரமாகக் கத்தினான் அந்திரன் ராவணா ஈஷ்வரன்.

அதீத கோபத்தில் சிவந்திருந்த அவனது விகாரமான முகத்தையும், அவனின் அடிக்குரலின் சீற்றத்தையும் கண்டவளுக்கு உடல் நடுங்க துவங்க, கண்ணீர் நிற்காமல் ஓடியது.
 
Status
Not open for further replies.
Top