வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தளிர் மலரே ம(த)யங்காதே!! - டீஸர்

Status
Not open for further replies.
ஹாய் டோலீஸ்…😍😍😍


கடல்ல சேரும் ஆறு…

இந்தா வந்துட்டேன் அஸ்திரம் பதினாறு…😜😜😜


எல்லாரும் டீ ஆத்துறாங்கனு ஒரு ஆசையில நானும் உள்ள நுழைஞ்சிட்டேன். ஏதாவது குறை இருந்தா இதமா சொல்லுங்க, பிடிக்கலைனா கதையைவே தூக்கிட்டு ஓடுருறேன்… கொஞ்சம் பயந்து வருது…


எதுவா இருந்தாலும் பார்த்து பதமா சொல்லுங்க… மீ பாவம்… 🙊🙊🙊🙊


கதை தலைப்பு இருக்க நெட்டு எல்லாம் காலி பண்ணி கிரியேட் பண்ண வீடியோவ கடைசி வரை பார்த்து தெரிந்து கொள்ளும்படி அன்புடன் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். (எவனாவது அடிச்சு விட்டு போன இரத்தம் கக்கி சாவான்).சிறு துளி இப்போது….

பெரு வெள்ளம் எப்போதோ…"இளம் விளம்பர பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அருணன் சம்ரித்தின் அந்தரங்க லீலைகள். மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் தகாத உறவு" என்று அலங்கோலமான பல புகைப்படங்கள் அன்றைய உள்ளூர் முதல் ஆங்கில நாளிதழ்களின் முகப்பு பக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நிறைத்திருக்க,சமூக வலை தளங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றிலும் அவன் தான் அன்றைய காரசாரமான விவாதமாக போய் கொண்டிருந்தான்.இது போதாதென்று தெரிந்தவன், தெரியாதவன், நொந்தவன், வெந்தவன் எல்லாம் போன் போட்டு "சம்பவம் பண்ணா இப்படி தான் ஊர் உலகத்துக்கு தெரிய மாதிரி பண்றதா? பெரிய இடத்தில இருக்கிற ஆளுங்க பொண்ணு மேல கை வைக்கிறது தப்பில்ல தான். இருந்தாலும் மூனு பிள்ளை பெத்த பொம்பளைய போய்???" என்று ஆபாச கேள்விகள் கேலிகளாக செவியை நாரடிக்க, எதையும் மறுத்து பேசும் நிலையில் அவன் இல்லையே.அந்த படங்கள் யாவும் பொய்யுமல்ல, அது இல்லையென்று அவன் மறுக்கவும் இல்லை. அதை நினைக்கையில் தன் மீதே வெறுப்பு தான் வந்தது.கண்களில் சிவப்பேறி நின்றவன் கரங்களே பூவுடலின் குளுமையை உணர்ந்த ஸ்பரிசம் இப்போதும் விரல்களில் உறைந்து இருக்க, "ச்ச…" என்று அந்த உணர்வை விரட்ட போராடியவன் கண்களை மூடிய இமை பொழுதில் கூட ஆடை கலைந்த அரைகுறை பெண்ணுடல் தான் அவன் மனக் கண்ணில் நிறைந்து நின்றது.பட்டென்று கண்களை திறந்தவன் "ஆ ஆ ஆ…" என்று தலையை பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.நடு ஹாலில் கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவன் கைகளில் இருந்த செல்போனோ அவன் கையின் அழுத்தம் தாங்காது நெருங்கிக் கொண்டிருக்க, இதயத்தில் எரிமலையே வெடித்தது.எப்படி இப்படி ஒரு நிகழ்வு நடந்தது? இப்போது வரை அவனால் யூகிக்க முடியவில்லை. மாற்றான் மனைவி என்று தெரிந்தும் கை வைத்திருக்கிறான். நினைக்கையிலே அருவருப்பாக இருந்தது.


ஊராரின் கேள்விகளுக்கு முடங்கி போகும் ஆள் அல்ல தான் அவன். 'எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல' என்று கிலோ திமிரும், டன் கொழுப்பும் உடலின் ஒவ்வொரு இஞ்சிலும் கொட்டி கிடக்கும் ஆணவக்காரன் வாயடைத்து நிற்பதற்கு காரணம் தன்னவள் மீது கொண்டிருக்கும் காதல் தான்.மனமும் சரி, உடலும் சரி என் ருக்ஷாவிடம் மட்டும் தான் மயங்கும் என்று ஆணவம் கொண்டவன் மயக்கம் கொண்டானோ மாயோள் மீது. ஆண் உடல் ஆட்டம் கண்டு போனதோ உரிமையில்லா பெண் தீண்டலில்.இன்னும் இன்னும் இதயம் வலித்தது. 'நடந்தவைகளை அழிக்கும் சக்தி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ' என்று புத்தாக்க யுக்தனின் மூளை யோசித்துக் கொண்டிருக்க, அவன் முன் ஒரு பத்திரிக்கையை விசிறி எறிந்தார் அவன் தந்தை தாமோதரன்.


"என்ன அருண் இதெல்லாம்? கல்யாணம் பண்ண சொன்னா துரைக்கு வலிக்குது, இதுக்கெல்லாம் மட்டும் இனிக்குதோ?" என்று வார்த்தைகளை கடித்து துப்பிய தந்தையை கண்களை இடுக்கி தீயாய் முறைத்து வைத்தான்."என் புள்ளை எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டான். அந்த சிறுக்கி தான் பணத்துக்கு திட்டம் போட்டு மாட்டி விட்டிருக்கா. நீ இருக்க உயரமும், வசதி வாய்ப்பும் இந்த மாதிரி கழிசடைகள் கண்ண உருத்த தான் செய்யும். அதுக்கு தான் சொல்றேன் இனியும் தள்ளி போடாம கல்யாணம் பண்ணிக்கோ யா" என்று கிடைத்த கேப்பில் மகனுக்கு திருமண விருந்து வைக்க அவன் அன்னை தூண்டில் போட முயன்றார்.இது தான் தங்களுக்கான வாய்ப்பு என்று கோசலையும் தன் மகளை இழுத்து கொண்டு அவர்கள் பேச்சினுள் நுழைந்தவர், "மருமகன் சம்மதம்னு ஒரு பார்வை பார்த்தா போதும். இந்த நிமிஷமே என் பொண்ணு அவருக்கு கழுத்த நீட்டுவா" என்று சொன்னவரை தீர்க்கமான பார்வை பார்த்த சம்ரித்."ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல, அனைவர் முகத்திலும் ஆனந்த தாண்டவம் இருவரை தவிர.சம்மதம் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியவன், வாசலில் காத்திருந்த பத்திரிக்கையாளர்களை கடந்து அலுவலகத்துக்குள் வர,"சார்… சார்… உங்களுக்கும் அந்த லேடிக்கும் தகாத உறவு இருக்கிறதா சொல்றது உண்மையா? உங்க பதில் என்ன?" என்ற கேள்விகளுக்கு 'ஆமானு சொன்னா என்ன பண்ணுவ? மூடிட்டு போ' என்பது போல் திமிராக ஒரு பார்வை பார்த்து, கையை வாய் அருகே வைத்து சைகை செய்து விட்டு, வேக எட்டுக்களுடன் உள்ளே நுழைய மீண்டும் போன் அடித்தது.நடந்துக் கொண்டே போனை ஏற்று "ஹலோ" என்க,"சாம் உங்களுக்கு புதுசு புடிக்காது பூஜை போட்டது தான் பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அன்னைக்கு நான் அசிங்க பட்டு இருக்க மாட்டேன்ல. உங்களை ஆன்டி ஹீரோனு அன்னைக்கு அவ சொன்னது புரியல… இப்போ புரியுது" மார்டன் மடோனாவின் குரல் எள்ளல், கேலி என்று எல்லாம் கலந்து ஒலிக்க, கோபத்தில் போனை வீசி எறிந்தவன் "ராதிகா" என்று தான் கத்தி அழைத்திருந்தான் அவன் அசிஸ்டன்ட் ராதிகாவை.எப்போதும் அவன் குரலுக்கு ஓடி வந்து நிற்கும் அவள் தான் இன்று இல்லையே. அது கூட அவன் கோபத்தை மட்டுப்படுத்த முடியாது அவன் திண்டாட காரணமாக அமைய, திரும்பும் பக்கம் எல்லாம் அவனை துரத்தியது முந்தைய நாள் நிகழ்வு.ஆணவனுக்கே அந்த நிலை என்றால் அதை தாங்கி நிற்கும் பெண்ணின் நிலை?விதியோ? சதியோ? மானம் கெட்டு ஒடுங்கி நின்றாள் தளிரவள்.
 
#பிரம்மாஸ்திரம்_2023

#அஸ்திரம்_16

#தளிர்_மலரே_ம(த)யங்காதே

டீஸர் 2

"நாளைக்கு ஷூட்க்கு எல்லாம் ரெடியா? ஆர்டிஸ்ட் எல்லாம் ஓகே தானே?" என்று கடைசியாக ஒருமுறை உறுதி செய்ய கேட்டபடியே வேகமாக நடந்தவன் பின்னே எல்லாவற்றிற்கும் "எஸ் சார்… எஸ் சார்…" என்று ஆமா சாமி போட்டு ஓடி தான் வந்தாள் ராதிகா.

"ஹாங்… அப்புறம் அந்த புராடக்டோட சாம்பிள் பீஸ் வந்துடுச்சா?" என்றவன் நடை சற்று தளர, 'அய்யோ! செக் பண்ணிட்டு வானு சொல்லி இன்னும் இழுத்து அடிப்பாரோ!' என்ற அல்லல் அல்லி விழிகளில் தோன்றி மறைந்தது. "எல்லாம் ஓகே சார். செக் பண்ணிட்டேன்" என்று அவசர அவசரமாக சொன்னாள்.

நிதானமாக நின்று அவள் அவசர விழிகளை கவனித்தவன், "நாளைக்கு ஏதாவது சொதபிச்சு உன்ன தான் தூக்கி போட்டு மிதிப்பேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன், வேக நடையுடன் முன்னே சென்று விட்டான்.

செல்லும் அவன் முதுகை பார்த்தபடி "ஸப்பா… மிடில" என்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டவள் சேலையில் வேகம் தடைபட, கால்கள் பின்ன 'விழுந்து வாரினாள் கூட இரக்கம் பார்க்காது வீல் சேரில் இழுத்து வந்தாவது வேலை வாங்குவான். நமக்கு தான் கஷ்டம்' என்று ஒவ்வொரு அடியையும் பார்த்து தான் எடுத்து வைத்தாள்.

தடுக்கி விழுந்தால் தூக்கும் கரங்களை விட, தூற்றும் வாய்கள் தான் அதிகம். அதிலும் கைம்பெண் என்றால் ஒவ்வொரு அடியிலும் ஆயிரம் குழிகள் இருக்குமே.

ஆம் ராதிகா… 26 வயது இளம் கைம்பெண். மூன்று குழந்தைகளுக்கு தாயும் கூட.

ஏற்கனவே மணி இரவு பத்தை தாண்டி விட்டது. இதற்கு மேல் நேரம் கடத்த உடலிலும், மனதிலும் திராணி இல்லை. ஆறு மணி தாண்டினாலே 'விளக்கு வச்ச பிறகு அப்படி என்ன வேலையை பார்த்து கிளிக்கிறா?' என்று வார்த்தைகள் வசம் இல்லாமல் வரும்.

மற்றவர்களின் கற்பனை குதிரைகளுக்கு தீனி போடும் நிலை அவளுக்கு. சாமியாராக இருந்தாலும் இரவு பூஜை எப்படி இருந்தது என்று கேட்கும் வஞ்சக உலகம். ஊர் வாயை பார்த்தால், தன் பிள்ளைகள் வயிற்றை யார் நிரப்புவது? வாங்கிய கடனை யார் அடைப்பது?

தன் படிப்பிற்கு இவன் அளவு சம்பளம் எவனும் தர மாட்டான் என்று இன்னும் இங்கே ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவனோ அவளுக்கே விடா கண்டன், கொடுக்கும் சம்பளத்திற்கு சக்கையாக பிழிந்து வேலை வாங்கி தான் யாரையும் அனுப்பி வைப்பான்.

நல்ல சம்பளம் என்று இரத்த காட்டேரியிடம் அசிஸ்டன்டாக சிக்கி தன் தூக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள் ராதிகா.
 
ஹாய் டியர்ஸ்... ❣️❣️❣️

திஸ் இஸ் ஜக்... 😁😁😁

#பிரமாஸ்திரம்_2023

#அஸ்திரம்_16

#தளிர்_மலரே_மயங்காதே!!

டீஸர் 3

"நீ ஏன் மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது? உனக்கு ஒன்னும் வயசு ஆகிடலயே… ஒரு வாழ்க்கை துணை இருந்தா உனக்கும் பாதுகாப்பு தானே. உன் புள்ளைங்களுக்கும் தகப்பன் இருந்த மாதிரி இருக்கும்" என்று அக்கறையாக சொன்னவரை அமைதியாக ஒரு நொடி பார்த்த ராதிகாவோ செட் புரோபர்டியை சரி செய்தபடியே, "ரெண்டு பொம்பள புள்ளைங்கள வச்சு இருக்கேன் கா… என் பாதுக்காப்புக்குனு சொல்லி கண்டவன எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு அதுங்க வாழ்க்கையை கெடுத்திட கூடாதே."

"அதெல்லாம் எதுவும் ஆகாது. எனக்கு தெரிஞ்சு ஒரு பையன் இருக்கான். முதல் தாரம் எவனோடவோ ஓடி போயிடுச்சு. ரொம்ப நல்ல பையன். உன் பிள்ளைகளை கூட அவன் பிள்ளைகள் மாதிரி பார்த்துப்பான்." என்று வாயெல்லாம் பல்லாக அவர் சொல்ல,

"எனக்கு மாதிரி எல்லாம் வேணாம் க்கா… எங்க வாழ்க்கை இப்படியே நல்லா தான் இருக்கு. நாங்க இப்படியே இருந்துட்டு போறோம்."

"அது இல்ல ராதிகா. வேலியில்லா பயிருனு தெரிஞ்சா கண்டவன் எல்லாம் விளைச்சல் பார்க்க நினைப்பான். நல்லதுக்கு சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே" என்று விடாது அவர் நோண்ட,

'இந்த அம்மாவுக்கு என்ன லாபம்னு தெரிலையே!' என்று அவளுக்கும் சிறிது கோபம் எட்டி பார்த்தது. பல்லை கடித்தவள், மற்றைய புறம் திரும்பி அலங்கரித்த பூக்களை சரி செய்தபடியே, "மாமா கொசு தொல்லை தாங்கல. உன் சக்தியை யூஸ் பண்ணி விரட்டி விடேன்" என்று மெல்லிய குரலில் ரகசியம் பேச,

"பாப்பா இவலாம் என் ரேஞ் கிடையாது நீயே விரட்டு" என்று அவளவன் குரல் மட்டும் அல்ல அவனும் அங்கு தான் இருந்தான் யார் கண்ணுக்கும் புலப்படா அருவமாக.

"அப்படிங்கிற" என்றவள், "ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிடலாம் க்கா. பையன் நல்ல வேலைல இருக்கணும். மாசம் ஒரு ஐம்பதாயிரம் சம்பாதிக்கனும். கருப்பா இருந்தாலும் பரவாயில்ல, இந்த தொப்பை தொந்தி இல்லாம ஃபிட்டா, பார்க்க அழகா இருக்கணும்" என்று அவள் மணமகனுக்கான தகுதி லிஸ்ட் போடும் போதே முகம் சுருங்கி போனது அவருக்கு.

"ரெண்டாவது கல்யாணத்துக்கே இவ்வளவு கண்டிசனா? இப்படியெல்லாம் எதிர் பார்த்தா எவன் உன்னை கட்டிப்பான். இந்த நிலைல இருக்கும் போதே திமிர் காட்டுறியே. நீயெல்லாம் புருஷனோட நல்லா வாழ்ந்திருந்த உலகத்தையே அழிச்சுருப்ப. பாக்கியாளன் உன் தொல்லை தாங்க முடியாமலே போய் சேர்ந்து இருப்பான்" என்று அவர் கரித்துக் கொட்ட,

"எனக்கு புருஷன் வேணும், என் புள்ளைங்களுக்கு தகப்பன் வேணும்னு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைங்கனு நான் கேட்டேனா? நீங்களா வந்து கேட்டீங்க… சரி இன்ன மாதிரி வேணும்னு சொன்னா, திமிர் பிடிச்சவ, அகங்காரியா? ஒரு பொண்ணு இந்த மாதிரி தான் ஒருத்தன் வேணும்னு கேட்டாலும் குத்தம், எனக்கு எவனும் வேணாம்னு ஒதுங்கி போனாலும் குத்தம். ரெண்டாவது கல்யாணம் எல்லாம் உடம்பு சுகத்தை தீர்த்துக்க மட்டும் தான்னு முத்திரை குத்துற உங்களை மாதிரி ஆட்களோட கரிசனம் எங்களுக்கு வேணாம். ஏன் முதல் கல்யாணத்துல அந்த தேவை இருக்காத? இல்ல அவன்லாம் ஃபர்ஸ்ட் நைட்ல பாலை குடிச்சிட்டு தூங்குறானா?

சும்மா வேலை நேரத்துல வந்து அக்கறைங்கிற பெயர்ல கடுப்பெத்திட்டு" என்று அவள் கடுகாய் பொரிந்துக் கொண்டிருக்கும் போதே "ராதிகாஆஆஆ" என்ற குரல் அந்த செட் முழுவதும் உச்சஸ்தானியில் எதிரொலித்தது.

வேறு யார் குரல் அந்த இடத்தில் ஓங்கி ஒலிக்க போகிறது? சாட்சாத் அவளின் ராட்சசன் குரல் தான் அது.

"எஸ் சார்" என்று அடித்து பிரண்டு ஓடி வந்து நின்றாள் சம்ரித் முன்பு.

"ஏன் இன்னும் அந்த மாடல் ஃபீல்டுக்கு வரல?" என்று அவள் மீது எரிந்து விழ,

"இதோ போய் பார்க்கேன் சார்" என்றவள் அடுத்த கணமே அவன் கண்ணை விட்டு ஓடி மறைந்திருந்தாள்.

கேரவன் அருகே வந்தவள், "மாமா இந்த மனுஷனை ஏதாவது பண்ணனும் மாமா. சும்மா எவன் என்ன பண்ணாலும் என்னை பிடிச்சு ஏறுறார்?" என்று குறை சொல்ல,

அவளுடன் நடந்த பாலாவோ "பண்ணிடலாம் பண்ணிடலாம்" என்று மண்டையை ஆட்டி சொல்ல,

"நீ என்ன பண்ற? இப்படி மண்டையை மண்டையை தான் ஆட்டுற. கோதாவுல இறங்கி எல்லாரையும் தெறிக்க விடு மாமா"

'பாப்பா அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா? உனக்கு யாரு சம்பளம் தர்றது. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் அவன் உயிர் மிஞ்சுது. இல்ல… எப்பவோ என் சக்தியால அவனை உண்டு இல்ல பண்ணியிருப்பேன்."

"என்னவோ மாமா இப்போதைக்கு எதுவும் பண்ண மாட்ட, நான் தான் கிடந்து சாகணும்" என்று அவள் பாலாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே கேரவன் விட்டு விளம்பர நடிகை வெளியே வர, வெளியே தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தவள்,

"யார் கிட்ட பேசிட்டு இருக்க?" என்று தான் கேட்டாள், அந்த இடத்தை சுற்றி பார்வையை அலைய விட்ட படி
 
ஹாய் டியர்ஸ்... 😍😍😍

திஸ் இஸ் ஜக்... 😜😜😜

#பிரமாஸ்திரம்_2023
#அஸ்திரம்_16
#தளிர்_மலரே_மயங்காதே

Every one போட்டா நிறைய பேருக்கு தொல்லையா இருக்கு. யாரையெல்லாம் tag பண்ணனும் சொன்னா எழுதி வச்சி அவங்களை மட்டும் tag பண்ணுவோம் என்று சங்கத்தில இருந்து முடிவு எடுத்து இருக்கோம். யாரையாவது tag பண்ணனுமா சொல்லுங்க... 🤗❣️❣️

அப்புறம் போட்டி id la iruntu யாருக்கும் frirnd request கொடுக்க கூடாது சொல்லிருக்காங்க...😔😔😔 நாங்க தான் கொடுக்க கூடாது. நீங்க கொடுக்கலாம். சோ உடனுக்குடன் update பெற... ஜில் ஜங் ஜக் id ya friend ah ஏத்துக்கோங்கோ... ☺️☺️☺️

இன்னும் சற்று நேரத்தில் எபியோட வரேன்.

இப்போ.........

டீஸர்....

காலை 6 மணிக்கு ஷூட். இவள் ஐந்து மணிக்கே சென்று அனைத்தையும் சரி செய்தாக வேண்டும். வேம்புலி டான்னு 5.50க்கு 'ஷாட் ரெடியா?' என்று வந்து நிற்பான். அந்த நேரம் கிடந்து எதையாவது உருட்டிக் கொண்டிருந்தா, முருங்கை மரமே இல்லாமல் வேதாளமாக மாறி அவள் கழுத்தில் ஏறி அமர்ந்து டிரில் எடுக்க ஆரம்பித்து விடுவான்.

இந்த இரண்டு வருடத்தில் எத்தனை அனுபவம் கடந்திருப்பாள் அவனிடம். வேலை கரக்டா இருந்தா ஆளு பனி கரடி, கொஞ்சம் பிசகுனிலும் கொரில்லாவாக மாறி கிடைக்கும் ஆளை எல்லாம் தலை மேல் தூக்கி சுத்தி கண் காணா தூரம் வீசி விடுவான்.

அவனால் தூக்கம் மட்டுமல்ல, அவள் துக்கம் கூட அப்பாய்ன்மென்ட் கிடைக்காமல் வெளியே நிற்கிறதே. பாலாவின் இறப்பு கொடுத்த வலியை மறந்து புது வழி அமைத்து பயணிக்கும் பாதையில் இனி அவனால் தான் தினம் தினம் வலிகளை சுமக்க போகிறாள் என்று அறியாது எந்நாளும் போல் தன் வேலைகளை எல்லாம் முடித்து, குளித்து வந்தவள், சேலைக்கு உண்டான மதிப்பையே கெடுக்கும் அளவிற்கு, ஒரு இன்ச் கூட இடை, வேறு அங்கம் தெரியாது, இழுத்து பிடித்து சேஃப்டிபின் குத்திக் கொண்டாள்.

சுடிதாரில் உல்லாசமாக வலம் வந்தவள் சாக்கு பொதி போல சேலையை சுத்திக் கொண்டு ஓட கூட அவன் தான் காரணம். அவள் அரக்கன், அருணன் சம்ரித்.

அப்படி என்ன பண்ணான்... 🤔🤔🧐🧐🤫🤫

Epi la பார்க்கலாம்.. 🤐🤐🤐
 
ஹாய் dears... 😍😍😍

மீண்டும் நானே வருவேன்... ❣️❣️❣️

உடல் நலம் பற்றி விசாரித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி...

இன்னும் முழுசா சரியாக ல, ஆனா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்.. அதான் வந்துட்டேன். முடிஞ்ச அளவு வேக வேகமா அத்தியாயம் கொடுக்க முயற்சி பண்றேன்.

#பிரமாஸ்திரம்_2023

#அஸ்திரம்_16

#தளிர்_மலரே_மயங்காதே

டீஸர்... 😜😜😜

மீண்டும் அவள் எண்ணை பார்த்தவனுக்கு மன சோர்வு நீங்கி கோபம் தான் வந்தது.

"என்ன?" வல்லுநாயாக விழுந்தான்.

"கொரியன் கம்பெனி கூட மீட்டிங் இருக்கு சார்"

"கேன்சல் பண்ணு…"

"சவுத் ஆப்ரிக்கா டீலர்ஸ்…" என்று அவள் ஆரம்பிக்கும் முன்னமே,

"என்ன சட்டிக்குள்ள கவுந்துட்டானா?" என்று அவன் எரிந்து விழ,

ங்ஙே' என்று விழியை சுருக்கி தலையை பின்னுக்கு இழுத்து விழித்துக் கொண்டே நின்றிருந்தாள் ராதிகா.

'வேலைனு வந்துட்டா வெள்ளகாரணுக்கே டஃப் கொடுப்பாரே நம்ம ஆளு. இன்னைக்கு ஏன் எதுவும் வேணாம் சொல்றார்?' என்று யோசித்தவள் அந்த நிமிடமாவது அதை அப்படியே விட்டு சென்றிருக்கலாம்.

ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்பிடுறாக, அமெரிக்கால மைக்கில் ஜாக்சன் கூப்பிடுறாக என்று படம் ஓட்டி, "நீங்க வரலைன்னா பனிரெண்டு கோடி லாஸ் ஆகிடும்" என்று சொல்ல,

"எத்தனை கோடி லாஸாகி, நான் தெருகோடில நின்னாலும் பரவாயில்ல, இன்னைக்கு எந்த மீட்டிங்கும் கிடையாது" என்று கத்தி விட்டு போனை வைத்து விட்டான்.

'உங்களுக்கு இருக்க சொத்துக்கு நீங்க ஏன் தெருகோடில நிக்க போறீங்க? உங்களை நம்பியிருக்க நாங்க தான் வேலை இல்லாம தெருவுல நிக்கணும்' என்று புலம்பிக் கொண்டே மீண்டும் அழைக்க,

ருத்ர மூர்த்தியாக மாறி விட்டான். கொஞ்ச நேரமாவது மனுஷன ஃபீல் பண்ண விடுறாளா? சும்மா நொய்யி நொய்யினு போன் போட்டுட்டு இருந்தா கோபம் வரும் தானே.

அதிலும் அருணனுக்கு மூக்கு நுனியில் தான் கோபம் இருக்கும். அவனே பொண்டாட்டி நினைப்புல ஒடுங்கிப் போய் அடைஞ்சி கிடந்தா, இவ தேர இழுத்து தெருவுல விடாம அடங்க மாட்டேன்னு கங்கணம் கட்டி தொல்ல பண்ண,

"என்ன டி உன் பிரச்சனை? இன்னைக்கு நான் எங்கேயும் வர முடியாது. இன்னொரு முறை போன் பண்ண? கழுத்த நெருச்சு கொன்னுப் போட்டுருவேன்" என்று மிரட்டி விட்டு வைத்துவிட்டான்.

"ச்ச…" என்று எரிச்சலாக போனை தூக்கி போட்டு விட்டு, இரு கைகளாலும் தலையை அழுந்த கோதிய படியே தன் கோபத்தை கட்டுப் படுத்த முயன்று கொண்டிருந்தான்.

இந்த மாதிரி தானே இவன் தினமும் மற்றவர்கள் மண்டையை காய விடுவான். இன்று அவள் அவனை வாட்டி வதைத்தாள்.

இன்னும் முடியல ராசா… உன்ன நிம்மதியா சோக கீதம் பட விடமாட்டேன் என்று மீண்டும் நானே வருவேன் என்று ராதிகா அழைக்க,

'இவள?' என்று நர நரவென பல்லை கடித்தவன், போனை அட்டன்ட் பண்ண, மவனே உனக்கு ஹலோ சொல்ல நேரம் கொடுத்தா தானே கேப்பே இல்லாம திட்டுவ என்று இந்த முறை அவள் முந்திக் கொண்டாள்.

அப்படி என்ன சொல்லிருப்பா???

Ud la தெரிஞ்சிக்கலாம்.. typing போய்ட்டு இருக்கு... விடியிற குள்ள வந்து விடும் என்று நம்புவோம். 😉😉😉
 
குழந்தை அம்மா எங்க?"


"ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க. புது இடம்ல, கூட்டத்தை பார்த்ததும் கொஞ்சம் பயந்திட்டான் போல" என்று சொல்லிக் கொண்டே பின்னால் வந்தவளை ஒரு நிமிடம் நடையை நிறுத்தி பார்த்தவன்,


"அதுக்கு தான் அழுவுறானு உனக்கு தெரியுமா? பசிக்காக கூட அழலாம். பீட் பண்ணு" என்று சொல்லி குழந்தையை அவளிடம் நீட்ட,


"அய்யோ!" என்று கைகளால் தன் மார்பை மறைத்துக் கொண்டவள், "என்னாலலாம் பீட் பண்ண முடியாது" என்று வெடுக்கென்று சொல்ல,


"காட்…" என்று கடுப்பாக தலையை திருப்பியவன், "நானே பண்றேன்" என்று திரும்ப,


"எத? நீங்களா? எப்படி?" என்று ஆர்வம் கலந்த சந்தேகத்துடன் கேட்டாள்.


அவள் கேள்வியில் சட்டென்று அவளை திரும்பி பார்த்தவன், "வந்து பார்கிறியா?" என்று கண்களை சுருக்கி கேட்க,


அவளோ "ச்சீ…" என்று தான் விழி விரித்து நின்றிருந்தாள்.


அதை கண்டவனுக்கு எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் தான் இருந்தது.


"மிதி வாங்காம, புரொடக்ஷன்ல இருந்து பால் கொண்டு வா" என்று விட்டு வேக நடையோடு குழந்தையுடன் அவன் சென்று விட,


"ச்ச… ஒரு நிமிஷத்துல அவரை தப்பா நினைச்சிடேனே" என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவன் கேட்ட பாலை கொண்டு வர சென்று விட்டாள்.


"இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் திங்கிங் தான் பாப்பா" என்று பாலா அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,


"ஆம்பளைங்களுக்கு குழந்தை பொறக்குதுனு எவ்வளவு நியூஸ் பார்க்கிறோம். அந்த மாதிரி நினைச்சிட்டேன்" என்றவள் கைகள் சூடான பாலை ஆத்திக் கொண்டிருக்க,


"நல்லா நினைச்ச போ" என்று மீண்டும் சிரித்த பாலாவை ஆசையாக பார்த்தாள் அவன் ஆருயிர் மனைவி.


"நீ எவ்வளவு ஸ்வீட்டா இருக்க மாமா. இந்த மனுஷன் ஏன் இப்படி இருக்கார்? எப்போ பாரு ஐம்பது கிலோ இரும்ப விழுங்கின போல உர்ருனு இருக்கார். வினோத ஜந்து போல இருந்தா சந்தேக பட தானே தோணும்" என்று சொல்லி கண் சிமிட்டி அவள் சிரிக்க,"ராதிகாஆஆஆ" மீண்டும் ஸ்பீக்கர் இல்லாமல் ஷெட்டை அதிர வைத்தது அவன் அழைப்பு."நான் கொஞ்சம் சிரிச்சிட கூடாது. மூக்கு வேர்த்துடும் கடுவன் பூனைக்கு" என்று சிடு சிடுத்தவள், வேக வேகமாக புட்டியில் பாலை அடைத்துக் கொண்டு ஓடினாள்.
 
Status
Not open for further replies.
Top