வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொறியில் சிக்கிட்டேனே செல்லம்மா! -கதை திரி

Status
Not open for further replies.
பொறியில் சிக்கிட்டேனே செல்லம்மா!

(என்னடா கத கொடுக்க வேண்டிய நேரத்துல டீசர் கொடுக்குறாளேன்னு நினைக்குரீங்களா.. என்ன பண்ண எல்லாம் அவன் செயல்.. லேட்டா வந்த பிரம்மாஸ்திரமாச்சே! அதான் அம்பு தொடுக்க நேரமாகுடிச்சு)


டீசர்..

நாயகன் : அஷ்வஜித்
நாயகி : " ? "


இரவு எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே புரியவில்லை, இருந்த களைப்பில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டான் போலும்.. அவன் உறக்கத்தை கலைக்கும் விதமாய் கதிரவன் தன் ஒளிக்கற்றை எனும் கரங்கள் கொண்டு அவன் வதனத்தை வருட, மெல்ல விழிகளை திறந்து கொண்டவன் கைகளை உயர்த்தி சொம்பல் முறிந்தவாறு எழுந்தமர்ந்தான் அஷ்வஜித்.

இமைகள் திறந்தவுடன் அவன் அனுமதியின்றி அவன் விழிகள் அவ்வறை முழுவதும் ஓர் நோட்டம் விட்டது..

விழிகள் எதை தேடியதோ அது விழிகளுக்கு சிக்காது போக தனக்கு என்ன வந்தது எனும் விதத்தில் தோலை குலுக்கிக் கொண்டவன் எழுந்து குளியலறையை நோக்கிச் சென்றான்.

உறக்கக்கலக்கத்தில் விழிகள் சோர்வுற்றுக் காணப்பட, குளியலறை தொட்டியருகே சென்று நின்று கொண்டவன் கைகளை துலாவி தன் ப்ரஸ்சை கண்டெடுத்து அருகிலிருந்த டூத் பேஸ்டை கொஞ்சமாய் வைத்து வாய்குள் விட்டு துலக்கியவாரே முன்னே தன் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தவன் விழிகளோ ஏகத்துக்கு விரிந்து கொண்டது..

மூக்கு நுனி சிவக்க "இவள.." பல்லிடுக்கில் வார்த்தைகளை மென்றவாறு பல்லை கூட சரியாக துலக்காது வாயை மட்டும் கொப்பளித்துக் கொண்டு ருத்ரமூர்த்தியாய் அவதாரமெடுத்து அறையை விட்டு வெளியேறினான்..

அனைத்து இடங்களிலும் பார்வை எனும் வலையை வீசி அலசி ஆராய அவன் இந்நிலைக்குக் காரணமானவளோ உஷாராய் சோபாவின் பின் திருட்டு முழியுடன் ஒளிந்து கொண்டிருந்தாள்..

"ஏய் எங்கடி இருக்க.. வெளிய வா.." என்று கணீர் குரலில் கத்தியவாறு சமையலறை, அறை கதவின் பின், குளியலறை என அனைத்து இடங்களையும் அலசித் தேட, அவளோ அவன் கணீர் குரலில் வெளியே வருவதை விட்டு அதை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் எனும் விதத்தில் அவ்விடத்திலேயே பதுங்கிக் கொண்டிருந்தாள்.

"இப்போ மட்டும் நீ என் முன்னாடி வரல்லன்னு வையேன் இங்க நடக்குறதே வேற, வெளிய வாடி.." உரக்க குரலில் உறும அவளுக்கோ உடம்பெல்லாம் வேர்த்து விட்டது..

அந்நேரம் உள்ளே வீட்டினுள் நுழைந்த சித்தார்த் அஷ்வஜித்தின் குரலில் "என்னடா ஆச்சு, எதுக்கு இப்போ வீடே அதிர்ர அளவு கத்திகிட்டிருக்க?" புரியாது தனக்கு முதுகு காட்டி நின்றவனிடம் பதற்றமாய் வினவியவாரே அவனருகே வந்து நின்றான்.

அஷ்வந்த் ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டவன் நெற்றியை நீவியவாறு சித்தார்த்தின் புறம் திரும்பி நின்றான்.

இவ்வளவு நேரம் என்னவோ ஏதோ என சிறு பதற்றத்துடன் அஷ்வந்த்தின் பின் புறத்தை பார்த்துக் கொண்டிருந்தவன் அவன் முன்னே திரும்பியதும் முதலில் வாயை பிளந்து பார்த்தவன் பின் பக்கென வாய் விட்டு சிரித்து விட்டான்.

"செம்ம காண்டுல இருக்கேன் நீ வேற சிரிச்சு இன்னும் காண்டேத்தாத.." அஷ்வந்த் சிடுசிடுக்க சித்தார்த்தாலோ தன் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றவாறு "சாரி மச்சான்.. ஹ ஹ ஹ ஹா.. " மறுபடியும் சிரித்து வைத்தவன் அஷ்வந்த்தின் பார்வையில் வந்த சிரிப்பை மென்று விழுங்கி "சாரி.. சாரி.. ஆமா என்னடா கோலமிது, இப்படி உன்ன பார்க்கும் போது என்னால சத்தியமா முடியலடா, பார்க்க முரட்டுதனமான கியூட் பூஸ்குட்டியாட்டமிருக்க.. " என்று கூறி வயிற்றை பிடித்த வண்ணம் சிரிக்க இவனோ ஜர்க்காகி விட்டான்..

ஆம் அவன் கோலம் அப்படித்தான் காணப்பட்டது.. அவன் கூர் நாசி நுனியில் ஸ்கெஷ்சரால் குட்டியாய் ஓர் வட்டம் வரையப்பட்டிருந்தது பூனையின் மூக்கை போன்று, இதழோரங்களில் அருகே நான்கு கொடுகள் கன்னத்தை தொட இருபுறமும் வரையப்பட்டு, இருபுற கண்கலருகிலும் குட்டியாய் இதயவடிவங்கள் வரைந்து காணப்பட்டது.. அதுவும் அவன் முறைத்துக் கொண்டு வீராப்பாய் நிற்கும் போது முரட்டுத்தனமான பூனை குட்டி போல் தென்பட்டான்..


#அஸ்திரம் -54

......

கூடிய சீக்கிரம் முதல் அத்தியாயத்தோட ஓடி வரேன்.. ஓடி வரும் போது தடுக்காம இருக்கனும்னா கண்டிப்பா உங்க ஒத்துழைப்பு இந்த பாப்பா தேவப்படுது..
 
அத்தியாயம் - 1


இரவு நேர வானில் கார் முகில்களில் ஆட்சி கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்க இருள் என்பது எப்பொழுதும் நிரந்தரமில்ல நண்பா எனும் விதத்தில் இருளை பிளந்து தன் ஆக்கிரமிப்பை நிலை நாட்ட முகில்களின் பின் மறைந்து கிடந்த நிலமகள் நாணம் விலக்கி வெளிவந்து வெகுபிரகாஷமாய் பூமியை எட்டிப்பார்த்தாள்.

ஆள் நடமாட்டமில்லா சாலையில் நிலவிய நிச்சப்தத்தை கிழித்துக் கொண்டு பறந்தது அந்த கருப்பு நிற கார்..

வீதியில் விழிகளை பதித்து அதிவேகமாய் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் பார்வையை அவன் அலைபேசி சிணுங்கி திசை திரும்பச் செய்தது.

அழைப்பை ஏற்றவன் எதிர்புறமிருந்தவள் பேசமுன் முந்திக்கொண்டு,"ஓ தியா இன்னும் பைவ் மினிட்ஸ் டா, ஓவர் ட்ராபிக் ஜாம் அதான் ரொம்ப லேட் ஆவிடுச்சு.. இன்னும் பைவ் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.." என்று படபடத்தவாறு தன் காதில் அணிந்திருந்த காதணியை ஓர் முறை வருடி சரி செய்து கொண்டான் அஷ்வஜித்.
அனைவர் மனதையும் ஈர்க்கச் செய்யும் அவன் நாமத்தை போல் அவன் கம்பிரமான தோற்றமும் அனைவரையும் ஈர்க்கச் செய்யும்..

"என்ன அஷ்வந்த் நீ, இன்னிக்கு எனக்கு எவ்வளவு முக்கியமான நாள்ன்னு உனக்கே தெரியும், ஆனா இப்போ என் முகத்துல கொஞ்சமாச்சும் சந்தோசம் கிடையாது, உன்ன பார்க்காம எப்படி நான் சந்தோசமா இருப்பேன் சொல்லு.. எவ்வளவு நேரமா என்னைய காக்க வைக்குற தெரியுமா.. பார்ட்டிக்கு வந்திருக்கிறவங்களோட கூட நான் இன்னும் சரியா பேசல உனக்காக தான் இவ்வளவு நேரமா வாசல்லயே காத்துட்டிருக்கேன்.. ஆனா நீ இன்னும் வரல்ல.. உனக்கு நான் அவ்வளவு முக்கியமில்லாம போய்ட்டேன்ல" என எதிர்புறத்திலிருந்து ஏக்கம் ததும்ப படபடத்துக் கொண்டே போனாள் அவன் காதலி தியா.

இருவருக்குள்ளும் ஒரு வருட பழக்கமே.. அவன் அலுவலகத்திலேயே தியா வேலை பார்க்கிறாள்.. ஆரம்பத்தில் அலுவலகத்தில் சாதாரணமாய் வேலை பார்க்கும் மற்றைய ஊழியர்கள் போலவே அவளும் அவன் கண்களுக்குப் புலப்பட்டாள், ஆனால் விதியின் விந்தையால் அவனுக்கு ஏற்படவிருந்த பெரிய விபத்திலிருந்து அவள் அவன் உயிரை காப்பாற்றி பாதுகாத்ததால் அஷ்வந்தின் பார்வையில் அவளுக்காய் ஓர் தனியிடம் உருவானது..

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகவே பழகத்துவங்கினர், அது காலப்போக்கில் காதலாய் உருவெடுத்து விட்டது. அஷ்வந்த் தன் காதலை கூறிய அன்றிலிருந்து தியா அஷ்வந்தின் காதலியாய் அவன் சுற்று வட்டாரத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறாள்.

"என்ன தியா நீ, நான் என்ன வோன்டட்டாவா லேட் பண்றேன், சாய்ங்காலமே வரலாம்னு தான் இருந்தேன் ஆனா எதிர்பாரா விதமா திடீர்னு ஒரு கலய்ண்ட் வந்துட்டாங்க.. அவங்க கூட மீடிங் எரேஞ் பண்ணி அத முடிக்குறதுகுள்ள லேட் ஆவிடிச்சு.. ரொம்ப முக்கியமான க்லய்ண்ட், இடைல விட்டுட்டு வர முடியாதுல்ல அதான் நானே மீடிங்க அடண் பண்ணேன்... அதுல ட்ரேபிக் ஜாம் வேற, அதான் இன்னும் லேட் ஆவிடுச்சு.. நீயே சொல்லு இதுல என் தப்பு என்ன இருக்கு, சொன்னா நீ புரிஞ்சிப்பன்னு நினச்சேன், ஆனா நீ என்னன்னா நான் வேணும்னே இன்னிக்குன்னு பார்த்து உன்ன வேணும்னே காக்க வைக்குற போலல்ல பேசுற" என்றான் உண்மை நிலையை எடுத்துக் கூறி..

அவன் கூறிய விதத்தில் அவள் சட்டென "எனக்கு தெரியும் அஷ்வந்த் நீ எப்போவும் என்ன காக்க வைக்க மாட்டன்னு ஆனா எனக்குதான் உன்ன பார்க்குற வர நார்மலா இருக்க முடியல.. சீக்கிரம் வா அஷ்வந்த், ஐ அம் வைட்டிங் போர் யூ.." குழைந்த குரலில் கொஞ்சலாய் கூற,"இதோ பக்கத்துல தான் இருக்கேன் நீ போய் பார்ட்டிய அடன் பண்ணு நான் வந்துடுறேன்" என்றவன் பாதையிலிருந்த தன் பார்வையை விலக்கி தனது மொபைலை எடுத்து அழைப்பை துண்டித்து விட்டு பார்வையை முன்னே செலுத்தியவன் விழிகள் ஏகத்திற்கு விரிந்து
கொண்டது.

திடீரென்று எங்கிருந்தோ ஓர் பெண் பின்னே பார்த்த வண்ணம் அவன் வண்டியை கவனிக்காது ஓட வர, அவள் பார்வை எதர்ச்சியாய் முன்னே வந்த வண்டியை தொட்டுச் செல்ல, அவள் சுதாகரிக்கும் முன் சடுதியில் அப்பெண் மீது சீறிப் பாய்ந்திருந்தது அவன் வண்டி..

அவள் தன் வண்டியை நோக்கி ஓடி வருவதை கண்ட அஷ்வந்த் சுதாகரித்து வண்டியை நிறுத்தும் முன் அவன் கட்டுப்பாட்டை மீறி அவன் வண்டி அப்பெண் மீது மோதியிருந்தது.

இதை சிறிதும் எதிர்பார்க்காதவன் "ஏய்.. " எனும் பெரும் குரலில் கத்தியவாறு சடாரென பிரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்தினான். ஆனால் கால தாமதம் முன்னமே அவன் வண்டி அவளை இடித்துத் தள்ளியிருந்தது..

சட்டென கதவை திறந்து இறங்கிப் பார்க்க அப்பெண் நிலத்தில் குப்புற வீழ்ந்து இரத்த வெள்ளமாய் கிடந்தாள்.. வண்டி மோதிய வேகத்தில் தலை சென்று வண்டியில் முன்புறம் வேகமாய் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குருதி பெருக்கெடுத்து வெளியே பாய்ந்துவடிந்துக் கொண்டிருந்தது.

"ஓ சிட்" தன் மடைத்தனத்தை எண்ணி தலை அழுத்தக் கோதிக் கொண்டவன், தனக்கு தான் மீதே பலத்த கோபம் உண்டாக கை முஷ்டியை இறுக்கி காரின் முன்புறம் தாக்கி தன் அடங்கா கோபத்தை வெளிப்படுத்தினான்..

என்ன செய்வதென்று அவனுக்கு சரியா புரியவில்லை.. இதயம் படபடக்க எதையும் யோசிக்காது அவளருகே ஓடிச்சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் மறுபுறம் வீழ்ந்து கிடந்தவளை முன்புறம் சரிந்து அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயல அவளோ எந்த வித அசைவுமின்றி கண்கள் சொருகி சுயநினைவை இழந்துக் கிடந்தாள்..
அவள் வதனமெங்கும் ஆங்காங்கே இரத்தச் சொட்டுக்கள் படித்து அவள் யாரென்று அடையாளம் காணமுடியாதளவு அவள் வதனத்தை மறைத்திருந்தது..

சிறு படபடப்புடன் மெல்ல அவள் நாசியினருகே தன் ஆள்காட்டி விரலை கொண்டு சென்று மூச்சிருக்கிறதா என ஆராய அவள் உஷ்ன மூச்சுக்காற்று படுவேகமாய் அவன் விரலை நொடிக்கொரு முறை தாக்கிச் சென்றது.. அவளுக்கு மூச்சிருக்கிறது என்பதை அறிந்தவுடனேயே அவன் மூச்சுக் காற்று சீராய் வெளியேறியது.. இருந்தும் அவள் நிலை மோசம் என துடிக்கும் அவள் இதயத்துடிப்பின் அசைவே அவனிற்கு சுட்டிக்காட்டியது..

நடந்தது நடந்து விட்டது அவளுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன என்று அவ்விடமே அவளை விட்டு விட்டுக் கடந்து செல்லுமளவு அவனொன்றும் கல் நெஞ்சம் படைத்தவனல்லவே..
இன்னும் தாமதமித்தால் வெளியேறும் இரத்தப்போக்கு மேலும் அதிகரித்து அவளுலுயிரிற்க்கே ஆபத்தாகிவிடும் என்று மூளை எடுத்துரைக்க நொடியும் தாமதிக்காது அவளை தன் கையில் ஏந்தியவன் அவளை வண்டியில் கிடத்தி வைத்தியசாலையை நோக்கி விரைந்தான்..

அஷ்வஜித்தின் வண்டி காற்றை கிழித்துக் கொண்டு வைத்தியசாலையின் முன் நிற்க அவசரமாய் வண்டியை விட்டு இறங்கியவன் நொடியும் தாமதிக்காது சுயநினைவின்றி கிடந்தவளை கையில் ஏந்தி கொண்டு ஒட்டமும் நடையுமாய் வைத்தியசாலைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த நர்ஸ் இருவரைப் பார்த்து "சீக்கிரம் இந்த பொண்ணுக்கு டிரீக்மன்ட் பண்ணனும், ரொம்ப பிளீடிங் ஆவுது.. இமீடியட்டா டாக்டர்ர கூப்பிடுங்க.." என்று கத்தி உத்தரவு பிறப்பிக்க அவர்களோ அவ்விடம் விட்டு நகராது சட்டை முழுக்க இரத்தம் படிந்திருந்தவனையும் அவன் கையில் துவழ்ந்து கிடந்தளையும் ஆராய்ச்சிப் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தனர்..

அவ்விடமிருந்த பெரிய வைத்தியர்களின் உதவிவைத்தியனொருவன் அஷ்வஜித் கையிலிருந்தவளை பார்வையால் அளந்தவாரே, "சார் இவங்களுக்கு ஏற்பட்டிருக்க பாதிப்ப வெச்சி பார்க்கும் போது இது அக்சிடன்ஸ் கேஸ் போலதான் இருக்கு, உடனே எல்லாம் டிரீக்மன்ட் ஸ்டார் பண்ண முடியாது சார்.. முதல்ல போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணனும்,அவங்க வந்த புறம் தான் டிரீக்மன்ட் பண்ணனும், இல்லன்னா எங்க ஹாஸ்பிடலுக்கு தான் பிரச்சன வரும்" என்க அஷ்வந்த் அவனை வெறியேற முறைத்தான்.

"யூ டு வாட் ஐ சே.. கொஞ்சமாச்சும் ஹியூமன் சென்ஸ்சிருக்கா உனக்கு, ஒரு டாக்டரா இருந்துகிட்டு ஒருத்தர் உயிருக்கு போராடிட்டிருக்கும் போது இப்படி சாதாரணமா ரூல்ஸ் பேசுற.. நீ சொல்ற போல ரூல்ஸ் பொ(f)லொவ் பண்ணா இந்த பொண்ணு செத்ததுக்கு அப்புறம் தான் டிரீக்மன்ட் பண்ணவேண்டியிருக்கும்.. இடியட்.. " பல்லை கடித்து அவனை கோபமாய் திட்ட, அவனோ அவன் கோபத்தின் சிவந்து கிடந்த வதனத்தை கண்டு மிரண்டு எதுவும் பேச முடியாது தலையை குனித்துக் கொண்டான்.

"கால் மீ டாக்டர் தேவ்" கணீர் குரலில் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸ்சை பார்த்து கூற அவள் திடுக்கிட்டு நாளா புறமும் தலையை ஆட்டிவிட்டு வைத்தியர் தேவ்வை அழைக்க விரைந்து சென்றாள்.

அடுத்த நிமிடம் நர்ஸ் சொன்னதை வைத்து என்னவோ ஏதோ என அவ்விடம் விரைந்து வந்த தேவ் அஷ்வஜித்தை கண்டவுடன் "டேய் என்னடா ஆச்சு, எதுக்கு கத்திட்டிருக்க.." என்று ஓர் அண்ணனாய் தன் தம்பியின் சட்டை,கைகளில் படிந்திருந்த இரத்தத்தை பார்த்து பதைபதைத்தவன் அவன் கையில் துவண்டுக் கிடந்தவளை கண்டு நெற்றி சுறுக்கி யோசனையாய் தன் தம்பியின் முகத்தை ஏறிட்டான்.

"எனக்கு எதுவும் கிடையாது.. இப்போ இதெல்லாம் விளக்க நேரம் கிடையாது, முதல்ல இந்த பொண்ணுக்கு டிரீக்மண்ட் பண்ணு ரொம்ப பிளீடிங் ஆவுது.." என்று அவசரப்படுத்த,

நிலைமையை புரிந்து கொண்ட தேவ் "தீபக் ஸ்டஷ்சர் கொண்டு வா.. நர்ஸ் சீக்கிரம் ஆபரேஷனுக்கு ரெடி பண்ணுங்க " என்று விரைவுப்படுத்தி சக ஊழியர்களிடன் கட்டளை பிறப்பிக்க, நர்ஸ் இருவர் ஊழியர்களின் உதவியுடன் அவளை ஸ்டஷ்சரில் கிடத்தி உடனே அவசர பிரிவிற்குள் அழைத்துச் சென்றனர்.

அஷ்வஜித் அவசரப்பிரிவின் அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தான். இருகைகளைக் கொண்டு முகத்தை அழுத்தத் துடைத்துக் கொண்டான்..

ஏன் இவ்வளவு பதைபதைப்பு?, என்னவாயினும் தன் கவனயீனத்தால் நிகழ்ந்த விபத்தாயிற்றே அதனால் தான் என்று தன் மனம் எழுப்பிய கேள்விக்கு ஆராய்ச்சியின்றி நேரடியாகவே பதிலை கொடுத்துக் கொண்டான்..

சில மணிநேரம் கடந்து செல்ல கதவு திறப்படும் சத்தத்தில் பார்வையை அப்புறம் திருப்ப, அவசர பிரிவிலிருந்து வெளியே வந்தான் தேவ்..

எழுந்து அவனருகே சென்றவன் "என்னாச்சு எவ்ரிதிங் ஆல் ரைட் தானே.." என்று வினவ, அவனோ "இல்ல ரொம்ப கிரிடிகல் ஸ்டேஜ்ல இருக்கா.. ரொம்ப பிளட் லாஸ் ஆவிருக்கு இமீடியட்டா பிளட் தேவ படுது.. அந்த பொண்ணோட அம்மா,அப்பா யாருக்காச்சும் இன்போர்ம் பண்ணி சீக்கிரம் வர சொல்லு, இப்போவே அவசரமா பிளட் ஏத்தியாகனும்..." என்று கூறவும் ஒற்றை விரல் கொண்டு நெற்றியை யோசனையுடன் நீவினான் அஷ்வஜித்.

"என்ன யோசிக்கிற அஷ்வந்த் இது யோசிக்கிற நேரம் கிடையாது சீக்கிரம்.." தேவ் பெண்ணவள் நிலை கருதி அவசரப்படுத்தினான்.

"அது முடியாது தேவ்.. ஏன்னா எனக்கு அந்த பொண்ணு யாருன்னே கூட சரியா தெரியாது.. " என்று நடந்ததை கூறி "நான் நோட் பண்ண படி அவகிட்ட போன்,ஐ டி அப்படி எந்த திங்ஸ்சும் கிடையாது, அவ சொன்னாலேயன்றி எந்த டீடெயில்ஸ்சும் தெரிஞ்சிக்க இல்ல.. ஏன் அவ முகத்த கூட நான் சரியா கவனிக்கல" என்று அவன் மேலும் தோலைக் குலுக்கி கூறவும், தேவ் அவனை தீயாய் முறைத்தான்.

"கொஞ்சமாச்சும் அறிவிருக்கா அஷ்வந்த் உனக்கு.. இப்படிதான் கவவனயீனமா இருப்பியா, நீ பண்ண வேலயால இப்போ அந்த பொண்ணு உயிரு ஆபத்துல இருக்கு.. இப்போ என்ன பண்ண போற?,அந்த பொண்ணு பிளட் கூட ரொம்ப ரேர்ரானது,பொம்பாய் பிளட் குரூப்டா அந்த பொண்ணுடையது.. இங்க ப்ளட் பேங்க்குல கூட அந்த பிளட் கிடையாது ரொம்ப ரேர்ரானது, இந்தியாலையே 176 பேர் தான்டா அந்த பிளட் குரூப் இருக்காங்க" என்று தீவிரமாய் கூற தலையில் கையை வைத்தான்..

[*ஆம் நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய விடயமே.. ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் அரிதான இரத்தப்பிரிவு என்றால் அது பொம்பாய் இரத்தப்பிரவேயாகும் ]

தேவ் அவள் இரத்தப்பிரிவின் பெயரை சொன்னதும் விலுக்கென நிமிர்ந்துப் பார்த்தான் அஷ்வஜித் "நான் பிளட் தரேன்.." என்றான்.

"டேய் நீ எப்படி..." சட்டென மறுக்க வந்த தேவ் ஏதோ துணுக்குற்றவனாய் "ஓ கோட், உன்னோட பிளட் குரூப்பும் அதான்ல, இத எப்படி மறந்தேன்.." என்று தன்னை நொந்து கொண்டவன் அடுத்த கட்டமாய் உடனடியா அஷ்வஜித்தை அழைத்துச் சென்று அவனிடமிருந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டு அவ்விரத்தத்தை பெண்ணவள் உடலுக்கு ஏற்றி, மேற்படி செய்ய வேண்டிய தேவையான சிகிச்சையை மேற்கொண்டனர்..

அஷ்வஜித் அவளுக்கு இரத்தம் கொடுத்த களைப்பில் உடல் அயதியால் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தலை சாய்த்து தன்னையறியாது கண்ணயர்ந்து போனான்..


தொடரும்..
#அஸ்திரம் - 54
 
அத்தியாயம் 2

மருத்துவமனையில் மருந்து வாடை நாசியை துளைக்க அவ்வாடை உள்ளுக்குள் சிறு நெருடலை உருவாக்கி முகச்சுளிப்பை உண்டு செய்ய, தலையில் காயத்திற்கு இடப்பட்டிருந்த கட்டு வேறு சுளீர் என்ற வலியை நொடிக்கொரு முறை மின்சாரத் தாக்குதலாய் உள்ளுக்குள் கடத்தி மூடிக்கிடந்த கருமணிகளை நிலை கொள்ளாது அங்கும் இங்கும் ஓடச் செய்தது.

அசைவின்றி கிடந்த விரல்கள் மெல்ல சிறு அசைவை வெளிக்காட்ட மூடிக்கிடந்த இமைகள் கடினப்பட்டு மெல்லப் பிரிந்துக் கொண்டன.

விழிகளை திறந்தவுடன் யன்னலுக்கு போடப்பட்டிருந்த திரையைத் தாண்டி தெறித்த ஒளிகற்றைகள் பளிச்சிட்டு விழித்திரையில் விழுந்து கண்களை கூசச் செய்ய அவளிமைகள் நிலைகொள்ளாது படபடவென அடித்துக் கொண்டன. இமைகளை மூடி மூடித் திறந்து அந்த வெளிச்சத்திற்கு தன் விழிகளை பழக்கப்படுத்திக் கொண்டவள் இருகரங்களைக் கொண்டு தன் தலையை பிடித்தவாறே படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள்.

சுற்றும் முற்றும் பார்வையை அலைய விட்டவளுக்கு அவ்விடமே புதியதாய் தெரிந்தது. ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாய் சொட்டி வழிந்து குழாய் வழியே உடம்பிற்று ஏறிக் கொண்டிருப்பதை இப்பொழுதே பூமியில் ஜனித்த மழலை போல் விசித்திரமாய் பார்த்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் சரியாக சடாரென கதவு திறபடவும் இதை எதிர்பார்க்காத பேதையவளின் உடல் தூக்கிவாரிப்போட மிரண்டு இரு அடி பின்னோக்கிச் சென்று படுக்கையுடன் ஒட்டிச் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

இரவு அவள் உயிரை காக்க தேவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாய் முடிய, அவளோ மயக்க மருந்தின் வீரியத்தில் மயக்கம் தெளியாது ஆழ்ந்திருந்ததால் அவள் மயக்கம் தெளியும் வரை அஷ்வஜித் வைத்தியசாலையிலேயே காத்திருந்தான்..

சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்ற வந்த நர்ஸ்சின் விழிகளில் மயங்க நிலையிலிருந்தவளின் உடலிலிருந்து வெளிபட்ட சிறு சிறு அசைவுகள் துல்லியமாய் விழ அதை கண்டு கொண்டவர் உடனே இவ்விடயத்தை தேவிற்கு தெரியப்படுத்த அதை அவன் மூலம் அறிந்து கொண்ட அஷ்வஜித் அடுத்த நிமிடமே அவளை சந்திக்க நேரடியாய் அவளிருந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.

தற்போதே தேவின் வலியுறுத்தலில் பால் பெரும்பாடுபட்டு விருப்பமேயின்றி வேறுவழியில்லை என்பதால் அணிந்து கொண்ட சர்ட்டில் பார்க்க வாட்டசாட்டமாய், ட்ரிம் செய்யப்பட்ட இறுகிய தாடை, கலைந்த கேசம், சிரிப்பை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டியதாய் அது புதைந்து கிடந்த அதரங்கள் என பார்க்க ஆணழகனாய் உள்ளே நுழைந்த இதுவரை கண்டிரா புது முகத்தை விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்..

அவனும் அவளுக்கு நேரெதிராய் தலை மற்றும் கைகளில் கட்டிடப்பட்டு சோர்ந்து தோய்ந்த முகத்துடன் கட்டிலில் ஓர்புறம் ஒடுங்கி அமர்ந்திருந்து இமைக்காது தன்னையே நோக்கிக் கொண்டிருந்தவளை ஆராய்ந்தவாறு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையை இழுத்து வந்துகொண்டான்.

ஏனோ ஒரு நெருடல் தன்னால் தானே இவளுக்கு இந்நிலை‌மை என்று.. அதனாலேயே இரவு முழுவதும் வைத்தியசாலையிலேயே தங்கி அவள் நிலையை அறிய காத்திருந்தான். இல்லையேல் அவனுக்கு என்ன தலையெழுத்தா!, இல்லை வேறு வேலை வெட்டி இல்லையா! வைத்தியசாலையில் இவளுக்காய் இரவு முழுவதும் காவல் காக்க..

எடுத்தவுடன் "ஆர் யூ ஓகே?" என்ற கேள்வியுடன் அவளின் கட்டுக்களை ஆராய, அவளோ வலதுபுறமாய் தலையை சாய்த்துப் அவனை விசித்திரமாய்ப் பார்த்தாள்.

அவளின் பார்வையின் அர்த்தம் புரியாதவன் புருவம் நெறிக்க மறுபடியும் அழுத்தமாய், "இப்போ உனக்கு எந்த பிரச்சனையும் இல்லல்ல, எங்கயாச்சும் பைன் இருக்கா?" என்று வினவ அவள் தன் ஆள்காட்டி விரலால் நெற்றியிலுள்ள காயத்தை சுட்டிக்காட்டினாள்.

"ஓ வலிக்குதா, அது ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கதான் செய்யும் போக போக காயம் ஆறும் போது வலியும் ஆறிபோயிடும்" என்று தோலை குலுக்கி இதழை வளைத்துக் கூற அவளோ எதிர்வினையாய் கண்களை மட்டும் சிமிட்டினாள்.

சுற்றி வலைக்காது நேரடியாய் "உன்னோட பேர் என்ன? நீ உன்னோட டீடெயில்ஸ் சொன்னன்னா எனக்கு உன் வீட்டுக்கு இன்போர்ம் பண்ணி நடந்தத சொல்லிட்டு இங்கிருந்து போயிடலாம்" என்று வெளிப்புறமாய் சுட்டிக்காட்டி தோலை குலுக்கி அவன் வினவ, அவளோ விழித்தவாறு அதே கேள்வியை அவனிடம் திருப்பி ,கேட்டாள்..

"உன்னோட பேர் என்ன?"

அவள் கேள்வியில் அவனோ ஏன் கேட்கிறாள் என்று புரியாது "அஷ்வஜித்" என்றதும் அவள் அடுத்து கேட்ட கேள்வியிலோ அவன் முகத்தில் யோசனை ரேகைகள் படர்ந்தது.

ஓர் ஓரமாய் படுக்கையில் ஒடுங்கியிருந்தவள் சிறிது முன்னோக்கி வந்து "அப்போ என்னோட பேர் என்ன?" என்று ஆர்வம் ததும்ப வினவினாள்.

"ஆர் யூ ஆல் ரைட், நீ தெரிஞ்சிதான் பேசுறியா?, உன்னோட பேர் என்னன்னு எனக்கு எப்படி தெரியும் அது உனக்கு தானே தெரியும். நீ தான் சொல்லணும்" அஷ்வஜித் நெற்றியை நீவியவாறு தோலை குலுக்கி கூற அவளோ இதழை பிதற்றி "அப்படியா! ஆனா எனக்கு என்னோட பேர் என்னன்னு தெரியலயே! ஆனா உன்னோட பேரு ரொம்ப அழகா இருக்கு. நா வேணா உன்ன அஷுன்னு கூப்பிடட்டா.. அதுவும் ரொம்ப நல்லா இருக்கும்" குழந்தை போல் முத்துப் பற்கள் சிந்திக் கூற அவன் அவளை வினோதமாய்ப் பார்த்தான்.

"நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசிட்டிருக்க?.. என்னோட பேர சுருக்கி கூப்பிடுற அளவு நம்மகுள்ள எதுவும் கிடையாது, அதோட இன்னும் கொஞ்ச நேரத்துல நான் யாரோ நீ யாரோ அவ்ளோ தான் நம்மகுள்ள இருக்க போண்ட் புரிஞ்சிதா.." என்று ஒற்றை புருவமுயர்த்திக் கூறியவன் மேலும் "அப்புறம் என்னால ஒரு மிஸ்டேக் ஆவிடுச்சு அதான் நான் இப்போ.. இங்க உட்கார்ந்து இப்படி என்னோட டைம்ம வேஸ்ட் பண்ணிட்டிருக்கேன் இல்லன்னா என் வேலயப்பார்த்துட்டு நான் போயிட்டே இருப்பேன்" என்று அலட்டிக் கொள்ளாது அலட்சியமாய் கூற அவளோ அவன் கூறியதை காதிலேயே வாங்கிக் கொள்ளாது சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தி அலசிக்கொண்டிருந்தாள்..

சொல்லப்போனால் அவன் கூறிய எதுவுமே அவள் காதில் துளியும் விழவில்லை என்றே கூறவேண்டும்..

மருந்து வாடை சிறு அசௌகரியத்தை உண்டு செய்து குமட்டச் செய்ய, "அஷு என்ன இங்க இருந்து கூட்டிட்டு போறியா.. எனக்கு இந்த ஸ்மெல் பிடிக்கவே இல்ல.." என்று அவன் புறம் பார்வையை செலுத்தி மூக்கை சுருக்கி கூறியவள் முகம் அஷ்டகொணலாய் சென்றது..

அவனுக்கோ அவள் பேச்சு மண்டை சூடாகியது. அஷ்வஜித்தை பொருத்தவரை அவன் இவ்வளவு தூரம் யாரிடமும் இறங்கிச் சென்றதே இல்லை.. அனைவருனும் அளவாகவே நடந்து கொள்வான்.. ஆனால் இவளோ அவனை அதிகம் சோதிக்கிறாள்.

தான் என்ன கூறுகிறேன் இவள் என்ன லூசுத்தனமாய் கூறுகிறாள் என்றே தோன்றியது அவனுக்கு, இதில் அவளின்‌‌ அஷு என்ற அழைப்பு வேறு அவனை எரிச்சலூட்டியது. இருக்கையிலிருந்து சடாரென எழுந்து, "ஆர் யூ மேட்.. என்ன ஏது பேசுறோம்னு உனக்கு புரியுதா இல்லையா.. யாருன்னே தெரியாத உன்ன எதுக்கு நான் என்கூட கூட்டிட்டு போகணும் அதுவுமில்லாம பார்த்து முழுசா ஃபிப்டி மினிட்சும் ஆகாத ஒரு பையன்கிட்ட இப்படிதான் கேட்பவேண்டாம்.. இடியட்.. எக்குத்தப்பா உளறிக்கிட்டு " என்று பொரிந்துத் தள்ளியவன், " சின்ன பொண்ணு போல பெஹேவ் பண்ணி கிட்டு" வாய்க்குள் முணுமுணுத்தவாறே அவள் முகத்தை கூட பார்க்காது விறுவிறுவென வெளியேற, அவளோ அவன் சென்ற திசையையே கண்ணீர் மல்க வெறித்துக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரம் கடந்து செல்ல சென்ற வழியிலே அவளிருக்கும் அறையை நோக்கித் திரும்பி வந்தான் அஷ்வஜித்..
இறுகிய அவன் தாடை மட்டும் சிறிதும் இளகவேயில்லை..

அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கதவை திறக்க சென்றவனுக்கு பேதையவளின் சிணுங்கும் குரல் அவ்வறையையும் தாண்டி வெளியே எதிரொலித்து அவன் செவியை வந்தடைந்தது.

ஆழ் பெருமூச்சை இழுத்து விட்டவன் கதவை திறந்து உள்ளே நுழைய முற்பட சரியாக அவன் காலை வந்தடைந்தது அவள் தட்டிவிட்ட ஊசிகள் அடுக்கப்பட்டிருந்த தட்டு...

"எனக்கு வேணாங்குறேன் தானே அப்புறம் ஏன் கேட்க மாட்டேங்குறீங்க.. இங்கிருந்து போங்க.." முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு முன்னே நின்ற நர்ஸ்சை பார்த்து கீச்சிடும் குரலில் கத்த அவருக்கோ அவளை சமாதானம் செய்வது தான் எப்படியென்று புரியவில்லை..

"இங்க பாரு பாப்பா, இது கட்டாயம் உங்களுக்கு போட வேண்டிய இன்ஜக்சன், இத போட்டாதான் உங்களுக்கு சீக்கிரம் குணமாகும்‍.. நீங்க இப்படி அடம் பிடிச்சா எப்படி குணமாகும்.. " என்று பரிவுடன் வாஞ்சையாய் எடுத்துக் கூற முற்பட..

அவளோ, " இல்ல எனக்கு எந்த இன்ஜக்சனும் வேண்டாம்.. வேண்டாம்.. வேண்டாம்.." என்று எந்த விதத்திலும் இரங்காது மறுப்பு கூறி தலையை ஆட்ட அவருக்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை..

அப்பொழுது தான் வாசலிருந்த அஷ்வஜித்தை அவர் கண்டார். பாவமாய் அவனை பார்த்தவர் கீழே கிடந்த தட்டை எடுக்க முற்பட அவன் அவரை கையால் தடுத்தவன் குனிந்து கீழே கிடந்த தட்டையும் அதிலிருந்த பொருட்களையும் எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு, "இப்போ போய் போடுங்க" என்று அவரை நோக்கி அழுத்தமாய் கூற அவரோ எப்படி எனும் விதத்தில் பார்க்க, முகத்தை குனித்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளோ அவன் குரலை கேட்டு விழிகளை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"நான் சொல்றேன்ல நீங்க இந்த இன்ஜக்சன போய்‌ அவளுக்கு போடுங்க" என்று உறுதியாய் வந்து அவன் வார்த்தைகள் விழ அவரோ சரி எனும் விதமாய் தலமதோன்றியதோ ்டு அவளருகே நெருங்க அவளோ தள்ளி அமர்ந்து கொண்டாள்.

"பாப்பா ஒரு செக்கன் தான்.. வலிக்க கூட செய்யாது.. " என்று ஊசியில் மருந்தை ஏற்றியவாறு கூற, அவளோ " இல்ல நீங்க பொய் சொல்றிங்க, ஊசி போட்டா வலிக்கும் எனக்கு தெரியும்" என்று இதழை பிதற்றி சிறு குழந்தையை போல் விழி சுருக்கி கூறினாள்.

"ஆமா வலிக்கதான் செய்யும் அதுக்காக இன்ஜக்சன் போடாம இருக்க முடியுமா" என்று மார்புக்கு குறுக்கே கையை கட்டி ஒற்றை புருவமுயர்த்தி கூறிய அஷ்வஜித் அவளருகே வந்தமர்ந்தான்.

அவளோ கையை கட்டி தலையை குனித்தவாறு "என்ன திட்டினல நான் உன் கூட கா. " என்றாள்‌ சிறு குழந்தை போல் இதழை பிதற்றி..

அவன் நெற்றியை நீவியவாறு "அப்போ ஓகே நீ இப்படியே அடம் பிடிச்சிட்டு இங்கேயே இரு நான் மட்டும் வீட்டுக்கு போறேன்" என்று விட்டு எழுந்து செல்ல முயற்சித்தவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியள் "இல்ல இல்ல நான் சும்மா சொன்னேன் என்ன விட்டு போகாத... என்னையும் உன் கூட கூட்டிட்டு போ" இவ்வளவு நேரம் அவன் திட்டி விட்டான் என முகத்தை தூக்கி வைத்திருந்தவளின் கோபம் எங்கோ பறந்து‌ செல்ல இப்பொழுது விட்டால் அழுது விடுவது போல் அவனிடன் கெஞ்சினாள்..

மெல்ல தன் கையை பற்றியிருந்த‌ அவள் கையை எடுத்து விட்ட்வன் "அப்போ அவங்களுக்கு அவங்க வேலைய செய்ய விடு" என்றான் கையை கட்டி..

"இல்ல வேணாம் வலிக்கும்" கண்களை சுருக்கி கெஞ்ச அவனோ கண்ணசைவால் செல்லவா எனும் விதத்தில் வெளிநோக்கி செய்கை காட்ட அவள் மறுப்பாய் தலையை ஆட்டி மெல்ல தன் வலது கரத்தை அருகேயிருந்த தாதியின் புறம் நீட்டினாள்.

அவரோ வாயை பிளந்து அவளைப் பார்த்தார் .. இவ்வளவு நேரம் தான் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காது அடம் பிடித்தவள் அவனின் ஒரு மறைமுகமான மிரட்டலில் அடங்கிவிட்டால் அது அதிசயமல்லவா!

நர்ஸ்சின் கரம் ஊசியுடன் அவள் கரம் நோக்கி முன்னேற அவள் கரமோ நடுக்கத்துடன் பின் வாங்கியது.
தன்னை திடப்படுத்திக் கொள்ள கண்களை இறுக மூடிக் கொண்டாலும் அவள் சொல்பேச்சி கேட்காது மெல்ல ஒற்றை கண் திறந்து ஓரப்பார்வை பார்த்தது.

ஊசி கூர் முனை அவளை பார்த்து இளிக்க அவளுக்கோ உள்ளுக்குள் சில்லிட்டது. அருகிலிருந்த அஷ்வஜித்தின் கரத்தை தன்னை அறியாது அழுத்தமாய் பிடித்துக் கொண்டாள். அதை விரும்பாதவன் அவள் கரத்திலிருந்து அவள் கரத்தை உருவ முயற்சிக்க அதற்கு முன் அவள் அவனை தாவி அணைத்திருந்தாள்.

இதை எதிர்பாராதவன் ஒரு நிமிடம் அதிர்ந்து மீண்டான்.. ஆபத்திற்கு பாவமில்லையென்று தோன்றியதோ என்னவோ அவன் கரம் அவளை தழுவிக் கொண்டது.

மெல்ல நர்ஸ்சிற்கு சைகை செய்ய அவர் சிறு தலையசைப்புடன் அவள் உணராத அளவு மென்மையாய் ஊசியை ஏற்றி பஞ்சை வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அஷ்வஜித்தை பொறுத்தவரை தியாவுடன் காதல் கொண்டுள்ளானே தவிர்ந்து ஒரு போதும் அவனாய் அணைத்துத் தழுவியது கிடையாது, அவளால் வந்து அணைத்தால் தான் உண்டு.. ஆனால் இன்று அவன் கரம் எழுந்து இவளை தழுவியதன் காரணம் அவனிற்கே புரியவில்லை ..

அவளை விலக்க முயற்சிக்க அவளோ பயத்தில் அவனை உடும்புப்பிடியாய் பிடித்திருந்தாள்.

"ப்ச்" அதிகமாய் சலித்துக் கொண்டான் அவன்.

"நீ தள்ளிப் போனாதான் என்னால இங்கிருந்து நகர முடியும்" தன் கரத்தை விலகிக் கூற அவள் மெல்ல விழிகளை உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அந்த நர்ஸ் இல்லை என்பதை அறிந்து கொண்டு விலகிக்கொண்டாள்.

"ஐய்யய்ய.. அவங்க போய்ட்டாங்களா" என்று கண்கள் மின்ன சிறு குழந்தையை போல் குதூகளிப்புடன் வினவ, அவனுக்கு அவள் செய்கை சிறிது நேரத்திற்கு‌ முன் நடந்த விடயத்தை‌ நினைவு‌ படுத்தியது.


தொடரும்..

#அஸ்திரம் 54
 
Status
Not open for further replies.
Top