வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய காதல் நிலவே - கதை திரி

Status
Not open for further replies.
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் 15 போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 15:


அதிகாலையில் விழித்த அஷ்மிதா தனது அன்றாட பணியை எப்பொழுதும் போல செய்து முடித்திருந்தாள்.


தனக்கு சாப்பாடு கட்டி கொண்டவள் தன் மகனிற்கும் சேர்த்து அவனிர்க்குறிய பையில் எடுத்து வைத்தவள் அவனை எழுப்புவதற்காக சென்றாள்.


ஆழ்ந்த நித்திரையில் இருந்த தன் மகனை ரசித்தவள். முதலில் அறையை ஒழுங்கு செய்ய துவங்கினாள்.


அப்பொழுது ஏதோ ஒலி தன் சேவியை அடைய ஒலி வந்த திசையில் தன் காதுகளை கூர்மையாக்கி கேட்டாள்.


அந்த ஒலி தன் மகனுடையது என்றதும் புருவம் முடிச்சிட அருகே சென்று பார்த்தாள். குழந்தையின் கண்கள் திறக்கவே இல்லை.


அது தனது பிரம்மை என்று திரும்ப எத்தனித்த நேரத்தில் மீண்டும் குழந்தையின் குரல் கேட்க தன் சேவியை குழந்தையின் வாய் அருகே கொண்டு சென்றாள்.


"காதுல போனும் தாதி குதித்து போ பிச்" என்று குழந்தை கெஞ்சுவது போல பேசுவது அவள் காதுகளில் விழ அவனின் "தாதி" என்ற வார்த்தை அவளை உறைய வைத்தது.


தான் குழந்தையை பெற்று வளர்த்த இந்த நான்கு ஆண்டுகளில் அவன் இவ்வாறு ஏங்கியது இதுவே முதல் முறை. என்ன நடந்திருக்கும் என்று அவளால் உகிக்க முடிய வில்லை.


இருந்தும் வேலைக்கு நேரமாவது புரிய இந்த விடயத்தை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள் குழந்தையை பள்ளிக்கு தயார் செய்தாள்.குழந்தையை தான் வேலை பார்க்கும் அதே பள்ளியில் விளையாட்டு முறையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் மழலையர் பிரிவில் விட்டு விட்டு குழந்தையின் ஆசிரியரிடம் வந்தாள்.


"மேம் நேத்து யாராவது ருத்ரா கிட்ட அவனோட அப்பாவை பத்தி பேசுனாங்களா" என்று கேட்க.


"இல்லையே மேம் அப்படி பேசவும் வாய்ப்பு இல்லயே" என்று யோசித்தவர். பின்பு ஏதோ நியாபாகம் வந்தவராக "நேத்து திடீர்னு மீட்டிங்னு சொல்லிட்டாங்க அதுனால ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய போய் வேற ஒரு ஸ்டாஃப் கூப்பிட போனேன். ஒரு வேளை அந்த கேப்ல யாரும் பேசிருபாங்களோ" என்று யோசிக்க.


அவர் கூறியதை கேட்டவள் "ஹோ அப்படியா மேம் இட்ஸ் ஓகே. நோ பிராப்ளம் நான் பாத்துக்கிறேன் சாரி மேம் டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்" என்றுவிட்டு தன் மகனுக்கு கை அசைத்து விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.


அவள் யோசனையுடன் வெளியே வர எதிரே வந்த நபரை கவனிக்க தவறினாள்.


கவனிக்க தவறியதாள் எதிரே வந்தவன் மீது மோதி கீழே விழ இருந்த சமயம் அவளை தாங்கினான் அவன்.


அதில் சற்று தடுமாறி அதிர்ந்து தெளிந்தவள் தன்னை தாங்கியவனை கண்டதும் கோவம் கொப்பளித்ததுடன் உடல் கொதிக்கும் எண்ணெயை தன் மேல் உற்றியதை போல பற்றி எரிந்தது.


இருக்கும் இடம் பொருட்டு தன் கோவத்தை அடக்கியவள் வலுக்கட்டாயமாக தன் உதடை இழுத்து பிடித்து சிரித்தவள். நன்றி கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றாள்.


இங்கு நடப்பதை தூரம் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாமல் நடந்தவை போன்றே தெரியாது அபத்தமாகவே தெரியும்.


அதை போன்று தான் தெரிந்தது அவனது கண்களுக்கும். ஆம், இந்த காட்சியை மறைகாணி (கண்கானிப்பு கருவி) வழியே தன் கணினியில் பார்த்து கொண்டிருந்தான் அனிஷ்.


அவனிற்கு கோவம் கரை புரண்டொட தனது அருகே இருந்த கண்ணாடி லோட்டவை (தம்ளர்) பிடித்திருந்தவனின் கோவம் முழுவதையும் அதில் காட்டினான்.


அவனின் சக்தி முன் துள் துளாக உடைந்து அவனது கையை பதம் பார்த்தது. கண்ணாடி உடைந்த சத்தத்தில் ஒரு சிறிய குறிப்பு சீட்டில் உள்ள தாளில் எதையோ கிறுக்கி கொண்டிருந்த அந்த சின்ன சிட்டு திரும்பி பார்த்து "தாதி என்ன ஆச்சி" என்று கேட்டு கொண்டே அவனருகே வர.


அதில் சுயத்திற்க்கு வந்தவன் அதை குழந்தைக்கு காட்டாமல் மறைத்திருந்தான்.


வீட்டில் அன்று நடந்த சம்பவத்திற்றுக்கு பின் அவன் யாரையும் நம்ப தயாராக இல்லை.


ஆகவே தன்னுடன் தன் செல்ல சிமாட்டியை அழைத்து வந்திருந்தான். மறைகாணி வழியாக நடப்பவற்றை பார்த்து கொண்டிருந்தவன் அனைத்தும் சரியாக சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. ஆதலால் அடுத்த திரையில் தன் கண்ணை பதிக்க அஷ்மிதா மழலையர் வகுப்பில் இருந்து வருவதை கண்டு அவளை பார்த்து கொண்டிருந்தவன் ஹேம்மந்த் மீது மோதியதை பார்த்து ஆத்திரம் அடைந்ததன் விளைவு கைகளில் காயம்.


அந்த கைகளுடன் தன் மகளை பார்த்து கொள்ள முடியாததால் அவளை மழலையர் வகுப்பில் விடுவத்தர்க்கு முடிவெடுத்தான்.


காரணம் கண்ணாடி துண்டு ஒன்று கையை நன்றாக பதம் பார்த்திருந்தது. அதனால் குருதி அதிகமாக வெளியேறி இருந்தது.


தன் கைகளை மகளிடம் இருந்து மறைத்தவாறு அஷ்மிதா தன் மகனை விட்டு சென்ற வகுப்பிற்கு அடுத்துள்ள வகுப்பறையில் அவந்திகாவை விட்டு விட்டு பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டுத் திரும்ப.


அங்கே ஒரு மரத்தடியில் குழந்தைகள் சிலர் விளையாடி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் அவர்களுடன் விளையாடாமல் கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்திருக்க அக்காட்சியை கண்டவன் வெகு நாட்களுக்கு பிறகு தன்னை மறந்து சிரித்து விட்டான்.


ஒருவரின் சோகம் பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்குமா என்றால் இதோ இக்காட்சியே அதற்கு சாட்சி.


ஏனெனில் தன்னவள் அவளது சோகத்திலும் அவனிற்கு மகிழ்ச்சி கொடுப்பவள் ஆயிற்றே. அவளும் ஏதேனும் வேண்டும் என்றால் இப்படி தானே அமர்திருப்பாள் என்று அவனது அனுமதி இல்லாமல் அவளின் நியாபகம் அவனை ஆக்கிரமித்தது.


இருந்தும் அதனை ஒதுக்கியவன் அச்சிறுவனை நோக்கி நடந்தான். அவன் அருகே செல்ல செல்ல அச்சிறுவனின் முகம் மிகவும் பரிட்சயமான முகமாக தோன்ற வேக எட்டு வைத்து அவனை அடைந்தான்.


முதலில் எவ்வாறு அச்சிறுவனின் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் யோசித்து கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது ஒரு குரல்.


"எச்சுஸ்மி அங்கிள் கொஞ்சம் ஒதமா பொங்க எனக்கு மதைக்கு" என்று அவனிடம் பேச.


அதில் தலை அசைத்து சிரித்தவன் அவன் உயரத்திற்கு அமர்ந்து "இங்க இருந்து பாக்குறதுக்கு பதிலா அவங்க கூட போய் விளையாடலாம்ல" என்று கேட்க.


அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு "ஐயோ அங்கிள் நான் தான் அவங்க தெல்லாரு குதவும் டூ விட்டுட்டேன் இது குத தெய்யாதா" என்று தன் தலையில் அடித்தவாரு கூற.


அதை கேட்டு சத்தமாக சிரித்து விட்டான் அனிஷ். பின்பு "என் சண்ட போட்டிங்க. அவங்க என்ன சொன்னாங்க உன்ன பத்தி. யாரு கிட்டையும் சண்ட போட கூடாதுனு உங்களுக்கு தெரியாதா" என்று கேட்க.


அதற்க்கு அவனது மனசாட்சியோ "அதை நீ சொல்ல கூடாது ராசா" என்று கேலியாக சிரிக்க. அதை அவன் முறைத்த முறைப்பில் வாயை முடிகொண்டது.


"அங்கிள் அவங்க தெல்லாரும் என் தாதி பத்தி கேதாங்க எனக்கு தாதி தெய்யாதுல. பின்ன அவரை கேத்தா என்ன தொல்ல. அதோ இதுகான்ல மாது அவன் தாதி பெய்ய காது வச்சிருகாது என் அம்மா கித்த இல்லல அதான் கிந்தல் தெய்யுறான்" என்று தான் சண்டை இட்ட கதையை கூற.


அனிஷின் முகமோ யோசனையில் அவனது உரையாடலில் அவன் கூரிய "பெய்ய காது" என்ற வார்த்தையில் தேங்கி நின்றது.


பின்பு தான் புரிந்தது அது 'காது' அல்ல 'கார்' என்று. பின்பு அவன் கூரிய அம்மா அப்பா இல்லை என்ற வாக்கியத்தில் அவன் மனம் கனத்து போனது.


காரணம் அவன் அறிவானே தனி ஒரு மனிதனாக குழந்தையை வளர்ப்பது அவளவு எளிதான காரியம் அன்று.


இப்பொழுது அதிகரித்து வரும் விவாகரத்தும், சரியான புரிதல் இல்லாத உறவு முறையும், கோவம் எனும் அரக்கன் செய்யும் வேலைகளும் குடும்பத்தை சின்னா பின்னா மாக்குகிறதே.


அது மட்டுமா அதில் பெரிது பாதிக்க படுவது சிறியவர்களே. பெரியவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மட்டுமே பெரிதாக மதிகின்றனரே ஒழிய சிரியவர்களையும் அவர்களின் எதிர்காலத்தையும் கிச்சித்தும் நினைப்பதில்லை.


ஆணிற்க்கு குழந்தையை வளர்ப்பது மட்டுமே அவனை பொறுத்தவரை சவாலான விடயம்.


அதுவே பெண் என்றால் குழந்தையை சமாளிப்பதுடன் இந்த சமுதாயத்தின் எச்சுகளையும் பேச்சுக்களையும் தவறான பார்வையில் இருந்தும் தவறாக பார்ப்பவரிடம் இருந்தும் சமாளித்து வருவது சவாலிர்க்கும் மேலான விடயம்.


அதை அறிந்தவன் என்பதால் அக்குழந்தையின் தாயிற்காக வேதனை அடைந்ததுடன். அக்குழந்தையின் பால் அவனையும் அறியாமல் அன்பு உற்றெடுத்தது.


"அவ்வளவு தான என் கிட்ட அவன் அப்பா வச்சிருக்கிற கார விட பெரிய கார் இருக்கு வா நம்ம ஒரு ரவுண்ட் போகலாம்" என்று கூற.


"வெந்தாம் அங்கிள் தெய்யாதவங்க குபித்தா போக குதாதுனு அம்மா தொள்ளிருகாங்க" என்று கூற.


அவனது மனம் தன் மகளை நினைத்து கலங்கியது. நிகிதா எனும் அரக்கியை வெளி ஆலென்றும் பாராமல் தாயின் பாசத்திற்கு நெருங்க அவளை தள்ளி விட்டதை நினைத்து நரம்பு புடைத்தாலும் தாயின் வளர்ப்பு வேறு என்றே அவனது மனம் அடித்து கூறியது.


என்ன தான் தன் மகளிர்க்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தும் பக்கத்தில் இருந்து அரவணைத்து அனைத்தையும் சொல்லி தர தாய் இல்லாததை நினைத்து கலங்கவே செய்தது.


தன் மகவை இப்படி தவிக்க விட்டு சென்றவள் மீது ஆத்திரம் கரை புரண்டோட. கையில் காயம் ஏற்பட்டதை மறந்து கை முஷ்டியை மடக்க அது தந்த வேதனையில் 'ஷ்ஷ்' என்று முனங்க.


அவனது முகம் வேதனையில் மாறுவதை கண்டு "அங்கிள் என்ன ஆச்சி" என்று அவனது கையை பிடித்து கேட்க.


அதில் இருந்த காயத்தை கண்டு "ஐயயோ நெத்தம்" என்று அலறியவன். பின்பு வேகமாக தன் அருகில் வைத்திருந்த தண்ணீர் குடுவையில் தனக்கென்று வைத்திருந்த தண்ணீரை அவனது கையில் உற்றி அதை கழுவ செய்தான்.


மீதம் இருந்த தண்ணீரை அவனை பருக செய்து அவனது தாய் அவனுக்கென்று எப்பொழுதும் கொடுத்தனுப்பும் முதலுதவி மருந்தை தனது கால் சட்டையில் இருந்து எடுத்து அவனிற்கு தடவியவன். தனது கைக்குட்டையை அந்த காயத்தின் மீது கட்டி விட்டான் அச்சிரிய மருத்துவன்.


"தோம்ப வலிக்குதா அங்கிள் சிக்கிதம் சதி ஆயிதும்" என்று அந்த காயத்தில் மீது உதடு குவித்து உத.


அதில் மென்னகை புரிந்தவன் "இதுலாம் உங்களுக்கு யாரு சொல்லி தந்தாங்க" என்று கேட்க.


"எங்க அம்மா தெப்பவும் நான் கிழ விதுந்து அழுவென் அதுனால இது தேப்பவும் உன் கித்த இதுகணும்னு அம்மா தந்தாங்க" என்று கூற.


"நல்ல விசயம் நிறைய சொல்லி தந்திருக்காங்க உங்க அம்மா. ஒரு காலத்துல எனக்கும் இப்படி தான் ஒரு ஜீவன் சொல்லி தருவா" என்று மனதினுள் புலம்பியவன்.


பெருமூச்சு ஒன்றை விட்டு "நீ எனக்கு இவ்வளவு ஹெல்ப் செஞ்சிருகல்ல சோ நான் உன்னை ஒரு ரவுண்ட் என் கார்ல குடிட்டு போறேன் அஷ் அ ஃப்ரெண்ட்டா ஓகே" என்று கேட்க.


ஏதோ அறிய வகை கண்டு பிடிப்பை கண்டு பிடிக்க போவதை போல விரலை தன் நாடியில் வைத்து யோசித்தவன். "ஓகே அங்கிள்" என்று தன் கட்டை விரலை காட்டினான்.


அவனை வாரி அனைத்து முத்தமிட்டு அவனது வகுப்பில் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரிடம் சொல்லி விட்டு அவனை அழைத்து சென்றான்.


அச்சிறுவனின் உண்மை கதை தெரிய வரும் போது என்னாகுமோ?


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️ 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் 16 போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 16:


அந்த களோபரதிர்க்கு பிறகு அவளுடன் இருந்து சமாதானம் செய்தவன். இன்று நடந்த பல நிகழ்வுகளினால் மனம் சோர்திருப்பாள் என்று அறிந்தவன் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற பிறகே அவ்விடம் விட்டு நிங்கினான்.


வெளியே செல்லும் முன் "அம்மா அவ ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருக்கா டிஸ்டிரப் பண்ணாதீங்க. நான் ஸ்கூல் வர போய்ட்டு வந்துரென். அவ கேட்டா சொல்லிறுங்க" என்று மேசை மீது இருந்த வாகன சாவியை எடுத்து கொண்டு சென்றிருந்தான்.


"ஆமா பெரிய மகாராணி வேலைய வெட்டி முறிச்சிட்டு வந்து தூங்கரா. அவ எப்படி தூங்கரானு நானும் பாக்குறேன்" என்று வெஞ்சினதுடன் சமையலறையுல் சென்றார்.


(மை மைண்ட் வாய்ஸ் "அடேய் நீ சும்மா போயிருந்தா கூட அந்த பொம்பள சும்மா இருந்திருக்கும். சும்மா இருந்தத சொரிஞ்சி விட்டுட்டு போயிருக்கியே டா என்ன நடக்குமோ")


சமையலறையுல் சென்றவர் கையில் ஒரு குவளையில் தண்ணீருடன் வந்தார்.


நேராக தன் மகனின் அறையினுள் சென்றவர் மெத்தையில் நன்கு நித்திரையில் இருந்த ஈஷ்வரியின் முகத்தில் வேகமாக ஊற்றினார்.


அதில் முதலில் பதறி எழுந்தவள் பின்பு காளி அவதாரம் எடுத்திருந்தாள்.


"வயசான மூளையை வீட்டு மூலையில் வச்சிருவிங்களா. அறிவிள்ள தூங்கரவங்கள இப்படி தான் எழுப்பி விடுவிங்களா" என்று கோபத்தின் உச்சியில் இருந்தவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தார்.


"பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியல இதுதான் நீ வளந்த லட்சணமா. அது சரி யாராவது மரியாதை சொல்லி கொடுத்து வளத்திருந்தா தான மரியாதைனா என்னனு தெரியும். ஆளத்த அனாதைக்கு என்னத்த தெரிய போகுது" என்று கூறவும்.


அவ்வார்த்தை குத்திட்டியாக மனதை துளைத்து சரியாக வேலை செய்தது அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய துவங்கியது.


"ஹும்ம் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. அங்க அடுப்பாங்கரைல போட்டது போட்ட மாதுரி இருக்கு போய் எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு மதியத்துக்கு ஏதாவது செஞ்சி வை" என்று விட்டு சென்றிருந்தார்


மணவலியுடன் அறையை விட்டு வெளியே வந்தவள் அங்கே நீள் சாய்விருக்கையில் தன் கணவனின் தங்கை படுத்திருந்து கைபேசியில் எதையோ பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவள்.


தனது மாமியாரை பார்த்து இவளை வைத்து செய்திருக்கலாமே என் என்னை இவ்வாறு செய்கிறாய் எனும் விதத்தில் பார்க்க. அது அவரை சிறிதும் பாதிக்கவில்லை.


அவரும் அந்த நீள்விருக்கையில் அமர்ந்து தன் மகள் கால்களை மடி மீது வைத்து கொண்டு தொலைக்காட்சியை பார்க்க துவங்கினார்.


சமையலறையுல் சென்றவள் அது இருந்த அலங்கோலத்தை பார்த்து அதிர்ந்திருந்தால். ஏனெனில் அங்கு அனைத்தும் வேண்டுமென்றே கலைத்து வைக்கப்பட்டிருந்தது.


விரக்த்தி புன்னகை ஒன்றை சிந்தியவள் அனைத்தையும் சரி செய்ய ஆரம்பித்திருந்தாள்.


அனைத்தையும் சரி செய்து சமையலையும் முடித்தவுடன் அவர்களுக்கு சாப்பாடு பரிமாறினாள்.


அதிலும் குறை கூறிக்கொண்டே சாப்பிட்டவர் தட்டில் எதுவும் மிச்சமின்றி அனைத்தையும் சாப்பிட்டு முடித்திருந்தார்.


மீண்டும் பாத்திரம் அனைத்தையும் கழுவி முடித்தவளிர்க்கு பசி வயிற்றைக்கிள்ளயது.


ஒரு தட்டை எடுத்து வைத்து சோறு போடவும் வேகமாக அவளருகே வந்தவர்.


தட்டில் இருந்த சாப்பாட்டை பாத்திரத்தில் தட்டி விட்டு "கட்டுன புருசன் சாப்பிட்டானா இல்லயானு தெரியல அதுகுள்ள கொட்டிகணுமா உனக்கு" என்று விஷம் உமிழுவதை போல அவள் மேலே உமிழ அவ்விடம் விடுத்து வீட்டின் பின் புறம் இருந்த மாமரம் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.


அவளிற்கு பிடித்த மரம் எதுவென்று கேட்டாள் அவள் கூறுவதும் மாமரமே.


சிறுவயது முதல் அவள் விரும்பி அடைக்கலம் தேடுவதும் அம்மரமே. ஏனோ அதன் அருகே இருக்கும் போது தன் தாய் தந்தையுடன் இருக்கும் பாதுகாப்பு உணர்வு, தாயின் மடியில் கிடைக்கும் கத கதப்பு என்று அனைத்தையும் உணருவாள்.


தாயின் மடி தேடும் சேயாய் அதன் அடியில் சென்று அமரவும் அவள் நினைத்தது போலவே ஆறுதல் கிடைத்தது அங்கு.


அது தந்த ஆறுதலில் மனம் சற்று லேசாக அவளையும் அறியாமல் அவள் மனம் தான் பிறந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கிராமம் நோக்கி சென்றது.


கண்ணனின் தாயார் கூறுவதை போன்று அவள் ஏழையோ ஆள் இல்லாத அனாதையோ அல்ல.


ஆம், ஈஸ்வரியின் பூர்விகம் சுத்தமல்லி கிராமமே. அக்கிராமத்தில் வசிக்கும் பெரிய குடும்பமே அவளது குடும்பம் இன்னும் சொல்ல போனால் அவள் அக்கிராமத்தின் செல்ல பிள்ளை.


அக்கிராமத்தின் பெரிய வீடே அவளது வீடு. அங்கு வசிக்கும் மக்களால் பண்ணையாரம்மா என்று அழைக்கப்படும் நாகேஸ்வரியே அவளது தாயார். மேலும் அங்கு வாழ்ந்து மறைந்த பெரிய மனிதரான சிமதுரையே அவளின் தந்தையார்.


பெரிய குடும்பமாக இருந்தாலும் அவர்களுக்கென்று குழந்தை இல்லாமல் தவித்தே வந்தனர்.


அவர்களை எட்டு வருடம் வாட்டி விட்டே பொக்கிஷமாக அவர்களின் கைகளில் தவழ்ந்தால் ஈஸ்வரி.


ஆதலால் பாசத்திற்கு பஞ்சமின்றி வளர்ந்தாள். என்னதான் பாசம் இருந்தாலும் அவளை சரியான விடயத்திற்கு கண்டித்தும் வளர்த்தார் நாகேஸ்வரி.அவர்களின் வளர்பினால் பாசமிகுந்தவளாகவும் பொருப்பானவளாகவும்

பக்குவமுள்ளவளாகவும் வளர்ந்தாள்.


அவளின் விருப்பத்திற்கு ஏற்றார் போலவே அங்கு அனைத்தும் நடக்கும்.


அவளின் ஆசையை நிறைவேற்றாமல் மற்ற வேலை பார்க்க மாட்டார் அவளின் தந்தை.


மகளின் ஆசை படி வீட்டின் அருகே மாமரம் ஒன்றை நட்டு அதை பராமரிக்க தனியாக ஒருவனை நியமித்தார்.


தன் மகளின் வார்த்தையே வேத வாக்காக நினைத்து செயல் படுபவரின் மகளும் தன் தந்தைக்கு சலித்தவல் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்திருக்கிறாள்.


உதாரணமாக அவள் சிரியவலாக இருக்கும் பொழுது ஒரு திபாவளி அன்று அவர் விளையாட்டாக "நீ தான் சரியான பயாந்தாங்கோலி உன்னால அந்த வெடி வெடிக்க முடியாது. முடிஞ்சா செய் பாப்போம்" என்று தன் மகளின் வெடி பயம் போக்க அவர் கூற.


அதை கேட்ட ஈஸ்வரி வெடி அடங்கிய அட்டை பெட்டியின் அருகே சென்றவள். அதில் இருந்த மருந்து அதிகம் இருக்கும் வெடி ஒன்றை எடுத்து கையில் இருக்கும் பொழுதே பற்ற வைத்திருந்தாள்.


"டம்" என்ற சத்தத்துடன் "அப்பா" என்ற சத்தமும் கேட்க திரும்பி பார்த்த துரை நாகேஸ்வரி தம்பதியினர் அதிர்ந்தனர்.


ஏனெனில் வெடி அவளின் கைகளில் வெடித்திருந்தது. "தாயி" "நான் பெத்த என் ராசாத்தி" என்று கூவிய வாரு அவளின் அருகே சென்று அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றனர்.


அதில் இருந்து விளையாட்டிற்கு கூட அவளிடம் ஆபத்தான எதுவும் எவரும் கூற மாட்டார்கள்.


இப்படி சிரும் சிறப்புமாக வளர்ந்த தன் மகள் படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறவும்.


"சொன்ன கேளு கண்ணு அதுலா சரி பட்டு வராது. நீ வேலைக்கு போனா தான் நாம சாப்ட முடியுமா. நீ சொன்ன உனக்காக செய்ய இந்த ஊரே இருக்கு கண்ணு. அம்மா சொள்ளுதென்ல கேளு கண்ணு" என்று அவளிடம் பக்குவமாக கூறி கொண்டிருந்தார் நாகேஸ்வரி.


"அம்மா நான் இங்க நம்ம ஊரு பக்கம் இருக்குற ஸ்கூல்ல தான வேலை பாக்க போறேன். வெளியூர் இல்லயே பின்ன என்ன மா" என்று சிணுங்க.


"அதுகில்ல கண்ணு உனக்கு கோவம் சாஸ்த்தி வரும். வந்தா வாய் கண்டிப்பா பேசாது கையி தான் பேசும். இல்லனா உனக்கு மேல இருக்குற ஆபிசரு"


"அம்மா அது பிரின்சிபால்" என்று பல்லை கடிக்க.


"ஆ அவரு தான் எதுகாச்சும் சத்தம் போடுவாரு நீ போயா நியும் உன் வேலையும்னு துக்கி துற எறிஞ்சிட்டு வந்துர்வ கண்ணு. இதுலாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா கண்ணு சொல்லு. அதும் இல்லனா நீ யாராச்சும் ஏதாவது செஞ்சாங்கனு ஒன்ற ஐயன் கிட்ட சொல்லுவ அவுக உடனே வறிஞ்சி கட்டிகிட்டு போவாக இது தேவையா கண்ணு. அதுக்கு நீ ஊட்டுளே இருந்தேனு வை அல்லாருகும் நல்லது" என்று தன்னை பெற்ற தாய் என்பதை தனது நிண்ட உரையை முடித்தவரை பார்த்து முறைத்தவள்.


மனதினுள் "இந்த தாயி கிழவி அப்படியே நம்மள பத்தி புட்டு புட்டு வைக்குது. அப்பா மனசு மாறிருவாங்களோ" என்று பாவமாக தன் தந்தையை பார்க்க.


அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவர் சிரித்தவாறு "அவ என்ற பொண்ணாக்கும் அப்புடி எதுவும் செஞ்சிர மாட்டா நீ போய்ட்டு வா கண்ணு" என்று கூற.


அவரை தாவி அனைத்தவள் தன் தாயை பார்த்து பலிப்பு காட்ட.


"ஐயாவும் மோவழும் நான் சொல்லுறது கேக்க மாட்டிகளே. உங்களுக்கு பட்டாதான் புத்தி வரும்" என்று புலம்பிய வாரு சென்று விட்டார்.


அவர் கூரிய வார்த்தையை கேட்டிருக்கலாம் என்று ஈஸ்வரி நினைத்த சமயம் காலம் கடந்திருந்தது.


ஆம், அவள் பணி புரிந்த பள்ளியில் பெரிய இடத்து பிள்ளை ஒருவனும் பணி புரிந்தான்.


அவன் தன்னுடன் பணி புரியும் சக ஆசிரியை ஒருவரிடம் தவறாக பேசி உள்ளான்.


அதை தன் தோழியான ஈஸ்வரியிடம் கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரம் அடைந்தவள் அவனிடம் இதை சென்று கேட்டதர்க்கு.


"ஆமா நான் தான் அப்படி சொன்னேன் நீ இத கேட்ட உன் கிட்ட சொல்லிட்டு இருக்க மாட்டேன் டைரக்டா செய்ய தான் செய்வேன்" என்று அவளின் இடையை தொட போக.


அவனின் கையை பிடித்து முதுகின் பின்னே முறுக்கியவள்.

ஓங்கி ஒரு குத்து அவனது மணிக்கட்டில் குத்த அது "டக்" என்ற ஒலியுடன் முறிந்தது.


"இனிமேல் எந்த பொண்ணு கிட்டையும் தப்பா நடந்துக்க நினைக்க கூட கூடாது நீ. அப்படி நினைச்ச நானும் உன் இந்த கையும் நியாபகம் வரணும்" என்று விட்டு சென்றாள்.


தன் பள்ளியில் நடந்ததை தந்தையிடம் கூறிகொண்டிருக்க "இதுக்கு தான் கண்ணு நான் அம்புட்டு துரம் சொன்னது. பாத்து சுதானமா இரு கண்ணு" என்று ஒரு தாயாய் கூறி விட்டு செல்ல.


அவளின் தந்தையின் முகம் யோசனையில் சுருங்கியது "எது வந்தாலும் நான் பாத்துக்கிறேன் கண்ணு நீ கவல படாத" என்று சொன்னவர் மகள் அறியாமல் அவள் கை உடைத்தவனை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்.


அவன் திருநெல்வேலி அரசியல்வாதியின் மகன் என்று அறிந்தவர் தன் மகளை கண் கொத்தி பாம்பாக பாதுகாத்தார் அவள் அறியாமல்.


அவளை சுற்றி ஓர் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தவர் தன்னை காக்க மறந்திருந்தார்.


ஈஸ்வரியின் பலம் பலவீனம் என அனைத்தையும் அறிந்திருந்தார் அந்த அரசியல்வாதி. அவளின் ஒட்டு மொத்த உயிரும் அவளின் தந்தை என அறிந்தவன் அவரிற்கு நாள் குறித்திருந்தான்.


அதன்படி அவர் வெளியூர் சென்று வந்த சமயம் அவரின் வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலே உயிரை விட்டிருந்தார்.


விடயம் கேள்வியுற்ற ஈஸ்வரிக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது. அனைத்தும் தன்னை சுற்றி சூனியமாக மாறியதாக ஒரு பிரம்மை.


தன் உயிர் தன்னை விட்டு போனது போல புழுவாக துடித்தாள். தன்னை விட்டாள் தன் தாயிற்க்கு எனும் உண்மை புரிய தன்னை தேற்றி கொண்டு தன் தாயையும் தேற்றினாள்.


தன் தந்தை தன்னை நிங்கி ஒரு மாதமானா நிலையில் தன் கவனத்தை வேறு விடயத்தில் செலுத்த துவங்கினாள்.


துவண்டு விடுவது தன் தந்தைக்கு புடிக்காது என்றரிந்தவள் ஆயிற்றே. இருந்தும் தன் தந்தையின் நினைவில் தனிமையில் அழுது புரண்டு வாடவே செய்தாள்.


இவ்வாறு நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு வித கோவத்தில் தன் தாய் சுற்றி திரிவதை கண்டாள். அதன் பொருட்டு அவரிடம் சென்று கேட்டவலிடம் பாய்ந்தார்.


"என்ற பேச்ச கேக்காம ஒன்ற இஷ்டத்துக்கு ஊரு சுத்திட்டு வம்பு வளத்ததுக்கு என்ற புருசன் உசுற குடுத்துறுக்காரு என்ற மகராசன். கோவத்த கோரனு எம்புட்டு தடவ சொல்லிருக்கேன் கேட்டியாடி பாவி மோவள. இப்படி என்ற புருசன் உசுர காவு வாங்கிட்டியே" என்று தாய் அலற.


இதுவரை தன்னை ஒரு சுடுசொல் சொல்லாத தனது தாயார் இவ்வாறு பேசவும் விக்கித்து நின்று விட்டாள். மேலும் அவர் கூரிய வார்த்தையில் கொதித்து விட்டாள்.


"இனிமே வெளிய எண்கிட்டும் போ கூடாது. உங்க ஐய்யா வேற இப்போ இல்ல எவன் குட சுத்துரனு எனக்கு எப்படி தெரியும். உன்ன ஒருத்தன் தலையில் கட்டுற வரைக்குமாவது ஒழுங்கா இரு" என்று கூறவும்.


"யாரு கிட்ட என்னமா பேசுறீங்க நான் எங்க அப்பாவோட பொண்ணாக்கும் அப்படி எவன் பின்னாடியும் சுத்துற அவசியம் எனக்கு இல்ல இதோட பேச்ச நிப்பாட்டுங்க" என்று கூறி தனது அறையின் கதவை ஓங்கி அறைந்து சாற்றினாள்.


போகும் தன் மகளை பார்த்தவர் தனது அடுத்த வேலையை பார்க்க சென்றார்.


ஆனால் அறையினுள் சென்றவளிர்க்கு தனது தாய் தன்னை அவ்வாறு பேசியது தாளவில்லை. மனதின் மீது பெரிய பாறாங்கற்களை ஏற்றி வைத்தது போன்று கனத்து போனது. அதிலும் தன் தந்தையின் சாவிற்கு தானே காரணம் என்று அவர் கூறியதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.


தான் இங்கு இருந்தால் தனது தாயை காயப்படுத்தி விடுவோமோ அல்லது ஊரும் தனது தாயை போல தன்னை துற்றுமோ என்ற எண்ணம் மேலோங்கியதுடன். தன்னை சந்தேகித்து இழிவாக பலி போட்டு பேசியது தனது தாயாகவே இருப்பினும் அவளது தன் மானம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் இரவோடு இரவாக சென்னை நோக்கி பயணபட்டாள்.


தனது மாமியாரின் பேச்சின் விரியம் தாளாமல் தான் சென்னை வந்ததை நினைத்து பார்த்து கொண்டிருந்தவள் வேலை செய்த களைப்பும் மரம் தந்த இதமும் சேர அதன் அடி பகுதியில் உறங்கி விட்டாள்.


தனது வேலைகளை முடித்து விட்டு பொழுதடைந்து புது மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி வந்தவன் அறையில் சென்று பார்க்க தன்னவள் அங்கு இல்லாததை கண்டு வீடு முழுக்க தேடி பார்த்து எங்கும் இல்லை என்றவுடன் தனது தாயிடம் கேட்க.


"அவளாப்பா அவலுக்கென்ன மகாராணி நல்லா கொராட்ட விட்டு தூங்குனா. நான் தனியா கஷ்ட பட்டு செஞ்சத மூக்கு முட்ட தின்னுட்டு அதை கொர சொன்னா அவ இஷ்டத்துக்கு கத்தினா இப்போ ஒன்னும் தெரியாத மாதுரி பின்னாடி மாமரம் பக்கம் மறுபடி தூங்கிட்டு இருக்கா" என்று அவர் செய்ததை அவள் செய்ததாக கூற.


அனைத்தையும் கேட்டவன் முழுவதையும் நம்பவில்லை அவளை பற்றி நன்கு அறிந்தவன் ஆயிற்றே அதனால் பெரிதாக அலட்டிகொள்ள வில்லை.


பின் வாசல் சென்று மாமரத்தின் அடியில் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். காரணம் யாரும் அற்றவள் போல தாய் தந்தையை தேடி ஓய்ந்த குழந்தை போல அவள் கால்களை குறுக்கி படுத்திருந்தாள்.


அதை கண்டவனின் மனம் தாளாமல் அவளருகே ஓடி சென்று மெல்ல துக்கி வந்து மெத்தையில் கிடத்தினான்.


அவள் விழிப்பதற்க்கும் அவளுடன் தனது வாழ்க்கையை புதிதாக துவங்கவும் அவன் காத்திருக்க விதியோ வேறொன்றை வைத்து காத்திருந்தது.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️ 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் 17 போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 17:


அச்சிறுவன் செய்யும் செய்கை அனைத்தும் தன்னவளை நினைவு கூறிவதாகவே இருந்தது. அவனின் அக்கறை பேசும்போது அவன் பயன் படுத்தும் வார்த்தைகள் மேலும் அவனது முக வடிவம் தனக்கு மிகவும் பரிச்சயமான முகமாகவே தோன்றியது.


ஆதலால் மீண்டும் பள்ளிக்கு சென்ற பிறகு அவனை பற்றி பள்ளியின் பதிவேட்டில் இருந்து அறிந்து கொள்ள நினைத்தான்.


அவன் அவ்வளவு எளிதாக யாருடனும் இப்படி ஒட்டி கொள்பவன் அல்ல தன் மகளை தவிர ஆனால் இச்சிருவனின் பால் தான் ஈர்க்க படுவதை அவன் உணரவே செய்தான்.


அதன் பொருட்டே அவனை பற்றி அறியும் ஆர்வம் அதிகரிக்க செய்தது.


ஆகையால் அவனின் ஏக்கம் திறக்க முடிவு செய்து அவனின் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லி விட்டு அழைத்து வந்து விட்டான்.


அவனை தனது கைகளில் ஏந்தி கொண்டவன் தனது வாகனத்தை நோக்கி நடை போட்டான்


தொலையியக்கி (ரிமோட் கண்ட்ரோல்) மூலம் தனது வாகனத்தை திறந்தவன். சிறுவனை முன்னிருக்கையில் அமரவைத்து இருக்கைப் பட்டையை போட்டு விட்டு மறு பக்கம் வந்து அமர்ந்தான்.


வாகனத்தை இயக்கியவன் பள்ளியின் வாயிற் பகுதியை தாண்டவும் தண்ணி லாரி ஒன்று வேகமாக மோதுவது போன்று வந்து "கிரீச்" என்ற சத்தத்துடன் அவன் வாகனம் அருகே நிற்கவும் சரியாக இருந்தது.


நூலிழை இடைவெளியில் சுதாரித்து வாகனத்தை திருப்பி நிறுத்தி இருந்தான் அனிஷ். பள்ளி காவலாளியிடம் "கேட்ச் ஹிம்" என்று சத்தமாக கூறி விட்டு அச்சிறுவனை பார்க்க.


அவனோ பயத்தில் தன்னை அறியாமல் அச்சிறுவன் "அப்பா" என்று அலறியிருந்தான். என்னதான் உயிர் போகும் தருவாயில் இருந்தாலும் அச்சிறுவனின் அப்பா என்ற வார்த்தை அவனை இதமாக வருடவே செய்தது.


அச்சத்தில் கோழிக்குஞ்சாக வெட வெடத்து கொண்டிருந்த சிறுவனை உடனே வாரி அணைத்து சமாதானம் செய்தான்.


"நீங்க பிரேவ் பாய் தான இதுக்கெல்லாம் பயபடலாமா. இப்படி பயந்தா எப்படி உங்க அம்மாவ பாத்துபிங்க" என்று அவனின் தாயை முன்னிறுத்தி அவனை சகஜமாக்கும் பொருட்டு பேச அது சரியாக வேலை செய்தது.


ஏனெனில் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனின் தாயை மைய படுத்தியே இருந்ததால் அவ்வாறு கூற அதுவும் சரியான இலக்கை அடைந்து அவனை சகஜமாக்கியது.


அவன் சமாதானம் ஆனதும் மீண்டும் இருக்கையில் அமர வைத்து விட்டு கதவை திறந்து கொண்டு இறங்கிய அனிஷ் நிச்சயம் சிறிது வினாடிக்கு முன் சிறுவனோடு விளையாடியவன் அல்ல.


இவன் தன் எதிரிகளை பார்வையில் கதற விடுபவன். தன் உயிரை குடிக்க நினைத்தவனை நோக்கி எட்டு வைத்தவன் முழு ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தான்.


அந்த வாகன ஓட்டியின் சட்டை பட்டியை பிடித்தவன் வாகனத்தை விட்டு சற்று நகர்ந்து அவனை இழுத்து வந்து வேகமாக அவனது மூக்கு உடையும் அளவிற்கு குத்தி இருந்தான்.


"சார் சார் மன்னிச்சிருங்க சார் தெரியாம பண்ணிட்டேன் இனி இப்படி நடக்காது சார்" என்று அவன் கெஞ்ச.


"ஸ்கூல் பக்கம் ட்ரைவ் பண்ணும் போது இவ்வளவு ஸ்பீட்ல போக கூடாதுனு தெரியாதா உனக்கு" என்று கர்ஜீத்தவன் அவனை மேலும் நான்கு உதை உதைத்த பின்னே சற்று ஆசுவாசம் அடைந்தான்.


உடனடியாக காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரியை அழைத்தவன் அவரிடம் அவனை ஒப்படைத்து விட்டு சென்றிருந்தான்.


அவன் வரும் வரை வாகனத்தில் காத்திருந்தவனிடம் தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டி விட்டு வாகனத்தை இயக்கி நிதானமான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது.


"நீங்க என் ஃப்ரண்டு தான" என்று அனிஷ் அவனிடம் கேட்க. அதற்க்கு அவனும் "ஆம்" எனும் விதமாக தலையை ஆட்டினான்.


அதற்க்கு புன்னகைத்தவாறே "அப்போ உங்க நேம் என்னனு சொல்லலாமா" என்று கேட்க.


"அச்சச்சோ நான் என் நேம் என்னனு சொல்லவே இல்லையா. மை நேம் இஷ் ருத்ரா" என்று கூற.


தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தியவன் அவனை ஆரத்தழுவி கொண்டான். காரணம் தன்னவளிடம் தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் அவனிற்கு அந்த பெயரை தான் வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு தேர்வு செய்த பெயரது.


"என்ன ஆச்சி அங்கிள்" என்று அவன் புரியாமல் கேட்க. "உன்னோட நேம் என்னோட ஃபேவரைட் அதான்" என்று கூறி அவனது கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தான்.


அதில் "அச்சச்சோ ஒதே எச்சி" என்று கன்னத்தை தன் தாயை போல துடைக்க. அதில் முதலில் அதிர்ந்தவன் பின் குறும்பு தலை துக்க வேண்டுமென்றே தனது நாவல் எச்சில் செய்தான்.


அதில் கிலுக்கி சிரித்த குழந்தை "தானும் திப்படி தான் தெய்வென் அங்கிள்" என்று கூற. அக்குழந்தையை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அதை வெளியில் காட்டி கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து சிரித்தான்


பின்பு அவனை குழந்தைகள் செல்லும் இடங்களுக்கு அழைத்து சென்று அவன் விரும்பியதை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்தான்.


இருவரும் நன்கு சுற்றி விட்டு சில பொம்மைகளை அவனுக்கு பரிசளித்து விட்டு பள்ளியில் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.


ருத்ராவை அவனது வகுப்பில் விட்டு விட்டு தனது அறைக்கு செல்லவும் அங்கு அவனின் அருமை புதல்வி முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்திருந்தாள்.


அவன் சென்ற சிறிது நேரத்தில் தனது தந்தையை தேடி வந்தவள் அவனை காணாது அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகை ஒலி கேட்டு அங்கு வந்த அஷ்மிதா பதறி ஓடி சென்று வாரி அணைத்திருந்தால்.


அழுகையில் கரைந்த குழந்தை அவளின் அரவணைப்பில் தன்னை அறியாமல் அடங்கியது. அழுகை குறைந்து விம்ம துவங்கிய குழந்தை "தாதி தாதி" என்று கூற. அதன் பின்பே தான் இருக்கும் அறையை கவனித்து பார்த்தாள்.


அது அனிஷின் அறை என்றதும் புருவம் சுருங்க குழந்தையை பார்த்தவள். அவளிடம் சென்று "யாரு நீங்க யாரை தேடி வந்திங்க என் அழுதுட்டு இருகிங்க" என்று மடியில் அமர்த்தி கேட்க.


"தாதித போனும் தாதி காணும் தாதித போனும் பசித்துது" என்று கண் கலங்க அவளிடம் கூற.


மற்ற அனைத்து வார்த்தையும் மறந்தவள் பசி என்றதும் தாய்மை ஊற்றெடுக்க அவளை தன்னுடன் அழைத்து சென்று தான் கொண்டு வந்த சாப்பாடை ஊட்டி விட்டாள்.


அதை நன்கு ரசித்து ருசித்து சாப்பிட்ட குழந்தை "தொம்ப தங்ஸ் ஆன்டி" என்று கூறி அவளை அணைத்து கொண்டாள்.


குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் "யூ ஆர் வெல்கம் வாங்க உங்க அப்பா கிட்ட குடிட்டு போரென்" என்று கூற.


"வேந்தாம் ஆன்டி கொஞ்ச நேதம் உங்க குத இதுக்கென்" என்று கூற. அவளிற்கும் குழந்தையை பிரிய மனம் இல்லை அவள் அவ்வாறு கூறவும் அவளுடன் விளையாட ஆரம்பித்துவிட்டாள்.


பள்ளியின் ஆண்டுவிழா நெருங்குவதால் பெரிதாக பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அது அவளிற்கு இன்னும் வசதியாக போனது.


அவளுடன் நன்கு விளையாடி சோர்ந்து போன குழந்தை அவள் மடியில் தூங்கியும் விட்டது.


தூங்கி கொண்டிருந்த குழந்தையை தலையை கோதி கொடுத்து கொண்டிருந்தவள் அவளின் "அஷு மா" என்ற அழைப்பு தித்திப்பை தந்தது.


இரண்டு மணி நேரம் நன்கு துங்கி விழித்த குழந்தை தூக்க கலக்கத்தில் "மிஸ் யூ அம்மா" என்று கூறி அவளது கழுத்தை கட்டிக்கொண்டு சிறிது நேரம் தூக்கத்தை தொடர்ந்தவள்.


"மிஸ் யூ அம்மாவா. அப்போ நிகிதா இவளோட அம்மா கிடையாதா" என்று யோசித்தவள். குழந்தையை விழிக்க செய்து தலை அனைத்தையும் சரி செய்து அனிஷின் அறையில் விட்டு விட்டு "அப்பா வெளிய பொய்ருகாங்க இப்போ வந்துறுவாங்க நீங்க கொஞ்ச நேரம் இங்க வெயிட் பண்ணுங்க" என்று கூறி மீண்டும் குழந்தையின் பஞ்சு கன்னத்தில் முத்தமிட்டு வெளியேறினாள்.


ருத்ராவை அவனது வகுப்பில் விட்டு விட்டு வந்தவன் தனது அறையில் தன்னை முறைத்த வண்ணம் இருந்த மகளை பார்த்த பின்பே அவளின் நியாபகாம் வந்து தான் செய்த தவறை உணர வைத்தது.


தன் மகளின் முன்பு மண்டியிட்டு மன்னிப்பு வேண்ட "போ தாதி தெனக்கு வயிது தொம்ப பசித்துது தெய்யுமா அஷு மா தான் தொரு தந்தாங்க" என்று நடந்ததை அவனிடம் கூற.


அவனின் நாடி நரம்பு அனைத்தும் விடைத்து கோவம் பெருகியது அவளின் மேல். அதை மகளிடம் காட்டாமல் சிரித்த முகமாக அனைத்தையும் கேட்டு கொண்டவன். "சாரி பேபி இனி அப்பா உன்ன தனியா விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன் இட்ஸ் அ பிராமிஸ்" என்று அவளிற்கு உறுதி அளித்தவன் சின்னவள் அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு சென்றான்.


தன் மகளை அவளின் அறையில் விட்டு விட்டு தனது அறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டவன் மெத்தையில் அசதியாக விழுந்தான்.


அவனின் மனக்கண்ணில் தன்னவலும் அந்த சிறுவனும் வந்து வந்து சென்றனர்.


துக்கம் கண்ணை சுழற்றி கொண்டு வர அவனின் அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன் தான் ஒருவனை இன்று காலை உயர் அதிகார காவலரிடம் ஒப்படைத்தவர் அழைப்பு விடுத்தார்.


"என்ன இப்போ கால் பண்ணுறாரு" என்று யோசனையில் இருக்க அழைப்பு ஒலி நின்று மீண்டும் அவரே அழைத்தார்.


உடனடியாக அழைப்பை இணைத்தவன் அவர் கூரிய விடயத்தில் அதிர்ந்து படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.


உடனடியாக தனது உடையை மாற்றிக் கொண்டு தனது வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு அவர் கூரிய இடம் நோக்கி விரைந்தான்.


பள்ளியில் அனிஷின் அறையில் குழந்தையை விட்டு வந்தவள் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது அவளுடன் விளையாடுகையில் உணவலித்த பொழுது தன் மடியில் உறங்க வைத்த பொழுது என்று அவள் வெகு நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியின் உச்சதினை அடைந்ததை போல உணர்தாள்.


பள்ளி மணி ஒலிக்கவும் தன் வகுப்பு மாணவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு வந்தவள் தன் மகனின் கைகளில் விளையாட்டு பொருட்கள் இருப்பதை பார்த்து விட்டு நடந்த வற்றை கேட்டு தெரிந்து கொண்டாள்.


அவனிடம் இருந்து பொருட்களை வாங்கியவல் தன் மகனை கண்டித்து விட்டு பொம்மைகள் அனைத்தையும் பள்ளிக்கே கொடுத்து விட்டாள்.


பின்பு அவனது வகுப்பு ஆசிரியரிடம் திரும்பி "இனி என் பையனை என்ன தவிர யாரு வந்து கூ என் பெர்மிஷன் இல்லாம அனுப்பாதிங்க மேம். மேம் அப்புறம் இன்னொரு ஹெல்ப் கொஞ்ச நேரம் இவன பாத்துக்கோங்க நான் சீக்கிரம் வந்துறேன்" என்று கூறி தன் மகனிடமும் விரைவில் வருவதாக கூறிவிட்டு தன் வகுப்பறை நோக்கி சென்றாள்.


அறையினுள் சென்று தாழிட்டவல் தனது பையில் இருந்த ஆடையை மாற்ற துவங்கினாள். அவள் தன் மகனின் வகுப்பிற்கு சென்று விட்டு மீண்டும் அவளது வகுப்பிற்கு வந்தது நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ஹேம்மந்த்.


அவள் உடை மாற்றுவதை தனது அலைபேசியின் மூலம் சாவி துவாரத்தின் வழியே பதிவு செய்து கொண்டிருந்தான்.


உடை மாற்றி விட்டு கதவை திறந்து கொண்டு வெளிய வர அவளை கைகளை கட்டிக்கொண்டு பார்வையால் துகிலுறித்தான்.


அதில் ஆத்திரம் எழுந்தாலும் அவனை கடந்து செல்ல முற்பட "மேம் இது நிங்களானு பாருங்க" என்று தான் பதிவு செய்த காணொளியை காண்பித்தான்.


அதை கண்டு அதிர்ச்சியுற்றவள் அந்த அதிர்ச்சி மாறாமல் அவனை பார்க்க.


"ஒரு புள்ளையை பெத்தாலும் உடம்ப சும்மா ஜம்முனு வச்சிருக்க. அன்னைக்கு என்ன அரஞ்சில்ல இப்போ நான் சொல்லுறத நீ கேட்டாகனும் இல்ல இன்டர்நெட்ல போட்டு உன் மானத்த வாங்கிருவென்" என்று மிரட்ட.


தன் மானம் காக்கும் பொருட்டு அவன் இச்சைக்கு அவள் இப்பொழுதே அவனுடன் இருந்தாக வேண்டும் என்று கூற. வேறு வழி இல்லாமல் தன் வகுப்பறையின் உள்ளே அவனது ஆசைக்கு இணங்கி சென்றாள்.


பதினைந்து நிமிடம் சென்ற பிறகு இருவரும் தங்களது ஆடையை சரி செய்து சிரித்து கொண்டு வருவதை வேறொருவர் காணொளியாக பதிவு செய்தனர்.


"சார் பிளீஸ் இதுக்கு அப்புறம் என்ன டிஸ்ட்ரப் பண்ணாதீங்க. அந்த வீடியோவை டெலீட் பண்ணிருங்க பிளீஸ்" என்று கூறி விட்டு தனது மகனையும் அழைத்துக்கொண்டு அவனிற்கு வேண்டும் பொருளை வாங்க கடைதெருவிற்கு சென்றாள்.


அது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் ஆதலால் சாலைகள் நன்கு பெரிதாகவே காண பட்டது.


அப்பொழுது அவள் சாலையை கடக்கும் பொழுது அவளது காதில் அந்த வார்த்தை கேட்டது. "அவ தான்டா அடிச்சி தூக்கு" எனவும்.


சத்தம் வந்த திசையை நோக்கி அவள் திரும்ப வெகு வேகமாக வாகனம் ஒன்று அவளையும் குழந்தையையும் நோக்கி வந்து கொண்டிருந்தது.


"அம்மாமா…" என்று அலறிய வாரு குழந்தையை அனைத்து கொண்டு சாலையில் அமர்ந்துவிட. "டம்" என்ற பேரோலியுடன் அவளை நோக்கி வந்த வாகனத்தை இன்னொரு வாகனம் வந்து இடித்திருந்தது.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️
 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் 18 போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 18:


தன்னை ஆறுதல் செய்து கொள்ள மாமரத்தடியை நாடியவல் தாய் மடியில் கிடைக்கும் சுகத்தை போல இருக்க அங்கேயே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றிருந்தாள்.


பள்ளியில் தன் வேலைகளை முடித்து விட்டு தாமதமாக வந்தவன் தன் தாயிடம் சென்று விசாரிக்க அவர் கூரிய விடயம் கேட்டு அவர் பால் கோவம் வந்தாலும் புதிதாக திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட கோவத்தில் அவ்வாறு செய்கிறார் என்று நினைத்தவன் அவ்விடத்தை பெரிது படுத்தவில்லை.


பின்பக்கம் சென்று பார்த்தவன் அவள் படுத்திருக்கும் நிலைகண்டு நிலை குலைந்து போனான்.


ஓடி சென்று அவளை வாரி தூக்கியவன் தன் அறையில் உள்ள மெத்தையில் படுக்க வைத்தான்.


குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டவன் அவளிற்கு தேனீர் வார்த்தது கொண்டு வந்தான்.


இதை பார்த்துக்கொண்டிருந்த அவனது தாய்க்கு பற்றிக்கொண்டு வந்தது.


"ஒரு சவரன் நகை கூட போடுட்டு வரல இவளுக்கு ஓஹோன்னு வாழ்க்கை" என்று கூறவும்.


"அதை வாங்கி போடத்தான் நான் இருக்கேன் மா. என்னை நம்பி வந்தவ மா அவளை எதும் சொல்லாதீங்க பிளீஸ்" எனவும்.


அவனது சம்பளம் அவரை வாயடைக்க செய்தது காரணம் மகளின் வருமானத்தில் மாத செலவுகள் மட்டுமே சரி செய்ய முடிந்தது.


எப்பொழுதில் இருந்து மகனின் வருமானம் வர ஆரம்பித்ததோ சற்று ஆடம்பர வாழ்க்கையுடன் தனக்கும் மகளிர்க்கும் நகைகளை வாங்கி வைத்தார்.


அதில் கை வைக்க இவள் வரவும் தனது ஆடம்பர வாழ்க்கை பறி போனதாக உணர்ந்தார்.


அந்த கோபத்திற்கு அவனின் இந்த செய்கையும் தூபம் போட அவள் அறையில் இருந்து வெளி வர காத்திருந்தார்.


(மை மைண்ட் வாய்ஸ் "அடேய் நீ கை கால் வாய் வச்சிட்டு சும்மா இருந்தாவே போதும் டா. இப்படி நீ செய்றது தான் டா உன் தாய் கிழவி வாட்டி எடுக்குது அவளை")


தேனிரை மேசை மீது வைத்தவன் அவளை காண அவன் அவளை படுக்க வைத்த இடத்தில் இருந்து சற்று உருண்டு படுத்ததால் அவளின் புடவை விலகி இருந்தது.


விலகிய புடவை வழியே தெரிந்த அவளின் இடையை பார்த்தவனை உனக்காகவே சுவாசிக்கும் என்னையும் கொஞ்சம் பார் எனும் விதத்தில் அவளின் மார்பு ஏறி இறங்க தான் கனவிலும் நடவாது என்று நினைத்தது நடந்து தனக்கு இல்லை என்று இருந்த தனது உயிரிலும் மேலானவள் தன் அறையில் தனக்கே உரிய மனைவியாக இருக்க அவனது காதல் கரை புரண்டோட ஆரம்பித்ததில் தன்னை மறந்து அவளை நெருங்கி இருந்தான்.


மிக அருகில் நெருங்கியவன் அவளை முத்தமிட இதழ் நோக்கி கூனிய பெண்களுக்கே உரிய இயற்கையான எச்சரிக்கை குணம் தலை தூக்க தன் முகத்தின் மீது நிழலாட அவனின் மூக்கில் வேகமாக குத்தி இருந்தால்.


அவள் குத்தியதால் ஏற்பட்ட வலியில் "அம்மா" என்று அலற அவனின் அலரலில் மெத்தையில் இருந்து வேகமாக இறங்கியவள் அவனின் வாய் மீது கை வைத்து "ஷ்ஷ்ஷ்ஷ் என்ன பண்றீங்க அக்கம் பக்கத்தில் இருக்குறவங்க என்ன நினைப்பாங்க தப்பா பேசுவாங்க பின்ன வெளிய தல காட்ட முடியாது. அது சரி எவ்வளவு தைரியம் இருந்தா என் ரூம்க்கு வந்து எனக்கே உம்மா கொடுக்க பாப்பிங்க உங்களை" என்று கையை முறிக்கிக்கொண்டு அவனை மீண்டும் நெருங்க.


முதலில் அவள் பேசியதை புரியாமல் பார்த்தவன் புரிந்ததும் அவளை முறைக்க அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் தனது மூக்கை பதம் பார்க்க வருபவளை கண்டு மிரண்டவன்.


"அம்மா தெய்வமே இது உன் ரூம் இல்ல நல்லா சுத்தி பாரு என்னோட ரூம்* என்று கூற.


சுற்றி பார்த்தவள் "அய்யயோ யாரோ என்னை கடத்திட்டு வந்து இங்க போட்டுட்டாங்க போல இப்போ நான் எப்படி வெளிய போறது. யாராவது பாத்தா தப்பாகிறுமே" என்று அங்கும் இங்கும் அவனது அறையை தனது கால்களால் அளந்தாள்.


அதை பார்த்து ரசித்தவன் அவளுடன் மேலும் விளையாடும் எண்ணத்தில் "போச்சி போச்சி என் மானம் மரியாதை எல்லாம் போச்சி இனிமேல் என்னை யாரு கட்டிபாங்க" என்று அவன் கூச்சலிடுவதை போல பாசாங்கு செய்ய.


அவனின் வாயை அடைத்து "நீங்களே எங்கப்பா கூதிரைல இல்லனு சொல்லுவீங்க போல கத்தாதிங்க பிளீஸ்" எனவும்.


"அதுலாம் எனக்கு தெரியாது இனி யாரு என்னை கட்டிபா வேற வழி இல்ல நீ தான் என்னை கட்டிகணும்" என்க.


"வாய்ப்பில்லை ராஜா" எனும் விதமாக அவனை பார்த்தவள். "உங்களை கட்டிகிறதுக்கு பதிலா அந்த குட்டி சுவதுல போய் முட்டிகலாம்" என்று கூற.


"அப்டியா அப்போ போயி முட்டு" என்க. அதற்க்கு அவள் "நே" என்று விழிக்க.


அவளது கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வெளியே போட்டவன் "போ போயி ஒழுங்கா முட்டு இல்ல நடக்கிறதே வேற" என்க.


அதன் பின்பே இன்று நடந்த அனைத்தும் நியாபகம் வர "ஹி ஹி" என்று அசடு வழிந்தவள் "சாரி பாவா" என்க.


அவளது "பாவா" என்ற அழைப்பு அவனை இதமாக வருடியது. அதில் அவள் குத்தியதால் ஏற்பட்ட வலி பறந்தொட இறுக்கி அணைத்திருந்தான் அவளை.


அவனது அணைப்பில் தன்னை மறக்க ஆரம்பித்தாள் பெண்ணவள். அவளை அணைக்கவும் தனது தாபமும் காதலும் போட்டி போட தான் தாபம் கொள்ள இது சரியான தருணம் இல்லை என்று உணர்ந்தவன்.


அவளை விட்டு விலகி தன்னை சமன் செய்து கொண்டவன் தான் கொண்டு வந்த தேநீரை அவளது கைகளில் கொடுத்தான்.


நன்றி கூறி தேனீர் வாங்கி பருகியவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து சமயலறை ஓடிவிட்டாள்.


வெட்க்கச்சிரிப்புடன் வருபவளை முறைத்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தார் அவனின் தாயார். சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவளின் சிரிப்பு துடைதெடுத்தார் போல அவள் இதழில் இருந்து மறைந்தது.


"என்ன அம்மணி ரொம்ப குஷியோ என் புள்ள என்ன சொன்னா வருசத்துக்கு ஒன்னு அப்படினு சொல்லி இந்திய சனதொகைய கூட்டலாம்னு பிளான் போடுறிங்களா" என்று சற்றும் கூச்சம் இல்லாமல் கேட்க.


அவளது முகம் அருவருப்பாக சுருங்கியது. "என்ன முகரைய காட்டுற ஒழுங்கா என் புள்ள கிட்ட இருந்து தள்ளியே இரு இல்லனா நடகுறதே வேற. அதையும் மீறி ஏதாவது நடந்து கரு உருவாச்சி அதையும் அழிக்க கூட தயங்க மாட்டேன். உன் கருவ நீயே கொள்ளனும்னு நினைக்க மாட்டேன் நினைக்கிறேன்" என்று அவர் சென்று விட.


இப்படியும் ஒரு பெண்மணியா என்று அறுவருத்து போனாள். அவள் கூறியது போல செய்யும் கேவலமான புத்தி கொண்டவள் என்று வந்த அன்றே தெரிந்து விட தன்னால் ஒரு ஜீவன் உயிர் நீப்பதை அவள் விரும்ப வில்லை.


ஆதலால் அவனை விலகி இருக்க முடிவெடுத்தாள். தன் புது மனைவி காதலியின் வரவை எதிர்நோக்கி காத்திருக்க.


அவன் எதிர் பார்த்த ஜீவன் அறையினுள் அடி எடுத்து வைத்தாள். அவனருகே வந்தவள் "பாவா எனக்கு பயங்கர டையேர்டா இருக்கு நான் தூங்கவா" என்று அவனது அனுமதி வேண்ட.


அவளை எந்த விதத்திலும் நோகடிக்க விரும்பாதவன் தனக்கு அவள் கூறியது ஏமாற்றம் அளித்தாலும் அவளிற்காக விட்டு கொடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்காமல் துயில் கொண்டனர்.


அதனை அறை சாளரம் வழியே பார்த்து கொண்டிருந்தார் கலைவாணி. அவர் அவளிடம் அவ்வாறு கூறியதன் காரணம் சிறிது காலம் சென்ற பின் அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அல்ல என்று கூறி அவர் பார்த்த வேறு பெண்ணை தன் மகனிற்கு மணம்முடிக்க முடிவு செய்திருந்தார்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல கணவன் மனைவி கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. அவனது பார்வையை அறிந்தும் தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலையை வெறுத்து போனாள்.


வருவது போல வரட்டும் என்று தன் கணவனின் ஆசையை நிறைவேற்ற நினைத்தாலும் அவர் கூறியதை செய்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சி காலம் முழுவதும் தன்னை துரத்தும் என்பதனால் கணவனின் ஆசையை நிராகரித்து வந்தாள் ஏதேனும் காரணம் சொல்லி.


ஈஸ்வரி பள்ளி செல்ல தயாராக அங்கு வந்த அவளின் மாமியார் "கண்ணா எனக்கு வயசாகி போச்சி பா தனியா ஒன்னும் செய்ய முடியல அதுனால உன் பொண்டாட்டி இனி வேலைக்கு போகாம என் கூட ஒத்தாசையாக இருக்க சொல்லு பா" என்று அவன் மறுக்க முடியாத வண்ணம் கூற.


தன் தாயின் பேச்சை கேட்டு தன் மனைவிடம் கூற ஆசிரியர் பணி தனக்கும் தன் மனதிற்கும் உயிராய் நேசிக்கும் ஒரு கடமையாகவே நிறைவேற்றி கொண்டிருந்தவள் தன் கணவனிற்காக விட்டு கொடுத்தாள்.


அன்றிலிருந்து ஈஷ்வரிக்கு எச்சுகளும் பேச்சுகளும் அதிகரிக்கவே செய்தது அனைத்தையும் தன் கணவனிற்காக தாங்கி கொண்டாள்.


நாட்கள் வாரங்களாக, வாரம் நாட்களாக செல்ல தன் மனைவி தன்னை தவிர்க்கும் காரணம் அறியாமல் பித்தனை போல சுற்ற துவங்கினான்.


விளைவு வீட்டில் மனைவியிடம் காட்ட முடியாத கோவத்தை பள்ளியில் காண்பிக்க துவங்கினான்.


அது இவளின் செபியை எட்ட தன் கணவனை நினைத்து கவலைக்கொண்டவள் தனது கையாலாகாத தனத்தை வெறுத்தால்.


ஆனால் விதியோ வேறொன்றை தீர்மானித்து வைத்திருந்தது. அன்று விடுமுறை என்பதால் திரைப்படத்திற்கு சீட்டு வாங்கி கொடுத்து தனது தாயையும் தங்கையையும் படம் பார்க்க அனுப்பி வைத்தான்.


இதை ஏதும் அறியாமல் தனது வேலைகளை முடித்து விட்டு வந்தவள் சற்று இளைப்பாற மெத்தையில் அமர்ந்தாள்.


உடல் அசதியில் அமர்ந்தவளை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அவளை படுக்க வைத்து கால்களை மெல்ல உருவி விட்டு வலி போக உதவி செய்தான்.


காரணம் அவள் வீட்டில் படும் அவஸ்த்தை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு தெரிந்தே வைத்திருந்தான். அவன் கால்களை பிடித்து விட்ட சுகத்தில் நன்றாக உறங்கி விட்டாள்.


தனது தாய் தங்கை இடம் பணம் சற்று அதிகமாகவே கொடுத்து நன்றாக சுற்றி பார்த்து விட்டு வரும்படி கூறினான். ஆதலால் அவன் அறிவான் அவர்களால் அவளிற்கு ஏதொறு சங்கடமோ தொந்தரவோ இல்லை என்று.


இரண்டு மணி நேரம் நன்கு உறங்கி எழுந்தவள் தான் சமையல் வேலை மட்டும் பாக்கி இருப்பதாக கூறி எழுந்து செல்ல முனைய.


அவர்கள் சாப்பிட வேண்டிய பதார்த்தங்கள் உணவு மேசையின் மீது இருக்க அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.


அவனை திரும்பி பார்த்தவள் "எல்லாமே நீங்க செஞ்சிங்களா பாவா எனக்காக வா" என்று விழியில் நீர் கோர்க்க அவனை தாவி அணைத்திருந்தாள்.


அவளின் அணைப்பில் அன்பு மட்டுமே நிறைந்திருந்தது அதில் காதலும் இல்லை காமமும் இல்லை. தான் விரும்பியதை செய்து கொடுத்த ஒரு தந்தையை அனைக்கும் மகளாய் அவனை அணைத்திருந்தாள்.


அவளை தன்னிலிருந்து பிரித்தவன் அமர வைத்து தான் செய்ததை தனது கரத்தினால் அவள் வயிறு நிறையும் வரை ஊட்டிவிட்டவன் எழுந்து செல்ல எத்தனிக்க.


அவனின் கரத்தை பற்றி நிருத்தியவள் அவனை அமர செய்து அவன் வாயருகே உணவை கொண்டு சென்றாள்.


இம்முறை அணைப்பது அவனின் முறையானது. ஏனெனில் இந்த தருணத்தை தன் தாயிடம் பல முறை எதிர் பார்த்து அது பொய்த்தும் போனதுண்டு. காரணம் தன் தாயிற்கு தன்னை விட பணமே பிரதானமாக தெரிந்தது.


மகிழ்ச்சி பெறுக அந்த உணவை வாங்கி கொண்டவன் அவள் கொடுத்த அனைத்தையும் உண்டு முடித்திருந்தான்.


அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்று சிறிது துரம் காலார நடந்து வந்து மீண்டும் தங்கள் வீட்டினை அடையவும் பொழுதும் சாய்ந்திருந்தது.


தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் நிலவை ரசித்து கொண்டிருந்தனர் இருவரும். அப்பொழுது அவனிற்கு அழைப்பு வர அதை எடுத்து பேசியவன் அவளை விட்டு சற்று நகர்ந்து சென்று பேசிவிட்டு திரும்பியவனின் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள் அந்த மெல்லிய நிலவோலியில்.


"தாயன்பு அறியாமலிருந்தேன்

அதனை நான் அறிய நீ வந்தாய்! காதலை கிச்சித்த்தும் - மதித்ததில்லை

உன் காதலால் அறிய வைத்தாய்!

சாபமாக இருந்த என் வாழ்வில் வரமாக வந்தவளே!

என் அழகிய காதல் நிலவே!!!

என்றும் நீ வேண்டும் என் வாழ்வில் ஒலி விசும் நிலவாக!!!"


என்று தன் ஒட்டு மொத்த காதலையும் கவிதையாக்கி அவளை பின்னிருந்து அனைத்து காதில் கூற.


அதில் சிலிர்த்தவள் அவனை இறுக்கி அவனை அனைத்து முத்தமிட்டிருந்தாள்.


இருவரின் காதலும் தாபதிற்கு தூபம் போட அவளை தன் கைகளில் ஏந்தி அறைக்கு சென்று ஒருவரின் காதலை இன்னொருவரின் காதலில் தேட துவங்கினர்.


அவர்களின் தேடல் நள்ளிரவில் முடியவும் அவனின் தாய் தங்கை வீடு வந்தடையவும் சரியாக இருந்தது.


மறுநாள் காலை உடல் அசதியில் தாமதமாக விழிக்க. அவளை பிடித்து கொண்டார்.


"வீட்டு மருமக முழிக்குற நேரமா இது. என் புள்ள உழச்சி ஒடா தேயிறான் உனக்கு உறக்கம் கேட்குதா" என்று தன் பாட்டை மீண்டும் ஆரம்பிக்க அதை காதில் போட்டு கொள்ளாமல் தனது அன்றாட பணியை சிறப்பாக செய்தாள்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு மாலை வேளை தலை கிறு கிறுக்க மெத்தையில் அமர்ந்து விட்டாள். பின்பே அவளது நினைவுக்கு வந்தது நாட்கள் தள்ளி விட்டதை.


அதில் முதலில் சிறு பதட்டம் தன் மாமியாரை குறித்து இருந்தாலும் தன் மணி வயிற்றில் உதித்த முதல் முத்தல்லவா அதை உறுதி செய்து கொள்ள நினைத்தவள் தெரு முனையில் உள்ள மருந்தகதிற்க்கு சென்று கருவை சோதித்து உறுதி செய்யும் கருவியை வாங்கி கொண்டு சென்றாள்.


கழிவறையில் நுழைந்து அந்த கருவியை சோதித்து பார்க்க அது அவள் கர்பமாக இருப்பதை உறுதி செய்து இருந்தது.


இந்த செய்தியை பிறரிடம் கூறி மகிழ முடியாத தன் நிலையை அவள் வெறுத்தாலும் தனக்கென்று ஒரு ஜீவன் தன் வயிற்றில் இருப்பதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் தன் மகிழ்ச்சிக்கு ஆயுள் மிக குறைவு என்று அவள் நினைக்க வில்லை.


அவள் சென்ற சிறிது நேரத்தில் ஈஷ்வரியின் மாமியார் அதே மருந்தகதிற்கு சென்று அவள் வாங்கியதை பற்றி விசாரித்து விட்டு மாத்திரை ஒன்றை வாங்கி கொண்டு வீட்டினை நோக்கி நடந்தார்.


பள்ளியில் இருந்து தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவனின் தலை பாரமாக இருக்க அதே மருந்தகத்தில் அதற்குறிய மாத்திரையை வாங்கி விட்டு அதேற்குறிய பணத்தை கொடுக்க.


மருந்தகத்தில் வேலை பார்க்கும் பையனோ "எண்ணனே ஆச்சி உங்க ஃபேமிலிக்கு எல்லாரும் ஒரே நாள்ல கடைக்கு வந்துட்டு போரிங்க" என்க.


அவனை புரியாமல் பார்க்கவும் அவனே தொடர்ந்தான் "அண்ணே

அண்ணி வந்து பிரேகனன்ஸி கிட் வாங்கும் போது அவ்வளவு சந்தோசமா இருந்தது" எனவும்.


அவன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தலை பாரம் தூரம் போனதாக உணர அடுத்து அவன் கூரிய செய்தியில் முழு ருத்ர மூர்த்தியாக மாறியவன் தனது வாகனத்தை புயல் போல வீடு நோக்கி செலுத்தினான்.


அந்த கடைக்காரன் கூரிய செய்தி "அண்ணி போன கொஞ்ச நேரத்துல உங்க அம்மா வந்து அபார்ஷன் பண்ண கூடிய மாத்திரையை வந்து வாங்கிட்டு போனப்போ ரொம்ப கஷ்டமா இருந்ததுணே" என்று கூறியதை கேட்டு கொதித்து விட்டான்.


விரைவாக வீட்டின் உள்ளே புயலாக நுழையவும் அவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது மேலும் அவனை கோபத்தின் உச்சிக்கு சென்றான்.


ஈஸ்வரி "அத்தை இந்த குழந்தை உங்க வீட்டு வாரிசு இதை என் களைக்க சொல்லுறீங்க" என்று மனம் தாளாமல் தன் குழந்தைக்காக போராட.


"நான் உன் கிட்ட என்ன சொன்னேன் என் புள்ள கிட்ட நெருங்காத இப்போ குழந்தை வேண்டாம்னு சொன்னனா இல்லையா. அப்படி கேட்குது உனக்கு ஆம்பள கொஞ்சம் கூட அடக்கமா இருக்க தெரியாது உன் முஞ்சிக்கு என் புள்ள கேட்குது. ஒழுங்கா இந்த மாத்திரை போட்டு கருவ கலச்சிரு இன்னொரு முக்கியமான விசயம் என் புள்ளைக்கு உன் வைத்துள்ள வளர்ற அசிகத்த பத்தி தெரிய கூடாது" என்று பேசி கொண்டே போக.


அவளிற்கு கோவம் தாங்காமல் வாய் திறக்க இருந்த சமயம் "அடுத்தவனுக்கு கரு உருவானதான் அது அசிங்கம் புருசனுக்கு பொண்டாட்டி புள்ளையை பெத்து கொடுத்தா அது என்னோட சிங்கம் அசிங்கம் இல்ல புரிஞ்சுதா" என்று கண்கள் சிவக்க கர்ஜித்திருந்தான்.


தனது மகனின் வரவை எதிபார்காதவர் "அது வந்து கண்ணா" என்று ஏதோ கூற வர அவரை கை அமர்த்தி தடுத்தவன்.


"அம்மான்ற ஒரே காரணத்துக்காக உயிரோட விடுரென். இனி என் முகத்துல நீங்க முழிக்க கூடாது. ஈஷு வாடி போலாம் இனி இந்த வீட்டுல ஒரு நிமிசம் இருக்க முடியாது இருக்க கூடாது. இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கும் என் குழந்தைக்கும் ஆபத்து" என்று தங்களது அனைத்து உடமைகளையும் மனைவியை தவிர்த்து விட்டு அவனே எடுத்து வைத்தான்.


போகும் முன் தன் தாயிடம் வந்தவன் "எந்த ஒரு அப்பாக்கும் என்னோட நிலையில குழந்தைய பத்தி தெரிஞ்சிக்குற நிலை வர கூடாது. எந்த ஒரு பொண்ணுக்கோ பையனுக்கோ உங்களை மாதிரி ஒரு அம்மா கிடைக்க கூடாது. நெவர் எவர் ட்ரை டூ கம் இன் மை லைஃப் அகைன்" என்று விட்டு தன் மனைவி இருந்த வீட்டிற்கு சென்று விட்டான்.


தன் மகனை தன்னிடம் இருந்து பிரித்து எதிர் வீட்டில் எதிரியாக அமர வைத்த ஈஸ்வரி மீது மேலும் வஞ்சம் வளர்த்து கொண்டார்.


தனியாக அவர்கள் வீடு மாறி சென்று எட்டு மாதம் கடந்திருந்தது. அவள் வயிறு வளர்ந்ததை போல அவர்களின் இடையே உள்ள காதலும் வளரவே செய்தது. அவளை தாயக தந்தையாக தோழனாக அனைத்துமாக கண்ணின் மணி போல பார்த்துக்கொண்டான்.


அன்று வழக்கம் போல மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிந்தனர் அங்கு தனது சொந்த ஊர்கார பெண்மணியை கண்டு நலம் விசாரித்தவள் தன்னை பற்றி தனது தாயிடம் ஏதும் கூற வேண்டாம் என்றும் கேட்டு கொண்டு திரும்பியவள் அதிர்ந்தாள்.


தனது கணவனின் காலில் ஒருவன் விழுந்து கதறி கொண்டிருந்தான். அதில் பதறியவள் அவன் அருகே விரைந்து நடந்ததை விசாரித்து தெரிந்து கொண்டவள் தனது கணவனிடம் அவனை மன்னித்து விடும்படி கூறினாள்.


"அது எப்படி டி விட முடியும் என் முன்னாடியே உன்ன ஒருத்தன் அசிங்கமா கிண்டல் பண்ணுவான் நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா" ஆம் அவன் ஈஷ்வரியை அவளின் உடல் வடிவத்தை கொண்டு கேலி பேசி சிரித்தான். அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்து கொண்டு பேசி முடித்துத்திரும்பியவனின் காதுகளில் அது விழ அடி வெளுத்து விட்டான்.


"சரி பாவா தெரியாம பண்ணிட்டான் விடுங்க" என்க அவள் சொன்னதும் விட்டவன் "ஜாக்கிரதை" என்னும் விதத்தில் எச்சரித்து விட்டே அவ்விடம் விட்டு சென்றான்.


அங்கிருந்து வீடு வந்தும் தன்னிடம் பேசாத கணவனை நினைத்து சிரிப்பு வந்தாலும் "பாவ்ஸ் என்ன இன்னும் கோவம் போலயா" என்க அவளை முறைத்து விட்டு திரும்பி விட்டான்.


"அப்போ கோவத்தை குறைக்க மாட்டிங்க அப்படி தான" என்று அவனை முறைக்க. "அவன் எப்படி பேசினான் தெரியுமாடி வர்ற கோவத்துக்கு அவனை கொன்னா கூட என் ஆத்திரம் அடங்காது" இப்படி அவன் பேசி கொண்டிருக்க அவனது கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க முதலில் அதிர்ந்தவன் கோவம் குறைந்து அவனும் அவளிற்கு மறு முத்தம் வழங்கினான்.


அதில் "ச்சீ எச்சி" என்று வேண்டுமென்ற கன்னத்தை துடைக்க அவன் அவனது நாவல் மீண்டும் எச்சில் செய்து குறும்பு செய்து விட்டே அவளை விட்டிருந்தான்.


இப்பொழுது தனது ஒன்பதாம் மாதத்தில் இருந்தவள் அன்று தனது கணவனிற்கு பூரி கிழங்கு செய்து கொண்டிருந்தாள்.


அப்படி செய்து கொண்டிருந்தவலிற்கு தனது அடி வயிற்றில் ஏதோ மாற்றம் ஏற்பட தனது கணவனை அழைத்து.


"பாவ்ஸ் என்ன மாதிரி பூரி போடுங்க நான் இப்போ வர்றேன்" எனவும். "அப்படியே உன்ன மாதுரி தான் போடணுமா" என கேட்க.


"ஷேப் கொஞ்சம் மாறுன பிரச்சனை இல்லை. முடிஞ்ச வர என்னை மாதிரியே போடுங்க" என்க. "டன்" என்றவன் அவள் கூரிய காரியத்தில் கண்ணாக ஈடுபட்டான்.


கழிவறை சென்று வந்தவள் தன் கணவன் செய்திருந்த பூரியை பார்த்து அதிர்ந்தவள் பின் கோவத்தில் பூரி கட்டையை வைத்து அவனை அடிக்க துரத்தினாள்.


"ஹே உன்ன மாதிரி தானடி போட சொன்ன அதான ஒழுங்கா உன்ன மாதிரியே போட்டேன் நல்லா தான டி இருக்கு" அவனை முறைத்தவள் "எது அது நான் போட்ட மாதிரியா இருக்கு" என்று மீண்டும் அவனை துரத்தினாள்.


காரணம் அவன் பூரி மாவில் அபாயம் குறியீடான எலும்பு கூடின் உருவத்தை செய்து பொறித்து வைத்திருந்தான்.


"நான் என்ன அந்த எலும்பு கூடு மாதிரி இருக்கேனா" என்று சிணுங்க.


"இல்லடி நீ அதே மாதிரி ரொம்ப டெஞ்ஜர் அதான்" என்று சிரிக்க. அவளும் தன்னை மறந்து சிரித்து விட்டாள்.


இருவரும் சிரித்து கொண்டிருக்க அவளின் அடிவயிற்றின் வலி திடீரென்று அதிகரிக்க அவன் கைகளை இறுக்கி பற்றி கொண்டாள்.


அவளின் முக மாறுதலை கொண்டே என்னவானது என்று யு

யூகித்தவன் விரைந்து சென்று அவளை வாகனத்தில் ஏறி மருத்துவமனை நோக்கி விரைந்தான்.


மகப்பேறு அறை வாயிலில் அவன் நின்று தன்னுயிர்காகவும் தன் உயிராகவே இருப்பவளிற்காகவும் வேண்ட துவங்கியது.


அவளையும் அவனையும் நன்கு சோதித்து விட்டு பூலோக தேவதையாக ஜனித்தாள் அவர்களின் செல்வ சீமாட்டி.


அதில் மிகவும் மகிழ்ந்தவன் மருத்துவரிடம் இருவரின் நலனையும் விசாரித்து தெரிந்து கொண்டவன் அவர் கூறியதை பின் பற்றினான்.


இருவரையும் தாயக தாங்கியவன் அவளின் தேவையை கண் அசைவு கொண்டு செய்து முடித்தான்.


எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் வேலையையும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது பார்த்து கொண்டான். அதன் பொருட்டு சர்வதேச பள்ளிகளில் சிறந்த பள்ளி பட்டியலில் இவர்கள் பள்ளி முதலிடம் பெற்றது.


அதனால் பள்ளியின் சார்பில் அவன் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. எப்படியும் அதனை முடித்து விட்டு வர இரண்டு வாரமாவது ஆகும்.


அதனால் தனக்கு பதிலாக வேறு எவரையும் அனுப்பும் படி கூற. பள்ளியின் முதலாளியோ "இது முழுக்க முழுக்க உங்களுக்கு கிடைத்தது இதில் வேற யாரும் பங்கு போட முடியாது. அதுனால நீங்க தான் போகனும் உங்க முழு செலவையும் நிர்வாகம் பாத்துக்கும். அப்புறம் என் சார்பா என் பொண்ணு உங்க கூட வருவா" என்று கூறி முடிக்கவும் அவனிற்கு அவன் பள்ளியின் முதல் நாளில் அவள் செய்த நிகழ்வு நியாபகம் வந்தது.


வேறு வழி இல்லாமல் "ஓகே சார்" என்று மட்டும் கூறியவன். தன் மனைவி இடத்தில் அந்த நிகழ்வோடு சேர்த்து அனைத்தையும் கூற.


"என் புருசன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க நானும் பெரிய லிஸ்ட் வச்சிருக்கேன் எனக்கும் பாபாக்கும் வாங்க வேண்டிய திங்ஸ்" என்று அவனை சகாஜமாக்கும் பொருட்டு கூற.


மனைவியின் காதலில் மயங்கியவன் தன் இரண்டு வார பிரிவை சரி செய்ய அவனை அவளிடம் தொலைத்து அவளை தேட துவங்கினான்.


விடியும் வரை அவனின் தேடல் துவங்கியது. "பாவா விடிஞ்சா பாபாக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே பிளீஸ் கொஞ்சம் எனக்கு ரெஸ்ட் வேணும்" என்க.


அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு விலகி படுத்தவன் அவளை விடாமல் அணைத்த வாரு உறங்கினான்.


சிறிது நேரத்தில் துயில் களைந்து எழுந்தவள் பிறந்த நாள் ஏற்பாடுகளை செய்ய துவங்கினாள். அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்தாள். பிறந்தநாள் வீடு கலை கட்ட அலையா விருந்தாளியாக அவளது மாமியாரும் வந்திருந்தார்.


நமது பண்பாட்டை மதித்து அவரையும் அழைத்து உட்கார வைத்துவிட்டு தன் கணவனிடம் விடயத்தை கூறினாள்.அவன் அவரை உள்ளே அழைத்து கோபம் கொள்ள "என்னை மன்னிச்சிடு பா நீ போனதுக்கு அப்புறம் தான் உன்னோட அருமை எனக்கு புரிஞ்சுது நீ வெளியூர் போரணு கேள்வி பட்டேன் மருமக தனியா கஷ்ட படாம நான் பாத்துக்கிறேன் பா" என்று கூற.


இருவருக்கும் நம்ப முடியவில்லை என்றாலும் மன்னிப்பு வேண்டுபவரை என்ன செய்வது என்று புரியாமல் ஏற்று கொண்டனர்.


அவன் வெளிநாடு செல்லும் நாளும் வந்தது. இருவரையும் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றவனிர்க்கு விதி தன் விளையாட்டை ஆரம்பித்து தெரியாமல் போனது விதியின் சதியே.


தன் வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு வெகு நாட்கள் கழித்து தன் மனைவி மகளை காண போகும் ஆவலில் வீட்டிற்கு வர வீடு பூட்டு போட பட்டிருந்தது.


எதிர் வீட்டில் இருந்து தன் மகளுடன் இறங்கி வரும் தன் தாயை பார்த்தவன் புருவம் சுருக்க அவர் கூரிய விடயத்தில் அதிர்திருந்தான்.


"அவ உன்ன விட்டுட்டு எவன் கூடையோ ஒடிட்டா பா" என்க. "இல்லை" என்று அந்த இடம் அதிரும் அளவு கத்தினான்.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அத்தியாயம் 19 போட்டாச்சி ஃப்ரெண்ட்ஸ்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗 இறுதி அத்தியாயம் சீக்கிரம் போட்டு விடுரேன் மக்களே.


நிலா 19:


பள்ளி வளாகமே அலங்கார விளக்குகள் உதவியுடன் ஜொலித்து கொண்டிருந்தது. இன்று பள்ளியின் ஆண்டு விழா. அந்த விழாவிற்கு பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர்.


அரசியல்வாதி முதல் தொழில் அதிபர்களும் அதில் அடக்கம். அனைவரும் மேடையில் விற்றிருக்க அங்கே வயதான பெண்ணொருவர் மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.


அங்கே அவரை பார்த்ததும் பலருக்கு அவர் யார் எவரென்ற கேள்வி பலரின் மனதில் ஓடி கொண்டிருந்தது.


அப்பொழுது ஒலிவாங்கியின் முன் வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விழா முதலில் பரிசு வழங்குதலில் இருந்து ஆரம்பமாகும் என்று கூரியவர்.


பெரிய வகுப்பில் ஆரம்பித்து சிறிய வகுப்பில் முடியும் என்றும் கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.


அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கொடுத்து முடிக்கும் தருணத்தில் மழலையர் வகுப்பிற்கு பெயர் பட்டியல் வாசித்தனர்.


அப்பொழுது கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட அங்கு பரிசு பெறும் மாணவிகளின் பெயர்களை வாசித்து கொண்டிருந்த அஷ்மிதா ஒலிவாங்கியில் "என்னடா இவ செகண்ட் அண்ட் தர்ட் பிரைஸ் லிஸ்ட் தான் சொல்லுறா அப்போ ஃபர்ஸ்ட் யாருனு தான யோசிக்கிரிங்க. அந்த எல்லாம் பரிசையும் தட்டிட்டு போக போறது ஒரே குழந்தை தான் அவங்களை இப்போ மேடைக்கு அழைக்கின்றோம்" எனவும் அனிஷ் தற்செயலாக அந்த பக்கம் திரும்ப அங்கே ருத்ரா நின்றிக்கவும் அவனை பார்த்து புன்னகைத்தவன் கைகளை ஆட்ட அங்கு அஷ்மிதா கூரிய பெயரை கேட்டு அவனது கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றிருந்தது.


"லெட்ஸ் வெல்கம் அமேஸிங் சைல்ட் அண்ட் மை லவபிள் சன் ருத்ர வரதன்" என்று கூறி அவனை சென்று அணைத்து கொண்டவள். அவனை அணைத்த வாரு தன் கணவனான தன் கனவு கண்ணனாக தன் வாழ்வில் வளம் வந்த அனிஷ் வரதனை பார்த்தாள்.


அவள் கூரிய அந்த விடயத்தை கேட்டு பெரிதும் அதிர்ந்தது இரண்டுபேர் ஒன்று அவளது கணவன் மற்றொன்று வயதான பெண்மணி.


அவள் கூரிய இந்த விடயத்தை ஏற்று கொள்ள சற்று நேரம் பிடித்தது அவனிற்கு. அவன் இப்பொழுது அறிந்து கொண்டான் தான் ஏன் தன்னை அறியாமல் அவனை நோக்கி ஏன் ஈர்க்க படுகிறோம் அக்குழந்தையின் முக வடிவம் தனக்கு மிகவும் பரிச்சயமாக தோன்றக்காரணம்.


அனைத்து பரிசையும் பெற்று கொண்டவன் தனக்கு வழங்கிய பெரிய கோப்பையை வாங்கியவன் "லவ் யூ அம்மா" என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.


அதுவரை அமைதி காத்தவன் பரிசு வழங்குவது முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி விட்டான். அவனிற்கு கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது இப்பொழுது தன் எதிரே அஷ்மிதா இருந்தால் நிச்சயம் தன் குழந்தையை தன்னை விட்டு பிரித்ததர்க்கு அவளின் கழுத்தை நெறித்திருப்பான்.


தனது மகனும் ஆண்டு விழாவில் பங்கு கொள்வதால் அவனின் நடனதிற்குறிய ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு தன் மகன் வாங்கிய பரிசுகளை எடுத்து கொண்டு பணியாளர் அறையில் வைப்பதர்க்கு சென்றாள்.


அவள் அங்கு செல்வதை பார்த்தவன் அவளை பின் தொடர்ந்தான். அந்த பரிசு பொருள்கள் அனைத்தையும் தனக்கு ஒதுக்க பட்ட பூட்டுடை நிலைப் பெட்டியில் (லாக்கர்) வைத்து விட்டு திரும்பியவளின் கன்னத்தில் இடி என இறங்கியது அனிஷின் கரம்.


அதில் முதலில் தடுமாறியவள் சற்றும் யோசிக்காமல் தான் பெற்றதை பதிலுக்கு அவனிற்கு அவள் கொடுத்திருந்தாள். அதற்க்கு அவளை கண்டு முறைத்தவன் ஏதோ கேட்க வரவும்.


"அய்யோ அய்யோ அய்யோ நான் பெத்த என் ராசாவ இப்படி அடிச்சி புட்டாலே பாதவத்தி உருபடுவாலா பொம்பளையா அடக்க ஒடுக்கமா இருகாலா பாரு. எவன் கூடவோ போயி இப்போ மறுபடியும் எவனுக்கோ புள்ளைய

பெத்துட்டு என் புள்ளைக்கு பொறந்ததுண்ணு ஊரு பூராவும் பொய் சொல்லிட்டு இருக்கியா நீ" என்று கத்த.


அவள் அவனை பார்த்த விதத்தில் தன் தாயை அடிக்க கை ஓங்கிய சமயம் வேறு ஒரு திசையில் இருந்து அறை விழுந்தது.


"எம்புட்டு தையிரியம் இருந்தா என்ற மொவள பாத்து இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பிக. அவ நெருப்பு மாதிரி அம்புட்டு வேரச என்ற மொவள தொட்டு புட முடியாது. பேசுற வார்த்தைல கவனமா பேசனும் இல்ல பேச நாக்கு இருக்காது ஒழுங்கு மருவாதையா என்ற மொவ கிட்ட மன்னிப்பு கேளுங்க" என்று கொதித்து விட்டார் தன் மகள் மேல் அவர் போடும் பழியை தாங்காமல் அடித்திருந்தார் பண்ணையாரம்மா.


தன் மகன் பெரிய பதவி அந்த பள்ளியில் ஏற்று முதல் ஆண்டுவிழா ஆதலால் அடம் செய்து வந்திருந்தார் அனிஷின் தாயார். அவர் சற்றும் எதிர் பார்க்காத விடயம் அஷ்மிதா இன்னொன்று அவள் மகன் என்று அறிமுகம் செய்து வைத்த அவளது மகன்.


மேடையில் கம்பீரமாக வீற்றிருந்தது பண்ணையாரம்மா தான். ஏனெனில் அவரை அப்பள்ளியின் முதலாளி சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.


"உன் பொண்ணு என்னமோ ரொம்ப உத்தமி மாதிரி பேசுறியே இத பாரு" என்று ஒரு காணொளியை தன் மகனிடம் நாகேஸ்வரியிடமும் காட்ட அதை பார்த்து இருவரும் அதிர்வதுக்கு பதிலாக சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர். காரணம் அவளை பற்றி இருவரும் நன்கு அறிவார்களே.


அந்த காணொளியை பார்த்து அவரை சொடுகிட்டு அலைத்தவள். "அன்னைக்கு என்ன நடந்ததுன்னு அவனையே சொல்ல வைக்கிறேன்" என்று அவனது கைபேசிக்கு அழைத்தவள்.


"ஹலோ ஹேம்மந்த் எப்படி இருக்கீங்க" என்று கேட்க. அவளது குரல் கேட்டு அதிர்ந்தவன். "மேம் உண்மையாவே நான் வேற யாரு கிட்டயும் நான் வம்பு பண்ணல மேம். அன்னைக்கு உங்க கிட்ட வாங்குன அடில எல்லாமே மறந்துருச்சி மேம். அது மட்டும் இல்லாமல் உங்களை தப்பா எடுத்த வீடியோவை டெலிட் பண்ணிடனே மேம்" என்க.


அவன் கூரிய "தப்பா எடுத்த வீடியோவை" எனும் போது அவனை அடித்து நொறுக்கும் ஆத்திரம் எழுந்தது.


"ஹேம்மந்த அன்னைக்கு ஒரு சண்டே என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணும் போது வார்ன் பண்ணி தான் விட்டேன் அப்போ அவன் யாரு கிட்டையோ என்னை தப்பா காட்டுறேன்னு சொல்லிட்டு இருந்தான். எனக்கு எப்படியும் தெரியும் அவன் என்ன தப்பான வீடியோ இல்ல ஃபோட்டோ எடுப்பான்னு அதான் அவனுக்கு கஷ்டம் கொடுக்காமல் நானே அந்த ச்சான்ஸ் கொடுத்தேன். அதுவும் நான் நெனச்ச மாதிரி தான் நடந்தது" என்று அசால்டாக தோள்களை குழுக்க.


"கேடி டி நீ" என்று அவளை மனதினுள் கொஞ்சி கொண்டான். ஆனால் வெளியே முகத்தை தீவிரமாக வைத்திருந்தான்.


"இப்போ உங்க சந்தேகம் கிளியர் ஆகிருச்சா" என்று கேட்க. "நாலு வருசமா என் புள்ள உன் கூடவே இல்ல பின்ன எப்படி அந்த பையன்" என்று ஏதோ எட்டாம் அதிசயத்தை கண்டு பிடித்தது போல கூற.


அனிஷை ஓர கண்ணால் பார்த்தவள் "அதை பத்தி நீங்க கேட்க வேண்டியது என் கிட்ட இல்ல உங்க புள்ள கிட்ட. அப்புறம் என்னோட பையன் வயசு நாலு" என்று தன் கணவனிடம் அது உன் குழந்தை தான் என்பதை தன் கண்கள் மூலம் தெரிவித்திருந்தாள்.


"அதெல்லாம் என்னால நம்ப முடியாது. நான் என் புள்ளைக்கு பெரிய இடத்தில பொண்ணு பேசி முடிச்சிட்டேன். அதனாலே என் பையன் வாழ்க்கைல இருந்து போயிரு. அது மட்டும் இல்ல என் பேத்திய அனாதையா விட்டுட்டு போன உன் கூட வாழ என் புள்ளைக்கு விருப்பம் இல்ல" என்று தன் மகன் எதை கூறினால் அவளை விட்டு விலகுவான் என்றறிந்து அவ்வாறு கூற அது சரியாக வேலை செய்தது.


"யாரு நான் விட்டுட்டு போனேனா இல்லனா உங்க புள்ள உங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை தேடாம விட்டுட்டாரா" என்று குத்தி காட்டி பேச.


"வாயை மூடுடி என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற. நீ நீ தான் டி என்னையும் என் பொண்ணையும் விட்டுட்டு போனவ. அவ எவ்வளவு கஷ்ட பட்டா தெரியுமாடி நீ இல்லாம ஒவ்வொரு நாளும் உன்ன நெனச்சி அவ அழும் பொது சொல்ல முடியாத கஷ்டம் நெஞ்ச வந்து அடைக்கும் டி. நீ என்னை கஷ்ட படுத்திருந்தா கூட மன்னிப்பென் ஆனா என் பொண்ணை கஷ்ட படுத்தின உன்னை எப்பவும் மன்னிக்க மாட்டேன்" என்று நிட்டமாக பேசி முடிக்க.


"நீங்க இன்னும் அந்த அவசர குடுக்கை கோவத்தை விடவே இல்லை பாவா" என்று நினைத்தவள்.


"அப்போ எங்களுக்கு கஷ்டம் இருக்காதா. அதிலேயும் உங்க அம்மா என்னை பேசுற ஒவ்வொரு வார்த்தையும் குத்தாளத்துல குளிச்ச மாதிரி குழு குழுனு இருக்கும்னு நெனச்சிங்களோ. அவங்க மட்டுமா நீங்க மட்டும் என்ன கம்மியாவா பேசுநிங்க அம்மாக்கு தப்பாத புள்ளனு நிருபிச்சிடிங்கள்ள" என்று கூற.


அவனது புருவம் யோசனையில் சுருங்க அவள் தன் மீது அபாண்டமாக பழி போடுவது போல தோன்ற "என் வாழ்க்கையில உன்னை காதலிக்க மட்டும் தான் டி செஞ்சிருக்கென். ஒரு தடவ கூட கண்டபடி பேசினது இல்ல நீ தான் என்னையும் என் பொண்ணையும் விட்டுட்டு போயிட்ட உன்னை எங்களாம் தேடினேன் தெரியுமா இந்த ஊரு உலகம் எது சொன்னாலும் அதை நான் நம்புனது இல்ல" என்று குறிக்கொண்டிருக்கவும்.


"அவ யாரு தெரியுமா மா இல்ல சொன்னா தான் புரியுமா உங்களுக்கு அவ ஒரு ஒடுகாலி என்னை எம்மாத்திட்டு எப்போவெனா எவன் கூடவாவது போயிருவா அவளுக்கு காவல் என்னால இருக்க முடியாது. அவ எனக்கு தேவையும் இல்ல இன்னொரு தடவ அவளுக்கு பரிஞ்சி பேசிட்டு வராதீங்க இப்போ இந்த நிமிசம் யாருகிட்ட இருக்கானு கூட தெரியாது" தெரியாது என்று தனது அலைபேசியில் பதிந்திருந்த அவனது குரல் பேச.


முதலில் தானா அப்படி பேசியது என்று அதிர்ந்தவன் பின்பு தான் எப்பொழுது எந்த சூழலில் அதை பேசினோம் என்று நினைவு வர இது தன் தாயால் ஏற்பட்ட தவறான புரிதல் என்று புரிய. தான் யாரை நினைத்து பேசினோம் அது தனக்கும் தன் வாழ்க்கைக்கும் இப்படி ஒரு பாதகமான விடயமாக மாறும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. மேலும் தான் பேசியதை தன் வாழ்க்கைக்கு எதிராக மாற்றிய தன் தாயை கொல்லும் வெறி வந்தது.


அதை விட அவனை பாதித்த மிக பெரிய விடயம் தான் அவளிற்கு உண்மையாக இருந்தும் தன்னை நம்பாதவலை வெறுப்போடு பார்த்தவன்.


"அப்போ இதை நம்பி தான் என்னையும் என் பொண்ணையும் விட்டுட்டு போன அப்படிதான" எனவும்.


"இல்லை" என்ற வார்த்தை அவனிற்கு பின் பக்கம் இருந்து வர அனைவரின் கவனமும் அங்கு சென்றது.


அங்கே நின்றிருந்தது நிகிதாவின் தந்தை பத்மானந்தன். "சார் உங்களுக்கு எதுவும் தெரியாது" என்று அனிஷ் கூற.


"தெரியும் உங்க லைஃப்ல நடந்த எல்லாமே தெரியும்" என்று கூறியவர். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட சிக்கலின் பல முடிச்சிகள் அனைத்தையும் அவில ஆரம்பித்தது அவர் கூறிய பல சம்பவங்கள் மூலமாக.


"மிஸ்டர் அனிஷ் உங்களுக்கு நம்ம ஸ்கூல்ல எப்படி வேலை கிடச்சதுனு தெரியுமா" என்று கேட்க. "என் ஃப்ரெண்ட் ரெகம்மண்ட் பண்ணதுனால" என்று கூற.


அதை கேட்டு மென்னகை புரிந்தவர் "உங்களுக்கு ரெகம்மண்ட் செய்ற மாதிரி உங்களுக்கு பெரிய இடத்து ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா" என்று கேட்க. "இல்லை" எனும் விதமாக தலையை ஆட்டியவன் அதன் பின்பே யோசித்தான் தனக்கு வேலை வாங்கி தரும் அளவு பணக்கார நண்பர்கள் இல்லை என்று உரைத்தது.


அவனிற்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அதை பற்றி யோசிக்கவும் இல்லை. பின் யார் தனக்கு வேலை ஏற்பாடு செய்தது என்று யோசிக்கும் பொழுது அதற்கான பதில் அவரிடமிருந்து வந்தது.


"அஷ்மிதா தான் உங்களுக்காக என் கிட்ட அந்த பொசிஷன்க்காக கேட்டது அவ தான். அவளுக்காக தான் அது உங்களுக்கு வந்தது. கூடவே பிரச்சனையும் என் பொண்ணு உருவத்துல" என்று நிறுத்த. அனைவரும் அவரை கூர்ந்து பார்த்தனர் ஒருவரை தவிர.


அது அனிஷின் தாயார் அவரிற்கு வியர்த்து வழிய துவங்கியது தன் கூட்டு முழுவதும் உடைய போவதை நினைத்து.


"என் மனைவி இறந்து இருபத்தி ஆறு வருடம் ஆகுது. என் பொண்ணுக்கு தாயோட குறை தெரியாம இருக்க அவன் கேக்குறது எல்லாமே இல்லனு சொல்லாம கொடுத்துருவென். சரியா வழக்குறதா நெனச்சி ரொம்ப தப்பா வளர்த்து இருக்கேன் அது உங்க வாழ்க்கையை பாதிச்ச பிறகு தான் தெரியுது" என்று அஷ்மிதாவை நோக்கி மன்னிப்பு வேண்டும் பார்வை பார்த்தார்.


அவர் மேலும் தொடர்ந்தார் "அவ அனிஷை நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் பார்த்திருக்கா உடனே எனக்கு அவரை தான் கல்யாணம் பண்ணி வைங்க இல்ல எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டா. நானும் தரகர் ஒருத்தர் மூலம் உங்களை பத்தி விசாரிக்க சொன்னேன் உங்க அம்மாகிட்டயும் பேச சொன்னேன். எனக்கு முழு திருப்தி உங்க பக்கம் அதுனால சிக்கிரம் நிச்சயம் பண்ணிரலாம்னு சொன்னேன் அவரு கிட்ட" என்று கூற.


தான் அஷ்மிதாவை திருமணம் முடித்து வந்த அன்று ஒரு தரகர் தன் வீட்டிற்கு வந்து விட்டு சென்றது நியாபகம் வர ஓரளவிற்கு புரிந்தது.


"அப்புறம் திடீர்னு ஒரு நாள் என் பொண்ணு என் கிட்ட வந்து அப்பா இப்போ அவ்வளவு அவசரம் இல்லை கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வச்சிகளான்னு சொன்னா. நானும் பெருசா ஒன்னும் எடுத்துகள்ள. அதுக்கப்புறம் ஒரு வருசம் போனதுகப்புரம் அப்பா எனக்கு அவரை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும் அதுனால அவரு போற அந்த ட்ரிப் நானும் போறேன்னு சொன்னா அதுக்கும் நான் ஒன்னும் சொல்ல. நீங்க ரெண்டு பேரும் திரும்ப வந்த ஆறு மாசத்துல உங்க நிச்சயதார்த்தம் அரேஞ்ச் பண்ண சொன்னதுனால அதுவும் நடந்தது" என்று கூறி கொண்டிருக்கையில்.


அனிஷ் அஷ்மிதாவை பார்க்க அவளின் இதழில் ஒரு விறக்கத்தி புன்னகை வந்தமர்ந்தது. அது அவனிற்கு வேதனை தந்தாலும் தனது முறை வரும் வரை அமைதி காத்தான்.


"என் பொண்ணு ட்ரிப் போய்ட்டு வந்து மறுநாள் என் கிட்ட ஒரு விசயம் சொன்னா அப்பா கூடிய சிக்கிரம் நீங்க ஆசை பட்ட மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது அந்த சந்தோசத்தில் எதிரே வந்த அஷ்மிதாவை கவனிக்க மறந்து இடிச்சிட்டேன்" எனவும் அவனின் உடல் ஒரு வினாடி பயத்தில் உதறியதை அவன் அறிந்தான்.


"கார்ல இருந்து இறங்கி போய் பார்த்தா அஷ்மிதா அவ வேலையை விட்டு ஒரு வருசம் ஆனதும் ஆனா பிராப்பரான ரீசன் யாருக்கும் தெரியலைனும் சொன்னாங்க. உடனே அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் செக் பண்ணப்போ தான் தெரிஞ்சது அவ கன்சிவ்வா இருக்கான்னு. அது மட்டும் இல்ல ரொம்ப வீக்கா இருக்கா மெண்டல்லி ரொம்ப டிஸ்டர்ப்புடா இருக்கான்னு சொன்னாங்க. அவ அப்படி இருக்கிறது நல்லது இல்லனும் அது குழந்தைய பாதிக்கும்னும் சொன்னதுனால அல்மோஸ்ட் டூ வீக்ஸ் அப்சர்வேஷன்ல வச்சிருந்து பாத்துகிட்டோம். எல்லாமே ட்ரிப்ஸ் போட்டு பாத்து கிட்டாங்க. அவ கண் முழிச்சப்போ தெளிவா இருந்தா" எனவும்.


"ரொம்ப தெளிவு தான் என்னை விட்டுட்டு போகனும்னு எடுத்த மிக தெளிவான முடிவு" என்று மனதிற்குள் அவளை வறுத்தெடுத்தவன் தன் தாயை முறைக்கவும் தவறவில்லை.


"அவ என் கிட்ட சாரி சார் நான் பிராப்பர் ரேசைன்ங்னேஷன் கொடுக்காம என்னோட ஜாப்பை விட்டுட்டேன் பட் எனக்கு இப்போ அது ரொம்ப அவசியம் அதுனால நான் மறுபடி வந்து ஜாயின் பண்ணிகளாமானு கேட்டா நானும் ஓகே சொல்லிட்டேன்" என்று இடைவெளி விட்டவர் மேலும் தொடர்ந்தார்.


"நானும் அல்மோஸ்ட் த்ரி எர்ஸ் வெயிட் பண்ணினேன் ஆனால் நீங்க எதுனால கல்யாணத்தை தட்டி கலிச்சிங்கன்னு எனக்கு புரியாமலே இருந்தது. எனக்கும் என்னோட பொண்ணு கல்யாணம் பத்தி கவலை இருந்ததினால் உங்களை பத்தி மறுபடியும் விசாரிக்க சொன்னேன். அப்போ தான் எனக்கு தெரிஞ்சது உங்களுக்கும் அஷ்மிதாவுக்கும் கல்யாணம் ஆனதும் பிரிஞ்சதும்" என்று கூறும் போது அவரின் முகம் வேதனையில் சுருங்கியது.


பின் அவரே தொடர்ந்தார் "என்னை மன்னிச்சிடுமா இப்போ நீயும் உன் புருசனும் பிரிஞ்சி இருக்க காரணம் என் பொண்ணு தான் மா" என்று கூறவும் இருவரும் அதிர்ந்தனர்.


"ஆமா மா அனிஷ் இங்க இருந்து போன மூணாவது நாளே அவனோட மொபைல் தொலைஞ்சி பொய்ருச்சி அதுனால தான் அவன் எப்பவும் எங்க உன் கிட்ட வெளிய இருந்து பேசிருக்கான். உங்களுக்கு நடுவுல நடந்த பிரச்சனையில் அவளும் உனக்கு கால் பண்ணுறத நிப்பாட்டிட்டா ஆனா நீ அது கூட தெரியாம நம்ம ஸ்கூல் விசயமா பிஸியா இருந்த" அதற்கு ஆமாம் எனும் விதமாக தலையை ஆட்டினான்.


"உன்னோட மொபைல்ல நீயும் என்னோட பொண்ணும் ரொம்ப நெருக்கமா இருக்குற மாதிரி நிறைய போட்டோஸ் எடுத்து அவ மொபைல்க்கு சென்ட் பண்ணிருக்கா. அவ திரும்ப கால் பண்ணும் போது கட் பண்ணிவிட்டுறுக்கா அவளை நீ வெறுக்குற மாதிரி நேர மெஸேஜ் அனுப்பி விட்டவ தன்னொட உச்ச பட்ச்ச ஆயுதமா யூஸ் பண்ணது தான் இப்போ நீ கேட்ட இந்த ஆடியோ" என்று முடிப்பதர்க்குள்.


"ஆனா நான் என்னுடைய ஈஷுவ அப்படி ஒரு நாளும் பேசினது இல்ல" என்று கூறவும்.


"அது எனக்கும் தெரியும் என் பொண்ணுக்கும் தெரியும் முக்கியமா உங்க அம்மாக்கு ரொம்ப நல்லாவே தெரியும்" என்று அவரை முறைத்து விட்டு கேவலமாக பார்க்க. அவனிற்கு புரிந்து விட்டது இந்த விடயத்தில் தன் தாயின் பங்கு அதிகம் என்று.


"மத்தது என் பொண்ணு சொல்லுவா" என்று அவர் சற்று விலக அங்கு வந்து சேர்ந்தால் நிகிதா.


அவளை கண்டதும் கோவம் கட்டுக்கடங்காமல் வர எப்பொழுதும் போல அவளின் தந்தைக்காக பொறுத்து கொண்டான்.


"சாரின்ற ஒரு வார்த்தைல நான் செஞ்ச தப்ப சொல்லி நீங்க என்னை மன்னிக்குற சின்ன தப்பு நான் செய்யல இருந்தாலும் என்னால அதை மட்டும் தான் கேட்க முடியும்" என்று இரு கரம் கூப்பி வணங்கியவள்.


வெளிநாட்டில் நடந்தவற்றை அனைவரிடமும் கூறினாள் "நம்ம ரெண்டு பேரும் அங்கே போனதுக்கு அப்புறம் எப்படியாவது உங்க மனசை மாத்தி என்னை கல்யாணம் பண்ண வைக்கணும்னு நெனைச்சேன். ஆனா அதுக்கு தடையா அஷ்மிதா இருந்தா என்னால அதை ஏத்துக்க முடியல. நம்ம அங்க போன நெக்ஸ்ட் டே உங்களை பார்க்க உங்க ரூம்க்கு வந்தப்போ…


"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூதது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை காணும் முன்னால்


என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுகொள்ள கிட்ட வந்தால்

திட்டி திட்டி தித்தித்தாய்"


யாரா இருக்கும் இத்தன தடவை கால் பண்ணுறாங்க" என்று அவனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.


அதில் "ஈஷு குட்டி" என்று பெயர் பதிந்து இருந்தது. அதை கண்டு கோபமானவல் தன் அறைக்கு சென்று அனிஷின் தாயாருக்கு அழைத்து விடயத்தை கூறி மேலும் அவர் செய்ய வேண்டியதை கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள்.


அவன் குளித்து முடித்ததும் உடையை மாற்றி கொண்டிருக்க தனது அலைபேசி ஒலிக்க அது யாரென்று பாராமல் காதில் வைத்து பேசினான்.


"கண்ணா இங்க உன் பொண்டாட்டி நீ போனதுல இருந்து வீடுல இருக்கிறதே இல்ல பா. சொல்லாம கொல்லம எங்கயோ போய் யாரையோ பாக்குறான்னு நினைக்கிறேன் பா" என்று அவர் கூற.


அவனிற்கு கோவம் தலைக்கேறியது "அவ வேற ஒருத்தன் மடியில இருக்கிர மாதிரி ஃபோட்டோலாம் இருக்குபா உனக்கு அனுப்பி வைக்கிறேன் பாத்துக்கோ. அவ உனக்கு வேண்டாம் பா வேற ஒரு வசதியான பொண்ணு பாத்து வச்சிருக்கேன் நீ சரினு சொன்னா உடனே பேசிறலாம் பா" என்று அவர் பாட்டிற்கு பேச இவனுக்கோ ரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறியது.


"அந்த பொண்ணு இப்போ கூட உன்னோட தான் பா இருக்கா" என்று சூசகமாக சொல்ல.


இப்பொழுது புரிந்து விட்டது அவனிற்கு தனது தாயின் எண்ணம். அப்பொழுது தான் அவன் நிகிதாவை பற்றி அவ்வாறு பேச அதை பதிவு செய்து அஷ்மியின் அலைபேசிக்கு அனுப்பியும் வைத்தனர்.


தனது மாமியாரின் சூழ்ச்சி தெரியாமல் அதில் சிக்கி மனமுடைந்த அஷ்மி ஏதோ நியாபகத்தில் சென்ற பொழுது தான் அந்த விபத்து ஏற்பட்டு அனிஷை பிரிந்து சென்றது.


வெளிநாட்டில் இருந்து இங்கு நடந்த எதையும் அறியாமல் வந்தவன் தனது தாயார் சொன்னதை கேட்டு நம்ப மறுத்தவன் அவளை எங்கு தேடியும் கிடைக்காததால் தன் மகளிளுக்காக வாழ ஆரம்பித்தவனின் மனதை சிறிது சிறிதாக மாற்றிய சமயம் தான் பள்ளியின் பொறுப்பை ஏற்று அவளை அங்கு கண்டது கோவம் கொண்டது வேண்டுமென்ற நிகிதாவை நெருங்கியது போல காட்டியது அனைத்தும்.


அதை கண்டு முதலில் அஷ்மியின் மனதில் வலி ஏற்பட்டாலும் அதனை சகித்து கொண்டு சாதாரணமாக வைத்து கொண்டு கடந்துவிட்டாள். இரவின் தனிமையில் தன்னவனை நாடவே செய்வாள். அவளின் தனிமையும் அவளிற்கு கொடுமையே.


மொத்தத்தில் தன்னையும் குழந்தையையும் காரணமின்றி விட்டு சென்ற கோவத்தில் அவனும். தன்னை அவன் தேடவில்லை எனவும் சிறு மனஸ்தாபத்தில் பிரிந்தனர்.


முக்கிய காரணம் தன் துணை தன்னை சந்தேகம் கொண்டதாக நினைத்ததால் வந்த பிரிவு என்றே கூறலாம்.


அஷ்மிதா தன் உடல்நிலை குறைபாட்டால் பள்ளியில் மயங்கிய சமயம் அங்கு பணி புரிந்த விக்ரம் அவளை தாங்கியதை தவறாக புகைப்படம் எடுத்து வைத்திருந்ததை அவளது மாமியார் அவளிடம் காண்பித்து "என் புள்ள அவன் விருப்பபட்ட வாழ்க்கைய வாழத்தான் போயிருக்கான். இனி உன் கூட வாழ மாட்டான் அதுனால எங்கேயாவது போயிரு" என்று கூற. குழந்தை சுமந்து கொண்டிருந்தவளின் மனம் தெளிவில்லாமல் இருந்ததால் அது மேலும் அவளிற்கு குழப்பத்தையே தர மிகவும் சோர்ந்து போனவலிர்க்கு அழுகையே மிஞ்சியது.


வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி வெளியே சென்றவலிற்கு விபத்து ஏற்பட்டது என்று அவர்கள் அறியாத அனைத்தையும் கூறி முடித்திருந்தாள்.


அதன் பின் அவளது தாயார் கூரிய சில விடயம் கேட்டு அழுகை, கோவம், ஆத்திரம், இயலாமை, வெறி என பலவகை உணர்ச்சியில் சிக்கியவள் கையில் சூலம் இல்லாத துர்கையாகவே மாறினால்.
நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️ 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ இறுதி அத்தியாயம் போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


இறுதி அத்தியாயம்:


அனைவரும் அவர் அவரவர்கழுக்கு தெரிந்ததை கூறிகொண்டிருக்க. அனிஷ் ஏதோ யோசனையில் இருக்க அதை கண்ட நிகிதா "என்ன ஆச்சி அனிஷ்" என்று கேட்க.


"அப்போ உன்னையும் நம்ம பையனையும் கொள்ள ஆளு செட் பண்ணது அந்த விக்ரம் தானா" என்று அவன் கோவத்தில் கர்ஜிக்க.


"என்ன சொல்றீங்க யாரு யார கொள்ள ஆளு செட் பண்ணது" என்று அஷ்மிதா புரியாமல் கேட்க. "அதுவா கண்ணு நேத்து சாயந்திரம் நடந்த சம்பவத்தை பத்தி மருமகன் கேக்குறாக" என்று அனிஷை தான் மருமகனாக என்று கொண்டதை மறைமுகமாக கூற. அவனிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி இனி தன் வாழ்வில் உண்மையான அன்பு தனக்கு என்றும் நிலையாக கிடைக்க போவதை நினைத்து.


"நேத்து நானும் ருத்ராவும் ஸ்கூல்ல இருந்து கேட் தாண்டி வெளிய போகவும் ஒரு லாரி வந்து மோத பாத்தது. ஆனால் ஒன்னும் ஆகல ஸ்கூல் சோன்ல லாரி பாஸ்டா ஓட்டுனான். அதுனால அந்த லாரி டிரைவரை புடிச்சி கமிஷனர் கிட்ட ஹேன்ட்ஓவர் செஞ்சேன். அவங்க அந்த டிரைவரை விசாரிச்சிருக்கங்க. அப்போ.." என்று நிறுத்தினான்.


அஷ்மிதாவோ "அப்போ" என்று எடுத்து கொடுக்க. "அவன் தெரியாம மோத வரல ருத்ராவையும் உன்னையும் கொள்ள போட்ட பிளான் அதுமட்டும் இல்ல இங்க மிஸ் ஆனதுனால மார்கெட்ல வச்சி உங்களை போட்டு தள்ள பிளான் பண்ணிருகாங்க" என்று கோவத்தில் தன் தொடையில் தட்ட.


"எனக்கு கால் வந்ததும் நான் அங்க வர்றதுகுள்ள கார் ப்ரேக்டவுன் ஆகிறுச்சி. அதை சரி பண்ணிட்டு வந்து பார்த்தா எல்லாமே சகஜமாதான் இருந்தது. ஒரு வேளை பிளான் மாத்திருபாங்கனு நான் கிளம்பிட்டேன்" என்று கூறி முடிக்க.


அவன் உடனடியாக கிளம்பி சென்றது ஆணையர் அலுவலகத்திற்கு தான். அங்கு சென்றவன் ஆணையர் அனுமதி பெற்று அவனை வெளுத்து வாங்கி விட்டான். தன் கண்முன் அச்சிறுவன் பயந்ததை நினைத்து நினைத்து அடி வெளுத்து விட்டான்.


"அங்க எங்களை கொலை செய்ய முயற்சி பண்ண தான் செஞ்சாங்க" என்று அஷ்மிதா அங்கு நடந்ததை கூறினாள்.


அவளை கொலை செய்ய முயற்சி செய்தவர்களின் குரலை கேட்டு அவர்கள் பேசிய திசையை நோக்கி திரும்பி பார்த்தவளை நோக்கி மிக வேகமாக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்தது போன்று வந்து கொண்டிருந்தது.


அதில் அதிர்ந்தவள் ருத்ராவை மார்போடு சேர்த்து அணைத்தவள் "அம்மாமா" என்று அலறியவாரு அமர்ந்திருந்தாள்.


அவள் அலரவும் "டம்" என்ற பெரும் சத்தத்துடன் வாகனம் ஒன்று தூர போய் விழவும் சரியாக இருந்தது.


அதில் கண் விழித்து பார்த்தவள் தன்னை இடிக்க வந்த வாகனம் அப்பளமாக நொறுங்கி இருந்ததை பார்த்தாள்.


தன்னை காப்பாற்றிய வாகனத்தை திரும்பி பார்த்தவள் சொல்லொண்ணா உணர்ச்சியில் வார்த்தை அற்று நின்று விட்டாள்.


காரணம் அதில் இருந்து இரங்கியவர் அவளின் தாயார் நாகேஸ்வரி. அவரை ஓடி சென்று அணைத்தவள் "ஐம் சாரி மா. உங்களை தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாது. நீங்க என்னால ரொம்ப கஷ்ட பட்ருபிங்க மா. அப்பா நம்மளை விட்டுட்டு போன போது இருந்த வலி நானும் உங்களை விட்டுட்டு வந்தது இன்னும் கஷ்டமா இருந்திருக்கும்ல மா. என்னை மன்னிச்சிரு மா" என்று கதற.


"நீ விசன படாத கண்ணு. உன்ற சந்தோசம் தான் எனக்கும் உன்ற ஐய்யனுக்கும் முக்கியம் நீ சந்தோசமா இருக்கனும் மா. அது மட்டும் இல்ல கண்ணு என்ற மொவல ஒரு கலையாலி ஆக்கணுமின்றது தான் என்னோட உங்க ஐயனொட ஆசை கண்ணு கொலையாளியா பாக்க இல்ல" என்று கூறவும் அவர் தோள்களை இறுக்கி பிடித்தவள்."எனக்கு புரியல என்னமா சொல்ரிங்க" என்று கோவத்தில் கத்த. "இதான் இந்த கோவத்திற்கு பயந்து தான் கண்ணு உன்னை ஊர விட்டு அனுப்புறதுக்கு நான் அப்புடி பேசினது" என்று கூற.


"ஏன் மா என்னால உங்களை பாத்துக்க முடியாதுனு நெனச்சிங்களா" என்று வேதனையாக கேட்க.


"அச்சச்சோ அப்படி இல்ல கண்ணு நீ கை உடச்ச கோபத்துல தான் அந்த எம் எல் ஏவும் அவன் மொவனும் உன்ற ஐயாவை வண்டி வச்சி கொன்னது. அத என் கிட்டவே போனு போட்டு சொல்லி புட்டான். எங்க அது உன்ற காதுக்கு வந்து பிரச்சனை வந்திருமொன்னு பயம் தான் கண்ணு" என்று அன்று அவர் பேசியதற்கு இப்பொழுது மன்னிப்பு வேண்டினார்.


அவளிற்கு இப்பொழுது புரிந்து விட்டது இந்த கொலை முயற்ச்சி யாருக்காக எதற்காக யாரினால் என்று.


அவர் மன்னிப்பு வேண்டுவது பொறுக்காமல் மேலும் அவர் கூரிய விடயம் கோவத்தை துண்ட அதை தன் தாயின் பொருட்டு அடக்கியவள்.


அவரை மீண்டும் ஆறுதல் படுத்த அருகே செல்ல "அவரை நோக்கி கூட்டத்தில் ஒருவன் ஆயுதம் ஏந்தி ஓடி வருவது தெரிந்தது".


அதில் பதறியவல் "அம்மா" என்று அலறியவாரு அவரை நகர்த்தி விட்டவள் ஆயுதம் ஏந்தியவனை மார்பில் ஒரு உதை உதைத்திருந்தாள்.


முழு பத்திரகாளியாக மாறியவள் "ஏலே எம்புட்டு தைரியம் இருந்தாக்கா இந்த ஈஸ்வரியோட ஆத்தா மேலேயே கை வைக்க வருவிய. இன்னைக்கு ஒரு பய என் கிட்ட இருந்து தப்ப மாட்டியலே" என்று முழு கிராமத்து பெண்ணாக மாறியிருந்தாள். தன் தோளில் கிடந்த மேல்விரிப்பை (துப்பட்டா) சரி செய்தவள் அங்கு வந்த ஒருவனையும் விட வில்லை.


தனது தாயின் வீர சாகசத்தில் உற்சாகமான குழந்தை "அதி தல்லா அதி மா" என்று ஆற்பரிக்க தனது பேர குழந்தையை பார்த்த பண்ணையாரம்மா வாரி அணைத்து தன்னிடம் வைத்து கொண்டார்.


சந்தையில் இருந்த ஒருவர் காவல்நிலையத்திற்கு அழைத்து நடந்த வற்றை கூற அவர்கள் வந்து அனைவரையும் அழைத்து சென்றனர்.


இவர்கள் மீது தப்பில்லை என்று அங்கிருந்தவர்கள் கூற மேலும் அனிஷும் கமிஷனரிடம் பேசியதால் அவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு சென்றனர்.


இதை அவர் கூறி முடிக்கவும் அனிஷ் தனது தாயை திரும்பி பார்க்க பேயரைந்தார் போல இருந்தார். காரணம் தான் பல முறை அவளை தர குறைவாக பேசியதர்க்கு அவள் ஒரு அறை அறைந்திருந்தால் தன் கதி அதோ கதி தான் என்று புரிந்துவிட்டது.


அப்பொழுது அவன் தனது குரலை சரி செய்ய "ம்க்கும்" சத்தம் கொடுக்கவும் அதற்கு மேல் அங்கு நிற்க அவருகென்ன பைத்தியமா. அங்கிருந்து விரைவாக சென்று விட்டார்.


நிகிதாவின் தந்தையோ "எல்லாமே இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் பேசி நல்ல முடிவா எடுத்து பழைய படி சேர்ந்து வாழணும் அது தான் என்னோட ஆசை. ஃபங்ஷன் முடிய போகுது சிக்கிரம் வாங்க" என்று விட்டு அவர் நகர்ந்து விட.


"நல்ல முடிவா எடு கண்ணு. என்ற மருமகன் எதும் அறியாதவரு கண்ணு நீயும் அப்படிதான் அவசரத்துல எந்த முடிவும் எடுக்காம நல்லா சிந்தன செஞ்சி எடு கண்ணு. அப்புறம் சிக்கிரம் இன்னொரு பேரனோ பேத்தியோ சிக்கிரம் பெத்து கோடு ஆத்தா உன்ற ரெண்டு புள்ளய வளக்க முடியாம போச்சி இந்த புள்ளய நல்ல படியா வளப்ப கண்ணு நான்" என்று அவளின் கன்னம் தொட்டு முத்தம் வைத்தவர் அங்கிருந்து சென்று விட்டார்.


அனைவரும் சென்ற பிறகு அங்கே மௌனமே ஆட்சி செய்தது முதலில் மௌனத்தை களைத்தது அனிஷ் தான்.


"ஈஷு" என்று அவளை அவன் அழைக்க. "சொல்லுங்க" என்று மட்டும் கூறினாள். "நான் ஒன்னு சொன்ன கொச்சிக்க மாட்டியே" என்க. "சொல்லுங்க" என்று மட்டும் மீண்டும் கூறினாள்.


"பேசாம அத்தை சொல்றது போல செஞ்சா என்ன பாவம் வயசான காலத்துல கேக்குறாங்க. அவங்களை ஏம்மாத்த கூடாதுள்ள அது பெரிய பாவம்னு கூட மாமியாரடியான் ஒரு சித்தர் சொல்லிருக்காரு" என்று அவன் கூற.


முதலில் அவன் கூ`‰றுவதை தீவிரமாக கேட்டு கொண்டிருந்தவள் அவன் கூற வருவது புரிந்ததும் அவனை அடிக்க துறத்தினாள்.


"மாமியாரடியனா இப்போ இந்த அடி எப்படி இருக்குன்னு பாருங்க" என்று துறத்தினாள்.


அவன் வேண்டுமென்ற அவள் கையில் சிக்கி விட நன்கு அடி மொத்திவிட்டாள். அவள் கைகளை பிடித்தவன் வெகுநாட்கள் பிரிவை துயரத்தை காதலை அவளிற்கு அவனின் இதழனைப்பின் மூலம் காட்டிக்கொண்டிருந்தான்.


அது அவளிற்கும் தேவை பட்டது போல் எதிர்ப்பு எதுவும் காட்டாமல் அமைதியாகவே இருந்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை சண்டையிட வில்லை மௌனமே அவர்களின் மன நிலையை பரை சாற்ற. ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் ஆதலால் அங்கு வார்த்தைக்கு அவசியம் இல்லாமல் போனதால் மௌனமே அவர்களை சேர்த்து வைத்தது.


இதனை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்.

அவளிற்கு மகிழ்ச்சி தாளவில்லை "அம்மா நான் உங்களுக்கு செஞ்ச சத்தியத்தை காப்பாத்திட்டேன். உங்க பொண்ணை உங்க கிட்ட சேத்துட்டென் உங்க பொண்ணு வாழ்க்கையும் சரி பண்ண என்னால ஆனா உதவிய செஞ்சிட்டென் மா" என்று அவரிடம் மனதில் பேசிக்கொண்டிருக்க ஒரு கை அவளின் தோளின் மீது விழுந்தது.


அவள் திரும்பி பார்க்க அவளின் எண்ண ஓட்டத்தின் நாயகி பண்ணையாரம்மாவே அங்கு நின்றிந்தார். "ரொம்ப நன்றி கண்ணு அன்னைக்கு மட்டும் நீ போனு போட்டு சொல்லலன்னா ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது கண்ணு சரியான நேரத்துல சொல்லி என்ற மொவளை காப்பத்திட்ட" எனவும்.


"அம்மா, நீங்க எனக்கு அம்மான்னா அவங்க எனக்கு அக்கா அதுனால நோ தங்ஸ் ஓகே வா" என்று அனைத்து கொண்டு விழா நடக்கும் இடம் நோக்கி சென்றனர்.


ஆம், அன்று ஹேம்மந்த் கணினி ஆய்வகத்தில் வைத்து அஷ்மியிடம் அவன் வம்பு செய்ததை அவரிற்கு அழைத்து கூறிவிட்டாள் மலர்.


அதனால் கோபம் கொண்டவர் தன் மகளின் பட்டண வாழ்க்கையை பற்றி அறிந்துகொண்டார் பத்மானந்தன் மூலமாக. தனது மகள் எங்கோ சென்று விட்டாள் என்பதை மட்டுமே அறிவார். ஆனால் எங்கு சென்றாள் என்று அறியவில்லை.அஷ்மிதா மருத்துவமனையில் பார்த்த அவளின் கிராமத்துகாரர் அவளை சந்தித்ததை பண்ணையாரம்மாவிடம் கூற.


அவர் பத்மானந்தனை தொடர்பு கொண்டு கிராமத்தில் இருந்தே அவளிற்கு பாதுகாப்பு கொடுத்தார். இதை எதையுமே அறியாமல் இருந்தால் அஷ்மிதா.


"சரி சரி அம்மா சிக்கிரம் வாங்க புரோகிராம் எல்லாம் முடிய போகுது எல்லாரும் கிளம்பிருவாங்க. வாங்க நாமளும் போயி ஜோதில ஐயிக்கியம் ஆகலாம்" என்று கூறி முன்னே நடந்தாள் மலர்.


"என்னது எல்லாம் முடிய போகுதா இனி தான் மா எல்லாம் ஆரம்பம்" என்று மனதிற்குள் கூரியவாரு அவளை பின்தொடர்ந்தார்.


ஆண்டுவிழா முடிய போகும் தருணம் நிகிதாவின் தந்தை ஒலிவாங்கி முன் வந்து கூடி இருந்த அனைவரையும் பார்த்தவர்.


" குட் இவினிங் எவ்ரிபடி இப்போ நான் எனக்கு அப்புறம் இந்த ஸ்கூல் ஓனர் யாருன்னு சொல்ல போறேன். அதுவும் உண்மையான ஓனர்" என்று கூற. அனைவரின் கவனமும் அவரின் மேல் சென்றது.


"யாரா இருக்கும்" என்று ஒரு கூட்டம் கேட்க. " வேற யாரு அவரோட பொண்ணு தான்" என்று ஒரு கூட்டம் கூறியது. அப்பொழுது,


"லேட்ஸ் வெல்க்கம் ஓர் நியூ சேர்மன் ஆஃப் அவர் ஸ்கூல் மிஸஸ் அஷ்மிதாஸ்வரி" என்று கூறி கை தட்ட. அனைவரும் திகைப்பின் உச்சிக்கே சென்றனர்.


"எஸ் நான் கஷ்ட பட்ட காலத்துல எனக்கு பணம் தந்து உதவுனது இவங்க தான்" என்று பண்ணையாரம்மாவை காண்பித்தார்.


"நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க இங்க வரல நேரம் வரும் போது என் வாரிசுக்கு இதை கொடுங்கனு சொன்னாங்க. அதுனால இனி உங்க புது சேர்மன் இவங்க தான்" என்று கூறி அஷ்மிதாவை காண்பித்தவர் அனைத்து பொறுப்பினையும் அவளிடம் ஒப்படைத்து விட்டார்.


இது அனைவருக்குமே மகிழ்ச்சி அளித்தது. விழா முடிந்து அனைவரும் சென்றனர்.


அனிஷ் அஷ்மிதா இருக்கும் வீட்டிற்கே சென்று விட்டான். அங்கே அவர்கள் மகிழ்ச்சியாக அவரின் வாழ்க்கையை வாழ துவங்கினர். பள்ளியின் பாதி பொறுப்பை அனிஷிடமும் மிதியை மலரிடமும் ஒப்படைத்து விட்டு அவள் குடும்ப தலைவியாக மாறினாள்.


மலரோ அஷ்மிதாவை பார்த்து "அக்கா நான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம தான் உங்களை என் அக்காவா அவங்களை என்னோட அம்மாவா நெனச்சி தான் இது நான் செஞ்சது" என்று கூற.


"நீ என்னை உண்மையாவே சொந்த அக்காவா நெனச்சினா இதை வேண்டாம்னு சொல்லாம நான் சொல்றத செய்" என்று அன்பு கட்டளையிட்டாள்.


"அக்கா நானே இந்த ஃபீல்டுக்கு

புதுசு எப்படி தனியா பாத்துப்பேன்" என்று கேட்க. " ஓ இது தான் உன் பிரச்சனையா உன்னையும் உன்கூட நம்ம ஸ்கூலையும் பாத்துக்க இன்னொரு ஆளு இருக்கு" என்று கூறி அவள் ஒரு திசையில் கை நிட்ட.


அங்கே மலரை பார்த்தவாறு சின்மயி நின்றிருந்தாள். மலர் அவளை ஓடி சென்று அணைக்க வர அவள் அருகே வந்ததும் ஓங்கி ஓர் அறை அறைந்திறுந்தாள்.


"வொய் திஸ் கொலவெறி" என்று மலர் கேட்க. "பின்ன என்ன டி எல்லாம் தெரிஞ்சும் ஒன்னும் தெரியாத மாதிரி இருந்திருக்கல்ல. என் கிட்ட சொல்லிருந்தா நானும் என்னாலான ஹெல்ப் செஞ்சுறுபென்ல டி" என்று கோவம் கொள்ள. அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தாள்.தனது தாயை தன்னுடன் இருக்கும் படி கூற அவர் அதை மறுத்து கிராமத்திற்கே சென்று விட்டார்.


விடுமுறை நாட்களில் சென்று அவரை பார்த்து வந்தனர். அவளின் மாமியாரை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு அவரிற்கு ஏற்படும் செலவுகளை மட்டும் அனுப்பி வைத்தனர்.


அனிஷ் அவனின் தாயார் வாழ்ந்த அந்த பெரிய வீட்டை விட்டு வெளிய அடித்து விரட்டினர். எங்கு போக யாரிடம் போக என்று போகும் வழி தெரியாமல் நிற்க வழியில் அவரின் மகளை பார்க்க அவளோ "என்னால உங்களை வச்சி பாக்க முடியாதுமா புரிஞ்சிக்ககொங்க நான் என் பாஸ் கூட வெளிநாட்டுல செட்டில் ஆக போறேன். என்னை தொந்தரவு பண்ணாதீங்க" என்று கூறி வாகனத்தில் சென்று விட்டாள்.


அனைத்தும் கை விட்டு போனதாக உணர்ந்தவர் தான் செய்ததை நினைத்து வறுந்தி திரும்பியவர் மீது தண்ணி லாரி ஒன்று மோதியது. அந்த பக்கம் வந்த மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க விடயம் அனிஷிர்க்கு கூற பட. அவன் அங்கு சென்று அவரின் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்க அவரின் கை கால் செயலிழந்து விட்டதாக கூறினார்.


இதை பற்றி அஷ்மிதாவிடம் கூற அவள் அவர்களுடன் வைத்து கொள்ளலாம் என்று கூற அவன் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை. ஆதலால் ஆள் வைத்து பார்த்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தான்


இப்படி அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியில் செல்ல மேலும் அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளினான் அவர்களின் தவ புதல்வன்.


அவன் தன் தந்தையின் ஜாடையை கொண்டு பிறந்ததால் அவரின் பெயரை சூட்டி மகிழ்ந்தாள்.

தன் குழந்தைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். தன் குழந்தையும் தன்னை போல வால் தனத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சுமளவு சுட்டி தனத்துடன் இருந்தனர்.

இதில் சோதனை அனிஷிற்கு தான் அவர்கள் அனைவரும் அவளை சுற்றியே இருப்பதால் அவளுடன் செலவிடும் நேரம் மிகவும் சொற்பமே.

அப்பொழுது அவர்களுக்கு விடுமுறை நாள் வர எப்பொழுதும் போல் திருநெல்வேலிக்கு சென்றனர்.

அங்கே அவர்கள் நேரம் முழுவதும் நாகேஸ்வரியிடம் விளையாடுவதில் சென்று விடும். அதனால் அவர்களுக்கே உரித்தான தனிமை அங்கே கிடைத்தது.

அவள் விரும்பும் மாமரத்தில் அடியில் நின்றவள் அதனை பார்த்து புன்னகைத்து கொண்டிருக்க.

"என்ன மேடம் தனியா நின்னு சிரிக்கிரிங்க சொன்னா நானும் சேந்து சிரிபென்ல" என்க. அவள் தான் சிறுவயதில் செய்த சேட்டைகளை பற்றி கூற.

"இப்போ புரியுது நமக்கு என் இந்த வாலு பசங்க பிறந்தாங்கன்னு. ஈஷ் நான் உன் கிட்ட ஒன்னு கேட்கணும்" என்று கூற. அவனை கேள்வியாக பார்த்தாள்.

"அது ஒன்னும் இல்ல டி" "அப்படியா அப்போ நான் வீட்டுக்குள்ள போகவா" என்று அவள் கிளம்ப. "ஹேய் நில்லு டி நிவேர என் டி படுத்துர. எனக்கு நீ தான் வேளை வாங்கி தந்தனு என் கிட்ட என் சொல்லவே இல்ல" என்று கேட்க.

"சொன்னா என்ன பண்ணுவீங்க நீங்க என்ன பாத்து விட்ட கொள்ளுக்கு ஹையோ அதுளாம் வேண்டாம். நான் பாத்துகரெண்ணு சொல்லுவீங்க மறுபடியும் நாள் தான் வீணா போகுமே தவிர உங்களுக்கு வேலை கிடைக்காது" என்று அவள் கூறி நிறுத்த.

அவன் அவளை புரியாமல் பார்க்க "நிகிதா உங்களை ஸ்கூல்ல வச்சி பாத்ததா அவங்க அப்பா சொன்னது பொய் அவளுக்கு உங்களை முன்னாடியே தெரியும் உங்களை அவ கிட்ட நெருங்க வைக்க தான் நீங்க எந்த இடத்துக்கு இன்டர்வியூ போனாலும் செலக்ட் பண்ணாத மாதிரி பாத்துகிட்டா. ஆனா அவளே எதிர் பார்க்காத டுவிஸ்ட் வச்சது நான் தான் உங்களை டைரக்ட்டா மனேஜிங் போஸ்ட்ல போட வச்சிட்டென்" என்று கூறி கண் சிமிட்ட.

அதை நம்பாதவன் "அது மட்டும் தானா உண்மைய சொல்லு டி" என்க.

"நான் சொன்னது உண்மை தான் பாவ்ஸ் ஆனா இன்னொரு காரணமும் இருக்கு. அன்னைக்கு விடிகாலைல கமலா அக்கா உங்களையும் என்னையும் கலாய்ச்சதும் நான் உள்ள போய் உங்களை நல்லா திட்டிட்டு இருந்தேன் அப்போ யாரோ யாரையோ பயங்கரமா சத்தம் போடுற மாதிரி இருந்தது. அது யாருனு பாத்தபோ தான் தெரிஞ்சது உங்க அம்மானே நான் மாடில இருந்து பாத்ததுநால உள்ள என்ன நடந்ததுன்னு தெரிஞ்சது. அவங்க உங்களை அப்படி திட்டுனதும் எனக்கு பயங்கர கோவம் பக்கத்துல ஒரு கல்லு இருந்தது பேசாம அதை வச்சி மண்டைய போலக்களாம்னு நெனச்சேன் உங்க அம்மா அதுனால சும்மா விட்டுடென். உங்க முகம் அப்படி வாடி போனது எனக்கு தாங்கல பாவா அதான் உங்க ஃப்ரெண்ட் மூலம் அந்த ஜாப் உங்களுக்கு ரெடி பண்ணி கொடுத்தேன் அவ்வளவு தான்" என்று அவள் சாதாரணமாக தோளை குலுக்க.

அவளை ஓடி சென்று அணைத்திருந்தான் அவன். "உனக்கு இது சின்ன விசயம் டி ஆனா எனக்கு என் வாழ்க்கைல நிம்மதி வந்த தருணம் உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணனும்னு நான் இருந்த தவத்திற்கு கிடைத்த வரம் டி அது. நான் ஒவ்வொரு தடவையும் அசிங்க படும்போது இருக்கும் என்னடா வாழ்கை இதுனு நெனச்சி நான் நொந்து போன என் மனதிற்கு கிடைச்ச ஆறுதல் டி அது. அப்படி பட்ட வாழ்கையை எனக்கு கொடுத்த பொக்கிஷம் டி நீ. இப்போ சொல்லுறேன் நான் இறந்தாலும் அந்த மரணம் கூட உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது" என்று அணைத்தான்.


இனி எப்பொழுதும் இவர்களின் வாழ்க்கையில் எல்லாம் மகிழ்ச்சியே. அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை என்றும் அவர்கள் வாழ்வில் பொங்க நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.


அவனின் நிலா அவனிடமே வந்தாள்.சுபம்🙏


உங்க எல்லாருக்கும் கதை புடிச்சிருக்கும்னு நினைக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ். மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டு போங்க. உங்கள் ஆதரவிற்கு காத்திருக்கும்.😍😍😍🤩🤩🤩🙏🙏🙏

அஸ்த்திரம் 60


 
Last edited:
அழகிய காதல் நிலவேஹாய் பிரெண்ட்ஸ்,எல்லாரும் எப்படி இருகிங்க நான் தான் உங்கள் அஸ்த்திரம் 60.

கதை முடிஞ்சுது கொஞ்சம் பிஸி அதான் இந்த பக்கம் வரவில்லை மக்களே. அனிஷ் அஷ்மிய மறந்திருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். (மை மைண்ட் வாய்ஸ்: அம்மாடி மறக்குறது என்ன படிச்சிருக்க கூட மாட்டாங்க சும்மா பேசிக்கிட்டு அந்த பக்கம் போ) அப்படி அவ்வளவு சீக்கிரம் மறக்காம இருக்க வாசிகாதவங்க வாசிக்க விமர்சனம் கொடுகதவங்க கொடுக்க இதோ ஒரு சின்ன டீஸர் கூட லிங்க் கொடுத்துள்ளேன் மக்களே….😉😉😉😉🥰🥰🥰🥰🥰


டீஸர் 3:


பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்ப சுய உணர்வு பெற்று அங்கு இருந்து புறப்பட அவனை முந்தி கொண்டு சென்றாள் ஈஸ்வரி.


அவன் அவளை பின் தொடர ஏதோ உள்ளுணர்வு துண்ட தன் பின்புற கண்ணாடி வழியே பார்க்க ஒருவன் தன்னை பின் தொடர்வது தெரிய. வாகனத்தை வேறு சாலையில் திருப்ப அவன் அவள் பின்னே தொடர்ந்தான்.


அதில் ஆத்திரம் பொங்க வாகனத்தை ஓரம் கட்ட பின்னால் வந்த கண்ணன் அவளின் வாகனத்தில் ஏதோ பிரச்சனை என்று எண்ணி தானும் ஓரம் கட்ட.


அவனை நோக்கி வந்தவள் அவனை அடித்திருந்தாள் "வீட்டு பக்கத்துல தான் உன் தொல்ல தாங்க முடியலனு பாத்தா இப்போ ரோட்ல வந்து தொல்ல கொடுக்குறியா அறிவில்ல" என்று அவள் பாட்டிற்க்கு கத்த


முதலில் அடி வாங்கியதால் அதிர்ச்சி ஆனவன் அவள் பேசிய வார்த்தை தன்னை ஒரு கேவலமான பிறவியாக சித்தரிப்பதை அறிந்தவன். வீட்டில் தன் தாய் தங்கை பேசிய பேச்சும் மனதில் ஆத்திரத்தை வர வழைக்க ஓங்கி அவள் கன்னத்தில் அறை ஒன்று வைத்திருந்தான்.


அதில் கதி கலங்கியவளை பார்த்து "ஏய் என்ன விட்டா ஓவரா பேசிட்டு போற என்ன நடந்தது என்ன நடக்குதுனு முதல்ல யோசிக்கணும் சும்மா லபா தபானு குதிக்க கூடாது. நான் வேலைக்கு போக வேண்டிய ரூட் இது தான் நீ ஓரம் கட்டவும் உன் வண்டில எதும் ஃபால்ட் இருக்கும் நெனச்சி தான் நானும் வண்டிய நிருத்தினது வேற ஒன்னும் இல்ல. சும்மா எதுக்கு எடுத்தாலும் முறைக்குறது. இன்னொரு தடவை முறச்ச முறைக்கும் போது வெடைக்குர முக்குக்கு முத்தம் கொடுத்துட்டு போய்டே இருப்பேன்" என்று அவன் கூற


அவனை அவ்வளவு நேரம் முறைத்து கொண்டிருந்தவள் அவன் கடைசியாக சொன்னா வாக்கியத்தில் வாயை பிளந்து சிறு பிள்ளை போல திறு திறுவென விழிப்பதை பார்த்தவனிர்க்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன்.


அவள் காதில் படும் படி புலம்புவதை போல "சும்மாவா சொன்னாங்க முன்னோர்கள் பெண் புத்தி பின் புத்தினு திருந்த மாடிகாங்க பா" புலம்பி செல்ல


விழித்து கொண்டு நின்றவள் இப்போது முறைக்க ஆரம்பித்தாள்.


அதை தன் பின்புற கண்ணாடி வழியே பார்த்தவன் தான் அவளை தொட்டு பேசி விட்ட உல்லாச மன நிலையில் தான் வேலைக்கு சென்றான்.அப்படி என்ன அவங்களுகுள்ள பிரச்சனைனு தெரியனுமா மக்களே இதோ கீழே கொடுத்துள்ள லிங்க் கிளிக் பண்ணி முழுசா தெரிஞ்சுக்கோங்க…😉😉😉


https://pmtamilnovels.com/index.php?threads/அழகிய-காதல்-நிலவே-கதை-திரி.136/


அவங்க செஞ்ச செட்டை பட்ட கஷ்டம் என்னோட சிந்தனை உங்களுக்கு பிடிச்சிருந்தா நிறை குறை சூட்டி காட்ட இங்கே கொடுத்துள்ள விமர்சன திரியை கிளிக் பண்ணுங்க மக்களே… 🤩🤩🤩🤩

 
Status
Not open for further replies.
Top