வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னால் நானும் பூத்தாட(UNP) கதை திரி

Status
Not open for further replies.
மணம் 1:-

அந்த ஏகாந்த இரவில் அந்த மருத்துவமனை மட்டும் நிசப்தம் தொலைத்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.

பின்னே ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்க, அவளை பிழைக்க வைக்கும் முயற்சியில் இருந்தனர் மருத்துவர்கள்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உள்ளே போவதும் வெளிய வருவதுமாக இருந்தனர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.

அந்த அறையின் வெளியே எதிர்புறம் சுவற்றின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார் மத்திய வயது பெண்மணி.

அவரது கண்களோ அந்த அறையின் வாயிலில் வருவதும் போவதுமாக இருக்கும் மருத்துவர்களையே வெறித்தது.

மனமோ உள்ளே இருப்பவளை சாடியது. 'எவ்வளவு தைரியம் தற்கொலை செய்ய துணிந்து இருக்கிறாள். பாதகத்தி ஒரு வார்த்தை என்னிடத்தில் சொல்லி இருந்தால் என்ன.' நினைத்து, நினைத்து மருகியது அந்த தாயுள்ளம்.

அதே நேரம் மடியில் இருந்த பேரன் அசைய, கைகள் தன் போக்கில் தட்டிக் கொடுத்தது. ஒரு வேளை அவன் விழித்து விட்டால், உள்ளே இருக்கும் அன்னையை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வான் சமாளிப்பது கடினமான காரியம்.

அப்போது அங்கே வந்தான் பாலன். "அம்மா அன்பு எப்படி இருக்கிறாள் " கேட்ட மகனை ஏற இறங்க பார்த்த அமுதா


"இதுவரைக்கும் உயிரோட தான் இருக்கிறா" வார்த்தைகளில் கோபத்தை தேக்கி வெறுப்பை உமிழ்ந்தார்.

"என்னம்மா இப்படி சொல்லுறிங்க" சலிப்பாக கேட்டவனை பார்த்து,


"புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தது ஒருத்திய தற்கொலைக்கு தூண்டிருக்கிங்கடா" ஏறத்தாழ கத்தினார் அவர்.

அவரது சத்தத்தில் மடியில் இருந்த மூன்று வயது குழந்தை விழித்து விட்டது.

மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்து பார்க்க, நன்கு விழித்து விட்டான்.

"அம்மா வேணும் பாட்டி" இதழ் பிதுக்கி அழ தயாரானான் குழந்தை.

"கண்ணா அம்மா இப்போ வந்துருவாடா, டாக்டர் ஊசி போட்டுட்டு அம்மாவ அனுப்பி விட்டுருவாங்க மா. அழாதே டா" சொன்னவர் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஒட, அதை பார்த்து விட்டு பாலன் கண்ணனை வாங்க கை நீட்டினான்.

அவனை தீயாக விழித்தவர், "போ போய் உன் பொண்டாட்டிக்கு சேவை செய். நீ இங்க வந்த நேரத்தில உன்ன காணாமல் தேட போறா" நக்கலும் கோபமுமாக சொன்னார்.

சொல்லி வைத்தார் போல அந்நேரத்தில் பாலனின் மனைவி ரம்யா அழைக்க, அவனுக்கு ஒரு மாதிரி ஆனது.

ஆயினும் அடுத்த நொடியே அழைப்பை ஏற்று காதில் வைக்க, இங்கு எரிமலையென தகித்தது தாயுள்ளம்.

அவரது மனமோ 'ஒரு பொண்ண தற்கொலைக்கு தூண்டிவிட்டு இவ்வளவு இயல்பாக இருக்க முடியுமா' நினைத்து, நினைத்து ஆதங்கப்பட்டது.

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, "நான் வரேன்" முனுமுனுத்து விட்டு சென்றான் பாலன்.

"எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்" முனுமுனுத்தவரின் நெஞ்சில் சுருக்கென வலி தைத்தது.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவர், "அம்மா வந்துருவாங்கடா கண்ணா தூங்கு சாமி." சமாதானம் செய்தபடி மீண்டும் அவனைத் தூங்க வைக்கலானார்.

தோளில் தொங்கியவாறு தூங்கியவனை மடியில் கிடத்தியவர், நாற்காலியில் சாய்ந்த அமர்ந்து தங்களின் நிலையை என்னை நொந்து கொண்டார்.

கணவன் இருந்தவரை இயல்பாக, நன்றாக போன அவரது வாழ்வு அவர் இறந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தலைகீழாய் மாறிப்போனது. பெயருக்கு உயிர் வாழ்கிறார் அவ்வளவே.

அந்த நேரத்தில் அங்கு வந்த செவிலியர், "நீங்க தானே அந்த தற்கொலை கேஸோட அம்மா, உங்களை டாக்டர் கூப்பிட்டார்." சொல்லவே, பேரனை துக்கி கொண்டு மருத்துவரின் அறையை நோக்கி சென்றார்.

அவரை மருத்துவரின் அறையில் விட்டு விட்டு வெளியேறினார் செவிலி.
உள்ளே நுழைந்தவரை பார்த்து நீங்க என்று கேட்டபடி புருவம் சுருக்கினார் மருத்துவர்.

"நான் அமுதா, தற்... தற்கொலை" என்று சொல்ல வந்தவர் நிறுத்தி "அவளோட அம்மா" என்றார்.

"ஓ அம்மா உங்க மகள் எலி மருந்து சாப்பிட்டுருக்காங்க. அதுவும் நிறைய. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டு இருக்கோம் இன்னும் நினைவு திரும்பல. அபய கட்டத்தில தான் இருக்காங்க. எதுவுமே நாற்பதெட்டு மணிநேரம் கழித்து தான் சொல்ல முடியும்."

அமுதாவோ பீறிட்டு வந்த அழுகையை அடக்கியபடி "எப்படி யாச்சும் காப்பாற்றி கொடுத்துருங்க டாக்டர் " கையெடுத்து கும்பிட்டார்.

"நாங்க முடிஞ்ச வரை எல்லாமே செய்துட்டு தான் இருக்கோம் மா. அவங்க சாப்பிட்ட விஷம் வீரியமானது." என்றவர் அமுதாவை அனுப்பி வைத்தார்.

"பாவம் எம்புள்ள எவளோ கஷ்டம் பொறந்ததுல இருந்து. மகனை பத்தின நினைப்ப கூட இல்லாம இப்படி பண்ணிட்டாலே பாவி மக. முருகா எம் மகள காப்பாற்றி கொடுய்யா" ஆதங்கமும் பரிதவிப்புமாக வேண்டுதல் வைத்தார் அமுதா.

மறுநாள் விடியலில் கூட உள்ளிருந்தவள் கண் விழிக்கவில்லை. ஒரு வேளை இந்த உலகை பார்க்க விருப்பமின்றி இருக்கிறாளோ.

மருத்துவர்களும் ஏதேதோ செய்து போராடினார்கள் அவளை பிழைக்க வைக்கும் பொருட்டு.

நாடி துடிப்பு மிக மெல்லியதாய் இருப்பதும் சில நேரங்களில் இன்னும் குறைவதும் என சன்டிதனம் செய்து கொண்டிருந்தது அவளது உடல்.

சதா அன்னையை தேடும் பேரனை சமாளிக்க முடியாமல் தின்டாடி கேட்கும் விளையாட்டு பொருள் வாங்கி தந்து கையில் வைத்துக் கொண்டு, அதே நேரத்தில் மகளை பற்றிய நல்லதொரு தகவல் வாராத என அமர்ந்திருந்தார்.

இவ்வாறு இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் கண் விழித்தாள் அவள், அன்பழகி.
மெல்ல கண் விழித்த அன்பழகி சுற்றி நோட்டம் விட, தான் பிழைத்து விட்டது புரிந்தது.

'ஏன் காப்பாற்றினார்கள் அப்படியே விட்டுருக்க வேண்டியது தானே' ஒரு மனம் நினைக்க, இன்னொரு மனமோ 'உன் மகனை பற்றி நினைப்பில்லையா' இடித்து கூற, ஒரு நொடி உடல் இறுகி, தளர்ந்து அழுகை வந்தது அவளுக்கு.

'நீயெல்லாம் ஒரு நல்ல தாயா' அசந்தர்பமாக காதில் ரீங்காரமிட்ட அந்த குரல் கொடுத்த அதிர்வலைகளை தாளாமல், அலறினாள் அன்பழகி.

அன்பின் சத்தத்தில் தூங்கி கொண்டிருந்த செவிலி பதறி விழித்தெழுந்து மருத்துவரை அழைக்க சென்றார்.

மருத்துவர் வந்தவர் அன்பழகியை பரிசோதனை செய்து விட்டு உள்ளுறுப்புகள் கொஞ்சம் பழுதடைந்து இருப்பதாகவும், கண்டிப்பாக ஒரு பத்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

அவர் சொல்லிவிட்டு செல்ல அவருடனே உள்ளே வந்த அமுதா மகளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார்.

இந்த இரண்டு தினங்களில் அவர் முற்றிலும் ஓய்ந்து விட்டார். மகளது இந்த செயல், பிழைப்பாளா மாட்டாள் என்ற தவிப்பு, பேரனின் தேடல் தாயை குறித்து அது தந்த கோபம், பெற்ற மகனின் புறக்கணிப்பு, ஏன்னவென்றும் கேட்காத அலட்சியம் என அனைத்தும் அவரை பற்றற்ற நிலையில் நிறுத்தி உள்ளது என்பதே உண்மை.

தாயின் பார்வையில் உள்ள கேள்வியில் பரிதவிப்பில், கோபத்தில், பாசத்தில், அன்பழகிக்கு குற்ற உணர்ச்சியே அதிகம் இருந்தது.

நான்கைந்து நாட்கள் சென்றிருக்க அமுதா மகளிடம் எதுவும் பேசாமல் இருந்தார்.


ஆனால் மகளின் தேவையறிந்து கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டார்.

வேறுவழியின்றி பேரனை கூடவே வைத்து கொண்டாலும் தாயை அதிகம் தொந்தரவு செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார். குழந்தையும் அன்னையின் அருகில் அமைதியாக இருந்தான்.

ஒரு கட்டத்தில் பொறுக்காமல் அமுதாவின் கைப்பற்றிய அன்பழகி, "அம்மா என்கிட்ட பேசுங்கமா" விசும்பினாள்.

அவளது அழுகை அவரை பாதிக்கவில்லை போலும், "பெத்த அம்மாவா இருந்தா உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் சொல்லிருப்ப, நான் வளர்த்தவ தானே" அன்பழகியின் செயல் அவரை அவ்வாறு பேச வைத்தது.

அமுதாவின் பேச்சில் திடுக்கிட்டு பார்த்த அன்பு, "அம்மா" உதடுகள் நடுங்க அழைத்தாள்.

"சும்மா பேருக்கு அப்படி கூப்பிட வேண்டாம் அன்பு" என்றார் இன்னும் ஒரு படி மேலே சென்று.

துக்கம் தாங்காமல் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள் அன்பழகி.
"ஏய் பாப்பா அழதாம்மா. அம்மா சொல்லுறேன்னில்ல " அமுதா அரவணைத்து கொண்டார்.

"அம்மா இங்க ரொம்ப வலிக்குது மா. அதான் வாழ பிடிக்காமல்..." ஆரம்பித்தவள் முடிக்க முடியாமல் போக மீண்டும் அழுதாள்.

"என்னை பத்தி யோசிக்க வேண்டாம். உன் மகனை பத்தின நினைப்பு கூட இல்லையா உனக்கு" அமுதா அவளது தவறை உணர்த்த,

அனால் அவளோ "அது தான் நீங்க இருக்கீங்கல்ல என்ன வளர்த்த மாதிரி எம் மகனையும் வளர்க்க மாட்டிங்களாம்மா" கேட்டு வைக்க

அதில் அதிர்ச்சி அடைந்த அமுதாவோ "என்ன பேச்சு பேசுற கூறு கெட்டதனமா. அம்மா பிள்ளையை வளக்குறதுக்கும் பாட்டி பேரன் வளர்க்கறதுக்கு வித்தியாசம் இல்ல. இது தான் நீ படிச்ச படிப்பா. அறிவிருந்தா இப்படி பண்ணுவியா, இல்லை இப்படி தான் கேட்பியா" கடுமையாக திட்டவே செய்தார்.

அவரது கேள்வியில் ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்து இருந்தவள் இன்னுமே உள்ளுக்குள் ஒடுங்கிப் போனாள்.

கண்ணனுக்கு எதுவும் புரியாத போதும் எங்கே தாய் விலகினால் போய்விடுவளோ என்றென்னி தன்னை விட்டு இம்மியும் அசையாமல் இருப்பதை கண்டு அவனது பயம் புரிந்தே இருந்தது அன்பழகிக்கு.

அன்பழகிக்கு மாத்திரை, மருந்துகள் பரிசோதனைகள், நீர் சத்துக்கு ட்ரிப்ஸ் என்று ஏற்றினார்கள்.

அவளுக்கு பாதி நேரம் ஓய்விலும், உறக்கத்திலும் கழிந்தாலும் விழித்திருக்கும் நேரம் எல்லாம் மகனிடம் நிறைய கதை பேசி இன்னும் அவனை இயல்பாகி அரவணைத்துக் கொண்டாள் பெண்.

மகளும் பேரனும் உறங்கவே வெளியில் காற்றோட்டமாக அமர்ந்திருந்த அமுதாவின் மனமோ 'அப்போ நாம நெனச்சது சரிதான் இவ புருஷனால தற்கொலை முயற்சி பண்றானா அது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னரே செஞ்சிருக்கணும்.

ஆனா இப்போது இந்த முடிவு எடுத்து இருக்கான்னா அதுக்கு பாலனும் அவன் மனைவி ரம்யாவும் தான் காரணமா இருக்கணும்." சரியாக கனித்தவரின் மனம் 'அதனால்தான் நம்ம கிட்ட ஒன்னும் சொல்லாம மழுப்புற' என்றும் கூறியது.

தலை வலிப்பது போல இருக்க மருத்துவமனைக்கு கேண்டினிற்கு சென்று தேநீர் பருகினார் அமுதா.
அப்போது அங்கிருந்த நாளிதழில் பள்ளி ஒன்றின் வாக் இன் இன்டர்வியூ விளம்பரம் கண்ணில் பட்டது.
மாண்டீசோரி கல்வி கற்ற ஆசிரியர் தேவை என்று இருக்க, அவருக்கு மனதில் அன்பழகியின் முகம் தான் தோன்றியது.

உடனடியாக ஆன்லைனில் தனக்கு தெரிந்த அவளது தகுதிகளை அந்த விண்ணப்ப படிவத்தில் நிரப்பி விட்டு ஆன்லைனில் அனுப்பி வைத்தார்.

அதற்கு பதிலாக ஒரு வாரத்தில் நேர்கானலுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது மின்னஞ்சலில்.

அமுதாவும் ஒரு பட்டதாரி ஓரளவிற்கு இப்போது இருக்கும் ஆன்ட்ராய்டு அலைபேசி வகையின் பயன்பாடு நன்றாகவே தெரியும் அவருக்கு. ஆதலால் அன்பழகியின் விவரங்களை அவளுக்கு தெரியாமல் அவரால் அனுப்ப முடிந்தது.

அந்த மின்னஞ்சலுக்கு பதிலாக இவரும் வருகிறேன் என்றே அனுப்பினார் அன்பழகியின் சார்பில்.

தன் மகனுக்கு அழைத்து அன்பழகியின் கணவன் வீட்டிற்கு சென்று அவளது கல்வி சான்றிதழ்களை எடுத்து வர அனுப்பினார்.

பாலனுக்கு பிடிக்காவிட்டாலும் அன்னையின் பேச்சு கட்டளை தோணியில் இருக்கவே மறுப்பின்றி செய்தான்.

இதோ பத்தாம் நாள் அன்பழகி டிஸ்சார்ஜ் ஆகும் நாள் அது.

11 மணியைப் போல் மருத்துவர் வந்த இறுதியாக ஒரு முறை பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு அனுப்புவதாக இருந்தது.

அதி காலையில் எழுந்த அமுதா அன்பழகியையும் எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி சென்றார்.

அவர் சென்றவுடன் அன்பழகி குளித்து மகனுக்கு பால் தங்களுக்கு காப்பி மற்றும் காலை உணவை வாங்கி வைத்தாள்.

செவிலி வந்து சற்று நேரத்தில் மருத்துவர் வருவதாக சொல்லிச் சென்றார்.
சற்று நேரத்தில் எல்லாம் கண்ணனும் எழுந்து விட்டான்.

எழுந்த மகனுக்கு பல் துலக்கி குளிப்பாட்டி விட்டு வேறு ஆடை அணிவித்து பால் புகட்டினால் அன்பழகி.

பால் குடித்தபடி சுற்றும் நோட்டமிட்டு பார்த்தான் கண்ணன். அவனுக்கு என்ன புரிந்ததோ "அம்மா நாம மாமா வீட்டுக்கு தான் போகப் போறோமா, இல்ல ஊர்ல இருக்க பாட்டி வீட்டுக்கு போவோமா". தாயின் தாடையை பற்றி கேட்டான் மகன்.

மகனது கேள்வி அவளுக்கும் இருக்க செய்தது. ஆனால் இரண்டு இடங்களுக்கும் செல்ல விருப்பமில்லை அவளுக்கு. அதை தாயின் மனம் நோகாமல் எப்படி செல்ல என்று யோசிக்கையிலே,
"அம்மா கண்ணன் ஸ்கூல் போகணும், மிஸ்ஸ பாக்கணும், அப்புறம் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கேப்பாங்க. "சொல்ல சுருக்கென்றது அவளுக்கு.

மகனின் கல்வியும் இனி அவளது கையில் என்று புரிந்தது அதனுடைய அன்பழகிக்கு.

மேலும் கண்ணன் "மாமா வீட்டில அந்த அத்தை என்ன அடிச்சுட்டாங்க அப்புறம் கண்ணனுக்கு கிரிம் பிஸ்கட் தரமாட்டேன் சொல்லிட்டாங்க மா" குழந்தை உதடு பிதுக்கி அழ தயாராக, முற்றிலும் மனம் உடைந்து போனது அவளுக்கு.

இனி குழந்தையை எதற்கும் ஏங்க வைக்க கூடாது. நல்ல உணவு, உடை உறைவிடம், கல்வி இவையாவும் ஒரு தாயாக நான் அவனுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மனம் உறுதிப் பூன்டது அன்பழகிக்கு.

ஆனால் எப்படி அதை சாத்தியமாக்க போகிறோம் என்று தவிப்பு அவளது கண்களில். முதலில் ஒரு வேலை தேடி கொள்ள வேண்டும்.

யார் தயவிலும் தான் வாழ கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.


படித்திருந்தாலும் வெளியுலக அறிவு இல்லாது இருப்பின், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாத கதை தான்.
இங்கு அன்பழகையும் அதே நிலையில் தான் இருந்தாள் என்று சொல்ல வேண்டும்.

அவளது சற்று தையிரியமான சுபாவமும் அடுத்தடுத்து விழுந்த தொடர் அடிகளால் சற்று மங்கி இருந்தாலும் முழுவதும் மறைந்துவிடவில்லை.

இருப்பினும் இனி மீண்டும் தன்னை தைரியமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் இன்னும் வாழ்வில் அடிப்பட நேரிடும் என்ற எண்ணம் அவளது மனதில் வந்தபோது,
'ஏன் இந்த தைரியம் தற்கொலை செய்யும்போது இல்லை' மனம் இடித்துரைக்க, காதுகளை பொத்திக் கொண்டாள். இனி என் மகனுக்காக நான் வாழ்வேன் என்று உறுதி கொண்டது அவளது மனம்.

அதே நேரத்தில் செவிலியும் மருத்துவரும் வந்து அவளது உடல் நிலையை பரிசோதித்து விட்டு, அவளை டிஸ்டார்ஜ் செய்யும் விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிட்டனர்.

மருத்துவர் சென்றதும் செவிலி "உங்களுக்கு ஒரு சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங் அதாவது உளவியல் ஆலோசனை வகுப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்க,

தனக்கு மிகவும் அவசியம் என்று உணர்ந்த அன்பழகி "எப்போது வரணும்" என்று கேட்டாள்.

தன் மன வலிமையை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு கண்டிப்பாக இது தனக்கு தேவை என்று எண்ணினாள்.
"இது மாதிரி சூசைட் அட்டென்ட் பண்றவங்களுக்கு ஒரு தெரபி மாதிரி அவங்களுக்கு தருவோம் டிஸ்சார்ஜ் ஆகும்போது" என்றார்.

சரி என்று தலையசைத்து ஒத்துக் கொண்டவள், தன் அன்னையின் வருகைக்காக காத்திருந்தாள்.

மேலும் கால் மணி நேரம் சென்று விட்டு உள்ளே வந்தார் அமுதா. அவரது கைகளில் இரண்டு ட்ராவல் பேக்ம் ஒரு கைப்பையும் இருந்தது கேள்வியாக பார்த்தவளை அருகமர்த்தி

"உனக்கு ஊட்டியில் ஒரு மாண்டீசோரி ஸ்கூல்ல வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன்" என்றவர் அதன் விவரங்களையும் சேர்த்து கூறினார்.

மேலும் "உன்னோட படிப்பு சான்றிதழ் துணிமணி அப்புறம் சில புக்ஸ் எல்லாம் இந்த ட்ரோலி பேக்ல இருக்கும். இந்த தோள் பையில் கண்ணனோட துணி மாத்திரை மருந்து என அத்தியாவசிய தேவைக்கு இருக்கும். கைப்பையில் ஆதார் கார்டு போன் நம்பர் அட்ரஸ் அப்புறம் கொஞ்சம் பணம் ஒரு 50 ஆயிரம் பக்கம் வச்சிருக்கேன். பத்திரம், ஜாக்கிரதையா போயிட்டு எனக்கு போன் பண்ணு" என்றார்.

"நீங்களும் வரலாமே அம்மா" என்ற அழைப்பவளை பார்த்து அழுத்தமாக தலையசைத்து மறுத்தார்.

"உனக்கு 23 வயசு ஆனால் நீஆகுது இவ்வளவு பயந்தா ஆகாது. வெளியுலகம் போய் பாரு. உன்னை நம்பி உன் மகன் இருக்கான்னு நினைச்சுக்க அப்பதான் உனக்கு ஒரு உத்வேகம் வரும்" என்றவர் ஏதோ சொல்ல வந்து பாதியில் விழுங்கி

"கிராமத்துல குழந்தைகளை கிணத்துல தூக்கி போட்டுருவாங்க தன்னால பயம் போய் நீச்சல் பழகணும்னு. அது மாதிரி தான் உன்னையும் இப்ப அனுப்புறேன் நானு. நீ இந்த உலகத்துல வாழறதுக்கான தகுதிகளை வளர்த்துக்கோ, இல்லனா வாழவே முடியாது. " என்றவர்

"எனக்கு வரணும் தோணும் போது நானே வருவேன்." தாயின் பேச்சில் புது தெம்பு பிறக்க உறுதியுடனே தலையசைத்தாள அன்பழகி.


மேலும் அமுதாவிடம் அந்த சைக்காலஜிக்கல் தெரபி பற்றி கூற அமுதா "கட்டாயமா நீ போய் கலந்துக்கோ நான் கண்ணனை வச்சுட்டு இங்க உக்காந்து இருக்கேன்" என்று அவளை அனுப்பி வைத்தார்.
ஒரு மணி நேரத்தில் வகுப்பு முடிந்து வந்தவள் முகம் தெளிவாக இருந்தது.

அமுதாவுக்கும் இப்பொழுது தான் மனம் நிம்மதியானது. மகள் இனி வாழ்வில் ஜெயிப்பாள் என்ற நம்பிக்கை தந்தது.

"உனக்கான ட்ரெயின் டிக்கெட் கைப்பையில் வச்சிருக்கேன். மேட்டுப்பாளையம் வரைக்கும் இருக்கு" என்றவர் "வா சாப்பிட்டு உன்னை டிரெயின் ஏத்தி விடுறேன்" சொன்னார்.

கண்ணனுக்கு ஊட்டி விட்டது போக பெண்கள் இருவருமாய் உண்டு விட்டு ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.

தனது பெட்டியை தேடிக் பார்த்து ஏறி கொண்டவள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.

கண்ணனுக்கு எளிதாக சாப்பிடக்கூடிய சில உணவு வகைகளை வாங்கிக் கொண்டு தண்ணீர் பாட்டிலும் வாங்கினாள். சற்று நேரத்தில் ரயில் பயணம் தொடங்கியது.


தனது அன்னைக்கு கையசைத்து விடைபெற்றவள் மனம் ரயிலுக்கு வெளியே பின்னோக்கி செல்லும் காட்சி போலவே பின்னோக்கி சென்றது.
 
Last edited:

மணம் 2:-

சூரியன் கீழ் வானில் உதித்து சற்று மேலெழும்பிய நேரம் தனது காரில் புயல் போன்ற வேகத்தில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தவன் புழுதி பறக்க நிறுத்தினான் அந்த கட்டிடத்தின் முன்னால்.

அவன் காரை நிறுத்திய அடுத்த நொடி அவனது பி. ஏ வந்து கதவை திறக்க, வேகமாக இறங்கினான் தன் சிகையை ஆழுந்த கோதிவிட்டபடி.

அவனது வேகத்திற்கு ஈடு கொடுத்து வந்த பிஏவிடம் "சுந்தர் எல்லாம் ரெடியா" என்று கேட்டான்.
அவனது கேள்வியில் பயந்தாலும் "ஆமாம் சார்" என்றான்.

ம்ம் என்றவன், அந்த பெரிய குடவுனிற்குள் நுழைந்தான்.

அங்கு நாலைந்து பேர் சுற்றி இருக்க நடுவில் நாற்காலியில் ஒருவன் கட்டப்பட்டிருந்தான்.

"என்ன எதுவும் சொன்னானா" கோபமாக கர்ஜித்தவன் அவனது அருகில் சென்றான்.

"இல்லங்க சார். இரண்டு நாளா எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறான்"

"ஆஹான்" என்றபடி தனது தாடையை தேய்த்தவன், அங்கு நின்றிருந்த ஒருவனுக்கு சைகை செய்ய, அவன் உள்ளே சென்று நகத்தை பிடுங்கி எரியும் அந்த கருவியை எடுத்து வந்தான்.

அதனை கண்ட சுந்தருக்கு ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.

'பேசாம இங்க இருந்து ஓடிப்போயிருடா' என்று ஒரு மனம் கட்டளையிட,

'உசுர அவனுக்கு உயில் எழுதி கொடுத்துட்டு எங்க போக' கதறியது மறுமணம்.

கதறிய மனதிடம் "ஆம்பள பிள்ளைங்க அழக்கூடாது" தைரியம் சொல்லி அடக்கி வைத்து நடப்பதை கவனித்தான்.

நாற்காலியில் அமர்ந்திருப்பவனுக்கு என்னவென்று புரியாமல் இருக்க
திமிராக எதிரில் நின்றவனை பார்த்து "நீ என்ன கொன்னே போட்டாலும் சொல்ல மாட்டேன்" என்றான்.

அவனை ஒற்றைப் புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தவன், அவனது ஒரு கை கட்டை அவிழ்க்க சொன்னான் கண் அசைவில்.

கைக்கட்டை அவிழ்த்து அடுத்த நொடி கையை அசைய விடாது நாற்காலியில் கை பிடித்து இருந்த அவனது கையின் மேலே தனது காலை அழுந்த வைத்தான் நகர்த்த விடாமல்.

அதில் அதிர்ந்து தன்னை பார்த்தவனை கண்டு கொள்ளாமல், தன் பிஏ வை பார்க்க, அவனோ லேப்டாப்பை ஒற்றை கையில் ஏந்தியவாறு மறுகையில் அதனை இயக்கிய படி அருகினில் வந்து நின்றான்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவனை ஒருமுறை கூர்ந்து பார்த்தவன், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி தனது கையில் இருந்த அந்த கருவியினால், அவனது வலது கை கட்ட விரலில் உள்ள நகத்தை கொய்திருந்தான்.

கொன்று இருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது போலவே கூக்குரலிட்டு அலறினான்.

"சீக்கிரம் எல்லாத்தையும் சொல்லிடுவன்னு நம்புறேன்" ஏளனமாக சொன்னவன் அடுத்த விரலான ஆள்காட்டி விரலில் நகத்தையும் எடுத்து இருந்தான்.

காலை அவனது கையில் இருந்து எடுத்தவன் "சுந்தர் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோ" என்ற படி வெளியேறி இருந்தான் கையில் இருந்த கருவியை அங்கிருந்த அடியாளை நோக்கு எறிந்து விட்டு.

அந்த அடியாளோ கண்ணசைவில் அவன் இட்ட கட்டளையை நிறைவேற்ற நாற்காலியில் இருந்தவன் அருகில் சென்றான்.

அவனோ வலி தாளாமல் கைகளை உதறியவனின் ரத்தம் அறை முழுவதும் தெறித்தது.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் "சொல்லு" என்றான் சுந்தர்.

நகங்களை பறிகொடுத்தவனோ மலவளவென்று தான் பணிபுரியும் நிறுவனத்தின் அத்தனை தகவல்களையும் கொட்டி விட பிஏ அதனை தன் மடிக்கணினியில் பதிவேற்றி இருந்தான்.

அனைத்தையும் முடித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அந்த குடவுனை விட்டு வெளியேறினான்.

வெளியில் வந்தவன் கண்டதெல்லாம் காரின் பேனட்டின் மேல் அமர்ந்து பாடலை ஒலிக்க விட்டவரே இளநீர் குடித்துக் கொண்டிருந்தவனை தான்.

அவன் சத்துருக்னன், 30 வயது இளைஞன் ஆறடி உயரம், அழகிய உருவம், அழுத்தககாரன், ஆனாலும் விழியசைவில் அனைவரையும் ஆட்டுவிப்பவன்.

இருபத்தியொரு வயதில் தந்தையுடன் தொழிலில் கால் பதித்தவன் இன்று அனைத்து துறைகளிலும் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறான்.

பெயருக்கு ஏற்றபடி அவனது சத்ருக்கள் நிறையவே இருந்தனர்.

தன்னை சத்ருவாய் நினைப்பவர்களையும் தான் சத்ருவாய் நினைப்பவர்களையும் கொல்கிறானோ இல்லையோ வென்று விடுவான்.

அவனது நியாய அநியாயங்கள் என்று, தனது வரையறைக்கு உட்பட்டதை மட்டுமே கருத்தில் கொள்வான். எதிரிகளை தீஜுவாலையாக எரிக்கும் தன் பார்வையால் எட்டி நிற்க வைப்பான்.

அருகில் செல்ல, செல்ல அந்தப் பாடலைக் கேட்டவனின் உள்ளமோ, 'இந்த மனுஷனை எந்த லிஸ்டில் சேர்க்கிறதுன்னு தெரியலையே' முணுமுணுத்துக் கொண்டது.

பின்னே சற்றுமுன் அவன் செய்த காரியம் என்ன இப்பொழுது அவன் கேட்கும் பாடல் தான் என்ன.
'நிலா காயுது நேரம் நல்ல நேரம்' என்று பாடல் ஓடவே உச்சி சூரியன் மண்டைய பொளக்குது இந்த நிலா காயுதாமாம் இவருக்கு.
தன் அருகே வந்த பி ஏ வை பார்த்தவன்

"என்ன சுந்தர் அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான் தானே" கேட்க ஆமோதிப்பாக தலையாட்டினான் அவன்.

"ஓகே பைன். அவனுக்கு ஒரு 10 லட்சம் பேமெண்ட் செட்டில் பண்ணிடு" என்றான் கையில் இருந்த இளநீரை அன்னாந்து குடித்தபடி.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தரோ 'அவன் விரலில் இருக்கும் நகம் அத்தனையும் எடுத்துட்டு 10 லட்சம் கொடுக்கிறாரு. மனுஷன் தானா இவர். பாவம் அவன் கதறுகிறான்' நினைத்தான்.

"மனுஷன் தான்னு நினைக்கிறேன் நல்லா பாரு இரண்டு கை கால் இருக்கு. நகம் தானே சுந்தர் திரும்ப வளந்துரும் டோன்ட் ஒரி. உயிர் ஒன்னு போகலைய".

'அய்யய்யோ மைண்ட் வாய்ஸ் நினைச்சு சத்தமா பேசிட்டமோ' நினைத்தவன் திருத்தெருவென விழித்தான்.

அவனை நக்கலாக பார்த்தபடி மீதி இருந்ததையும் குடித்து முடித்து இளநீரை தூக்கிப் போட்டவன்.

"வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரலாம் சுந்தர்" என்றபடி தாவி இறங்கினான்.

நாலா புறமும் தலையாட்டியவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

சுந்தர் காரை ஓட்டியபடி நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் கலந்தான். அப்பொழுது அவர்கள் பின்னே ஒரு லாரியும் வந்து சேர்ந்து கொண்டது.

மிதமான வேகத்தில் ஒட்டியவன் சற்று காலியாக இருந்த அந்த சாலையில் வேகம் எடுக்க, பின்னே வந்த அந்த லாரியும் வேகம் எடுத்தது.

முதலில் அதை கவனிக்காதவன் பின்னர் கவனித்து விட்டு அருகில் அமர்ந்திருந்த சத்துருக்னனை விழிவிரித்து பார்த்தான்.

இதழ்களை குவித்து ஒய்யாரமாய் சாய்ந்து விசில் அடித்தவன் "ரோட்ட பாத்து ஓட்டு மேன்" என்றான்.

"சார்" என்றவன் குரலில் சத்தத்தை காணோம் வெறும் காற்று தான் வந்தது.

சத்ருக்னனை கொல்ல, அவனது எதிரிகளில் யாரோ லாரி அனுப்பி இருக்க, அதில் இவனும் அல்லவா சிக்கிக் கொண்டான்.

பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது சுந்தருக்கு. கைகள் நடுங்க காரை செலுத்தினான் அவன்.

"டேய் என்னடா இது இப்படி வண்டி ஓட்டுற. நீயே என்ன மேல அனுப்பிருவ போலவே" சத்ருக்னன் நல்ல மூடில் இருந்தால் டேய் என்றே விளிப்பான்.

சுந்தரின் மனமோ 'அடேய் உசுரு ஊஞ்சலாடுது இப்போ போய் ஜாலியா இருக்கானே' ெநாந்துக் கொண்டது.

"பாஸ் நாம செத்துருவோம் போல பாஸ். எந்த பக்கம் போனாலும் அணைக்கட்டுறாங்க" கண்களில் நீர் திரண்டது சுந்தருக்கு.

" இதுவும் ஒரு அனுபவம் தானே சுந்தர் " என்றான் பதிலுக்கு அவன்.
" எதே அனுபவமா விட்டா செத்து செத்து விளையாடலாம்ன்னு சொல்லுவாரு போல" மனதோடு மருகினான் சுந்தர்.

" ஐயோ பாஸ் கண்ணி பையனாவே செத்துருவேன் போல என்ன காப்பாத்துங்க பிளீஸ்" காலில் விழாத குறையாக கெஞ்சினான் அவன்.

அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு , இருக்கையில் கண்மூடினான்.

" பேசாம நாமலும் கண்ண மூடிறலாம்" மைண்ட் வாய்ஸ் என்று சத்தமாக சொல்லிவிட ,

"டேய் உதை படுவ ஒழுங்கா கண்ண நல்லா திறந்து பாருடா " சத்ருக்னன் அதட்டவும் கண்களை கசக்கி கொண்டு சாலையில் பார்வை செலுத்த,

அவர்களை பின் தொடர்ந்த வாகனங்கள் அனைத்தும் மாயமானது. இப்போதும் விழி விரித்து பக்கவாட்டில் பார்த்தான் சுந்தர்.

என்ன என்று புருவம் உயர்த்தியவனை பார்த்து "பாஸ் எப்படி இதெல்லாம்" ஆச்சர்யமான குரலில் கேட்டான்,

பின்னே சில நொடிகளில் கிட்டதட்ட நான்கு வண்டிகள் பின் தொடர்ந்து வந்த தடயம் இல்லை என்றால் எப்படி அதான் இந்த ஆர்ச்சர்ய பாவம்.

"எப்படின்னா அது தெரிஞ்சா நீ பாஸ் ஆகிடுவியே" நக்கல் குரலில் சொன்னான் சத்ருக்னன்.

இந்த நக்கல் பேச்செல்லாம் சுந்தரிடம் மட்டும் தான் காட்டுவான். சுந்தர் அவனது நண்பனா என்றால் இல்லை பி.ஏ என்பதை தாண்டி ஏதோ ஒன்று.

இவனுக்கென ஒரே ஒரு நண்பன் தான் பிரகாஷ், மருத்துவன் அவன். இருவரும் இருவேறு திசை.

சந்தித்துக்கொள்வது கூட வருடத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ தான்.

எப்போதேனும் அத்திப் பூத்தார் போல கண்ணங்களில் குழி விழ சிரிப்பான். மற்றபடி அழுத்தம் தான்.

வீட்டிற்கு வந்தவன் சமையல் ஆள் வைத்துவிட்டு போன உணவை ரசித்து ருசித்து உண்டான்.

இவனிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களில் ஒன்று உண்ணும் உணவை ரசித்து உன்பது. அடுத்து பிடித்த இசையை ரசித்து கேட்பது.

அந்த அரசு அலுவலகத்தில் அனைவரும் நெடுஞ்சாலை துறையின் டென்டர்க்காக தங்களது வின்னப்படிங்களை கொடுத்துவிட்டு காத்திருக்க.

சத்ருக்னனும் தன்னுடைய CD கண்ஸ்ட்ரக்ஷன்ஸ்ன் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு அமர்ந்திருந்தான்.

சில வினாடிகளில் சத்ருக்னனின் நிறுவணத்திருக்கே டென்டர் வந்திருக்க. அவனது போட்டி நிறுவனமான ராகுல் கண்ஸ்ட்ரஷன்ஸ் எம்.டி ராகுல் அவனை பார்த்து முறைத்தான்.

தன்னை முறைத்தவனை எள்ளளவும் கண்டுகொள்ளாமல் தனது காரில் சக்ருக்னன் ஏற போக,

" இதெல்லாம் ஒரு பிழைப்பா " ராகுலின் எள்ளல் குரல் நிறுத்தியது அவனை.

கார் கதவை அடித்து சாத்தியவன், நிதானமாக திரும்பி கைகளை கட்டிக் கொண்டு மேலிருந்து கீழ் ஒருமுறை அழுத்தமாக நோக்கினான்.

" என்னோட ஆளை பிடிச்சு வச்சு, அடிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு நீ இந்த டென்டர எடுத்துருக்க "

தனது செயலை விலாவரியாக விலக்கியவனை கண்டு " யெஸ் அப் கோர்ஸ்" என்றான்.

" இதெல்லாம் தப்பு என்றவனை " கண்டு "ஆஹான் " என்று தலையாட்டி ,

" நான் செஞ்சது தப்புன்னா என்ன கொல்ல ஆள் அனுப்பின நீ செஞ்சது என்ன உத்தமமான செயலோ. " கோபத்தில் கர்ஜித்தவன்,

" எவ்ரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார் ன்னு சொல்லுவாங்க.
லவ் அண்ட் வார் மட்டும் இல்லை பிசினஸ்லயும் தான் எவ்ரிதிங் இஸ் பேர்" என்ற புதிய விதி ஒன்றை சொல்லிவிட்டு தன் காரில் பறந்திருந்தான்.

டென்டர் கைவிட்டு போன கோபத்தில் காலை ஓங்கி தரையில் மிதித்தான் அவன்.

பாவம் அவனும் என்னவெல்லாமோ செய்கிறான் ஆனாலும் சத்ருக்னனை வெல்ல முடியவில்லை அவனால்.

" என்ன சுந்தர் எந்த கோட்டைய பிடிக்க இவளோ யோசனை.

என்கிட்ட சொன்னா நானும் எனக்கு தெரிஞ்ச ஐடியா குடுப்பேனில்ல" தனது அருகில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த சுந்தரை வம்பிழுத்தான்.

" சார் காலையில வந்த வண்டி இவன் அனுப்பினதா. எப்படி சார் நாம தப்பிச்சோம். இப்போ நிசைச்சாலும் பயமா இருக்கு" உடல் சிலிர்த்தது அவனுக்கு பயத்தில்.

அவனை ஒரு பார்வை பார்த்த சத்ருக்னன், " நாம அடைச்சு வச்சுருக்கோமில்ல அவன போட்டு தள்ளிருவேன்னு சொல்லி மெசேஜ் பன்னேன். அவன் அடிச்சு பிடிச்சு அனுப்பின வண்டியத திரும்ப வரசொல்லிட்டான்" இயல்பாகவே சொன்னான்.

இப்போதும் புரியாத பாவனை சுந்தரிடம்.

"ஒரு எம்ப்ளாய்க்காக உங்கள சாரி நம்மள கொல்லாம விட்டுட்டாங்களா" நம்பாமல் கேட்டான்.

" அவன் வெறும் எம்ப்ளாய் மட்டும் இல்லடா அவனோட பினாமியும் கூட" என்று சொல்லிட

"பாஸ்" அதிர்ந்து போய் பார்த்தான்.
அவனை கண்டுக்கொள்ளாமல்,

"ஒரு வாரம் நான் ஊருல இருக்க மாட்டேன். எமர்ஜென்சின்னா மட்டும் காண்டாக்ட் பன்னு மற்றபடி நீயே பார்த்துக்கோ."

இது இவனது வாடிக்கைகளில் ஒன்று மாதத்தில் ஒரு வாரம் , பத்து நாட்கள் காணாமல் போய் விடுவான்.

எப்படி, எங்கு போகிறான் என்று எதுவும் தெரியாது.

கிட்டதட்ட இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் அன்று ஞாயிறு கிழமை காலையில்,

நான்கு புறமும் கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த விசாலமான உடற்பயிற்சி அறையில் ஏதோ ஒரு ஆங்கில பாடலை கேட்டபடி டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான் சத்ருக்னன்.

அப்போது அங்கு வந்த அவனது பிஏ சார் என்று, ஓடிக் கொண்டிருந்தவனின் முன் இருந்த கண்ணாடி பார்த்து தயங்கியவாறு அழைத்தான்.

ஓடிக் கொண்டிருந்தவனோ ஒரு நொடி அவனை பார்க்க, அதுவே தனக்கான அனுமதி என்றென்னி

"சார்... அம்மா" என்று ஏதோ சொல்ல வர முன்னர் , திடுக்கிட்டான் சில்லுசிலாய் உடையும் சத்தம் கேட்டு.

ஆம் அங்கிருந்த கண்ணாடியை உடைத்திருந்தான் கையில் கிடைத்த டம்பள்ஸ் கொண்டு.

நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள விதிர்விதித்துப் போனான் அந்த பிஏ.

அவனது மனமோ 'இவனுங்க மத்தியில உசுரு வாழ்வது கடவுள் புண்ணியம் தான் போல' கவுண்டர் கொடுத்தது.

துண்டால் பின்னங்கழுத்து, புறங்கைகளை துடைத்தபடி தனது பிஏ முன் நின்று ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென கேட்க,

"சார் ஆண்டி வந்திருக்காங்க. கீழே வெயிட் பண்றாங்க" சொன்னவன் விட்டால் போதும் என ஓடிவிட்டான்.

நிதானமாக தன் எல்லா வேலையையும் முடித்துக் கொண்டு சட்டையின் கையில் உள்ள பட்டனை அணிவித்து கொண்டு தன் வேக நடையில் அந்த மாடிப்படிகளை கடந்து வந்தான்.

வந்தவன் அவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து சென்று உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

மெதுவாக ரசித்து உண்டவனின், அருகில் வந்த பி.ஏ, கைகளை பிசைந்தபடி "சார் 1:30 மணி நேரமா வெயிட் பண்றாங்க" என்று சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்து விட்டுவிட்டு மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.

தனது உணவை முடித்து, அங்கு அந்த நீள் விருக்கையில் அமர்ந்திருந்த அவர்களின் எதிரில் இருந்த ஒற்றை இருக்கையில் இரு கைகளையும் கைப்பிடியில் நீட்டிக் கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

கருடன் தன் இறகுகளை விரித்தது போல் இருந்தது அவனது தோற்றம்.
அவனுக்கு எதிரில் நடுத்தர வயதில் அமர்ந்திருந்தவருக்கு அருகில் இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள்.

"கண்..." என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் "ஏய் " ஆக்ரோஷமாக கத்தினான் அவன்.

அதில் நடுநடுங்கியபடி "அ...அது... வந்துப்பா நான் உனக்கு பார்த்திருக்க பொண்ணு இதுதான்" தான் சொல்ல வந்ததை சாந்தினி உளரிவிட

அவரது கூற்றில் அவரை அழுத்தமாக பார்த்தான். "இல்லப்பா அது நீங்க இரண்டு பேரும் பேசி பழகுறதுக்கு வசதியா கூட்டிட்டு வந்தேன்" தட்டு தடுமாறி அவர் சொல்ல, அந்தப் பெண்ணோ அவனைப் பார்த்து காது வரை சிரித்தாள்.

"ஹவ் எபவுட் அ டேட் வித் மீ டார்லிங் " உதடுகள் வளைய ஏளனமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

அதில் அந்த பெண்ணும் உலகை வென்று விட்ட புன்னகையில் "எஸ் டியர்" என்று கிள்ளையாய் மிளற்றினாள்.

"ஓகே ஆன்ட்டி நான் பழகி பார்த்துட்டு சொல்றேன்" எழுந்து காலை சிறிது அகட்டி நின்று கைகளை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தவாறு கூறினான்.

அவனது ஆண்டி என்ற வார்த்தை சுருக்கென்று தைத்தது சாந்தினியை.

'உலகத்திலேயே பெத்த அம்மாவ ஆன்ட்டின்னு சொல்றது இந்த மனுஷனா தான் இருப்பாரு' முனுமுனுத்து கொண்டான் அந்த பிஏ.
 

மணம் 3:-

ரயிலில் ஊட்டியை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்த அன்பழகியின் நினைவலைகள் பின்னோக்கி சென்றது.

ரயிலுக்கும் அவளுக்கும் ஒரு அழகிய பந்தம் உண்டு. இதோ இன்று தனது எதிர்காலத்தை நோக்கி பயணப்படுவது போல,
ஒரு காலத்தில் அதாவது பள்ளி செல்லும் சிறுமியாக இருந்த போதிலிருந்து ரயில் பயணம் தான் தினந்தோறும்.

அதுவும் காவேரி பாலத்தில் பயணிக்கும் போது ஒரு முறையேனும் ரயிலில் இருந்து குதித்து நீச்சலடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசை கூட தோன்றியது உண்டு அவளுக்கு, அதை தனது தோழியிடம் சொல்லி அடி வாங்கிய அழகிய நாட்கள் அவை.

ஒரு பெருமூச்சுடன் நினைவலைகளை மீட்டலானாள்.

அன்று பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடப்பட்டன. நம் அன்பழகியோ நகங்களை கடித்தபடி மாலை நேர செய்தி தாளுக்காக காத்திருந்தாள்.

நகத்தை கடிப்பதும் எழுந்து வாசல் வரை செல்வதும் என அவளது செயல்களை கண்ட அமுதா, கேசரி கிண்டிய கரண்டியில் அவளது தலையில் நங்கென்று ஒன்று போட்டு,

"போய் அங்க உட்காரு அன்பு. பாலன் இப்போ வந்துருவான். எவளோ நேரம் நடப்ப" என்றார்.

" அம்மா பயம்மா இருக்கு மா." கண்களில் பயத்துடன் சொன்னவளை கண்டு முறைத்தவர்.

" ஸ்கூல் பர்ஸ்ட் வர பொண்ணுக்கு ஏன் பயம். எல்லாம் நல்ல முறையில் பாஸாகிடுவடா" சொல்லிக் கொண்டு இருக்கும்போதே பாலன் சோகமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்தான்.

"நீ ஏன்டா இப்படி இருக்க. எவன் கூட சண்டைபோட்ட ஒழுங்கா பேப்பர் வாங்கிட்டு வராம" என்று அவனை திட்ட ஆரம்பிக்க

இடைமறித்த பாலன் " அம்மா பேப்பர் வாங்கிட்டேன். ஆனால் பாப்பா நம்பர் அதுல" என்றவன் முழுதாக சொல்வதற்குள், ஓவென அழ ஆரம்பித்தாள் அன்பு.

" ஏய் அன்பு முதல்ல நிறுத்து. அவன் கையில இருந்து பேப்பர வாங்கி பாரு. அதை விட்டு அழுவியா" அதட்டினார் அமுதா.

" ஏய் இது அழுமூஞ்சி பாப்பா டோய் எல்லாரும் வந்து பாருங்க" என்று பரிகசித்த பாலன், " நீ பாஸாயிட்ட லூசு" தங்கையின் தலையில் பேப்பரில் ஒரு அடி போட்டவன் ஓடிவிட்டான்.

ஓடும் அவனிடம் இருந்து பேப்பரை பறித்தவள், ஏற்கனவே பாலன் அவளது தேர்வு எண்னை வட்டமிட்டிருக்க, அதை கண்டு ஆசுவாசமானவள்,

"பாலண்ணா இன்னிக்கு நீ மாட்டின என்கிட்ட" எப்போதும் தன்னை இது போல சீண்டும் அவனை துரத்தி ஓடினாள் அன்பழகி.

இருவரையும் பார்த்த அமுதா "கால முச்சூடும் என் புள்ளைங்க இரண்டும் இப்படியே சந்தோசமா இருக்கனும் முருகா" வாய்விட்டு வேண்டியவர், மிச்ச சமையலை கவனிக்க சென்றார்.

மகள் தேர்வில் தேர்ச்சி பெற்றதை கொண்டாட கேசரியும் பஜ்ஜியும் செய்திருந்தார் அமுதா.

பாலனும் அன்புவும் அமர்ந்து உண்டனர். எப்போதும் இனிப்பின் மேல் அன்பழகிக்கு சற்று பிரியம் அதிகம்.

அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவாள். அன்றும் அப்படித்தான் "அம்மா இன்னும் கொஞ்சம் கேசரி " அவள் நீட்டிய தட்டில் " அன்பு" என்றவாறே கொஞ்சமாக வைத்தார் அமுதா.

" அம்மா அவ எவளோ சாப்பிட்டாலும் ஒல்லியா இருக்கா எப்படி மா. ஆனால் பாரு, நாம எல்லாரும் குண்டாக இருக்கிறோம்" தனது இரட்டை நாடி தேகத்தை பார்த்து விட்டு கேட்டான் பாலன்.

" நம்ம குடும்பத்துல இது தப்பி பொறந்துருக்கா பாருங்கம்மா. சுருள் முடி, முட்டை கண்ணு, எலும்பிச்சம்பழ நிறம். ஒல்லி உடம்பு, முகம் கூட பாரு கொஞ்சம நீள்வட்டம். ஆனால் நமக்கெல்லாம் வட்ட முகம். ஆஸ்பத்திரில மாத்தி எடுத்துட்டு வந்துட்டிங்களா என்ன" எப்போதும் போல அவன் தனது தங்கையை வம்பிழுக்க,

"இங்க பாருங்கம்மா அண்ணன்ன" சினுங்கினாள்
இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் எழுந்து சென்றார்.

இரவு போல தான் அந்த குடும்பத் தலைவன் ராஜதுறை வந்தார். மளிகை கடை வைத்திருக்கிறார் அவர். அது போக நிலபுலன்களும் உண்டு.

இப்போது அவர்கள் இருப்பதோ சொந்த வீடு மாடி வீடு தான், பத்து செண்டில் பெரியது முன்னும் பின்னும் இடவசதி உண்டு.

வீட்டிற்கு பின்னே காய்கறி தோட்டமும் வீட்டிற்கு முன்னே பூக்களும் என அன்பழகியின் கைவண்ணத்தில் மிளிர்ந்தது.
மேலும் வீடு ஒன்று மகளின் திருமணத்திற்கு சீதனமாக தருவதற்காக இடம் வாங்கி போட்டிருக்கிறார் ராஜதுறை.

மகளும் மகனும் அவருக்காக காத்து இருக்க, பிள்ளைகளை புரிந்தவராக அனைவரும் உணவு உண்டு மொட்டைமாடி சென்று பேசி சிரித்து, அன்பழகி பரதம் ஆடவே கண்டுகளித்து அங்கேயே உறங்கலானார்கள்.
இது எப்போதும் உள்ள வழமையே, வாரத்தில் ஒரு முறை இந்த மொட்டை மாடி பேச்சு, நடனம், தென்றல் காற்று , வெட்டவெளி உறக்கம் என்று அவர்களது வாழ்வின் அங்கமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

மறுநாள் பள்ளி சென்றதில் அன்பழகி தான் அந்த மாவட்டத்திலேயே அதிக மதிப்பென் எடுத்து முதல் மானவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்று தெரிய வர அவளை கொண்டாடி தீர்த்தனர் அனைவரும்.

மேலே என்ன படிப்பது என்ற கேள்வி வர அன்பழகி பிகாம் மற்றும் சி.ஏ படிக்க தனக்கு விருப்பம் என்று ராஜ துறையிடம் சொல்ல.

" ஏன்ம்மா பிபிஏ எபிஏ இப்படி படிக்கலாமில்ல." வாஞ்சையாக கேட்ட தந்தையை பார்த்து,

"இல்ல அப்பா. எனக்கு இது பிடிச்சுருக்கு நல்லா வரும். அதுவுமில்லாம இதுவும் இன்ஞ்சினியரிங் மெடிக்கலுக்கு போல சளச்சது இல்ல அப்பா. " தெளிவாக பேசிய மகளை மெச்சுதலாக பார்த்த ராஜதுறை

" பாருடா பாலா எம்பொண்ண எவ்வளோ தெளிவா இருக்கா. நீயும் சுயமா யோசிச்சு உனக்கு என்ன வேணும்ன்னு முடிவெடுத்திருந்தா இப்படி ஏழு அரியர்ஸோட இரண்டு வருஷம் வெட்டிய திரிய ேவண்டியிருக்காது பாரு "

மகன் தனது நண்பர்கள் பேச்சை கேட்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் எடுத்து இப்போது அரியர்ஸ் வைத்து இருப்பது கவலை அளித்தது அவருக்கு. அதன் வெளிபாடு அவ்வப்போது இவ்வாறு வெளிபடும்.

இவர்களுக்கு பக்கத்தில் உள்ள ஊர்தான் திருச்சி மாநகரம். அங்கு உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் அன்பழகியை சேர்த்து விட்டு கல்லூரி செல்ல தேவையான உடை கைளை வாங்கிகொண்டு வீடு வந்தனர் அந்த குடும்பத்தினர்.

கல்லூரியில் தாவனி பாவடையே பிரதான உடையாக இருக்க, மறுநாள் தையலரிடம் அளவு கொடுத்துவிட்டு வந்தனர்.

இடைபட்ட நாட்கள் அன்பழகிக்கு மகிழ்ச்சியாகவே கழிந்தது.
தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டு திரிவது, சமையல் செய்கிறேன் பேர் வழி என்று அனைவரையும் தான் சமைத்ததை சாப்பிட வைத்து வழி பிதுங்க செய்வது, தனது செடி கொடிகள் என்று அவளது பொழுதுகள் சுகமாகவே சென்றது.

வார இறுதி நாட்களில் சமயபுரம், ஸ்ரீரங்கம், உச்சி பிள்ளையார் கோயில், முக்கொம்பு, கல்லணை என்று சென்று வர, நாட்கள் பறந்தோடியது அன்பழகிக்கு.
விடுமுறையில் பெரும்பாலும் சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு அவளை அனுப்புவதில்லை அமுதாவும் ராஜதுறையும்.

பாலன் கூட தந்தை அவனை சற்று அதிகமாக திட்டி விட்டாள் பையை தூக்கிக் கொண்டு பாட்டி வீட்டிற்கு படையெடுத்து விடுவான். அங்கு தாய் மாமனிடம் சீராடிவிட்டு வருவது வழக்கமானது இந்த இரண்டு ஆண்டுகளாக.

ஆதனால் அன்பழகி வீட்டை விட்டு தனியே செல்ல வேண்டும் என்றால் அது பள்ளி கல்லூரி தான். பெரிதாக நெருங்கிய நட்பு வட்டம் என்று இல்லை அவளுக்கு.

அப்படி இல்லாமல் பார்த்துக் கொண்டனர் அமுதாவும் ராஜதுரையும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ இன்று கல்லூரி முதல் நாள், பரபரப்பாக தயாரானாள் அன்பு.

வாடாமல்லி தாவணியும் நீல நிறத்தில் பாவடை சட்டையும் அவளுக்கு மிகவும் எடுப்பாகவே இருந்தது.

நேற்று வரை இரட்டை ஜடையில் வலம் வந்ததவள் இன்று தலை குளித்து நேர் வகிடு எடுத்து இருபுறமும் சிறிது முடி எடுத்து நடுவில் சிறிய பிண்ணல் இட்டு கீழே தளர பிண்ணி தண்ணீர் ஜடை போட்டிருந்தாள்.

தாய் தந்தையிடம் ஆசி வாங்கி கொண்டு, சாமியை வணங்கிவிட்டு கல்லூரிக்கு செல்ல ரயில் நிலையம் சென்றாள்.

அத்தனை உற்சாகம் துள்ளல் அவளது ஒவ்வொரு செயலிலும் வெளிபட்டது.

அன்பழகி வழக்கம் போல லேடிஸ் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டவள், தனது பையை அங்கு அமர்ந்து இருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்து விட்டு கதவுக்கு அருகினில் நின்று வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டாள்.

ரயில் நிலையத்தில் இருந்து சற்று நடந்து செல்ல வேண்டி உள்ளது அவளது கல்லூரிக்கு.
அவளை போலவே சில பெண்களுக்கும் அன்று முதல்நாள் கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்க, ஒருவரை ஒருவர் பார்த்து புண்ணகைத்து கொண்டனர். வேறு வேறு பிரிவு என்றாலும், அங்கு ஒரு அழகான ரயில் சினேகம் உருவானது.

தினமும் கல்லூரி செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் சேர்ந்தே செல்வது என்ற உடன்படிக்கைக்கு வந்தனர்.
கல்லூரி நுழைவு வாயிலில் ஒரு அழகான சிறிய கற்பக விநாயகர் ஆலயம் ஒன்று இருந்தது.

அன்பழகி விநாயகர் பக்தை. அவள் அந்த கல்லூரியில் சேரும் போதே அந்த கோவில் தான் அவளை வெகுவாக ஈர்த்தது.

வருடா வருடம் அவளது பிறந்தநாளுக்கு உச்சி பிள்ளையாரை தரிசித்து விட்டு வருவது அவளது வழக்கம் ஆகும்.

நேரே கோவிலுக்கு சென்றவள், விநாயகரை வழிபட்டுவிட்டு அந்த பிரகாரத்தில் அமர்ந்து கண்களில் எதிர்கால கனவு பொங்க கல்லூரியின் ஒவ்வொரு கட்டிடத்தையும் நோட்டம் விட்டாள்.

அப்போது அவள் அருகில் சற்று இடைவெளி விட்டு ஒரு பெண் வந்து அமர்ந்தாள். அவளை திரும்பி பார்த்த அன்பழகிக்கு தெரிந்தது தன்னை போலவே அவளும் புது மாணவி என்று.

அவளை பார்த்த அன்பழகி சிரித்துக்கொண்டே " நான் அன்பழகி பி.காம் முதல் வருடம். நீங்க" என்றாள் தானே அறிமுகமாகி.

அந்த பெண்ணோ ஒரு ஆசுவாச பெருமூச்சுடன், " நான் தர்ஷனி. நானும் பி.காம் முதல் வருடம் தான். கிளாஸ் எங்கன்னு தெரியாம பார்த்துட்டு இருந்தேன்" என்றாள்.

"பார்த்துட்டு இருந்தேன்னு சொல்லாத திரு திருன்னு முழிச்சுட்டு இருந்தேன்னு சொல்லு " தர்ஷினியை வம்பிழுத்தாள் அன்பழகி.

அதில் சற்று அசடு வழிந்த தர்ஷனி "உனக்கு கிளாஸ் எங்க இருக்குன்னு தெரியுமா" கேட்டாள்.

"எனக்கும் தெரியாது" என்று தோளை குலுக்கிய அன்பழகி அவளது கைபற்றி எழுப்பி " வா ஆபிஸ் ரூம்ல கேட்டுட்டு போவேம். சும்மா உட்கார்ந்து இருந்தா ஆச்சா"
இருவரும் ஆபிஸில் சென்று கேட்டு தங்களது வகுப்பறைக்கு சென்றனர்.

செல்லும் வழியில் தங்களது ஜாதகத்தை தவிர பூர்வீகம் வரை பகர்ந்து கொண்டு ஆதர்ஷன தோழிகள் ஆயினர்.

தர்ஷினி வேறு மாவட்டத்தில் இருந்து இங்கு கல்வி கற்க வந்திருக்கிறாள். கடைசி நேரத்தில் வந்து சேர்ந்ததால் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கல்லூரியை சேர்ந்த விடுதியில் இடம் கிடைக்க வில்லை. ஆதலால் வெளியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கிறாள்.

வகுப்றைக்குள் நுழைந்தவர்கள் தங்களுக்கென இடத்தை பார்த்து அமர்ந்தனர்.

அனைத்து மாணவிகளும் தங்களுக்குள் பேசி கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகமானார்கள்.

சற்று நேரத்தில் எல்லாம் பேராசிரியர் வந்து விடவே, வந்தவர் "நான் மேகலா உங்க ஸ்டாப் இன் சார்ஜ் அதாவது கிளாஸ் டிச்சர் மாதிரி " என்றவர்,

"மாணவிகளே ஒருவரை ஒருவர் அறிமுகம் செஞ்சுக்கங்க" அறிமுக படலத்தை தொடங்கி வைத்தார் அவர்.

ஒரு ஒரு மாணவிகளாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள அன்றைய தினம் இனிதே நிறைவுபெற்றது.

மறுநாள் கல்லூரி வந்த மாணவிகளுக்கு முதல் நாள் நடந்த அறிமுகத்தில், அனைவருக்குள்ளும் ஒரு தோழமை உணர்வு ஏற்பட்டது.

கல்லூரியின் முதல் பதினைந்து நாட்கள் ஆங்கில மொழிக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும், என்று மேகலா முதல் நாளே கூறிவிட்டு சென்றிருக்க, ஆங்கில பேராசிரியர் வகுப்பை தொடங்கினார்.

ஒரு வாரம் சென்றிருக்க, புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்த ஆயத்த வேலைகள் நடந்துக் கொண்டிருக்க, முதல் வருட மாணவிகளுக்கு குதுகலம் தான்.

பாடவேளைகள் இல்லாமல் இருந்தாள் நன்றாக இருக்கும் தானே.

இங்கு வீட்டில் அன்பழகிக்கு எப்போதும் போலதான் நட்கள் சென்றது மகிழ்ச்சியாக.

பாலனை ராஜதுரை தன்னுடன் மளிகை கடைக்கு வர சொல்லவே அவனோ முடியாதென ஒற்றை காலில் நின்றான். அதனால் ராஜதுரை மகன் மீது அதிருப்தியில் இருந்தார்.

இது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும், இந்த முறை மகன் தன்னுடன் தனது வேலைகளில் தொழிலில் கை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார் அவர்.

மேலும் அவருக்கு தனது உடல் நிலையில் ஏதோ சரியில்லை என்றும் தோன்றியது. அதற்குள் மகன் மகளுக்கு ஸ்திரமான நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற முனைப்பு அவரிடம். அதை வெளிப்படையாக வீட்டில் சொல்ல முடியாத நிலை வேறு.

நாட்கள் செல்ல ஆங்கில பயிற்சி வகுப்புகள் நிறைவு பெற்றது முதல் ஆண்டு மாணவிகளுக்கு.

இன்னும் இரு தினங்கள் தான் இருந்தன, கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நாளுக்கு.

தர்ஷினி பாடல் பாடுவது என்றும், அதற்கு அன்பழகி பரதம் ஆடுவது என்றும் முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் பயிற்சி எடுக்க ஆரம்பித்தனர்.
இரு தினங்கள் முடிய அன்று விழா நாள்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவிகள் அமர்ந்து இருக்க, வரவேற்புரை சிறப்புறை முடிந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கின,

குழு நடனம், தனி நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி என கலைகட்ட,
தர்ஷினியும் அன்பழகியும் மேடை ஏறினார்கள்.

'ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று ' என்ற திருப்புகழ் பாடலும், 'குனித்த புருவமும் 'என்ற தேவாரம் பாடலும் தர்ஷினி தன் தேன் குரலில் பாடினாள் என்றால், அன்பழகியோ தனது நடனத்தினால் அனைவரையும் கட்டிப் போட்டாள்.
 
மணம் 4 :-

அன்று டென்டர் முடிந்த இரண்டாம் நாள், தேவராஜன் சத்ருக்னனின் தந்தை, தனது மகன் சத்ருக்னனை காண அவனது வீட்டிற்கு வந்தார்.

தேவராஜன் என்பது வயது கடந்தவர். சத்ருக்னனின் தந்தை என்று அடித்து சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். பின்னே பேரன் வயதில் மகன் இருந்தால் யார்தான் நம்புவார்கள்.

பத்து வயதில் சக்ருக்னனை பள்ளி சேர்க்கையில் இருந்து இதே பார்வைதான் இருவர் மீதும். சாந்தினி எழுபது வயதை கடந்தவர் என்றாலும் பார்வைக்கு மத்திய வயது தோற்றம் இருந்ததால் அவருக்கு இது போல பிரச்சனை எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி எழுபத்தி இரண்டு வயது அவருக்கு.

ஏன் சுந்தரே இங்கு வேலைக்கு வந்த நாள் முதல் அப்படிதானே எண்ணியிருந்தான். ஏழேட்டு ஆண்டுகளாக வேலை செய்பவனுக்கே எழட்டு மாதம் முன்னர்தான் உண்மையிலே சாந்தினியும் தேவராஜனும் சத்ருக்னனின் அம்மா அப்பா என்று நம்பினான்.

தாய் தந்தையிடம் அவன் காட்டும் முகம் சுந்தருக்கு பிடிக்காது ஆயினும் சொல்ல முடியாதே முதலாளி ஆயிற்றே.
அங்கு அமர்ந்து இருந்த தேவராஜன் " இவனுக்காக ஏக்கர் கணக்கில அரண்மனை மாதிரி வீடு கட்டி வச்சுருக்கேன் இவன் என்டான்ன இங்க வந்து தனியா இருக்கான். எப்போ தான் மாற போறானோ." வாய் விட்டு சத்ருக்னனை திட்டியவர்,
அன்று தான் முதன்முதலாக மகனின் வீட்டிற்கு வருகை தருகிறார் அவர்.

தனது மனைவி சாந்தினி அவ்வப்போது இங்கு வந்து அவனை பார்த்து திட்டு வாங்கி செல்வார். அது அவருக்கு அறவே பிடிக்காது தான். இருந்தும் மனைவியை தேவராஜன் தடுக்க பெரிதாக முயலவில்லை. போகாதே என்று சொன்னால் தான் இருவருக்கும் முட்டிக்கொள்கிறதே.
அது என்னவோ இளமையில் மனைவியை அடித்தோ, திட்டியோ கட்டுக்குள் வைத்திருக்க முடிகிற கணவர்களால், முதுமையில் முடியவில்லை.

முதுமை தாளாமல் துவண்டு போவதாலோ இல்லை பக்குவமோ ஏதோ ஒன்று மனைவிகளின் கரங்களே தம்பதிகளின் முதுமையில் ஓங்கியிருக்கிறது. அதற்கு தேவராஜனும் விதிவிலக்கல்ல.

தான் இங்கு வந்த அடுத்த நொடி செய்தி சென்றிருக்கும், இருந்தும் முதல் முறையாக வீட்டிற்கு தகப்பன் வந்திருப்பது அறிந்து இன்னும் வராது இருப்பது வெகுவாக கோபப்படுத்தியது.

ஆனால் அவனோ தனது வேலைகளை முடித்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் வீட்டிற்கு வந்தான்.
அவர் தன்னை பார்க்க தான் வந்து இருக்கிறார் என்று தெரிந்தும் ஏனென்றும் கண்டுகொள்ளாமல் வேலையாளிடம் சிற்றுண்டிக்கு சொல்லிவிட்டு மாடியேறினான்.

அவனது அலட்சியத்தில் அத்தனை ஆத்திரம் வந்தது அவருக்கு. ஆயினும் என்ன செய்ய முடியும் தனது ஒரே வாரிசு ஆச்சே. பல்லை கடித்தபடி அமர்ந்து இருந்தார்.

சற்று நேரத்தில் சுந்தர் வரவே, அவனை கண்டவர் " ஏன்டா வேலை முடிஞ்சும் இப்படி அவன் கூடவே சுத்துற. உங்க வீட்டுல உன்ன தேட மாட்டாங்களா" மகன் மீது இருந்த கடுப்பில் அவனை கேட்டார்.

' ஆமாம் நான் உங்க மகனோட லவ்வரு பாருங்க. விட்டா தானேய்யா வீட்டுக்கு போக, ஆபிஸ்ல இருந்து நேர இங்க தான் வரேன் ' மனதோடு நொந்து கொண்டவன்,

" வேலை இருக்குன்னு சார் வர சொன்னார் சார்" என்றான் பவ்யமாக

அவனை மேலிருந்து கீழ் நோக்கிய தேவராஜன், " நான் வந்துருக்கேன்னு சொல்லி வர சொல்லு. பார்த்தும் பார்க்காத மாதிரி போறான்" முன் பாதியை சத்தமாக சொன்னவர் பின் பாதியை முனகினார்.

மாடியில் உள்ள சத்ருக்கனனின் அலுவலக அறைக்கு விரைந்த சுந்தர், " பாஸ் அப்பா வந்துருக்கார் போல நீங்க கவனிக்கலையா" என்று சொல்லி முடிப்பதற்குள் ,

சத்ருக்னன் அறைந்த அறையில் சுந்தரின் கடைவாய் பல் கையோடு வந்தது.

" பாஸ் பல்லு" அதிர்ந்து போய் அவன் சொல்ல, " தூக்கி தூர போட்டுட்டு வேலைய பாரு."

" பாஸ் இது என்னோட பல்லு பாஸ்" அழுதுவிடும் குரலில் சொன்னான்.

" நான் என்ன என்னோட பல்லுன்னா சொன்னேன். லாப்டாப் ஆன் பன்னு மேன் "

அதே நேரத்தில் சமையலாள் பக்கோடாவும் டீயும் வைத்துவிட்டு செல்ல, "ம் எடுத்துக்கோ" என்றான் சத்ருக்னன்.

' பல்லயும் உடைச்சுட்டு பக்கோடாவும் குடுக்குறிங்களே பாஸ் உங்க கருணையோ கருணை'

"பல்லு வலி. பல்லு புடுங்கனும்ன்னு அரை நாள் லீவு கேட்டியே இனி தேவையில்லைன்னு நினைக்கிறேன்" நக்கலாக சொன்னான் சத்ருக்னன்.

அதற்கு "பாஸ் செலவும் மிச்சம்" என்றான் சுந்தர்.

" நீயெல்லாம் திருந்த மாட்டடா" என்றவன், அவனிடம் காசோசலையை நீட்ட, சுந்தர் புரியாது பார்த்தான்.

" டேய் தங்கச்சி கல்யாணத்துக்கு வச்சுக்க" என்றான் அதட்டலாய்.
" பாஸ் " விழி விரித்தான் சுந்தர்.

" டேய் நான் என்ன பொண்ணா எப்ப பார்த்தாலும் இப்படி உன்னோட முட்ட கண்ண விரிச்சு வச்சு பார்க்கிற " கடுப்பாக சத்ருக்கனன் சொல்ல

சுந்தரோ " சீ போங்க பாஸ்" வெட்கப்பட்டான்.

"உன்ன கொல்ல போறேன்டா இப்ப"

சத்ருக்னனின் அலைபேசி அடிக்க, அவனது தந்தை தான் அழைத்திருப்பது, ஒரு பெருமூச்சுடன் சற்று முன் இருந்த இலகுவான தோற்றம் மறைய, இறுகி போனவனாக கீழே சென்றான்.

"நான் வந்து மூன்று மணி நேரம் ஆக போகுது" என்றார் தேவராஜன்.

"நான் ஒன்னும் உங்கள வர சொல்லலையே" என்றான் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய்.

அதில் முகம் கண்றியவர் "நான் உன்னை பார்க்க தான் வந்தேன்" என்றார்.

"இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னோட ஆபிஸ் க்கு வந்திருக்கலாம்" இப்போதும் விட்டேத்தியான பதில் தான் வந்தது.

" நீ உன்னோட CD கண்ஸ்ட்ரஷன்ஸ்க்கு தான் டென்டர் எடுத்துருக்கன்னு கேள்விப்பட்டேன்" தேவராஜன் புருவம் சுருக்கி பார்த்து கேட்டார்.

"பரவாயில்லையே இரண்டு நாள்ல தெரிஞ்சுருச்சு, கண்டுபிடிச்சுட்டிங்களே சூப்பர்" தனது நக்கல் குரலில் சொல்ல

"நீ என்ன நம்ப வச்சு கழுத்துத் தறுத்துட்ட டா சத்ருக்னா" கோபத்தில் தேவராஜன் கத்த

" யெஸ் மிஸ்டர் தேவராஜன். ஐ பிட்ரேயிடு யூ. இது நம்பிக்கை துரோகம் தான் " என்றவன்,

" நான் சத்ருக்னன் தான். அதுலயும் உங்களோட சத்ரு. மை கேம் ஹஸ் பிகன்" என்றான் அழுத்தமாக.

அவனது பேச்சில் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தவர், தனது தலையை உலுக்கிக்கொண்டு,

"நீ இந்த டென்டர் தேவா கன்ஸ்ட்ரஷன்ஸ்க்கு தானே எடுக்றதா சொன்ன"

"சொன்ன சொன்னது போல நடக்கனும்மா என்ன"

"பேசாம ரெண்டு கண்ஸ்ட்ரக்ஷன்ஸயும் ஒன்னா ஆக்கிடலாமா" தேவராஜன் சொல்ல

" எனக்கு விருப்பமில்லை. இது என்னோட சொந்த உழைப்பு நான் தனியாள் "

பட்டும் படாமல் பேசும் அவனது போக்கை கண்டு அயர்ச்சியாக இருந்தது. கண்டிக்கும் வயதில் கண்டித்திருந்தால் இப்படி கைமீறி சென்றிருக்க மாட்டானோ, எதை எதையோ நினைத்துக்கொண்டவர் ஒருவிதமான அலுப்பான குரலில்,

" எல்லாத்தையும் விட்றலாம். அங்க நம்ம வீட்டுக்கு வாப்பா " கிட்ட தட்ட கெஞ்சினார் அவர்.

"என் வீடு தான் எனக்கு வசதி" என்று நிதானமாக அதே நேரம் அழுத்தமாகவும் சொல்ல

"என்ன அப்பான்னு கூப்பிட மாட்டியாடா" ஏக்கம் இழைந்தோடியதோ அவரது குரலில்.

அவரது பேச்சில் வெகுண்டு எழுந்தவன் "கெட் அவுட் ஐ சே" வாசலை காட்டிவிட்டு மேலும் அங்கே நிற்காமல் மடமட வென்று மாடி ஏறினான்.

கீழே நடந்த அனைத்தையும் கண்டு விட்டு " சார் பெத்த அப்பாவ இப்படி பேசுறது தப்பு" என்றான் சுந்தர் ஆற்றாமையுடன்.

" ஹாஹாஹா சார் எனக்கு அட்வைஸ் பண்றீங்களோ. மூடிட்டு வேலை செய் இல்லன்னா இன்னோரு பல்லும் உடையும்"

கோபத்தில் கத்தியவன் ஜன்னல் கம்பிகளை இறுக பற்றிய படி நிற்க,
கீழே தேவராஜன் தனது காரில் ஏறுவது தெரிந்தது. ஏறுவதற்கு முன்னர் வீட்டை ஒருமுறை திரும்பி பார்த்தவர் முகத்தில் ஒரு ஏளனமான புன்னகையே தோன்றியது.

அதனை கண்டவன் மித மிஞ்சிய கோபத்தில் விழிகள் சிவக்க, ஜன்னல் கம்பியை இன்னுமே இறுக பற்றினான், கைகள் நோக வலி எடுத்தது.
அந்த வலி பல காயங்களுக்கு மருந்திட்டது என்பது எத்தனை உன்மையோ அதே நேரத்தில் பல ரணங்களையும் கீறியும் விட்டது.

இங்கு சுந்தரோ 'ஆத்தி இவரோட சுத்துற பாவத்துக்கு ஒரு பொண்ணு கூட செட் ஆக மாட்டேங்குது. இது பல்லு போய் பொக்க வாய் தாத்தாவான்னா எப்படி ரொமான்ஸ் பன்ன' மனதோடு உறையாடினான்.

" ரொமான்ஸ் பன்னனும்ன்னா கல்யாணம் நடக்கனும்டா. அதுக்கெல்லாம் வாய்பில்லை ராஜா வாயிப்பில்லை"

தன்னை திரும்பியும் பாராமல் சொன்ன சத்ருக்னனை கண்டு ஆச்சர்ய பட்ட சுந்தர், "எப்படி பாஸ் மனசுல நினைக்கறைத சரியா சொன்னீங்க" கேட்டான்.

" நீ எப்படிலாம் டிசைன் டிசைன்ன திங்க் பன்னுவன்னு தெரியும் டா எனக்கு"
தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு சத்ருக்னன் சொல்ல, '

"இப்ப என்ன நினைக்கிறேன்னு சொல்லுங்க பார்க்கலாம்" என்று கூறினான் சுந்தார் சவாலாக,

அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, தனது கையில் இருந்த பைலில் பார்வையை பதித்தபடி
" இன்னிக்கு பண்ணிரெண்டு மணி வரைக்கும் உனக்கு வேலை இருக்கு. அதனால் இப்ப உன்னால் வீட்டுக்கு போக முடியாது" என்றான் சத்ருக்னன் அவனது என்னங்களுக்கு பதில் கூறும் விதமாக.

இப்போதும் விழி விரித்து பார்த்தான் சுந்தர்.

அன்று சாந்தினியிடம் சொன்னது போல, அடுத்து வந்த இரு தினங்களில், சத்ருக்னன் அந்த யுவதியுடன் டேட்டிங் சென்றான். சுந்தரையும் அழைத்துக் கொண்டுதான்.

"சார் நான் எதுக்கு " சங்கடமாக நெளிந்தவனின் முதுகில் ஒரு அடி வைத்தவன்,

" நீ என்னோட பி.ஏ தானே அதான் மேன். அப்புறம் ேநாட்ஸ் எடுக்க ஆள் வேணுமில்ல" என்றான் நக்கலாய்.

' நோட்ஸா... ஆத்தி... விட்டா எதெதுக்கெல்லாம் நோட்ஸ் எடுக்கிறது. ஒரு கன்னிப் பையனை கொடுமை படுத்துறிங்களேடா'
என்றவன்,

தன்னை அவ்வப்போது முறைத்து பார்க்கும் அந்த பெண்ணை கண்டு இளித்து வைத்தான்.

' இந்த பொண்ணு வேற நம்மள கேவலமா பார்க்குது. அடிச்சிரும்மோன்னு வேற பயமா இருக்கு ' உள்ளூர ஊமையாக அழுதான் அவன்.

ஒரு ஹோட்டலில் காரை நிறுத்த சொன்னவன்,
" டேய் இங்க தான் மீட்டிங் நடக்குது. நீ அட்டென்ட் பண்ணு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் " என்று சுந்தரிடம் சொன்னவன்,

அந்த பெண்ணின் புறம் திரும்பி " வொய் டோண்ட் வீ ஸ்பெண்ட் அவர் டைம் இன் ரூம்" என்று வினவ

அந்த பெணோ சந்தோஷமாக தலையசைத்தவள், " உங்க அம்மா அப்பவே சொன்னாங்க உங்கள அட்ஜஸ்ட் பண்ண சொல்லி" என்று அவள் சொல்லிவிட

ஒரு நொடி அவனது முகம் கோபத்தில் சிவந்தது.

இவர்களது பேச்சை கேட்ட சுந்தர் "அய்யோ பாஸ் ரூம் போட போறிங்களா" கிட்டதட்ட அலறினான் என்றுதான் சொல்லவேண்டும்.

" ஆமாம் டா. பாரு இவகிட்ட சொல்லி வேற அனுப்பிச்சு இருக்காங்க" என்று சொல்லியவன், அந்த பெண்ணிடம் கண்காட்டி அந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

ஒரு அறை மணி நேரம் சென்றிருக்கும், சுந்தருக்கு அழைத்த சத்ருக்னன் "மீட்டிங் ஹாலுக்கு வா" சொல்லிவிட்டு வைத்து விட, குழப்பத்துடனே அங்கு சென்றான் சுந்தர்.

அங்கு சத்ருக்னனை கண்டவன் அவனது முடி முதல் அடி வரை ஆராய்ந்தான்.

அவனது பார்வையும் பாவனையும் தந்த சிரிப்பை நாவிடுக்கில் ஒளித்தவன்

"பார்த்தது போது நோட்ஸ் எடு சுந்தர் " என்றான் தனது மடிக்கணினியில் பார்வையை செலுத்தியபடி.

சத்ருக்னனன் எப்படி போனானோ அப்படியே வந்திருத்தான்.

அவனது ஜெல் வைத்து படிய வாரிவிட்ட சிகை கூட கலையவில்லை , " சார் அரை மணி நேரத்தில வந்துட்டிங்க" என்ன முயன்றும் முடியாமல் தனது சந்தேகத்தை கேட்டே விட்டான் அவன்.

அவனை சத்ருக்னன் கூர்மையான ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை தொடர, சுந்தரோ எல்லை மீறி பேசிவிட்டோம் என்று புரிந்து நடுநடுங்கி போனான்.

பின்னர் மீட்டிங் முடிந்து பிசினஸ் லன்ஞ் முடித்து விட்டு இருவரும் சத்ருக்னன் வீட்டிற்கு வர, சாந்தினி காத்திருந்தார் இவர்களது வரவிற்காக.

உள்ளே நுழைந்த சத்ருக்னன் வழக்கம் போல அலட்சியமாக கடந்து செல்ல முற்பட, "ஏன் சத்ருக்னா அந்த பொண்ணு கிட்ட அப்படி சொன்ன"

"எப்படி " என்றான் ஒற்றை வார்த்தையில்.

அவன் சொன்னதை தனது வாயால் எப்படி கூறுவது என்று ஒரு நொடி யோசித்து விட்டு, வேறு வழியின்றி

" நீ இம்பொடென்ட்ன்னு. ஒரு பொண்ண திருப்தி படுத்த முடியாதுன்னு" என்றார் வலி மிகுந்த குரலில்.

அதற்கு சத்ருக்னனோ தனது தோள்களை அலட்சியமாக குலுக்கி கொண்டான்.

"எங்கள பழி வாங்க நீ இப்படி சொல்லிருக்க வேண்டாம்" கண்களில் கண்ணீர் வழிந்தது அவருக்கு.

அவரையே அழுத்தமாக பார்த்திருந்தானே தவிர ஒரு வார்த்தையும் சொல்ல வில்லை அவன்.

" இப்படி நீ பேசி வச்சது வெளிய தெரிஞ்சதுன்னா என்ன ஆகும் உனக்கும் அவமானம் தானே. எப்படி கல்யாணம் ஆகும்"

"எனக்கு கல்யாணம் பன்ற எண்ணமில்லை எப்போதும்" என்றான் வெற்று குரலில்.

இதனை அவன் சொல்லும் அவனது மனக்கண்ணில் ஒரு பிம்பம் வந்து போக, அதிர்ந்து தான் போனான்.

சடுதியில் தன் முகத்தை மாற்றி உணர்வற்ற நிலைக்கு வந்தான் சத்ருக்னன்.

"அப்போ இந்த குடும்பத்துக்கு ஒரு வாரிசு. உன்னோடவே முடிஞ்சுருமே" ஆற்றாமையில் சாந்தினி கேட்க,

"வாரிசு தானே ஏன் உங்க கணவர் தேவராஜ்க்கு இன்னோரு கல்யாணம் பண்ணி வைங்களேன். வாரிசு வரும்"

என்று சொன்னவன், யோசிப்பது போல "கல்யாணத்துக்கும் குழந்தைக்கும் என்ன சம்மந்தம். பதினைந்து வயசுல யாராச்சும் ஒரு பொண்ண பார்த்து கொடுங்க. அவருக்கும் பிடிக்கும் " அத்தனை ஏளனம் அவனது குரலில் கண்டார்.

ஆனால் அதில் ஒளிந்திருந்த கோபத்தை, ரெளத்திரத்தை இனங்காண முடியவில்லை அவரால்.

"வயசானவர்கிட்ட உன்னோட கோபத்தை காட்டாதப்பா"

"ஓ... வயசாகிடுச்சுன்றது தப்பை மறைக்க, இல்லை தண்டனையை குறைக்க சலுகையா"

நியாயமான கேள்வி தான் இள வயது முறுக்கில் தவறு செய்து விட்டு முதுமையில், ஆடி அடங்கும் போது மன்னிக்க சொல்வது எப்படி சரியாகும்.

முதுமை என்ற ஒன்று இல்லாது போனால், மனிதன் தனது தவறுகளை எண்ணி வருந்தியிருக்க மாட்டான், ஏன் நினைத்து பார்த்திருக்க கூட வாயிப்பிருக்காது.

இளமையில் ஒழுக்க நெறி தவறி வாழ்ந்து விட்டு முதுமையில் பாவ மன்னிப்பு கோறுவது எப்படி நியாயம் ஆகும். எந்த வயதிலும் தண்டனை தண்டனை தான்.

இதுவே சத்ருக்னனின் நியாயமாக இந்தது.
" உனக்கொரு கல்யாணத்தை செஞ்சு வைக்க நினைச்சோம் சத்ருக்னா " என்றார் உள்ளடங்கிய குரலில்.

அதில் நன்றாக நிமிர்ந்தவன் "என்னோட வாழ்க்கைய நான் பார்த்துப்பேன் யாரும் தலையிட வேண்டாம்"

என்றான் வசலை நோக்கி கை காட்டி தலை குனிந்தபடி வெளியேறினார்.

சத்ருக்னனின் மனமோ உலைகளமாக கொதித்தது, இந்த நொடி வரை செய்த தவறு புரியாது, ஏன் அது தவறே இல்லை என்ற மமதையில் திரியும் ஒருவருக்கு மன்னிப்பு ஒன்று தான் கேடு.

தான் எண்ணியிருந்ததை நிகழ்த்திட இதுவே தருணம் என்று தோன்றியது அவனுக்கு.


அன்று தேவராஜன் இளமையின் செருக்கில், ஆண் என்ற அகந்தையில் செய்த பாவச் செயல் இன்று சத்ருக்னனின் உருவில் அவரை துரத்துகிறது.
 
மணம் 5 :-

கல்லூரி தொடங்கி இதோ ஒரு மாதம் கடந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பாடங்களை நடத்த ஆரம்பித்து விட்டார்கள் பேராசிரியர்கள்.

அன்று பாட்டு, நடனம் என்று கலக்கிய தர்ஷினி மற்றும் அன்பழகி இருவரும் கல்லூரியில் தங்களுக்கென தனி இடம் பிடித்தனர்.

தர்ஷினி சற்று அமைதி என்றால் அன்பழகி துடிப்பானவள், ஓரளவு தைரியசாலியும் கூட.

வீட்டில் உணவு உண்டு கொன்டிருந்த அன்பழகியின் முன்னால் இரு சாப்பாட்டு டப்பாக்களை அமுதா வைக்க, அவ்வழியாக வந்த பாலன் அதனை கவனித்து விட்டு," ஏய் வாலு என்ன ரெண்டு டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போற, இரண்டுமா சாப்பிட போற" தங்கையின் தலையில் செல்லமாக குட்டினான்.

அவளோ இடது கையால் தலை தேய்த்தபடி, " தலையில அடிக்காதண்ணா அப்புறம் வளர்ச்சி தடைப்படும் " என்றவள் "ஒன்னு எனக்கு இன்னொன்னு தர்ஷினிக்கு "என்றாள் கைகளை கழுவியபடி.

அவளது பதிலில் வாய் விட்டு சிரித்த பாலன் " என்னது வளர்ச்சி தடைப்படுமா. இதுக்கு மேல வளர்ந்த ஃபேன் தலைல தட்டும் என் வளர்த்தி வந்துருவ போலவே. இப்படி தான் தினமும் உன் பிரண்ட்க்கும் டிபன் பாக்ஸ் எடுத்துட்டு போறியா" கேலியில் ஆரம்பித்து கேள்வியில் முடித்தான்.

"இல்லண்ணா வாரத்துக்கு மூன்று நாள் எப்போலாம் அவ ஹாஸ்டல்ல தயிர் சாதமும் சாம்பார் சாதமும் போடுறாங்களோ அப்போலாம் " என்றாள் அன்பழகி.

புத்தக பையில் அனைத்தையும் எடுத்து வைத்தவள், தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
இங்கு கல்லுரியில் முதல் வகுப்பு முடிந்தவுடன் சுற்றறிக்கை ஒன்று வர அதனை வகுப்பு ஆசிரியர் மேகலா வாசித்தார்.

"டியர் ஸ்டூடன்ஸ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கென ஒரு வகுப்பு பிரதிநிதி அதாவது கிளாஸ் ரெப்ரசென்டேடிவ் தேர்தலை உங்கள் வகுப்பு அளவில் நடத்த வகுப்பு ஆசிரியரான எனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

யாரெல்லாம் விருப்ப படுகிறீர்களோ பெயர் கொடுக்கலாம் அல்லது ஒரு மனதாக தேர்ந்து எடுக்க வேண்டுமானாலும் செய்யலாம். உங்கள் விருப்பம் தான்.
இரண்டு நாட்கள் அவகாசம் முடிவு எடுத்துட்டு சொல்லுங்க. இப்போ அடுத்த வகுப்புக்கு போகலாம்."

மாணவிகள் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டு இருக்க, அது காரசாரமான விவாதத்தில் முடிந்து இறுதியில் அங்கு அன்பழகி வகுப்பு பிரதிநிதியாக ஒருமனதாக தேர்வு செய்யபட்டாள்.

அவளை ஒத்துக்கொள்ள செய்ய வேண்டியே இந்த காரசார விவாதங்கள். அவளுக்கு எந்த ஒரு பொறுப்பை தூக்கி சுமக்கவும் இந்த வயதில் விருப்பமில்லை. ஆதனால் வேண்டாமென்று சொல்ல, மாணவிகளோ அனைத்திலும் முன்னனியாக இருக்கும் அவள் தங்கள் பிரதிநிதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எப்படியோ அவளை சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

வீட்டில் வந்து தனது தாய் அமுதாவிடம் புலம்ப அவரோ, "என் பொண்ணு எந்த பொறுப்பையும் தட்டி கழிக்க மாட்டாள் சரியா செய்வாள். ரொம்ப யோசிக்காத அன்பு இதுவும் ஒரு அனுபவம் தானே" சமாதானமாக கூறினார். தாயின் வார்த்தைகள் அவளுக்கு தெளிவைத் தந்தன.

அன்பழகியும் தர்ஷினியும் கல்லூரி முடிந்த பிறகு கணினி வகுப்பிற்கு செல்வது என்று முடிவானது. அது இறுதி ஆண்டில் தங்களுக்கு ப்ராஜக்ட் செய்ய உதவும் என்பதால்.
தர்ஷினிக்கு ஹாஸ்டல் ஆதலால் இரவு எட்டு மணி வரை வெளியில் சென்று வரை அனுமதி உண்டு.

ஆனால் அன்பழகிக்கு அவளது ரயில் நிலையம் செல்ல வேண்டும் அங்கிருந்து அது சற்று தொலைவில் இருந்தது, அவர்கள் பயிலும் நிறுவனம்.

தர்ஷினி தனது வீட்டில் சொல்லி அவளது இருசக்கர வாகனம் அனுப்ப சொன்னாள். அடுத்த முறை அவளை காண வந்த அவளது தந்தை இருசக்கர வாகனத்தையும் கொண்டு வந்து தந்தார்.

இப்போது தோழிகள் இருவரும் கல்லூரியில் இருந்து கணினி நிறுவனத்திற்கு வண்டியில் சென்றனர் எந்த பிரச்சனையும் இல்லாமல்.

இதெல்லாம் முதல் செமஸ்டர் முடியும் வரை தான். தேர்வுகள் முடிந்து மீண்டும் கல்லூரி தொடங்கியது. அவர்களது கணினி வகுப்பும் என்றும் போல சென்றது.

என்ன ஒரு சிக்கல் என்றால் அவர்கள் வகுப்பிற்கு போதும் போதும் வரும் போதும் வாலிபன் ஒருவன் பின்தொடர தோழிகள் இருவரும் செய்வதறியாது இருக்க.
கணினி வகுப்பிற்கு சேர்ந்த ஒரு வாரத்தில் ஒருவன் தங்களை தொடர்வது தெரிய அன்பழகி என்ன அவனை நிறுத்தி என்ன வென்று கேட்டாள். அவனோ தர்ஷினியை விரும்புவதாக கூற, தூக்கிவாரிப் போட்டது பெண்ளுக்கு.

தர்ஷினிக்கு இதிலெல்லாம் அறவே விருப்பம் இல்லை. வேறு மாவட்டத்தில், வந்து பயிலும் இடத்தில், இதனை கையாள தெரியாமல் இருந்தது தோழிகள் இருவருக்கும்.

அவனது அராஜத்தில் இருந்து தப்பிக்க தினம் ஒரு வழியில் என செல்லும் வழி மாற்றி, வகுப்பின் நேரத்தையும் அவ்வப் போது மாற்றி என பல திருகு தாளங்கள் செய்து வந்தனர்.

ஆனாலும் கள்ளன் பெரிதா காப்பாளன் பெரிதா என்ற ரீதியில் அன்று இவர்களின் வண்டிக்கு வெகு அருகில் சென்று, வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்த தர்ஷினியின் கைகளை பற்றி இழுக்க முயன்றான் அவன்.
அவனது முயற்சியை புரிந்துக்கொண்ட அன்பழகி சடுதியில் தனது கால்களால் அவனது வண்டியை எட்டி உதைத்திருந்தாள்.

அன்பழகி உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தான் அவன். அவன் விழவுமே ஆட்கள் கூடி விட்டனர் , அவனை தூக்கி நிறுத்தி ஆசுவாச படுத்தினர். விழுந்தவனோ இது தான் நேரம் என்று அந்த பெண்களை பற்றி அவதூறாக பேசி திட்ட ஆரம்பித்துவிட்டான்.
வண்டியை நிறுத்தி விட்டு வந்தனர் தோழிகள் இருவரும். அவன் பேச்சைக் கேட்ட அன்பழகிக்கு வந்ததே கோபம், விட்டாள் ஒரு அறை.

அவள் அடியை எதிர்ப்பாராதவன் கையால் கண்ணத்தை பொத்தியபடி பார்க்க, "ஏன்டா தின தினம் எங்க பின்னாடி வந்து தொல்லை நந்துட்டு இன்னிக்கு வண்டி ஓட்டிட்டு இருக்கும் போது, கைய புடிச்சு இழுக்க வர. இரண்டு பேரும் விழுந்தா யார் உங்க அப்பாவ பார்ப்பா."

" பன்றதை பன்னிட்டு எங்க மேல பழி போடுற. வா நாம ஸ்டேசன் போவோம் என்னான்னாலும் பார்த்துகலாம். விலகி போனா புரிஞ்சுப்பன்னு நினைச்சா இப்படி பன்ற. போனாப் போகுது நீயும் எங்கள மாதிரி படிக்கிறவன் பாவம்ன்னு நினைச்சு விட்டேன். இப்போ அது தப்புன்னு நீ காட்டிட்டா. வா ஸ்டேசன் போகலாம்." என்று மீண்டும் அவள் சொல்லிட, அரண்டு போனவன் அவளிடம் மன்னிப்பு வேண்டி போய்விட்டான்.

தோழிகளும் அமைதியாக தங்களது கல்வியை கவனிக்கலானார்கள்.
கல்லூரி படிப்பு அதனை ஒட்டிய தேர்வுகள், தாயிடம் செல்லம் கொஞ்சுவது அண்ணனிடம் அவ்வப்போது சேட்டை செய்து கொட்டு வாங்குவது என்று அவளது நாட்கள் இனிதாகவே சென்றது.

அன்று ஞாயிற்று கிழமை ராஜதுரை உணவு உண்ணும் போது படபடப்பாக வருகிறதென சொல்லி ஓய்வு எடுக்க வேண்டி பாலனை கடைக்கு சென்று பார்த்து கொள்ள சொன்னார்.

ஆனால் அவனோ அதனை கெளரவ குறைச்சலாக நினைத்து "என்னால அந்த மளிகை கடையில போய் உட்கார முடியாது. நான் படத்துக்கு போறேன். " என்று சொன்னவன், அமுதா கூப்பிட, கூப்பிட காதில் விழாதவாறு சென்று விட்டான்.

ஆனால் அன்பழகியோ "அம்மா விடுங்க நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க அப்பாவ பார்த்துக்கோங்க. சேகர் அண்ணன் கடையில் தானே இருப்பார் ஒன்னும் பிரச்சனை இல்லை." என்று சொல்ல

"நீ படிக்கிற வேலை இருக்குன்னு சொன்னியே டா" என்றவர், பாலன் ஏன் தான் இப்படி பன்றானோ. வயசு பொண்ண கடையில உட்கார வைக்க புடிக்கலடா" தனது ஆதங்கத்தையும் சேர்த்தே சொன்னார்.

அன்றைய தினம் அன்பழகிக்கு அவர்கள் கடையில் சென்றது. மேலும் இதுப்போல் அடிக்கடி நிகழ்ந்தது.

இப்போது கடை நிர்வாகமும் கணக்கு வழக்கையும் சேர்த்தே அன்பழகி பார்த்துக் கொண்டாள்.
பாலனின் விட்டேத்தியான பேச்சும் தான்தோன்றி தனமும் அப்படியே தான் இருந்தது.

அன்பழகிக்கு கல்லுாரியில் இரண்டாம் செமஸ்டரும் முடிந்து விடுமுறை விட்டாயிற்று.
இதற்கிடையில் தோழிகளின் ஒரு வருட கணினி பயிற்சி நிறைவுற்றது.

தர்ஷினியின் சில விடுமுறை தினங்கள் அன்பழகியின் வீட்டில் கழிந்தன.

கோடை விடுமுறைக்கு அன்பழகியும் தர்ஷினியின் வீட்டிற்கு சென்று வந்தாள். அதுவும் அமுதா அவளை விடவே இல்லை. அன்பழகி தான் பிடிவாதம் பிடித்து சென்றாள். இரு தினங்களுக்கு மேல் அங்கு தங்க அனுமதி இல்லை.

அவ்வளவு பொத்தி பொத்தி வளர்த்தனர் அவளது பெற்றோர்கள்.
இருவருக்கும் தங்களது தோழியின் வீடு மற்றொரு தாய் வீடு போல இருந்தது. அந்த அளவிற்கு இருவரும் குடும்ப நண்பர்கள் ஆயினர்.

காலங்கள் நகர கல்லூரி மூன்றாம் பருவம் தேர்வுக்கு மாணவிகள் தயாரகி கொண்டு இருந்தனர். தினம் தினம் வகுப்பில் தேர்வுகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

அன்பழகியும் தர்ஷினியும் எப்போதும் போல தங்களின் ஆஸ்தான இடமான, பிள்ளையார் கோவிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க, அவர்களின் வகுப்பு மாணவி மலர் என்பவள் அங்கு வந்து " அன்பு இரண்டு மூன்று வாரமா காலேஜ் வராம இருந்தாள் இல்ல, சரண்யா இன்னிக்கு வந்துருக்கா டீ."

அதற்கு அன்போ "ஓ... ஹச் ஓ டி மேம்ம பாக்க சொல்லி லீவ் லெட்டர் மெடிக்கல் சர்டிபிக்கேட் குடுக்க சொல்லுங்க டீ" என்று தனது நோட்டில் எழுதிக் கொண்டு சொல்ல,

"அய்யோ நாம அவளுக்கு எல்லோரும் நினைச்ச மாதிரி அவளுக்கு உடம்பு சரியில்லாம இல்லடீ. அவள் கல்யாணம் பண்ணி வந்துருக்கா" என்றாள் மலர்.

"வாட்... இந்த வயசுல கல்யாணமா..." அதிர்ந்தனர் மற்ற பெண்கள் இருவரும்.

இருவரையும் மாறி மாறி பார்த்த மலர் "என்ன இந்த வயசுல நமக்கு தான் 19 வயசு முடிய போகுதே நீ அடுத்து கல்யாணம் குழந்தை இது தானா என்ன நமக்கெல்லாம் ரெண்டு வருஷம் கழிச்சு நடக்கும் அவளுக்கு இப்ப நடந்திருக்கு அவ்வளவுதான் இதுக்கு ஏன் அன்பு நீ இவ்ளோ ஷாக் ஆகற " என்று கேட்டாள்.

அவளது பேச்சில் முகம் சுளித்த அன்பழகி "அது எப்படி டி நமக்குன்னு ஒரு வேலை சம்பாத்தியம் இதெல்லாம் இல்லாம கல்யாணம் பண்றது ஒன்னு ஒன்னுக்கும் ஹஸ்பண்ட் கிட்ட கேட்டு நிக்கனுமா என்ன இன்னிக்கு எல்லாம் ரெண்டு பேரும் சம்பாத்தியம் தான் குடும்பத்தை வழிநடத்த உதவும் அதுவும் நாம நம்ம கையிலயும் கொஞ்சம் காசு இருக்கணும் பொருளாதாரத்தில் சுதந்திரமா இருக்கணும் அப்போதான் நமக்கு தேவையானத நம்ம பாத்துக்க முடியும் நம்ம அம்மா, அப்பாவுக்கும் நாம கொடுத்து உதவ முடியும் " என்று தனது விருப்பத்தையும் எண்ணத்தையும் சொல்லிட

அவள் அறியவில்லை தானே இந்த திருமண பந்தத்தில் சிக்கிக் கொள்ளப் போவதையும் தனது வாழ்வு அதனால் திசை மாறி போகப்போவதையும்.

அதுவும் இன்னும் சில நாட்களில் தனது திருமணம் நடந்தேற போகிறது என்று சொன்னால் அன்பழகி அதனை எப்படி எடுத்துக் கொள்வாளோ.

கல்லூரி தொடங்குவதற்கான மணி அடிக்க மாணவிகள் தங்களுக்குள் இல்லையே பேசிக்கொண்டு அவ்விடத்தை விட்டு கலைந்தனர்.

வீட்டில் இருந்த மூவரும் பாலனை அவ்வப்போது தங்களது கடைக்குச் சென்று கவனித்துக் கொள்ள சொன்னார்கள். ஆனால் அவன் உறுதியாக மறுத்துவிட்டான். தனது நண்பன் ஒருவன் ஏதோ வேலை தேடி தர போவதாகவும் அதற்காக அவன் காத்திருப்பதாகவும் சொல்லியே நாட்களை கடத்தினான்.
நாட்கள் செல்ல அன்பழகிக்கு கல்லூரி இரண்டாம் வருடத்தில் நான்காம் பருவம் தொடங்கியது.

இத்தனை பருவங்களிலும் முதல் மாணவியாகவே தேர்ச்சி பெற்று வந்தாள் அன்பு. மூன்றாம் வருடத்தில் சி.ஏ படிக்க ஆயத்த வேலைகளை செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாள் அவள்.

நான்காம் பருவம் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அன்றும் ஒரு விடுமுறை தினம். அன்பழகியின் தான் இப்போதெல்லாம் விடுமுறை தினங்களை அவர்களது கடையில் கழிக்கிறாளே. அன்றும் அதே மாதிரி கடையில் வேலைகளை முடித்து விட்டு மாலை வேளையில் ஓய்ந்து போய் வீடு வந்தாள் அவள்.

தனது அறைக்கு சென்று தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்தவள் தேநீர் அருந்த வேண்டி கூடத்தில் அமர, ராஜதுரையும் வந்தார். அமுதா மகளுக்கு தேநீர் கொடுத்து விட்டு கணவருக்கு கஞ்சியும் கொடுத்தார்.
கடை பற்றிய விவரங்களை அப்பாவும் மகளும் பேசிக்கொண்டு இருந்தார்கள். மகளிடம் பேசிக்கொண்டு இருந்த ராஜதுரை சட்டென்று வியர்த்து கொட்ட நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தார்.

சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை அன்பழகிக்கு பின்னர் தெளிந்தவள், அதிர்ச்சியில் உறைந்து நின்ற தாயை அழைத்து கொண்டு பாலனை அலைபேசியில் அழைத்து சொல்லியவள், ஆட்டோ ஒன்று அமர்த்தி தந்தையை மருத்துவமனையில் சேர்த்தாள்.
அழும் தாயை சமாதானம் செய்ய முடியாமல், தந்தையின் உடல்நிலை வேறு கவலைகிடமாக இருக்க இவளுக்கு வருந்துவதற்கு கூட நேரமில்லை.

பாலன் மீது அவ்வளவு கோபம் வந்தது அன்பழகிக்கு சொல்லாமல் கொள்ளாமல் நண்பர்களுடன் வெளியூருக்கு சென்று விட்டான். எப்படியும் வருவதற்குள் ஒரு இரவு கடந்து விடலாம். அண்ணனாக மூத்தவனாக பக்கபலமாக இருக்க வேண்டியவன், பக்கத்தில் கூட இல்லை. வழக்கமான அலட்சியம் அவனிடம்
 
Last edited:
மணம் 6: -

அன்று சத்ருக்னனின் தந்தை வந்து சென்று இரண்டு மாதங்கள் கழிந்து இருந்தது.
தனது அலுவலகத்தில் கோப்புகளை பார்த்துக் கொண்டு இருந்த சத்ருக்னனின் எதிரில் அதே மேசையில் மறுபுறம் அமர்ந்து இருந்தான் சுந்தர்.

அவ்வப்போது நிமிர்ந்து சத்ருக்னனை பார்ப்பதும், பின்னர் குனிந்து தன் வேலையை பார்ப்பதும் என இருக்க, அவனது செயலை கண்ணுற்ற சத்ருக்னன் எதுவானாலும் அவனே சொல்லட்டும் என்று எண்ணிக் கொண்டு தனது வேலையில் கவனம் செலுத்தினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தன்னை பார்த்துக் கொண்டே இருந்த சுந்தரை நோக்கி கையில் இருந்த பேணாவை எறிய, ஏறிட்டு பார்த்தான் அவன்.

"எதுவும் பிட்டு படம் பார்க்கிறாயா என்ன" சத்ருக்னன் கேட்க

"எதே பிட்டு படமா" கிட்டதட்ட அலறினான் அவன்.

"இல்ல உன்னோட ரியாக்சன் பார்த்தா அப்படி தான் இருக்கு " கண்களில் குறும்புடன் இதழ்களில் வெளியில் தெரியாத புன்னகை ஒன்று மின்னலாய் வந்து போனது சத்ருக்னன் வதனத்தில்.

'ம்க்கூம் பிட்டு படம் அதுவும் நானு இவர பக்கத்துல வச்சுக்கிட்டு' மனதிற்குள் சொல்லிக் கொண்டவனை கண்டு, உதட்டோரம் ஏளனமாக வளைத்து, "என்ன வச்சுக்கிட்டு பிட்டு படம் பார்க்க முடியாது.

ஆனால் சன்னி லியோன் போட்டோ மட்டும் பார்க்கலாம் அப்படிதானே" ஏகத்திற்கு நக்கலாய் கேட்டான் சத்ருக்னன்.

' ஆத்தி நாம தான் பார்த்துட்டு டெலிட் பண்ணிட்டோமே ' என்று மனதிற்குள் மீண்டும் அலறியவன் வெளியில்

"பாஸ் நான் குட் பாய் இப்படிலாம் பண்ணமாட்டேன். என்னோட ஐடி ஹேக் ஆகிருக்கலாம் பாஸ்" என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.

" அடிங்க ஆபிஸ் LAN ஐடி எப்படி டா ஹேக் ஆகும்." என்றவன்


"எப்படிடா இந்த கருமத்தையெல்லாம் பார்க்கிறிங்க" மேலும் கிழும் அவனை கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டான்.

" ஹி ஹி.... பாஸ் அது ஒரு ரிப்ரஷ்மென்ட்க்கு. ஜென்ரல் நாலெட்ஜ வளர்க்க பாஸ்" என்றான் தனது அத்தனை பற்களையும் காட்டியபடி.

"ரொம்ப இளிக்காத டா ஏற்கனவே பல்ல உடைச்சுருக்கேன்" கடுப்புடனே கூறினான்.

சுந்தரோ 'மனசுல பெரிய விஸ்வாமித்ரர்ன்னு நெனப்பு. இவர கவுக்க ஒரு பொன்னு இந்த உலகத்தில இல்லாமலா போய்டும்' உள்ளுக்குள் கறுவிக் கொண்டான்.

"விஸ்வாமித்ரனை கவுக்க தான் மேனகை வேனும். நான் சத்ருக்னன் டா" அத்தனை கர்வம் கொண்டு சொன்னான் அவன்.

"சார் திரும்பவும் அதேயே கேட்கிறேன்னு நினைக்காதிங்க எப்படி பாஸ் என்னோட மைன்ட் வாய்ஸ கேட்ச் பன்றீங்க" தனது வழக்கமான சந்தேகத்தை கேட்டான் சுந்தர்.

அதற்கு சத்ருகனனோ அவனை ஆழ்ந்து பார்த்து கொண்டே "என் எதிரியோட எண்ண அலைகளையே கிரகித்து செயல் படுறவன்டா நான். என் பக்கத்தில‌ இருக்கும் உன்னோட மனசு நினைக்கிறது தெரியாம‌ போகுமா என்ன" என்று கூறினான்.

மீண்டும் சத்ருகனன் சொன்னதை நினைத்து "சார் சத்ருவா இருந்தாலும் அன்பு ஒன்னு போதும் மனச ஜெயிக்க" சிறுது அழுத்தமாக சுந்தர் சொல்லி விட,

சத்ருக்னன் அவனை கூர்ந்து பார்த்தானன்றி எதுவும் உரைக்க வில்லை.

" சார் பர்சனல் விஷயம் ஒன்னு பேசலாமா" கோரிக்கை வைத்தான் சுந்தர்.

ஒரு நொடி அவனது கண்களை சந்தித்த சத்ருக்னன், தன் கையில் இருந்த பேனாவை மூடி வைத்து விட்டு, நான்றாக அந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் அவனது பேச்சை கேட்கும் பொருட்டு.

சத்ருக்னனின் செயலை விழி விரித்து ஆச்சர்யமாக நோக்கியவன், "சா...ர்" என்றான் தினறலாய்.

பின்னே தாய் தந்தைக்கு கூட தனது தனிப்பட்ட வாழ்வை பற்றி பேச அனுமதி தராதவன் தனக்கு அனுமதி அளித்தால் அதை என்னவென்று சொல்வது.
அவனது பார்வை மாற்றமின்றி இருக்க, சுந்தர் தனது குரலை செருமியவன்,

"காதல் அழகானது சார் தப்பில்லை. உங்களுக்கு யாரையும் பிடிச்சுருந்தா சொல்லுங்க சார்"

இப்போது நாற்காலியில் லேசாக சுழன்றவன் முகம் சிறிது மென்மையாக இருந்ததோ என்னவோ,
ஆனாலும் சுந்தர் தொடர்ந்தான்.

"அந்த பொண்ணு கிட்ட சொல்லுங்க சார். உங்கள யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. நீங்க வெளிய பார்க்க என்னதான் அழுத்தமா கோவமா இருந்தாலும் உள்ளுக்குள்ள நீங்க அப்படி இல்லை சார் " என்றவன் ஒரு நொடி நிறுத்தி,

"அன்றைக்கு சாந்தினி ஆண்டி உங்களுக்கு பொண்ணு பார்த்தப்போ. உங்க கல்யாணம் பத்தி பேசும் போது, உங்க கண்ணுல ஒரு ஸ்பார்க் வந்து போச்சு சார். நான் அதை கவனிச்சுட்டேனே பாஸ் " என்று கூறியவன் வெளியில் ஓடியே விட்டான்.

பின்னே கோபத்தில் அடித்து விட்டால் யார் வாங்குவது அது தான்.

தன்னை அன்னை என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு தனது பற்றி விருப்பு வெறுப்பு பற்றி எள்ளளவும் தெரியவில்லை தனது எண்ணங்களை பற்றி துளியும் கவலையில்லை.

ஆனால் சுந்தர் மூன்றாம் மனிதனவன் அவனுக்கு தன் உணர்வுகள் அதுவும் சில நொடிகளே ஆயினும் வந்துப் போன முக மாற்றங்களை வைத்தே தெரிந்திருக்கிறான் என்றால் இவர்கள் என்ன மனிதர்கள் விரக்தியாக நினைத்துக் கொண்டவன் வாயிலை நோக்கி சென்றவனை பார்த்தான்.

வெளியே பாய்ந்து செல்லும் அவனை கண்டு வாய் விட்டு சிரித்தவன், மனதில் அன்று போலவே சில பிம்பங்கள் வந்து செல்ல, இது தப்பு என்று சொல்லி கொண்டு தலை உலுக்கி கொண்டாலும், மனமோ சண்டித்தனம் செய்து தப்பில்லை என்று வேறு சொல்லி கொண்டது.

கருத்து அடர்ந்த சிகையும், அதனை கோதும் தளிர் விரல்களும், சிவந்த செப்பு இதழ்களும், வட்ட முகமும், துருத்துரு விழிகளும், அம்மம்மா அந்த குண்டு கண்ணங்களில் ஒருமுறையாவது முத்தமிட்டு இருக்கலாம் என்று தோன்றவும் சத்ருக்னனின் இதழ்கள் புன்னகையில் இன்னும் நன்றாக விரிந்தன.

வெளியே சென்ற சுந்தர் அந்த அறையின் கண்ணாடி கதவு வழியாக சத்ருகனனை பார்க்க, அவனது மிருதுவான முகமும், கணிவான அகத்தை பிரதிபலிக்கும் கண்களும், ஆழ்ந்த கண்ணக்குழி சிரிப்பையும் தான் கண்டான்.

'ஹய்யோ சிரிச்சா இந்த மனுஷன் எம்புட்டு அழகா இருக்காரு, பேசாம நாம ஒரு ஆப்ரேஷன் செஞ்சுட்டு வந்து இவரையே கல்யாணம் பண்ணி கிட்டா தான் என்ன' என்ற எண்ணம் தோன்றியதில் வெளிபடையாகவே அலறினான் சுந்தர்.

'அய்யய்யோ அந்த ஆளு என்ன சைட் அடிக்காதடான்னு படிச்சு படிச்சு சொன்னாரு கேட்டியா. இப்ப பாரு கண்டபடி மனசு அலைபாயுது' என்றவன்,

'மை டார்லிங் அஞ்சலை உனக்கு மாமன் துரோகம் பண்ணிடேன்டி மன்னிச்சிடு கண்ணு' மனதோடு புலம்பியவன் வராத கண்ணீரை துடைத்து கொண்டான்.

சத்ருக்னன் அமர்ந்தவாறு இவனது செயல்களை அவதானித்தவன் அவனுக்கு அழைத்து "போதும்டா நீலிக் கண்ணீர் வடிச்சது உள்ள வா" என்றான் அதட்டலாய்.

உள்ளே வந்த சுந்தர் அமைதியாக அமர்ந்து தனது வேலையை பார்க்க, சிறிது நேரத்தில் உள்ளே வந்தார் மேனேஜர்.

அவரை கண்டவன் "வாங்க சார். நீங்களும் சுந்தரும் ஷேர் மார்க்கெட்ல நம்ம ஷேர்ஸ பாளோ பண்ணிக்கோங்க. நான் மிஸ்டர் தேவராஜனோட கம்பேனிஸ விசிட் பண்ணிட்டு வரேன்" என்றவன்,

சுந்தரை ஒரு பார்வை பார்த்து "ஈவினிங் வீட்டுக்கு வாங்க சுந்தர்" என்றுவிட்டு கிளம்பினான்.

இது ஒன்று இவனிடம் எல்லோரையும் வாங்க போங்க என்றுதான் அழைப்பான், தேவராஜனை அறவே பிடிக்காது என்றாலும் வெளியில் மற்றவரிடம் குறிப்பிடும் போது மிஸ்டர் என்று தான் சொல்லுவான்.

அதே போல் சுந்தரை வா, போ, டா என்று அழைத்தாலும் அதெல்லாம் தனிப்பட்ட முறையில் தானே தவிர பிறர் முன்பு வாங்க போங்க தான். இந்த மரியாதை பன்மையை சுந்தர் எதிர்ப்பார்க்க மாட்டான் என்றாலும் இது தான் சத்ருகனன்.

ஆனால் இந்த விஷயம் தான் சுந்தரை குழப்பும் மூன்றாம் மனிதருக்கே இப்படி என்றால் பெற்ற தாய் தந்தையை எப்படி நடந்த வேண்டும், அது தான் புரியாத புதிர் அவனுக்கு.

அது தேவா சாப்ட்வேர் சல்யூசன்ஸ், மூன்று மாடி கட்டிடம் அங்கு வந்தவன் தேவராஜன் அலுவலகத்திற்கு சென்றான், அவரது பி.ஏ வை அழைத்து தான் வந்து இருப்பதாக கூறியவன், தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் வந்த செய்தி அறிந்து தள்ளாத வயதிலும் உடனடியாக வந்தார் தேவராஜன். அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் சத்ருகனன்.

மகனையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார் அவர். தனது மகன் என்று சொல்ல அவசியமில்லாது அப்படியே அவரது பிரதிபிம்பம் தான் இவன். அதில் ஏகத்திற்கும் பெருமை அவருக்கு. தனது மீசையை முறுக்கி கொண்டார் பெருமிதத்தில்.

ஓரவிழியில் அவரது செயலை கண்ட சத்ருக்னன் இதழ்கள் வன்மமாக புன்னகைத்து‌‌ கொண்டது.

கிட்ட தட்ட மூன்று மணி நேரம் அங்கு வேலை செய்தான், இறுதியாக அவரை பார்த்து கொண்டே கணினியை‌ இயக்கியவன், சட்டென்று எழுந்து "நான் முடிச்சுட்டேன் மிஸ்டர் தேவராஜன் கிளம்புறேன்" சொன்னவன் தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு புறப்பட எத்தனிக்கும் போது,

"அடுத்த வாரம் ஸ்டில் பேக்டரி போகனும் சத்ருக்னா" என்று தேவராஜன் சொல்ல, ம்ம் என்று மட்டும் சொன்னவன் கிளம்ப எத்தனிக்கும் போது தேவராஜன் எழ முடியாமல் தடுமாறி விழ பார்க்க ஒரெட்டில் அவரை நெருங்கியவன் பிடித்து நிலைப்படுத்தி விட்டு கூர்ந்து பார்த்தானே ஒழிய ஒன்றும் சொல்லவில்லை.


ஆனால் தேவராஜனோ அவனது கைகளை தனது கையில் பொத்திக் கொள்ள, புருவம் சுருக்கி அவரையே பார்த்து கொண்டு இருந்தான் சத்ருகனன்.

அடைத்த குரலை செருமியவர் "அப்பான்னு கூப்பிடு ய்யா" குரல் தழுதழுத்தது அவருக்கு.

" ஐந்து வருஷம் உங்கள அப்பான்னு கூப்பிட்டதுக்கே நாக்கை சுட்டுக்கிட்டவன் நான். மற்றவங்க உங்கள என்னோட அப்பா ன்னு சொல்லும் போதெல்லாம் மிளகாய் அள்ளி பூசினா மாதிரி உடம்பெல்லாம் காந்தும். அப்படி இருக்கும் போது நான் உங்கள அப்பான்னு கூப்பிடுறதா நோ வே." கர்ஜனையாக சொன்னவன் அவரது கையை விலக்கிக் கொண்டு விரைந்து சென்று விட்டான் அவ்விடம் விட்டு.

பதினைந்து வயதில் சத்ருகனன் செய்த அந்த செயல் அதை இப்போது நினைத்தாலும் உயிர் சிலிர்த்தது அடங்கியது அவருக்கு.

ஒருவனுக்கு எத்தனை கொபம் வெறுப்பு இருந்தால் தன்னைத்தானே அவ்வாறு தண்டித்து கொள்ள முடியும்.

அவனது முதுகை வெறித்த தேவராஜன் ஒரு பெருமூச்சு விட்டார். என்றேனும் இவனை தன் வசப்படுத்தி விடலாம் என்று எண்ணியவரால் இருபது ஆண்டுகளாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனை நெருங்கும் மார்க்கம் அறியாது தின்டாடினார்.

சொத்துக்களை கொடுத்து தன்னருகில் வைத்துக் கொள்ள நினைக்க அவனோ சுயம்புவாக எழுந்து நின்றான். வெளியில் சத்ருகனன் தந்தையின் சொத்துக்களை வைத்து தான் முன்னேறினான் என்ற அந்த பிம்பத்தில் கூட இப்போது விரிசல் விழுந்தது.

தொழில் வட்டாரத்தில் வெறும் மனலை கொடுத்தால் கூட அதில் கயிறு திரித்து காசு பார்க்கும் சாதுர்யம் சத்ருக்னனிடம் உள்ளது என்று பெயர் பெற்றான் அவன்.

தேவராஜன் பத்துமுறை தனது அலுவலகத்திற்கு வர சொல்லி அழைத்தால் இவன் ஒரு முறை தான் வந்து பார்ப்பான்.

வீட்டிற்கு வந்த சத்ருகனன் கண்டது ஏற்கனவே அங்கு சோஃபாவில் அமர்ந்து வேலை செய்யும் சுந்தரை தான்.

"என்னடா டீ குடிச்சியா " சுந்தரை பார்த்து கேட்டவன், அவனது பதிலை எதிர்பார்க்காமல் சமையலாளிடம் இருவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி எடுத்து வர சொல்லி விட்டு மாடியில் உள்ள தன் அறைக்கு சென்றான்.

சடுதியில் ஒரு குளியலை போட்டவன், சுந்தரை அலுவலக அறைக்கு அழைத்தான்.
அங்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி இருக்க சுந்தரிடம் கொடுத்தவன் தானும் எடுத்துக் கொண்டான்.
அலுவலக பற்றிய விவரங்களை விவாதித்தனர் இருவரும்.
சுந்தரின் முகத்தை கூர்ந்து கவனித்தவன், தன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கும் அவனது தவிப்பு புரிய,

"ஆமாம் சுந்தர் உன் தங்கச்சியோட கல்யாணம் வேலை எல்லாம் எப்படி போகுது" அவனை பேச தூண்டினான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவன் " எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு சார். பத்திரிக்கை வைக்கிறது தான். சார் அம்மாவும் அப்பாவும் தங்கச்சி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வரேன்னு சொன்னாங்க வர ஞாயிற்று கிழமை உங்க வீட்டுக்கு. உங்களுக்கு ஓகே தானே சார்" தயக்கமாகவே கேட்டான்.

தன் பெற்றோர்களின் விருப்பத்தை எப்படி எடுத்துக் கொள்வான் என்று நினைத்து தான் அவனது தயக்கமே, எவ்வளவு சொல்லியும் நேரில் வந்து தான் திருமண அழைப்பிதழ் தருவேன், உன்னிடம் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அன்னையை சமாதானம் செய்ய முடியாமல் சத்ருகனனிடம் அனுமதி கேட்டு நின்றான் சுந்தர்.

"நான் கூட நீ பத்திரிகை வைக்க மாட்ட, கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டன்னு இல்ல நினைச்சேன் பரவாயில்லை டா என்னலாம் கல்யாணத்துக்கு கூப்பிட தோணிருக்கு பாரேன் உனக்கு" கிண்டலாக சத்ருகனன் சொல்லிவிட,

"ஐயோ பாஸ் நீங்க இல்லாம கல்யாணமா. உங்களுக்கு அம்மா அப்பா வரது பிடிக்குமோ என்னவோன்னு தான் கேட்டேன்." வருத்தத்துடன் கூறினான் சுந்தர்.

"ரொம்ப யோசிக்காத டா அம்மாவையும் அப்பாவையும் வர சொல்லு " என்று அவனை அதட்டியவன்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் எந்த வித தோய்வும் இன்றி சென்றது சத்ருகனனுக்கு.

அன்று தனது தந்தையின் ஸ்டீல் தொழிற்சாலைக்கு சென்றான் சத்ருகனன். அங்கேயும் அவனுக்கென தனி அறை உண்டு. தனது அறைக்கு சென்று சில முக்கிய நிர்வாகிகளை உடனடியாக வர சொல்லியவன், தான் செய்ய வேண்டியதை மனதில் குறித்து கொண்டான்.

பின்னர் தொழிற்சாலையை சென்று பார்வையிட்டவன், அங்கேயும் தனது‌ மனதில் நினைத்து இருந்த செயல்பாடுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டே வந்தான் சத்ருகனன்.


இதற்கிடையில் சுந்தரின் பெற்றோர் வந்து தங்களது மகளின் திருமணத்திற்கு அழைத்து விட்டு செல்ல, திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான்.
 
Last edited:
மணம் 7:-

மருத்துவமனையில் மருத்துவர் முன்பு அமர்ந்து இருந்தனர் அன்பழகியும் அமுதாவும். ராஜதுரையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து பன்னிரண்டு மணி நேரம் கடந்து விட்டது. சற்று முன்னர் தான் கண் விழித்தார்.

மேலும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக அறிவித்த மருத்துவர், அவரது உடலின் தற்போதைய நிலை குறித்து பேசவே இருவரையும் அழைத்து இருக்கிறார்.

ஒரு வித பதட்டத்துடன் தன் முன் அமர்ந்து இருப்பவர்களை கண்டு குரலை செருமியவர், "ஏம்மா ஏற்கனவே இப்படி நடந்துருக்கா" என்று தனது ஐயத்தை கேட்க,
தாய் மகள் இருவருக்குமே ஒன்றும் புரியாத நிலை.


இருவரின் முகங்களை வைத்தே கணித்தவர் "ராஜதுரைக்கு இது இரண்டாவது ஹார்ட் அட்டாக் மா. அதான் கேட்டேன் ஏற்கனவே வந்துருக்கான்னு" சொல்லியவர் மேலும் "கண்டிப்பா வந்துருக்கனும் ஏதாவது மருந்து மாத்திரை எடுத்துக்கிறாரா மா" மீண்டும் கேட்டார்.

அவரது கேள்வியில் பெண்கள் இருவருக்கும் பயம் ஒரு புறம் என்றால் குழப்பம் மறுபுறம், பெரிதாக மாத்திரை மருந்து உட்கொள்ளாதவர் ராஜதுரை தனது உடலை பேணுவதில் அக்கறை கொண்டவர் அவர் அவருக்கு ஹார்ட் அட்டாக் என்பதே அதிர்ச்சி அதுவும் இரண்டாம் முறை வந்தது வந்திருக்கிறது என்பது பயத்தையே தந்தது இருவருக்கும் இல்லாத மாத்திரைக்கு எங்கு செல்ல அதுவே குழப்பம்.

முகம் வெளிறி அமர்ந்திருந்த அவர்களிடம் இனி மேற்கொண்டு என்ன பேச எண்ணிய மருத்துவர்,


"பேஷண்டோட ஆரோக்கியத்துல மன நிம்மதியில அதிக அக்கறையும் கவனமும் எடுத்துக்கோங்க. ரொம்ப அலைச்சல் தர வேலை மன உளைச்சல் தர விஷயங்களை பெருசா பேச வேண்டாம். அவர் நல்லா தான் இருக்கார். மூணாவது அட்டாக் வராமல் பார்த்துக்கோங்க இப்ப வந்த அட்டாக் ரொம்ப அதிகம். எப்படியோ அவர் தப்பிச்சிருக்காரு. உங்களை பார்த்தாலும் ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கு. ஆனாலும் நீங்க தானே இப்போ அவர் கூட இருக்க உறவு" தான் சொல்ல வேண்டியதை சொல்லியவர் மருந்து சீட்டை தந்து அனுப்பினார்.

மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தவர்களின் கையறு நிலையை என்ன சொல்ல, தாயும் மகளும் யாருக்கு யார் ஆறுதல் சொல்ல, கண் கலங்கி நின்றார்கள்.

இப்படி ஒரு சூழ்நிலை வரும் அதுவும் தனியே அதனை கையாளும் நிலை வரும் என்று எண்ணி இருக்கவில்லையே. சில நிமிடங்களில் தன்னை மீட்டு அன்பழகி தாயை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து விட்டு மருந்துகளை வாங்கி வர சென்றாள்.

செல்லும் வழியில் இருந்த மருத்துவமனை வரவேற்புரை மேஜையில் வீற்றிருந்த விநாயகரை பார்த்தவர் 'பிள்ளையாரப்பா என்னைய்யா இது. ஏன் இப்படி ஒரு நிலை எனக்கு. என்னோட அப்பாக்கு எல்லாமே சரியாகிவிடனும். நீ தான் பாத்துக்கணும்.' மானசீகமாக வேண்டிக் கொண்டவள் மருந்துகளை வாங்கி வந்தாள்.

மீண்டும் தாயிடம் சென்றவள், அங்கு மௌனமாக அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவரை கண்டு மனமும் கண்ணும் கலங்கியது. அவரது அருகில் சென்று கையை அழுத்தி பற்றி கொண்டு அமர்ந்தாள். அமுதா, அன்புவின் தோள் சாய்ந்து கொள்ள, சேயாக தாயை மடிதாங்கிக் கொண்டாள் அன்பழகி.

ராஜதுரை ஒருமுறை கண்விழித்தவர் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றார். நாற்காலியில் தலை சாய்த்து கண் மூடி இருந்த அன்பழகி, தன் அருகில் நிழலாட நிமிர்ந்தாள்.

பாலன் தான் வந்திருந்தான். அவனைக் கண்ட நொடி வந்ததே கோபம், முகத்தை திருப்பிக் கொண்டாள். முதலில் எழுந்து செல்ல நினைத்தவள், தன் தோளில் உறங்கி விட்ட தாயின் உறக்கம் கலையாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

"பாப்பா" தயங்கியவாறு அழைத்தான் பாலன். அனல் தெறிக்கும் ஒரு பார்வையை பார்த்துவிட்டு தனது அன்னையை நோக்கினாள்.
இன்னமும் அதே உறக்கம் தான் இரண்டு நாட்கள் விட்ட உறக்கத்தை இன்று தழுவி இருந்தார்.

"தயவு செஞ்சு அமைதியா போய்விடு. என்னை பேச வைக்காத உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கல" அடி குரலில் சீற,

அதே நேரம் செவிலியர் வந்து ராஜதுரை மீண்டும் விழித்து விட்டதாக அழைக்க, மெல்ல தாயை எழுப்பியவள், "அம்மா அப்பா கண் முழிச்சுட்டாங்க வாங்க போய் பார்க்கலாம்" என்று சொன்னாள்.

ஒரே நிலையில் அமர்ந்திருக்க, மரத்துப்போன கை கால்களை மெல்ல அசைத்து நன்றாக பார்க்க பாலன் எதிரில் தெரிந்தான். அவனைப் பார்த்தவர் எதுவும் சொல்லாமல் தன் கணவனை காண சென்றார் மகளுடன்.

தன்னை புறக்கணிக்கும் தாயையும், தங்கையையும் கண்டு கொஞ்சமாக இருந்த குற்ற உணர்வும் சென்று அவ்விடத்தில் கோபம் ஆட்கொண்டது.

"அவருக்கு இப்படி ஆகும்னு நான் என்ன கனவா கண்டேன்" சலித்துக் கொண்டே முணுமுணுத்தபடி இருவரையும் பின் தொடர்ந்தான் பாலன். அவனது அந்த வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் முன்னே சென்று கொண்டிருந்த அன்புவின் காதுகளில் விழா அதிர்ந்து போனாள்.

எப்படி, எப்போதிருந்து இவன் இப்படி மாறிப் போனான் மனதோடு நினைத்துக் கொண்டவள் அருவருத்துப் போனாள் அண்ணனின் செயலில்.

மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் கண் விழித்தபடி படுத்திருந்த ராஜதுரை கண்டவுடன் அன்புவிற்கு அழுகை பீறிட்டது. வேகமாக சென்றவள் தந்தையின் கைகளை இறுக்கி பற்றிக் கொண்டாள்.

கண்கள் கலங்க நின்றிருந்த மனைவியும் மகளையும் கண்டவர் பாலனின் இறுகிய தோற்றத்தைக் கண்டு பெருமூச்சு விட்டார். ஒரு கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க மற்றக் கையை எடுத்து மகளின் தலையை தடவியவர்

"அழாதடா பாப்பா அப்பாக்கு ஒன்னும் இல்ல. பாப்பா தானே அப்பாக்கு இனி எல்லாமே தைரியமா இருக்கணும்" மகளுக்கு தைரியம் கூறினார் அந்த நிலையிலும்.
அதை கண்டு மெல்ல புன்னகைத்தவள் "ஆமாம்பா என்னோட அப்பாக்கு ஒன்னும் இல்ல அவர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்காரு" என்று சொல்ல அதனைக் கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்த ராஜதுரை, மனைவியை கண்களாலேயே சமாதானம் செய்தார்.

ராஜதுரை மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து உடல்நிலை நன்கு தேறிய பின்னரே வீடு வந்தார்.
ஒரு வாரமும் பகலில் அமுதாவும் இரவில் பாலனும் மருத்துவமனையில் ராஜதுரைக்கு துணையாக இருந்தனர்.

அன்பழகிக்கு நான்காம் பருவ தேர்வு தேர்வை முன்னிட்டு படிப்பதற்காக விடுமுறை விடப்பட்டது.

அது சௌகரியமாக போக கடையை அன்பு கவனித்துக் கொண்டாள். அமுதா பெரிதும் ஓய்ந்து போய் இருக்க, அன்பு தான் வீடு சமையல் கடை தன்னுடைய படிப்பு என சகலமும் கவனித்துக் கொள்வது,
காலை மதியம் மாலை என மூன்று வேளையும், தாயை விடும் போதும், மதிய உணவு இடைவேளையின் போதும், மருத்துவமனை சென்று தந்தையை பார்த்து விட்டு அவரது உடல் நிலை குறித்து கேட்டு தெரிந்து கொண்டு வருவாள்.

மாலை போல் சென்றால் இரவு உணவை தந்து விட்டு பாலனை அங்கு அமர்த்தி விட்டு அமுதாவை அழைத்து வருவாள். பம்பரமாக சுழன்றவள் சற்று இளைத்துதான் போனாள்.

இவ்வாறு ஒரு வாரம் கழிய மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளும் உணவு முறையையும் தெரிந்து கொண்டு வீட்டிற்கு ராஜதுரையை அழைத்து வந்தனர்.

ஒரு ஆறு மாதங்கள் கழித்து நன்றாக உடல்நிலை தேறிய பின் ஆஞ்சியோ செய்து கொள்ளலாம் என்று மருத்துவர் கூற ராஜதுரையை கண்ணாடி பாத்திரமாக கையாண்டனர் குடும்ப உறுப்பினர்கள்.

பாலன் கூட அவனது நடவடிக்கையில் மாற்றம் கொண்டு வந்தான். அவ்வப்போது கடைக்கு செல்வதும் அன்புவிடம் கடை கணக்கு வழக்கு தெரிந்து கொள்வதும் என ஓரளவு உதவியாகவே இருந்தான் அவன்.

இதோ ராஜதுரை வீட்டிற்கு வந்த மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. தர்ஷினி தன் தாய் தந்தையுடன் வந்து ராஜதுரையை பார்த்து விட்டு சென்றாள்.அன்புவிற்கு நான்காம் பருவத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை காலம் அது.

ராஜதுரை வாரம் ஒரு முறை கடைக்கு சென்று வருவார். அவரை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது அவரது தொழில்தான் என்றறிந்த அன்பழகி, அவரை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கடைக்கு செல்ல அனுமதித்தாள். மேலும் கடை வரவு, செலவு கணக்கு வழக்குகள் கடையின் தற்போதைய நிலவரம் என்று எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுவாள்.

ராஜதுரை வீட்டில் இருக்கும் இந்த மூன்று மாதங்களிலும் முன் எப்போதையும் விட தனது குடும்பத்தை கூர்ந்து கவனித்தார்.

அன்பழகியின் தெளிவு, புத்திக் கூர்மை, பொறுப்பு, உழைப்பு, அன்பாக தாய் தந்தையை பேணுதல் என அவளை கண்டவர் மெய்சிலிர்த்து தான் போனார் தன் பெண்ணை நினைத்து.

ஆனால் அவரது மனைவி நிலை தான் மிகவும் மோசம், கணவனுக்கு ஏற்கனவே இப்படி ஒரு முறை நெஞ்சுவலி வந்திருக்க, அது தெரியாமல் தான் என்ன மனைவியாக இருக்கிறோம் என்ற குற்ற உணர்வில் அமுதா இருக்க அதுவும் புரிந்தது தான் ராஜதுரைக்கு.

அதன் விளைவாக எந்நேரமும் தனது அருகாமையை நாடும் மனைவியை கண்டு பெருமூச்சு விட்டார்.

அன்பழகி தனது தந்தையிடம் ஏற்கனவே நெஞ்சுவலி வந்து இருக்கிறதா என்று கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் சொல்லவே, இனி தந்தையை நன்றாக கவனித்துக் கொள்வோம், போனது போகட்டும் என்று எண்ணியவள் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள்.

உணவு முறையில், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் கண்டிப்புடன் இருப்பாள். ராஜதுரையை தோட்டத்தை சுற்றி ஒரு முறை நடைபயிற்சி செய்ய வைப்பாள்.

மனைவியும் மகளும் இவ்வாறு இருக்க, மகன் பொறுப்பாக இருப்பது போலவும் தோன்றியது பிறரையை ஏய்ப்பது போலவும் தோன்றியது.

மூன்று மாத யோசனைகள், சிந்தனைகள் முடிவில் தனது முடிவைத் திட்டத்தை சொன்னார் வீட்டினர் முன்னிலையில்.

அன்று இரவு உணவை முடித்தவர்கள் கூடத்தில் அமர்ந்திருந்தனர். " இது எனக்கு ரெண்டாவது அட்டாக் ன்னு எனக்கு தெரியும் "என்று சொல்லிட 'தனக்கு என்ன என்று கேட்டவரிடம் பெரிதாக அவருக்கு ஒன்றும் இல்லை வெறும் வாய்வு வலி' என்று சமாளித்து இருந்த மற்றவர்களுக்கு இது அதிர்ச்சியே.

மீண்டும் "எனக்கு இது இரண்டாவது அட்டாக்னு தெரியும். அதனாலதான் நான் சில முடிவுகளை எடுத்து இருக்கிறேன்." என்றவர் முதலில் அமுதாவை பார்த்து,

"என்னோட சம்பாத்தியத்தில வாங்கின இந்த வீடு அமுதா பேர்ல தான் இருக்கு. அது அமுதாக்கு தான். கடையும் ரெண்டு காலி வீட்டு மனையில ஒன்னு பாலனுக்கு. அப்புறம் நிலபுலன்கள்ல சரிபாதியாக பிரிச்சு என் இரண்டு பிள்ளைகளுக்கு எழுத முடிவு செய்துருக்கேன். இது நாள் வரை என்னோட சேமிப்பு எல்லாத்தையும் நான்கு பங்காக பிரித்து, ஆளுக்கு ஒரு பங்கு. என்னோட பங்கு எனக்கு அப்புறம் அமுதாக்கு போய் சேரும்.

இப்போது அதுல இருந்து வட்டி வர மாதிரி செஞ்சிருக்கேன். ஒரு வீட்டுமனை அன்பழகைக்கு அதுவும் இல்லாம அவளுக்கு அவளோட அம்மாவோட நகை ஐம்பது பவுனு நாங்க செய்தது முப்பது பவுன் மொத்தமா என்பது பவுன் இருக்கு. நாங்க இருக்கிற வரைக்கும் கடையோட கணக்கு வழக்கு அன்பழகி பார்ப்பாள். அன்புக்கும் அவளோட உழைப்புக்கு மொத்த லாபத்துல இருபது சதவீதமும், எனக்கும் என்னோட மனைவிக்கும் சேர்த்து நாற்பது சதவீதமும், மீதி நாற்பது சதவீதம் பாலனுக்கும்ன்னு நான் முடிவு செஞ்சிருக்கேன்."

இதுநாள் வரை தான் சேர்த்து வைத்திருந்த தன்னுடைய உழைப்பை, சொத்துக்களை, பணத்தை குடும்பத்திற்கும் தனக்குமாக பங்கிட்டு சொன்னவர்,

" இதுல யாருக்கும் ஏதாவது ஆட்சயபனை இருக்கா. இதெல்லாம் என்னோட இத்தனை வருட உழைப்பு அதனால யாருக்கு எப்படி கொடுக்கணும்னு எனக்கு தெரியும் நியாயமா தான் செஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன்" என்றவரின் உறுதியான குரலில்,

பாலன் தன் மனதில் தோன்றியதை கேட்கவில்லை. அமுதாவும் அன்பழகி இப்போது இது அவசியமா என்று தோன்ற வேறு எதுவும் நினைக்கவில்லை அவர்கள்.

அவரவரின் வேறுபட்ட மனநிலையில் அன்பழகிக்கு 'அவளுடைய அம்மாவின் நகை நாங்கள் தனியாக சேர்த்த நகை' என்று ராஜதுரை சொன்னதை யாரும் கவனிக்கவில்லை போலும்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவர், பாலனை விளித்து "பாலா என்னோட ரூம்ல, அலமாரியில் மஞ்சப்பை ஒன்னு இருக்கும் பாரு, அதை எடுத்துட்டு வா" என்று பாலனை அனுப்ப,

அவன் எழும் முன் அன்பழகி எழ முயன்றாள். அவளை கண்களாலேயே வேண்டாம் என்று கையமர்த்தினார் ராஜதுரை.

பாலன் உள்ளே சென்று பையை எடுத்து வந்து தர, அதனை பிரித்தவர், அதிலிருந்து சில படங்களை எடுத்து குடும்ப உறுப்பினர்களிடம் தந்தவர்,

"அன்புக்கு நான் மாப்பிள்ளை பார்த்து இருக்கேன். இதுல நாலஞ்சு மாப்பிள்ளை ஃபோட்டோ இருக்கு. ஜாதகம் கூட ஒத்து வருது அதனால யாரு பிடிச்சு இருக்கு என்னன்னு முடிவு பண்ணுங்க" என்றார்.

இவ்வளவு நேரம் அமைதி காத்த அன்பழகி "எனக்கு கல்யாணம் வேணாம் பா. அதுவும் படிப்ப பாதில நிறுத்தி இப்போ இந்த கல்யாணம் அவசியமாப்பா. ப்ளீஸ் வேண்டவே வேண்டாம் பா" உறுதியான குரலில் ஆரம்பித்த அன்பழகி கெஞ்சலில் முடித்தாள்.

"படிப்பு பாதில நிற்காது மா. இன்னும் ஒரு வருஷம் தானே கல்யாணம் முடிஞ்சு அப்புறமா படிப்பை தொடரலாம் டா. முன்ன மாதிரி படிப்ப நிறுத்திட்டு கல்யாணம் பண்றதுலாம் இப்ப இல்லையேம்மா. எனக்கு உன்னோட வாழ்க்கையை ஒருவன் கிட்ட ஒப்படைச்சிட்டேன்ன நிம்மதியா கண்மூடி விடுவேன். அப்பாவுக்காக சம்மதம் சொல்லுடா."என்றார் குரல் தழுதழுக்க. ஒரு சராசரி தந்தையின் குணங்கள் நிறைந்தவர் ராஜதுரை.

தந்தை தன் உடல் நிலையை முன்னிறுத்தி கேட்க, வேறு வழி இன்றி அரை மனதாக சம்மதித்தாள் அன்பழகி. சிறிது நேரத்தில் எல்லாம் அந்த படங்களில் இருந்த ஒருவன் அன்பழகிக்கு மணமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.

இரு தினங்களில் வக்கீல் ஒருவரை அழைத்து வந்து அனைத்தையும் உயில்களாக எழுதினார். அவரவருக்கு சேர வேண்டிய சொத்துகளையும் அவரவர் பெயர்களில் எழுதினார்.

ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம், ஒரு மாதத்தில், அதாவது மீண்டும் கல்லூரி மூன்றாம் ஆண்டு திறக்கும் முன் திருமணம் என்று முடிவானது.
விடிந்தால் நிச்சயதார்த்தம் என்ற நிலையில் ஓரளவுக்கு நெருங்கிய சொந்தங்கள் வீட்டில் குழுமி இருந்தார்கள்.

அன்பழகி பெரிதாக தாய் வழி, தந்தை வழி சொந்தங்களுடன் ஒட்டி உறவாடாததால் இன்றும் அவ்வாறே தாமரை இலை தண்ணீராக நின்றாள் தன் உறவுகளிடம்.

ராஜதுரை தன் பெற்றோருக்கு ஒரே மகன் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவரது பெற்றோரும் தற்போது இல்லை.

அமுதாவிற்கு ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. அமுதாவின் அன்னை இவர்கள் வீட்டிற்கு பெரிதாக வருவதில்லை, இவர்தான் எப்போதாவது அண்ணனின் வீட்டிற்கு சென்று தாயைப் பார்த்து வருவார்.

அமுதாவின் தாய் வழி உறவுகள் பாலனிடம் பொழியும் அன்பையும் அக்கறையையும் அன்புவிடம் ஒரு நாளும் இருக்காது விலகியே இருப்பார்கள்.

ஆரம்பத்தில் அது கண்ணை ஒருத்தினாலும் அன்பழகி அதை ஒதுக்கி வாழ பழகிக் கொண்டதால் பெரிதாக கருத்தில் கொள்வதில்லை.
திருமணம் என்று முடிவானவுடன் அன்பழகி கண்களில் கனவு மின்ன வலம் வந்தாளா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவளது சிந்தனை முழுவதும் கல்லூரி இளங்கலை படிப்பு முடித்தபின் சி.ஏ படிக்க வேண்டும். அதற்கு தனது கணவன் வருங்கால கணவனிடம் எப்படியும் பேசி அனுமதி பெற வேண்டும் என்பதே ஆகும்.

அவளது தோழி தர்ஷினியிடம் கூட தனது திருமணத்தை பற்றி பகிர்ந்து கொள்ள தோணவில்லை என்பதை விட ஏனோ அவள் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

பற்றற்ற நிலையோ, பிடித்தமின்மையோ, நடப்பது நடக்கட்டும் என்ற நிலையோ, இல்லை தந்தையின் மேல் இருந்த நம்பிக்கையோ, எதுவோ ஒன்று மாப்பிள்ளை தேர்விலிருந்து இதோ இப்போது வரை எதிலும் பெரிதாக அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை அவள்.

இரவு உணவை முடித்துவிட்டு மொட்டை மாடியில், தொலைவில் தெரிந்த வானத்தின் அந்தகாரத்தை வெறித்த படி நின்றிருந்தாள் அன்பழகி.

அவளைத் தேடி அங்கு வந்தார் அமுதா. "என்னமா இன்னும் தூங்கலையா." அன்புவின் தோள் தொட்டு திருப்ப, சற்டென்று அவரை அணைத்து கொண்டு அமைதியாக நின்றாள் அவள்.

அழுகை இல்லை விசும்பல் இல்லை ஆயினும் மகளின் பரிதவிப்பு புரிய முதுகை தட்டிக் கொடுத்து தடவி விட்டார். அவள் தனது அலைப்புறுதலை மறைத்துக் கொண்டு மெல்ல அன்னையை விட்டு விலகினாள் அன்பு.

"என்னடா" ஆதுரமாக கன்னம் தடவிய தாயின் கைகளை அப்படியே கன்னத்தில் பொதிந்து வைத்து கொண்டவளின் மனமோ 'என்னன்னு தெரியலம்மா ஏதோ அசம்பாவிதம் வேண்டாதது நடக்க போறது மாதிரி மனம் தவிக்குதம்மா' உள்ளூர மருகியவள் வெளியில் சாதாரணமாக

"ஒன்னும் இல்லம்மா இந்த மொட்டை மாடியில எத்தனை தடவை நிலா சோறு சாப்பிட்டு இருப்போம். பாட்டு பாடி டான்ஸ் ஆடி இருப்போம்" தங்களது மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டாள் அன்பழகி.

ராஜதுரை உடல் நலனை கருதி இப்பொழுதெல்லாம் இங்கு வருவதில்லை அவர்கள் வருவதற்கு நேரமும் இல்லை முன்பு போல அனைவரும் ஒன்றாக உணவு உண்பதும் இல்லை.

அவரவர் நேரத்திற்கு அவரவர் வசதிக்கு தான் உண்பது. ராஜதுரை உடல்நிலை கருதி சீக்கிரமாக சாப்பிட்டு விடுவார், தாயும் மகளும் தான் சேர்ந்து சாப்பிடுவது.

பாலன் அவனது வசதிக்கேற்ப சாப்பிடுவான் அதுவும் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் வெளியில் சாப்பிட்டுக்கொள்கிறான்.


இதையெல்லாம் நினைத்துக் கொண்டவர், ஒரு பெருமூச்சில் தனது சோர்வை வெளியேற்றிவிட்டு மகளை உறங்குவதற்கு அழைத்துக் கொண்டு கீழே சென்றார்.


Thread 'உன்னால் நானும் பூத்தாட (UNP) கருத்து திரி' https://pmtamilnovels.com/index.php?threads/உன்னால்-நானும்-பூத்தாட-unp-கருத்து-திரி.174/
 
Last edited:
Status
Not open for further replies.
Top