வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - கதை திரி

Status
Not open for further replies.
என்னுள் உன்னை கண்டேனடா

அத்தியாயம் - 1

IMG_20230204_150731.JPG

"என்ன சார் பொண்ணு வளர்த்து வச்சிருக்கின்க?

எப்ப பாரு காலேஜை கட்டடிச்சிட்டு ஊரு சுத்த போயிடுறா,

அவ கெட்டுபோறது மட்டும் இல்லாம கூட இருக்குற பிள்ளைங்களையும் சேர்த்து கெடுக்கிறா,

இது பைனல் இயர் வேற அதை பத்தி கொஞ்சம் கூட அக்கரையே இல்ல உங்க பொண்ணுக்கு,

இது தான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் கொஞ்சம் உங்க பொண்ண கண்டிச்சு வைங்க…" என்று அலைபேசியில் எதிரில் இருப்பவர் பதில் பேச அவகாசம் தராமல் கோபமாக பொரிந்து தள்ளியவர்,

விட்ட இடைவெளியில் எதிர்தாரப்பில் இருந்தவர் ஒருமுறை தன் குரலை சொருமி கொண்டு,

"என்ன! என்ன சொல்றீங்க மேம், என் பொண்ணு காலேஜ கட் அடிச்சு இருக்காளா?

அவள இன்னைக்கு அவ வீட்டுக்கு வரட்டும் நான் அவளை கண்டிக்கிறேன்.


இனிமே இப்படி நடக்காது மேம் நா பாத்துக்குறேன்…" என்றவரின் கோப குரலில்,

"ம்ம் ஓகே சார்…" என்றவாறு அவர் அழைப்பை துண்டிக்க துண்டிக்கபட்ட ஃபோனையே கோபமாக பார்த்துக் கொண்டிருந்தவரின் காதில் பலத்த சிரிப்பு சத்தம் கேட்க,

சத்தம் வந்த திசையை கோபமாக நிமிர்ந்து பார்த்தார்.


அங்கு சிரித்து பேசியபடி வந்த இருவரையும் பார்த்து கோபமாக,

"காலேஜ் போகாம எங்க போயிட்டு வரீங்க ரெண்டு பேரும்?" என்று உறும,

தீடிரென கேட்ட கோப குரலில் புரியாமல் பார்த்த அந்த இருவரும் ஒருமித்த குரலில்,

"நீங்க தானப்பா டிக்கெட் எடுத்து தந்திங்க…" என்று கூற,

அதிலும் அவரின் ஒரே மகளான சரண்யாவோ, "அதுவும் இந்த அரை லூசு கூட போட்ட சண்டைக்கு சமாதானமா அவதார் படத்துக்கு போறதுக்கு,

அப்புறம் இப்ப வந்து இப்டி கேட்ட சின்னப் புள்ளத்தனமா இல்ல இருக்கு இது இல்லடா அர்ஜுன்…" என்று வினவியபடி அவனை பார்க்க


அந்த அர்ஜுனாகபட்டவனோ "யாரை பாத்து அரைலூசுனு சொன்னடி குள்ள கத்திரிக்கா…" என்றவன் அன்பரசு புறம் திரும்பி "பாருங்கப்பா இவள,

எப்ப பாரு எல்லாரும் முன்னாடி இப்படித்தான் அர லூசு அர்ஜுன், அர லூசு அர்ஜுன்ன்னு கூப்பிடுறானு பாத்த இன்னைக்கு தியேட்டர்ல வச்சும் அப்படியே கூப்பிடுறா,

அங்க எல்லாரும் என்ன பாத்து எப்டி சிரிச்சாங்க தெரியுமா, வர வர இவ ரொம்ப ஓவரா போறாப்பா நீங்க என்னனு கொஞ்சம் கேளுங்க…" என்று புகார் அளிக்க


"நா என்னபா பண்ணேன் அவன் பேர சொல்லி கூப்பிட்டது ஒரு தப்பா,

வரவர இந்த அர்ஜுன் எப்ப பாரு இப்படி தான் நா என்ன பண்ணுனாலும் எல்லாத்துக்கும் என்னை குறை சொல்லிட்டே இருக்கான்.

இதுக்கு நீங்க தான்பா ஒரு முடிவு சொல்லணும்…" என்று சொல்லியபடி அவரை பார்க்க


தன் முன் நாட்டமை எனக்கு ஒரு தீர்ப்பை சொல்லு என்று சொல்லும் பார்வையுடன் அவரை பார்த்துக் கொண்டிருந்த இருவரையும் அன்பரசு ஒரு கோபமான பார்வை பார்த்தவர்,

"முதல்ல எனக்கு ஒரு தீர்ப்பு சொல்லுங்கடா, தியேட்டர் போறதுக்கு மூணு டிக்கெட் தானே எடுத்து தந்தேன்.

மூணாவது டிக்கெட் என்ன விட்டுட்டு நீங்க மட்டும் எப்படிடா தியேட்டருக்கு போயிட்டு வரலாம்,

அப்ப ஏன் டிக்கெட் எங்கடா?" என்று கேட்டவரின் கேள்விக்கு குறும்பாக பார்வையை பரிமாறிக் கொண்ட இருவரும்,

"ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு இவ்வளவு, இவ்வளவு ஆசை ஆகாது சின்ன புள்ளைங்க கூட சேர்ந்து சினிமா ஆசை வேற,

போங்க போங்க போய் பொறுப்பா, ஆபீஸ் வேலைய பாருங்க போங்க அட போங்கப்பா…" என்ற அர்ஜுன் சரண்யாவின் புறம் சிரிப்புடன் திரும்பி,

'கவி வீட்டுக்கு போயிட்டாலானு கேட்டுக்கோடி…" என்க அதிலே அவரின் டிக்கெட் கவியிடம் தான் சென்றது என்று மறைமுகமாக கூறியவாறு அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன்,

கை கடிகாரத்தை பார்த்தபடி "சரிப்பா டைம் ஆச்சு, நான் கிளம்புறேன் அடியேய்,

அப்படியே போய் படுக்காமல் எதையாவது உள்ள கொட்டிக்கிட்டு போய் படு…" என்றவன் சொல்லுக்கு

"அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ போடா அர லூசு…" என்றவளின் பேச்சிற்கு ஒரு முறைப்பை பதிலாக தந்தவன்,


"அன்புபா பாய் பாய் டி குள்ள கத்திரிக்கா…" என்றவாறு விடைபெற முயல,

"இப்ப தானடா வந்த, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்ற…" என்றவரிடம்,

"அதில்லபா இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னேன்.

அதான் அம்மா சமைச்சிட்டு எனக்காக காத்திருப்பாங்க…" என்க சரிடா அப்ப கிளம்பு, அம்மாவை வெயிட் பண்ண வைக்காதே…" என்றவரின் சொல்லுக்கு குறுக்கே,

"என்னது அம்மா ஸ்பெஷலா சமச்சிருக்கான்களா, அப்போ எனக்கு…" என்றவள் அர்ஜுனை பார்த்து,

"தம்பி நீ எங்க போனாலும் குறுக்க இந்த கௌஷிக் வருவான்…" என்றவள் தந்தையிடம்,

"அப்பா நா போய் மல்லிகா அம்மா கையால மணக்க மணக்க சாப்பிட்டு, உனக்கு எடுத்துட்டு வரேன் சரியா…" என்றவள் தந்தையின் தலையசைப்புக்கு பதில் தலையசைப்பை கொடுத்தவள்,

"சரி சரி அச்சு வா, டைம் ஆச்சு அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…" என்று அழைத்தபடி வீட்டின் வெளியே ஒட,

அவளை சிரிப்புடன் பார்த்தவன் அதே சிரிப்புடன் அன்பரசு விடம் விடைபெற்று அவளுடன் தன் வீடு நோக்கி விரைந்தான்…


அன்பரசு சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து நடத்தி வருபவர் அவர் மனைவி சிவகாமி பிரசவ காலத்தில் உயிரிழந்திருந்தார்.

அதன் பிறகு தாயாய் தந்தையாய் நண்பனாய் தன் ஒரே மகள் சரண்யாவை எந்த வருந்தமும் அண்டாதவாறு வளர்த்து வருகிறார்.

சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள் தான் அர்ஜுனும் சரண்யாவும். இருவரும் இரு வீட்டிற்கும் செல்லப் பிள்ளைகள் தான்.

அதிலும் அர்ஜுனின் தாய் தந்தை மல்லிகா கதிர்வேலுக்கு சரண்யா மீது அதிக பாசம்.

பைக் பயணம் முழுவதும் ஆர்ஜுனிடம் வாய் அடித்துக் கொண்டு வந்தவள்,

அவன் வீட்டினுள் பைக் நுழைந்த நொடி பைக்கில் இருந்து குதித்திறங்கி எப்போதும் போல்,

"மல்லிமா யாரு வந்திருக்கா பாருங்க…" என்று கத்தியபடி வீடு நோக்கி விரைந்தவள் டைனிங் ஹால் நாற்காலியில் இருந்தவர் அருகே வந்து நின்றாள்.


எப்போதும் தன் குரல் கேட்டவுடன் ஆர்வமாக வந்து வரவேற்கும் மல்லிமா இப்போது எதற்கோ கோபமாக பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து,

ஆடு திருடிய கள்ளியை போல் முழித்தவள் 'மல்லிமா கோவப்படுற மாதிரி என்ன தப்பு பண்ணேன்னு தெரியலையே…' என்று நினைத்தவள்,

"என்னம்மா அப்படி பாக்குறீங்க நான் ஏதோவது தப்பு பண்ணிட்டேனா…" என்று ஒரு நிமிடம் முழித்தவள்,

"நா இல்லமா அர்ஜுன் தான் வேணும்னா கதிரப்பாட்ட கேளுங்க?" என்று என்ன தப்பு என்று கூட தெரியாமல் தன் ஆருயிர் நண்பனே போட்டு கொடுத்திருந்தாள்.
 
Last edited:
அப்பொழுதுதான் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்த அர்ஜுனோ "அடிப்பாவி நா நான் என்னடி பண்ணேன்,

அம்மா இவ பொய் சொல்றா மா, ஆனால் உனக்கு ரொம்ப கொழுப்பு டி, எங்க அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணுவாரு தெரிஞ்சு தானே எப்ப பாரு கள்ள சாட்சிக்கு அவரே கூப்பிடுற? கொன்றுவேன் உன்னை,

ஒழுங்கா உண்மைய சொல்லு…" என்று கூறியவனோ ஒரு நிமிட யோசனைக்கு பின் "ஆமா என்ன உண்ம அது,

நான் வரும்போது இவகிட்ட என்னமோ கேட்டுட்டு இருந்தீங்களே, எந்த குத்ததுக்கு பழிய தூக்கி இவ என் மேல போட்டா…" என்று சாவுகாசமாக விளக்கம் கேட்க,


"பாத்திங்களா மா, இவன் நிறைய தப்பு பண்ணி இருக்கான், அதுனால தான் அதுல இது எந்த தப்புனு கேட்கிறான்…"


அவள் பேச்சை கேட்டு சிரித்தவரோ அவள் காதை திருகிய படி,


"வாலு கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தா, அதுக்குள்ள என் பையனேயே என்கிட்ட மாட்டி விட்ரியா,

அதுக்கு அவங்க அப்பா சப்போர்ட் வேற…" என்று அவ காதை திருகியவரிடம் இருந்து காதை காப்பாற்ற போராடியபடி,


"ஆ அம்மா, வலிக்குது வலிக்குது, நான் என்ன தப்பு பண்ணாலும் அதுக்கு முழு காரணம் அர்ஜுனா தான் எப்பவும் இருப்பான்,

அதான் அப்படி சொன்னேன் ஆ வலிக்குது, விட்ருங்க அம்மா…" என்று கூச்சல் இட்டவளின் காதில் இருந்து கை எடுத்தவர்,


"ரெண்டு பேரும் ஒழுங்கா இந்த மாதம் முழுவதும் காலேஜ் போனீங்கனு நினைச்சா, இன்னைக்கு மறுபடியும் காலேஜ் கட் அடிச்சு இருக்கீங்க அப்படித்தானே…" என்றவர்


"உங்க மேம் ஃபோன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணாங்க, அது கூட பரவால்ல டா,

போனை வைக்கிறதுக்கு முன்னாடி, சரண்யா அப்பா ஒவ்வொரு தடவ கம்ப்ளைன்ட் பண்ணும் போதும் கோபமா நா கண்டிச்சு வைக்கிறேன்னு சொல்றாரு,

ஆனா அதுக்கப்புறம் இந்த பொண்ணு எப்படித்தான் இப்டி பயமில்லாமல் தப்பு பண்ணுதோ,

அது மட்டும் தான் எனக்கு புரியவே இல்லைனு, சொல்லிட்டு போனை வச்சாங்க…" என்று கூறியவர்,


"அண்ணா கண்டிச்ச நீங்க ஏன் இப்படி இருக்க போறீங்க, உங்கள கெடுக்கிறதே இந்த அண்ணன் தான்…" என்றவர்


"சரி இந்த தடவை என்ன காரணம் சொல்ல போறீங்க?" என்று வினவ "அதை ஏம்மா கேக்குறீங்க?" என்று அலுத்தபடி பேசிவாறு ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவள்,


அங்கிருந்து ஒவ்வொரு பாத்திரத்தின் மூடியையும் திறந்து பதார்த்தங்களை ஆராய்ந்த படி,

"இப்பவும் சொல்றேன் இதுக்கு காரணமும் அர்ஜுன் தான்…" என்று கூறியவள் "நேத்து என்ன நடந்தது தெரியுமா?" என்று கேள்வியாக ஆரம்பிக்க.



மல்லிமாவோ மூவரின் முன்பும் தட்டெடுத்து வைத்து உணவு பரிமாறியபடி,

அவளின் பேச்சிற்கு "உகும்…" என்று கதை கேட்க "காலேஜ்ல எங்க கிளாஸ் கார்த்திக்கு ஒரு பையன் இருக்கான் மா, நல்ல அழகா இருப்பான்…" என்றவள் அர்ஜுனின் முறைப்பை கண்டு கொள்ளாமல்,


மேலும் தொடர்ந்து "நல்லா படிப்பான். அவன் நேத்து திடீர்னு நான் கேண்டின்ல இருக்கும்போது என்கிட்ட வந்து ஒரு லெட்டரை நீட்டி, ஐ லவ் யூனு சொல்லி ப்ரொபோஸ் பண்ணிட்டான்,

நான் அப்படியே ஒரு நிமிஷம் ஜர்க் ஆயிட்டேன். அப்புறம் தான் கண்ணா இதுவரைக்கும் இந்த சரண்யா ரிஜெக்ட் பண்ணி நீங்க யாரும் பார்த்ததில்லைல,

இப்ப பாப்பிங்க, அப்படின்னு மனசுல நினைச்சுகிட்டு உற்சாகமா அவன ரிஜெக்ட் பண்ண வரதுக்குள்ள,

உங்க அருந்தவாலு புதல்வன் இருக்கானே இந்த லூசு அர்ஜுன், அவனை எத்தி ஒரே மிதி அடுத்த நிமிஷம் என் எதிர்ல நின்னவன் குப்புற கிடந்தான்,

அப்புறம் என்ன ரெண்டு பேரும் மாறி மாறி அடிச்சுகிட்டு வா சுருதி போலாம்னு என் கைய புடிச்சு இழுத்துட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டான்,


இல்ல தெரியாம தான் கேட்கிறேன்? நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியாது?

ஒழுங்கா நானே நோனு சொல்லிருப்பேன் மா, அதோட பிரச்சனை முடிஞ்சு இருக்கும்.

அத விட்டுட்டு சண்டை போட்டு மொத்த காலேஜுக்கும் நியூஸ் கொடுத்துட்டு வந்திருக்கான்,


இதுக்கு தான் சண்டை போட்டோம். அப்புறம் அப்பா பேசி சமாதானப்படுத்தி அவதார் படத்துக்கு அனுப்பி வச்சாரு,

அவ்வளவுதாமா இப்ப சொல்லுங்க தப்புக்கு இவன் தானே காரணம்…" என்று கூறியபடி உணவை வாயில் அடைத்தாள்.


மல்லிமாவோ "அவ சொல்றதுல என்னடா தப்பு இருக்கு, ஒழுங்கா பிள்ளையே பிடிக்கலனு சொல்லியிருப்பா,

அத விட்டுட்டு தேவையில்லாத பிரச்சினைய கிளப்பிட்டு வந்திருக்க நீ இது என்ன அடிக்கிற பழக்கம் உனக்கு…" என்று அதட்டியவர்,


"முதல்ல அப்பா வரட்டும், இன்னைக்கு உனக்கு பஞ்சாயத்து வைக்கிறேன்…" என்று கூற


"ஐயோ அம்மா, உங்க கால்ல வேணாலும் விழுறேன், தயவு செஞ்சு அப்பாட்ட மட்டும் மாட்டி விட்டுராதீங்க மா பிளிஸ்…" என்ற அர்ஜுனின் கெஞ்சலில் சிரிப்புடன் இடையிட்ட சரண்யாவோ,



"அம்மா பாவம் பிள்ள ரொம்ப கெஞ்சுறான், பொழைச்சு போட்டும் தண்டனை எல்லாம் வேண்டாம் சின்னதா பனிஷ்மென்ட் ஒன்னு மட்டும் கொடுக்கலாம்,

என்ன பனிஷ்மென்ட் குடுக்கலாம், ஹான் என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்லுங்க பாப்போம்…" என்று கூற,


"எதே ஷாப்பிங்கா, அதுக்கு வேற ஆள பாருடி அதுக்கு நான் எங்க அப்பா குடுக்குற தண்டனையையே எத்துப்பேன், முனு மணி நேரமா இல்ல எட்டு மணி நேரமானு யோசிச்சா எனக்கு எட்டு மணி நேரம் தாண்டி பெருசு…" என்று சிலுப்ப


"ஹலோ தம்பி இது பனிஷ்மென்ட், நாங்க சொல்றது தான் நீ கேக்கணும் இப்ப எதிர்த்து பேசுனதுக்கு பனிஷ்மெண்ட்டா?


இன்னிக்கு ஈவினிங் என்னையும் அம்மாவையும் பீச்சுக்கு கூட்டிட்டு போ, கரெக்ட்தானம்மா…" என்றவளின் ஆர்ப்பரிப்பிற்கு சம்மதமாக தலையாட்டினார் மல்லிகா.


"என் பர்சுக்கு ஆப்ரேஷன் பண்ண பிளான் பண்ணிட்டாடா…" என்று புலம்பியவன்,


"சரி கிளம்பி தொல…" என்க அதற்கோ "இப்ப எங்க கூப்புடுற ஈவினிங் தான் பீச், இப்ப நானும் அம்மாவும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போறோம்…" என்று அவரையும் இழுத்துக் கொண்டு அவரின் அறைக்குள் நுழைந்திருந்தாள் சரண்யா.


தூக்கத்தில் இருந்தவளை அதட்டி உருட்டி எழுப்பி ஒருவழியாக அவர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்து சேர்ந்திருந்தான்.


வரும் வழியிலேயே அங்கு என்னென்ன வாங்கி உண்ண வேண்டும் என்பதை மல்லி அம்மாவுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தியவள்,

கடற்கரைக்கு வந்த நொடியில் இருந்து "டேய் அச்சு குட்டி, சாரு குட்டிக்கு பானி பூரி வாங்கி தாடா…" என்று கேட்ட தொடங்கியவள்,

ஒவ்வொரு கடையின் அருகேயும் சிறு வயது அழைப்பான அதே அச்சு குட்டியையும் சாரு குட்டியையும் உபயோகப்படுத்தி வாங்கி உண்டவாரே நடக்க தொடங்கினாள்.

இடை இடையே அர்ஜுனுக்கும் மல்லி மாவிக்கும் ஊட்டி விட்டவாறு, அடுத்து எதை வாங்குவது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் நடந்தவள்,


கடற்கரையை நெருங்கவும் மத்ததெல்லாம் மறக்க சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் மல்லி மாவை இழுத்துக் கொண்டு கடலில் நுழைந்திருந்தாள்.


கடலில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த இருவரையுமே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கரை மேல் இருந்த அர்ஜுன்.

அவனைப் போலவே அவளின் உற்சாக குரலையும் முகத்தில் மின்னும் சந்தோஷத்தையும்,


அவள் வாழ்க்கையை திசை மாற்ற போகும் இன்னொருவனின் இரு கூரிய விழிகளும் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.


தொடரும்.
 
Last edited:
என்னுள் உன்னை கண்டேனடா


அத்தியாயம் - 2

IMG_20230204_150731.JPG

கடல் அலைகளில் விளையாடிக் கொண்டிருந்தவர்களை அர்ஜுன் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் என்றால், மனம் முழுக்க கோபத்தோடு வேறு ஒருவனும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவன் சரண்யாவால் நல்லவன் என்று அழைக்கப்பட்ட கார்த்திக்.


அவன் அருகே இருந்த நண்பன் ஒருவனோ அப்போது தான் அங்கு கடற்கரையில விளையாடி கொண்டிருந்த சரண்யாவை பார்த்து "மச்சான் அங்க பாத்தியா, யார் வந்திருக்காங்கனு இவ இங்க இருக்கானா, அந்த அர்ஜுனும் இங்க தானே இருக்கணும்…" என்றவனின் தேடலின் முடிவு சிரிப்புடன் இருந்த அர்ஜுனில் வந்து விழ,

"அதான பார்த்தேன், ஆனா மச்சான் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல டா, அவளுக்கு பாடிகாட் வேலை பாக்குறதுக்குனேவா இவனை பெத்து போட்டு இருக்காங்க, எப்ப பாரு ஒட்டுப்புள்ளு போல அந்த பிள்ளையையே சுத்தி சுத்தி வரான்.

எனக்கென்னமோ இவன் அவளை லவ் பண்றான்னு தோணுது மச்சான். அதனால தான் யாரையும் அவ கிட்ட விடாம பாதுகாத்துட்டு திரியிறான். சரி விடு அவங்களை பத்தி பேசி இனி நமக்கு என்ன ஆகப்போகுது, விடு மச்சான் இவ இல்லனா இன்னொருத்தி…" என்றவனின் பேச்சுக்கு மறுப்பாக தலையசைத்தவன்

"இல்லடா அன்னைக்கு நான் இவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணும் போது அவ சிரிச்சாடா கொஞ்சம் விட்டிருந்தா அவளே ஓகே சொல்லிருப்பா மச்சான், அதுக்குள்ள இவன் உள்ளே புகுந்து சொதப்பிட்டான்,

முதல்ல அவளை என்ன லவ் பண்ண வைக்கிறேன், அப்புறம் இருக்குடா இவனுக்கு கச்சேரி…" என்றவனின் கோப விழிகள் அங்கிருந்த அர்ஜுனில் ஆழப் பதிந்து இருந்தது.


அதிக நேரம் தண்ணீரில் விளையாடி களைத்துப் போய் வந்தமர்ந்த இருவரையும் பார்த்த அர்ஜுனோ "என்ன மேடம், ஒரு வழியா கரைக்கு வர வழி தெரிஞ்சிருச்சு போல, நான் கூட மறந்த மேனிக்கு கடலுக்குள்ள புகுந்துருவியோனு பயந்துட்டே இருந்தேன்…"


"நீ போட தடியா, முதல்ல போய் எங்க ரெண்டு பேருக்கும் குடிக்கிறதுக்கு ஜூஸோ, ஐஸ்கிரீமோ வாங்கிட்டு வா ரொம்ப தாகமா இருக்குது, இல்லம்மா…" என்றவளின் பேச்சுக்கு,

"வாடி வா, இவ்வளவு நேரம் ஒரு அப்பாவி பிள்ளையை கூட்டிட்டு வந்தோமே, அந்த பிள்ளை எங்க போச்சுன்னு உங்க ரெண்டு பேர்ல ஒருத்தராவது தேடுனிங்களா,

கடலை பார்த்ததும் கூட்டிட்டு வந்தவனை அம்போன்னு விட்டுட்டு போயிட்டு இப்ப வந்து திங்குறதுக்கு ஆர்டர் கொடுக்கிறா என்ன பாத்தா மேம் என்ன சாப்பிடுறீங்க அப்டினு ஆர்டர் எடுக்குற மாதிரி தெரியுதா உனக்கு, போ போ உனக்கெல்லாம் எதுவும் வாங்கி தர முடியாது…"


"பாருடா, வாங்கி தர மாட்டாராம்மில்ல வாங்கி, நீ இல்லனா எனக்கு என்ன வாங்கி தர வேற ஆள் இல்லைனு நினைச்சியா?

இரு இரு இப்பவே கதிரப்பாக்கு போன் பண்ணி உன்னை மாட்டி விடுறேன்,

அப்பா அப்பா பீச்சுக்கு வந்த அர்ஜுன் ஒரு பொண்ணு விடாம சைட் அடிக்கிறான்னு, அதை பாத்த நா சைட் அடிக்கிறது தப்புன்னு சொன்னேன் அதுக்கு நான் அப்படித்தான் சைட் அடிப்பேன்னு சொன்னான்னு சொல்றேன்…" என்று கூறி நாக்கை துருத்தி காட்டினாள்


"அம்மா பார்த்தீங்க இல்ல இவளை, உங்க முன்னாடியே எப்படி எல்லாம் பொய் பேசுறானு, இவளுக்கு நீங்க சப்போர்ட் வேற,

"நீ சொல்றி, நீ சொல்லித்தான் பாரேன், தைரியமான ஆம்பளையா இருந்தா நீ சொல்லு டி பாக்கலாம்.

எப்பா பாரு இதை சொல்லியே கடி ஆக்குற லூசு, அம்மா இதெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா…" என்றவனின் புலம்பலுக்கு


"டேய் பிள்ளை விளையாட்டுக்கு சொல்லுதுடா, அதுக்கு எதுக்கு நீ கோபப்படுற…" என்க


"ஹலோ தாய்க்குலமே உங்க பிள்ளை விளையாடறதுக்கு, எதாவது சொப்பு சாமன் வாங்கி கொடுங்க, அத விட்டுட்டு அவ விளையாட இந்த அர்ஜுன் தான் கிடைச்சானா, இல்ல அவன் வாழ்க்கை தான் கிடைச்சுதா,

என்ன பாத்த எப்டி தெரியுது உங்க ரெண்டு பேருக்கும்…" என்று முறைத்தவன் அலைபேசியில் மெசேஜ் வந்த ஒலி கேட்க அதை எடுத்து பார்த்தவனோ,

"சரி சரி விளையாட்டெல்லாம் போதும் கிளம்புங்க வீட்டுக்கு போவோம், அப்பா தேடுறாரு…" என்றவாறு அவர்களை அங்கிருந்து கிளப்பியிருந்தான்.

போகும்போது ஓரமாய் நின்ற கார்த்தியின் புறம் பார்வை செலுத்தியவன் சிறு யோசனையோடு அங்கிருந்து அகன்றான்.


ஒரு வழியாக சோர்ந்து போய் வீடு வந்த சேர்ந்த இருவரையும் பார்த்த அன்பு அப்பாவோ "என்னடா பீச்ல நல்லா என்ஜாய் பண்ணீங்களா…" என்று வினவ,

"நல்லா எல்லாம் இல்லப்பா, ஏதோ சுமாரா என்ஜாய் பண்ணுனோம்.


இந்த அச்சு நா கேட்ட ஐஸ்கிரீமை வாங்கியே தரல, சரி அது கூட பரவால்ல ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிட்டு போன்னு சொன்னா, வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான்பா.

மல்லி மா தான் பாவம் அவசர அவசரமா எங்களுக்கு சமைச்சி தந்தாங்க, நாங்களும் சாப்பிட்டுட்டு உங்களுக்கும் எடுத்துட்டு வந்து இருக்கோம்…" என்று கூறியபடி அங்கிருந்த சோபாவில் சரிந்தாள்.


"ஏண்டி எப்ப பாரு சோறு, குழம்பு, சோறு, குழம்புனு வேற நினைப்பே இல்லையடி உனக்கு…" என்று அர்ஜுன் கோபமாக கேட்க,

"ஆமா இவன் ரொம்ப யோக்கியம், என்ன சொல்ல வந்துட்டான் ஒரு நாளைக்கு ஆறு தடவை திங்கறவன் தானடா, நீ தீனி பண்டாரம்…" என்க,

"ஆமா இவ ரொம்ப ஒழுங்கு, அந்த ஆறு தடவையும் டேய் அச்சு குட்டி சாரு குட்டிக்கு டானு பங்கு வரவ தானடி நீ…" என்று அவளை போலவே பேசி காட்ட,

"ஆமாடா நான் அப்படி தாண்டா சாப்பிடுவேன், நீ என்னடா பண்ணுவ ஏதோ உன் காசுல சாப்பிட்ட மாதிரி ஓவரா பேசுற…" என்க,

"அடிப்பாவி நெஞ்ச தொட்டு சொல்லு, என் காசுல நீ தின்றதே இல்லைனு, இப்ப தானடி கொட்டிட்டு வந்த என் மொத்த காசும் கரைஞ்சி உன் வயித்துக்குள்ள தான் டி இருக்கு,

கொஞ்சமும் மனசாட்சி இல்லாதவ டி நீ…" என்றவனின் பேச்சிற்கு

"இரு இரு எனக்கு வாங்கி தந்ததுக்கு, சொல்லியா காட்டுற நான் கதிரப்பாட்ட சொல்லிக் கொடுக்கிறேன்…" என்றவளை முறைத்தவன்,

அன்புவை பார்த்து "பா அவ என்னை பிளாக் மெயில் பண்றா நீங்க பார்த்து சிரிச்சிட்டு இருக்கீங்க இதெல்லாம் சரியே இல்லப்பா…" என்று முறையிட்டான்.



அவர்களின் பேச்சிற்கு சம்மந்தமே இல்லாமல் "அர்ஜுன் எனக்கு என்னமோ இவ லவ் மேரேஜ்க்கு செட்டாக மாட்டானு தோணுது நீ என்ன நினைக்கிற…" என்று கேள்வி எழுப்ப,

அதுவரை இருந்த மனநிலை மாறி "என்னப்பா நீங்க இப்படி கேட்டுட்டீங்க…" என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியானது போல் நடித்தான்.


"ஆமாடா இவ நா சொல்ற பையன அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணுவானு எனக்கு தோணுது, நீ என்ன நினைக்கிற…" என்று அர்ஜுனை பார்த்தபடி அன்பரசு குறும்பாக வினவ


"அட நீங்க வேற பா, நம்ம சரண்யா பத்தி உங்களுக்கு தெரியாததா அவளை பத்தி என்ன நினைச்சீங்க நீங்க,

பசங்க அங்க வந்தா இங்க இவ தல குனிஞ்சு பா சைட்டு, கிரஷ், ஜொள்ளு, ஹாண்ட்சம் அப்படின்கிற வார்த்தைகளுக்கு கூட அவளுக்கு அர்த்தம் தெரியாது,

நான் சொல்றேன் பா, இவ அரேஞ்ச் மேரேஜ் தான், இவ்வளது லவ் பண்றதாவது நெனச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது, என்ன சரண் இந்த உலகம் உன்னை இன்னுமா நம்புது…" என்று கேலியாக வினவ


"ஏய் என்ன கலாய்க்கிறீங்களா ரெண்டு பேரும், என்ன பாத்தா எப்படி தெரியுது, எப்படி எப்படி நான் லவ் மேரேஜ்க்கு செட்டாக மாட்டேனா…" என்றவள் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் முன்வந்து நின்றபடி அர்ஜுனன் நோக்கி கைநீட்டி,

"இங்க பாரு அசோக்…" என்று ரஜினி மாடுலேஷனில் தொடங்க


"அடியேய் லூசு நான் அர்ஜுன் டி…"


"எல்லாம் தெரியும், வாய மூடுடா ஒரு ப்ளோல போகும்போது குறுக்கப் புகுந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு அடங்கிரு வந்துட்டான்,

அசோக் இல்ல அர்ஜுன்னு வசனம் பேச…" என்று அவனை கடிந்தவள் அதே குரலில் ஹை பிச்சில்,

"இப்போ இங்க இந்த சரண்யாவுக்கு நடந்த அவமானத்துக்கு, நீங்க ரெண்டு பேரும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும்…" என்று மேலே பேச போனவளை தடுத்த அர்ஜுன் "அடியேய்…" என்று ஏதோ பேச முற்பட அவன் புறம் திரும்பியவள்,

"ஆமாடா வெண்ண, நீ ஒருநாள் பதில் சொல்லியே ஆகணும்…" என்று தானே மீண்டும் பேசு தொடங்கியவள்,

எந்த லவ் மேரேஜுக்கு நான் தகுதியே இல்லனு நீங்க சொன்னீங்களோ, அதே லவ் மேரேஜை பண்ணிட்டு உங்க முன்னாடி நான் வந்து கெத்தா நின்னு காட்டுவேன், காட்டுவேன், காட்டுவேன்…" என்று மூன்று முறை எக்கோ போல் தலையசைத்து கூறியவள்,

"அதுவரைக்கும் இந்த சரண்யா வாயில பச்ச தண்ணி, அய்யய்யோ அது வேண்டாம் ரொம்ப கஷ்டம் ஈஸியா ஏதாவது சபதம் இருக்கா…' என்று சத்தமாக தொடங்கி முனுமுனுப்பாக முடித்தவள் தந்தை புறம் திரும்பி,

"அப்பா ஈஸியான சபதம் எதாவது இருக்கா…" என்று பாவமாக வினவ


அர்ஜுனோ சிரிப்புடன் "குள்ள கத்திரிக்கா மௌன விரதம்வேனா இருந்து பாரேன்…" என்று ஆலோசனை வழங்க


"நீ சும்மா இருடா, அப்பா அப்பா ஈசியா ஏதாவது ஒரு சபதம் சொல்லுங்கப்பா ப்ளீஸ்பா, நான் ஏன் சபதத்தை முடிக்கணும்…" என்று வினவ

"உலகத்திலேயே யார்கிட்ட சபதம் போடுறீயோ, அவங்க கிட்டயே என்ன சபதம் போடுறதுன்னு கேட்டது, நீ ஒருத்தி தாண்டி சரியான லூசு,

பேசாம தலைகீழாகத்தான் குதிப்பேன்னு நீ சொல்ற மாதிரி,

இந்த ஷாப்பிங் போறது, பீச் போறது, தியேட்டர் போறது இதெல்லாம் ஏன் நீ கட் பண்ண கூடாது இந்த சபதத்தில…" என்று சந்ததி சாக்கில் அவனுக்கு தேவையானதை கூற


"டேய் அர லூசு, தியேட்டர், பார்க், பீச்க்கு போகாம நான் எப்படி டா லவ் பண்ணுவேன் எரும…" என்றவள்

"இந்த சின்ன விஷயம் கூட தெரியல, இவன் எல்லாம்…" என்று தந்தையிடம் திரும்பி

"ஏதோ நான் லவ் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க, இவன் இருக்கானே லவ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாதவன்,

ஸ்டுப்பிட் இவன் எல்லாம் கடைசில சாமியாரா தான் போவான்…" என்று கூறி முடிக்கவும் பதறியவன்,

"அடியேய் என்னடி சாபம் எல்லாம் விடுற…" என்று கேட்க,

"சபதம் இல்லனா சாபம்னு போயிட்டே இருப்பாடா இந்த சரண்யா…" என்று அசால்ட் ஆக தோலை குலுக்கியவள்,

"இந்த சாபம் சபதம் இது எல்லாத்தையும் விட முக்கியம் சாப்பாடு சோ இப்ப நான் சாப்பிட போறேன் பசிக்குது…" என்றபடி அங்கிருந்து நகர்ந்தவள் போகும் போதே,

"ஆனாலும் இந்த நாளை உன் காலண்டர்ல குறித்து வைச்சுக்கோடா நான் கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பண்ணுவேன்…" என்றபடி அகல,

"சே தலைவர் டயலாக்கை இப்படி பஞ்சு பஞ்சா பறக்க விட்டுட்டு போயிட்டாளே, இதுக்கெல்லாம் காரணம்…" என்று திரும்பி அன்பரசுவை முறைக்க அவரோ கூப்பிடாத குரலுக்கு,

"இதே வந்துட்டேன் சாரு குட்டி, அப்பாவை விட்டுட்டு சாப்பிடவே மாட்டா, பாசக்கார பிள்ளை…" என்றபடி டைனிங் ஹாலை நோக்கி நகர அவரை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவனும் அவரை பின் தொடர்ந்தான்.

அடுத்த நாள் அர்ஜுனோடு ஷாப்பிங் மாலில் சுற்றிக் கொண்டிருந்தவளோ, அங்கிருந்த ஒருவனை கண்கள் விரிய நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.



சிறிது நேரத்திற்கு பிறகே தன்னுடன் அவள் வராததை உணர்ந்த அர்ஜுன் அவளை திரும்பி பார்க்க,

ஒரு ஆடவனை கண்கள் தெறிக்க பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, தலையில் அடித்தபடி,

" நட்ட நடு மால்ல நின்னுகிட்டு, என்ன பண்றா பாரு…" என்றபடி அவள் அருகே வந்த அர்ஜுனோ அவள் தலையில் ஓங்கி கொட்டியபடி,

"என்னடி பண்ணிட்டு இருக்க லூசு…" என்று வினவ இன்னும் பார்வையை அவனிடம் இருந்து விலக்காமல் தலையை தடவியபடி,

"டேய் அச்சு, அங்க பாருடா அவன் எவ்ளோ ஹண்ட்ஸமா இருக்கான்ல…" என்று கேட்க அவனை திரும்பி பார்த்த அர்ஜுனோ வழக்கம் போல,

"ஆமாமா ஹண்ட்ஸமா தான் இருக்கான்…" என்று கூறியவன் "சரி சரி பார்த்தது போதும் வா…" என்று அழைக்க,

"டேய் இருடா கொஞ்ச நேரம்…" என்று கேட்டபடி அவனை பார்த்தவள்,

"இந்த மூவி சாங்ஸ்ல, அப்புறம் கதையில் எல்லாம் சொல்ற மாதிரி ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருக்கானே…" என்று பாடி காட்டியவள் சிறிது நேரம் பார்வை அவன் மீது படரவிட்டபடி,

"ஐ திங்க் என் லவ்வர் பாய் கிடைச்சிட்டான்னு நினைக்கிறேன் டா…" என்று படி அர்ஜுன் புறம் திரும்ப அவனோ அதுவரை இருந்த மனநிலை மாறி அதிர்ச்சியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


தொடரும்.
 
Last edited:
என்னுள் உன்னை கண்டேனடா


அத்தியாயம் - 3

IMG_20230204_150731.JPG

அதிர்ந்து நின்ற அர்ஜுனின் பார்வையை பார்த்த சரண்யாவோ "என்னடா இப்படி குறுகுறுன்னு பாக்குற, ஐய்யய்யோ எனக்கு வெக்க வெக்கமா வருதே,


பாரேன் நானே லவ் பண்ண போறேன்…" என்றபடி அந்த ஆடவன் புறம் பார்வையை செலுத்தியவள் அவன் அங்கிருந்து விலகுவதை பார்த்து,


"டேய் அர்ஜுன் அவன் போறான் டா வா…" என்று அதிர்ந்து நின்றவனின் கையைப் பிடித்து இழுத்தவாறு அந்த ஆடவனை பின் தொடர்ந்தாள்.


அர்ஜுனோ நடப்பது புரியாத அதிர்ச்சியில் உறைந்து இருந்தான்.


முதலில் அவள் அந்த ஆடவனை பார்த்ததை அவன் பெரிதாக நினைக்கவில்லை, ஏனெனில் சரண்யா இப்படி தான் அவள் கண்ணுக்கு அழகாக தெரிந்தால்,


அழகா இருக்காங்க இல்ல, ஹேண்ட்ஸம் இல்ல, கியூட் இல்ல, என்ற சொல்லோடு அவள் அப்படி சொல்பவர்களை பார்பது வழக்கம் தான் அதில் ஆண் பெண் குழந்தைகள் வயதானவர்கள் சினிமா பிரபலங்கள் வரை அடக்கம்.


ஆனால் அவர்கள் அகன்றதும் அவர்களைப் பற்றி பேசியபடி அந்த விஷயத்தை விட்டுவிடுவதும் அவள் வழக்கம் தான்,


ஆனால் முதல் முறையாக அவள் காதல் என்ற சொல்லை உபயோகிப்பதையும் அவனை பின் தொடர கூறுவதையும் நம்ப முடியாமல் அர்ஜுன் அவளுடன் நடந்தான். அவனின் மனமோ லவ் மேரேஜ், அரேஞ்ச் மேரேஜ்னு சொல்லி அவளை குழப்பி விட்டோமோ என்று குழம்பி தவித்தது.


அவனால் சரண்யாவின் இந்த செய்கையை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை மனதில் என்னவோ உறுத்த அவளையே ஆழ்ந்து பார்த்தபடி இருந்தான்.


ஆனால் அவனின் பார்வையை கூட கவனிக்காமல் அவள் வெகு சுவாரசியமாக அந்த ஆடவனை தான் நோட்டமிட்டு கொண்டிருந்தாள்.


அவளின் இந்த சுவாரஸ்யமான பார்வையை அவள் பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் நண்பன் கவனிக்க தன் அருகில் அலைபேசியில் மூழ்கி இருந்த நண்பனின் புறமாக சிறிது தலை சாய்த்து "டேய் மச்சான் டக்குனு பாக்காத, நம்ம டேபிளிலிருந்து ரெண்டு டேபிள் தள்ளி இருக்குற அந்த எல்லோ கலர் சுடிதார் பொண்ணு ரொம்ப நேரமா உன்னையே தான்டா பாத்துட்டு இருக்கு…" என்று கூறியபடி நண்பனின் முகம் பார்க்க,


அவனோ அலைபேசியில் இருந்து தலையை கூட உயர்த்தாமல் அவன் கூறியதை கேட்டதற்கான எந்த அறிகுறியையும் காட்டாமல் அமைதியான குரலில் அலைபேசி பார்த்தவாறு "தெரியும்…" என்று கூறினான்.


"டேய் எப்டிடா நீ அந்த பொண்ண பாக்கவே இல்லையே…" என்க "அப்படியா அப்புறம் எனக்கு எப்படி மச்சான் தெரிஞ்சுச்சு…" என்று அவனிடமே திருப்பி கேட்க,


"என்னடா லந்தா நான் உன்கிட்ட கேக்க வேண்டிய கேள்விய? நீ என்கிட்ட கேட்டுட்டு இருக்க, நீ எப்படா அந்த பொண்ண பார்த்த…" என்று குழப்பமாக கேட்க,


அவனை பார்த்து ஒரு சிரிப்பை உதிர்த்தவன் "ஒரு அரை மணி நேரமாவே நம்ம போற இடம் எல்லாம் நம்மள தான் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு இருக்கா…" என்று கூறியபடி எதேர்ச்சியாக பார்ப்பது போல் அவள் புறம் திரும்பி பார்த்தவன் மீண்டும் தன் அலைபேசியில் மூழ்க


அவன் செயலை பார்த்தவனோ "அடப்பாவி அப்போ ஸ்வேதா வாழ்க்கை…" என்று அதிர்ச்சியாக வினவ "டேய் கொன்றுவேன் டா உன்ன, எத்தனை தடவைடா சொல்றது எனக்கு அவளை பிடிக்கலைனு…" என்று கோபமானவன்


"அவகிட்ட நான் எத்தனையோ தடவை சொல்லியாச்சு இந்த சைட் அடிக்கிறது, ஃபாலோ பண்றது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காதுனு, ஆனாலும் விடாம தொல்லை பண்ணுற இம்சை சே, அவளால எனக்கு ஆபீஸ்ல நிம்மதியே போச்சு…" என்று கடுகடு முகத்தோடு கூற


"ஓ அப்ப அந்த எல்லோ டிரஸ் பொண்ணு மட்டும் என்ன பண்ணுதாம்…" என்று நக்கலாக வினவ


அதுவரை கடுகடுவென இருந்தவனின் முகத்தில் புன்னகை தோன்ற "அதை என்கிட்ட கேட்டா, நீ அந்த எல்லோ டிரஸ் பொண்ணு கிட்ட தான் கேட்கணும்…" என்று நக்கலாக கூறியபடி அங்கிருந்து எழுந்தவன் அதே சிரிப்புடன் அங்கிருந்து அகன்றான்.


அவனின் அந்த சிரிப்பையே கோபமாக பார்த்த அவனின் நண்பன் அதே கோபத்தோடு அங்கிருந்த சரண்யாவையும் பார்த்து முறைத்தான். அவனின் மனமே ஸ்வேதாவை நினைத்து கவலையில் ஆழ்ந்தது.



அவன் அங்கிருந்து அகன்றதும் அவன் மேல் இருந்த பார்வையை திருப்பி தன் அருகில் இருந்தவனை பார்த்த சரண்யாவோ அவனின் மௌனத்தை கொஞ்சம் கூட உணராமல் "டேய் அச்சு குட்டி, எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே தெரியலடா, அவன் கிளம்புறான் டா அவனை பத்தின டீடைல்ஸ்ச எப்படிடா தெரிஞ்சுகிறது…" என்று கேட்க,


அதுவரை அமைதியாக இருந்தவன் அவள் கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் அவளை பார்த்தபடி எழுந்து வேகமாக அந்த மால்லை விட்டு கோபமாக வெளியேறினான்.


திடீரென்று எழுந்து வேகமாக வெளியேறுபவனை ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தவள் "இவனுக்கு என்னாச்சு? டேய் அச்சு அச்சு நில்லுடா…" என்று கத்தியபடி அவன் பின் ஓடியவள் இந்த அர லூசு அர்ஜுன் இப்ப எதுக்கு "சிங்கம் ஒன்று புறப்பட்டதே ரேஞ்சுக்கு வேகமா போறான்னு தெரியலையே,


அய்யய்யோ எல்லாரும் கேவலமா வேற பாக்குறாங்களே…" என்று புலம்பியபடி அவளை வினோதமாக பார்ப்பவர்களை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தபடி அவன் பின்னே ஓடலானாள்.


வண்டியில் வரும்போதும் ஒரு வார்த்தை அவளிடம் பேசாமல் எதையோ யோசித்தபடி வந்தவன் அவளை வீட்டு வாசலில் இறக்கிவிட்டுவிட்டு வண்டியே புயல் வேகத்தில் கிளப்பி இருந்தான். போகும் அவனையே ஒரு புரியா பார்வை பார்த்தவள் தன் தோளை குலுக்கியபடி சிரிப்புடன் வீட்டினுள் நுழைந்திருந்தாள்.



காலேஜ் கேண்டீன் அருகில் இருந்த மரத்தடியில் எதையோ தீவிரமாக சிந்தித்தபடி முதல்முறையாக சரண்யா இல்லாமல் தனித்து அமர்ந்திருந்தான் அர்ஜுன்.


அவன் சிந்தனை ஓட்டத்தை கலைக்கும் விதமாக அந்த இடத்திற்கு உற்சாகம் பொங்க ஆர்ப்பாட்டமாய் வந்தமர்ந்தாள் சரண்யா.


"டேய் அச்சு உன்னை எங்கெல்லாம் தேடுறது, அர லூசு மெண்டல் என் ஹேண்ட்சமுக்கு ப்ரொபோஸ் பண்ண பிளான் போட சொன்னேன் போட்டியா டா…" என்று கேட்க,


முதல் நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி குறைந்திருந்தவன் அவளை திரும்பி கேவலமாக ஒரு பார்வை பார்த்து "அடியேய் நீ அவனை பார்த்து ஒன் வீக் கூட ஆகலடி,


வெறும் த்ரீ டேஸ் தான், மனசாட்சியே இல்லாம ஒன் வீக்ல ப்ரொபோஸ் பண்ணனும்னு வேற ப்ளான் போடுற பசங்க கூட இவ்வளவு ஃபாஸ்ட் கிடையாது மா…" என்று சலித்தவன் பேச்சிற்கு,


"என்னடா பெரிய த்ரீ டேஸ் மனசுக்கு தோணுச்சா பட்டுனு செஞ்சிட்டு போயிட்டே இருக்கணும், அத விட்டுட்டு ஆறு அமர வயிலின் வாசிக்க சொல்றியா என்ன?,


நமக்கு அந்த பொறுமை எல்லாம் கிடையாதுபா, நான் இவ்ளோ பொறுமையா இருந்ததே பெரிய விஷயம்…" என்றவளின் கூற்றுக்கு "ஆமாடி வா இது ரொம்ப பெரிய பொறுமை தான்,


பொறுமைக்குன்னு ஒரு அவார்ட் இருந்தா அது உனக்கு தாண்டி, மூணு நாள் பொறுமையே பெருமையமில்ல, ஒருவேளை நீ பையனா பொறந்திருந்தா என்னடி பண்ணி இருப்ப…" என்று நக்கலாக வினவ


கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென்று "நான் மட்டும் பையன பொறந்ததிருந்தேனு வையேன் எத பத்தியும் யோசிக்காம, எதைப்பத்தியும் கவலைப்படாம எனக்கு புடிச்ச பொண்ண டக்குனு தூக்கிருப்பேன்,


தூக்கிட்டு போய் தாலி கட்டியிருப்பேன்டா, என்ன நினைச்ச இந்த சரண்யா பத்தி நீ, சும்மா ரணகளம் பண்ணி இருப்பேன்…" என்று ஸ்டைலாக முடியை கொதியவாறு பேசியவள்,


"ஆனா என்ன செய்ய நான் தான் பொண்ணா பொறந்துட்டேனே சோ அதனால எனக்கு ஹாண்ட்ஸமே தூக்குற, அளவுக்கு பட்ஜெட் இல்லப்பா சோ வெறும் ப்ரொபோசிங் மட்டும் தான்…" என்றவள்


"பாத்தியா பேசிட்டு இருந்ததுல மறந்தே போயிட்டேன் நான் என் ஹீரோக்கு ப்ரொபோஸ் பண்ண பிளான் வச்சிருக்கேன்னு சொன்னேன் இல்ல அதை உனக்கு சொல்லவே இல்ல பாருடா…" என்றவள்


அர்ஜுனின் சோர்ந்த முகம் பார்த்து "நீ ஏன் ஒரு மாதிரி இருக்கிற, உடம்பு ஏதாவது சரியில்லையா டா…" என்று கேட்டபடி அவனின் நெற்றியில் தலையில் கை வைத்து இது காய்ச்சலின் அறிகுறியா என்று சோதித்துப் பார்த்தாள்.


அவளின் கையை தன்னிடம் இருந்து விளக்கியவன் "அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சொல்லு, உன் பிளானை அப்படி என்ன பிளானுன்னு கேட்போம்…" என்று கேட்டபடி அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் அந்தப் பார்வை மாற்றத்தை கூட உணராமல் அவன் கேள்வியில் தோன்றிய ஆர்வத்துடன் அவன் முன் எழுந்து வந்து நின்றவள், "ஓகே நல்ல கேட்டுக்கோ நாளைக்கு என் ஹீரோ அஸ்வினுக்கு பர்த்டே சோ…" என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு,


"அடியேய் ஒரு சந்தேகம் எல்லாருக்கும் செல்ல பேர் வைப்பதான இந்த ஹீரோ அஸ்வினுக்கு மட்டும் வைக்கலையா…" என்று வினவ


"இல்லடா அச்சு குட்டி இப்ப பாரு நான் உன்ன அச்சுனு அடிச்சு கூப்பிடுறேனா, அதுபோல அவன் பேரை சுருக்கினாலும் ஆச்சுதாண்டா வருது, அதான் நீ ஆச்சு அவன் அஸ்வின்னே இருந்துட்டு போட்டும்னு விட்டுட்டேன்…" என்று கூறியவள்


"முதல்ல பிளான கேள்ரா லூசு அச்சு…" என்றவள் மறுபடியும் முதலில் இருந்து "ஓகே நல்ல கேட்டுக்கோ, நாளைக்கு என் ஹீரோ அஸ்வினுக்கு பர்த்டே சோ, அவன் எல்லா பர்த்டேக்கும் போற மாதிரி காலைல 10 மணிக்கு கரெக்டா வடபழனி முருகன் கோயில்ல இருப்பான்,


அங்க தான் நம்ம பிளான் எக்ஸிக்யூட் பண்றோம் அவனுக்கு முன்னாடியே நாம போயி அந்த கோயில்ல வெயிட் பண்ணி அவன் வர்றத நோட்டம் விடுறோம்,


கரெக்டா முருகர் முன்னாடி எப்படியும் ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடி, முருகர் கிட்ட இந்த வருஷம் அவனுக்கு என்ன எல்லாம் வேணும்னு சொல்லி லிஸ்ட் கொடுத்துட்டு இருப்பான்.


அதுதான் நமக்கான டைம் அந்த நேரத்தை தான் நான் நம்ம பிளான்க்கு பிக்ஸ் பண்ணி இருக்கேன்,


கண்ண மூடிட்டு நிக்கிறவனுக்கு முன்னாடி போயி நானும் அதே போல கைல கிப்ட்டோட கண்ணு மூடிட்டு நிக்க போறேன், அதுவும் எப்படி தெரியுமா அழகா சேரி கட்டி தலை நிறைய பூ வைச்சி அப்படியே ஒரு பையன் பார்த்தவுடன் பிளாட் ஆகுற மாதிரி ரெடியாகி,


கண்ண தொறந்து பாக்குறவன் பா யாருடா இந்த தேவதை அப்படின்னு நினைக்கிற மாதிரி இருக்கணும்…" என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு "அது கொஞ்சம் கஷ்டம் தான், என்னதான் சீவி சிங்காரிச்சாலும் குயில் மயிலாகிட முடியாதுல்ல…" என்று நக்கலாக கூற


அதை கேட்டு அவனை முறைத்தவள் "சரி அப்போ அழகான குயில்னே வச்சிக்க, என் குயில்னா அழகு இல்லையா மயில் மட்டும் தான் அழகா, போடா போடா காக்கா கூட அழகு தாண்டா, சரி வெட்டிப்பேச்ச விடு,


கண்ணு தொறந்து பாக்குறவன் ஹேய் நீங்க, அப்படின்னு என்ன பாத்து கேட்கும் போது, நான் கண்ணு தொறந்து ஹாப்பி பர்த்டே அப்படின்னு என் கையில் இருக்க கிப்டோட சொல்லுவேன்.


சோ திடீர்னு யாருன்னே தெரியாத ஒரு பொண்ணு கிப்ட்டோட ஹாப்பி பர்த்டேனு சொல்லும் போது கொஞ்சம் குழம்பி, உங்களுக்கு என்ன தெரியுமா அப்டினு கேட்பான்.


அப்பே ஆமா உங்கள தெரியும். உங்கள பத்தி எனக்கு எல்லாம் தெரியும் எப்படின்னா, ஐ லவ் யூ அப்படித்தான். இப்படி சொல்ல போறேன் டா சும்மா மெர்சலா இருக்கு இல்ல,


அது என்ன பார்த்த உடனே பசங்க மட்டும் தான் ப்ரொபோஸ் பண்ணனுமா பொண்ணுங்களும் ப்ரொபோஸ் பண்ணுவோம். எப்படி சரி சொல்லு இந்த ப்ரொபோஸ் எப்படி இருக்கு…" என்று கேட்டபடி அவன் முகத்தையே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


அதுவரை அவள் பேசுவது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கும் அவனின் நண்பர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.


கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து அரை மணி நேரம் ஆன பின்பும் கார்த்திக்கால் அவன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை தன் நண்பர்களிடம் கோவமாக அங்கு நடந்தவற்றையே புலம்பி கொண்டிருந்தான்.


"நான் அவளை நாயா பேயா அலைஞ்சு லவ் பண்ணுவானாம், இவளும் என்ன பாத்து பல்ல பல்ல காட்டுவாளாம். இவளுக்கு வேண்டி அந்த அர்ஜுன் நாய் கிட்ட எல்லாம் நான் அடி, மிதி வாங்கிட்டு கிடந்தா இவ அந்த கேப்புல நோகாமல் இன்னொருத்தனை பாத்துட்டு சோ க்யூட் இல்லனு சொல்லி ப்ரொபோஸ் பண்ணுவாளாம்,


அதை நாங்க பார்த்துட்டு வாழ்வே மாயம்னு பாட்டு பாடிட்டு இருக்கணுமா…" என்று ஆக்ரோஷமாக கத்தியவன் தன் நண்பர்கள் புறம் திரும்பி,


"டேய் நல்லா கேட்டுக்கோங்கடா பிளான் அவளோடது தான், ஆனா அதில இருக்க கூடிய சீன் என்னதா தான் இருக்கணும் நா சொல்றது தான் அங்க நடக்கணும் கொஞ்சம் கூட மாறாமல்.


நம்ம பெருசால்லாம் ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் அவ பிளான் படியே நாமளும் போவோம். அவனை பார்த்து கண்ண மூடி பல்லிளிச்சுட்டு நிப்ப இல்ல அதுதான் நமக்கான டைம்,


அந்த டைம் ஃபிக்ஸ் பண்ணி தான் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல புகுந்து அவளுக்கு நா தாலி கட்டி, அவளை தொக்க தூக்குறோம்.


அவ தானே சொன்னா தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்னு, நம்ம தாலி கட்டி தூக்கிட்டு போவோம். அதுக்கு பிறகு இருக்குடா அந்த அர்ஜுனுக்கும், சரண்யாவுக்கும் இந்த கார்த்திக் யாருன்னு புரிய வைக்கிறேன் அவர்களுக்கு…" என்றவனின் மனது முழுக்க கோபம் கோபம் கோபம் மட்டுமே.


"என்னோட போக்கஸ் புல்லா சரண்யா மேல தான் இருக்கும், நீங்க ரெண்டு பேரும் உங்க ஃபோக்கஸ அர்ஜுன் மேல வைங்க, அது போதும் ஈஸியா நம்ம பிளான் சக்ஸஸ் ஆகுறதுக்கு…" என்றவனின் யோசனை எல்லாம் நாளை நடக்கப் போகும் திருமணத்தை ஒட்டியே இருந்தது.


"நாளைக்கு இதே நேரம் அவ கழுத்துல தாலியோட அதிர்ச்சில கலங்கி போய் என் முன்னாடி நிப்பா…" என்றவனின் நினைப்பை மெய் ஆக்குவது போல் இதுவரை இருந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அடங்கியவளாய் தன் கழுத்தில் கிடந்த தாலியையே வெறித்துப் பார்த்தபடி கண்கலங்கி நின்றிருந்தாள் சரண்யா.


அவளுக்கு குறையாத அதே அதிர்ச்சியோடு "ஆமா இது நான் ஆன்டி ஹீரோவாக வேண்டிய சீன்ல இவன் யாருடா புதுசா…" என்ற குழப்பத்தோடு அந்த புதியவனையே பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.


தொடரும்.


 
என்னுள் உன்னை கண்டேனடா


அத்தியாயம் - 4



IMG_20230204_150731.JPG

கோவில் செல்ல சீக்கிரமே தயாராகி வந்திருந்த அர்ஜுன் சரண்யாவிற்காக ஒரு மணி நேரமாக காத்திருக்க,


ஒருவழியாக சிவப்பு நிற புடவை அணிந்து தலையில் மல்லிகை பூச்சூடி மிதமான அலங்காரத்தோடு சரண்யாவும் தயாராகி வந்தாள்.


அவளை முதன் முதலில் புடவையில் பார்த்த அர்ஜுனோ "இந்த கெட்டப்ல உண்மைலேயே பொண்ணு மாதிரியே இருக்க டி…" என்க அதை கேட்டு முதலில் அவனை கோபமாக முறைத்தவள்,



பின் ஒரு அசட்டு சிரிப்புடன் அவன் புறம் குனிந்து "நான் கூட கண்ணாடி பாக்கும்போது அப்படிதாண்டா நினைச்சேன். இந்த டிரஸ்ல நான் அழகா இருக்கேன் இல்ல…" என்று கூறி சிரித்தாள்.


"ஆமா ஆமா உங்க அப்பா பாக்கணும் உன்னை இந்த கெட்டப்ல, ஆமா அன்புபா எங்க?" என்று வினவ,


சிரிப்புடன் "என்னமோ தெரியல காலையிலேயே ஒரு அவசர வேலைன்னு சொல்லி அப்பா எங்கயோ வெளிய போனாங்க…" என்றவள்,


"சரி சரி வா, நமக்கு டைம் ஆச்சு, அஸ்வின் வர்றதுக்கு முன்னாடி நம்ம கோயிலுக்கு போனும் வா…" என்றவாறு


ஒரு கையில் அவனை பிடித்தவள் மறு கையில் சேலையை கொத்தாக தூக்கி உயர்த்தி பிடித்த படி நடக்க தொடங்க


"பொண்ணு கெட்டப் போட்டா மட்டும் பத்தாதுடி பொண்ணு மாதிரி நடக்கவும் தெரியணும்…" என்று கூறியவாறு,



சேலை பிடித்திருந்த அவள் கையில் ஒரு அடி வைத்து கையை தட்டி விட்டவன்


"படியில வரும்போதுதான் அப்டி வந்தான்னு பார்த்தா, இப்பவும்…" என்று வாக்கியத்தை முடிக்காமல் தன் தலையில் அடித்தவன்


கண்மூடி ஒரு இரண்டு நொடி ஏதோ யோசித்து கண் திறந்தவனின் பாவனையில் "யாருடா அந்த பொண்ணு, சொல்லவே இல்ல பாத்தியா…" என்று சரண்யா ஆர்வமாக கேள்விக்கு


"உன் தலை, ஃபர்ஸ்ட் டைம் சாரி கட்டும் போது ஹீரோயின்ஸ் எல்லாம் எப்படி நடப்பாங்கன்னு யோசிச்சு பாத்தேன் டி லூசு…" என்றவன்


"சேலை கட்டி விடும் போது பானு அக்கா கிட்ட கொஞ்சம் நீ நடந்தும் காட்டி இருக்கலாம் டி, எனக்கு ஒரு வேலை மிச்சமாயிருக்கும்…" என்று சலித்தபடி


தன் அலைபேசியை எடுத்து எதையோ தேடியவன் தேடலின் முடிவை அவளிடம் காட்டி,


"இதுல நடக்கிற மாதிரி இந்த மடிப்ப மட்டும் ரெண்டு விரலால லைட்டா தூக்கிட்டு மெதுவா நட பாப்போம்…" என்று கூற அவன் சொன்னது போல் நடந்து பார்த்தவள் சிரிப்புடன்,


"காமெடியா இருக்கு இல்ல டா…" என்க,



அவளின் கேள்விக்கு "ஆமா உன்னை இந்த கெட்டப்ல பார்க்கும் போது கொஞ்சம் காமெடியா தான் இருக்கு…" என்று சிரிப்புடன் கூறியவனின்,


தலையில் நங் என்று கொட்டியவள் அவன் கூறியது போலயே புடவையை பிடித்தபடி மெதுவாக நடக்க தொடங்கினாள்.


ஒரு வழியாக இருவரும் கோவில் வந்து சேர "நல்ல வேலைடா அஸ்வின் வரதுக்கு முன்னாடி வந்துட்டோம்…" என்றவள் நின்ற இடத்தில் இருந்து கோயிலை சுற்றி சுற்றி பார்க்க,


"என்னடி பாக்குற…" என்ற அர்ஜுனிடம் "இல்ல டென்ஷன்ல ஒழுங்கா சாப்பிடவே இல்லடா, லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு அதான் பிரசாதம் எங்க குடுப்பாங்கன்னு பாக்குறேன்.


ஆமா இந்த கோயில்ல என்னடா ஸ்பெஷல்…" என்றவாறு திரும்பியவள் அவனின் கோபமான முறைப்பை பார்த்து,


"டைம் என்னாச்சு?" என்று கேட்டவாறு கைக்கடிகாரத்தை பார்த்தவள், "டேய் இன்னும் 10 மினிட்ஸ்ல அஸ்வின் வந்துருவான், வா வா நம்ம போய் ஒளிஞ்சிக்கலாம்…" என்க,


"ஏண்டி நம்ம என்ன கண்ணாமூச்சியா விளையாண்டுட்டு இருக்கோம் ஒளிறதுக்கு, சாவடிக்கிற டி என்னைய, இங்கேயே நிற்போம்.


அவன் முதல்ல நேரா பிரகாரத்துக்கு தானே போவான் அப்புறம் நாம போலாம்…" என்றபடி வாசலை பார்த்தபடியே அவர்கள் இருவரும் நிற்க,



அவர்களுக்குப் பின்புறம் கொஞ்சம் மறைவாக கார்த்திக்கும் அவன் நண்பர்களும் கூட அஸ்வினை தான் எதிர்பார்த்து நின்றனர்.


"டேய் பிளான்லாம் நல்லா ஞாபகம் இருக்குல, எதுவும் சொதப்பதில்லை…" என்றவளிடம்,


"எல்லாம் ஓகே, ஆனா உன் பிளான்ல ஒரு சின்ன குறை இருக்கு, கண்ணு தொறந்து பார்க்கிறவன் உன்னை பார்த்து கண்டுக்காம கிராஸ் பண்ணி போயிட்டானா என்ன பண்ணுவ…" என்று வினா எழுப்ப,


"என்னடா இப்ப வந்து இப்படி சொல்ற ஐயையோ, அப்ப நான் இப்ப என்ன பண்றது…" என்று அதிர்ந்து கேட்க


"வெரி சிம்பிள், இப்ப பிளான கேன்சல் பண்ணிரு, பொறுமையா வேற ஏதாவது நல்ல பிளான் போட்டுட்டு அப்புறம் ப்ரபோஸ் பண்ணிக்கோ…" என்றவனை முறைத்து பார்த்தவள்,


"ஆசை தோசை அப்பளம் வடை, ஆள பாரு, சின்ன மிஸ்டேக்குக்கு பிளான்னயே சேஞ்ச் பண்ணனுமாமில,


உனக்கு கடவுள் மூளைனு ஒரு வாஸ்துவ கொடுத்திருக்காருல அத கொஞ்சமாவது யூஸ் பண்ணுடா…" என்றவள்


ஒரு நிமிட யோசனைக்கு பின் "ஒன்னும் பிரச்சனை இல்ல, உனக்கு பதிலா நானே யோசிச்சிட்டேன், அவன் கண்ண தொறந்ததும் நீ எனக்கு சிக்னல் கொடு,


அப்புறம் எல்லாத்தையும் நா பாத்துக்குறேன் அவ்வளவுதான் சிம்பிள், இதுக்கு போய் பிளானயே ஸ்டாப் பண்ணனுமாம் லூசு லூசு…" என்றவாறு மீண்டும் கோயில் வாசலை பார்க்க தொடங்கினாள்.


"இதைச் சொல்லி இன்னைக்கு ப்ரொபோஸ் பண்ண விடாம கூட்டிட்டு போயிடலாம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன்,


திடீர்னு என்ன இவ மூளை வேலை எல்லாம் செய்யுது, எல்லாம் என் நேரம்…" என்ற அலுத்தபடி அவள் அருகே நின்றான்.


அஸ்வின் வரவை முதலில் உணர்ந்த கார்த்திக் மெதுவாக "அவன் வந்துட்டான் டா…" என்று கூற


அதே நேரம் சரண்யாவும் "டேய் அச்சு அவன் வந்துட்டான் டா, கிப்ட்ட என்கிட்ட கொடு…" என்று அந்த பரிசு பொருளை வாங்கிக்கொண்டு அஸ்வினை நோக்கி நடந்தாள்.




அவளின் பதுங்கு நடையை பார்த்து "கொள்ளையடிக்க போற மாதிரியே போற பாரு இவள வச்சுக்கிட்டு…" என்று அலுத்தபடியே அர்ஜுன் அவளை பின் தொடர,


அவனுக்கு பின் அதே பதுங்கு நடையோடு அர்ஜுனின் பின் நடந்தான் கார்த்திக் அவன் நண்பர்களோடு.


பிரகாரத்திற்கு வந்த அஸ்வின் எதேச்சையாக திரும்ப அவன் பார்வையில் விழுந்தால் சரண்யா.


அவளையும் அவள் கையில் இருந்த பரிசுப் பொருளையும் பார்த்தவன் சிறுசிரிப்புடன் அவன் பார்வையை அந்த கோயிலை சுற்றி படரவிட்டபடி புன்னகையை அடக்கியவன் கண்மூடி கடவுள் முன் நின்றான்.


மௌனமான சிரிப்போடு அஸ்வின் முன் வந்து நின்றவள் அவன் முன் நின்றபடி திரும்பி அர்ஜுனை பார்த்து அஸ்வினை காட்டி கண் காட்டியவள்,



பின் அவள் பார்வையை அஸ்வினிடம் திருப்பி அவனை போலவே கண் மூடி சிரிப்புடன் நின்றாள்.


அவளின் மனமோ 'அவன் கண் திறந்ததும் அர்ஜுன் எனக்கு சிக்னல் தருவான். சிக்னல் கிடைத்ததும் டக்குனு விஷ் பண்ணிறனும், அப்புறம் ப்ரொபோஸ் தான்.



என்ன இன்னும் சிக்னலே வரல, ரொம்ப பெரிய வேண்டுதல் போல, இருக்கட்டும் இருக்கட்டும் நாம வெயிட் பண்ணுவோம்…" என்றவளின் எண்ணத்தில் முடிவில்,


"ஹேய், ஹேய்…" என்ற பதட்டமான குரல் கேட்க "ஹய் ஜாலி சிக்னல் கிடைச்சிருச்சு, ஆனா இது அர்ஜுன் வாய்ஸ் மட்டும் இல்லையே, இன்னொரு வாய்ஸ் யாரோடது…" என்று எண்ணியவள்,


'இப்ப அதுவ முக்கியம், நம்ம விஷ் பண்ணுவோம்' "ஹாப்பி பர்த்டே…" என்ற சொல்லோடு கண் திறந்தவள் தன் எதிரில் நின்றவனை அண்ணார்ந்து பார்த்து புரியாது விழித்தவள்,



திரும்பி தன் அருகில் நின்ற அர்ஜுனை பார்க்க,


அவன் அதிர்ந்த பார்வையோடு அந்த புதியவனை பார்த்து நிற்பது புரிய, மீண்டும் அந்த புதியவனை நோக்கி தன் பார்வையை திருப்ப அப்பொழுது தான் அவன் செய்து கொண்டிருந்த காரியம் அவள் கண்களில் பட்டது.


அதிர்ந்து அவனை பார்க்க அவள் கழுத்தில் நிதானமாக மூன்றாவது முடிச்சை போட்டவன்,


அவளின் கண்களை அழுத்தமாக பார்த்தபடி "லவ் யூ ரியா பேபி…" என்று கூறியபடி அவள் கையில் இருந்து அந்த பரிசு பொருளை வசீகர சிரிப்புடன் வாங்கி இருந்தான்.


அவனின் செயலில் அதிர்ந்து நின்ற கார்த்திக்கோ "நான் தானே தாலி கட்டணும்,



அதுதானடா அடுத்த சீனு, திடீர்னு வந்து நான் ஆன்டி ஹீரோவாக வேண்டிய சீன்ல இவன் யாருடா புதுசா…"


அதுவும் எல்லாரும், பூ குடுத்து தானே ப்ரொபோஸ் பண்ணுவாங்க, இவன் என்னோட தாலி கட்டி ப்ரொபோஸ் பண்றான்,


இப்ப நா என்ன பண்றது நா ஹீரோவா இல்ல வில்லனானு எனக்கே புரியலயே…" என்று குழப்பமாக தன் நண்பர்களிடம் வினவினான்.


"அது தாண்டா எங்களுக்கும் புரியல, உன் நிலைம இப்படி மோட்டு பட்லுல வர ஜான் மாதிரி ஆயிடுச்சே,


ஜான் போடுற பிளானை மோட்டு வந்து முடிச்சு வைக்கிற மாதிரி நீ போட்ட பிளான்ன, யாவனோ வந்து முடிச்சி வச்சிருக்கான்…" என்று ஒருவன் கூற


"டேய் என்னடா இது, இந்த வயசுல போய் கார்ட்டூன் பாக்குற இது அந்த 90 கிட்ஸ் பண்ற வேலை இல்ல…" என்று வினவ


"அது இல்லடா, 90 கிட்ஸ் இந்த வயசுலயும் கார்ட்டூன் பாப்பாங்க, அப்படி இப்படினு சொல்றாங்களே,



அப்படி அதுல பெருசா என்னதான் இருக்குதுனு, நானும் பாத்தேன் மச்சான் உண்மையில எல்லா கார்ட்டூனும் நல்லா இருக்குடா…" என்றவனின் பேச்சில் குறுக்கிட்ட கார்த்திக்,


"டேய் இங்க என்ன நடந்துட்டு இருக்கு, நீங்க என்னடா பேசிட்டு இருக்கீங்க…" என்றவனின் கோபமான அதட்டலில் இருவரும் அமைதியாகினர்.


அதுவரை அதிர்ச்சியில் இருந்த சரண்யாவோ அவனின் லவ் யூ ரியா பேபியில், "என்னது ரியாவா,


அய்யய்யோ, நா சரண்யா ஆள் மாத்தி தாலி கட்டிட்டீங்களா? வேற யாரேனு நினைச்சு என்னை, அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு, கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போயிட்டேன்…" என்றவள்


அஸ்வின் புறம் திரும்பி "டேய் அச்சு ஒன்னும் இல்லடா, ஆள் மாத்தி தாலி கட்டிட்டாருடா அவ்வளவுதான்…" என்று கூறியவள்,



அந்த புதியவன் முன் நின்ற இடத்தில் இருந்தே தலை சரித்து அஸ்வினை பார்த்தவள், 'மொத்த பிளான்னும் போச்சு…' என்று எண்ணியபடி,


அதே நிலையில் இருந்தபடி தன் பார்வையை மட்டும் அந்த புதியவனிடம் செலுத்தியவள், அவனின் வித்தியாசமான பார்வையில் நேராக எழுந்து அவன் முன் நின்றவள்,


"சரி சரி ஒரு சாரி சொல்லிட்டு, உங்க ரியா பேபி பார்க்க போங்க, தெரியாம ஏதாவது தப்பு நடந்தா அதை நா உடனே மன்னிச்சிடுவேன் சோ நீங்க தயங்காம சாரி சொல்லுங்க..." என்று,



அசால்டாக கூறியவள் குனிந்து தன் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்து 'இதை என்ன பண்றது…' என்று யோசிக்க,


அவளின் யோசனை தடை செய்வது போல் "ஏய் ஈட்டிங் பேபி, உன்னை தான்டா செல்லம்மா, ரியான்னு கூப்பிட்டேன்.



பாரு செல்லத்துக்கு எதுவுமே தெரியல…" என்றவனின் பேச்சை கேட்டு கண் கலங்க அவனை பார்த்து மலங்க விழித்தபடி நடப்பு புரியாமல் முழிக்க,


அவளின் அந்த பாவனையில் சிறு சிரிப்புடன் அவளின் தோளில் கை போட்டு தன்னருகே இழுத்தவன்,


"இங்க பாரு சாரு குட்டி உன் வினு குட்டி…" என்று ஏதோ பேசியபடி நடக்க தொடங்க அவனின் இழுப்பிற்கு அவனைப் பார்த்தவரே தானும் நடக்க தொடங்கி இருந்தாள் சரண்யா.


அவளின் செய்கையில் பல்லை கடித்த அர்ஜுனோ, அவளின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்தவன்,



"அடியேய் அரலூசு அஞ்சலி பாப்பா வா நீ, சாக்லேட் குடுத்து ஏமாத்தி கூட்டிட்டு போற குட்டி பாப்பாவை மாதிரி, யாருன்னே தெரியாம அவர் கூட லூசு மாதிரி போற…" என்று கடிய


அவனின் பேச்சுக்கு சம்பந்தமே இல்லாமல் தன் கழுத்தில் இருந்த தாலியேயே தூக்கி பார்த்தபடி இருந்தவள், "டேய் அச்சு குட்டி தாலிடா…" என்று கலக்கமாக கூற


அவளை கோபமாக பார்த்தவன் "ஆமா நா சின்னத்தம்பி பிரபு பாரு, தாலின்னா என்னனு தெரியாம இருக்கிறதுக்கு…" என்று அவளை கோபமாக கடிந்தவன்,



அவளை பார்க்க முகம் கலங்கி கண்களில் குளம் கட்டி நின்ற நீருடன் குழப்பமான முகத்துடன் அவள் நிற்க,


அதுவரை அவர்கள் இருவரையும் பார்த்தபடி இருந்தவன் அவளை பார்த்து "சாரு குட்டி…" என்று மீண்டும் அழைக்க,



அதுவரை கோபத்தை அடக்கியபடி நின்றிருந்த அஸ்வின் அவனின் பேச்சில் குறுக்கிட்டு "ஹலோ பாஸ்…" என்று அழைக்க,


அவனின் அழைப்பை ஏற்று திரும்பியவன் "விஷ்ணு, அதிரன் விஷ்ணு…" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,


'ரொம்ப முக்கியம்…' என்று எண்ணியவன் "ஒரு பொண்ணு விருப்பம் இல்லாம அவகளுக்கு தாலி கட்டுறது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா?



திடீர்னு ஒரு பொண்ணு முன்னாடி வந்து நின்னு தாலி கட்டுறதை ஹீரோயிசம்னு நினைச்சீங்களா…" என்று சீற


"பார்ரா, அஸ்வின் தம்பி கெஸ்ட் ரோல்னா வந்த வேலை மட்டும் தான் பார்க்கணும், எக்ஸ்ட்ரா டயலாக் எல்லாம் பேசக்கூடாது சரியா…" என்று கூறியபடி,


அர்ஜுனின் கைப்பிடியில் இருந்த சரண்யாவை ஆழ்ந்து பார்த்தவன், "ஈட்டிங் பேபி…" என்று மென்மையாக அழைக்க,



அவன் குரல் கேட்டு திடுக்கிட்டு கண் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழியில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு விழந்தது.


சட்டென்று திரும்பியவள், அதை துடைத்தபடி அர்ஜுனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.


'உங்ககிட்ட இருந்து, நான் இதை எதிர்பார்க்கலை விஷ்ணுனா…' என்ற அர்ஜுனின் மனக்குரல் கேட்டது போல்,


'நானும் தான்…' என்று ஒரு பெருமூச்சுடன் போகும் அவர்களை பார்த்து தனக்குள் சொல்லிக் கொண்டவன்,


தன் பார்வையை அங்கு நின்றிருந்த கார்த்திக்கின் மேல் உஷ்ணமாக திருப்பினான்.


விஷ்ணுவின் கோப பார்வையை உணர்ந்த கார்த்திக்கும் அவன் நண்பர்களும் அந்த இடத்தை விட்டு அவசரமாக அகல,



அவர்களிடம் இருந்து பார்வையை விலக்கியவன், அங்கு ஒரு ஓரமாக முகம் சிவந்து கண்ணீர் வடிய அமர்ந்து இருந்த பெண்ணின் மேல் தன் பார்வையை நிறுத்தி, அவளின் கண்ணீரை ஆழ்ந்து பார்த்தான்.


தொடரும்…


கருத்து திரி

படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்க நண்பர்களே😍😍😍

 
Last edited:

என்னுள் உன்னை கண்டேனடா

அத்தியாயம் - 5

IMG-20230216-WA0010.jpg

கோவிலில் இருந்து எதுவும் பேசாமல் வண்டியில் வந்து கொண்டிருக்கும் சரண்யாவை நினைத்து கவலையில் ஆழ்ந்தான் அர்ஜுன்,


கண்ணாடி வழியாக அவளை பார்க்க ஏதோ யோசித்தபடி கலங்கிப் போய் அமர்ந்திருந்தவளை பார்த்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தியவன், "சாரு குட்டி…" என்று கலங்கிய குரலில் அழைக்க,


அவனின் அழைப்பை ஏற்று அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் மீண்டும் கலங்க,


"அச்சு குட்டி எனக்கு பயமா, ஒரு மாதிரி இருக்குடா, எப்டி சொல்றது என்ன பண்ணறது எதுவுமே, தெரியல டா அழுக அழுகயா வருது…" என்று கூற,


"ஹேய் சாரு குட்டி, ஒன்னும் இல்லடா பயப்படாத, அதான் நான் இருக்கேன் இல்ல, நீ எதுக்கும் கவலைப் படாத நான் பாத்துக்குறேன் அழாதடா குட்டி…" என்று கலங்கிய குரலில் கூறியபடி அவள் கண்ணீரை துடைக்க பார்க்க,


அவனின் கூற்றில் கண்ணில் கண்ணீரோடு அவனை கோபமாக முறைத்தவள்,


"ஆமா நீ எப்படி பாத்துபன்னு நான் தான் பார்த்தேனே, எப்படி எப்படி நீ பாத்துப்பியா,


அவன் என் கழுத்துல தாலி கட்டும்போது பக்கத்திலேயே நின்னு ஆ னு வாய பொளந்துட்டு பார்த்தியே அந்த மாதிரி பாத்துப்பியா,


இரு இரு உன்ன முதல்ல மல்லிமா கிட்ட மாட்டி குடுக்கறேன்…" என்று அதே அழுகுரலில் கூறியவள், அவன் உணரும் முன்னே அலைபேசியில் மல்லிமாவை தொடர்பு கொண்டிருந்தாள்.


அவர் அழைப்பை ஏற்ற அடுந்த நொடி "மல்லிமா…" என்று அழுதபடி கத்தி அழைக்க,


"அடியேய் இது ரோடு டி சத்தத்தை குறை, போறவன் வரவன் எல்லாம் என்ன கேவலமா பாக்குறாங்களே உனக்கு இது தேவை தாண்டா,


இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய் அதுக்கு அப்புறம் பேச ஆரம்பிச்சிருக்கணும் அதை விட்டுட்டு இவளை பத்தி தெரிஞ்சும்,


மனசு கேக்கலன்னு சொல்லி நடுரோட்டில் இறங்கி சமாதானப்படுத்த பாத்தல்ல அதுக்கு அவளால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்டாடா,


ஐய்யோ என் மொத்த மானமும் இப்டி நடுரோட்டில போகுதே…" என்று புலம்ப,


அதற்கு நேர் மாறாக அவளின் அழுகை குரலில் பதறிய மல்லிமாவோ "என்னடா ஆச்சு ஏன் அழுற? ஏதாவது பிரச்சனையா? அர்ஜுன் எங்க? இப்ப நீ எங்க இருக்க?" என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க,


அவர் கேள்வியை கண்டு கொள்ளாமல் "மல்லிமா சாரு குட்டிக்கு கல்யாண ஆயிருச்சு, யாருனே தெரியல, அச்சு பார்த்தான் ஒண்ணுமே பண்ணல…" என்று அழுகுரலில் கூற,


"அடிப்பாவி பத்த வச்சிட்டியேடி பாக்கி, இன்னைக்கு நா செத்தேன்…" என்று நினைத்தபடி அவள் கையில் இருந்த அலைபேசியை பிடுங்க மல்லிமாவோ கோவமாக,


"டேய் அங்க என்னடா நடக்குது? சாரு என்ன சொல்ற? இப்ப எங்கடா இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்று கோப குரலில் வினவ,


"மா நாங்க வீட்டுக்கு தான் போறோம், நீங்க முதல்ல அங்க வாங்க, நாம பேசலாம்…" என்று கூறி அலைபேசியை அணைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவன்,


கோபமாக சரண்யாவை பார்த்து "வண்டில ஏறுடி…" என்று அதட்டியபடி கூற அவளும் எதுவும் பேசாமல் யோசனையோடு ஏறி அமர்ந்தவள் சிறிது நேரத்திற்கு பின்,


"டேய் அச்சு இந்த மாதிரி நடந்ததுக்கு மல்லிமா மாதிரி எனக்கும் கோவம் தானடா வரணும், ஆனா எனக்கு ஏன்டா ஒருமாதிரி பயமாவும் பதட்டமாவுமே மட்டும் இருக்கு கோபத்தையே காணல,


எனக்கு கோபம் தான வரணும் ஆங் எனக்கு கோபம் வருது கோபம் வந்திருச்சி…" என்றவள் சிறிது யோசனைக்கு பின் மீண்டும்


"ஆனாலும் எவ்வளவு தைரியம் இருந்தா அந்த டபரா மண்டையன் இந்த மாதிரி பண்ணியிருப்பான், அவனுக்கு இந்த சரண்யாவை பத்தி தெரியல,


அவனை நான் என்ன பண்றேன் பாரு அவன அப்பாட்ட சொல்லி போலீஸ்ல புடிச்சு கொடுக்கிறேன், இல்ல இல்ல நாம அப்பாட்ட சொல்லி போலீஸ்ல புடிச்சி குடுக்கலாம் சரியா…" என்க


அவளின் பேச்சை கேட்டபடி வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தியவன்,


"ம் ம் குடுக்கலாம் குடுக்கலாம் இப்ப வா முதல்ல இதை அப்பா கிட்ட சொல்லலாம்…" என்றபடி அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.


தந்தையை கண்ட அடுத்த நொடி "அப்பா…" என்று கத்தியபடி அவரை நோக்கி ஓடியவள் அவரை அணைத்தவாறு மல்லிமாவிடம் கூறியது போல்,


"சாரு குட்டிக்கு கல்யாண ஆயிருச்சு, யாருனே தெரியல, அச்சு பார்த்தான் ஒண்ணுமே பண்ணல…" என்று அழுகுரலில் கூற


அர்ஜுனோ "மாப்பிள்ளை இவர்தான் இவர் போட்டுருக்கு டிரஸ் என்னது அப்டினு ரஜினி ரிஜிஸ்டர் பண்ண மாதிரி,


அர்ஜுன் ஒன்னும் பண்ணல, அர்ஜுன் ஒன்னும் பண்ணலனு என் பெயரை எல்லார்கிட்டயும் ரிஜிஸ்டர் பண்றாளே பாவி, அவன் திடீர்னு தாலி கட்டுனதுக்கு நான் என்னடி பண்ண முடியும் குள்ள கத்திரிக்கா…" என பல்லை கடிக்க


சரண்யா கூறியதை கேட்டு அன்புவோ அதிர்ச்சியாக 'என்னடா மா சொல்ற…" என்று கூறியபடி அவளை பார்க்க "ம் ஆமா இங்க பாருப்பா தாலி…" என்று கூறியபடி தாலியை அவர் முன் நீட்டி காட்டினாள்.


அவள் கழுத்தில் தாலியை பார்த்து அதிர்ச்சியுடன் அங்கு நின்று கொண்டிருந்த அர்ஜூனை பார்க்க, அவன் வாயசைவில் சத்தமில்லாமல் "விஷ்ணுணா…" என்று கூற


விஷ்ணுவின் பெயரை கேட்டவரோ அதிர்ச்சியோடு குழப்பமாக அர்ஜுனையும் சரண்யாவையும் மாறி மாறி பார்க்க,


அதை கவனிக்காத சரண்யாவோ "எவ்வளவு திமிரு இருந்தா என் விருப்பம் இல்லாம அவன் எனக்கு திருட்டு தாலி கட்டுவான், என்னை என்னனு நினைச்சான் அவன்,


இந்த மூவில ஸ்டோரில எல்லாம் வர மாதிரி இவன் கட்டாய தாலி கட்டினா அதை பாத்துட்டு கணவனே கண்கண்ட தெய்வம்னு இருக்குற பொண்ணுனு நெனச்சானா,


இல்லை வேற வழியே இல்லனு கலங்கி போய் நிக்கிற பொண்ணுனு நெனச்சானா என்னை,


அவன் நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல எந்த காலத்தில் இருக்கான் இவன்?


இன்னும் பொண்ணுங்க கட்டாய தள்ளி கட்டுனா அடங்கி போவாங்க, அதை ஏத்துட்டு வாழ்வாங்கனு தான் நினைச்சுட்டு இருக்காங்களா இவங்க எல்லாம்…" என்று கண்ணீர் குரலில் தொடங்கி கோப குரலில் முடித்தவள்,


குனிந்து தன் கழுத்தில் கிடந்த தாலியை நோக்கி ஒரு நிமிடம் யோசித்தவள் அதை கழட்டி எறிய போக,


அதை பார்த்த அன்புவோ "சரண்…" என்று அழுத்தமாக அழைத்து அவளின் கையில் இருந்த தாலியை விடுவித்து விட்டு "அவசரப்படாத கொஞ்சம் பொறுமையா இரு எல்லாத்தையும் அப்பா பாத்துக்கிறேன்…" என்றார்.


தந்தையை நோக்கி "அப்பா அவனை சும்மா விட கூடாது போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம், அவனை புடிச்சு ஜெயில்ல போடலாம்,


உங்களுக்கு தெரிஞ்ச போலீஸ வச்சி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லாம் ஆனா அப்பா அவனைப் பத்தி நமக்கு எதுவுமே தெரியாதே,


பேரு, ஊரு ஆளு, அட்ரஸ் எதுவுமே தெரியாதே, அப்புறம் எப்படி கம்ப்ளைன்ட் குடுக்க ஆனா அவனை எதாவது செஞ்சே ஆகணும்…" என்றவள் கேள்வியாக தந்தை மற்றும் அர்ஜுன் முகத்தையும் பார்க்க,


அன்புவோ எதையும் உணராமல் எதையே தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருந்தார்.


அவரைப் பார்த்த அர்ஜுன் கவலையுடன் அவர் அருகே அமர்ந்து அவரை ஆறுதலாக தோளோடு அணைத்து பிடித்தான்.


அவர்களின் நிலையை உணராத சரண்யாவோ, "இப்ப அவன் யாருன்னு எப்படி கண்டுபிடிக்கிறது…" என்ற தீவிர ஆலோசனையில் இருந்தாள்.


யோசித்தபடியே வாசலை பார்த்தவள் அங்கு வந்து கொண்டிருந்தவனை பார்த்த பதறிப்போய் " இவன் தான், இவன் தான்,


அச்சு அப்பா இவன் தான் புடிங்க புடிங்க புடிச்சு போலீஸ்க்கு கொடுக்கலாம்…" என்று கூவியபடி தந்தை பின் சென்று நின்றாள்.


அவளின் குரலை கேட்டுபடி உள்ளே வந்தவன் "போலீஸ் நம்பர் வேணுமா சாரு குட்டி, நா வேணா கமிஷ்னர் நம்பர் தரட்டுமா…" என்று வினவியபடி அங்கிருந்து சோபாவில் அமர


அவனின் கேள்வியில் கண்கலங்க பயந்து போய் திரு திருவென விழித்தவள், திரும்பி அர்ஜுனை பார்க்க அவனோ கோபமாக விஷ்ணுவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனின் கோப பார்வை பார்த்தவள் தன் பயத்தை அடக்கியபடி திரும்பி தானும் அதே போல் கோபமாக வந்தவனை பார்த்தாள்.


அர்ஜுனின் கோப பார்வையை சிரிப்புடன் எதிர்கொண்ட விஷ்ணுவோ தன் பார்வையை அன்புவின் புறம் திருப்ப அவரோ அவனை தான் நம்பிக்கை இழந்த பார்வை பார்த்தபடி இருந்தார்.


அவரின் பார்வையில் ஒரு நிமிடம் வருந்தி தலைகுனிந்தவன் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டபடி மீண்டும் அவரை நிமிர்ந்து பார்த்தான்.


"அது வந்து…" என்று ஏதோ பேச தொடங்கியவனின் முன்பு கைநீட்டி அவன் பேச்சை நிறுத்தியவர், "உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கவில்லை விஷ்ணு.


உன் மேல் நான் நிறைய நம்பிக்கை வைச்சிருந்தேன். ஆனா நீ சே, இனிமே உன் கிட்ட பேசுறதுக்கு எதுவும் இல்லை முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போ போடா…" என்று கோபத்தில் கர்ஜித்தார்.


அவரின் கோபத்தை அதிர்ச்சியாக பார்த்த சரண்யாவோ, "என் அப்பாவுக்கு கோபபட கூட தெரியுமா,


ஆமா ஒரு நிமிஷம் என்ன அப்பா இவரை நல்ல தெரிஞ்ச மாதிரி பேசுறாரு இவரை அப்பாக்கு முதல்லயே தெரியுமா…" என்று எண்ணமிட்டபடி குழப்பமாக அர்ஜுன் புறம் திரும்ப,


அவன் தன்னை போல் குழம்பாமல் ஒரு பரிச்சயமான பார்வையோடு அவர்களை பார்த்து நிற்பது புரிய குழப்பத்தோடு மூவரையும் மாறி மாறி பார்த்தபடி நின்றாள்.


அவரின் கோப குரலை சிறிதும் கண்டு கொள்ளாதவன், "நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனால் நான் எப்படி தனியா போக முடியும்.


என் வைஃப் இப்போ இங்க தான இருக்காங்க, அவங்களையும் கூட்டிட்டு தான நா போக முடியும்…" என்று கூறியவனின் பார்வை சரண்யாவின் மேல் படிய


அவனின் பார்வையில் அதிர்ந்தவள் பயத்துடன் தந்தையை பார்த்தாள் அவரோ "அவ என் பொண்ணு, அவ எங்கேயும் வர மாட்டா,


எந்த தைரியத்துல நீ அவள கூப்பிடுற, தாலி கட்டினா நீ அவளுக்கு புருஷன் ஆயிருவியா, உன் கூட எல்லாம் என் பொண்ணை என்னால் அனுப்ப முடியாது மொத வெளிய போடா…" என்று சீற


"பாருடா மாமாக்கு கோபத்தை, அதெல்லாம், அப்படி எல்லாம், என்னால விட்டுட்டு போக முடியாது, என் மனைவி என் உரிமை…" என்றவனின் பார்வை மீண்டும் அவளில் படிய,


அவளின் பயந்த தோற்றத்தில் "சரி ஓகே, அப்ப நானும் இங்கயே இருக்கிறேன், ஏன்னா சீதை இருக்குகிற இடம் தானே ராமனுக்கு அயோத்தி…" என்றபடி சோபாவில் இருந்து எழுந்தவன்,


சரண்யாவின் புறம் வந்து "ஓகே நம்ம ரூம் எதுன்னு சொல்லு, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்…" என்றான்.


திகைத்து நின்றவளை பார்த்தபடி இருந்தவனை, ஒரு கை இழுத்து தன் புறம் திருப்ப அவன் என்ன என்று உணரும்முன் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார் அர்ஜுனின் தந்தை கதிர்வேல்.


தன்னை யாரோ அறைந்ததை உணர்ந்து கோபமாக நிமிர்ந்தவன் தன்னை மீண்டும் அடிக்க முயன்றவரின் கையை தடுத்து பிடித்தவாறு தன் முன் நின்றவரை பார்த்தான்.


பார்த்ததும் மலர்ந்து சிரித்தவாறு "அப்பா…" என்று அழைத்தபடி அவரை இறுக அணைத்திருந்தான்.


"ஏது அப்பாவா…" என்று மற்றவர்கள் திகைத்து நிற்க கதிர்வேலோ 'என்னது அப்பாவா எனக்கு தெரியாம எப்படா எனக்கு இவ்வளவு பெரிய பையன் பொறந்தான்…' என்று நினைத்தபடி அதிர்ந்து நின்றார்.


தொடரும்…


கருத்து திரி






 
என்னுள் உன்னை கண்டேனடா

அத்தியாயம் - 6

received_758146695562546.jpeg

விஷ்ணுவின் அப்பா என்று அழைப்பை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் நிற்க… கதிர்வேலோ தன்னை அப்பா என்று அழைத்தபடி அணைத்திருந்தவனை சட்டென்று தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினார்,


மல்லிகாவை திரும்பி பார்த்தவர்.. அவரின் கோப பார்வையில், "சத்தியமா சொல்றேன் மல்லி இந்த பையன் யாருன்னோ எனக்கு தெரியாது" என்றவர்,



"டேய் யாருடா நீ, என்ன அப்பான்னு கூப்பிடுற…" என்று கேட்டபடி அவனை பார்க்க,


"என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க, அர்ஜுனுக்கு அப்பனா எனக்கும் அப்பா தானபா நீங்க" என்க…


"அப்போ எதுக்கு டா பல நாள் பாக்காத அப்பாவ திடீர்னு பார்த்த மாதிரி ஓடி வந்து கட்டி புடிச்ச"... என்று கோபமாக கேட்க…


"நீங்க ரொம்ப கோவமா வந்தீங்க இல்ல, அதான் உங்க கோவத்தை குறைக்கிறதுக்கு மருத்துவ முத்தம் மாதிரி மருத்துவ கட்டிப்பிடி… அதான் நம்ம கமல் சார் சொன்னாரே, அந்த கட்டிப்பிடி வைத்தியம்.


அது மட்டும் இல்லாம உண்மையாவே நீங்க எனக்கு பல நாள் பார்க்காத அப்பாதான், "அர்ஜுன் உங்களை பத்தியும்… மல்லிமா பத்தியும் சொல்லும் போதெல்லாம் உங்கள பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கும்.ஆனா இப்பதான் அதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு"... என்றவனின் பேச்சை கேட்ட மல்லி மற்றும் கதிரின் பார்வை இப்போது கோபமாக அர்ஜுன் புறம் திரும்பியது.


"அது எப்படிடா யாருக்கு என்ன பிரச்சினை வந்தாலும் என்னை மட்டும் உள்ள இழுத்துவிட்டு பிரச்சனையோட போக்கஸை மாத்துறீங்க"... என்று மனதோடு புலம்பியவன்…


"நான் இல்லம்மா.. நான் இல்ல… நா இல்லவே இல்லை"...


சத்தியமா இப்போ நடக்கிற விஷயத்துக்கும்… எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… என்றவன்



"ஆனா எனக்கு ஒரு டவுட், இப்ப அவர் அப்பான்னு கூப்பிட்டது பிரச்சனையா இல்லை, திருட்டு தாலி கட்டுனது பிரச்சினையா?... என அனைவரின் கவனத்தையும் திசை திருப்பினான்…


"எந்த பஞ்சாயத்துக்கு வந்துட்டு… எந்த பஞ்சாயத்த நடத்திட்டு இருக்காரு பாரு??, இவரெல்லாம் ஒரு நாட்டாமைனு தீர்ப்பு சொல்ல வேற வந்துட்டாரு"... என்று கோபமாக முணுமுணுத்தான்.


அர்ஜுனை கோபமாக முறைத்த கதிரோ சரண்யாவை பார்த்து "இவரை உனக்கு தெரியாதுன்னு மல்லி சொன்னா, அது உன்மையா டா".. என்று கேட்க,



"ஆமாப்பா… இவரு யாருன்னு எனக்கு தெரியவே தெரியாது"...


"சரி என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு காலைல எதுக்கு நீங்க கோயிலுக்கு போனிங்க"... என்றவர் அர்ஜுனை சந்தேகமாக பார்த்துக் கேட்க,


"ஒருவேளை அர்ஜுன் தான் உன்ன கூட்டிட்டு போனானோ"... என்று அழுத்தமாக வினவ,


"இல்லை.. இல்லை அச்சு இல்லப்பா…, நான்தான் அவனை ப்ரப்போஸ் பண்றதுக்காக கோவிலுக்கு கூட்டிட்டு போனேன்"... என உண்மையை போட்டு உடைத்திட..




அவளின் பேச்சை கேட்ட அர்ஜுனோ "கெடுத்தாலே காரியத்தை…" என்று எண்ணியபடி, கதிரை பார்க்க.. அவரோ கோபத்தில் அர்ஜூனை தான் முறைத்துக் கொண்டிருந்தார்…


அவசர அவசரமாக அவளின் பேச்சுக்கு இடையே இடையிட்டவன் "எக்ஸாம் ப்ரோபோசல்ப்பா, நல்லபடியா எக்ஸாம் எழுதணும்னு சொல்லி, கடவுள் கிட்ட வேண்டுறத தான் அவ அப்படி சொல்றா"... என்று கூறியபடி விஷ்ணுவின் புறம் பார்வையை திருப்பியவன்,


அவன் குறும்பு கண்களோடு இவனை பார்த்து விட்டு அவன் அருகே இருந்த பரிசுப் பொருளின் மேல் பார்வையை செலுத்த… "'ஆத்தி… இந்த மனுஷன் வேற இப்படி குறுகுறுன்னு பார்க்கிறாரே??, ஒருவேளை போட்டு கொடுத்துருவாரோ??"....


"ஷ்ஷப்பா… என்னால முடியல…, இவங்க மத்தியில உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு மட்டும் எனக்கு நல்லா தெரிஞ்சிருச்சு, இதுக்கெல்லாம் காரணம் இந்த குள்ள கத்திரிக்கா தான்"...


"பச்ச பிள்ளை மாதிரி மூஞ்ச வச்சிட்டு பண்றது எல்லாம் கேடி வேலை, அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா…, கண்டிப்பா இருக்கும்"...


ஆனா, அதுல இவ இருக்கிற பக்கம் கூட திரும்பி பார்த்திற கூடாதுடா அர்ஜுனு…' என்று மனதினுள் எண்ணியவாறு வெளியே பே முழி முழித்துக் கொண்டு நின்றான் அர்ஜுன்.


அவனையும் சரண்யாவையும் அன்புவையும் மாறி மாறி பார்த்த கதிர்வேலோ "நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் உள்ள போங்க நாங்க கொஞ்சம் தனியா பேசணும்" என்று கூறி அவர்களை உள்ளே அனுப்பி வைக்க,


செல்லும் முன்பாக அர்ஜுன் விஷ்ணுவை ஒரு பார்வை பார்க்க அவன் கூற வருவதை புரிந்து கொண்டவன்,


கண்மூடி திறந்து அவனுக்கு பதிலளிக்க… அவனின் அந்த பதிலில் திருப்தியானவன் சரண்யாவை பின் தொடர்ந்து அறைக்குள் சென்றான்.. .


அவர்களின் இந்த பார்வை பரிமாற்றத்தை ஒரு ஆழ்ந்த பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தார் கதிர் வேல்.


அறைக்குள் வந்த சரண்யாவோ கோபமாக அர்ஜுனிடம் திரும்பியவள்… "டேய் அறைலூசு அவன் யாருன்னு உனக்கு முன்னே தெரியுமாடா??"...,


"நம்ம ரெண்டும் பேரும் எப்பவும் சேர்ந்துதானேடா சுத்துறோம், எனக்கு தெரியாம உனக்கு மட்டும் எப்டிடா அவனை தெரியும்"... என்று கோபமாக கேள்வி எழுப்பினாள்.


"ஆமா உனக்கு தெரியாம நான் சந்திர மண்டலத்தில போய் பாத்து பேசிட்டு இருந்தேன், யாருடி இவ பக்கி அவரும் நம்ம ஸ்கூல் தான் அப்படி தான் எனக்கு அவரை தெரியும்…


அவன் கூறியதை கேட்டவள், "ஓ!" என்ற சொல்லோடு அமைதியாக எதையோ யோசித்தவள், சிறிது நேரம் அமைதிக்கு பின்,


"எவ்வளவு யோசிச்சும் எனக்கு நியாபகமே வரலைடா"... என்றவாறு குனிந்து தன் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்தவள்,



"இன்னையோட இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சுரும்"... என்று பெருமூச்சு விட்டவளிடம்,


"ஏய் சாரு ஒரு விஷயம் கவனிச்சியா… இன்னைக்கு கோவில்ல அந்த அஸ்வின் உனக்கு சப்போர்ட் பண்ணி எப்டி பேசுனான் பாத்தியா"... என்க,


"ஆமா இப்ப அது எனக்கு ரொம்ப முக்கியம் பாரு… நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற"... என்று சலிக்க,


"ஒன்னும் இல்லடி, நீ கவலைப்படாதே… அதான் அப்பா பேசுறாரு இல்லை… அவரு எல்லாத்தையும் பாத்துப்பாரு"...


"ம் ஆனா ஒன்னுடா, இந்த படத்துல கதைல எல்லாம் இப்படி அதிரடியா ஹீரோ தாலி கட்டுறதே பார்க்கும் போதும் சரி… படிக்கும் போதும் சரி… நமக்கு எவ்வளவு குஜாலா இருக்குது… ஆனா நிஜத்தில் நடக்கும் போது தான் டா புரியுது… அந்த பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும்னு"... என்று பெருமூச்சு விட்டவள்,


"ஆமா நான் இப்ப எதுக்கு இப்படி புலம்பிட்டு இருக்கேன். நான் என்ன தப்பு பண்ணேன் கஷ்டப்படுறதுக்கு அவன் தான் கஷ்டப்படணும், மலமாடு, வளர்ந்து கெட்டவன்,


"இந்த சாரு எப்பவும் எதுக்காகவும்… யாருக்காகவும் கவலைப்பட மாட்டா சந்தோஷமா எப்பவும் போல தான் இருப்பா"... என்றவளுக்கு அப்போதுதான் அவளது பசி தெரிய,


"டேய் அஞ்சு குட்டி, சாரு குட்டிக்கு பசிக்குதுடா, நீ போய் எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றீயா?" என்று பாவமாக கேட்க,


"ம் சரி".. என்றபடி எழுந்தவன் "இரு… இரு… ஆமா நான் எதுக்கு இங்கே எதுக்கு எடுத்துட்டு வரணும்… நீயே போய் சாப்பிட வேண்டியது தானே"... என்று கேட்க


"போய் சாப்பிடலாம் தான்… ஆனா இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுலயும் கரெக்ட் டைம்க்கு… நான் சோறு சாப்பிட போனா… என்னை பத்தி எல்லாரும் கேவலமா நினைக்க மாட்டாங்க, அதான் உன்னை எடுத்துட்டு வர சொன்னேன்.


"ஏன் நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வந்த மட்டும் என்னை கேவலமா, நினைக்க மாட்டாங்களா".... என்றவனின் கேள்விக்கு,


"டேய் மாங்கா மடையா!... நீ போய் எடுத்துட்டு வந்தா, ஏதோ நான் சாப்பிடுறதுக்கு அடம்பிடிக்கிற மாதிரியும், நீ என்னை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிற மாதிரியும் தான் எல்லாரும் நினைப்பாங்க"...


"இவ்வளவு கலவரத்திலையும் நாம சாப்பிட்டா… நம்மளை யாரும் சோத்து மூட்டைன்னு தப்பா நினைச்சிற மாட்டாங்க… அதுனால நீயே போ… போய் சாப்பாடு எடுத்துட்டு வா… நம்ம சாப்பிடுவோம், எனக்கு பசிக்குது…" என புருவத்தை ஏற்றி இறக்கியவாறே, "எப்படி‌ என் ஐடியா?".. என புன்னகையுடன் சொல்லியவளை காரித்துப்பாத குறையாக பார்த்தான்...


"அசிங்கமாவே இல்லை" என்று கேட்க அதற்கு அசடு வழிய ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்தவள், "பசி வந்தா ருசி மட்டும் இல்லடா, மானம் மரியாதை கூட தெரியாது…" என்றவளை பார்த்து,


தலையில் அடித்தபடி அந்த அறையை விட்டு வெளியேற, அவனின் மனசாட்சியோ, "சார்வால் ரொம்ப யோக்கியமோ" என்று கேட்க அதற்கு,


"இல்லை தான், ஆனா அது அவளுக்கு தெரியாம பார்த்துக்கோ…. ஆமா நீ என் மனசாட்சி தானே.. அவளுக்கு சப்போர்ட் பண்ற.., மூடிட்டு இரு கொஞ்ச நேரம்"... என்று மனசாட்சியோடு மல்லு கட்டியபடி, அவள் கேட்ட உணவை எடுத்துக்கொண்டு சரண்யாவின் அறையில் நுழைந்தான்.


இருவரும் சேர்ந்து உண்டு முடித்து ஒரு மணி நேரத்திற்கு பினபு தான், அந்த அறையில் இருந்து அவர்களை வெளியே அழைத்தார் கதிர்வேல்.


" ரெண்டு பேரும் வாங்க, வந்து இங்க உக்காருங்க…" என்று விஷ்ணு அமர்ந்திருந்த சோபாவை காட்ட அவனை முறைத்தபடியே வந்தவள் அவனுக்கு நேர் எதிர் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள்.


அவளின் செய்கையை கண்டு கொள்ளாத கதிர்வேலோ, "இங்க பாருங்க பசங்களா நடந்தது நடந்து போச்சு… இனி அத பத்தி பேசி பிரயோஜனம் இல்லை, இனி நடக்க வேண்டியதை பாக்கலாம்.


இந்த கல்யாணத்தை அன்பு ஏத்துக்கிட்டாரு…" என்று அங்கு இறுக்கமாக இருந்த, அன்புவை காட்டி கூறியவர்,


"நடந்த கல்யாணம் நடந்தது தான்…" என்க…


நன்றாக சாப்பிட்டு முடித்ததால் அவளின் மூளை கூட அதிகமாக வேலை செய்தது… "என்னப்பா சொல்றீங்க??... இது எப்டிப்பா கல்யாணமாகும்??" என்று அதிர்ச்சியோடு விஷ்ணுவை முறைத்துக் கொண்டே சரண்யா வினவ,


"இங்க பாரு சாரு குட்டி… நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்றோம். பெரியவங்க எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டோம்.


உன் மனசு இந்த கல்யாணத்தை ஏத்துக்கிறதுக்கு உனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படும், அதுவும் இல்லாம உன் ஸ்டடிஸ் இன்னும் கம்ப்ளீட் ஆகவில்லை,



சோ அதுவரைக்கும் உனக்கு டைம் இருக்கு… நீ இந்த கல்யாணத்தை ஏத்துக்கிற வரைக்கும் விஷ்ணுவும் இங்க தான் இருக்க போறாரு…" என அவளின் தலையில் குண்டை தூக்கிப் போட பேரதிர்ச்சியானாள் சரண்யா…


"இதுக்கு என்னால ஒத்துக்க முடியாது… என்னப்பா நீங்க, திடீர்னு இப்படி பேசுறீங்க, இவன் எதுக்கு நம்ம வீட்ல இருக்கணும் இது ஒரு கல்யாணம் இதை நான் ஏத்துக்க வேற செய்யணுமா?" என்று கோபமாக வினவியவள் "பாருடா அர்ஜுன்" என தன் தோழனை உதவிக்கு கூப்பிட்டவாறே அர்ஜுனை பார்க்க,


"அய்யய்யோ… இவ நம்மகிட்டயும் ஹெவி பெர்பார்மன்ஸ் எதிர்பார்க்கிற போலையே, இப்ப நா என்ன பண்ணுவேன்"... என்று நினைத்தவன்,


சரண்யாவின் கோப பார்வையில் "அதானே என்னப்பா இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை" என்று ஏதோ நியாய தேவதையே… தான் தான் என்பது போல் கூறியவன்,


" நீங்க எடுத்திருக்கிற இந்த முடிவை எங்களால கண்டிப்பா ஒத்துக்கவே முடியாது, அப்படித்தானே சாரு குட்டி…" என்றபடி சரண்யாவை பார்க்க,


அவளோ தன் குட்டி கண்களால் இவனை தான் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


'இவன் பேசுறத பாக்குறதுக்கு, நம்ம தப்பு பண்ணிட்டு சமாளிக்க பொய் சொல்லும் போது, நமக்கு ஒத்துஊதி சிங்சாங் அடிக்கிற மாதிரியே இருக்குதே,


உண்மையிலேயே நமக்கு சப்போர்ட் தான் பண்றானா, இல்ல இது"... என்று எண்ணமிட்டபடி, வாசலை பார்த்தவள் அங்கு வந்து கொண்டிருந்தவரை பார்த்து விழி விரித்தவள், "டேய் அச்சு என் கிரெஷ் டா"... என்க,


அதைக் கேட்ட விஷ்ணுவோ 'கோவில்ல சும்மா விட்டது தப்பா போச்சு ,இவனைய்ய்ய்…' என பல்லைக் கடித்தபடி.. உள்ளே வந்தவரை திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியில் "அப்பா!" என்று அழைக்க,


அவனின் அழைப்பை கேட்ட கதிர்வேலோ "என்னது இன்னொரு அப்பாவா"... என்றபடி திகைத்து விழித்தார்.


தொடரும்..



கருத்து திரி

https://pmtamilnovels.com/index.php?threads/என்னுள்-உன்னை-கண்டேனடா-கருத்து-திரி.18/post-3020
 
Status
Not open for further replies.
Top