வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் - 7

eiR2BG754252.jpg

அப்பா என்று அதிர்ந்து அழைத்த விஷ்ணுவை முறைத்து கொண்டே, கோட் ஷூட் சகிதம் உள்ளே வந்தவர் நேராக சென்று நின்றது என்னவோ சரண்யா முன்புதான்.


தன் முன் நிற்பவரிடம் இருந்து பார்வையை விஷ்ணுவின் புறம் செலுத்தி மீண்டும் அவரை பார்த்தவள் "ஹாண்ட்சம் இவரு உங்க பையனா?" என்று பாவமாக கேட்க


"அன் ஃபார்சுனட்லி ஆமா மா" என்று அவளை விட பாவமாக பதில் அளித்தார்.


'இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்?' என்ற வரிகள் தான் அந்த நிமிடம் சரண்யா மனதில் ஓடியது.


"சாரிடா, என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல, இப்ப உன் மனசு எவ்வளவு கஷ்டபடும்னு எனக்கு புரியுதுமா" என்று சொல்ல,


'ஆமாவா?' என்பது போல் அவரையே பார்க்க "அவன் ஒரு பொண்ண லவ் பண்றன்னு எனக்கு தெரியும். ஆனா அது நீ தானு…" என்றவரின் பேச்சில் குறுக்கிட்ட விஷ்ணுவோ "அது நீ தானும் அவருக்கு தெரியும்" என்றவனை முறைத்து பார்த்தவர்,


"ஆமா மா அது நீ தானும் எனக்கு தெரியும் தான். ஆனால் அவன் இப்டி பண்ணுவான்னு உண்மையாவே எனக்கு தெரியாது மா" என்று மெய் வருத்தத்துடன் கூறி முடிக்க,


"என்னபா? நீங்க தானே இந்த ஐடியா குடுத்திங்க" என்று சொன்னானே பார்க்கலாம் விஷ்ணு,


அம்மானிதரே ஆடிப் போய் விட்டார். 'எப்டி கோத்து விடுது பாரு பக்கி பயபுள்ள, அப்டியே அவங்க அம்மா புத்தி' என்று மனதுக்குள் நொந்தபடி அவனை முறைத்தார்.


விஷ்ணுவை முறைத்துக் கொண்டிருந்தவரின் கவனத்தை தன் புறம் திருப்ப வேண்டி அவரை "ஹாண்ட்சம்" என்று அழைத்த சரண்யாவின் மனமோ,


'இந்த காமெடி கல்யாணத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு கிடைச்சிருக்க கடைசி வாய்ப்பு இவர்தான். இவரை வச்சு தான் நம்ம எஸ்கேப் ஆக பாக்கணும்' என்று நினைத்தது.


அவளின் நினைப்பை பற்றி தெரியாத அவரும் அவளின் தலையில் கை வைத்து பரிவாக வருடியவர், "நீ எதைப் பத்தியும் கவலைப்படாதடா, நான் பாத்துக்குறேன்" என்று பரிவாக கூற,


அவரின் பேச்சைக் கேட்டவளின் பார்வையோ அங்க நின்று கொண்டிருந்த கதிர்வேலின் மீது படிந்தது.


'இதையேதான் இவரும் சொன்னாரு, நம்மள ரூமுக்குள்ள அனுப்புன கேப்ல அப்படி என்ன நடந்திருக்கும் இங்க' என்று எங்கோ தொடங்கி தன் யோசனையை எங்கோ கொண்டு சென்றாள்.


அவளின் அந்த அமைதியான பார்வையை பார்த்த விஷ்ணுவின் தந்தையோ, அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு "சரண் மா எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீ கொண்டு வரியா?" என்று கேட்க,


அவருக்கு தலையாட்டி சம்மதம் கூறியவள் பக்கத்தில் நின்ற அர்ஜுனையும் இழுத்துக் கொண்டு கிச்சனை நோக்கி சென்றாள்.


போகும் சரண்யாவை பரிவாக பார்த்தவர் "என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்புடா" என்று மகனை கடிந்துக் கொள்ள,



அவரை அழுத்தமாக பார்த்தவன் "ஆமா தப்பு தான். அது தான் எனக்கே தெரியுமே! அதை சொல்லவா நீங்க வண்டி கட்டிட்டு அவசரமா கிளம்பி வந்தீங்க?" என்று அலட்சியமாக வினவினான்.


"டேய் அகராதி பிடிச்சவனே, தப்பு பண்றது கூட பெரிய தப்பு இல்ல டா . ஆனா கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம இப்ப நீ பேசுற பாத்தியா…" என்றவர் சொல்ல வருவது புரிந்து தடுத்தவன்,


"அப்பா ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க, நான் பண்ணுன தப்ப தப்புன்னு தெரிஞ்சு தான் நான் பண்ணேன். சோ அத சொல்லி உங்க டைம்மோட சேர்த்து என் டைம்மையும் வேஸ்ட் பண்ணாதீங்க….


அப்புறம் இனி நா இங்க தான் ஸ்டே பண்ண போறேன் நாங்க எல்லாம் கலந்து பேசி ஒரு மனதா முடிவெடுத்து இருக்கோம்" என்று இந்த முடிவு இனி மாறாது எனும்படி அழுத்தமாக கூறினான்.


அவன் பேச்சில் எரிச்சல் ஆனவர் "ஒருமனதா வா?" என்று கேட்டவாறு அப்போது அங்கு வந்த சரண்யா மீது பார்வை படிய, அவளோ இல்லை என்னும் விதமாக தலையாட்டினாள்.


"நா உனக்கு இருக்கேன் டா இதுவரை நடந்தது போட்டும் இனி இவனால உனக்கு ஒரு பிரச்சனையும் வராம நான் பாத்துக்குறேன் டா இவன் உன்ன எதாவது கஷ்டபடுத்துனான்னா என்கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன் நீ எதை பத்தியும் பயப்படாம தைரியமா இரு என்று அவளுக்கு ஆறுதல் கூறினார் இதனால் வரும் பின் விளைவுகளை பற்றி அறியாதவர்.


அதுவரை பேசியவர்கள் அனைவரும் விஷ்ணுவின் சார்பாகவே பேச, இவர் மட்டும் தனக்கு சார்பாக பேசுவதை பார்த்து மகிழ்ந்தவள் "லவ் யூ ஹேண்ட்ஸம்" என்று கூறியிருந்தாள்.


"என்னது?" என்றும் "ஏதே லவ்வா?" என்றும் இரு வேறு குரல்கள் இடையிட, புரியாமல் பார்த்தவள் "ஏன் இதுல என்ன இருக்கு லவ்னா அன்பு தானே! முன்ன பின்ன தெரியாதவங்க பேஸ்புக்ல போடுற போஸ்ட் புடிச்சாலே நான் லவ் தான் கொடுப்பேன்.


இப்ப ஹேண்ட்சம் மட்டும் தான் எனக்கு சப்போர்ட் பண்றாரு அதான் லவ்யூ சொன்னேன்" என்றவளை எந்த கேட்டரியில் சேர்க்க என்றே தெரியவில்லை விஷ்ணு வுக்கும், அர்ஜூனுக்கும்.


"பேஸ்புக்ல புடிச்ச போஸ்ட் னா லவ் தான் குடுப்பீங்களோ, ஏன் இந்த லைக்கு, கேரு இதெல்லாம் குடுக்க மாட்டீங்களோ?" என்று எரிச்சலாக வினவினான் விஷ்ணு.


என்னை தவிர எல்லாருக்கும் லவ் யூ சொல்றா என்று அவன் மனமோ அவள் அன்பிற்காக ஏங்கி தான் போனது.



மகனின் கோபத்தை பார்த்தவர், "உங்க அம்மா இப்போ இங்க தான் வந்துட்டு இருக்கா, நீ இப்ப சொன்னது எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லு பார்ப்போம்" என்று அவனை போலவே அலட்சியமாக கூறியவர்,


அங்க நின்று கொண்டிருந்த கதிர்வேலிடமும் அன்பரசுவிடமும் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்.


"மன்னிச்சிடுங்க… இவன் பண்ண விஷயத்துக்கு மன்னிப்பு தவிர வேற என்ன பேசுறதுனு எனக்கு தெரியல, என் பெயர் தேவராஜ். என் மனைவி கமலா எனக்கு ரெண்டு பசங்க தான்.


பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன் இப்ப என் பிசினஸ்ச எல்லாம் இவன் தான் டேக் ஓவர் பண்ணிட்டு இருக்கான். நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே வி எஸ் கன்ஸ்ட்ரக்சன்" என்று கூற


"ஆமா ஆமா ஓ! நீங்க தான் அந்த தேவா வா? உங்கள பத்தி நாங்க நிறைய கேள்விப்பட்டிருக்கோம்" என்று ஆரம்பித்த அவர்களின் பேச்சு விஷ்ணுவின் தாய் கமலா வரும் வரை தொடர்ந்தது.


வேக நடையுடன் வீட்டிற்குள் நுழைந்த கமலாவோ வந்த வேகத்தில் விஷ்ணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார். அவருடன் வந்த அவரின் மகள் வர்ஷாவோ தன் அண்ணனை முறைத்தபடி நின்றாள்.


"எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பண்ணி இருப்ப, என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல, பொறுக்கிய டா நீ, ஒரு பொண்ணு இஷ்டம் இல்லாம தாலி கட்டுறது உனக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா,


இதே உன் தங்கச்சிக்கு இப்படி நடந்து இருந்தா அப்போ என்ன பண்ணிருப்பே?" என்று தன் அருகில் நின்ற மகளை கை காட்டி கோபமாக வினவினார்.


"அதெல்லாம் என் தங்கச்சியை பார்த்தாலே அவன் அவன் தெரிச்சு ஓடுவான், சோ எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்லை அவள அவ பாத்துப்பா…" என்று தங்கையை பார்த்தபடி பெருமையாக பதில் அளித்தான்.


அவன் தங்கையோ தன் அன்னையின் அருகில் கைகளை கட்டியபடி நின்று தோரணையாக தன் அண்ணனை தான் இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள்.


அவனின் பேச்சை பொருட்படுத்தாத அவனின் அன்னையோ "ஒருவேளை அப்படி நடந்தா நீ என்ன பண்ணிருப்பியோ, ஆனா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ள தூக்கி போட்டு இருப்பேன்.


இப்பவும் நா அதை தான் பண்ண போறேன் என்றவர் சரண்யாவிடம் நீ வாமா நம்ம இவன் பேர்ல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்…" என்று கோபமாக அழைத்தார்.


"ஓ தாராளமா கம்ப்ளைன்ட் குடுங்க, தப்பு பண்றவங்கள விட தப்பு பண்ண தூண்டுறவங்களுக்கு தான் தண்டனை அதிகம். அப்படி பார்த்தா உங்க புருஷனுக்கும் அப்புறம் என் லவ் குருவுக்கும் தான் தண்டனை கொடுக்கணும் ஏன் னா இந்த ஐடியா கொடுத்ததே அவங்க தான்" என்று வாக்கு மூலம் கொடுத்தவன்,


"நமக்கு புடிச்ச தூக்கிட்டு வந்து தாலி கட்டுறது தப்பில்லையாமே அப்படியா?" என்று வேறு வினவினான்.


"என்னடா உளறுற?" என்றவரின் அதட்டலில் சரண்யாவை பார்த்தவன் 'சொல்லிடவா!' என்று வாயசைக்க,


அவனின் அந்த கேள்வியில் பேய்முழி முழித்தவள் அர்ஜுனை திரும்பி பாவமாக பார்க்க, அவனும் அதே பேய்முழியுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


'சொன்ன அவளை விட்டுட்டு கேட்டுட்டு இருந்த என்ன தானடா இவங்க டார் டாரா கிழிப்பாங்க' என்று எண்ணமிட்ட அர்ஜுன் பாவமான பார்வையை விஷ்ணுவுக்கு அனுப்பினான்.


பேச்சு செல்லும் திசை அறிந்த சரண்யாவோ அதை திசை மாற்றம் பொருட்டு "ஆன்ட்டி நம்ம கொஞ்சம் வெளிய எங்கயாவது போயிட்டு வருவோமா? கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும் போல இருக்கு எனக்கு" என்று கேட்டு அவர்களின் பேச்சைக் கத்தரித்தவள், அடுத்து அரை மணி நேரத்தில் கமலா, மல்லி, வர்ஷா மூவரையும் அங்கிருந்து கிளம்பி கொண்டு சென்றிருந்தாள்.


"சரியான கேடிடா உன் பிரண்டு மாட்டிக போறோம்னு தெரிஞ்ச உடனே எப்படி எஸ்கேப் ஆனா பாத்தியா? ஆ அப்புறம் என்னடா அர்ஜுன் உன் பிரண்டு எங்க அப்பாவையும் அவ கிரஷ்னு சொல்றா?" என்று கேட்டபடி அவன் அருகே அமர,


"அட நீங்க வேற விஷ்ணு ணா இவளை பத்தி என்ன நினைச்சீங்க… வயசு பையனை கிரஷ்னு சொல்லிட்டு திரியிற கோஸ்டின் நினைச்சீங்களா? இவ அதுக்கும் மேல….


முதல்ல இருந்து சொல்றேன் கேளுங்க அப்பதான் உங்களுக்கு புரியும். நாங்க ஸ்கூல் படிக்கும் போதுல இருந்தே இவ இப்படித்தான்.


அவ கிரஷ் லிஸ்ட்ல ஒரு ஊரே இருக்கு, உங்க அப்பா அம்மா கூட பீஸ்ல ஒரு தடவை பார்த்து தான் கிரஷ் லிஸ்ட்ல சேர்த்தா, அவ கிரஷ் லிஸ்ட்ல ஜாயின் பண்றது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, நீங்க பண்ற ஏதாவது ஒரு குட்டி விஷயம் அவளுக்கு புடிச்சா கூட போதும்.


ஈஸியா நீங்க அந்த லிஸ்ட்ல இடம் பிடிச்சிடலாம். அதுலயும் அவ சில ஆளுங்கள காட்டி ஹேண்ட்ஸமா இருக்காரு இல்ல அப்படின்னு சொல்லுவா, அப்ப எனக்கு என்ன தோணும் தெரியுமா? என்னடா இது ஹேண்ட்சமுக்கு வந்த சோதனைனு தான்.


அவளுக்கு அவங்க பண்ற ஏதாவது சின்ன விஷயம் பிடித்தாலே போதும், அவ கண்ணுக்கு அவங்க ஹேண்ட்சமாவும், க்யூட்டாவும் தான் தெரிவாங்க.


ஆனா ஒரு விஷயம், அவ அப்டி வாவ் னு சொன்ன அதே செகண்ட்ல அவங்கள அந்த இடத்துலயே விட்டுட்டு கண்டுக்காம அடுத்த வேலையை பார்க்கவும் போயிடுவா. எனக்கு தெரிஞ்சு அப்படி அவ மூவாகாத ஒரே ஆளு அந்த அஸ்வின் மட்டும் தான்." என்றவன் இப்பொழுது கொஞ்சம் கவலையோடு விஷ்ணுவை ஏறிட்டு பார்க்க, அவனோ கூலாக சிரித்தபடி இருந்தான்.


அவனின் பாவனையில் சிறு சிரிப்போடு "அவளுக்கு புடிச்ச கிரஷ் லிஸ்டு சினி பீல்டுலயே எக்கச்சக்கம். அதுவும் ஒவ்வொரு லாங்குவேஜ்க்கும் ஒவ்வொரு லிஸ்ட் வச்சிருப்பா உதாரணத்துக்கு தெலுங்குல மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண்… அப்டினு ஒரு லிஸ்ட்.


இன்னொன்னு நாகர்ஜுன், சிரஞ்சீவி, வெங்கடேஷ்னு இவ்வளவு ஏன் ஜெகதீஷ் பாபுவ கூட அவ விட்டு வைக்கல அப்பாக்கு தனி கிரஷ் லிஸ்ட்டு பசங்களுக்கு தனியா கிரிஷ் லிஸ்ட்டுனு வேற தனி தனியா வச்சிருக்கா,


தெலுங்குல இப்படின்னா மலையாளத்தில அதுக்கும் மேல மம்முட்டிய கிரஷ்னு சொல்லி சைட் அடிப்பா, அவரு பையன் துல்கரையும் கிரஷ்னு சொல்லி சைட் அடிப்பா, ஜெயராமையும் சைட் அடிப்பா அவர் பையனையும் சைட் அடிப்பா..


இப்படி தமிழ்லனு பாத்தா யாரையும் விடுறது இலல எல்லாரையுமே கிரஷ்னு சொல்லும் இந்த பக்கி


அதுலயும் கௌதம் கார்த்திக் குடும்பத்துல தாத்தா பையன் பேரன்னு மூணு பேரையும் கிரஷ்னு சொல்லும் இந்த லூசு. அப்புறம் கன்னடத்தில் புனித் குமாரு கொரியன்ல லீ மின் கோனு அவ லிஸ்ட்டு போய்கிட்டே இருக்கும்.


அதுல சில நேரம் இவ கிரஷ் பீலிங் ஓவர் டோசாகி அவங்க கல்யாண விஷயம் கேள்விபட்டு ரூமை பூட்டிட்டு அழுது புலம்புன நாட்களும் உண்டு.


அதே கிரஷ்க்கு குழந்தை ஏதாவது பிறந்தா அதை சந்தோஷமா சொல்லி ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்ச நாட்களும் உண்டு.


அவ எப்ப என்ன யோசிப்பானு அவளுக்கு மட்டும் தான் தெரியும்." என்று கலகலப்பாக தொடங்கியவன் கவலை கலந்த பெருமூச்சுடன் முடித்தான்.


அவனின் கூற்றை அமைதியாக கேட்ட விஷ்ணுவோ எதையோ யோசித்தபடி அப்ப அவளை கரெக்ட் பண்றது கொஞ்சம் ஈஸிதான் சொல்லு என்றவனின் கண்கள் யோசனையின் முடிவில் ஜொலித்தது.



தொடரும்….
கருத்து திரி
 
அத்தியாயம் - 8

eiYEP6H55655.jpg

இன்றோடு விஷ்ணு, சரண்யாவின் இல்லத்தில் குடிபுகுந்து ஒரு வாரம் ஆயிற்று. கரையான் புற்றுக்குள் கருநாகம் குடிபுகுந்து ஆக்கிரமிப்பது போல் சரண்யாவின் வீட்டை விஷ்ணுவும் ஆக்கிரமித்திருந்தான்.


‘இவர்களிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடு பட போகிறானோ?’ என்று விஷ்ணுவை நினைத்து அனைவரும் கவலையில் மூழ்கி இருக்க


அவர்கள் எல்லோரும் நினைத்ததற்கு மாறாக சரண்யா, அர்ஜுன் பாடு தான் திண்டாட்டம் ஆனது விஷ்ணுவின் சில அதிரடி நடவடிக்கைகளால்.


சரண்யாவின் இல்லம் வந்த இரு நாட்கள் அவர்களின் பழக்கங்களை அமைதியாக பார்த்தவன், அடுத்த நாளிலிருந்து அந்த வீட்டை அவன் கைக்குள் கொண்டு வந்திருந்தான்.


காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அன்புவின் அறைக்கு சென்று அவரை எழுப்பினான்.


தூக்கத்தில் பதறி எழுந்தவர் குழப்பத்துடன் “என்னப்பா விஷ்ணு? என்ன ஆச்சு?” என்று வினவியபடி கடிகாரத்தை பார்க்க, அது மணி ஆறு என்று காட்டி கொண்டிருந்தது.


“ஒன்னுமில்ல மாமா ஜாகிங் போறதுக்கு தான் எழுப்புனேன்” என்று சாதாரணமாக கூறினான்.


“ஜாகிங்கா? நானா?” என்று கேட்டு திருதிருவென விழித்தவர், “எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்லபா. நீ போய்ட்டு வா” என்று கூறியபடி படுக்கையில் சரிய போனவரை, கையை பிடித்து தூக்கி அமர வைத்தவன்,


“மாமா பழக்கமெல்லாம் தான வரதில்ல நாம பழகுறது தான் பழக்கம். அதனால இன்னைல இருந்து ஜாகிங் போக பழகலாம். உங்களுக்கு ஜாக்கிங் கஷ்டமா இருந்தா நீங்க வேணா வாக்கிங் வாங்க சரியா…


சரி சரி டைம் ஆச்சு நீங்க போய் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க. நா போய் அவங்க ரெண்டு பேரையும் எழுப்புறேன்” என்றபடி உற்சாகமாக வெளியேறியவன் அடுத்ததாக அர்ஜுன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தான்.


கட்டிலின் குறுக்காக கை, கால்களை விரித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அர்ஜுனை பார்த்தவன் சிறு சிரிப்புடன் அவன் அருகே சென்று அவனை தட்டி “அர்ஜுன்” என்று அழைத்து எழுப்பினான்.


அவன் அந்த அழைப்பிற்கு கொஞ்சம் கூட செவி கொடுக்காமல் ஆழ்ந்த நித்திரையில் இருக்க,


இரண்டு மூன்று முறை கத்தி அழைத்தும் பலன் இல்லாததால் கடுப்பான விஷ்ணுவோ, “இவன…” என்று எண்ணியபடி சுற்றிலும் பார்க்க, அங்கு குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீரை பார்த்தவன் அதை எடுத்து அடுத்த நொடி அர்ஜுன் மேல் ஊற்றி இருந்தான்.


தண்ணீர் பட்டவுடன் அடித்து பிடித்து எழுந்தவன் “அடியேய் குள்ள கத்திரிக்கா உன் சாவு இன்னைக்கு எ கையில தான்டி” என்று கத்தியபடி எழுந்தவன் தன் முன் கையில் ஜக்கோடு நின்ற விஷ்ணுவை பார்த்து பேய்முழி முழித்தான்.


“ஜாகிங் போகணும் சீக்கிரம் ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்ற சொல்லோடு திரும்பியவன் “10 மினிட்ஸ்ல கீழே இருக்கணும்” என்றவனின் கடுமையான வார்த்தைக்கு அதே பேய் முழியோடு எல்லா பக்கமும் தலையசைத்தான் அர்ஜுன்.


சரண்யாவை எழுப்ப அவளின் அறையில் நுழைய முயன்றவன் ஒரு நொடி தாமதித்து வெளியே நின்றவாறு அவளின் அலைபேசிக்கு அழைத்தான்.


அலைபேசியின் சத்தத்திற்கும் அசையாமல் அவள் தூக்கத்தை தொடர அவளை எழுப்பும் வழி அறியாமல் யோசித்தபடி இருந்தவனின் முன்பு அன்பு வர, ஒரு நிம்மதி பெருமூச்சுடன் “அவள எழுப்பி கூட்டிட்டு வாங்க மாமா” என்றபடி வாசலை நோக்கி நகர்ந்தான்.


அன்புவும், அர்ஜுனும் சேர்ந்து அவளை ஒருவழியாக எழுப்பி கீழே அழைத்து வர அவர்களை ஒரு பார்வை பார்த்தபடி அவன் வெளியேற அவர்களும் அவனை பின்தொடர்ந்தனர்.


“என்னப்பா இது புது பழக்கம். எனக்கு தூக்கம் தூக்கமா வருது” என்று கோபமாக கூறியவள் “அவன் நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் அவனுக்கு ஜாகிங் போகனும்னா அவன் மட்டும் போக வேண்டியது தானே! நம்ம எதுக்குபா கூட போகனும்?” என்று அவர்களுடன் இணைந்து நடந்தபடியே புலம்பியவள் “அவனை இப்ப என்ன பண்றேன் பாருங்க” என்றபடி,


தன் அலைபேசியை எடுத்து விஷ்ணுவின் தந்தைக்கு அழைக்க, அவர் எடுத்த உடன் “ஹாண்ட்சம் உங்க பையன் பண்றது எதுவுமே சரி இல்ல” என்று பஞ்சாயத்தை தொடங்க அவர்களின் அன்றைய நாள் இனிதே தொடங்கியது.


ஜாகிங்கோடு தொடங்கிய அவர்களின் சோதனை அடுத்த கட்டமாக உணவுவில் நுழைந்து கல்லூரி செல்லும் நேரத்தை பின்பற்றி மாலை கல்லூரி விடும் நேரத்தில் புகுந்து அவர்கள் ஸ்டடி டைமோடு நிறைவுற்றது.


“எது? ஸ்டடி டைமா! நாங்க என்ன சின்ன குழந்தைங்களா காலேஜ் போற பசங்க யாராவது தினமும் படிச்சதா நீங்க கேள்வியாவது பாட்டிருக்கிங்களா?” என்ற சரண்யாவின் கேள்வியையோ


“நா இங்க வந்ததே தப்பு ஒழுங்கா என் வீட்லயே இருந்து இருக்கணும். இந்த கத்திரிக்காக்கு மாரல் சப்போர்ட் சொல்லி என்னை இங்க தள்ளி விட்டுட்டு போயிட்டாங்கலே… அவ்வ்…” என்ற அர்ஜுனின் புலம்பலையோ விஷ்ணு கண்டுகொள்ளவே இல்லை.


முதல் இரண்டு நாட்கள் அவன் செய்வதை எல்லாம் “ஹேண்ட்சம்… கதிரப்பா…” என்று அலைபேசியில் அழைத்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தவள்,


“இதெல்லாம் உங்க நல்லதுக்கு தானடா” என்ற அவர்கள் இருவரின் ஆறுதலான அட்வைஸில் வேறு வழியில்லாமல் அர்ஜுனோடு சேர்ந்து புலம்பியவரே கடைபிடிக்க தொடங்கி ஒரு வாரமும் முடிந்திருந்தது.


“அன்பு பா நான் கரெக்ட் டைம்க்கு வந்துட்டேன். எங்க அந்த பிசாசு? இன்னும் காலேஜ் கெளம்பாம என்ன பண்ற? எப்ப பாரு இவளோட இதே வேலையா போச்சு. இவளை…” என்று கோபமாக திட்டியபடி அவளின் அறையை நோக்கி வேக நடையிட்டு நடந்த அர்ஜுன்,


அரை வாசலில் ஒரு நிமிடம் தயங்கி “ஆமா விஷ்ணு அண்ணா எங்க?” என்று பணிவாக கேட்க, அவனின் அந்த பணிவை பார்த்து கேலியான சிரிப்பை உதிர்த்த அன்புவோ “அவன் காலையிலேயே ஏதோ முக்கியமான பிசினஸ் மீட்டிங்னு ஆபீஸ்க்கு கிளம்பி போயிட்டான்” என்றார்.


“ஓஓஓஓஓஓ ஆஃபீஸ் கிளம்பியாச்சா?” என்று நிதானமாக கேட்டவன் முன்பை காட்டிலும் சத்தத்தை கூட்டி “அடியேய் குள்ள கத்திரிக்கா காலேஜுக்கு கிளம்பினியா இல்லையாடி” என்று கத்தியபடி அவளின் அறைகதவை திறந்து உள்ளே நுழைந்திருந்தான்.


அதுவரை மெத்தையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தவள் அவனின் குரல் கேட்டு கடுப்பான குரலில் “அச்சு குட்டி எனக்கு உடம்பு சரியில்லை டா” என்று கூற “அய்யய்யோ அப்ப எனக்கும் உடம்பு சரியில்ல” என்று பட்டென்று அர்ஜுன் கூறவும்,


ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட இருவரும் ஒருமித்த குரலில் “சேர்ந்து லீவ் போடுவோமா?” இன்று உற்சாகமாக வினவ, “டன் டன் அப்போ எங்க போலாம்?” என்று மகிழ்ச்சியாக திட்டமிட “தியேட்டர்க்கு என்ன படம் வந்திருக்கு புதுசா” என்று கேட்டபடி சுவாரஸ்யமான அவர்கள் பேச்சுக்குள்ளும் மட்டுமல்ல அந்த அறைக்குள்ளும் நுழைந்தார் அன்பு.


“போன தடவை மாதிரி என்னை கழட்டி விட்டுட்டு போக கூடாது. ஆமா முதல்லயே சொல்லிட்டேன்” என்று கூறி தன்னக்கும் துண்டு போட்டு இடம் பிடித்து கொண்டவரை கருப்பாக பார்த்த இருவரும்,


“போங்கப்பா உங்கள எல்லாம் கூட்டிட்டு போக முடியாது. அந்த விஷ்ணு அவ்வளவு அராஜகம் பண்றான், நீங்க என்னனு கூட கேக்க மாட்டேங்கிறீங்க... இது அவன் வீடா? இல்ல நம்ம வீடானே எனக்கு சந்தேகம் வந்துருச்சு” அலுத்துக் கொண்டவள்,


“வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நைசா புகுந்து நம்மளை அடிமையாக்கின மாதிரி இவன் நம்ம வீட்டுக்குள்ள நைசா புகுந்து இப்ப நம்மளயே அடிமையாக்கிட்டு இருக்கான்.


ஆறு மணிக்கு எழும்பு ஜாகிங் போ, டைமுக்கு படி, ஹெல்தியா சாப்பிடுனு சாவடிக்கிறான். கேட்டா ஹியூமன்பீன்னா இப்படித்தான் இருக்கணுமாம். அப்ப நாங்க மனுஷங்க இல்லாம வேற்று கிரக ஜந்துக்களா?” என்று கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.

“சரி விடு டா எல்லாம் நம்ம நல்லதுக்கு தானே” என்று கூறிய அன்பு அவளின் முறைப்பில் “துணிவு போலாமா இல்ல வாரிசா” என்று கேட்டு அவளை திசைமாற்ற


“அந்த படத்துக்கு போலாம்… இல்ல… இல்ல… இந்த படத்துக்கு போலாம்” என்று சண்டையிட்டு ஒரு வழியாக ஒருமித்த கருத்தாக முதலில் வாரிசு அடுத்து துணிவு என்று முடிவு பண்ணியவர்கள் அடுத்த அரைமணி நேரத்தில் திரையரங்கில் உற்சாக கூச்சலுக்கு இடையே அதே உற்சகத்தோடு அமர்ந்திருந்தார்கள்.


திரையில் நாயகன் பேசுவது கேட்காத அளவுக்கு விசில் சத்தம் காதை பிளந்தது. அர்ஜுனின் விசில் சத்தத்திற்கு இணையாக சரண்யாவும் தன் கையில் கொண்டு வந்திருந்த விசிலால் விசில் அடித்துக் கொண்டிருந்தாள்.


அவர்கள் இந்த உற்சாகம் எல்லாம் அவர்களின் முன்பு கோப முகமாக விஷ்ணு வந்து நிற்கும் வரையில் தான் தொடர்ந்தது.


அவனை அங்கே எதிர்பார்க்காத மூவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்வை பரிமாறியபடி திருவென விழித்துக் கொண்டிருந்தனர்.


தங்கள் முன்பு நின்று முறைத்து பார்த்தவனின் பார்வையில் அதுவரை இருந்த திருட்டு பார்வையை மாற்றியவள் அவனை அலட்சியமாக பார்த்தாள்.


அவளின் அலட்சிய பார்வை பார்த்தவன் அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தபடி நெருங்கி அவள் என்னவென்று உணரும் முன்பே குனிந்து அவளை தன் கைகளில் அள்ளி எடுத்தபடி அந்த திரையரங்கில் இருந்து வெளியேறினான்.


அவனின் இந்த அதிரடியில் முதலில் திகைத்திருந்தவள் பின் அதில் இருந்து மீண்டு அவன் கைகளில் இருந்து திமிற முயல, அவர்களைப் பார்த்த ஒரு இளைஞனோ “டேய் இங்க பாருங்கடா லைவா ஒரு ரொமான்டிக் சீனு” என்று கூற


“ஏதே ரொமான்டிக்கா?” என்று அதிர்ந்தவள் மனமோ “ரொமான்டிக்கு அர்த்தம் தெரியுமாடா தம்பி உனக்கு?” என்று பரிதாபமாக புலம்பியது.



தொடரும்….
கருத்து திரி

 
அத்தியாயம் - 9
eiC1VE754825.jpg


திரையரங்கில் இருந்து வெளியேறி நேராக தன் கார் இருக்கும் இடத்திற்கு வந்த விஷ்ணு, தன்னை கவனிக்காமல் தன் கையில் இருந்து வெளியேற திமிறி கொண்டு இருந்தவளை குறும்புடன் சேர்த்து அழுத்தமாக பார்த்தான்.


ஒரு கையால் அவளை தன் மார்போடு அணைத்தவன் மற்றொரு கையால் காரின் முன்புற கதவை திறந்தான்.


சரண்யாவோ அவனின் இந்த திடீர் அணைப்பில் திகைத்து போயிருந்தாள்.


கார் அருகில் வந்தவுடன் எப்படியும் அவன் தன்னை இறக்கி விடுவான் என்ற நினைப்போடு அதற்கு முன், தான் அவன் கையில் இருந்து இறங்க வேண்டி முயற்சி செய்து கொண்டிருந்தவள், திடீரென்று அவன் தன்னை இவ்வாறு அணைத்தபடி கதவை திறப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.


அவள் மட்டுமல்ல விஷ்ணுவின் பின்பு நின்ற அர்ஜுன் கூட இதை எதிர்பார்க்கவில்லை. திரையரங்கில் இருந்து சரண்யாவை தூக்கியபடி வெளியேறியவனை தொடர்ந்து அர்ஜுனும் அன்புவும் அதிர்ந்து தான் அவன் பின்னோடு ஓடி வந்திருந்தனர்.


'என்னடா நடக்குது இங்க? நாங்களும் இங்க தான் இருக்கோம்னு அண்ணாக்கு தெரிகிறலையோ! அது எப்டி தெரியாம இருக்கும்' என்ற சிந்தனையில் இருந்தான் அர்ஜுன்.


தன் கையில் இருந்தவளை காரினுள் தூக்கி போட்டவன் அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல் திரும்பி தன் பின் நின்ற அர்ஜுனை முறைத்து பார்த்தான்.


அதுவரை விஷ்ணுவையே பார்த்தபடி நின்ற அர்ஜுன் அவன் திரும்பி இவனை முறைக்கவும் இது எதுக்கு? என்று எண்ணியபடி தன்னுடன் நின்ற அன்புவை தேட அவர் எப்போதோ காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்திருந்தார்.



அவரை பார்த்து கோபத்தில் பல்லை கடித்தவாறு அன்புவின் அருகே ஏறி அமர்ந்தான் அர்ஜுன்.


காரினுள் விஷ்ணுவோடு சேர்த்து இவர்களுக்கும் மண்டகப்படி நடத்திக் கொண்டிருந்தாள் சரண்யா. ஆனால் அவளின் பேச்சை மூவருமே கண்டு கொள்ளவில்லை. அவரவர் அவரவர் சிந்தனையில் இருந்தனர்.



சரண்யாவோ "டேய் அரலூசு" என்று அர்ஜுனை கத்தி அழைக்க, தன் சிந்தனை தடைபட்டதில் எரிச்சலானவன் "என்னடி பிரச்சனை உனக்கு? இப்ப என்ன வேணும்" என்று கோபத்தில் கேட்க,


"இவனை நீயாவது என்னனு கேளுடா?" என்று பரிதாபமாக சொல்ல,


"இரு" என்று அவளைப் பார்த்து கை காட்டியவன் விஷ்ணுவிடம் "அண்ணா…" என்று குரல் உயர்த்தி அழைக்க,


அவனின் அழைப்பை கேட்ட விஷ்ணுவோ முன்னிருந்த கண்ணாடி வழியே பின் இருந்த அர்ஜூனை பார்த்து முறைத்தான்.


அவனின் முறைப்பில் கொஞ்சம் ஜெர்க்கானவன், "இல்ல இந்த கத்திரிக்காவ பொசுக்குன்னு தூக்கினீங்களே கஷ்டமா இல்ல?" என்று 'பாம்பு புத்துக்குள்ள கை விட்டீங்களே கடிச்சுறாது' மாடுலேஷனில் தன் ஆக பெரும் சந்தேகத்தை கேட்க,


'எத கேக்க சொன்னா எதை கேக்குறான் பாரு? லூசு அர லூசு' என்று மனதிற்குள் அவனை வறுத்தவள் "டேய் நான் கேக்க சொன்னது" என்று தொடங்கியவள் அவன் அணைத்ததை எப்படி சொல்வது என்று தெரியாமல் விழிக்க,


அவளின் அந்த முழியை பார்த்த விஷ்ணுவோ சிரிப்புடன் அவள் கல்லூரி வாசலில் வந்து காரை நிறுத்தி இருந்தான்.


அவனை திட்டியபடியே வேறு வழியின்றி காரில் இருந்து இறங்கி கல்லூரியை பார்த்தவள் தன் நண்பனிடம் திரும்பி "டேய் அச்சு என் வாழ்க்கை சரித்திரத்துல கட்டடிச்ச அன்னைக்கு காலேஜ் வந்தது இதுதான்டா ஃபர்ஸ்ட் டைம்" என்று சலிப்பாக கூற,


அவன் அதை விட சலிப்பாக "எனக்கு மட்டும்" என்று சோர்வாக கூறினான்.


"ஐய்யோ இப்போ அந்த மங்கூஸ் மண்டையன்கிடட போய் லேட் ஆனதுக்கு காரணம் வேற சொல்லனுமே!" என்று புலம்பியபடியே கல்லூரியினுள் நுழைந்தனர்.


அங்கிருந்து நேரே அன்புவின் அலுவலகத்திற்கு காரை விட்டவன் "அவங்க தான் சின்ன புள்ளைங்க இப்படி கட் அடிச்சுட்டு ஜாலியா இருக்காங்க. நீங்க தானே மாமா அவங்களுக்கு இதெல்லாம் தப்புன்னு சொல்லனும் இப்படியே விளையாடிட்டு இருந்தா உங்க பிசினஸ் எல்லாம் அவ எப்படி எடுத்து நடத்துவா?


அவளுக்கு கொஞ்சமாவது பொறுப்பு வர வேண்டாமா? செல்லம் கொடுக்கிறது வேற, அதே டைம் அவளுக்கு பொறுப்பா நடந்துக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டாமா? இதுல இந்த அர்ஜுன் வேற அவனுக்கு இன்னைக்கு இருக்கு…"



"நான் இனி சொல்லி புரிய வைக்கிறேன் விஷ்ணு" என்றவரிடம் "இனி நீங்க ஒன்னும் சொல்லி புரிய வைக்க வேண்டாம் இனி நான் பாத்துக்குறேன் அவங்க ரெண்டு பேருக்கும் அன்புடன் சேர்ந்து கண்டிப்பும் ரொம்ப அவசியம் மாமா. நான் பாத்துக்குறேன்" என்றவாறு அவரையும் அலுவலகத்தில் கொண்டு சேர்த்தான்.


"எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு ஈவினிங் பாக்கலாம் மாமா" என்றபடி தலையாட்டி அவரிடம் இருந்து விடை பெற்றான்.


போகும் அவனைப் பார்த்தவர் ஒரு புன் சிரிப்புடன் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.



சரண்யாவின் வீடு விஷ்ணுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து ஒரு மாத காலம் முடிந்திருந்தது. இந்த ஒரு மாத காலமும் போதும் போதும் என்ற அளவிற்கு அவளின் நிலை தள்ளப்பட்டிருந்தது.


தன் எதிர் சோபாவில் முகம் தூக்கி சோர்ந்து போய் இருந்த சரண்யாவை பார்த்த விஷ்ணு என்ன நினைத்தானோ அவன் தந்தைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.


அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனின் அன்பு தங்கை வர்ஷா அங்கு வந்திருந்தாள்.


வர்ஷாவை பார்த்த சரண்யாவோ "ஹே வர்ஷு வா வா எப்படி இருக்க? ஆன்ட்டி ஹேண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்காங்களா?" என்று அதுவரை இருந்த சோர்வு மாறி உற்சாகமாக வினவ "ம் நல்லா இருக்காங்க அண்ணி" என்றவள்,


"அண்ணி எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும் என்னோட கொஞ்சம் ஷாப்பிங் வர முடியுமா?" என்று அழைக்க,


"இதெல்லாம் என்ன கேள்வி, ஷாப்பிங் வாங்கனு நீ கூப்பிட்டா நான் வர போறேன். ஆனால் நீ அந்த அண்ணிய கொஞ்சம் அவாய்ட் பண்ணலாம்" என்ற சரன்யாவோ,



"சொன்னா கேக்க மாட்ட. பரவால்ல அத நா பசங்க சொல்ற மாமா மச்சான் சித்தப்பா மாதிரி நினைச்சிக்கிறேன். அவங்க மட்டும் தான் மாமா, மச்சான், சித்தப்புனு கூப்பிடுவாங்களா நாமளும் அண்ணி அத்தை மாமினு கூப்பிடுவோம் யார் வந்து நம்மள கேட்க போறா? எப்புடி?" என்றவள் வர்ஷாவின் விரிந்த சிரிப்பில் "ஒகே ஒகே வெயிட் பண்ணு நான் போய் ரெடியாயிட்டு வரேன்."


என்றவாறு அவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.


வந்ததிலிருந்து தன்னை கண்டு கொள்ளாத தன் தங்கையையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு "ஓய் புரூஸ் லீ ரொம்ப பண்ணாதடி இங்க கொஞ்சம் பாரு" என்று கெஞ்சலாக அழைத்தான்.


அவனை அலட்சியமாக பார்த்தவளை பார்த்து "நான் உங்க அண்ணிய லவ் பண்றது தான் உனக்கு முதலிலயே தெரியும் இல்ல, ஏதோ புதுசா தெரிஞ்ச மாதிரி எதுக்கு இப்படி கோவப்படுற இதெல்லாம் நியாயமே இல்ல சொல்லிட்டேன்" என்றான்.


"எது நியாயம் இல்ல? லவ் பண்ணா என்ன வேணாலும் பண்ணலாமா? அந்த பொண்ணுக்கு பிடிக்கனும்னு அவசியம் இல்லையா? உன்கிட்ட இருந்து நா இதை எதிர்பார்க்கலைண்ணா…


ஏன் நான் கூட தான் ஒரு பையனை லவ் பண்றேன். அவன் என்னை லவ் பண்ணலனா, நானும் இந்த மாதிரி போய் திருட்டு தாலி கட்டலாமா?" என்று கோபமாக கேட்க,


அவன் கேள்வியை கேட்டபடி வந்த சரண்யாவோ 'அப்படி கேள்றி என் ராசாத்தி இந்த கேள்வி யாரும் கேட்க மாட்டாங்களானு தான் நான் இவ்வளவு நாளா ஏங்கிட்டு இருந்தேன். என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு பா' என்ற மனநிலையோடு வர்ஷாவின் அருகே வர,


சரண்யாவை பார்த்த வர்ஷாவோ "போலாமா அண்ணி" என்று சிரிப்புடன் வினவினாள்.


~"ம்" என்று தலையாட்டிய சரண்யாவின் மனமோ, 'இவளுக்கும் இந்த கல்யாணம் புடிக்கல, அப்புறம் ஏன் என்னை அண்ணினு கூப்பிடுறா?' என்று நினைத்து குழம்பியது.


அவளுக்கு தெரியாதே அண்ணன் காதலிப்பதாக கூறிய அடுத்த நொடியில் இருந்து வர்ஷா இவனை அண்ணி என்று அழைக்க தொடங்கினாள் என்று.


அந்த நேரம் சரியாக அர்ஜுன் வீட்டிற்குள் நுழைந்தான். "என்ன எல்லாரும் எங்கயோ கிளம்புறீங்க போல" என்ற கேள்வியோடு அவர்களை நெருங்க,


"அச்சு நாங்க ஷாப்பிங் போறோம். நீயும் வரியா?" என்று அவனை கேட்க அங்கிருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் "போலாமே" என்று பதில் அளிக்க அதை கண்டு கொள்ளாத வர்ஷாவோ "கிளம்பலாம்" என்று சொல்லோடு சரண்யாவோடு இணைந்து வெளியேறினாள்.


திரு திருவென விழித்தபடி நின்ற அர்ஜுனோ "இப்ப ஷாப்பிங் வரியான்னு சொல்லி என்னை தானே கேட்டா? இப்ப கண்டுக்காம போற" என்று குழம்ப, அவனை பார்த்து சிரித்த விஷ்ணு அவன் தோள் மேல் கைபோட்டு "நானும் தான் ஷாப்பிங் வரேன் வா" என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.


விஷ்ணு, அர்ஜுன் இருவரையும் கண்டு கொள்ளாமல் சரண்யாவும் ஹர்ஷாவும் ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.


வர்ஷா ஒவ்வொரு கடையிலும் பொருட்களை அள்ளிக் குவிக்க அதற்கு நேர் மாறாக சரண்யாவோ ஒவ்வொரு கடையின் அருகிலும் 'தின்பதற்கு ஏதாவது கிடைக்குமா?' என்று கையில் இருக்கும் பத்து ரூபாய் ஜூசை குடித்தபடி நோட்டமிட்டு கொண்டிருந்தாள்.


அதுவும் அந்த பத்து ரூபா ஜூஸில் உள்ள ஸ்ட்ராவை எடுத்து ஜூஸில் ஒரு குத்து குத்தி வீசிவிட்டு அதை அப்படியே தன் வாயில் கவிழ்த்து அண்ணாந்து குடித்துக் கொண்டிருந்தாள்.


10 நிமிடத்திற்கு ஒருமுறை அவ்வாறே குடித்துக் கொண்டிருந்தவளையே சிறிது நேரம் பார்த்த வர்ஷாவோ "அண்ணி உங்க பேக்ல மொத்தம் எத்தனை ஜூஸ் வச்சிருக்கிங்க?" என்று கேட்க


மீண்டும் ஒருமுறை தன் பையை திறந்து பார்த்தவள் "இன்னும் நிறைய இருக்கு. உனக்கு வேணுமா?" என்று அவளிடம் எதிர் கேள்வி கேட்க, "இல்ல புரியல எதுக்கு இத்தனை ஜூஸ்? வேணும்னா பெருசுல ஒன்னு வாங்கலாம் இல்ல" என்று கேட்க,


அதற்கு ஒரு அசட்டு சிரிப்பை பதிலாக கொடுத்தவள் "எனக்கு இப்படி குடிக்க தான் ரொம்ப புடிக்கும். நீயும் ஸ்ட்ரா வச்சு குடிக்காம இந்த மாதிரி குடிச்சு பாரு நல்லா இருக்கும்" என்று அவளுக்கு இலவச ஆலோசனை வேறு வழங்கினாள்.


அவளின் பேச்சைக் கேட்டு சிரித்தவளோ "நீங்க உண்மையாவே ஒரு மாஸ்டர் பீஸ் அண்ணி" என்று சிரிப்புடன் கூறியவள் அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஃபுட் கோட்டிற்குள் நுழைந்தாள்.


அவர்களை பின்தொடர்ந்த அர்ஜுனும் விஷ்ணுவும் அவர்களுடன் சென்று அமர, நால்வரும் தங்களுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்து அருந்த தொடங்கினர்.


"அச்சு எனக்கு ஒரு சிக்கன் பர்கர் வாங்கி தாயேன்" என்ற சரண்யாவின் கோரிக்கையை ஏற்று சிக்கன் பர்கர் வாங்க சென்றவன் சிறிது நேரத்தில் சிக்கன் பர்கரோடு திரும்பி வர,


அவனிடம் "டேய் அர்ஜுன் சான்சே இல்ல… என்ன அடி? என்ன மசில்ஸ் டா?" என்று சரண்யா சிலாகிப்பாக கண் தட்டாமல் ஆர்வமாக பார்த்தபடி கூற,


அவளின் கூற்றில் விஷ்ணுவை எதிர்பார்த்து அர்ஜுன் திரும்ப, விஷ்ணுவோ கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்தபடி தன் கையில் இருந்த ஜூசை நிதானமாக எதிரே பார்த்தபடி குடித்துக் கொண்டிருந்தான்.


'அப்ப இவ யார சொல்றா?' என்று குழம்பியபடி திரும்பியவனோ அங்கு விஷ்ணுவின் தங்கை வர்ஷாவையும் அவள் நின்ற தோரணையையும் பார்த்து அதிர்ந்து விழித்தான்.


தோரணை தான் நல்ல திடகாத்திரமான ஒருவனின் கை இரண்டையும் முதுகுக்கு பின்பு வளைத்து ஒரு கையால் பிடித்திருந்தவள் மறு கையால் அவனின் பின்னங் கழுத்தை அழுத்தி பிடித்தபடி அலட்சியமாக நின்றிருந்தாள்.


தொடரும்….
கருத்து திரி
 
அத்தியாயம் - 10

eiO821V54207.jpg

தோரணை தான் நல்ல திடகாத்திரமான ஒருவனின் கை இரண்டையும் முதுகுக்கு பின்பு வளைத்து ஒரு கையால் பிடித்திருந்தவள் மறு கையால் அவனின் பின்னங் கழுத்தை அழுத்தி பிடித்தபடி அலட்சியமாக நின்றிருந்தாள்.


வர்ஷாவையும், அவளது பிடியிலிருந்து தப்பிக்க போராடுபவனையும் பார்த்து அர்ஜுன் அதிர்ந்தான் என்றால் சரண்யாவோ பரவசமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


அதே நேரம் வர்ஷாவை நோக்கி அந்த மாலின் செக்யூரிட்டி காட்ஸ் இருவர் விரைந்து வந்தனர்.


அவர்கள் வருவதை பார்த்தவள் அவன் கழுத்தை பிடித்திருந்த கையை விலக்கி அவன் கையை பிடித்திருந்த கையால் அவனை லேசாக திருப்பி அவனின் பாக்கெட்டிற்குள் இருந்த அவன் அலைபேசியை கைப்பற்றி இருந்தாள்.


செக்யூரிட்டி கார்ட்ஸ் அவளை நெருங்கவும் தன் கைப்பிடியில் இருந்தவனை அவர்களை நோக்கி தள்ளியவள் அவர்களைப் பார்த்து சிசிடிவி என்று கூறியபடி சரண்யாவின் அருகில் வந்தமர்ந்தாள்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன், சரண்யாவை பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்தவள் தன் அண்ணனைப் பார்த்தவாறு அவள் கையில் இருந்த அலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.


அதை வாங்கியவனோ சிறு தலை அசைப்புடன் அதை பத்திரப்படுத்தினான்.


“என்னாச்சி என்ன பிரச்சினை?” என்ற அர்ஜுனின் கேள்விக்கு அசால்டாக “அவன் ஹேர் ஸ்டைல் எனக்கு புடிக்கல அதான் அடிச்சேன்” என்று பதில் அளித்தவள் தன் உணவில் கவனமானாள்.


அவளின் பதிலில் ‘இது என்ன பதில்?’ என்றபடி முதலில் திருதிருவென விழித்த அர்ஜுனோ, பின்பு சுதாகரித்து விஷ்ணுவை பாவமாக பார்க்க, அவனை பார்த்து சிரித்த விஷ்ணு,


சரண்யாவை கருத்தில் கொண்டு அங்கிருந்த பெண்கள் கூட்டத்தில் பார்வையை செலுத்தி மீண்டவன் “மிஸ் யூஸ்” என்று வாயசைத்து அந்த மொபைலை காட்ட அவன் கூறியதை புரிந்து கொண்டான் அர்ஜுன்.


அவர்களின் இந்த மௌன பாஷை பத்தி எதுவும் அறியாத சரண்யாவோ, வர்ஷாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உண்டு கொண்டிருந்தாள்.


அவளைப் பார்த்த அர்ஜுனோ, ‘இவளுக்கு இதே வேலையா போச்சு’ என்றபடி படி தன் தலையில் அடித்தவன், அதே கையால் அவள் தலையில் ஒரு கொட்டு வைக்க, அதில் சுயநினைவுக்கு வந்தவள் போல் தலையை தடவியபடி அர்ஜுன் புறம் திரும்பி, அவனுக்கு ஒரு அசட்டு சிரிப்பை பரிசளித்தாள்.


வர்ஷாவையும் விஷ்ணுவையும் ஒரு பார்வை பார்த்தவள் அர்ஜுனின் காதருகில் வந்து “இன்னைல இருந்து வர்ஷூம் என் கிரஷ் லிஸ்டுல ஆட் ஆயிட்டா. என்ன அடி தெரியுமா? பொலிர்னு அந்த சத்ததுல ஒரு நிமிஷம் பின் டிராப் சைலன்ஸ் இந்த இடத்திலனா பார்த்துக்கோ” என்று சிலாகித்தவள் பார்வை முழுவதும் வர்ஷாவிடமே இருந்தது.


அவளேயே பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு அவள் வர்ஷாவை பார்த்த பார்வையில் இருந்து அர்ஜுனின் காதுக்குள் அவள் என்ன கூறியிருப்பாள் என்று தெளிவாக புரிந்தது.


ஒரு வழியாக நால்வரும் வீடு வந்து சேர்ந்தனர். சரண்யாவோ வழியெல்லாம் வர்ஷாவின் கையை தொட்டு பார்ப்பதும் அதைப்பற்றி கேட்பதுமாகவே அவளின் பொழுதை கழித்துக் கொண்டிருந்தாள்.


“வர்ஷூ எனக்கும் இந்த மாதிரி வரதுக்கு என்ன பண்ணனும்? என்ன பண்ணா இந்த மாதிரி வரும்” என்று அவளின் ஆர்ம்ஸை தொட்டு பார்த்துக் கொண்டே கேட்க,


“ முதல்ல தீனிய குறைக்கணும். அப்புறம் எக்ஸர்சைஸ் பண்ணனும்” என்று வர்ஷாவை முந்திக்கொண்டு அர்ஜுன் பதிலளிக்க, அவனை பார்த்து முறைத்தாள் சரண்யா.


“நீ எத்தனை நாள் எக்சசைஸ் பண்ணுன இந்த மாதிரி வர்றதுக்கு” என்று அவளின் கை மசில்சை தொட்டு பார்த்தபடி கேட்க


மீண்டும் அர்ஜுனோ “தெரிஞ்சு என்ன பண்ண போற?” என்று வினா எழுப்ப “நா என்ன வேணா பண்ணுவேன்? உனக்கு என்னடா அரை லூசு எங்களை கொஞ்சம் பேச விடுடா லூசு” என்றவள் வர்ஷாவை ஆர்வமாக பார்க்க,


“சின்னதுல இருந்தே அண்ணா எக்சசைஸ் பண்றத பார்த்து ஆசைபட்டு நானும் எக்சசைஸ் பண்ண ஆரம்பிச்சேன். அவன் இங்க வர வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஒர்கவுட் பண்ணுவோம்”


“எத்தனை மணிக்கு நீ ஒர்க்கவுட் ஸ்டார்ட் பண்ணுவ?” என்ற அடுத்த கேள்விக்கும் “ஏன் நீயும் போய் ஒர்க் அவுட் பண்ண போறியா?” என்ற அர்ஜுன் “ஒரு நிமிஷம் இரு நீ அவ்வளவு நல்லவ இல்லையே! உண்மைய சொல்லு அவங்க ஒர்க் அவுட் பண்றத ஓரமா உக்காந்து வாய் பாக்க போற அப்படி தானே” என்றவனிடம் ஒரு அசட்டு சிரிப்புடன் “ம் ஆமா ஆனா நா மட்டும் வாய் பாக்க போறதில்ல கூட நீயும் வர” என்க,


அதை கேட்டு அலறிய அர்ஜுன் “ஏய் நா எதுக்குடி அங்க?” என்று கேட்க “ஏன்னா நீ என் பிரண்ட்” என்றாள்.


அவளின் பாவனையில் கடுப்பானவன் “அதுக்கு என்ன?” என்று ராகம் இழுக்க அதில் கடியனவள் “என்ன அதுக்குன்னு கேக்குற? பிரண்ட்ஸ்க்குனு ஒரு இலக்கணம் இருக்கு தம்பி. அதை இந்த அச்சு மீறலாமா இல்ல சாரு தான் மீற விடலாமா? அதனால நாளைக்கு காலைல நம்ம வர்ஷா வீட்டுக்கு போய் அவ ஒர்க் அவுட் பண்றத பாக்க போறோம். உன் பாஷையில சொல்லணும்னா வாய் பார்க்க போறோம்” என்று குதூகலமாக அறிவித்தாள்.


இதுவரை அவர்களின் வாயாடலை பார்த்தபடி அமைதியாக இருந்த விஷ்ணு, வர்ஷாவின் புறம் திரும்பி “நாளை காலை ஒர்க்கவுட் பண்ண நேரா இங்க வந்திடு புரூஸ்லீ. காலைல 6:00 கிளாக் ஷார்ப்பா” என்று இறுக்கமாக கூறினான்.


அவனின் மனமோ ‘இங்க ஒருத்தன் எயிட் பேக் வச்சிட்டு கண்ணு முன்னாடி குத்து கல்லாட்டும் இருக்கேன். அதெல்லாம் இவ கண்ணுக்கு தெரியாது. சிங்கிள் மசில்ஸ் அதுக்கு இவளோ பில்டப் வேற, இவள வச்சுக்கிட்டு கஷ்டம் டா விஷ்ணு ரொம்ப கஷ்டம். இதுல என்ன தவிர எல்லாரையும் கிரஷ்னு வேற சொல்லிட்டு திரியுறா. என் தங்கச்சி இவளுக்கு கிரஷ், எங்க அப்பா ஹேண்ட்சம், நாளைக்கு இருக்குடி ஈட்டிங் பேபி உனக்கு. நாளைக்கு எப்படி நீ அவ ஒர்க்கவுட் பண்றத பாக்குறனு நான் பாக்குறேன்” என்று மனதிலேயே கருவி கொண்டிருந்தான்.


அண்ணன் கூறியதற்கு தலையசைத்தவளுக்கு அண்ணன் மனதில் நினைப்பது புரிய ஒரு விரிந்த சிரிப்பு அவள் இதழ்களில்.


“ஓகே அண்ணி ஷாப்பிங் ஓவர் இனி என்ன பண்ணலாம் மூவி எதாவது பார்க்கலாமா?” என்ற வர்ஷாவின் கேள்விக்கு சோபாவில் சரிந்து படுத்தபடி இருந்த சரண்யாவோ ஆர்வமாக எழுந்து “மூவி வேண்டாம் நாம கொரியன் டிராமா பாக்கலாமா? எனக்கு கொரியன் டிராமா யார் கூடயாவது சேர்ந்து பார்த்ததா தான் புடிக்கும். நானும் மல்லிமாவும் தான் எப்போவாவது பாப்போம். அர்ஜுனுக்கு பிடிக்காது. ரொம்ப நாளாச்சு இன்னைக்கு பாப்போமா?” என்று ஆர்வமாக கேட்டவள் அவளின் மென்மையான தலையசைப்பில் அவள் கையை இழுத்துக் கொண்டு தன் அறையை நோக்கி அழைத்து சென்றாள்.


சரண்யாவின் இழுப்பிற்கு சென்றவள் “ஏன் அவங்க கொரியன் ட்ராமா பார்க்க மாட்டாங்க?” என்று கேட்க,


“அதை ஏன் கேக்குற வர்ஷு? அவனுக்கு கொரியன் டிராமா பொண்ணுங்கள பார்த்தா… எல்லாரும் ஒரே மாதிரி ரொம்ப குட்டியா அவனுக்கு தங்கச்சி மாதிரியே இருக்குதாம். அதனால தங்கச்சி ரொமான்ஸ் பண்றத அண்ணா எப்படி பார்க்கிறது என்று டயலாக் பேசும் சரியான அரை லூசு. அவன் கெடக்குறான் நம்ம love 020 டிராமா பார்க்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்” என்று அவர்களுக்குள் பேசியபடி அறைக்குள் நுழைந்தனர்.


அதை கேட்ட விஷ்ணு பலமாக சிரித்தபடி “டேய் நீ இன்னுமாடா இந்த டயலாக்கை சொல்லிட்டு திரியிற?” என்று சிரிப்புடன் வினவ,


“நம்மளோட வயசு குறைஞ்ச புள்ளைங்க எல்லாம் நம்ம தங்கச்சி தானே! நீங்களும் அந்த கத்திரிக்கா கூட சேர்ந்து என்னை கலாய்க்கிறீங்க. இது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமா… சே ஒரு நல்ல பையனுக்கு இந்த உலகத்துல மதிப்பே இல்ல போங்க நான் கோவமா போறேன்” என்று முகத்தை சுளித்தவன் டைனிங் ஹாலை நோக்கி சென்றான்.


அவனின் அந்த சிறு பிள்ளைத்தனமான கோபத்தை பார்த்து சிரித்த விஷ்ணு “அப்படியே எனக்கு ஒரு கப் காபி” என்று கூறியபடி தன் லேப்டாப்பை எடுத்து வேலை பார்க்க தொடங்கினான்.


இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சரண்யா அறையிலிருந்து வெளிவந்தாள் வர்ஷா.


சோர்வாக வந்தவள் பார்வையால் அண்ணனை அலசிய படி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.


அதுவரை அவளையே பார்த்தபடி இருந்த அர்ஜுன் “அண்ணாக்கு ஒரு போன் வந்தது. அதான் எடுத்துட்டு பேச போனாங்க” என்று கூறினான்.


அவன் பேச்சைக் கேட்டு தலையசைத்தவள் சோபாவில் சாய்ந்து கண்மூடி அமர்ந்தாள்.


“சாரு தூங்கிட்டாளா?” என்று அவளை அறிந்தவனாக கேட்க, அதற்கும் சிறு இதழ் விரிப்புடன் மௌனமான தலையசைப்பே பதிலாக வர அவளையே இரு நிமிடம் அமைதியாக பார்த்தவன், “நீங்க இன்னுமா விஷ்ணு அண்ணா மேல கோவத்துல இருக்கீங்க? இங்க பாரு வர்ஷாமா…” என்று ஏதோ பேச வர


அமர்ந்த வாக்கிலேயே கண் திறக்காமல் “வர்ஷானே கூப்பிடுங்க இந்த மா எல்லாம் வேண்டாம்” என்றவளிடம் “இல்ல மா நானும் விஷ்ணுனா மாதிரி உனக்கு ஒரு…”


“கொன்னுடுவேன்” அவனின் வார்த்தை முடியும் முன்னே அவளின் வார்த்தை வந்து அங்கு கோபமாக விழுந்திருந்தது.


சோபாவில் சரிந்த வாக்கில் இருந்தவள் எழுந்து நேராக அமர்ந்து அவனை அழுத்தமாக பார்த்தவாறு “யாரு யாருக்கு தங்கச்சி? ஊர்ல இருக்க பொண்ணுங்க எல்லாம் உனக்கு தங்கச்சியா தத்து எடுத்துக்கிட்டு இருந்தா… அப்ப சார் யாரை கல்யாணம் பண்ணிக்க போறீங்க? கேட்டா சின்ன பொண்ணுங்கள பார்த்தா எனக்கு தங்கச்சி பீலிங்ஸ் வருதுனு டயலாக் வேற, அப்ப சின்ன பொண்ண கல்யாணம் பண்ணாம, என்ன ஆன்ட்டியா வா கல்யாணம் பண்ண போற? ஒருவேளை ஆன்ட்டி ஹீரோவா நீ” என்றவளின் நக்கல்லான கேள்விக்கு,


“என்ன இப்படி எல்லாம் பேசுற? என்ன பொண்ணு நீ?” என்று அர்ஜுன் கோவமாக கேட்க, இலகுவாக சோபாவில் மீண்டும் சாய்ந்தவள் “இது கொஞ்சம் பரவால்ல” என்றவளிடம்,


சந்தேகமாக “எது?” என்று கேள்வி எழுப்பிய அர்ஜுனிடம்,


“நான் உன் கண்ணுக்கு பொண்ணா தெரிஞ்சது தான். இல்லன்னா நா உன் கண்ணுக்கு தங்கச்சியால தெரிஞ்சு இருப்பேன்” என்ற பேச்சைக் கேட்டு வாயை திறந்தபடி அதிர்ந்து நின்றான்.


அவனின் பாவனையை பார்த்தவள் “ஷாக்கை குறை ஷாக்கை குறை… இதுக்கே இவ்ளோ ஷாக் ஆனா எப்டி?” என்றவள் யோசிப்பது போல் பாவனை காட்டி,


“உன்ன நெனச்சவும் பாவமா தான் இருக்கு. ஓகே… என்னை தவிர மிச்ச எல்லா பொண்ணுங்களையும் தங்கச்சியா ஏத்துக்கோ. அதுக்கு நான் உனக்கு பெர்மிஷன் தரேன். இப்போ வரட்டா” என்றபடி திரும்பி இரண்டடி எடுத்து வைத்தவள்,


ஒரு நிமிடம் நின்று தலையை மட்டும் திருப்பி “ஆ… அப்புறம் முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்… லவ் யூ” என்று அவனை பார்த்து அழுத்தமாக கூறியபடி தன் அண்ணனை நோக்கி சென்றிருந்தாள்.


அவளின் அந்த லவ் யூவில் அர்ஜுன் தான் “எப்டிரா?” என்று அதிர்ந்து நின்றான்.


தொடரும்….
கருத்து திரி
 
அத்தியாயம் - 11
eiR2BG754252.jpg

மறுநாள் காலை முதல் ஆளாக 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தாள் சரண்யா.

அலார சத்தத்திற்கு அடித்து பிடித்து எழுந்தவள் மணியை பார்க்க கடிகாரம் மணி ஐந்து என்று காட்டிக் கொண்டிருந்தது. ‘அப்பாடா கரெக்டா எந்திரிச்சிட்டோம்’ என்று சந்தோஷமாக எண்ணமிட்டபடி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் முதல் வேலையாக அர்ஜூனை தொலைபேசியின் வாயிலாக அழைத்தாள்.

ஆனால் அந்தப் பக்கம் அவன் அந்த அழைப்பை எடுப்பது போல் தெரியாததால் அடுத்த அழைப்பாக கதிர்வேலுக்கு அழைத்தவள், தான் அதிகாலை 5 மணிக்கு எழும்பியதை அவரிடம் பதிவு பண்ணி தன் ஆருயிர் நண்பனை அவரிடம் மாட்டிவிட்டு அவனை உடனே எழுப்பும் பொறுப்பை கதிர்வேலிடம் ஒப்படைத்து அழைப்பை துண்டித்தாள்.

தன் நண்பன் வாங்க போகும் வசை மாரியை நினைத்து சந்தோஷம் பொங்க தன் அறையில் இருந்து வெளியேறியவள் சத்தமாக

“எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……”

என்று பாடியபடி தந்தை அறையினுள் நுழைந்தவள், அங்கு அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து தலையில் அடித்தாள். “இந்த அன்புபாக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல. சாரு குட்டி தான் குட் கேர்ள். அஞ்சு மணிக்கு டாண்னு எழுந்துட்டா” என்று தன்னை தானே பாராட்டிக் கொண்டவள், எல்லோரையும் எழுப்பும் பொருட்டு டிவியை ஆன் செய்து அதுவரை அவள் பாடிய பாடலை மொபைல் வழி டிவியில் கனெக்ட் செய்து அலற விட்டபடி அதனுடன் சேர்ந்து தானும் கத்த தொடங்கினாள்.

“ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……”

“ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட ஊ” என்று விடிய காலையில் அவள் எழுப்பிய விதவிதமான ஊள சத்தத்தில் அடுத்த நொடி விஷ்ணுவும், அன்புபாவும் ஹாலில் ஆஜராகி இருந்தனர்.

தன்னுடைய அலறலில் தன் அவர்கள் அலறி அடித்து வந்துள்ளனர் என்பதை அறியாதவளை போல் “ஏய் சூப்பர் ரெண்டு பேரும் எந்திரிச்சிட்டிங்களா? போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்க நம்ம ஜாகிங் போலாம். அர்ஜுன் இப்ப வந்துருவான். ஹாண்ட்ஸம், வர்ஷூம் கிளம்பிட்டானு சொன்னாங்க. நீங்க ரெடியாயிட்டு வாங்க நா உங்க எல்லாருக்கும் காபி போடுறேன்” என்று அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையினுள் நுழைந்தாள்.

அதுவரை அமைதியாக அவளை ரசித்தபடி இருந்த விஷ்ணு அவளின் காபியில் ஒரு நொடி ஜெர்க் ஆகி “என்னது ரியா காபி போட போறாளா? மாமா நான் வேணா காபி” என்றவனை தடுத்தவர் “நீ பயப்படுற மாதிரிலாம் எதுவும் இல்ல. இன்ஸ்டன்ட் காப்பி தான்” என்று சிரிப்புடன் கூறியவர் பிரஷ்ஷாக அவர் அறைக்குள் நுழைந்தார்.

“இவ கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே” என்று எண்ணமிட்டபடி அவனும் அவன் அறைக்குள் புகுந்தான்.

மீண்டும் அவர்கள் வரும்போது காபி குடித்தபடி சரண்யாவும், வர்ஷாவும் பேசிக் கொண்டிருக்க, அர்ஜுனோ சோபாவில் சாய்ந்து விட்ட தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.

சரண்யாவையும் வர்ஷாவையும் தொடர்ந்து அர்ஜுனை பார்த்த விஷ்ணுவோ அவன் அருகே நெருங்கி அவன் தலையில் பலமாக ஒரு கொட்டு கொட்டினான்.

திடீரென்று தன்னை தாக்கிய வலியில் பதறி எழுந்தவன், “அடியே குள்ள கத்திரிக்கா உனக்கு எப்ப பாரு இதே வேலையா போச்சு… ஒரு நாளு சீக்கிரம் எழுந்துட்டு நீ பண்ற தொல்லை தாங்க முடியல, உன்னைய…” என்று எப்போதும் போல் சரண்யாவை திட்டியபடி எழுந்தவன் தன் முன் கோபமாக நின்ற விஷ்ணு, சரண்யா இருவரையும் பார்த்து திரு திருவென விழித்தான்.

‘என்ன ரெண்டு பேரும் என்னையவே கோவமா பாக்குறாங்க, நான்தானே கோவப்படணும் ஆமா இப்ப என்ன கொட்டுனது யாருனு தெரிலயே… அர்ஜுன் என்னடா இது உனக்கு வந்த சோதனை? இப்ப இந்த ரெண்டு சோதனைங்க கிட்ட இருந்து நான் எப்டி தப்பிக்கிறது?’ என்று மனதிற்குள் புலம்பியவன்

தன்னை முறைத்துக் கொண்டிருந்த சரண்யாவை தானும் முறைப்பது போல் பார்த்தவன் “சீக்கிரம் எந்திரிச்சா மட்டும் பத்தாதுடி குள்ள கத்திரிக்கா எழுந்தவுடனே எக்சைஸ் பண்ணனும்” என்றவனை முறைத்தவள் “முதல்ல என்ன எதுக்குடா திட்டுன? பன்னி, அர லூசு, நான் ஏன்டா எக்சைஸ் பண்ணனும்? லூசு, குரங்கு, தவளை” என்று வாய்க்கு வந்தபடி தொடர்ந்து திட்டியவளிடம்

“அதானே நீ என்ன எக்ஸசைஸ் பண்ணவா எழுந்த, வாய் பாக்க தானே எழுந்த… போ போய் அந்த வேலையை பாரு. போங்க போங்க எல்லாரும் எந்திரிச்சி எக்சசைஸ் பண்ண போங்க” என்று கூறியவாறு முதல் ஆளாக விஷ்ணு ஏற்படுத்தி வைத்திருந்த ஜிம் அறைக்குள் நுழைந்தான்.

அவனை திட்டியபடியே சரண்யாவும் தொடர்ந்து அந்த அறைக்குள் நுழைய அவர்களின் இந்த வாய் போரில் அண்ணனும், தங்கையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

“எல்லாம் எக்யூப்மெண்ட்ஸ்சும் ரெடி பண்ணிட்டியா அண்ணா?” என்று கேட்டபடி இருவரும் அந்த அறைக்குள் நுழைய அங்கு சரண்யாவும் அர்ஜுனும் தங்களின் வாய்போரை மறந்து அங்கிருந்த ஒவ்வொரு கருவியையும் தொட்டுப் பார்ப்பதும் அதை பற்றி ஏதோ தங்களுக்குள் பேசியபடி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்தபடியே வர்ஷா அங்கிருந்து ட்ரெட்மில்லில் ஓட தொடங்கனாள்.

தான் அணிந்திருந்த பனியனை தலைவழியாக கழட்டிய விஷ்ணு தன் கட்டுடல் தெரியும் படி அங்கிருந்த கம்பியில் தொங்கியபடி எக்ஸர்சைஸ் பண்ண தொடங்கினான்.

தங்களுக்குள் ஏதோ பேசியபடி இருந்த அர்ஜுனும் சரண்யாவும் மற்ற இருவரின் சத்தத்தில் ஆர்வமாக அவர்களின் புறம் திரும்ப அவர்களின் பார்வை முதலில் படிந்தது என்னவோ விஷ்ணுவின் உடலில் தான்.

“வாவ் செம்ம பாடி” என்று எண்ணமிட்ட அர்ஜுன் ‘நமக்கே இப்படின்னா அப்ப சாரு நிலைம’ என்றபடி அவளின் புறம் திரும்பி பார்க்க, அவளோ வைத்த விழி எடுக்காமல் ஏதோ அதிசய பொருளை பார்ப்பது போல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அந்த அதிசய பார்வையை பார்த்த அர்ஜுனோ, சட்டென்று இதழில் பூத்த புன்னகையோடு விஷ்ணுவை பார்க்க, அவனும் அவளின் அந்த ஆளை விழுங்கும் பார்வையில் அதிசயித்து போயிருந்தான்.

‘ஐயோ கொல்றாளே! இந்த அர்ஜுன் வேற குறுகுறுன்னு பாக்குறானே! டேய் விஷ்ணு ஸ்டடிடா ஸ்டடி. எந்த ரியாக்சனையும் காட்டிராத டா’ என்று தனக்கு தானே அறிவுறுத்தியபடி சலனம் இல்லாத முகத்துடன் தன் வேலையை தொடர்ந்தான்.

விஷ்ணுவையும், சரண்யாவையும் மாறி மாறி பார்த்த அர்ஜுன் ஒரு குறும்பு புன்னகையுடன் ‘இனி நமக்கு இங்க வேலை இல்ல’ என்றபடி அந்த அறையில் இருந்து வெளியேறினான்.

அர்ஜுனனின் அதே நிலைதான் வர்ஷாவிற்கும் சரண்யாவின் நிலையை பார்த்தபடி சிரிப்புடன் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தவள், தன் அண்ணன் புறம் பார்க்க அவனும் சரண்யாவின் பார்வையில் தன் பார்வையை கலந்தவாறு உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்தாள்.

தான் உடற்பயிற்சி செய்வதை பார்ப்பதற்காக வந்த தன் அண்ணி, உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்த நொடி முதல் தான் இருப்பதையே மறந்து நின்ற நிலை பார்த்து சிரித்தாள்.

அவர்களுக்கு நடுவில் தான் அதிகப்படி என்பதை உணர்ந்து சத்தம் இல்லாமல் அர்ஜுனை பின் தொடர்ந்து அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

அவர்கள் இருவரும் வெளியேறியதை கவனித்த விஷ்ணு தன் பார்வை முழுவதையும் சரண்யாவின் கண்களில் ஆழ புதைத்தான்.

அதுவரை அவனின் உடலில் பார்வையை படரவிட்டபடி இருந்தவள் அவனின் கண்களை சந்திக்க அவனின் அந்த உயிரை உறிஞ்சும் பார்வையில் தன்னுள் ஏதோ ஒன்றை புதிதாக உணர்ந்தாள் சரண்யா.

சிறிது நேரம் கூட அவன் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தன் பார்வையை அவனிடம் இருந்து படபடப்புடன் அகற்றியவள் முதல்முறையாக ஒருவரின் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறினாள்.

அவளின் அந்த தடுமாற்றத்தை கவனித்த விஷ்ணுவோ புன்னகையை தன் இதழ்களுக்குள் மறைத்தவாறு வசீகரப் பார்வையோடு அவளை விழுங்குவது போல் பார்த்தபடி அவளை நோக்கி வர தொடங்கினான்.

தடுமாற்றத்துடன் அந்த அறையில் பார்வையை படரவிட்டபடி, அவன் தன்னை நோக்கி வருவது தெரிந்து அவனை பார்த்தவள் மீண்டும் அவனின் அந்த பார்வையில் சொல்லத் தெரியாத உணர்வு ஒன்றை தன்னுள் உணர்ந்தாள். ஆனால் முதல் தடவை போல் தன் பார்வையை அவனிடம் இருந்து பிரிக்க முடியாமல் அவன் பார்வையில் கலந்தவளின் உடல் பதட்டத்தில் நடுங்கியது.

அவனிடமிருந்து தன் கண்களை பிரித்தெடுக்க முடியாமல் பதட்டத்தில் நடுங்கியபடி நின்றிருந்தவளை நிதானமாக நெருங்கினான் விஷ்ணு.

அவன் நெருக்கத்தில் முகத்தில் வியர்வை பூக்க நடுங்கியவளை பார்த்தவன் மனதிலும் மெல்லிய நடுக்கம் தான்.

அவளை ஆழ்ந்து பார்த்தபடி அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவன் அவளின் அருகே இருந்த வெயிட்டிங் பெஞ்சில் படுத்தபடி அடுத்த உடற்பயிற்சியை செய்ய தொடங்கினான்.

அறையில் இருந்து வெளிவந்த வர்ஷாவோ அர்ஜுனின் எதிரே இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்தவாறு அவனேயே வைத்த கண் வாங்காமல் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க,

‘இவ பார்வையே சரியில்லையே’ என்று எண்ணமிட்டவன் அவளின் கண் சிமிட்டா பார்வையில் அவளின் மேல் இருந்த அவன் பார்வையை விலக்கி சட்டென்று குனிந்த கொண்டான்.

‘படிக்கிற வயசுல இந்த மாதிரி நடந்துக்க கூடாதுனு இவ கிட்ட எப்டி சொல்றது?’ என்று நினைத்தபடி மெதுவாக தன் கண்களை மட்டும் உயர்த்தி மீண்டும் அவன் பார்வையை அவள் மீது படர விட, இப்போதும் எந்தவித மாற்றமும் இல்லாமல் அவள் பார்வை அவன் மீது தான் அழுந்த பதிந்து இருந்தது.

மீண்டும் தன் கண்களை அவளிடம் இருந்து பிரித்தவன், ‘ஆத்தி என்ன இப்படி பாக்குற இவ? பார்வைய பாத்தா கூடிய சீக்கிரமே நான் இவளுக்கு பொண்டாட்டி ஆகி அவ எனக்கு புருஷனாகிருவா போலயே’ என்று எண்ணியவன் ‘சீ… து… என்ன நினைப்பிது நா புருஷனாகி அவ எனக்கு பொண்டாட்டியா மாறிருவா போலையே! இது மட்டும் நடக்கவே கூடாதுடா அர்ஜுன். ஏற்கனவே அந்த கத்திரிக்காய்க்கு நம்ம பாதி நேரம் அடிமையா தான் இருக்கும். இப்ப இவளை கல்யாணம் பண்ணா இவளுக்கு நம்ம முழுநேர அடிமையாக வேண்டியது தான். இந்த சம்பவத்தை நடக்க விட்றாதடா அர்ஜூன். உனக்கு சிக்காதுடி இந்த சில்வண்டு… இப்போ பாரு அய்யவோட பர்பாமென்ஸ’ என்றவன் கனநேரத்தில் கண்கள் பிரகாசமாக அவளை நிமிர்ந்து பார்த்து,

“இங்க பாரு நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்” தயங்கி தொடங்கியவன் திடமாக கூற “நம்பறதுக்கு இல்ல” என்று அடுத்த நொடி அசராமல் கூறியிருந்தாள் வர்ஷா.

“ஏன்? ஏன்? ஏன்?” என்றவனின் கேள்விக்கு “இப்ப எதுக்கு இத்தனை ஏன் சில முகத்தை பார்த்தாலே தெரிஞ்சிடும் அவங்க சில விஷயங்களுக்கு ஒத்து வருவாங்களா? ஒத்து வர மாட்டாங்களானு? நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட” என்று மிக அலட்சியமாக வேறு கூறினாள்.

“அதுவும் இல்லாம நீ உண்மையிலே லவ் பண்ணி இருந்தா அதை நான் லவ்வை சொன்ன உடனே நீ சொல்லி இருப்ப இப்படி ஒரு நாள் யோசிச்சி என்ன சொல்லணும்னு பிளான் பண்ணி பேசிட்டு இருக்க மாட்டே” என்று கூறியவள்,

“சோ இந்த மாதிரி சில்லியா பிளான் எதுவும் பண்ணாம, நம்ம கல்யாணத்துக்கு வெயிட் பண்ணு மாமா உன் லைப் செட்டில் தான்” என்றவள் சிறு தோல் குலுக்கலுடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அர்ஜுன் போகும் அவளையே புரியாமல் பார்த்தபடி விழித்துக் கொண்டிருந்தான் என்றால் சரண்யாவோ முதன் முதலாக விஷ்ணுவின் அந்த பார்வையையும், அதற்கு தன்னுடைய எதிர்வினையையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்…
கருத்து திரி
https://pmtamilnovels.com/index.php?threads/என்னுள்-உன்னை-கண்டேனடா-கருத்து-திரி.18/
 
அத்தியாயம் - 12

eiDMU8254294.jpg

தன்னுள் நிகழும் மாற்றத்தில் குழம்பி இருந்தவள் அவனின் பார்வையில் இருந்து விடுபட்ட பின்பும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்தபடி அப்படியே நின்றிருந்தாள்.


சிலையாய் நின்றிருந்தவளின் நிலை அறிந்த விஷ்ணு தன்னையே நொந்தபடி தன் குரலைச் செருமி அவளை நிலைப்படுத்த முயன்றான்.


அவனின் சத்தத்தில் திடுக்கிட்டவள் அவனைத் திரும்பி பார்க்கவும் பயந்தவளாக பதறி அடித்து படபடப்புடன் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தவள் அங்கு சோபாவில் அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்து தடுமாறி திருட்டு முழி முழித்தாள்.


அதே திருட்டு முழியை தானும் பிரதிபலித்தபடி அவளையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.


இரண்டு நிமிடம் அதே பார்வையுடன் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விஷ்ணு ஜிம் அறையை விட்டு வெளிவரும் சத்தத்தில் பதறி அடித்து ஆளுக்கு ஒரு திசையில் ஓடி ஒளிந்திருந்தனர்.


இருவரின் ஓட்டத்தையும் கவனித்தபடி அறையை விட்டு வெளியே வந்தவன் அவ ஓடுறா சரி, இவன் எதுக்கு இப்போ இப்டி குறுக்க மறுக்க ஓடிட்டு திரிகிறான்? என்று எண்ணமிட்டபடி சரண்யாவின் அறையைப் பார்வையிட்டவன்,



ஒரு ரகசிய சிரிப்புடன் தலையை கோதியபடி தன் அறையினுள் நுழைந்தான்.


அவனின் மனமெல்லாம் தன் பார்வையுடன் கட்டுண்டிருந்த சரண்யாவின் பார்வையையிலேயே நிலைபெற்றிருந்தது.


இங்கு தன் அறையில் இருந்த சரண்யாவோ இன்னும் அந்த நினைவில் இருந்து வெளிவர முடியாமல் படபடப்பு தான் அமர்ந்திருந்தாள்.


கண்ணை மூடினால் அவனின் அந்த ஆழ்ந்த பார்வை தான் கண்முன் வந்து பாவையை சிதறடித்தது.


‘ஆமா அவன் ஏன் என்னை அப்படி பார்த்தான்?’ என்று சிறிது யோசித்தவள் ‘அதுகூட பரவால்ல ஆனா நான் ஏன் அவனை அப்படி பார்த்தேன்?



அவனை தான் எனக்கு பிடிக்காது இல்ல அப்புறம் எப்படி நான் அவன போய் அப்டி பாத்தேன்?’ என்று என்ன யோசித்தும் அதற்கு விடை அறிய முடியாமல் தவித்தவள் இனி அந்த ரன் பேபி ரன்னை பாக்கவே கூடாது என்று முடிவெடுத்தவள்


“எல்லாத்துக்கும் காரணம் இந்த அர்ஜுன் தான்” என்று எப்பொழுதும் போல் பழியை தூக்கி அர்ஜுன் மேல் போட்ட பின்பே அவளின் மனம் ஓரளவு சமாதானம் ஆகியது.


ஒருவழியாக தன்னை தானே சமாதானப்படுத்தியவள் ‘ஆமா நம்ம அந்த ரன் பேபி ரன்னை பாத்து பயந்தோம் சரி. ஆனா அரலூசு அச்சு எதுக்கு அந்த ரன் பேபி ரன்னை பாத்து பயந்து ஓடினான்?’ என்று யோசித்தபடி குளியல் அறைக்குள் நுழைந்தாள்.


அர்ஜுனோ வர்ஷாவின் நடவடிக்கைகளில் கலங்கி போனவன் விஷ்ணுவை எதிர்கொள்ளவே தடுமாறினான்.


விஷ்ணுவை பார்க்க கூடாது என்று தான் எடுத்த முடிவை இந்த ஒரு வாரமாக சரியாக கடைபிடித்தாள் சரண்யா.


அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கினான் விஷ்ணுவை எதிர்கொள்ள தயங்கிய அர்ஜுன்.


அவர்களின் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை கவனித்த விஷ்ணுவும் அவளின் நிலையை புரிந்து இந்த ஒரு வாரமும் அவளை கண்டும் காணாமல் இருந்தான்.


ஆனால் அர்ஜுன் மேல் மட்டும் அடிக்கடி தன் ஆழ்ந்த பார்வையை படர விட்டுக் கொண்டிருந்தான்.


ஒரு வாரமாக அர்ஜுனை கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு அந்த வார விடுமுறை நாளில் அர்ஜுனுடன் பேசுவதற்காக ஹால் சோபாவில் தன் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டே அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.


எப்போதும் போல் விடுமுறை நாளில் தாமதமாக எழுந்த அர்ஜுன் காலை உணவிற்காக தன்னறையில் இருந்து வெளிவந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த விஷ்ணுவை பார்த்து திடுக்கிட்டான்.


‘அண்ணா இன்னும் ஆபீஸ் போலையா?’ என்று எண்ணியவன் சட்டென்று திரும்பி தன் அறைக்குள் புகுந்து கொள்ள முயல,


அதற்குள் விஷ்ணுவின் “அர்ஜுன்” என்ற அழுத்தமான அழைப்பு அவனை தடுத்து நிறுத்தியது.


விஷ்ணுவின் அழைப்பை கேட்டு தலை குனிந்தவாறு தயங்கியபடி அவன் முன் வந்து நின்றான் அர்ஜுன்.


"உன் கூட கொஞ்சம் பேசணும் வா" என்ற அழைப்போடு விஷ்ணு எழுந்து முன்னே செல்ல, அர்ஜுனும் பலியாடு போல் பதட்டத்துடனே அவன் பின்னால் நடந்தான்.


தன் முன்னே தலைகுனிந்து நின்றிருந்த அர்ஜுனை பார்த்த விஷ்ணுவின் முகம் கணிந்திருந்தது.


“டேய் என்னை நிமிர்ந்து பாரு” என்றவனின் அதட்டலில் அவனை நிமிர்ந்து பார்த்தவனை “இப்போ எதுக்கு இப்டி என் முன்னாடி வராம கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்க?” என்று வினவினான்.


அதை எப்டி சொல்வது என்று தயங்கிய அர்ஜுன் அவனை பரிதாபமாக பார்த்து வைத்தான்.


முதலில் வர்ஷாவின் தன் மீதான காதலை பற்றி விஷ்ணுவிடம் கூற எண்ணிய அர்ஜுன், விஷ்ணுவிடம் அதை கூறவும் முடியாமல், விஷ்ணு எதிர்கொள்ளவும் முடியாமல் தயங்கி தடுமாறிக் கொண்டிருந்தான்.


அவனின் தடுமாற்றத்தை பார்த்த விஷ்ணுவோ “ரொம்ப கஷ்டம்டா உன்னோட என் தங்கச்சி பாவம்” என்று சிரிப்புடன் கூறினான்.


அதைக் கேட்டு அர்ஜுனோ புரியாத பாஷையை கேட்டது போல் மலங்க மலங்க விழித்தான்.


‘எதே, அப்போ நான் தான் அவுட்டா? நல்ல அண்ணன் நல்ல தங்கச்சி… எல்லாம் கூட்டு சாதி போலல்லா இருக்கு. ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன்?’ என்று எண்ணியவன் முகத்திலோ டன் கணக்கில் அசடு வழிந்தது.


அதை சிரிப்புடன் பார்த்த விஷ்ணுவோ, “ஆனாலும் நீ ரொம்ப நல்லவன் டா” என்றபடி அர்ஜுனின் தலை கலைத்து விட்டு, “வர்ஷா உன்ன லவ் பண்றது எனக்கு முன்னாடியே தெரியும். அதை உன்கிட்ட சொல்லிட்டானும் தெரியும்.


எப்படின்னு பாக்குறியா? அதான் ஒரு வாரமா நீ தான் உன் மூஞ்சிலேயே எழுதி ஓட்டிட்டு திரிஞ்சியே அதுல தான் அவ உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானு புரிஞ்சுது.


சரி பையன் குழப்பத்துல இருக்கான் ரெண்டு மூணு நாளுல தெளிஞ்சுருவான்னு பார்த்தேன். ஏன்னா உங்களுக்குள்ள நான் வரது சரியில்லைன்னு தோணுச்சு


ஆனா நீ ஏதோ தப்பு பண்ண மாதிரி என்னை பாக்காம அலஞ்சியா… அதான் வேற வழி இல்லாம இப்போ உன்ன கூப்பிட்டு பேச வேண்டியதா போச்சு.


இங்க பாரு அர்ஜுன் லவ் எப்ப வரும்னு நமக்கு தெரியாத மாதிரி அது யார் மேல வரும்னும் கூட நமக்கு தெரியாது. வர்ஷாக்கு உன் மேல வந்த மாதிரி உனக்கு யார் மேல வேணாலும் வரலாம். அத பத்தி நான் பேச வரல,




உனக்கு புடிச்சிருக்கா ஓகே சொல்லு. பிடிக்கலையா நோ சொல்லு. இப்ப வேண்டாம்னு தோணுதா இப்ப வேண்டாம்னு சொல்லு. அத விட்டுட்டு உன்னை போட்டு குழப்பாத.


இது உன் வாழ்க்கை இதை நீதான் முடிவு பண்ணனும். அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அவங்க மனசு எல்லாம் முக்கியமில்லை இன்க்ளூடிங் மீ சரியா…


அவளுக்கு நீ ஓகே சொன்னாலும், இல்லனாலும் அது உங்க பிரச்சனை அதுக்குள்ள நான் வரமாட்டேன் நம்ம எப்பவும் இதே போல் தான் இருப்போம்… இருக்கணும் சரியா” என்றவன் அர்ஜுனனின் சமத்தான தலையாட்டலில் புன்னகை பூத்தான்.


“சரி வா இனி அடுத்த டிக்கெட்டை சரி பண்ணுவோம்” என்றபடி நடக்க அவனுடன் நடந்தபடி “ஆமா ணா சரணும் ஒரு வாரமா சரி இல்ல, காரணம் கேட்டா திரு திருனு முழிச்சிட்டு நீ தான் காரணம்னு பழியை தூக்கி என் மேலேயே போடுரா” என்க


“விடு நா பாத்துக்கிறேன்” என்றவனின் மனமோ ‘சே இருந்தாலும் நம்ம இப்படி படிக்கிற பிள்ளைங்க மனச கெடுத்து இருக்க கூடாது. இனி கவனமா இருக்கணும். இப்படி அவ மனச சலன படுத்த கூடாது தப்பு’ என்று எண்ணமிட்டது.


வீட்டினில் நுழைந்ததும் சோபாவில் அமர்ந்தவன் மடி கணினியை எடுத்து தான் விட்டு சென்ற வேலையை தொடர்ந்தவாரே”அர்ஜுன் ரியாவ…” என்றவன் உதட்டை கடித்து கண்களை ஒரு நிமிடம் இருக மூடி திறந்து “சரண்யாவ கூப்பிடு” என்றவாறு அவள் அறையினை பார்வையிட்டான்.


அவனின் பாவனையை பார்த்த அர்ஜுனோ “பார்டா” என்று எண்ணியபடி “சரண்ண்ண்ண்ண்” என்று கத்தி அழைத்தபடி விஷ்ணுவின் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.


“இப்ப எதுக்கு இந்த கரடி இந்த கத்து கத்துது லீவ் நாள்ல கூட ஒழுங்கா தூங்க விட மாட்டான் சரியான அரை லூசு” என்று எண்ணியபடி கதவை திறந்தாள்.


அதுவரை அந்த அறையையே பார்வையிட்டுக் கொண்டிருந்த விஷ்ணு அவள் வருவதை பார்த்ததும் மடிக்கணினியில் தீவிரமாக வேலை செய்வது போல் பாவனை செய்தான்.


அங்கு சோபாவில் அமர்ந்திருந்த விஷ்ணுவைப் பார்த்து ஜெர்க்கானவள் அப்படியே யூட்டன் அடித்து தன் அறைக்குள் நுழைய இருந்தவளை அர்ஜுனின் “ஏய் சாரு இங்க வா விஷ்ணு அண்ணா கூப்பிட்டாங்க” என்ற அழைப்பு தடுத்தது.


‘நம்மளை எதுக்கு கூப்பிடுறான்? ஒரு வாரமும் நல்லா தானே இருந்தது. இப்ப என்னவாம்?’ என்று நினைத்தபடி அர்ஜுனின் அருகில் வந்து நின்றாள்.


தன்னைப் போலவே அவளின் அறைக்குள் பதுங்கும் நடவடிக்கை பார்த்தவன் ‘நண்பிடா… சிந்தனையிலும் செயலிலும் அப்படியே என்ன மாதிரியே இருக்கிறா’ என்று தங்களின் ஒத்த செயலை எண்ணி அல்பமாக மகிழ்ந்து கொண்டிருந்தான்.



தன் மடிக்கணினியில் இருந்து பார்வையை எதிரில் இருந்தவர்களிடம் செலுத்திய விஷ்ணு தன்னை பார்ப்பதை தவிர்ப்பவளை பார்த்தபடி “இந்த வாரம் மறுபடி நீங்க ரெண்டு பேரும் கிளாஸ் கட் அடிச்சீங்களா?” என்று அழுத்தமாக வினவினான்.


“நாங்க படத்துக்கு எல்லாம் போல” என்று நல்ல பிள்ளை போல் சரண்யா முணுமுணுப்பாக கூற, அதை ஆமோதித்து தலையாட்டினான் அர்ஜுன்.


அவர்கள் இருவரையும் பார்த்து பல்லை கடித்தவன் “கிளாசுக்கு போகாம மரத்தடியில் போய் இருக்கிறதையும் கிளாஸ் கட் அடிக்குறதுனு தான் சொல்லுவாங்க. முதல்ல ரெண்டு பேரும் நிமிந்து என்ன பாருங்க” என்றவனின் அதட்டலில் சட்டென்று தன்னை அறியாமல் நிமிர்ந்து அவன் கண்களை சந்தித்தாள் சரண்யா.


அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளின் கண்களை கோபத்துடன் எதிர் கொண்டான் விஷ்ணு.


அவன் கண்களில் தான் எதிர்பார்த்தது இல்லாததை புரிந்த சரண்யா குழப்பத்துடன் மீண்டும் அவன் கண்களை ஆழ்ந்து பார்த்து அதில் எதையோ தேடினாள்.


அவளின் அந்த தேடலை மனதிற்குள் ரசித்தவன் வெளியே கடுமையாகவே பேசினான்.


“இன்னொரு தடவை இந்த மாதிரி நீங்க கட் அடிக்கிறது எனக்கு தெரிஞ்சது பனிஷ்மென்ட் சிவியரா இருக்கும்” என்று அழுத்தமாக கூறினான்.


அதைக்கேட்ட அர்ஜுனோ ‘அப்பாடா அடுத்த தடவை தான் பனிஷ்மென்ட்டா நா கூட இன்னைக்கு தான் பனிஷ்மென்ட்டோனு பயந்துட்டேன்’ என்று நினைத்த அடுத்த நொடி "இந்த தடவை சின்ன பனிஷ்மென்ட் தான்" என்றவன்


"ரெண்டு பேரும் தோட்டத்துல இருக்க பென்சில நின்னுட்டு இனிமேல் நாங்க கிளாஸ கட் அடிக்க மாட்டோம் அப்டினு மாறி மாறி சத்தமா சொல்லிட்டே நின்னு அதை ஒரு அம்பது தடவை அப்படியே எழுதிட்டு வாங்க" என்று கூறினான்.


அதைக் கேட்ட அர்ஜுனோ 'என்னது பெஞ்சு மேல நின்னு கத்தணுமா இது என்னடா புது டைப்பா இருக்கு, காலேஜ் கட் அடிச்சதை இப்படி ஊருக்கே கேட்க மைக்க போட்டு சொல்ற மாதிரி சொல்லச் சொல்றாரே,


ஆமா இந்நேரம் என் சாரு குட்டி சத்தம் போட்டு இங்க ஒரு போர்க்களத்தையே உருவாக்கி இருக்கனுமே என்ன சத்தத்தையே காணோம்' என்ற படி சரண்யாவின் புறம் திரும்ப அவளோ விஷ்ணுவின் முகத்தையே பார்த்தபடி ஏதோ யோசனையில் நின்றிருந்தாள்.


"பெரிய சயின்டிஸ்ட் இவ அப்படியே நின்ன இடத்துல இருந்து ஆராய்ச்சி பண்றா அடச்சி" என்று கோபமாக அவளின் தலையில் கொட்டியவன் விஷ்ணுவின் பனிஷ்மென்ட் பற்றி சொல்லி முடித்தவன் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்தான்.


அதுவரை குழப்பத்தில் இருந்த சரண்யாவோ "நீங்க சொன்ன பனிஷ்மென்ட் எங்களால பண்ண முடியாது" என்று கோபமாக கூறினாள்.


அவளை நிமிர்ந்து பார்த்த விஷ்ணுவோ அடுத்து அர்ஜுனை பார்க்க தப்பித்த உணர்வை முகத்தில் காட்டியபடி அவள் அருகில் அமைதியாக நின்றிருந்தான்.


இருவரையும் அழுத்தமாக பார்த்த விஷ்ணு நிதானமாக "அப்படியே நீங்க கட்டடிச்ச கிளாஸ் மேம் பார்த்து ரிக்வெஸ்ட் பண்ணி நேத்து நடந்த கிளாஸ்ச இன்னைக்கு அட்டென்ட் பண்ணிட்டு வாங்க" என்றவன்

"அடுத்து ஒரு வார்த்தை உங்ககிட்ட இருந்து முடியாதுன்னு வந்துது அடுத்த பனிஷ்மென்ட்" என்றவனை கோபமாக பார்த்தபடி நின்றிருந்தனர் அர்ஜுனும் சரண்யாவும்.


"ஆமா இவரு பெரிய பிக் பாஸ், நெக்ஸ்ட் நெக்ஸ்ட்னு அடுத்த அடுத்த டாஸ்கா போயிட்டு இருப்பாரு" என்று கோபமாக முணுமுணுத்தாள் சரண்யா.


தலையை தொங்க போட்டபடி நின்ற அர்ஜுனின் மனமோ 'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டனவே' என்று எண்ணமிட்டது.


இத்தனை பேச்சிற்கும் நடுவே சரண்யாவோ அவனின் கண்களிலே குழப்பத்துடன் ஆழ்ந்திருந்தாள்.


அவளின் அந்த குறுகுறு பார்வையை தாங்க முடியாதவன் தன் பார்வையை அர்ஜுன் மேல் நிலை நிறுத்தி ‘ஐயோ இப்படி குறுகுறுன்னு பாத்து என்னை கொல்றாளே!

விஷ்ணு ஸ்டடி ஸ்டடி கொஞ்சம் உன் பார்வ மாறினாலும் உன் ரியா பேபி இன்னும் ஒரு வாரம் உன் கண்ணுல பட மாட்டாள் சோ ஜாக்கிரதை’ என்று தனக்கு தானே அறிவுறுத்தியவன்


“என்ன அப்படியே நின்னுட்டு இருக்கீங்க போங்க ரெண்டு பேரும்” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட்டவன் ‘அப்பாடி தப்பிச்சோம்’ என்று நினைத்தபடி தன் மடிக்கணினியினுள் தலையை நுழைத்தான்.


அவனுக்கு நேர் மாறாக சரண்யாவோ ‘இன்னைக்கு ஏன் அந்த கண்ணை பாத்து எனக்கு எதுவும் தோணல, ஆனா அன்னைக்கு…” என்று அதை நினைத்தவள் தன் தலையை சிலுப்பி அந்த நினைவை விரட்டியவள்


‘ஆனா அது எப்படி ஒரே கண்ணு ரெண்டு மாதிரி இருக்கும்? என்னவா இருக்கும்?’ என்று குழம்பியபடியே அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றாள்.


அவளின் அந்த பார்வையை பார்த்தவன் மனதிற்குள்ளே அவளை ‘கியூட் பேபி’ என்று கொஞ்சி கொண்டான்.


"ஏன் விஷ்ணு ணா ஒரே ஒரு கிளாஸ் கட் அடிச்சதுக்கு இவ்ளோ பெரிய டாஸ்கா, இதெல்லாம் ரொம்ப அநியாயம் ஆமா சொல்லிட்டேன்" என்று தரையில் கால் உதைத்து கோபமாக கூறியவன் முகத்தை உர்ரென்று வைத்த படி சரண்யாவை பின் தொடர்ந்து சென்றான்.


'எது இதெல்லாம் ஒரு டாஸ்க்காடா உங்களுக்கு, அவன் அவன் காதலிக்கிற பொண்ணையே காதலா பார்க்க கூடாதுன்னு இதுவரைக்கும் வேல்டுலயே எவனும் பண்ணாத டாஸ்க் எல்லாம் பண்ணிட்டு இருக்கான். இதுல இதுங்க வேற, எல்லாம் என் நேரம்' என்று மனதில் புலம்பியவாறே தன் வேலையை தொடர்ந்தான் விஷ்ணு.


தொடரும்…


கருத்து திரி : https://pmtamilnovels.com/index.php?threads/என்னுள்-உன்னை-கண்டேனடா-கருத்து-திரி.18/post-7569
 
Last edited:
அத்தாயாயம் - 13
eiVMXAH24099.jpg


தங்களுக்குள் மாறி மாறி ஒரு பரிதாப பார்வையை செலுத்திக்கொண்ட சரண்யாவும் அர்ஜுனும் வேறு வழி இன்றி தோட்டத்து பெஞ்சின் மேல் ஏறி கையில் இருந்த நோட்டில் எழுதியவரோ கத்த தொடங்கினர்.


"நான் இனிமேல் கிளாஸ் கட்ட அடிக்க மாட்டேன்" என்று சரண்யா கத்தி கூற அதற்குப் பின் பாட்டாக அர்ஜுனனின் "ஆமா நானும் இனிமேல் கட் அடிக்க மாட்டேன்" என்ற குரல் விஷ்ணுவின் செவியில் விழுந்து அவனின் இதழை மலர செய்தது.


இவர்களின் இந்த சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த அன்பரசு.


ஹாலில் இருந்த விஷ்ணுவை பார்த்து குழப்பத்துடன் காலங்காத்தால "அந்த ரெண்டு குட்டி குரங்கும் எதுக்கு இப்படி கத்திட்டு கிடக்குதுங்க?" என்று கேட்டவர் அவனின் பதிலை கூட எதிர்பார்க்காமல் குரல் வந்த திசை நோக்கி ஓடினார் அவர்களின் பெரிய குரங்கான அன்பரசு.


தோட்டத்தில் பெஞ்சின் மேல் நிற்பவர்களை பார்த்து ஒன்றும் புரியாமல் அவர்கள் அருகே சென்ற அன்பரசிற்கு அவர்களின் கூற்று இப்போது தெளிவாக கேட்க அடுத்த நொடி குபீர் என்று சிரித்து இருந்தார்.


திடீரென்று சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்தவர்கள் தங்களுக்கு எதிரே நின்று சிரித்துக் கொண்டிருந்த அன்பரசுவை இருவரும் ஒன்று சேர்ந்து கோபத்தில் தாறுமாறாக மூச்சு விட்டபடி முறைத்து பார்த்தனர்.


"முதல்ல சிரிக்கிறதை நிறுத்துங்கப்பா" என்ற இருவரின் அதட்டலில் சிரிப்பை நிறுத்தியவர் இப்போது இருவரையும் பாவமாக பார்த்து வைத்தார்.


"இந்த டிராமா போடுற வேலையெல்லாம் இங்க வேணாம்" என்று புசுபுசுவென மூச்சு விட்டபடி கூறினான் அர்ஜுன்.


"ஆமா" என்று அவனின் பேச்சிற்கு வழிமொழிந்த சரண்யாவும் "இந்த டிராமா போடுற முகத்தை எங்க கிட்ட காட்டக்கூடாது. கத்து கொடுத்த எங்ககிட்டயே உங்க மொத்த வித்தையும் காட்டாம அதோ அங்க ஹால்ல இருக்காரே ஒருத்தர் அவர்கிட்ட போய் இதெல்லாம் என்னன்னு கேளுங்க"


"நாங்க என்ன ஸ்கூல் போற குழந்தைங்களா இம்போசிஷன் எழுதுறதுக்கு. காலேஜ் கட் அடிக்குறது எல்லாம் ஒரு குத்தம்னு சொல்லிட்டு இருக்காரு பா காலேஜ் படிக்கும் போது காலேஜ் கட் அடிக்கலைனா அதுல காலேஜுக்கு என்ன மரியாதை நீங்களே இதுக்கு ஒரு நியாயத்தை சொல்லுங்கப்பா" என்றாள்.


அவளின் பேச்சுக்கு திருதிருவென விழித்தவர் மனமோ 'இப்படி ஒரு அநியாயம் பண்ணிட்டு நியாயமே இல்லாத விஷயத்துல நியாயத்தை சொல்ல சொன்னா நா நியாயத்துக்கு எங்க போவேன்' என்று நினைத்தவர் 'என்ன நம்ம மனசும் சாரு குட்டி மாதிரியே பேசுது ஆமா இப்ப நா என்ன சொல்றது?' என்று யோசித்தவர்


கோபப்படுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு "ஆமா இம்போசிஷன் எழுத நீங்க என்ன சின்ன குழந்தைகளா? இருங்க நான் விஷ்ணு கிட்ட கேட்கிறேன்" அவர் பேசி முடிப்பதற்கு முன் "என்ன கேட்கணும் மாமா?" என்று அவர் முதுகு பின் இருந்து விஷ்ணுவின் குரல் கேட்டது.


"அது வந்து பா இம்போசிஷன்…" என்று தொடங்கியவரை "என்ன என்ன சொன்னீங்க மாமா ஒழுங்கா கேக்கல" என்றவனின் அழுத்தமான அழைப்பு அதிர செய்தது.


"அது ஒன்னும் இல்லப்பா சும்மா நான் ஆபீஸ் போறேன் நீ இவங்கள பார்த்துக்கொனு சொல்ல வந்தேன்" என்ற அவர்கள் இருவரிடமும் ஒரு அசட்ட சிரிப்பை உதித்தபடி அங்கிருந்து வேக வேகமாக அகன்றார்.


"இவர் எல்லாம் ஒரு பெரிய மனுஷன்? ஆனாலும் அன்பு பா இது ஒரு பெரிய மனுஷன் பண்ற காரியம் இல்லை" என்று முணுமுணுத்த அர்ஜுன் விஷ்ணுவின் முறைப்பில் கையில் இருந்த நோட்டில் எழுதுவது போல் பாவனை செய்தான்.


சரண்யாவோ விஷ்ணுவின் கண்களே ஆழ்ந்து பார்த்தவாறு "நான் இனி காலேஜ் கட்டடிக்க மாட்டேன்" என்று கத்த அர்ஜுனோ "ஆமா நானும் இனிமே கட்ட அடிக்க மாட்டேன்" என்று கூட சேர்ந்து விஷ்ணுவின் காது கிழிய கத்தினான்.


ஒருவழியாக இம்போசிஷனை முடித்தவர்கள் மலையை புரட்டிய மகிழ்ச்சியில் விஷ்ணுவின் எதிரே உள்ள சோபாவில் வந்து விழுந்தவாறு தங்கள் கைகள் இருங்க நோட்டை நீட்ட அதை வாங்கி புரட்டிப் பார்த்தவன் "சரி எப்போ உங்க ப்ரொபஷரை பாக்க போறீங்க?" என்றான்.


அதைக் கேட்ட இருவரும் சோபாவில் இருந்து சட்டென்று எழுந்தமர்ந்தனர். "இப்பவே போறோம்" என்று கடுகடு முகத்தோடு தயாராக தன் அறைக்கு சென்றாள்.


இருவரும் அவர்களின் ப்ரொபஷரின் காலில் விழாத குறையாக குட்டிகாரணம் பல்டி எல்லாம் அடித்து அவரின் சந்தேக பார்வையை தகர்த்து தங்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆசையை ஆணித்தரமாக நிரூபித்து அவரை சரிகட்டி ஒரு வழியாக வகுப்பை முடித்து நான்கு மணி நேரத்திற்கு பின்பு சோர்வாக வீடு வந்து சேர்ந்தனர்.


சோர்ந்து போய் வந்தவர்கள் விஷ்ணுவை முறைப்பதற்கு கூட தெம்பில்லாமல் ஆளுக்கொரு சோபாவில் அக்கடா என்று படுத்து கண்முடினர்.


அவர்களின் சோர்வை பார்த்து முதலில் ஒன்றும் கூறாத விஷ்ணு அரை மணி நேரத்திற்கு பின்பும் அவர்கள் அப்படியே இருப்பதை பார்த்து "அர்ஜுன்" என்று அவனை அதட்டி அழைத்தான்.


அவன் அழைப்பில் கண் திறந்து பார்த்த அர்ஜுன் எழுந்து மீண்டும் சோபாவில் சாய்ந்தமர்ந்து கண் மூடினான்.


அவனின் அந்த பாவனை பார்த்து சிரித்த விஷ்ணு "டேய் என்னடா நீ போய் சாப்பிடுங்க அவளையும் எழுப்பி சாப்பிட சொல்லு" என்று கூறனான்.


"ப்ளீஸ் அண்ணா நீங்களே எழுப்புங்க அவ இந்நேரம் ஒரு குட்டி தூக்கத்துக்கே போயிருப்பா அவளை எழுப்ப என்னால முடியாது எனக்கு டயர்டா வேற இருக்கு" என்று கூறியவன் வாய் அசைந்ததே தவிர கண்கள் மட்டும் திறக்கவே இல்லை


அதைப் பார்த்து இடவலமாக தலையாட்டிய விஷ்ணு வேறு வழியின்றி சரண்யா அருகே வந்தமர்ந்தவன் "சாரு சாரு எழுந்திரு" என்று மிக மென்மையாக அழைத்தான்.


அவனின் அந்த மென்மையான அழைப்பிற்கு ம்ஹம் என்று தூக்கத்திலே சினங்களாக பதிலளித்தவள் வசதியாக அவனின் மடியில் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.


அவளின் செயலில் ஒரு நொடி திடுக்கிட்ட விஷ்ணு பட்டென்று அர்ஜுனை திரும்பி பார்க்க அவனோ இன்னும் கண்முடியே கிடந்தான்.


அதில் ஒரு ஆசுவாச பெருமூச்சு விட்டவன் மெல்ல அவளை மடியில் இருந்து அகற்ற முயற்சிக்க அவளோ சிணுக்களில் தன் மறுப்பை கூறி மேலும் அவனோடு ஒன்றினாள்.


தன் சிகையை கோதி அவனின் படபடப்பை அடக்கியவன் இன்னும் மென்மையாக "சாரு குட்டி பசிக்கும் டா சாப்பிட்டு தூங்குறியா?" என்று கொஞ்சலாக வினவினான்.


அவனின் வினாவிற்கு விடையாக ம்ம்ம்ம்ம் என்று ஆமோதிப்பாக குரல் கொடுத்தாள் சரண்யா.


அவளின் ஆமோதிப்பில் நிம்மதி பெருமூச்சு விட்ட விஷ்ணு "அப்ப எழுந்து கோடா சாப்பிடலாம்" என்க அதற்கு ம்ஹம் என்று மறுத்தவள் அவனின் மடியில் வாகாக படுத்தபடி இப்டியே ஆஆஆஆஆஆ என்று தன் வாயை திறந்து காட்டினாள்.


என்னது இப்டியே வா என்று அதிர்ந்தவன் எதிரில் இருந்த அர்ஜுனை பார்க்க அவனோ இப்போது இவர்கள் இருவரையும் தான் சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.


அதில் கடுப்பான விஷ்ணுவோ

"என்னடா பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க செல்லம் கொடுத்து எப்படி கெடுத்து வெச்சி இருக்க பாரு" என்று கோபமாக விஷ்ணு கூறினான்.


சோபாவில் இருந்தவன் சட்டென்று எழுந்து அவனை எதிரே நின்றவாரு "எது நான் செல்லம் கொடுத்து வளர்த்தேனா? ஹலோ பாஸ் உங்க பொண்டாட்டிக்கு நா ஒன்னும் செல்லம் கொடுத்து வளக்கல அவதான் எனக்கு தொல்லை கொடுத்து வளர்ந்துட்டு இருக்கா செல்லம் கொடுத்தமாமில்ல செல்லம் நா கெட்ட கேட்டுக்கு இவளுக்கு செல்லம் கொடுத்துட்டாலும்" என்று அங்கலாய்த்தான்.


அவனை முறைத்தபடி இருந்த விஷ்ணு "சரி சரி போ போய் சாப்பாடு எடுத்துட்டு வா" என்றான். "பாருடா அப்பே என்ன பண்ண போறீங்க?" என்று ஆர்வமாக வினவினான்.


"டேய் போடா" என்று அவனை அதட்டியவன் தன் வெட்கத்தை உதட்டிற்குள் மறைத்தான்.


சாப்பாட்டை விஷ்ணுவிடம் கொண்டு வந்து கொடுத்தவன் அண்ணா உண்மையாவே இப்படி ஊட்டி விடப் போறீங்களா ஆவலே வடிவாக வினவினான்.


வேற வழி என்றபடி அவளை வாகாக தன் நெஞ்சில் சாய்த்தவன் சாரு என்று மென்மையாக அழைத்து அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினான்.


அவளுக்கு ஊட்டி விடுவதை பார்த்த அர்ஜுன் "அப்போ அச்சு குட்டிக்கு…" என்றபடி அவனும் தன் வாயை ஆஆஆஆஆஆஆ என்று திறந்து காட்டினான்.


"எல்லாம் என் நேரம் டா என் குழந்தைகளுக்கு ஊட்டி வளக்குற வயசுல உனக்கெல்லாம் ஊட்டி விட வேண்டியதா இருக்கு பாரு" என்று அவனுக்கும் ஊட்டி விட தொடங்கினான் விஷ்ணு.


அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த வர்ஷாவோ அங்க தன் அண்ணன் தன் அண்ணிக்கும் தன் காதலனுக்கும் மாறி மாறி ஊட்டி விடும் அழகை பார்த்தவள்பார்த்தவளுக்கோ அவர்களின் நிலையே என்ன நடந்திருக்கும் என்று உணர்த்தியது.

தன் அண்ணன் ஊட்ட ஊட்ட சப்புக்கோட்டி சாப்பிட்டபடி தன் அண்ணனின் எதிரே இருந்த அர்ஜுனின் மீது பார்வையை செலுத்தியவள் மனமோ "உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?" என்று கேள்வி எழுப்பியது.


தொடரும்….
கருத்து திரி :
https://pmtamilnovels.com/index.php?threads/என்னுள்-உன்னை-கண்டேனடா-கருத்து-திரி.18/post-7569
 
Status
Not open for further replies.
Top