வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

காலகேயனின் காதல் வதம் - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1(a)

“நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களும் மூடவில்லை”

"ஆ.......ஆ ....... ம்மா என்னால முடியல தாரா....... தா ........ரா ..... தாரா தா.......ரா ஆ ..ஆ எங்கடி இருக்க ஏன் என்ன விட்டு போன என்ன எல்லாரும் பைத்தியக்காரன்னு சொல்றாங்க இந்த பாட்டு இந்த ரூம் இந்த அமைதி எல்லாம் உன்ன மட்டும் தான் ஞாபகப்படுத்துது தாரும்மா ப்ளீஸ் என்கிட்ட வந்துரு ப்ளீ......ஸ் ப்.....ளீ...ஸ்"

கதறலுடன் அரற்றியது அந்த கடத்தக்கோஜ உருவம் தோள் வரை நீண்டிருந்த கேசமும் ஆளை அசரடிக்கும் அசாத்திய உயரமும் எதிரியை கூறு போடும் கழுகை
ஒத்த விழிகள் அவனை ஆணழகனாக காட்டியது என்னவோ நிச்சயமான உண்மை ஆனால் அவ்விழிகளில் வலி ஆற்றாமை எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் கலங்காத கட்டிளங்காளையின் கண்களிலிருந்து கண்ணீர் ஏன் ? எதற்கு ? யாருக்காக ? இத்தனை வேதனை
ஒரு முறை செய்த தவறுக்கு இன்று வரை ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைக்கிறான்., பலபேரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவன் அறையிலும் சரி வாழ்க்கையிலும் சரி ஒளியற்ற இருள் சூழ்ந்ததன் காரணம் தான் என்ன ?


உலகமே எதிர்த்து போர் புரிந்தாலும் அனைவரையும் அடியோடு சாய்க்கும் வல்லமை கொண்டவன் ஒருத்திக்காக உயிரானவளுக்காக மட்டுமே கலங்கி தவிக்கிறான் தவறின் வீரியம் இன்று அல்ல புரிந்து பல திங்கள்கள் கடந்து விட்டன உயிரானவளை மட்டும் கண்ணில் அந்த ஆண்டவன் கட்டவில்லை.

"அப்பு அப்பு கோஹெத யன்னே" ( கதை இலங்கையில் நடப்பதால் சிங்கள மொழி நடையில் வரும் உரையாடல்களை தமிழில் காண்போம் ) என்றபடி அப்புஹாமியின் கைகளை பற்றி நிறுத்தினான். தலைமை வேலைக்காரன் மாரி, "இல்ல அண்ணன் நம்ம முதலாளி கத்துற சத்தம் கேட்டுச்சு அது தான்" அவர் கத்தறது ஒன்னும் இங்க உள்ளவங்களுக்கு புதுசில்ல இந்த ஆளு இப்ப இப்படி கத்துவார்.

நாளைக்கு அந்தி ஆனவுடனே
"நார்மல் ஆகிடுவாரு நீ இப்ப போய் சமாதானம் செய்ய போறேன்னு போய் பலியாகிறாத !என்ன புரிஞ்சுதா என்ன ?"

"அது சரி அண்ணா ஏன் துரை இப்படி கத்துறாரு ? இங்கே வந்ததுலயிருந்து எனக்கு பேய் படத்துக்குள்ள வந்த மாதிரியே இருக்கு என்று அப்பு கூறும்" போதே, தூரத்தில் நரிகள் ஊளையிட்டன. நாய்கள் ஆளில்லா இடங்களை பார்த்து குரைத்தும் ஊளையிட்டும், பீதியை கிளப்பின.

"என்ன அண்ணே இப்படி இடமே ஒரு மாதிரி ஆகுது? எனக்கு என்னவோ பயமாயிருக்கு !, பெருமூச்சு விட்ட மாரி எல்லாம் இந்த குடும்பத்தோட சாபம் பணமிருக்கு பவுசிருக்கு ஆனா மன நிம்மதி மட்டுமில்ல போக போக நீயே புரிஞ்சுக்குவ

என்ன அண்ணே புதிர் போடுறீங்க? எல்லாம் காரணமா தான் அப்பு இது பெரிய இடத்து சமாச்சாரம் பரம்பரையா எங்க குடும்பம் துரை ஐயா குடும்பத்துக்கிட்ட வேலை செய்யறனால தெரிஞ்ச ரகசியம் அதை சொல்ல எனக்கு அனுமதியில்ல நீ போய் தூங்கு காலையில நிறைய வேலையிருக்கு"


'மகராசி நீ இருக்குற இடம் மட்டும் தெரிஞ்சா போதும் துரைக்கு நிம்மதி கிடைச்சிரும்' என மனதில் நினைத்தவர் பெருமூச்சை இழுத்துவிட்ட வண்ணம் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். 'இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இந்த சாபம் நீடிக்குமோ' என்று நினைத்தவண்ணம் உறங்கியும் போனார்.


****************************************
ஹீரோ ஹீரோயின் பெயர் இப்போதைக்கு சொல்ல ஐடியா இல்ல தங்கங்களா கதை போற போக்குல தெரிஞ்சிக்கலாம் உங்க லைக்கும் காமெண்ட்ஸும் தான் எனக்கு மோட்டிவேஷன் பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே வரவேற்கபடுகிறது நெக்ஸ்ட் ud ஒன் த வே இது trialக்காக போட்டேன் படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க
 
Last edited:
Status
Not open for further replies.
Top