அத்யாயம் 💙 6
வீட்டிற்க்குள் வந்தவன் உடை கூட மாற்றாது நேரே அவன் வீட்டில் மற்றுமொரு அறைக்கு சென்றான், அங்கு அவன் பிரத்தியேகமாக அமைத்து வைத்திருந்த சிறிய மதுபான பார் செட்அப் இருந்தது.
அதன் அருகில் சென்றவன் , அதில் உள்ள மதுபானத்தில் ஒன்றை எடுத்து மெல்ல குடிக்க ஆரம்பித்தான்.
மெல்ல மெல்ல அந்த மதுவானது அவனை நிதானத்தை குலைத்து அவனது மாதுவை நினைவுக்கு கொண்டு வந்தது.
தலை கிறுகிறுக்க அப்படியே தள்ளாடியவாரே
அறையின் ஓரத்திற்க்கு சென்றவன், மெல்ல மெல்ல தன் கையில் உள்ள மதுபானத்தை மீண்டும் பருகிகொண்டே ,உலறல் மொழியில்
"ஏண்டி விட்டுட்டு போன ஏன் விட்டுட்டு போன, ஆ......ஆ....... என தன்கையில் வைத்து குடித்து கொண்டிருந்த முழு மது பாட்டிலை கொண்டு அங்கு இருந்த மதுபான செட்டப்பை அடித்து உடைத்தான்.
அடித்து நொறுக்கியவன், போதையில் சிவந்த கண்களுடன், அவனுக்கு எதிரே இருந்த புகைப்படத்தை பார்த்தான்.
அழகில் மட்டும் இல்லை, அடக்கத்திற்க்கும், அமைதிக்கும்அரசி, அவள் கண்களில் தெரிவது பனி விழும் பார்வை ,அவள் இதழ்கள் பேசும் பேச்சுகளோ தேன் போன்றது,அவள் உடை உறுத்தாது, நடை பிறலாத அமுதம் அவள்.
அவள் இயற்கையின் அதிசய படைப்பு .....
அவளே ஷிவானி , அழகாக சிரித்து கொண்டிருந்தாள்,ஆளுயர புகைப்படத்தில்,
மலர் மாலையுடன்.
ஆம் அவள் இறைவனடி சேர்ந்து விட்டாள்.
வினய் அந்த வீட்டில் , அந்த மண்டபத்தில், அவளுடைய கல்லறையில் அவளதுமுகத்தை பார்த்து தான் பேசி கொண்டிருந்தான்.
அந்த கல்லறையை தடவி பார்ப்பான் , அதன் மேல் சிறிது நேரம் படுத்து கொள்வான். புகைப்படத்தில் அவளது முகத்தில் முத்தமிடுவான்.
அந்த கல்லறை மீது சிறிய காய்ந்த இலை விழுந்தாழும் பதறி துடித்து போவான்.
மாதத்தில் ஒருமுறை நடக்கும் கிறுக்குத்தனம் இது ,அவள் கல்லறை அருகில் அவன் பைத்தியம் ஆகிவிடுவான்.
அந்த பத்து சின்ன சின்ன மொட்டுகளும் ,அவனுக்கு அவள் அளித்து விட்டு சென்ற பொறுப்பு, இன்னொரு பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது.
அவள் பிரிவை அவன் மூளை ஏற்கவில்லை, அவன் காதல் அவனை அவளிடம் கட்டி போட்டு வைத்திருக்கிறது.
அவன் இம்மண்ணில் நிலைத்திருப்பதே அவள் அளித்துவிட்டு போன கடமையை நிறைவேற்றத்தான்.
இதற்கிடையில் மற்றொரு வாழ்க்கை கல்யாணம் அவன் மனது எவ்வாறு ஏற்று கொள்ளும்
"வினய்,நிஜமா என்னை உனக்கு புடிக்குமா,என்ன விட்டு போயிட மாட்டில்லன்னு கேட்டே கேட்டே என்ன விட்டு நீ போட்டியடி ,என கதறினான்.
"டேய் ,வினய் ,டி டோட்லரா டா நீ , ஓரு தம்மூ கூட கிடையாதா பார்ரா இப்படி ஒரு பையனா, நான் ரொம்ப குடுத்து வச்சவடா" என்று அவள் கூறிவிட்டு அவன் கண்ணை பார்த்து சிரித்தது, அவன் காதுகளில் ஒலிக்க,
" அய்யோஓ ஓ ஓ ஓ , ஆ....... ஆ... நான் ... நான் டி டோட்லர்னு பெருமை படுவியேடி, இப்ப பாரு இப்ப பாரு தம்மடிச்சு, தண்ணீ அடிச்சு, இப்படி புலம்பிட்டு இருக்கேன் , நான் நானா இல்லடி என்று கதறியவன் அப்படியே மயங்கி சரிந்தான் நிலம்தனில்.
அவன் நினைவுகளில் மின்னி மறைந்தாள் அவள் , அவளை சந்தித்த நேரங்கள் , அவளுடன் பழகிய காலங்கள், அவளை காதலித்த தருணங்கள் ,அவளுடன் வாழ்ந்த மொத்த வாழ்க்கையும் அவன் கண்முன்னே கனவாய் வந்து போனது.....
அன்று மதுவுக்கு பிறந்தநாள் , வினய்யின் வீட்டில் மதுவிற்க்கு இரகசிய பிறந்த நாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் வினய் .
ஆமாம் வினய் , மது ,மகேஷ் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். மூன்று பேருக்கும் குடும்பம் என்ற கட்டமைப்பு கிடையாது. மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கல்லூரியில் நட்பானவர்கள்.
வினய் தன் தாய் இறந்தபிறகு தன் தந்தையால் கைவிடப்பட்டான். தன் தந்தையின் நண்பர்களால் ஒர் ஹோம் இல் சேர்க்கப்பட்டு படித்து வளர்ந்தவன் , மிகவும் அறிவாளி திறமைசாலி.
மது ,மகேஷ்க்கும் வெவ்வேறு பின்புலம் உண்டு அதை கதையோட்டத்தில் பார்க்கலாம்.
இந்த மூன்று பேரும் படித்து முடித்து ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
மது பிறந்தநாள் அவளுக்காக பிரத்தியேகமாக செய்யப்பட்ட கேக் , நிறைய பரிசு பொருள் என்று அவளுக்கு சர்பிரைஸ் கொடுத்தனர், மகேஷ்ம் வினய்யும்,
வேற யாரும் இல்லை அங்கு அவர்கள் மட்டுமே, அவர்கள் மூவர் தாண்டி அவர்கள் கூட்டில் அவர்கள் வேறு யாரையும் சேர்ப்பதில்லை,யாரும் தேவையும் இல்லை.
"மது உனக்கு பிறந்தநாள், மது நீ அழகா பொறந்துட்டியே ,உலக அதிசயமே " என மகேஷ் கிண்டலடிக்க, மது அவனை அடிக்க துரத்த அதை தனது மொபைலில் வீடியோ எடுத்தான் வினய்.
"ஹப்பி பெர்த்டே மை ஸ்விட்டி", அவளை அணைத்து விடுவித்தான் வினய்.
கேக் வெட்டப்பட்டு பாதி உண்டும், பாதி அவர்கள் முகத்தில் தடவியும் பிறந்தநாள் சென்று கொண்டிருந்தது.
"டேய் பசிக்குதுடா, ஒரு பிறந்த நாள் பிள்ளைய சாப்பாடு போடாம சாகடிச்சுடாதீங்கடா" என மது தன் வயிற்றை தடவி கொண்டே சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
"டேய் சாப்பாடு சொன்னியா" என வினய் கேட்க.
"எப்பவோ ஆர்டர் பண்ணிட்டேன், இந்நேரத்துக்கு வந்திருக்கனும் ஆனா இன்னும் வரல இரு கால் பண்றேன்" என மகேஷ் அழைபேசியுடன் பால்கனி வந்தான்.
சிறிது நேரத்தில் வினய்யும் அவ்விடம் வர
"என்ன சார் இன்னும் ஆர்டர் பண்ண சாப்பாடு வரல" என மகேஷ் யாருடனோ போனில் கத்தி கொண்டு இருந்தான்.
"டேய் என்னடா" என வினய் கேட்க
"டேய் ,டேக் எ மினிட் புட் சர்வீஸ்ல புட் ஆர்டர் பண்ணேன் டா இந்தா வந்துட்டேன் இந்தா வந்துட்டேன்னு இன்னும் வந்துட்டு இருக்கான்." என மகேஷ் புலம்பவும்
அங்கு அவர்கள் பேசிகொண்டிருந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
"இதோ வந்துட்டான்னு நினைக்கிறேன் இன்னிக்கு அவன " என மகேஷ் கோபமாக சென்று கதவை திறந்து ,
"ஹலோ ஏன் இவ்வளவு லேட் , சாப்பாடு இவ்வளவு லேட்டா டெலிவரி பண்றீங்க, அதுவும் நாங்க சாப்பிடவா இல்லை நாய்க்கு போடவா ,இருங்க உங்கள் ஆப்பிஸ்ல ரிப்போர்ட் பண்றேன் என வயிறு பசியிலும், தாமதமான கோபத்திலும் டெலிவரி பண்ணவங்களை திட்டி கொண்டிருந்தான் மகேஷ்.
"இவன் என்ன இவ்வளவு நேரமா வாங்குறான்" என்று அங்கு வந்து பார்த்த வினய்க்கு , மகேஷ் முன் சாப்பாடு பார்சலுடன் ஒரு பெண் நின்று கோண்டிருந்தாள்.
மகேஷ் தோளை தொட்டவன் அவனிடம்
"டேய் ஏன்டா அதான் சாப்பாடு வந்துட்டுல அதுக்கு எதுக்கு இப்படி திட்டுற" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தாள் அப்பெண்.
"சாரி சார் என் தப்பு தான், அவங்க ஊங்க டெலிவரி கேர்ல் கிடையாது " என்று இன்னொரு குரல் கேட்க இருவரும் அப்பெண் பின்னாடி பார்த்தனர், அங்கு மற்றொரு டெலிவரி பாய் கை கால் இரத்ததுடன் தாங்கி தாங்கி நடந்து வந்தார்.
"நீங்க எதுக்கு இப்போ இங்க வந்தீங்க ப்ரோ உங்கள கீழே தானே இருக்க சொன்னேன்" என்றாள் அப்பெண்.
"நீ சும்மா இருங்க சிஸ்டர் டெலிவரி லேட் ஆனா எவ்வளவு திட்டு விழும்னு எனக்கு தெரியும் " என அந்த டெலிவரி பையன் கூறவும்.
வினய் "என்னாச்சு உங்களுக்கு" என்றான்.
"சார் நான் உங்களுக்கு டெலவரி பண்ண வேகமா வந்துட்டு இருக்கும் போது, ரோட்டுல ஒரு நாய் இடையில வந்துட்டு, அதுல வழுக்கி கீழே விழுந்துட்டேன், நல்ல வேலை சாப்பாடு பாக்ல இருந்ததால ஒண்ணும் ஆகல, நைட்ல அந்த ரோட்ல யாருமே இல்லை, அப்போது தான் இவங்க அந்த பக்கம் வந்தாங்க ,
"ஐய்யோ என்னாச்சு ப்ரோ"என அப்பெண் கேட்க.
"சர்வீஸ் போகும் போது நாய் இடையில வந்துட்டு சிஸ்டர் "அப்போது அவன் தொலைபேசிக்கு போன் வந்து கொண்டே இருந்தது.
"எடுத்து பேசுங்க ப்ரோ இப்போ 5 நிமிடத்தில வந்துடுறேன் சொல்லுங்க " என அப்பெண் கூறவும்.
"எப்படி சிஸ்டர், என்னால எந்திக்க முடியல, வண்டி வேற இப்படி கிடக்கு , இந்த ஆர்டர் அவ்வளவு தான் என் சம்பளத்துல தான் பிடிப்பாங்க." என அவன் கண்கள் கலங்கி கூறவும்.
"அட ப்ரோ இதுக்கெல்லாம் பீல் பண்ண கூடாது டெலிவரி பாய் வாழ்க்கையில கீழ விழுறது எல்லாம் சகஜம் நீங்க மெல்ல எந்திரிங்க ஆர்டர் டெலிவரி பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் போவோம், சாப்பாடு கேன்சல் ஆகாது வாங்க மெல்ல எந்திரிங்க." அவன் கை பிடித்து தூக்கி பின் சாப்பாடு வைத்திருக்கும் பாக்ஸை அவன் கையில் கொடுத்து தன் வண்டியில் ஏற்றி கொண்டு இங்கு வந்து சேர்ந்தனர்.
" சார் ,அவங்க டி - சர்ட் பார்த்தால் தெரியலையா ,அவங்க வேற கம்பெனி நீங்க ஆர்டர் பண்ணது வேற கம்பெனி, ஸாரி சார் லேட் டெலிவரிக்கு " என தன் உடல் வலியில் அந்த டெலிவரி பாய் கூறவும் தான் மகேஷ் அந்த பெண்ணின் கம்பெனி பெயரை பார்த்தான்.
"ஐய்யோ ஸாரி சிஸ்டர், சாப்பாடு லேட் ஆகிட்டேனு டென்சன்ல கத்திட்டேன்" என மகேஷ் கூறவும்,
"பரவாயில்லை சார் விடுங்க, ஆனா நாங்களும் மனுசங்க தான் உங்களுக்கு ஐந்து நிமிடத்துல டெலிவரி பண்ண நாங்க எங்க உயிரை பணயம் வைச்சு வர்றோம் சார், முன்ன பின்ன சில நேரம் இந்த மாதிரி தவிர்க முடியாம லேட் ஆகலாம் கொஞ்சம் என்னனு எங்கிட்டயும் கேளுங்க சார், இப்படி வாய்க்கு வந்தபடி திட்ட வேண்டாம், எதாட்டு தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க சார்"
என அப்பெண், தன்னுடன் வந்தவரை அழைத்து கொண்டு அடுத்து மருத்துவமனை சென்றனர்.
இவை அனைத்தையும் கன்வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் வினய் .
""அடேய், நாசமா போறவிங்களா உங்க பஞ்சாயத்து முடிஞ்சதுனா சாப்பாட தாங்கடா என்னால முடியல" என மது சத்தம் போட்டு கூறியதோடு சோபாவில் மயங்கி கிரங்கியவாறு படுத்து கிடந்தாள் .
"இங்கே எவ்வளவு பெரிய அமலி குமலி போகுது இதுக்கு சோறு தான் முக்கியம் " என மகேஷ் தலையில் அடித்து கொண்டு செல்ல, வினய் போனவள் சென்ற பாதையையே திரும்பி பார்த்தான்.
கருத்து திரி'
https://pmtamilnovels.com/index.php?threads/நிலவு-கருத்து-திரி.213/