வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாமனை மயக்குதே பஞ்சவர்ணம் - கருத்து திரி

ரொம்ப அருமையான நபர்கள் ஆம்பள பிள்ளைனு செழியனையே எல்லாரும் தூக்கி வச்சு பேசிகிட்டு அவனுக்கு மத்திப்பு மரியாதை கொடுத்துவிட்டு மற்றவங்களோட உணர்வுகளை மதிக்காமல் விட்டதின் விளைவு தான் இது.

பிரதியோட விருப்பத்தையும் கேட்டிருந்தால் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காதுல்ல.

எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க
 
ரதி அவளோட மனசுல இருக்கிறது அவ்வளவு சொல்லியும் இவங்க புரிஞ்சுக்காம திரும்பத் திரும்ப அவங்க பிடிவாதத்திலேயே நிக்கிறாங்க இவங்கள என்ன பண்றது.
நல்ல வேலை தர்மனாவது மகளை புரிஞ்சுகிட்டாரு

எழுத்து நடையை இன்னும் கொஞ்சம் தெளிவா குடுங்க அங்கங்க கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு அதை சரி பண்ணுங்க
 
முதல்ல அந்த கிழவியை போட்டு தள்ளுங்க. ஊருக்குள்ளே இருந்த ரதியே படிச்சவன் தான் வேணும் சுதந்திரமா நடக்கணும்னு நினைக்கும் போது வெளியே படிச்சிட்டு வந்திருக்க புவனா தனக்கு வரப்போற மாப்பிள்ளை எப்படி எல்லாம் இருக்க வேணும்னு நினைச்சுட்டு இருப்பா இப்பவும் இந்த கிழவி அதுவா ஒரு முடிவை எடுக்குது.
புவனாவோட மனசு பத்தி யோசிக்க வேணாமா.
தயவு செஞ்சு செழியனுக்கு புவனாவ ஜோடியா போட்டுடாதீங்க
 
இந்த முட்டாப் பீஸ் செழியனுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் புவனாவ கட்டி வச்சிட்டாங்க இனி அவ வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ??


எழுத்துப் பிழைகள் கொஞ்சம் இருக்கு அது சரி பாருங்க
 
இந்த வேதவள்ளி கிழங்கு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா இருக்கு அது வாய சும்மா இருக்காது போல அது ஒரு ஓரமா அடக்கி ஒடுக்கி வையுங்க
 
பெண் கல்வி பற்றிய ஒரு விழிப்புணர்வோட கதை ரொம்ப அருமையா ரொம்ப நிறைவா இருந்தது சூப்பர் 👌👌👏👏
 
Top